நச்’ சென்று எதைச் சொன்னார் நம்ம சூப்பர் ஸ்டார்?
நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் நச்’ சென்று ஒரு கதை சொன்னாராம். அதை நீங்களும் படித்து மகிழக் கீழே
கொடுத்துள்ளேன். சொந்த சரக்கல்ல. இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. அனுப்பிய நண்பருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
over to his short story
"ஆண்டவன் இருக்கான்... இல்லேன்னு யுகம் யுகமா பேசிக்கிட்டிருக்காங்க. வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் சண்டை வருது. வசிஷ்டர் வாயால நான் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கறேன்னு. விஸ்வாமித்திரர் ஒரு அகோரி. கடவுள் நம்பிக்ககை இல்லாதவர். வசிஷ்டர் சாஸ்துவோக்தமா... கடவுள், கைலாசம், வைகுந்தம், வேதம் அப்டி போறவரு. விஸ்வாமித்திரர் கடவுளை நம்பாதவர், பஞ்ச பூதங்களை நம்புறவர். அப்படிப்பட்ட விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடமிருந்து பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினார். ஆக அந்த காலத்திலேருந்தே கடவுள் இருக்கானா இல்லையான்னு விவாதம் நடந்துகிட்டுதானிருக்கு.
இப்ப ரீசன்டா, டிடி ரங்கராஜனோட டிஸ்கோர்ஸ் பார்த்தேன். அவர் ஒரு சம்பவம் சொல்றார். அவர் அமெரிக்காவில் ஒரு ட்ரெயின்ல ஒரு சயின்டிஸ்ட்.
அவருக்கு முன்னால கொஞ்சம் சின்ன வயசு... பைபிள் படிச்சிக்கிட்டிருக்கார்.
உடனே சயின்டிஸ்ட் அந்த இளைஞரிடம், 'என்ன பண்றீங்க'ன்னு கேக்கறார். உடனே பைபிள் படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்றார். 'இல்ல, என்ன வேலை செய்யறீங்கன்னு' கேக்கறார்.
உடனே 'சயின்டிஸ்ட்' என்கிறார் இளைஞர்...
'ஓ.. சயின்டிஸ்டா, சரி என்ன படிச்சிக்கிட்டிருக்கே'...
'பைபிள்'.. அப்படீன்னு இளைஞர் சொல்றார்.
உடனே, 'ஏம்பா, அறிவிருக்கா... இது சயின்டிபிக் யுகம், சயின்டிபிக் காலம், எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்... நீயும் சயின்டிஸ்ட் என்கிறாய். இன்னும் நீ மதம், கடவுள், பைபிள், கிறைஸ்ட்டுனு படிச்சிக்கிட்டு உட்காந்திருக்கியே, நாமளே இப்படி உட்கார்ந்துட்டா, எப்படி நாடு முன்னேறும். மக்கள் என்ன ஆவறது. கொஞ்சமாவது அறிவை வளத்துக்க வேண்டாமா.. இனிமேலாவது இந்த புக்கு, பைபிளையெல்லாம் தூக்கி போடு, கடவுளு, மண்ணாங்கட்டின்னு' சொல்லிட்டார்.
'சரி'..ன்னு கேட்டுக்கிட்டார்.
'நீ ப்ரீயா இருக்கும்போது என்னை வந்து பார். இந்தா என் கார்டு... பேசலாம்ட-னு சொல்றார் சயின்டிஸ்ட்.
ஸ்டேஷன் வந்ததும், இறங்குறாங்க. கிளம்பும்போது, 'சரி, நான் என்னை உன்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டேன். நீ உன்னை என்கிட்ட அறிமுகப் படுத்திக்கவே இல்லையே'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.
உடனே, அந்த இளைஞர் தன் கார்டை கொடுக்கிறாங்க. அதை திருப்பி பார்த்தா, அது தாமஸ் ஆல்வா எடிசன்!
உடனே அந்த சயின்டிஸ்ட், 'சார் மன்னிக்கணும்... நீங்க எனக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கணும். உங்களைப் பார்க்கணும்னு', கேட்கிறார்.
'சரி வாங்கன்னு' சொல்லி டைம் கொடுத்தார் எடிசன். அந்த டைமுக்கு தாமஸ் ஆல்வா எடிசன் லேபுக்கு இந்த சயின்டிஸ்ட் போறாங்க.
அந்த லேபுல, ஒரு பெரிய சோலார் சிஸ்டம் மாடல் ஒன்றை தாமஸ் ஆல்வா எடிசன் செஞ்சு வச்சிருக்கார். அதைப் பார்த்துவிட்ட சயின்டிஸ்ட், 'என்ன சார்..
இவ்வளவு அருமையா இருக்கு, இதை யார் செஞ்சாங்க, எத்தனை பேர் செஞ்சாங்க, பார்ட்ஸ் எங்கே கிடைச்சது'.. ன்னு கேட்டார்.
அதற்கு தாமஸ் ஆல்வா எடிசன், 'திடீர்னு ஒரு நாள் கதவைத் திறந்து பார்த்தேன். இந்த மிஷின் இருந்துச்சி'ன்னு சொல்றார்.
'சார், தமாஷ் பண்ணாதீங்க. நான் சீரியஸா கேக்கறேன். இதை எப்படி செஞ்சீங்க'ன்னு கேக்கறார் சயின்டிஸ்ட்.
'இல்லப்பா.. உண்மையிலேயே நான் ஒண்ணும் பண்ணல. திடீர்னு கதவை திறந்து பார்த்தேன். இது இங்கே இருந்தது'...ன்னு எடிசன் சொன்னாங்க.
'சார்... சீரியஸாவே நான் கேக்கறேன்.. நான் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்... சொல்லுங்க'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.
'ஏம்ப்பா... நீங்க சயின்டிஸ்ட்டுங்க.. திடீர்னு ஒரு நாள் காஸ்மோஸ் (பிரபஞ்சவெளி) உருவாச்சின்னு சொல்றீங்க. திடீர்னு காஸ்மோஸ் உருவாகும்போது, இது உருவாகக் கூடாதா? கிரியேஷன்... Where there is a creation there should be a creator... படைப்பு இருந்தா, படைப்பாளி இருந்துதான் ஆகணும். Without the creator there is no creation. So கடவுள் இருக்கார்!', சயின்டிஸ்ட் சைலன்ட் ஆகிட்டார்.
இதை ஏன் சொல்றேன்னா... இது வந்து நடந்ததா இல்லையா என்பது வேறு.. தாமஸ் ஆல்வா எடிசன் அங்கே இருந்தாரா இல்லையான்றது டிஃப்ரன்ட்...
சொன்னவர் இதை எங்கேயாவது படிச்சிருப்பார் டெபனிட்டா...ஆனா, இதை எழுதினவர் என்ன சொல்ல விரும்பினார்... கடவுள் இருக்கார்னு சொல்றதுக்கு, இவர் இந்த சப்ஜெக்டை எடுத்துக்கிட்டார். இதுக்கு இந்த சிச்சுவேஷன் கிரியேட் பண்ணார். இதுக்கு ரெண்டு சயின்டிஸ்டை உருவாக்கினார். தாமஸ் ஆல்வா எடிசனை கொண்டு வந்தார். அவர் வாயால சொல்ல வச்சதாலதான், இது இந்த அளவு ஆழமா இது போகுது. இதான் ரைட்டருடைய வேலை. அந்த எழுத்தோட்டம் இருக்கு பாருங்க... அது ப்யூட்டிபுல்.
இந்த மாதிரி ஒரு ஓட்டத்தை நான் ராமகிருஷ்ணனிடம் பார்த்தேன். புதுசா இருக்கு. கண்டுபிடிக்கிற சிச்சுவேஷன்ஸ் டிஃபரெண்டா இருக்கு. பாத்திரங்கள்
வித்தியாசமா இருக்கு. ஒண்ணொன்னும் வித்தியாசமா இருக்கு. எழுத்துங்கறது எவ்வளவு பவர்புல்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலை இல்லை!
கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!
படைப்பாளி கஷ்டப்படக் கூடாது!
எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம்
படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை
படைக்க வாழ்த்துகிறேன். படைப்பாளி கஷ்டப்படக்கூடாது. அவர்களா நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை
நிற்க வேண்டும்," என்றார்.
வாழ்க வளமுடன்!
நானும் அந்த வீடியோவைப் பார்த்தேன்... அதை இந்தச் சுட்டியில் யாவரும் காணலாம்.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=OL48l-DHVgM&feature=related
இன்னொரு பிளாகர் கூட ரஜினியும் இலக்கியமுமா! என்று முதலில் நினைத்தேன் பிறகு நான் அவசரப் பட்டது தவறென்று உணர்ந்தேன் என்றும் எழுதியிருக்கிறார்.
அதற்கு எனது பின்னூட்டம்.. அதை இங்கே கூறிக் கொள்ள விளைகிறேன்...
"உண்மைதான்... ரஜினியின் இலக்கிய அறிவை நான் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னமே அறிவேன்...
இலக்கிய அறிவு என்பது இங்கே இலக்கியத்தை விரும்பிப் படித்து அதன் உயிரோட்டத்தை அதன் துணிப்பை உணர்ந்து உணர்வை வெளிப் படுத்துதளைப் பற்றியே கூறுகிறேன்..
எங்கள் சிங்கை வானொலியில் வைரமுத்துப் பேட்டி... அப்போது அவர் ரஜினியைப் பற்றி கூறும் பொது அவரது ரசனையை கூறும் பொது (ரசனை உள்ளவன் தானே இலக்கியவாதியாக முடியும்)
"மனிதன் படம் அதை ஏ.வி.எம் எடுத்தார்கள் நான் (வைரமுத்து) பாடல் எழுதப் பணிக்கப் பட்டேன்... எழுதியப் பாடல்களை எடுத்துக் கொண்டு எங்கள் முதலாளி திருவாளர் சரவணன் அவர்களைக் காணப் போனேன் அப்போது அங்கு நமது சூப்பர் ஸ்டாரும் இருந்தார்கள். மனிதன், மனிதன் எவன் தான் மனிதன்? என்றப் பாடல் அதிலே ஒரு வரி இரவில் மட்டும் தாலிக் கட்ட நினைப்பவன் மனிதனா? என்று திரு சரவணன் அவர்கள் என்னிடம் இந்த வரி வேண்டாமே என்றார் (ஏ.வி.எம் பொறுத்தவரை மிகவும் கவனமாகவே எல்லாவற்றையும் செயார்கள்) எனக்கு என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை... அந்த வரிகள் தான் அந்த பாடலின் உச்சம்.. அவர்கள் கூறும் போது... என்ன சொல்வதென்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது.. நான் சொல்ல வந்த அதேக் கருத்தை தான் நமது ரஜினி அவர்களும் கூறினார்கள்.
சார், அந்த வரிகள் தான் இந்தப் பாடலின் மூச்சாக இருக்கும் இருக்கட்டும் என்று... நான் ஒருகணம் அசந்து போனேன் அப்போது தான் நமது ரஜினி அவர்களின் இலக்கிய ரசனையை நான் புரிந்துக் கொண்டேன் என்றார்..."
எல்லாவற்றிற்கும் பூர்வீகம் பார்ப்பது இனத்தின் சாபக் கேடு... அப்படி தான் இவரும் திரிக்கப் படுகிறார்... அவர் பிறந்ததும் கிருஷ்ணகிரி அருகே என்றே கேள்வியுற்றேன்... எதுவானாலும் சரி. உண்மை ஒருபோதும் மாறாது அல்லவா... படித்தவர்கள் மனிதனை மனிதனாகப் பார்த்தால் ஏனிந்த திரிபுகளும், திரிப்புகளும்."
Thank you Vaththiyar sir!
நக்கீரனில் இந்த நிகழ்ச்சியை ஓரிரு தினங்களுக்குமுன் பார்த்தேன்..
ReplyDeleteரஜினி பொதுவா அதிகம் தெளிவாப் பேசமாட்டார்..எதையாவுது பேச ஆரம்பிச்சு எங்கேயாவுது போயிடுவார்..இல்லே..உணர்ச்சி வசப்பட்டுப் பேசி சிக்கலில் மாட்டிக்குவார்..உடல்நிலை சரியில்லாமல் போனபின்பு சமீபத்திலே பொது விழாக்களிலே இப்படி எங்கும் பேசவில்லை..
ஆனா இந்தமுறை மிகத் தெளிவா கோர்வையா என்ன சொல்லணுமின்னு நினைச்சாரோ அதை அட்சர சுத்தமா அவர் பாணியிலே சுவாரஸ்யமாவும் பேசினார்..
ஏற்கனவே 1996 தேர்தலிலே மக்கள் தலைவர் இருந்த காலகட்டத்திலே திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்து அம்மையாருக்கு எதிரா முழு வெற்றியை ஈட்டித் தந்தவர் ரஜினி..அதன் பின் அவருக்கிருந்த அரசியல் செல்வாக்கும் வாய்ப்புகளும் என்னவோ குறைந்து போனதாகவே தோன்றுகிறது.. ரஜினி ஜாதகப் படி அவர் அரசியலுக்கு வருவாரா?மாட்டாரா?என்று இங்குள்ள ஜோதிட வல்லுனர்கள்தான் கண்டுபிடிச்சு சொல்லணும்..அவரைக் கேட்டால் 'ஆண்டவனுக்குத்தான் தெரியும்'ன்னு சொல்லிட்டு ஒதுங்கிப் போயிடுவாரு..
சோ வுக்கு நல்ல நண்பர்..அந்த வகையில் தமிழகத்தில் எதிர்காலத்தில் அரசியல் வெற்றிடம் ஏதும் ஏற்பட்டால் இவருக்கு ஏதும் வாய்ப்பு இருக்கா?
ஐயா.. தங்களின் இந்த பதிவுக்கு வலு சேர்க்கும் சில விவரங்கள்... இந்த லிங்கில் இன்னும் பல விசயங்களைப் பார்த்தேன். தாங்களும் பார்த்து விட்டு அனைவரும் காண இந்த லிங்கையும் சேர்க்கலாம் என்று மீண்டும் பின்னூட்டமிடுகிறேன்.
ReplyDeleteநன்றிகள் ஐயா!
http://www.videos.behindwoods.com/videos-q1-09/actor-actress-events/feb-12-01/rajinikanth-vairamuthu-s-ramakrishnan-gnanasambandam-03-02-12.html
சூப்பர் ஸ்டாரின் இந்த உரையை இரு தினங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பார்த்தேன்.திரு.எஸ்.இராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி அது.எழுத்துலக சூப்பர் ஸ்டார் திரு.சுஜாதா கூட ஒரு முறை, ஒழுங்காக விஞ்ஞானம் படித்தால் கடவுள் நம்பிக்கை வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.ஆச்சரியம் என்னவெனில்,சிகரம் தொட்ட பின்பும்,பண்பு சிதறாமல் வாழும் திரு.ரஜினியின் குணநலம். 'நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்' என்ற கவியரசரின் வரிகளுக்கு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார் திரு. ரஜினி
ReplyDeleteiyya naanum indh program ai TV parthen, ungalaiyum ninaithen. unmai rajini solliirukkirar. avarkalai mariyathai seiya atleast naam anaivarum avarkaludaiya padaippukkalai OC il illamal kasu koduthu vangi padikka vendum.
ReplyDeleteNandri Iyya
sorry for not attending for a long time, thanks. Sakthi Ganesh.
ஆம்...
ReplyDeleteதமிழ் பக்தி இலக்கியம் என்ற மாநாட்டில் எமது தொகுப்புகளை ஆழ்ந்து கேட்டு பாராட்டியதை இங்கு நினைவு கூர்கிறோம்..
மாலை வணக்கம் ஐயா.
ReplyDeleteஎழுத்தாளர் திரு. ராமகிருஷ்ணன் இயல் விருது பெற்றதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசியது.
சூப்பர் ஸ்டார் எப்போதுமே குட்டிக்கதைகள் சிறப்பாக சொல்கிறார்.
பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.
அடியேன் தங்கள் முகநூலில் friend request கொடுத்துள்ளேன்!!
நல்ல கதை.
ReplyDeleteதிரு ராமகிருஷ்ணன் எழுத்தை மிகவும் ரசிப்பவன் நான்.
நல்ல கதையைப் பகிர்ந்து கொண்ட வாத்தியாருக்கும், மேலதிகத் தகவல்களைப் பகிர்ந்துகொண்ட சகோதரர் ஆலாசியதிற்கும் நன்றி.
ReplyDeleteரஜினி அரசியலில் இறங்காவிட்டாலும் ஆன்மீகத்திலாவது இன்னமும் தீவிரமாக இறங்கலாம். பாபா படம் மூலம் தன் குழப்பமான மனநிலையைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் மக்களுக்கு நன்மைதான். நல்ல வழிகாட்டியாக விளங்கும் தகுதி உள்ளவர்.
முதல்வன் படத்தின் கதாநாயகன் கடைசியில் "என்னையும் அரசியல்வாதி ஆக்கிவிட்டார்களே" என்று புலம்ப நேர்ந்ததைப் போல் நடப்பதை தவிர்க்க விரும்பினால் ஆன்மிகம் சிறந்த மாற்றுப் பாதை.
ஆனால் நம் மக்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கவனிக்க மறந்து விட்டு அவருக்கு கோவில் கட்டுவதிலேயே முனைப்பாக இருக்கும் ஆபத்தும் உண்டு.
என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ReplyDeleteரஜனிக்கு இலக்கியம் பேசத்தெரியும் என்று கொள்வதா? ரஜினி கடவுளின் இருப்பை நிரூபணத்துட்ன் சொல்லிவிட்டார் என்பதா?
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரஜினி இணையா? அல்லது எஸ்ராவுக்கு ரஜினி என்ற ஜாக்கியா?
ஒன்றும் புரியலையப்பா சாமி! இருக்கிற சினிமாக்காரக ஆண்டது போதாதா?
மறுபடியும் சினிமாதானா?தமிழகத்துக்கு அதுதான் தலையெழுத்தா?ரஜனி, விஜய்காந்த், ஒரு ரவுண்டு ஆடிப் பார்க்கணுமா? என்னமோ போங்க...!
ரஜினி முன்னிலையில்தான் பக்தி இலக்கியம் பேசுவோம்னு சங்கல்பமா?
ReplyDeleteஇங்கே சும்மா 13 மட்டும்தானா?