மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.2.12

Devotion பதிவிற்கு அப்பாற்பட்ட வாகனம் எது?



Devotion பதிவிற்கு அப்பாற்பட்ட வாகனம் எது?

RTO (Regional Transport Office) அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத வாகனத்தை யாரும் வைத்துக்கொள்ள முடியாது. அதை ஓட்டவும் முடியாது. அதில் பயணிக்கவும் முடியாது. வாகன உற்பத்தியாளர்களே உங்களுக்கு வாகனத்தை விற்பனை செய்யும்போதே அதைப் பதிவு செய்துதான் விற்பார்கள்.

ஆனால் பதிவிற்கு அப்பாற்பட்ட,விதிவிலக்கான வாகனம் ஒன்று இருந்திருக்கிறது. அதுதான் மயில். மனிதர்கள் யாரும் அதில் பயணிக்க முடியாது. நம் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் வாகனம். அதில்தான் அவர் வலம் வருவார். அவரிடம்போய் யார் ரிஜிஸ்ட்ரேசன் எண்ணைக் கேட்க முடியும்? தெரிந்தோ தெரியாமலோ அதைத்தான் அரசு நாட்டின் தேசியப் பறவையாகக் கொண்டிருக்கிறது.
-----------------------------------------------------------
பக்தி என்பது பற்று வைத்தல், வழிபடுதல், வணங்குதல் என்று பொருள்படும் (Devotion means Act of devotedness or devoutness; manifestation of strong attachment; act of worship; prayer)

மக்களுக்கு பணததின் மீதுதான அதிகப் பற்று. அதைத் தவறு என்று சொல்ல முடியாது. இன்றைய பொருளாதாரம் சார்ந்த உலகில் சர்வமும் பணத்தைச் சர்ர்ந்திருப்பதால், மக்களுக்கும் அதன் மீதே சிந்தனை. அழுத்தமாகச் சொன்னால் அதன் மீதே பக்தி!

வாரம் ஒரு நாளாவது அதை மறந்து, நம் பக்தியை இறைவன் மீது செலுத்துவோம்
-----------------------------------------------------------
இன்று உங்களுக்காக, ஒரு நல்ல பக்திப் பாடலை வலை ஏற்றியுள்ளேன். கேட்டு மகிழுங்கள்

ஞாலத்தை வலம் வந்த முருகப் பெருமானின் அருளை நாமும் கேட்டுப் பெறுவோம்
-----------------------------------------------------------
ஞாலம் என்றால் பூமி (earth) என்று பொருள்

தமிழில் மொத்தம் 17 சொற்கள் மட்டுமே ஞா' என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்களாகும்.

ஞாயிறு, ஞானம், ஞானி, ஞாபகம் என்ற சொற்கள் முக்கியமானவையாகும். மற்ற சொற்கள் அதனுடன் தொற்றிக்கொண்டுவரும். உதாரணம்: ஞானோதயம், ஞான சூனியம்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
இப்போது பாடல்

நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் - முருகா 
(நீல)


நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா
சேவற்கொடி அழகாய் தாங்கி நிற்கும் சண்முகா 
(நீல)


வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே எழில்
வேழ முகம் படைத்தோன் சோதரனே
வேல் விழி குறமாதின் மணாளனே என்
சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே 
(நீல) 

பாடலைப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். எழுதியவரின் பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

காணொளி

------------------------------------
முருகன் குறித்த பழமொழிகள்

உபயதாரர் விக்கி காமாட்சி (அவருக்கு நம் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்)

வேலை வணங்குவதே வேலை.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
முருகனுக்கு மிஞ்சிய தெவமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
வேலனுக்கு ஆனை சாட்சி.
வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

25 comments:

  1. அருமையான பாடல்! வெளியிட்டமைக்கு நன்றி.

    சீர்காழிக்குப் பெரும்பாலும் பாடல் எழுதிக் கொடுத்தவர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் என்ற அவருடைய மைத்துன‌ர்.

    செட்டி கப்பலுக்கு செந்தூரான் துணை இரண்டு செய்திகளைச் சொல்கிறது. அவர்கள் கடல் க‌டந்து செய்த வாணிபம்;அவர்களின் முருக பக்தி.

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்! ஆதித் தமிழக்கடவுள் முருகனின் வ்ழிபாட்டுப் பாடல் மனதைக் கவர்ந்தது!

    ReplyDelete
  3. காலை வணக்கம் ஐயா. நல்லதொரு பாடலை பதிவிட்டமைக்கு நன்றி.

    -Sathish K

    ReplyDelete
  4. அமரர் சீர்காழியின் தெய்வீகக் குரலில் மிகவும் அற்புதமான பாடலை பதிவிட்டமைக்கு நன்றிகள் ஐயா!
    தேடலில் பெற்ற முத்துக்களாய் பழமொழிகள்....
    நமது வாழ்வில் 'அப்பனுக்கே உபதேசம் செய்ய சுப்பனைப்' பற்றிய ஞாபகம் / சிந்தனை எப்படியெல்லாம் கலந்திருக்கிறது என்பதை சகோதிரியாரின் சேகரிப்பின் மூலம் அறியலாம்.... அவருக்கும் எனது நன்றிகள்... நன்றிகள் சகோதிரியாரே!

    "யாமிருக்க பயமேன்" 'அப்பனுக்கேப் பாடம் சொன்ன சுப்பன் இல்லையா' 'ஞானப் பழம்' (நான் அடிக்கடி கடிந்துக் கொள்ள உபயோகிப்பது) என்று இன்னும் பலவைகளும் இருக்கிறது.... பின்னூட்டத்தில் ஒவ்வொருவராக வந்து சொல்வார்கள் என்று எதிர் பார்ப்போம்.

    ReplyDelete
  5. ///RAMADU Family said...
    AAha, Aalasiyam Sir, I too have the same
    தாடையில் குழி இருக்கும் முகவெட்டு கொண்டவர்கள் -

    Let me see, If I become a star oneday.

    RAMADU

    ராமுடு சார்.... அப்படியா! உங்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும்...
    அதோடு இன்னொன்றையும் மறைக்காமல் சொல்ல வேண்டும் நீங்கள் பெண்களுக்கு இனியர்....
    அதாவது பிருந்தாவனக் கண்ணனைப் போல யாவரும் விரும்புவராக (முக்கியமாகப் பெண்களே) இருக்கணுமே:):)

    ஆமாவா! இல்லையா! மறைக்காமல் சொல்லிவிடுங்களேன்...

    ReplyDelete
  6. //// kmr.krishnan said...
    அருமையான பாடல்! வெளியிட்டமைக்கு நன்றி.
    சீர்காழிக்குப் பெரும்பாலும் பாடல் எழுதிக் கொடுத்தவர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் என்ற அவருடைய மைத்துன‌ர்.
    செட்டி கப்பலுக்கு செந்தூரான் துணை இரண்டு செய்திகளைச் சொல்கிறது. அவர்கள் கடல் க‌டந்து செய்த வாணிபம்;அவர்களின் முருக பக்தி.////

    இருக்கலாம். கடல் கடந்து சென்றவர்கள், சென்ற நாட்டிலெல்லாம் முருகனுக்குக் கோவில் கட்டினார்கள். அவற்றுள் முக்கியமான கோவில் பினாங்கில் உள்ள தண்ணீர்மலை முருகன் கோவில்!

    ReplyDelete
  7. //// ரமேஷ் வெங்கடபதி said...
    ஐயா வணக்கம்! ஆதித் தமிழக்கடவுள் முருகனின் வ்ழிபாட்டுப் பாடல் மனதைக் கவர்ந்தது!////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. //// Sathish K said...
    காலை வணக்கம் ஐயா. நல்லதொரு பாடலை பதிவிட்டமைக்கு நன்றி.
    -Sathish K////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. மோட்டார்சுந்தரம் பிள்ளை என்ற படத்தின் இந்த பாடலினை
    இன்று சுழலு விடுகிறோம்

    மனமே முருகனின் மயில் வாகனம் - என்
    மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் - என்

    குரலே செந்தூரின் கோவில் மணி - அதில்
    குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!


    திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
    என்ற கேள்விக்கு பதில் தொணிக்கும்படி

    அழுத்தமான குரலில் பாடிய
    அந்த குரலுக்கு சொந்தமானவர் தான்

    இந்த பாடலினை யும் பாடி உள்ளார்
    இந்தளத்தில் பாடிய பாட்டை சேர்ந்தே ரசிக்கிறோம்

    ReplyDelete
  10. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    அமரர் சீர்காழியின் தெய்வீகக் குரலில் மிகவும் அற்புதமான பாடலை பதிவிட்டமைக்கு நன்றிகள் ஐயா!
    தேடலில் பெற்ற முத்துக்களாய் பழமொழிகள்....
    நமது வாழ்வில் 'அப்பனுக்கே உபதேசம் செய்ய சுப்பனைப்' பற்றிய ஞாபகம் / சிந்தனை எப்படியெல்லாம் கலந்திருக்கிறது என்பதை சகோதிரியாரின் சேகரிப்பின் மூலம் அறியலாம்.... அவருக்கும் எனது நன்றிகள்... நன்றிகள் சகோதிரியாரே!
    "யாமிருக்க பயமேன்" 'அப்பனுக்கேப் பாடம் சொன்ன சுப்பன் இல்லையா' 'ஞானப் பழம்' (நான் அடிக்கடி கடிந்துக் கொள்ள உபயோகிப்பது) என்று இன்னும் பலவைகளும் இருக்கிறது.... பின்னூட்டத்தில் ஒவ்வொருவராக வந்து சொல்வார்கள் என்று எதிர் பார்ப்போம்./////

    சகோதரியாரின் தந்தை யார் தெரியுமா? விக்கி மகராஜா! மகராஜா மகளுக்கு பெயர் சூட்டியவர் தேமொழி

    ReplyDelete
  11. ///// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    ///RAMADU Family said...
    AAha, Aalasiyam Sir, I too have the same
    தாடையில் குழி இருக்கும் முகவெட்டு கொண்டவர்கள் -
    Let me see, If I become a star oneday.
    RAMADU
    ராமுடு சார்.... அப்படியா! உங்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும்...
    அதோடு இன்னொன்றையும் மறைக்காமல் சொல்ல வேண்டும் நீங்கள் பெண்களுக்கு இனியர்....
    அதாவது பிருந்தாவனக் கண்ணனைப் போல யாவரும் விரும்புவராக (முக்கியமாகப் பெண்களே) இருக்கணுமே:):)
    ஆமாவா! இல்லையா! மறைக்காமல் சொல்லிவிடுங்களேன்.../////

    அதை எல்லாம் சொல்வார்களா என்ன?

    ReplyDelete
  12. ////Visu Iyer said...
    9////

    ஆறுமுக பக்தருக்கு இறங்கு முகம் ஏதற்கு? ஏறுமுகமாக இருக்கட்டும்!
    நாளைக்கு 10

    ReplyDelete
  13. நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த முருகனின் இந்தப் பாடலைக் கேட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. நினைவிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி ஐயா.
    ஐயா உங்கள் நகைச்சுவை துணுக்கு பத்து வித பதில் சொல்லும் பெண்ணை "கூகிள் காமாட்சி" என்றவுடன், நான் பலதரப் பட்ட செய்திகளைத் தரும் விக்கியை "விக்கி விசாலாட்சி" என்றேன். வி ..வி என்று எதுகை மோனையாக.

    ஆகா, விக்கியும் ஆலாசியம் அவர்களின் சகோதரியாகிவிட்டதே. தாடையில் குழி இருந்தால் சரி ...கன்னத்தில் குழி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?

    " கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்" "வேலனுக்கு ஆனை சாட்சி" என்ற இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கிறது.

    ReplyDelete
  14. கவிஞர்களின் கவனத்திற்கு,

    http://adikkadi.blogspot.in/2009/04/blog-post_28.html

    ReplyDelete
  15. ////ஆகா, விக்கியும் ஆலாசியம் அவர்களின் சகோதரியாகிவிட்டதே. தாடையில் குழி இருந்தால் சரி ...கன்னத்தில் குழி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?////

    நன்றிகள் சகோதிரியரே!

    கன்னத்தில் குழி விழுந்தால் கனிவுமிகுந்து கபடம் குறைந்து இருப்பார்கள்!
    சரியா? தவறா? கூறுங்களேன்:):)

    ReplyDelete
  16. "தமிழ்ச் சூழல் உற்சாகம் தரக்கூடியதாக இல்லை. தமிழ் எத்தனை தூரம் வளர்ந்திருக்கிறது என்பதை அளக்க ஒரு புதிய அளவுகோல் கிடைத்திருக்கிறது. 2012ம் ஆண்டு தொடக்கத்தில் விக்கிப்பீடியாவில் பல மொழிகளில் மொத்தமாக எத்தனை கட்டுரைகள் ஏறியிருக்கின்றன என்று தேடிப் பார்த்தேன். ஆங்கிலத்தில் 3,900,000 கட்டுரைகள், யப்பான் மொழி 791,000 கட்டுரைகள், சீனமொழி 385,000, அரேபிய மொழி 156,000, ஹிந்தி 93,000 என்று விடை வந்தது. தமிழில் 43,000 கட்டுரைகள் மட்டுமே. இதில் பரிதாபம் என்னவென்றால் ஒரு கோடிக்கும் குறைவானவர்கள் பேசும் ஹீப்ரு மொழியில் 129,000 கட்டுரைகள் ஏறிவிட்டன. ஏழு கோடி மக்கள் பேசும் தமிழில் ஆக 46,000 கட்டுரைகள்தான். உலகத்தில் ஆக மூன்று லட்சம் பேர் மட்டும் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியில்கூட 36,000 கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன."
    Comment by writer Thiru. A Muthulingam

    ReplyDelete
  17. எனக்கு பிடித்த முருகன் பாடல்

    நீயல்லால் தெய்வமில்லை - எனது நெஞ்சே நீவாழும் எல்லை முருகா

    (நீயல்லால்)

    தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
    தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
    குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
    திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்

    நாயேனை நாளும் நல்லவனாக்க
    ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்

    (நீயல்லால்)

    வாயாரப் பாடி மனமார நினைந்து
    வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்
    தூயா முருகா மாயோன் மருகா - உன்னைத்
    தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்

    (நீயல்லால்)

    பாடல்: நீயல்லால் தெய்வமில்லை
    குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

    ReplyDelete
  18. ///kmr.krishnan said... "தமிழ்ச் சூழல் உற்சாகம் தரக்கூடியதாக இல்லை. தமிழ் எத்தனை தூரம் வளர்ந்திருக்கிறது என்பதை அளக்க ஒரு புதிய அளவுகோல் கிடைத்திருக்கிறது. ///
    ஐயா, "இது சரியானா அளவுகோல் இல்லை" என்பது என் கருத்து. மொத்த மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையையும் அந்த மொழியில் வெளியாகும் மொத்த பத்திரிக்கை எண்ணிக்கையும் வேண்டுமானால் சரியான அளவுகோலாக இருக்கக் கூடும். இந்த அளவுகோல் கூட ஒரு உத்தேசமாக தெரிந்து கொள்ள மட்டுமே உதவும். இலவசமாக படிக்கும் வாசகர்களை கணக்கில் கொள்வது கடினம் என்பதால் பத்திரிக்கை மற்றும் புத்தக எண்ணிக்கையை குத்து மதிப்பாக கணக்கில் கொள்ளலாம்.

    A standardized measure approach (like crime rate, mortality rate, litereary rate etc..) could shed some light on this issue. ஆயிரத்தில் ஐம்பது பேர் தன் தாய் மொழி பத்திரிக்கை ஒன்றாவது படிக்கிறார்கள் என்பது போன்ற அளவை உலகம் முழுவதும் ஒப்பிடலாம். அதிலும் நம் நாட்டில் இணைப்பு மொழியாக இங்கிலீஷ் இருக்கும் பொழுது, அதை பலர் சரளமாக தினசரி வாழ்வில் உபயோகிக்கும் பொழுது, நம் நாட்டு மொழிகளின் ஆதிக்கம் இணையத்தில் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. மற்றுமொரு காரணம் நம் நாட்டில் எத்தனை பேரால் கணினியும் இணையமும் எப்பொழுதும் உபயோகிக்கும் வண்ணம் கைகெட்டும் தூரத்தில் இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும் (அதெல்லாம் ஒரு சிலரால் சட்ட சபையில் கை பேசி வழியே பலான படம் பார்க்கும் அளவிற்கு இருக்கிறது என்பது வேறு விஷயம் :))))))

    பொதுவாக தமிழில் வலைப்பூக்கள் அதிகரித்து விட்டன என்பது என் எண்ணம். அதிலும் தரம் நிறைந்த வலைப்பூக்களும் அதிகரித்துள்ளன. தமிழில் எழுதுபவர்களும் வாய்ப்பை உபயோகித்துக் கொள்கிறார்கள். நமக்கு முன் உள்ள தலைமுறையினர் பள்ளியில் தேர்வு எழுதியதை தவிர்த்து வாழ்நாளில் பெரும்பாலும் எழுதியது கடிதமாகவோ, நாட்குறிப்பாகவோ மட்டுமே இருந்திருக்கும். நினைத்ததை எழுதி பிரசுரிக்க பலர் தயவு வேண்டும். twitter, facebook என இவற்றில் கூட தமிழை உபயோகிக்கும் அளவு வாய்ப்பு கிடைப்பதை ஆங்கிலம் நன்கு தெரிந்த தமிழர்கள் கூட இன்று உபயோகிக்கத் தவறுவதில்லை.

    விக்கிபீடியா வளர்வது தன்னார்வ தொண்டர்களால், அரசு இதைக் கருத்தில் கொண்டு ஊதியம் அளித்து இதில் எழுத சொன்னால் செய்திகளும் அதிகரிக்கும், தமிழ் பயின்ற மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழ் பல்கலை கழகங்கள் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி வாங்க வேண்டும். இப்படி செய்தால் கடைசி வரை தமிழ் படித்து சாக வேண்டுமா? என தமிழ் படித்தவர்கள் நொந்து கொள்ள மாட்டார்கள்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆராய்ச்சி என்று வந்தால், மொழியின் வளர்ச்சியின் அளவுகோல் என்று நீங்கள் சொல்லும் "எண்ணிக்கை அளவு" அளவின் குறைபாடுகளால் முதல் சுற்றிலேயே தகுதியை இழந்துவிடும். எனவே கவலை வேண்டாம் முத்துலிங்கம் சொன்ன கருத்தை கண்டு வருந்த வேண்டாம்

    ReplyDelete
  19. ///தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    கன்னத்தில் குழி விழுந்தால் கனிவுமிகுந்து கபடம் குறைந்து இருப்பார்கள்!
    சரியா? தவறா? கூறுங்களேன்:):) ///

    ஹி. ஹி. ஹீ ...
    சிறுமை அணியுமாம் தன்னை வியந்து....என்ற குரலின் கருத்து எல்லோருக்கும் மனதில் ஒரு முறை மின்னலென தோன்றி மறையுமே :)))))))))))

    ReplyDelete
  20. ////தேமொழி said...
    நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த முருகனின் இந்தப் பாடலைக் கேட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. நினைவிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி ஐயா.
    ஐயா உங்கள் நகைச்சுவை துணுக்கு பத்து வித பதில் சொல்லும் பெண்ணை "கூகிள் காமாட்சி" என்றவுடன், நான் பலதரப் பட்ட செய்திகளைத் தரும் விக்கியை "விக்கி விசாலாட்சி" என்றேன். வி ..வி என்று எதுகை மோனையாக.
    ஆகா, விக்கியும் ஆலாசியம் அவர்களின் சகோதரியாகிவிட்டதே. தாடையில் குழி இருந்தால் சரி ...கன்னத்தில் குழி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?
    " கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்" "வேலனுக்கு ஆனை சாட்சி" என்ற இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கிறது.////

    வயதான காலத்தில் எல்லோர்க்குமே கன்னத்தில் குழியிருக்குமே - அதை எந்தக் கணக்கிலெடுத்துக்கொள்வது?

    ReplyDelete
  21. //// kmr.krishnan said...
    கவிஞர்களின் கவனத்திற்கு,
    http://adikkadi.blogspot.in/2009/04/blog-post_28.html////

    இப்ப்டிச் சுட்டியைக் கொடுத்தால் அனைவருமே கவிஞர்களாகி விடுவார்களே சுவாமி!:-))))

    ReplyDelete
  22. /// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    ////ஆகா, விக்கியும் ஆலாசியம் அவர்களின் சகோதரியாகிவிட்டதே. தாடையில் குழி இருந்தால் சரி ...கன்னத்தில் குழி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?////
    நன்றிகள் சகோதிரியரே!
    கன்னத்தில் குழி விழுந்தால் கனிவுமிகுந்து கபடம் குறைந்து இருப்பார்கள்!
    சரியா? தவறா? கூறுங்களேன்:):)/////

    இயற்கையாகவே குழி விழுவதால் வயதானவர்களூக்கு இது பொருந்தாது!

    ReplyDelete
  23. //// kmr.krishnan said...
    "தமிழ்ச் சூழல் உற்சாகம் தரக்கூடியதாக இல்லை. தமிழ் எத்தனை தூரம் வளர்ந்திருக்கிறது என்பதை அளக்க ஒரு புதிய அளவுகோல் கிடைத்திருக்கிறது. 2012ம் ஆண்டு தொடக்கத்தில் விக்கிப்பீடியாவில் பல மொழிகளில் மொத்தமாக எத்தனை கட்டுரைகள் ஏறியிருக்கின்றன என்று தேடிப் பார்த்தேன். ஆங்கிலத்தில் 3,900,000 கட்டுரைகள், யப்பான் மொழி 791,000 கட்டுரைகள், சீனமொழி 385,000, அரேபிய மொழி 156,000, ஹிந்தி 93,000 என்று விடை வந்தது. தமிழில் 43,000 கட்டுரைகள் மட்டுமே. இதில் பரிதாபம் என்னவென்றால் ஒரு கோடிக்கும் குறைவானவர்கள் பேசும் ஹீப்ரு மொழியில் 129,000 கட்டுரைகள் ஏறிவிட்டன. ஏழு கோடி மக்கள் பேசும் தமிழில் ஆக 46,000 கட்டுரைகள்தான். உலகத்தில் ஆக மூன்று லட்சம் பேர் மட்டும் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியில்கூட 36,000 கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன."
    Comment by writer Thiru. A Muthulingam////

    தமிழர்கள் பலருக்குக் காதல் டாஸ்மாக்கின் மேல்
    தமிழ்ப் பெண்களுக்குக் காதல் அழுவாச்சி சீரியல்கள் மேல்
    இதில் தமிழ் நசுங்கிக் கொண்டிருக்கிறது. யார் போய் தமிழுக்கு வைத்தியம் பார்ப்பது? யாருக்கு நேரமிருக்கிறது?
    அதிகமான தொலைக் காட்சி சானல்களளிருப்பது தமிழில்தான். அதற்கு சந்தோஷப்படுங்கள் மிஸ்டர் கிருஷ்ணன்!

    ReplyDelete
  24. /// csekar2930 said...
    எனக்கு பிடித்த முருகன் பாடல்
    நீயல்லால் தெய்வமில்லை - எனது நெஞ்சே நீவாழும் எல்லை முருகா
    (நீயல்லால்)
    தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
    தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
    குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
    திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
    நாயேனை நாளும் நல்லவனாக்க
    ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்
    (நீயல்லால்)
    வாயாரப் பாடி மனமார நினைந்து
    வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்
    தூயா முருகா மாயோன் மருகா - உன்னைத்
    தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்
    (நீயல்லால்)
    பாடல்: நீயல்லால் தெய்வமில்லை
    குரல்: சீர்காழி கோவிந்தராஜன்/////

    உங்களுடைய உள்ளப் பகிரிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com