மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.3.12

Astrology வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைப்பாளா?

Astrology வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைப்பாளா?

பயிற்சிப்பாடம் (உதாரண ஜாதகத்துடன்)
13.3.2012

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பொதுவாகப் பல ஆண்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. மனைவியும் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டினால் நல்லது. வாழ்க்ககை வளம் மிக்கதாக அமையும்.

உண்மைதான்.

மனைவியும் வேலக்குச் சென்றால், வீட்டையும், குழந்தைகளையும் யார் பார்த்துக்கொள்வது?

இந்தக் கேள்விக்குப் பதிலாக வெளிநாட்டவரின் வாழ்க்கையை காட்டுவார்கள். அதில் பல சிக்கல்கள் உள்ளன. அது கண்ணில் படாது. பட்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். வேலைக்குச் சென்று சம்பாத்தித்துப் பணத்தை ருசி பார்த்த பெண்ணை, யாரும் வீட்டில் உட்கார வைக்க முடியாது. அது பற்றி விவரமாக எழுதினால் வில்லங்கமாகிவிடும்.

ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே

என்று வாழ்க்கையின் நியதிகளை வகுத்துச் சொல்வதற்கு அதாவது, கணவனுக்கு இன்னென்ன கடமைகள், மனைவிக்கு இன்னென்ன கடைமைகள் என்று எடுத்துச் சொல்வதர்கு இன்று யாரும் கிடையாது. சொன்னாலும் கேட்பதற்கு யாருக்கும் பொறுமை கிடையாது.

அதனால் பட்டுத் திருந்த்ட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன். மனைவிக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால், அதற்குச் ஜாதகத்தில் அமைப்பு இருக்க வேண்டும். அந்த அமைப்பு இல்லாவிட்டால், தலை கீழாக நின்றாலும் வேலை கிடைக்காது.

அதை ஒரு உதாரண ஜாதகத்துடன் இன்று பார்ப்போம்

வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைக்க ஜாதகப்படியான அமைப்பு

ஏழாம் வீட்டுக்காரன்தான் 10ஆம் வீட்டில் அமர்ந்தால் அல்லது 10ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டாக நல்லஇடத்தில் இருந்தால் - அதாவது கேந்திர  அல்லது திரிகோண வீடுகளில் இருந்தால் வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைப்பாள். குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தச் செய்வாள். மேன்மையுறச் செய்வாள்

அதை உதாரணத்துடன் உங்களுக்கு விளக்கிச் சொல்ல ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்

ஜாதகத்தைப் பாருங்கள்.

ரிஷப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சுக்கிரன் ஏழில். லக்கினத்தைத் தன் நேரடிப்பார்வையில் வைத்திருக்கிறார். லக்கினாதிபத்யுடன், சுகாதிபதி சூரியனும் சேர்ந்து உள்ளார். நான்கில்  கேது இருந்தாலும், அந்த வீட்டுக்காரன் கேந்திரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு.

குருவும் சந்திரனும் சேர்ந்து குருச் சந்திர யோகத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால் சேர்க்கை ஆறில் நிகழ்ந்துள்ளதால் பலன்கள் முழுமையாகக் கிடைக்காது.

ஏழாம் அதிபதி செவ்வாய் 12 ஆம் அதிபதியும் ஆவார். அவர் பத்தாம் அதிபதி சனியுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார் சனியின் கும்ப வீட்டில் செவ்வாய் . செவ்வாயின் மேஷ வீட்டில்  சனி

ஜாதகனுக்கு வேலைக்குச் செல்லும் மனைவி கிடைத்தாள். அத்துடன். 10 & 12 ஆம் இடப் பரிவர்த்தனையால், வெளி நாட்டில் இருவருக்கும் வேலை கிடைத்தது. செல்வம் (பொருள்)  சேர்க்கும் வாய்ப்பும் கிடைத்தது

12ல் உள்ள 10ஆம் அதிபதியால் வெளிநாட்டில் வசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இதுபோல் ஏழாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தாலோ அல்லது ஒன்பதாம் அதிபதியுடன் கூட்டாக இருந்தாலோ மனைவி வரும்போதே எல்லா பாக்கியங்களுடன் (செல்வத்துடன்)  வருவாள். ஏழாம் வீட்டுக்காரனுக்கு அது உயர்ந்த அமைப்பாகும்

வேறு என்னென்ன அமைப்பிற்கு என்னென்ன மாதிரி மனைவி கிடைப்பாள். அல்லது பெண்ணாக இருந்தால் எந்த மாதிரிக் கணவன் கிடைப்பான் என்பதற்கெல்லாம் ஜாதக விவரங்கள் உள்ளன. அது மேல் நிலைப் பாடம். அதில் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

89 comments:

  1. நல்ல தகவல் ஆசிரியரே,

    வேலைக்கு போகும் அமைப்புள்ள பெண்ண ஜாதகம் போல , வீட்டில் இருந்து குழ்ந்தை பெற்றுத் கொள்ளும் பெண்ணின் ஜாதகம், வேலைக்கு போய் வாடகைத் தாய் மூலம் நோகாமல் குழ்ந்தை பெற்றுக் கொள்ளும் யோகம் (?) உள்ள பெண், செக்கு மாடு போல கணவன் அமையப் பெரும் அதிஷ்ட ஜாதகம், கணவன் வீட்டுக்காரர்களை வீட்டில் சேர்க்காமல் செல்வ வளம் பெருக்கும் பெண் ஜாதகம் போன்ற பல சுவையான தகவல்களையும் கொடுத்தால் வசதியாக இருக்கும் .

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,
    ஆஹா...மீண்டும் ஜாதக அலசல்...தாங்கள் தந்துள்ள உதாரண ஜாதக அமைப்பு என் சகோதரருக்கு உள்ளது...ஆனால் அவருக்கும் பெண்கள் வேலைக்கு செல்வதில் உடன்பாடு கிடையாது...நாம் நினைப்பது போல் எப்பொழுதும் நடப்பதில்லையே!!!...

    இதே அமைப்பு விதிகள் பெண்களுக்கும் பொருந்தும் தானே ஐயா?...தொழில் செய்பவர் என்றால் எப்படி கண்டறிவது ஐயா?

    //இதுபோல் ஏழாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தாலோ அல்லது ஒன்பதாம் அதிபதியுடன் கூட்டாக இருந்தாலோ மனைவி வரும்போதே எல்லா பாக்கியங்களுடன் (செல்வத்துடன்) வருவாள். ஏழாம் வீட்டுக்காரனுக்கு அது உயர்ந்த அமைப்பாகும்//

    ஐயா,என் ஜாதகத்தில் 7ம் அதிபதி 9ம் அதிபதியுடன் 4ம் இடத்தில் பரிவர்த்தனை அடைந்துள்ளார்...பரவாயில்லை,கொஞ்சம் பிழைத்துக் கொண்டேன் என்று நினைக்கின்றேன்...

    ReplyDelete
  3. ஐயா,

    நல்ல பதிவு அருமை,அதைவிட உங்களின் வார்த்தைஜாலம் சொல்ல வார்த்தையே இல்லை.அலுவலகத்தில் மேலதிகாரி இல்லாத நேரங்களில் நமது வலைத்தளத்திற்கு வந்து பழைய பாடங்களை படிக்க ஆரம்பித்துவிடுவேன்.அனுபவங்கள், நீதிக்கதைகள்,ஜோதிட சம்பந்தமான கட்டுரைகள் என ஒன்றையுமே விடுவதில்லை. நீதிக்கதைகளை பிரிண்ட் எடுத்துச்சென்று நண்பர்களிடம் படிக்கவும் சொல்லுவேன்,அந்தளவுக்கு தங்களின் எழுத்து என்னை ஈர்த்துவிட்டது.7ம் அதிபதி வக்கிரம் பெற்று,வக்கிரம் பெற்ற 9ம் அதிபதியுடன் சேர்ந்தாலும்,இருக்குமிடம் 6,8,12 இல்லையெனிலும் நன்மை கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா?.

    ReplyDelete
  4. சொல்ல மறந்த விதிகள் ;

    குடைக்கான விதி; குடை கொண்டுபோனால் கண்டிப்பை மழை வராமல் பாரமாய் மாறிவிடும்

    இணைய விதி; நெட்டில் உபயோகமான முக்கியமான வேலை இருக்கும் அன்று இணைய தொடர்பில் இமாலய சிக்கல் இருக்கும் .

    சாப்பாட்டு விதி;வீட்டில் பிரியாணி வாசம் தூக்கும் போதுதான் தலை போகும் வேலை வெளியிலிருந்து அழைத்து பட்டினி போட வைக்கும்

    உடைகள் விதி; ஆசையாய் வாங்கிய துணியை உடுத்தும் போது மனைவியும் மகளும் முகம் சுளிப்பார்கள் நன்றாக இல்லை என்று .

    விடுமுறை விதி; இன்று நண்பர்களுடன் இந்த இடத்திற்கு போக வேண்டும் என்று தீர்மானித்திருக்கும் போது மனைவியும் மகளும் வேறு இடத்திற்கு பிளான் பண்ணி நம் தீர்மானத்தை உடைப்பார்கள் .

    ReplyDelete
  5. வணக்கம் சார்
    பாடம் ரொம்ப நல்லாயிருந்தது ரொம்ப நன்றி வாரத்துக்கு ஒரு நாள் பயிற்சி பாடம் போடுங்கள் மேலும் அஷ்டவர்க்க பாடத்தை தொடங்குங்கள் சீக்கிரம்மா உங்களுக்கு போதிய நேரமில்லையென்று எனக்கு தெரியும் அப்போ கூட எனக்கு அஷட வர்க்கத்தை ரொம்ப தெரிந்து கொள்ளவேண்டுமென்று ஆவலிருக்கிறது.

    ReplyDelete
  6. எனக்கு பிடித்த அலசல் பாடம் .ஏழில் சுக்கிரன் களத்திர தோசமாம், திருமனதடை இருந்ததா? அல்லது அவரே லக்னாதி பதியும் ஆனதால் தடையும் தோசமும் மறைந்ததா?

    பத்தில் ராகு தொழிலோ பனியோ கொடுத்திருக்கும் .

    ரிஷப லக்னத்திற்கு சனி யோகா காரன் ஆனால் நீசம் பனிரெண்டில்.

    இதை மட்டும் விளக்குங்கள் அய்யா சனி நீசமானாலும் பரிவர்த்தனையால் யோகமா.

    யோககாரன்சனி பனிரெண்டில் நீசமானாலும்(பரிவர்த்தனை இல்லாமல் இருக்கும்போது) யோகமா.

    ReplyDelete
  7. ////Blogger daran said...
    நல்ல தகவல் ஆசிரியரே,
    வேலைக்கு போகும் அமைப்புள்ள பெண்ண ஜாதகம் போல , வீட்டில் இருந்து குழ்ந்தை பெற்றுத் கொள்ளும் பெண்ணின் ஜாதகம், வேலைக்கு போய் வாடகைத் தாய் மூலம் நோகாமல் குழ்ந்தை பெற்றுக் கொள்ளும் யோகம் (?) உள்ள பெண், செக்கு மாடு போல கணவன் அமையப் பெரும் அதிஷ்ட ஜாதகம், கணவன் வீட்டுக்காரர்களை வீட்டில் சேர்க்காமல் செல்வவளம் பெருக்கும் பெண் ஜாதகம் போன்ற பல சுவையான தகவல்களையும் கொடுத்தால் வசதியாக இருக்கும் .////

    கொடுத்துவிட்டால் போகிறது. பொறுத்திருங்கள் ஒவ்வொன்றாக அலசுவோம்!

    ReplyDelete
  8. ////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    ஆஹா...மீண்டும் ஜாதக அலசல்...தாங்கள் தந்துள்ள உதாரண ஜாதக அமைப்பு என் சகோதரருக்கு உள்ளது...ஆனால் அவருக்கும் பெண்கள் வேலைக்கு செல்வதில் உடன்பாடு கிடையாது...நாம் நினைப்பது போல் எப்பொழுதும் நடப்பதில்லையே!!!...
    இதே அமைப்பு விதிகள் பெண்களுக்கும் பொருந்தும் தானே ஐயா?...தொழில் செய்பவர் என்றால் எப்படி கண்டறிவது ஐயா?////

    பழைய பாடங்களில் விவரங்கள் உள்ளன. தேடிப்பிடித்துப் படியுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //இதுபோல் ஏழாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தாலோ அல்லது ஒன்பதாம் அதிபதியுடன் கூட்டாக இருந்தாலோ மனைவி வரும்போதே எல்லா பாக்கியங்களுடன் (செல்வத்துடன்) வருவாள். ஏழாம் வீட்டுக்காரனுக்கு அது உயர்ந்த அமைப்பாகும்//
    ஐயா,என் ஜாதகத்தில் 7ம் அதிபதி 9ம் அதிபதியுடன் 4ம் இடத்தில் பரிவர்த்தனை அடைந்துள்ளார்...பரவாயில்லை,கொஞ்சம் பிழைத்துக் கொண்டேன் என்று நினைக்கின்றேன்.../////

    நல்லது. நீங்கள் பிழைத்துக்கொண்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  9. ////Blogger Rajaram said...
    ஐயா,
    நல்ல பதிவு அருமை,அதைவிட உங்களின் வார்த்தைஜாலம் சொல்ல வார்த்தையே இல்லை.அலுவலகத்தில் மேலதிகாரி இல்லாத நேரங்களில் நமது வலைத்தளத்திற்கு வந்து பழைய பாடங்களை படிக்க ஆரம்பித்துவிடுவேன்.அனுபவங்கள், நீதிக்கதைகள்,ஜோதிட சம்பந்தமான கட்டுரைகள் என ஒன்றையுமே விடுவதில்லை. நீதிக்கதைகளை பிரிண்ட் எடுத்துச்சென்று நண்பர்களிடம் படிக்கவும் சொல்லுவேன்,அந்தளவுக்கு தங்களின் எழுத்து என்னை ஈர்த்துவிட்டது.7ம் அதிபதி வக்கிரம் பெற்று,வக்கிரம் பெற்ற 9ம் அதிபதியுடன் சேர்ந்தாலும்,இருக்குமிடம் 6,8,12 இல்லையெனிலும் நன்மை கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா?.///

    அதெப்படி எடுத்துக்கொள்ள முடியும். ஜோதிட விதிகளை நம் இஷ்டத்திற்கு வளைக்க முடியுமா என்ன? இரண்டு வக்கிரகாரர்கள் சேரும்போது பலன்கள் வெகுவாகப் பாதிக்கப்ப்டும். எந்த அளவு பாதிக்கப்படும் என்பதை தராசு வைத்து நிறுத்துப் பார்க்க முடியாது.

    ReplyDelete
  10. ////Blogger thanusu said...
    சொல்ல மறந்த விதிகள் ;
    குடைக்கான விதி; குடை கொண்டுபோனால் கண்டிப்பை மழை வராமல் பாரமாய் மாறிவிடும்
    இணைய விதி; நெட்டில் உபயோகமான முக்கியமான வேலை இருக்கும் அன்று இணைய தொடர்பில் இமாலய சிக்கல் இருக்கும் .
    சாப்பாட்டு விதி;வீட்டில் பிரியாணி வாசம் தூக்கும் போதுதான் தலை போகும் வேலை வெளியிலிருந்து அழைத்து பட்டினி போட வைக்கும்
    உடைகள் விதி; ஆசையாய் வாங்கிய துணியை உடுத்தும் போது மனைவியும் மகளும் முகம் சுளிப்பார்கள் நன்றாக இல்லை என்று .
    விடுமுறை விதி; இன்று நண்பர்களுடன் இந்த இடத்திற்கு போக வேண்டும் என்று தீர்மானித்திருக்கும் போது மனைவியும் மகளும் வேறு இடத்திற்கு பிளான் பண்ணி நம் தீர்மானத்தை உடைப்பார்கள் ./////

    ஆமாம். ஆமாம். அனுபவம் பேசுகிறது!

    ReplyDelete
  11. ///Blogger sundari said...
    வணக்கம் சார்
    பாடம் ரொம்ப நல்லாயிருந்தது ரொம்ப நன்றி வாரத்துக்கு ஒரு நாள் பயிற்சி பாடம் போடுங்கள் மேலும் அஷ்டவர்க்க பாடத்தை தொடங்குங்கள் சீக்கிரம்மா உங்களுக்கு போதிய நேரமில்லையென்று எனக்கு தெரியும் அப்போ கூட எனக்கு அஷட வர்க்கத்தை ரொம்ப தெரிந்து கொள்ளவேண்டுமென்று ஆவலிருக்கிறது.////

    ஆகா செய்துவிடலாம் சகோதரி. சற்றுப் பொறுங்கள்!

    ReplyDelete
  12. ///Blogger thanusu said...
    எனக்கு பிடித்த அலசல் பாடம் .ஏழில் சுக்கிரன் களத்திர தோசமாம், திருமனதடை இருந்ததா? அல்லது அவரே லக்னாதி பதியும் ஆனதால் தடையும் தோசமும் மறைந்ததா?
    பத்தில் ராகு தொழிலோ பனியோ கொடுத்திருக்கும் .
    ரிஷப லக்னத்திற்கு சனி யோகா காரன் ஆனால் நீசம் பனிரெண்டில்.
    இதை மட்டும் விளக்குங்கள் அய்யா சனி நீசமானாலும் பரிவர்த்தனையால் யோகமா.
    யோககாரன்சனி பனிரெண்டில் நீசமானாலும்(பரிவர்த்தனை இல்லாமல் இருக்கும்போது) யோகமா.////

    அரசு பதவியில் இல்லாவிட்டாலும், சோனியா அம்மாவின் மகன்
    நீசமானாலும் பரிவர்த்தனை என்றால் மேற்கண்ட நிலைமை.
    பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால் - நீசம் பெற்ற நிலைமையில் யோக பலன்கள் இருக்காது. கர்மகாரனுக்கான பலன்கள் மட்டும் இருக்கும்!

    ReplyDelete
  13. Sir,melnilai padaththil ennakkum anumathi kidaikuma?intraiya paadam arumai!

    ReplyDelete
  14. என் மனைவியின் ஜாதகத்தில்தான் 7ம் அதிபதி லாபத்தில், தர்ம கர்மாதிபதிகள் 7ல் என்று பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. இதில் கர்மாதிபதி உச்சம், வர்கோத்தமம் என்ற நிலையிலும் இருக்கிறார்.

    ReplyDelete
  15. ஆசிரியருக்கு அன்பு வணக்கம் ,

    நீங்கள் ஜாதகம் அலசும் பாணியே தனி :-) ... நீங்கள் எவ்வளவு எழுதினாலும்( கடினமான பாடங்களாக இருந்தாலும் ) படிக்க அலுக்காது . இன்று நீங்கள் எடுத்து கொண்ட தலைப்பு அருமையோ அருமை . வித விதமாய் எழுதுகிறீர்கள் . எனக்கு ஏழாம் வீட்டு அதிபனும் , பத்தாம் , பதினோராம் வீட்டு அதிபனும் சேர்ந்து நாலில் உள்ளார்கள் .
    மேலும் அய்யா , சிம்ம இலக்கினகாரர்களுக்கு ஏழாம் இடது அதிபதியும் , ஆறாம் இடத்து அதிபதியும் ஒருவராகிறார் . சனி பகவானே களத்திர ஸ்தானத்திற்கும் , அதற்கு இடர் தரும் ஸ்தானமான ஆறாம் இடத்திற்கும் உரியவராகிறார் . எனவே சிம்ம இலக்கினகாரர்களுக்கு இல்லறத்தில் இயல்பாகவே ஏதும் பிரச்சனை எழுமா? எந்த வீட்டிற்குரிய வேலையை முழுமையாக செய்வார் ?

    ReplyDelete
  16. this is called Murphy's law.one more...your applying grease in both hand,nose will itching.

    ReplyDelete
  17. vannkam . ayya enrya .lesson nanrga ullathu .

    ReplyDelete
  18. sir eppothu jothida books valiudkrigal

    ReplyDelete
  19. //////மனைவியும் வேலக்குச் சென்றால், வீட்டையும், குழந்தைகளையும் யார் பார்த்துக்கொள்வது? //////
    நன்றாக சொன்னீர்கள்.
    வீட்டையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதற்கு ஏற்பாடுகள்
    இருந்தாலும், குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் சரிவரக் கிடைக்காததால், குழந்தைகள் ஏக்கமுள்ள மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது.இந்த நிலை மிகவும் பரிதாப மான தாகும்.நிச்சயமாக குழந்தைகளின் நலன் பாதிக்கப் படுகிறது.
    குறைந்த பட்சம் குழந்தைகளுக்கு விபரம் தெரியும் காலம் வரைக்குமாகிலும் தாய் குழந்தையுடன் சேர்ந்து இருந்து வந்தால்
    குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
    ///////////கணவனுக்கு இன்னென்ன கடமைகள், மனைவிக்கு இன்னென்ன கடைமைகள் என்று---------------------. சொன்னாலும் கேட்பதற்கு யாருக்கும் பொறுமை கிடையாது.அதனால் பட்டுத் திருந்த்ட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான். /////////////


    வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைப்பாளா?"
    . அதற்குச் ஜாதகத்தில் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்.
    என்பதற்கு உதாரண ஜாதகத்துடன் அமைந்துள்ள இன்றைய பாடம்
    நன்கு புரியும்படி இருந்தது.
    நன்றி!!

    ReplyDelete
  20. ஐயா வணக்கம்!

    எனக்கு 7ல் 7ழாம் அதிபனும், 10ல் 10ம் அதிபனும்! செவ்வாய்,சனி முறையே! மனைவி மருத்துவர்! மிக்க சரியாக உள்ளது! நன்றி!

    ReplyDelete
  21. பெண்கள் தொழிலிலோ அல்லது சுயதொழிலிலோ ஈடுபடுவது தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கிறது.
    தோட்ட வேலை (தேயிலை, காபி), காட்டு வேலை (வயல்), வீட்டு வேலை (எடுபிடி), குடிசைத் தொழில் (கைத்தறி, தையல்), கட்டுமான வேலை (சிற்றாள்), வியாபாரம் (இட்லி கடை, பூ, காய், பழம்), கலை (இசை, நடனம்), ஆட்சி (அரசி, மந்திரி) என எத்தனையோ தொழிலில் காலம் காலமாக பங்கேற்று குடும்பத்தையும் வெளிவேலைகளையும் பெண்கள் திறமையாகவே செய்துள்ளனர். என் பள்ளியில் எனக்கு வகுப்பெடுத்தவர்கள் அனைவரும் குடும்பத் தலைவிகளே.

    நம் நாட்டு பெண் தெய்வங்களுக்கு ஏராளமான கைகள் இருப்பது பெண்கள் பல பொறுப்புகளை நிர்வாகிப்பதையே குறிக்கிறது. டாஸ்மாக்கில் கதியாய் கிடப்பவர்களின் குடும்பங்கள் பட்டினியாய் இல்லை என்றால் அதற்கு ஒரு வெளி வேலை செய்யும் தாயே காரணம். இவர்களைப் போன்ற பெண்களின் கணவர்களின் ஜாதகம் எவ்வாறு இருக்கும் என்ற இன்றைய ஜாதக அலசல் பாடத்திற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  22. வங்கி விதி: நாம் வங்கிக்குள் சென்றவுடனேயே நம் கைப் பேனாவை ஒருவர் இரவல் கேட்பார்.வாங்கிக் கொண்டு பயன்படுத்தி விட்டு தன் கையில் எடுத்துச் சென்றுவிடுவார்.நாம் நம் வேலைக்கு இன்னொருவரிடம் பேனா இரவல் வாங்க வேண்டி வரும்.
    =================================
    என் ஜாதகத்தில் 7ம் அதிபன் சனி பகவான் 2ம் இடத்தில் சிம்மத்தில் 2, மற்றும்
    3 அதிபனுடன் சேர்க்கை.மனைவி 9.5 வருடங்கள் குடும்பப் பெண்மணியாக இருந்து 3 பெண்களைப் பெற்ற் பின்னர் அரசாங்க ஆசிரியப் பணி கிடைத்து
    25 ஆண்டுகள் வேலை பார்த்து தற்சமயம் ஓய்வூதியமும் பெறுகிறார்கள்.
    7ம் வீட்டுக்காரன் தன ஸ்தானதிபதியுடன் கூட்டு சேர்ந்தாலும் தன ஸ்தானத்தில் அமர்ந்தாலும் இந்த 'மனைவியால் தனவரவு' உண்டு போலும்.

    இருவருக்குமே 10ம் அதிபதி 12ல். வெளிநாட்டுப்பயணம் கிடைத்ததே தவிர அங்கே வேலை பார்க்கும் வாய்ப்பு இல்லை.
    சனி செவ்வாய் பகைவர்களின் பரிவர்தனையாலுமா பலன் உண்டு?

    ஜாதக அலசல் வழக்கம் போல நன்றாக உள்ளது.

    ReplyDelete
  23. "If anything can go wrong, it will"
    அவசர அவசரமாக போக வேண்டிய நேரத்தில் ஆட்டோ பிரேக் டௌன் ஆவது இல்லை சிவப்பு விளக்காகவே போக்குவரத்தில் மாட்டுவது.
    காரை சுத்தமாக கழுவி பாலீஷ் போட்ட அன்று காக்கா நம் கார்தான் சிறந்த டாய்லெட் எனத் தேர்ந்தெடுப்பது.
    நமக்கு டிக்கெட் கொடுக்கும்பொழுது மட்டும் ஹவுஸ் ஃபுல் போர்டு போடுவது.
    முதுகு ஒடிய வீட்டைத் துடைத்து சுத்தம் செய்த பின் பிள்ளைகள் உணவைத் தரையில் கொட்டுவது.
    முக்கியமான காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்பொழுது மின்சாரம் போவது.
    அதைவிட டெர்ம் பேப்பர் சப்மிட் செய்ய வேண்டிய அன்று காப்பி மெஷினோ, ப்ரிண்டரோ செய்யும் தகராறு இருக்கிறதே...அந்த சோதனையை வார்த்தைகளால் விளக்க முடியாது. ராமரும் சீதையும் காட்டில் பட்ட துன்பத்தை விட கொடிய துன்பம் அது.

    ReplyDelete
  24. /////Blogger Ananthamurugan said...
    Sir,melnilai padaththil ennakkum anumathi kidaikuma? intraiya paadam arumai!/////

    டிக்கெட் கிடைக்குமா என்று வீட்டில் வந்து கேட்டால் எப்படி? படம் நடக்கும் தியேட்டரில் வந்து கேளுங்கள். மின்னஞ்சல் மூலம் கேளுங்கள்!

    ReplyDelete
  25. /////Blogger ananth said...
    என் மனைவியின் ஜாதகத்தில்தான் 7ம் அதிபதி லாபத்தில், தர்ம கர்மாதிபதிகள் 7ல் என்று பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. இதில் கர்மாதிபதி உச்சம், வர்கோத்தமம் என்ற நிலையிலும் இருக்கிறார்.////

    அத்துடன் உங்கள் பெயரும் ஆனந்த் என்று உள்ளது. ஆனந்தமாக இருக்கிறீர்கள்:-))))

    ReplyDelete
  26. /////Blogger naren said...
    ஆசிரியருக்கு அன்பு வணக்கம் ,
    நீங்கள் ஜாதகம் அலசும் பாணியே தனி :-) ... நீங்கள் எவ்வளவு எழுதினாலும் (கடினமான பாடங்களாக இருந்தாலும் ) படிக்க அலுக்காது . இன்று நீங்கள் எடுத்து கொண்ட தலைப்பு அருமையோ அருமை . வித விதமாய் எழுதுகிறீர்கள் . எனக்கு ஏழாம் வீட்டு அதிபனும் , பத்தாம் , பதினோராம் வீட்டு அதிபனும் சேர்ந்து நாலில் உள்ளார்கள் .
    மேலும் அய்யா , சிம்ம இலக்கினகாரர்களுக்கு ஏழாம் இடது அதிபதியும் , ஆறாம் இடத்து அதிபதியும் ஒருவராகிறார் . சனி பகவானே களத்திர ஸ்தானத்திற்கும் , அதற்கு இடர் தரும் ஸ்தானமான ஆறாம் இடத்திற்கும் உரியவராகிறார் . எனவே சிம்ம இலக்கினகாரர்களுக்கு இல்லறத்தில் இயல்பாகவே ஏதும் பிரச்சனை எழுமா? எந்த வீட்டிற்குரிய வேலையை முழுமையாக செய்வார் ?/////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும். நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை.
    ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.
    அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்

    ReplyDelete
  27. ////Blogger Ananthamurugan said...
    this is called Murphy's law.one more...your applying grease in both hand,nose will itching./////

    நல்லது. பகிவிற்கு நன்றி அனந்தமுருகன்!
    அனந்தமுருகனா? ஆனந்தமுருகனா?

    ReplyDelete
  28. ////Blogger eswari sekar said...
    vannkam . ayya enrya .lesson nanrga ullathu////

    நல்ல்து. நன்றி சகோதரி!

    ReplyDelete
  29. ////Blogger eswari sekar said...
    sir eppothu jothida books valiudkrigal/////

    மே மாதம் வெளிவரும்!

    ReplyDelete
  30. ////Blogger V Dhakshanamoorthy said...
    //////மனைவியும் வேலக்குச் சென்றால், வீட்டையும், குழந்தைகளையும் யார் பார்த்துக்கொள்வது? //////
    நன்றாக சொன்னீர்கள். வீட்டையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதற்கு ஏற்பாடுகள் இருந்தாலும், குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் சரிவரக் கிடைக்காததால், குழந்தைகள் ஏக்கமுள்ள மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது.இந்த நிலை மிகவும் பரிதாப மான தாகும்.நிச்சயமாக குழந்தைகளின் நலன் பாதிக்கப் படுகிறது. குறைந்த பட்சம் குழந்தைகளுக்கு விபரம் தெரியும் காலம் வரைக்குமாகிலும் தாய் குழந்தையுடன் சேர்ந்து இருந்து வந்தால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
    ///////////கணவனுக்கு இன்னென்ன கடமைகள், மனைவிக்கு இன்னென்ன கடைமைகள் என்ற சொன்னாலும் கேட்பதற்கு யாருக்கும் பொறுமை கிடையாது.அதனால் பட்டுத் திருந்த்ட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான். /////////////
    வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடைப்பாளா?" அதற்குச் ஜாதகத்தில் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்.
    என்பதற்கு உதாரண ஜாதகத்துடன் அமைந்துள்ள இன்றைய பாடம்
    நன்கு புரியும்படி இருந்தது. நன்றி!!////

    உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  31. ////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    ஐயா வணக்கம்!
    எனக்கு 7ல் 7ழாம் அதிபனும், 10ல் 10ம் அதிபனும்! செவ்வாய்,சனி முறையே! மனைவி மருத்துவர்! மிக்க சரியாக உள்ளது! நன்றி!////

    மனைவி மருத்துவரா? கொடுத்து வைத்த மகராசன்!

    ReplyDelete
  32. /////Blogger தேமொழி said...
    பெண்கள் தொழிலிலோ அல்லது சுயதொழிலிலோ ஈடுபடுவது தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கிறது.
    தோட்ட வேலை (தேயிலை, காபி), காட்டு வேலை (வயல்), வீட்டு வேலை (எடுபிடி), குடிசைத் தொழில் (கைத்தறி, தையல்), கட்டுமான வேலை (சிற்றாள்), வியாபாரம் (இட்லி கடை, பூ, காய், பழம்), கலை (இசை, நடனம்), ஆட்சி (அரசி, மந்திரி) என எத்தனையோ தொழிலில் காலம் காலமாக பங்கேற்று குடும்பத்தையும் வெளிவேலைகளையும் பெண்கள் திறமையாகவே செய்துள்ளனர். என் பள்ளியில் எனக்கு வகுப்பெடுத்தவர்கள் அனைவரும் குடும்பத் தலைவிகளே.
    நம் நாட்டு பெண் தெய்வங்களுக்கு ஏராளமான கைகள் இருப்பது பெண்கள் பல பொறுப்புகளை நிர்வாகிப்பதையே குறிக்கிறது. டாஸ்மாக்கில் கதியாய் கிடப்பவர்களின் குடும்பங்கள் பட்டினியாய் இல்லை என்றால் அதற்கு ஒரு வெளி வேலை செய்யும் தாயே காரணம். இவர்களைப் போன்ற பெண்களின் கணவர்களின் ஜாதகம் எவ்வாறு இருக்கும் என்ற இன்றைய ஜாதக அலசல் பாடத்திற்கு நன்றி ஐயா./////

    டாஸ்மாக்காரனுக்கும் 337தான். அந்தக் கண்க்கில் விதி அவனுக்கு நல்ல மனைவியைக் கொடுத்திருக்கும்!:-)))))

    ReplyDelete
  33. ////Blogger kmr.krishnan said...
    வங்கி விதி: நாம் வங்கிக்குள் சென்றவுடனேயே நம் கைப் பேனாவை ஒருவர் இரவல் கேட்பார்.வாங்கிக் கொண்டு பயன்படுத்தி விட்டு தன் கையில் எடுத்துச் சென்றுவிடுவார்.நாம் நம் வேலைக்கு இன்னொருவரிடம் பேனா இரவல் வாங்க வேண்டி வரும்.
    =================================
    என் ஜாதகத்தில் 7ம் அதிபன் சனி பகவான் 2ம் இடத்தில் சிம்மத்தில் 2, மற்றும்
    3 அதிபனுடன் சேர்க்கை.மனைவி 9.5 வருடங்கள் குடும்பப் பெண்மணியாக இருந்து 3 பெண்களைப் பெற்ற் பின்னர் அரசாங்க ஆசிரியப் பணி கிடைத்து
    25 ஆண்டுகள் வேலை பார்த்து தற்சமயம் ஓய்வூதியமும் பெறுகிறார்கள்.
    7ம் வீட்டுக்காரன் தன ஸ்தானதிபதியுடன் கூட்டு சேர்ந்தாலும் தன ஸ்தானத்தில் அமர்ந்தாலும் இந்த 'மனைவியால் தனவரவு' உண்டு போலும்.
    இருவருக்குமே 10ம் அதிபதி 12ல். வெளிநாட்டுப்பயணம் கிடைத்ததே தவிர அங்கே வேலை பார்க்கும் வாய்ப்பு இல்லை. சனி செவ்வாய் பகைவர்களின் பரிவர்தனையாலுமா பலன் உண்டு?
    ஜாதக அலசல் வழக்கம் போல நன்றாக உள்ளது.////

    உங்களுடைய கருத்துப் பகிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  34. ////Blogger தேமொழி said...
    "If anything can go wrong, it will"
    அவசர அவசரமாக போக வேண்டிய நேரத்தில் ஆட்டோ பிரேக் டௌன் ஆவது இல்லை சிவப்பு விளக்காகவே போக்குவரத்தில் மாட்டுவது.
    காரை சுத்தமாக கழுவி பாலீஷ் போட்ட அன்று காக்கா நம் கார்தான் சிறந்த டாய்லெட் எனத் தேர்ந்தெடுப்பது.
    நமக்கு டிக்கெட் கொடுக்கும்பொழுது மட்டும் ஹவுஸ் ஃபுல் போர்டு போடுவது.
    முதுகு ஒடிய வீட்டைத் துடைத்து சுத்தம் செய்த பின் பிள்ளைகள் உணவைத் தரையில் கொட்டுவது.
    முக்கியமான காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்பொழுது மின்சாரம் போவது.
    அதைவிட டெர்ம் பேப்பர் சப்மிட் செய்ய வேண்டிய அன்று காப்பி மெஷினோ, ப்ரிண்டரோ செய்யும் தகராறு இருக்கிறதே...அந்த சோதனையை வார்த்தைகளால் விளக்க முடியாது. ராமரும் சீதையும் காட்டில் பட்ட துன்பத்தை விட கொடிய துன்பம் அது./////

    இதில் காக்ம் தேர்ந்தெடுக்கும் டாய்லெட்தான் சூப்பர்:-))))))

    ReplyDelete
  35. நல்லதொருப் பாடம்...

    எனது ஜாதகத்தில், ஏழுக்கும் பத்துக்கும் உரியவனே அவன் புதன்; அவனோ ஒன்பதிற்கு உரியவனோடு கூட்டணி சூப்பரில்ல!
    இருந்தும் அவன் பன்னிரெண்டில் போட்ட கூட்டணியால் இல்லாள் வீட்டிலே எந்நேரமும் எல்லோருக்கும் ஆனந்தமாய் உள்ளாள் அதனால் அடித்தது எங்களுக்கு யோகம்.

    ஒன்பதுக்குரிய சூரியனுடன் பன்னிரெண்டில் இருப்பதால் தந்தை வழி சொத்துக்கள் எல்லாம் எனக்கு கிடைக்க வில்லை (கடன்களும் இல்லை, இனியக் கடமையைத் தவிர!).

    ஒன்பதாம் அதிபன், பன்னிரெண்டில் குடி புகுந்தது ஒன்பதில் கேது (நவம்பர் 1969 .) உதாரண ஜாதகம் போலே இந்தக் காரணங்களால் வெளிநாட்டிலே வேலை (தொடக்கமே) உள்ளூரிலே ஓரிரு வருடம் கூட இல்லை.

    ஏழுக்கு உரியவன் பன்னிரெண்டிலே இருந்தும் நவாம்சத்தில் உட்சம் என்பதால் நல்ல மனைவி... இன்னும் சொன்னால் என் குழந்தைகளுக்கு நல்ல அம்மா! என் பெற்றோருக்கு நல்ல மகள்.

    மனைவி வேலைக்கு போகவில்லை என்றாலும் எனக்கு லக்னாதிபதி பதினொன்றில், பத்தில் 39 . பரல். (பத்துக்குரியன் அம்சத்தில் உச்சம்)

    வேலைக்குப் போகும் பெண்கள் தங்களின் குழந்தைகளை கவனிக்க முடியாமல் குற்ற உணர்வோடு படும் தவிப்பை சில இடங்களில் காண முடிகிறது... பின்னாளில் எனக்காக என்ன செய்தீர்கள் என்றும் கேட்டப் பிள்ளைகளையும் நான் பார்த்து இருக்கிறேன்.

    ஒன்னு போனால் இன்னொன்று உண்டு... நீங்க தான் சொல்லுவீங்களே 337 .ன்னு... எனது ஜாதகம் பாடத்திற்கு சுவாரஸ்யமாக இருக்கலாம் என்று நீண்டப் பின்னூட்டம்.:):)

    மனைவி வேலை பார்க்காத அமைப்புள்ள ஜாதக நண்பர்கள் கவலை வேண்டாம் வேறு அமைப்பு உண்டா என்று பாருங்கள்.

    இதுவரை பேசாத விஷயத்தை எடுத்து ஆய்ந்து அறி(ரி)ந்து சமைத்து தந்துள்ளீர்கள் ஐயா!
    நன்றிகள் பல.

    ReplyDelete
  36. அய்யா அருமையான அலசல்.

    மிதுன லக்கினத்திற்கு ஏழாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் நல்ல நிலையில் இருந்தாலும் மனைவி வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது எனக் கொள்ளலாமா..?

    ஒரு சந்தேகம். தாங்கள் குறிப்பிட்டபடி ஏழாம் அதிபதி ஒன்பதாம் அதிபதியுடன் கூட்டாகவோ அல்லது சம்பந்தப்பட்டோ இருந்தால் பாக்கியமான மனைவி கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதென்கிறீர்கள்.. இந்தக் கூட்டுடன் சூரியனோ (secondary malefic) அல்லது எட்டாம் அதிபதியோ இருந்தால் இந்தப் பலன் மாறுமா.. சற்று விளக்கினால் தேவலாம்..

    பதிவிற்கு நன்றிகள்.

    ReplyDelete
  37. ayya , innum sila vithigal ... nagaichuvaikaga :))

    எந்த ஒரு தொலைந்த பொருளும் , அதற்கான மாற்றை வாங்கியவுடன் கிடைத்துவிடும் !

    மிகவும் தேடி அதிக விலையில் ஒரு பொருளை வாங்கியான பிறகு , மிக மலிவாக அருகிலேயே கிடைக்கும் (உங்கள் மனைவியின் கண்களில் தன அது முதலில் படும் )
    எந்த கடிதத்திலும் இரண்டு கேள்வி கேட்காதீர்கள் . நீங்கள் மிகவும் எதிர்பார்த்த கேள்விக்கு பதிலே கிடைக்காமல் போய்விடும் (இந்த விதி நம்ம வகுப்பறைக்கு பொருந்தும் போலிருக்கிறதே )... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ;)

    உங்கள் கணினியின் வன் பொருள் பாதிக்கப்பட்டால் , சரிசெய்பவர் மென் பொருளை குறை சொல்லுவார்

    மேலே சொன்ன விதியை மாற்றி போட்டு கொள்ளலாம்

    தானியங்கி கேமராக்கள் தானாக இயங்குவதில்லை

    ReplyDelete
  38. தமிழ் விரும்பி ஆலாசியம் said...ஒன்பதாம் அதிபன், பன்னிரெண்டில் குடி புகுந்தது. உதாரண ஜாதகம் போலே இந்தக் காரணங்களால் வெளிநாட்டிலே வேலை (தொடக்கமே) உள்ளூரிலே ஓரிரு வருடம் கூட இல்லை.

    எனக்கு ஒன்பது மற்றும் பனிரெண்டுக்கு உரியவன் புதன் ஒன்பதிலே. நீங்கள் சொன்னது போல் தொடக்கமே எனக்கும் வெளிநாட்டில்தான் வேலை ,உள்ளூரில் ஒருநாள் கூட இல்லை

    ReplyDelete
  39. ஆஹா எனக்கு பிடித்த பாடம் அய்யா. கடந்த ஒரு மாதமாக லேப்டாப் இல்லாமல் கணவரிடம் ஓசி வாங்கி வகுப்பறைக்கு வந்து சென்றேன்.
    நான் அமெரிக்காவில் வேலை பார்த்து கொண்டு இருந்தவள்தான். திருமணம் முடித்தவுடன் வேலையை விட்டுவிட்டு (நன்றாக சென்று கொண்டிருந்த வேலையை
    அப்படியே ஒருநாள் விட்டுவிட்டு வீடு வந்தேன்) இன்று இரு குழந்தைகளுக்கு தாயாக என் வேலையை தொடர்கிறேன். என்னுடைய ஏழாம் அதிபதி சூரியன், அவரோ ஒன்பதாம் வீட்டில் (துலாம் ) புதனுடன், நானோ கும்பம் லக்னம், நீசம் பெற்ற ராஜயோகம். புதன் சுக்ரன் பரிவர்த்தனை(எட்டாம் மற்றும் ஒன்பதாம் இடத்தில்). அப்பபோ ஏன்டா வேலையை விட்டோம் என்று வருத்தபடுவதுண்டு. நடுவில் முயற்சி செய்து, பிறகு நானே என்னை சமாதனம் சொல்லிக்கொண்டு குழந்தைகலை கவனித்து வருகிறேன். ஆனாலும் உடைந்த லேப்டாப் க்கு புதுசு கேட்கையில் , கணவர் அடுத்து பார்க்கலாம் என்று சொன்னால் ஈகோ உரசுகிறது. பத்தாம் இடத்தில் செவ்வாய், அவர் சொந்த வீட்டில். கண்டிப்பாய் வேலைக்கு சென்று விடலாம் என்று தான் தோனுகிறது. கடவுள் என்ன விதித்து உள்ளாரோ. கணவருக்கு, வேலை செய்யும் இடத்தில் வருடத்திற்கு நான்கு முறை பதக்கம் வாங்கி வந்து விடுவார். அபோது சந்தோஷமாக இருக்கும். நான்
    vandha ராசி தான் உங்களுக்கு என்று பெருமை அடித்து கொள்வேன். அவருக்கு ஏழாம் வீட்டில் (மகர லக்னம்), குருவும் சந்திரனும். அவர் கொடுத்து வைத்தவர்.

    தேமொழி அவர்களுக்கு உங்களுடைய கற்பனை வகுப்பறை படித்து, சிரித்து சிரித்து வயறு வலி வந்து விட்டது போங்கள்.
    பின்னோட்டம் எழுத முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். Need to appreciate your sense of humor, keep writing more.
    thank you sir, for encouraging your students ametur writing. needless to say, I admire your talents along with you strength of giving back to readers. thank u sir.

    ReplyDelete
  40. ஐயா,
    சூரியன் மகரத்தில் அல்லது கும்பத்தில் இருந்து, சனி சிம்மத்தில் பரிவர்த்தனையாகியிருந்தால், சூரியன், சனி ஆகியோர் உச்சம் பெறுவார்களா?

    நன்றி

    ReplyDelete
  41. SP.VR. SUBBAIYA said...
    நல்லது. பகிவிற்கு நன்றி அனந்தமுருகன்!
    அனந்தமுருகனா? ஆனந்தமுருகனா?

    ஆனந்தமுருகன் கோவிந்தன்.

    ReplyDelete
  42. SP.VR. SUBBAIYA said...
    இதில் காக்ம் தேர்ந்தெடுக்கும் டாய்லெட்தான் சூப்பர்:-))))))

    இதிலிருந்து காகம் சொல்லும் பாடம்......காரை கழுவகூடாது என்பது.........சரிதானே!!!

    ReplyDelete
  43. அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் .சச்சின் டெண்டுல்கரின் ஜாதகம் அலசி கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவரின் ஆட்டமும், ஆட்டத்திறமையும், நுணுக்கமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதற்கு என்ன வகையான அமைப்பு கிரகங்கள் கை கொடுக்கின்றன .ஆனால் கடந்த ஒரு வருடமாக ஒரு சதம் அடிக்க மிகவும் கடினப் படுகிறார் .

    சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் கஷ்டப் பட்டார், ஆனால் நேற்று இவருடைய ஆட்டத்தைப் பார்க்கும் போது அந்த திணறல் இதுவரை இவரிடம் தென்படாதது . ஏன் இந்த பின்னடைவு .

    வயதாகி விட்டது என்றால் அதை இனால் ஏற்றுக் கொள்ள முடியாது .கொஞ்சம் அலசி சொல்லுங்கள் அய்யா.

    ReplyDelete
  44. ////Blogger தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    நல்லதொரு பாடம்...
    எனது ஜாதகத்தில், ஏழுக்கும் பத்துக்கும் உரியவனே அவன் புதன்; அவனோ ஒன்பதிற்கு உரியவனோடு கூட்டணி சூப்பரில்ல!
    இருந்தும் அவன் பன்னிரெண்டில் போட்ட கூட்டணியால் இல்லாள் வீட்டிலே எந்நேரமும் எல்லோருக்கும் ஆனந்தமாய் உள்ளாள் அதனால் அடித்தது எங்களுக்கு யோகம்.
    ஒன்பதுக்குரிய சூரியனுடன் பன்னிரெண்டில் இருப்பதால் தந்தை வழி சொத்துக்கள் எல்லாம் எனக்கு கிடைக்க வில்லை (கடன்களும் இல்லை, இனியக் கடமையைத் தவிர!).
    ஒன்பதாம் அதிபன், பன்னிரெண்டில் குடி புகுந்தது ஒன்பதில் கேது (நவம்பர் 1969 .) உதாரண ஜாதகம் போலே இந்தக் காரணங்களால் வெளிநாட்டிலே வேலை (தொடக்கமே) உள்ளூரிலே ஓரிரு வருடம் கூட இல்லை.
    ஏழுக்கு உரியவன் பன்னிரெண்டிலே இருந்தும் நவாம்சத்தில் உட்சம் என்பதால் நல்ல மனைவி... இன்னும் சொன்னால் என் குழந்தைகளுக்கு நல்ல அம்மா! என் பெற்றோருக்கு நல்ல மகள்.
    மனைவி வேலைக்கு போகவில்லை என்றாலும் எனக்கு லக்னாதிபதி பதினொன்றில், பத்தில் 39 . பரல். (பத்துக்குரியன் அம்சத்தில் உச்சம்)
    வேலைக்குப் போகும் பெண்கள் தங்களின் குழந்தைகளை கவனிக்க முடியாமல் குற்ற உணர்வோடு படும் தவிப்பை சில இடங்களில் காண முடிகிறது... பின்னாளில் எனக்காக என்ன செய்தீர்கள் என்றும் கேட்டப் பிள்ளைகளையும் நான் பார்த்து இருக்கிறேன்.
    ஒன்னு போனால் இன்னொன்று உண்டு... நீங்க தான் சொல்லுவீங்களே 337 .ன்னு... எனது ஜாதகம் பாடத்திற்கு சுவாரஸ்யமாக இருக்கலாம் என்று நீண்டப் பின்னூட்டம்.:):)
    மனைவி வேலை பார்க்காத அமைப்புள்ள ஜாதக நண்பர்கள் கவலை வேண்டாம் வேறு அமைப்பு உண்டா என்று பாருங்கள்.
    இதுவரை பேசாத விஷயத்தை எடுத்து ஆய்ந்து அறி(ரி)ந்து சமைத்து தந்துள்ளீர்கள் ஐயா!
    நன்றிகள் பல.////

    நல்லது. தகவல் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  45. ////Blogger Govindasamy said...
    அய்யா அருமையான அலசல்.
    மிதுன லக்கினத்திற்கு ஏழாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் நல்ல நிலையில் இருந்தாலும் மனைவி வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது எனக் கொள்ளலாமா..?////

    என்ன உங்கள் செளகரியத்திற்கு ஜோதிட விதிகளை வளைத்துக் கொள்ளப் பார்க்கிறீர்களா? ஏழாம் அதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள்.பத்தாம் அதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். அவ்வளவுதான். இரண்டையும் வைத்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ////ஒரு சந்தேகம். தாங்கள் குறிப்பிட்டபடி ஏழாம் அதிபதி ஒன்பதாம் அதிபதியுடன் கூட்டாகவோ அல்லது சம்பந்தப்பட்டோ இருந்தால் பாக்கியமான மனைவி கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதென்கிறீர்கள்.. இந்தக் கூட்டுடன் சூரியனோ (secondary malefic) அல்லது எட்டாம் அதிபதியோ இருந்தால் இந்தப் பலன் மாறுமா.. சற்று விளக்கினால் தேவலாம்..
    பதிவிற்கு நன்றிகள்.////

    பாயசத்தில் உப்பைப் போட்டது போல இருக்கும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  46. ///Blogger naren said...
    ayya , innum sila vithigal ... nagaichuvaikaga :))
    எந்த ஒரு தொலைந்த பொருளும் , அதற்கான மாற்றை வாங்கியவுடன் கிடைத்துவிடும் !
    மிகவும் தேடி அதிக விலையில் ஒரு பொருளை வாங்கியான பிறகு , மிக மலிவாக அருகிலேயே கிடைக்கும் (உங்கள் மனைவியின் கண்களில் தன அது முதலில் படும் )
    எந்த கடிதத்திலும் இரண்டு கேள்வி கேட்காதீர்கள் . நீங்கள் மிகவும் எதிர்பார்த்த கேள்விக்கு பதிலே கிடைக்காமல் போய்விடும் (இந்த விதி நம்ம வகுப்பறைக்கு பொருந்தும் போலிருக்கிறதே )... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ;)
    உங்கள் கணினியின் வன் பொருள் பாதிக்கப்பட்டால் , சரிசெய்பவர் மென் பொருளை குறை சொல்லுவார்
    மேலே சொன்ன விதியை மாற்றி போட்டு கொள்ளலாம்
    தானியங்கி கேமராக்கள் தானாக இயங்குவதில்லை/////

    நல்லது. நன்றி நரேன்!

    ReplyDelete
  47. /////Blogger thanusu said...
    தமிழ் விரும்பி ஆலாசியம் said...ஒன்பதாம் அதிபன், பன்னிரெண்டில் குடி புகுந்தது. உதாரண ஜாதகம் போலே இந்தக் காரணங்களால் வெளிநாட்டிலே வேலை (தொடக்கமே) உள்ளூரிலே ஓரிரு வருடம் கூட இல்லை.
    எனக்கு ஒன்பது மற்றும் பனிரெண்டுக்கு உரியவன் புதன் ஒன்பதிலே. நீங்கள் சொன்னது போல் தொடக்கமே எனக்கும் வெளிநாட்டில்தான் வேலை ,உள்ளூரில் ஒருநாள் கூட இல்லை////

    வெளிநாட்டில்தான் வெள்ளையப்பன் இருக்கிறான். அதுக்கு சந்தோசப் படுங்கள்! வெள்ளையப்பன் என்றால் தெரியுமா?

    ReplyDelete
  48. ////Blogger Kalai said...
    ஆஹா எனக்கு பிடித்த பாடம் அய்யா. கடந்த ஒரு மாதமாக லேப்டாப் இல்லாமல் கணவரிடம் ஓசி வாங்கி வகுப்பறைக்கு வந்து சென்றேன்.
    நான் அமெரிக்காவில் வேலை பார்த்து கொண்டு இருந்தவள்தான். திருமணம் முடித்தவுடன் வேலையை விட்டுவிட்டு (நன்றாக சென்று கொண்டிருந்த வேலையை
    அப்படியே ஒருநாள் விட்டுவிட்டு வீடு வந்தேன்) இன்று இரு குழந்தைகளுக்கு தாயாக என் வேலையை தொடர்கிறேன். என்னுடைய ஏழாம் அதிபதி சூரியன், அவரோ ஒன்பதாம் வீட்டில் (துலாம் ) புதனுடன், நானோ கும்பம் லக்னம், நீசம் பெற்ற ராஜயோகம். புதன் சுக்ரன் பரிவர்த்தனை(எட்டாம் மற்றும் ஒன்பதாம் இடத்தில்). அப்பபோ ஏன்டா வேலையை விட்டோம் என்று வருத்தபடுவதுண்டு. நடுவில் முயற்சி செய்து, பிறகு நானே என்னை சமாதனம் சொல்லிக்கொண்டு குழந்தைகளைக் கவனித்து வருகிறேன். ஆனாலும் உடைந்த லேப்டாப் க்கு புதுசு கேட்கையில் , கணவர் அடுத்து பார்க்கலாம் என்று சொன்னால் ஈகோ உரசுகிறது. பத்தாம் இடத்தில் செவ்வாய், அவர் சொந்த வீட்டில். கண்டிப்பாய் வேலைக்கு சென்று விடலாம் என்று தான் தோனுகிறது. கடவுள் என்ன விதித்து உள்ளாரோ. கணவருக்கு, வேலை செய்யும் இடத்தில் வருடத்திற்கு நான்கு முறை பதக்கம் வாங்கி வந்து விடுவார். அபோது சந்தோஷமாக இருக்கும். நான் வந்த் ராசி தான் உங்களுக்கு என்று பெருமை அடித்து கொள்வேன். அவருக்கு ஏழாம் வீட்டில் (மகர லக்னம்), குருவும் சந்திரனும். அவர் கொடுத்து வைத்தவர்.
    தேமொழி அவர்களுக்கு உங்களுடைய கற்பனை வகுப்பறை படித்து, சிரித்து சிரித்து வயறு வலி வந்து விட்டது போங்கள்.
    பின்னோட்டம் எழுத முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். Need to appreciate your sense of humor, keep writing more.
    thank you sir, for encouraging your students ametur writing. needless to say, I admire your talents along with you strength of giving back to readers. thank u sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  49. ////Blogger ராபின் ஹூட் said...
    ஐயா,
    சூரியன் மகரத்தில் அல்லது கும்பத்தில் இருந்து, சனி சிம்மத்தில் பரிவர்த்தனையாகியிருந்தால், சூரியன், சனி ஆகியோர் உச்சம் பெறுவார்களா?
    நன்றி////

    உச்சத்தையும் பரிவர்த்தனையையும் போட்டுக் குழப்புகிறீர்களே? முதலில் அடிப்படைப் பாடங்களை எல்லாம் ஒழுங்காகப் ப்டியுங்கள். சூரியனும் , சனியும் எந்த வீட்டில் உச்சம் பெறும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!

    ReplyDelete
  50. ////Blogger Ananthamurugan said...
    SP.VR. SUBBAIYA said...
    நல்லது. பகிவிற்கு நன்றி அனந்தமுருகன்!
    அனந்தமுருகனா? ஆனந்தமுருகனா?
    ஆனந்தமுருகன் கோவிந்தன்.////

    நல்லது. ஜி. ஆனந்தமுருகன்!

    ReplyDelete
  51. ////Blogger Ananthamurugan said...
    SP.VR. SUBBAIYA said...
    இதில் காக்ம் தேர்ந்தெடுக்கும் டாய்லெட்தான் சூப்பர்:-))))))
    இதிலிருந்து காகம் சொல்லும் பாடம்......காரை கழுவகூடாது என்பது.........சரிதானே!!!////

    காகம் நம் தலையை டாய்லெட் ஆக்கினால், கழுவலாமா - கூடாதா?:-))))

    ReplyDelete
  52. ////Blogger thanusu said...
    அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் .சச்சின் டெண்டுல்கரின் ஜாதகம் அலசி கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    இவரின் ஆட்டமும், ஆட்டத்திறமையும், நுணுக்கமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதற்கு என்ன வகையான அமைப்பு கிரகங்கள் கை கொடுக்கின்றன .ஆனால் கடந்த ஒரு வருடமாக ஒரு சதம் அடிக்க மிகவும் கடினப் படுகிறார் .
    சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் கஷ்டப் பட்டார், ஆனால் நேற்று இவருடைய ஆட்டத்தைப் பார்க்கும் போது அந்த திணறல் இதுவரை இவரிடம் தென்படாதது . ஏன் இந்த பின்னடைவு .வயதாகி விட்டது என்றால் அதை இனால் ஏற்றுக் கொள்ள முடியாது .கொஞ்சம் அலசி சொல்லுங்கள் அய்யா.////

    பின்னால் நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் நண்பரே!

    ReplyDelete
  53. thanusu said...
    //வயதாகி விட்டது என்றால் அதை இனால் ஏற்றுக் கொள்ள முடியாது .கொஞ்சம் அலசி சொல்லுங்கள் அய்யா.//

    இரண்டு வாரத்திற்கு முன்பு தினமலரில் இந்த அலசல் வெளிவந்ததது.சச்சின் 102சதம் அடித்து தான் ஓய்வு பெறுவார்.என்று கேரளா ஜோதிடர் குறுப்பிட்டுள்ளார்.

    ReplyDelete
  54. SP.VR. SUBBAIYA said...
    //காகம் நம் தலையை டாய்லெட் ஆக்கினால், கழுவலாமா - கூடாதா?:-))))
    தண்ணி இருந்த கழுவலாம்! இல்லாட்டி அழுவலாம்!!வேறென்ன பண்ணமுடியும்

    ReplyDelete
  55. இன்றைய ஜாதக அலசல் பாடம் புரியும்படி இருந்தது.

    வேலைக்குச் சென்று சம்பாத்தித்துப் பணத்தை ருசி பார்த்த பெண்ணை, யாரும் வீட்டில் உட்கார வைக்க முடியாது. //

    எல்லாருமே விரும்பிதான் வேலைக்குச் செல்கிறார்கள் என்று சொல்லமுடியாது. எனக்கு வேலைக்குப்போவதைவிட வீட்டில் இருப்பதில்தான் அதிக விருப்பம், அதற்கான சூழல் இன்னும் வரவில்லை. முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன்.

    என் கணவரின் ஜாதகத்தில் லக் / நான்காம் / ஏழாம் அதி லக்னத்தில். யோககாரகனுமான பத்தாம் அதி பதினொன்றில்.

    ReplyDelete
  56. என்னுடைய ஏழாம் அதிபதி சூரியன், அவரோ ஒன்பதாம் வீட்டில் (துலாம் ) புதனுடன், நானோ கும்பம் லக்னம், நீசம் பெற்ற ராஜயோகம். //

    கலை, நீசபங்க ராஜயோகம் எப்படி, புரியவில்லையே? துலாமில் புதன் எங்கே உச்சம் பெறுவார், கன்னியில்தானே?

    ReplyDelete
  57. உச்சத்தையும் பரிவர்த்தனையையும் போட்டுக் குழப்புகிறீர்களே? முதலில் அடிப்படைப் பாடங்களை எல்லாம் ஒழுங்காகப் ப்டியுங்கள். சூரியனும் , சனியும் எந்த வீட்டில் உச்சம் பெறும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!//

    பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் உச்சம் பெற்றதற்கு சமம்தானே என்று கேட்க வந்தார் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  58. Ayya,
    Oru arumaiyaana padhivirkku nandri,
    Erandam veettu kku udaiya bhudan 8 il maraivadhal
    Adhan villaivu enna enbhadai kuripidavillai yee.

    Nandri

    ReplyDelete
  59. Ananthamurugan said...இரண்டு வாரத்திற்கு முன்பு தினமலரில் இந்த அலசல் வெளிவந்ததது.சச்சின் 102சதம் அடித்து தான் ஓய்வு பெறுவார்.என்று கேரளா ஜோதிடர் குறுப்பிட்டுள்ளார்.

    நிம்மதி .

    இந்த செய்தியை நான் பார்க்கவில்லை. எனக்கு கிரிக்கெட் மீது இருந்த பைத்தியம் வேலைக்கு வந்த பிறகு விளையாட முடியாமல் போனதால் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சச்சின் மீதாக மாறியது . இந்திய பேட்டிங் செய்தாலும் சச்சின் அவுட் ஆகும் வரையில் தான் மேட்ச் பார்ப்பேன்.

    ReplyDelete
  60. Ananthamurugan said...தண்ணி இருந்த கழுவலாம்! இல்லாட்டி அழுவலாம்

    வயிறு வலிச்ச அளவு சிரிச்சுட்டேன் . நல்ல டைமிங் .

    ReplyDelete
  61. //வேலைக்குச் சென்று சம்பாத்தித்துப் பணத்தை ருசி பார்த்த பெண்ணை, யாரும் வீட்டில் உட்கார வைக்க முடியாது. //

    நான், திருமணமாகி,ஐந்து ஆண்டுகள் வரை, வேலைக்குச் செல்லவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேல், வேலைக்குச் சென்று, பின் கணவரது பணி மாறுதல் இட மாறுதல் காரணமாக விட நேர்ந்தது. பின், சில மருத்துவக் காரணங்களால், சுய விருப்பத்தின் பேரிலேயே பணிக்குச் செல்லாமல் இருக்கிறேன். மிக மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, எனக்குப் பிடித்த விஷயங்களைப் படித்து, எழுதி,பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். வேலைக்குச் செல்லும், செல்லாத, பெண்களின் இருவேறு வாழ்க்கை முறைகளை வாழ்ந்து பார்த்துத் தான் சொல்கிறேன். கணவருக்குச் சற்றே வருத்தம் இருப்பினும், என் விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறார். எனக்கு பத்தாம் இடம் 35 பரல்களுடனும், சனிபகவானின்10ம்பார்வையுடனும். அதிபதி 12ம் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். 12ம் இடம் 26 பரல்கள். அதிபதியின் சுய வர்க்கப் பரல்கள் 3.
    ஆக, பணிக்குச் செல்வோர் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதும் இல்லை. செல்லாத பெண்கள் வருத்தமாக இருக்கிறார்கள் என்பதும் இல்லை.

    ReplyDelete
  62. ஆன‌ந்த முருகனின் தத்துவ முத்துக்கள் நன்றாக உள்ளன. அவ‌ரே எழுதியது எனில் அல்லது மொழியாக்கம் எனில் அவருக்கு நல்ல தமிழ் நடை உள்ளது, மேலும் தத்துவங்களாக உதிர்க்கலாம்.

    'வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்; ஓட‌மும் ஒரு நாள் வண்டியில் ஏறும்'.
    இதைத்தானே சார் சொல்ல வருகிறார் ஆனந்தமுருகன்?

    ReplyDelete
  63. @ uma ஏழாம் அதிபதி சூரியன் ஒன்பதாம் இடத்தில துலாமில் உள்ளார்.
    அப்படி இருந்தால் நீசபங்க ராஜயோகம் இல்லையா? அச்சோ...!
    எட்டாம் அதிபதி புதன் (இருப்பது துலாமில் சூரியனோடு பாகை இடை வெளியில்)
    ஒன்பதாம் அதிபதி சுக்ரனோடு (இருப்பது கன்னியில்) பரிவர்த்தனை .
    சரியாக இல்லையா? குழப்பிக்கொண்டு உள்ளேனோ?

    ReplyDelete
  64. அய்யா சொன்னதில் பணிக்குசெல்பவர்
    அரசியலில் இருக்கும் பெண்களுமா..?

    வேலைக்கு செல்வது குறிப்பிட்டால்
    வீட்டில் இருப்பவர் செய்வது என்ன?

    நல்ல பொழுதை எல்லாம் துங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்பார் கவிஞர்

    தலைப்பில் தான் தகராறு..
    தந்த தகவல் என்றுமே வரலாறு..

    ReplyDelete
  65. ///டாஸ்மாக்கில் கதியாய் கிடப்பவர்களின் குடும்பங்கள் பட்டினியாய் இல்லை

    என்றால் அதற்கு ஒரு வெளி வேலை செய்யும் தாயே காரணம். ///

    நீங்கள் குறிப்பிடுவது கடை வாசலில்
    ஊறுகாய் விற்பவரை தானே சொல்கிறீர்கள்..

    ReplyDelete
  66. //அனந்தமுருகனா? ஆனந்தமுருகனா?
    ஆனந்தமுருகன் கோவிந்தன்//

    சைவமும் வைணவமும் கலந்த
    பொறியல் இல்லை .. அவியல்

    ReplyDelete
  67. ஆண்டுக்கு ஒரு முறை
    அரசுத் தேர்வு..

    வித்தியாசமான நம் வகுப்பறையில்
    விவரம் சொல்லியபடியே..

    மாணவர் கேள்விகளும்
    வாத்தியார் பதில்களும் இவ்வாண்டு

    வரும் தானே.. அறிவிப்பை
    வரவேற்க காத்திருக்கிறோம்

    (கேள்வி பதில் பகுதி தான்)

    வழக்கமான வணக்கங்களுடன்..
    வாழ்த்துக்களும் ..

    ReplyDelete
  68. Guru vanakkam,

    Aaha vada poche,

    namukku 7th lord in 8th house and that to Mr.Saturn. Vilanginapolathan.

    Ramadu

    ReplyDelete
  69. தண்ணி இருந்த கழுவலாம்! இல்லாட்டி அழுவலாம்!!வேறென்ன பண்ணமுடியும்//

    நல்ல ஜோக்!

    ReplyDelete
  70. ஏழாம் அதிபதி சூரியன் ஒன்பதாம் இடத்தில துலாமில் உள்ளார்.
    அப்படி இருந்தால் நீசபங்க ராஜயோகம் இல்லையா? அச்சோ...!
    எட்டாம் அதிபதி புதன் (இருப்பது துலாமில் சூரியனோடு பாகை இடை வெளியில்)
    ஒன்பதாம் அதிபதி சுக்ரனோடு (இருப்பது கன்னியில்) பரிவர்த்தனை .
    சரியாக இல்லையா? குழப்பிக்கொண்டு உள்ளேனோ?//

    நன்றாகவே குழப்பிக்கொண்டு உள்ளீர்கள்!! ஒரு உச்சம் பெற்ற கிரகத்தோடு, நீசம் பெற்ற கிரகம் சேர்ந்து இருந்தால்தான் நீசபங்க ராஜயோகம். அதாவது கன்னியில் புதனும் / சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் (கன்னியில் புதன் உச்சம், சுக் நீசம்). புத ஆதித்ய யோகம் உங்களுக்கு உள்ளது.

    ReplyDelete
  71. //// Uma said...
    இன்றைய ஜாதக அலசல் பாடம் புரியும்படி இருந்தது.
    வேலைக்குச் சென்று சம்பாத்தித்துப் பணத்தை ருசி பார்த்த பெண்ணை, யாரும் வீட்டில் உட்கார வைக்க முடியாது. //
    எல்லாருமே விரும்பிதான் வேலைக்குச் செல்கிறார்கள் என்று சொல்லமுடியாது. எனக்கு வேலைக்குப்போவதைவிட வீட்டில் இருப்பதில்தான் அதிக விருப்பம், அதற்கான சூழல் இன்னும் வரவில்லை. முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன்.
    என் கணவரின் ஜாதகத்தில் லக் / நான்காம் / ஏழாம் அதி லக்னத்தில். யோககாரகனுமான பத்தாம் அதி பதினொன்றில்./////

    இரண்டு நிலைப்பாடு உள்ள பெண்களும் இருக்கிறார்கள். நன்றி உமாஜி!

    ReplyDelete
  72. /// Uma said...
    உச்சத்தையும் பரிவர்த்தனையையும் போட்டுக் குழப்புகிறீர்களே? முதலில் அடிப்படைப் பாடங்களை எல்லாம் ஒழுங்காகப் ப்டியுங்கள். சூரியனும் , சனியும் எந்த வீட்டில் உச்சம் பெறும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!//
    பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் உச்சம் பெற்றதற்கு சமம்தானே என்று கேட்க வந்தார் என நினைக்கிறேன்./////

    தெளிவாகக் கேட்டிருக்கலாம் இல்லையா?

    ReplyDelete
  73. // santhanakuzhali said...
    Ayya,
    Oru arumaiyaana padhivirkku nandri,
    Erandam veettu kku udaiya bhudan 8 il maraivadhal
    Adhan villaivu enna enbhadai kuripidavillai yee.
    Nandri////

    புதன் எட்டில் இருந்தால் வித்தை குறைவு (பொதுப்பலன்)

    ReplyDelete
  74. //// thanusu said...
    Ananthamurugan said...இரண்டு வாரத்திற்கு முன்பு தினமலரில் இந்த அலசல் வெளிவந்ததது.சச்சின் 102சதம் அடித்து தான் ஓய்வு பெறுவார்.என்று கேரளா ஜோதிடர் குறுப்பிட்டுள்ளார்.
    நிம்மதி .
    இந்த செய்தியை நான் பார்க்கவில்லை. எனக்கு கிரிக்கெட் மீது இருந்த பைத்தியம் வேலைக்கு வந்த பிறகு விளையாட முடியாமல் போனதால் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சச்சின் மீதாக மாறியது . இந்திய பேட்டிங் செய்தாலும் சச்சின் அவுட் ஆகும் வரையில் தான் மேட்ச் பார்ப்பேன்.////

    சேவக், விராட் போன்றவர்களும் நன்றாகத்தானே விளையாடுகிறார்கள் ராசா!

    ReplyDelete
  75. /// Parvathy Ramachandran said...
    //வேலைக்குச் சென்று சம்பாத்தித்துப் பணத்தை ருசி பார்த்த பெண்ணை, யாரும் வீட்டில் உட்கார வைக்க முடியாது. //
    நான், திருமணமாகி,ஐந்து ஆண்டுகள் வரை, வேலைக்குச் செல்லவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேல், வேலைக்குச் சென்று, பின் கணவரது பணி மாறுதல் இட மாறுதல் காரணமாக விட நேர்ந்தது. பின், சில மருத்துவக் காரணங்களால், சுய விருப்பத்தின் பேரிலேயே பணிக்குச் செல்லாமல் இருக்கிறேன். மிக மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, எனக்குப் பிடித்த விஷயங்களைப் படித்து, எழுதி,பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். வேலைக்குச் செல்லும், செல்லாத, பெண்களின் இருவேறு வாழ்க்கை முறைகளை வாழ்ந்து பார்த்துத் தான் சொல்கிறேன். கணவருக்குச் சற்றே வருத்தம் இருப்பினும், என் விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறார். எனக்கு பத்தாம் இடம் 35 பரல்களுடனும், சனிபகவானின்10ம்பார்வையுடனும். அதிபதி 12ம் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். 12ம் இடம் 26 பரல்கள். அதிபதியின் சுய வர்க்கப் பரல்கள் 3.
    ஆக, பணிக்குச் செல்வோர் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதும் இல்லை. செல்லாத பெண்கள் வருத்தமாக இருக்கிறார்கள் என்பதும் இல்லை./////

    ஆமாம். இரண்டும் உள்ளது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  76. //// kmr.krishnan said...
    ஆன‌ந்த முருகனின் தத்துவ முத்துக்கள் நன்றாக உள்ளன. அவ‌ரே எழுதியது எனில் அல்லது மொழியாக்கம் எனில் அவருக்கு நல்ல தமிழ் நடை உள்ளது, மேலும் தத்துவங்களாக உதிர்க்கலாம்.
    'வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்; ஓட‌மும் ஒரு நாள் வண்டியில் ஏறும்'.
    இதைத்தானே சார் சொல்ல வருகிறார் ஆனந்தமுருகன்?/////

    ஆமாம்.

    ReplyDelete
  77. //// Kalai said...
    @ uma ஏழாம் அதிபதி சூரியன் ஒன்பதாம் இடத்தில துலாமில் உள்ளார்.
    அப்படி இருந்தால் நீசபங்க ராஜயோகம் இல்லையா? அச்சோ...!
    எட்டாம் அதிபதி புதன் (இருப்பது துலாமில் சூரியனோடு பாகை இடை வெளியில்)
    ஒன்பதாம் அதிபதி சுக்ரனோடு (இருப்பது கன்னியில்) பரிவர்த்தனை .
    சரியாக இல்லையா? குழப்பிக்கொண்டு உள்ளேனோ?////

    கொஞ்சம் அவசரமும் கூட. அதனால்தான் சரியாகப் பார்த்து நீங்கள் எழுதவில்லை!

    ReplyDelete
  78. /// அய்யர் said...
    அய்யா சொன்னதில் பணிக்குசெல்பவர்
    அரசியலில் இருக்கும் பெண்களுமா..?
    வேலைக்கு செல்வது குறிப்பிட்டால்
    வீட்டில் இருப்பவர் செய்வது என்ன?
    நல்ல பொழுதை எல்லாம் துங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்பார் கவிஞர்
    தலைப்பில் தான் தகராறு..
    தந்த தகவல் என்றுமே வரலாறு..////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  79. /// அய்யர் said...
    ///டாஸ்மாக்கில் கதியாய் கிடப்பவர்களின் குடும்பங்கள் பட்டினியாய் இல்லை
    என்றால் அதற்கு ஒரு வெளி வேலை செய்யும் தாயே காரணம். ///
    நீங்கள் குறிப்பிடுவது கடை வாசலில்
    ஊறுகாய் விற்பவரைத் தானே சொல்கிறீர்கள்../////

    இல்லை சுவாமி. சரக்கடித்துவிட்டுத் தெருவில் கிடக்கும் மனிதர்களை எல்லாம் கட்டிக்கொண்ட பாவத்திற்காக் வேலைக்குச் சென்று காப்பாற்றும் தாய்மார்களும் உள்ளார்கள்

    ReplyDelete
  80. //// அய்யர் said...
    //அனந்தமுருகனா? ஆனந்தமுருகனா?
    ஆனந்தமுருகன் கோவிந்தன்//
    சைவமும் வைணவமும் கலந்த
    பொறியல் இல்லை .. அவியல்////

    எதாக இருந்தால் என்ன? சுவையாக உள்ளதல்லவா?

    ReplyDelete
  81. //// அய்யர் said...
    ஆண்டுக்கு ஒரு முறை
    அரசுத் தேர்வு..
    வித்தியாசமான நம் வகுப்பறையில்
    விவரம் சொல்லியபடியே..
    மாணவர் கேள்விகளும்
    வாத்தியார் பதில்களும் இவ்வாண்டு
    வரும் தானே.. அறிவிப்பை
    வரவேற்க காத்திருக்கிறோம்
    (கேள்வி பதில் பகுதி தான்)
    வழக்கமான வணக்கங்களுடன்..
    வாழ்த்துக்களும் ../////

    புத்த்கப் பணிகள் முடிந்தவுடன், அது துவங்கும்.பொறுதருளுங்கள் சுவாமி!

    ReplyDelete
  82. நன்றி உமா அவர்களே! நீங்கள் சொல்லாமல் இருந்திருந்தால் தப்பாகவே புரிஞ்சி இருந்திருப்பேன்.
    ஆமாம் அய்யா , அவசரமும் சேர்ந்து விட்டது. நான் கிரகங்களை பரிவர்த்தனை செய்து பலன்களை பரிவர்தனை செய்யாமல் விட்டுவிட்டேன்.
    ராஜயோகம் போயிந்தி....போயே போச்சு...!
    கொட்டு வைத்த உமாவிற்கும் , கர்சிப் தந்த வாத்தியாருக்கும் நன்றி.

    ReplyDelete
  83. ராஜயோகம் போயிந்தி....போயே போச்சு...! //

    சரி சரி கலை அழாதீங்க! நானும்தானே புத ஆதித்ய யோகம் இருக்குன்னு ஒரு கர்சீப் கொடுத்தேன், அதையும் உபயோகப்படுத்திக்கோங்க.

    ReplyDelete
  84. ஆசிரியரே,
    Superb!!!

    Always your lessons amasing. I have 7th lord mars in 3 house (Thanusu). Mars is vargotham. Rasi 1st lord venus is 9th house. Mars-Venus mutual aspect. In navamsam Mars along with moon,venus in 10th house. Venus & Jupiter parivarthanai (3-10). So I get earning wife or not????

    ReplyDelete
  85. /// Kalai said...
    நன்றி உமா அவர்களே! நீங்கள் சொல்லாமல் இருந்திருந்தால் தப்பாகவே புரிஞ்சி இருந்திருப்பேன்.
    ஆமாம் அய்யா , அவசரமும் சேர்ந்து விட்டது. நான் கிரகங்களை பரிவர்த்தனை செய்து பலன்களை பரிவர்தனை செய்யாமல் விட்டுவிட்டேன்.
    ராஜயோகம் போயிந்தி....போயே போச்சு...!
    கொட்டு வைத்த உமாவிற்கும் , கர்சிப் தந்த வாத்தியாருக்கும் நன்றி.////

    உமாஜிக்குச் சொன்னால் எனக்கும் சொன்ன மாதிரி!

    ReplyDelete
  86. /// arul said...
    arumayana paadam///

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  87. /// Uma said...
    ராஜயோகம் போயிந்தி....போயே போச்சு...! //
    சரி சரி கலை அழாதீங்க! நானும்தானே புத ஆதித்ய யோகம் இருக்குன்னு ஒரு கர்சீப் கொடுத்தேன், அதையும் உபயோகப்படுத்திக்கோங்க.////

    உமா ஆக்காவிடம் இருந்து கர்சீப் கிடைத்ததே ராஜ யோகம்தான்!

    ReplyDelete
  88. /// seethalrajan said...
    ஆசிரியரே,
    Superb!!!////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com