மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.2.12

Cinema உனக்கு நான் எனக்கு நீ என்று உட்கார்ந்திருந்தால் பூவா'விற்கு என்னடா பண்ணுவது?

படத்தின் நாயகனும் நாயகியும்
Cinema உனக்கு நான் எனக்கு நீ என்று உட்கார்ந்திருந்தால் பூவா'விற்கு என்ன (டா) பண்ணுவது?

காதல் வயப்பட்டவர்களுக்கு, தங்களின் காதல் கிறக்கத்தில் எதுவும் கண்ணில் படாது. விளங்காது. ஆகவே கேள்விகளை மறந்துவிட்டு காதலை மட்டும் பார்ப்போம். காதல் கிறக்கத்தில் நாயகனும், நாயகியும் பாடும் பாடல் ஒன்றை இன்று வலை ஏற்றியுள்ளேன். கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
நெஞ்சைத் தொட்ட புதுப்பாடல் - எண் ஏழு

படம்: காதலில் விழுந்தேன்

பாடல்: உனக்கென நான் எனக்கென நீ

Video Link: http://youtu.be/WAkcJkectWs
Our Sincere thanks to the person who uploaded the video clipping in the net


உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே


உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே


இதயத்தை
இதுக்காக எதற்காக
இடம் மாற்றினாய்?
இனிக்கும் ஒரு
துன்பத்தை குடியேற்றினாய்


புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்


நோயென கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்
அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே


நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே


மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாலுமே
உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே


அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறுப்பாய்


உனது காதலில் விழுந்தேன்
மரணமாய்
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கின்றோம்
மனிதா நிலை தாண்டி போகிறோம்


இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோ பிரிவில்லையே
எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?


பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
(உனக்கென..)
-------------------------------------
படம்: காதலில் விழுந்தேன் (2008)
நடிப்பு: நகுல், சுனேனா, ஹரிராஜ், சம்பத், லிவிங்ஸ்டன்
இசை: விஜய் ஆண்டனி
பாடலாக்கம்: கவிதாயினி தாமரை
பாடியவர்கள்: ரம்யா & விஜய் ஆன்ட்டனி
இயக்கம்: பி.வி.பிரசாத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

இந்தப் பாடல் உலகப்புகழ்பெற்ற பாட்கி ரிஹன்னாவின் unfaithful (என்ன தலைப்புடா சாமி) என்னும் பாடலின் இசையைத் தழுவி எடுக்கப் பெற்றதாகும்.அதையும் கொடுத்துள்ளேன். கேட்டுப் பாருங்கள் .அதற்கான சுட்டியும் கீழே உள்ளது
Video clipping http://youtube/rp4UwPZfRis
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net


ரிஹன்னாவைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான சுட்டிகள்.
http://en.wikipedia.org/wiki/Unfaithful_(song)#Music_and_lyrics
http://en.wikipedia.org/wiki/Rihanna

-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

16 comments:

  1. வரன் ப‌ஃப்ஃட் அவர்களுடைய பொன் மொழிகள் அருமையானவை. நன்றி அய்யா!
    இளைஞர்களுக்கு என்று அருமையான படக் காட்சிகளித் தருர்கிறீர்கள்.(நானும் இளைஞந்தான்) சரி. பாடல், ஒரிஜினல் சோர்ஸ் எல்லாமும் நலம்.

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்,
    பாதிப்பு/சாயல் இருக்கலாம்! அப்பட்டமான காப்பி அசிங்கம்! யாருக்கு? படைப்பாளிக்கு!

    எந்த இசையையும் ரஸிப்பவனே நல்ல ரஸிகன்!ரிஹானாவின் குரல் மிக அருமை!

    ReplyDelete
  3. அடுத்தவரைப் பார்த்து பின்பற்ற வேண்டியதும், அடுத்தவரைப் பார்த்து பின் பற்ற தேவையில்லாததும் என்பதைப் பற்றிய பதிவு???!!!

    திரு.வாரன் பஃபெட் அவர்களைப் பின்பற்றினால் பயன் நமக்கு...ரியானாவைப் பின்பற்றி ஆகப்போவதென்ன?
    மேலதிகத் தகவல்கள்:
    வாரன் பஃபெட் கொள்கைகளில் சிறந்தது: புரியாதவற்றில் முதலீடு செய்ய வேண்டாம்.
    'உனக்கென நான்' என்ற 'காதலில் விழுந்தேன்' படப் பாடலை இயற்றியவர் 'வசீகரா' பாடல் புகழ் 'தாமரை', பாடியவர்கள் ரம்யாவும் விஜய் ஆண்டனியும்

    பதிவின் தலைப்பே தலைப்பு. அதுதான் ஐயா சிறப்போ சிறப்பு

    ReplyDelete
  4. quotes by warren buffet are superb

    original song is so good

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,
    வாரன் பஃபெட்டின் பொன்மொழிகள் மிகவும் அருமை...இதில் முதலாவதான கொள்கையின் மூலம் தான் இன்று அவர் அந்த உச்சத்தை அடைந்திருக்கிறார் என்ற அனுபவ உண்மையை உணரமுடிகிறது...

    "காதலில் விழுந்தேன்" திரைப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான "உன் தலைமுடி உதிர்வதை" என்ற பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...ஆயினும் பெரும்பாலோருக்கு பிடித்த பாடல் இன்று தாங்கள் வலையேற்றியுள்ள இப்பாடல் தான்...இதில் "ரிஹானா"வின் பாடல் தான் எனக்கு பிடித்தது,அவரது குரல் மிகவும் அருமை...

    எதுவாகினும் "வாரன் பஃபெட்" தான் இன்றைய ஆக்கத்தின் "ஹைலைட்"...உண்மையான நாயகன் அவரே...

    ReplyDelete
  6. //// kmr.krishnan said...
    வரன் ப‌ஃப்ஃட் அவர்களுடைய பொன் மொழிகள் அருமையானவை. நன்றி அய்யா!
    இளைஞர்களுக்கு என்று அருமையான படக் காட்சிகளித் தருகிறீர்கள்.(நானும் இளைஞன்தான்) சரி. பாடல், ஒரிஜினல் சோர்ஸ் எல்லாமும் நலம்.////

    நீங்கள் என்றும் இளைஞர்தான். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை!

    ReplyDelete
  7. ///// அய்யர் said...
    ஒன்று ////

    நாளைக்கு என்ன? காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. /// அய்யர் said...
    இது வருகை பதிவு..////

    பதிவேட்டில் டிக் அடித்துவிட்டேன்!

    ReplyDelete
  10. //// ரமேஷ் வெங்கடபதி said...
    ஐயா வணக்கம்,
    பாதிப்பு/சாயல் இருக்கலாம்! அப்பட்டமான காப்பி அசிங்கம்! யாருக்கு? படைப்பாளிக்கு!
    எந்த இசையையும் ரஸிப்பவனே நல்ல ரஸிகன்!ரிஹானாவின் குரல் மிக அருமை!////

    சில தமிழ் இசையமைப்பாளர்கள் காலம் காலமாகச் செய்வதுதான். வேதா அவர்கள் செய்திறாததா?

    ReplyDelete
  11. ///// தேமொழி said...
    அடுத்தவரைப் பார்த்து பின்பற்ற வேண்டியதும், அடுத்தவரைப் பார்த்து பின் பற்ற தேவையில்லாததும் என்பதைப் பற்றிய பதிவு???!!!
    திரு.வாரன் பஃபெட் அவர்களைப் பின்பற்றினால் பயன் நமக்கு...ரியானாவைப் பின்பற்றி ஆகப்போவதென்ன? மேலதிகத் தகவல்கள்:
    வாரன் பஃபெட் கொள்கைகளில் சிறந்தது: புரியாதவற்றில் முதலீடு செய்ய வேண்டாம்.
    'உனக்கென நான்' என்ற 'காதலில் விழுந்தேன்' படப் பாடலை இயற்றியவர் 'வசீகரா' பாடல் புகழ் 'தாமரை', பாடியவர்கள் ரம்யாவும் விஜய் ஆண்டனியும்
    பதிவின் தலைப்பே தலைப்பு. அதுதான் ஐயா சிறப்போ சிறப்பு/////

    தேமொழியின் ரசனையே ரசனை! அதுதான் அவரின் சிறப்பு!

    ReplyDelete
  12. //// arul said...
    quotes by warren buffet are superb
    original song is so good/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ///// R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    வாரன் பஃபெட்டின் பொன்மொழிகள் மிகவும் அருமை...இதில் முதலாவதான கொள்கையின் மூலம் தான் இன்று அவர் அந்த உச்சத்தை அடைந்திருக்கிறார் என்ற அனுபவ உண்மையை உணரமுடிகிறது...
    "காதலில் விழுந்தேன்" திரைப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான "உன் தலைமுடி உதிர்வதை" என்ற பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...ஆயினும் பெரும்பாலோருக்கு பிடித்த பாடல் இன்று தாங்கள் வலையேற்றியுள்ள இப்பாடல் தான்...இதில் "ரிஹானா"வின் பாடல் தான் எனக்கு பிடித்தது,அவரது குரல் மிகவும் அருமை...
    எதுவாகினும் "வாரன் பஃபெட்" தான் இன்றைய ஆக்கத்தின் "ஹைலைட்"...உண்மையான நாயகன் அவரே.../////

    அவர் ரியல் ஹீரோ. சம்பாதிப்பதிலும், தர்மம் செய்வதிலும் முன்னோடியாகத் திகழ்பவர் அவர்.. நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. Good evening! thanks to kmrk sir.nettraiya valthukalukku!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com