மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.2.12

Astrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா?



Astrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா?

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 10
ஆயில்ய நட்சத்திரம்
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
-------------------------------------------
துர்வாச முனிவர் என்றால் நமக்கு அவருடைய கோபமும், சகுந்தலைக்கு அவர் கொடுத்த சாபமும்தான் நினைவிற்கு வரும்.

சகுந்தலையின் காவியததை எழுதிய மாபெரும் கவிஞன் காளிதாசன், அந்த நிகழ்வை விவரிக்கின்றான்.

அதாவது சகுந்தலை தன் காதலன் துஷ்யந்தனைப் பற்றிப் பகல் கனவு கண்டு கொண்டிருந்தாளாம். அந்த நேரத்தில் அங்கே வந்த முனிவரை அவள் கண்டு
கொள்ளவில்லையாம். உடனே பிடி சாபம் என்று சாபமிட்டுவிட்டார் துர்வாசர். அவளது காதலன் அவளை மறந்து விடுவான் என்பதே சாபம்

சகுந்தலை விடுவாளா? முனிவரின் காலில் விழுந்து மன்னிப்பைப் பெற்று அந்த சாபத்திற்கு விமோசனம் தேடியதுடன், தன் காதலனைச் சேர்ந்தாளாம்.

அந்தக் காலத்தில் காளிதாசன் எழுதிய காதல் கதை அது.

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் காளிதாசர். அதை மனதில் வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்
-------------------------------------------------------
வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டத்திலும் துர்வாசர் காணப்படுகின்றார்.

மகாபாரத்த்திலும் அவர் வருகிறார். குந்திக்கு அதர்வ மந்திரத்தை போதித்தவர் அவர் என்று சொல்லப்படுகிறது.

அவ்விரண்டு நிகழ்வுகளுமே வெவ்வேறு யுகங்களில் நடைபெற்றன.

சத்ய யுகம், த்ரேதா யுகம், துவபார யுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு பிரிவுகளாகச் சொல்லப்படுகின்றன. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்தது.
மகாபாரதம் துவபார யுகத்தில் நிகழ்ந்தது. காளிதாசர் நம் யுகத்து ஆசாமி.

குழப்பம் என்ன்வென்றால், துர்வாசர் எப்படி மூன்று யுகங்களிலும் தலை காட்ட முடியும்?

அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது.

காலகட்டங்களை மற்ந்து விட்டு சொல்லப்படும் செய்திகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!
--------------------------------------------------------
இப்போது சொல்ல வந்த புதுக் கதைக்கு வருகிறேன்

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் சிவபூஜை செய்துவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஆசாமி ஒருவன் துர்வாசரின்
நடையைப் பார்த்து, " நடையா, இது நடையா, நண்டின் நடையல்லவா தெரிகின்றது" என்று கேலி செய்து பாட்டுப்பாடியதுடன், அவரைப் போல நடந்தும் காட்டினானானம். துர்வாசர் எசப்பாட்டு (எதிர்வினைப் பாட்டு) பாடாமல், அவனை அக்கணமே நண்டாகும்படி சபித்து விட்டாராம்.

அவன் தன் செயலுக்கு வருந்தி, மன்னிப்புக் கேட்டு வேண்டினானாம்.

அவர் அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று அங்கு உறையும் சிவனாரைப் பூஜித்து சாப விமோசனம் பெறச் சொன்னாராம, துர்வாசரின்
அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றானாம் அவன். சிவனின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை
இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் அவர் கற்கடேஸ்வரர் என்னும் பெயர் பெற்றார் உள்ளூர் வாசிகள் சிரமப்பட்டு கற்கடேசுவரர் திருக்கோவில் என்று சொல்லாமல் சிம்ப்பிளாக நண்டுக்கோவில் என்று சொல்கிறார்கள்

அந்தக் கோவில்தான் ஆயில்ய நட்சத்திரக்காரர்களின் கோவில். அதாவது அந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்.
---------------------------------------------------------
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இறைவனின் பெயர்: கற்கடேஸ்வரர்
அம்மனின் பெயர்: அருமருந்துநாயகி
தல விருட்சம் : நங்கை மரம்
தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம்
ஆகமம் : சிவாகமம்
காலம்: சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஆலயம்
கோவில் இருக்கும் கிராமத்தின் பெயர்:: திருந்துதேவன்குடி, தஞ்சை மாவட்டம்
சிவராத்திரி, மற்றும் திருக்கார்த்திகை நாட்களில் கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும்
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 1.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

முகவரி:
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்,
திருந்துதேவன்குடி - 612 105.
வேப்பத்தூர் போஸ்ட்,
திருவிடைமருதூர் தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம்.

பிணி நீக்கும் சிவன என்று பெயர் பெற்றவர் இங்கே உறையும் சிவனார். ஆகவே பிணி உள்ள மற்ற நட்சத்திரக்காரர்களும் இத்தலத்திற்குச் சென்று வழிபடலாம். இவரைப் பிணி நீக்கும் சிவன் என்று சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.

கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ.,
தூரம் சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து குலுக்கல் வண்டி (ஆட்டோ) வசதியும் உண்டு.

வடமொழியில் ஆயில்ய நட்சத்திரத்தின் பெயர் அஷ்லேஷா

இத்திருக்கோவிலுக்கு அருகில் உள்ள மற்ற கோவில்கள். போகிறது போகிறீர்கள் அவற்றையும் பார்த்துவிட்டு வாருங்களேன்.

ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருவிடைமருதூர்
திருமங்களக்குடிக் கோவில்,
சூரியனார் திருக்கோவில்
திருவிசை நல்லூர் திருக்கோவில்
சரபேஸ்வரர் திருக்கோவில் திருப்புவனம்

ஒருமுறை சென்று வாருங்கள். பலனை வந்து பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

53 comments:

  1. நண்டாங்கோயிலுக்கு அழைத்துச்சென்றதற்கு நன்றி ஐயா!உங்கள் வண்டி குலுங்காமல் இருக்கிறது.

    திருவிசந‌ல்லுரில் ஸ்ரீதர ஐயாவாள் அதிஷ்டானம் உள்ளது. இவருக்காக கங்கை
    அவர் வாழ்ந்த வீட்டின் கிணற்றில் பொங்கி வீதியெல்லாம் பிரவாகமாக ஓடியதாம். ஆடி அமாவசை அன்று இந்த நிகழ்வு இப்போதும் விசேஷம்.5000 பேருக்கு மேல் அந்தக் கிணற்றில் அன்று நீராடுவார்கள். அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சியை 'நான் ஏன் கம்யூனிஸ்டு ஆகவில்லை' என்ற என் ஆக்க‌த்தில் கூறியுள்ளேன்.

    திருமங்களக்குடி கோவில் முதலில் தரிசனம் செய்துவிட்டுப்பின்னர் சூரியனார் கோவில் செல்ல வேண்டும்.திருமணஞ்சேரிபோல திருமணம் ஆகாதவர்களுக்கு இக்கோவில் தரிசனம் சீக்கிரம் திருமணத்தை செய்விக்கும் என்பது நம்பிக்கை.

    'ஆஸ்லேஷா' நட்சத்திரம் என்று சமஸ்கிருதம் கூறுவதைநாம் ஆயில்யம் என்கிறோம்.

    ReplyDelete
  2. ///// kmr.krishnan said...
    நண்டாங்கோயிலுக்கு அழைத்துச்சென்றதற்கு நன்றி ஐயா! உங்கள் வண்டி குலுங்காமல் இருக்கிறது.
    திருவிசந‌ல்லுரில் ஸ்ரீதர ஐயாவாள் அதிஷ்டானம் உள்ளது. இவருக்காக கங்கை
    அவர் வாழ்ந்த வீட்டின் கிணற்றில் பொங்கி வீதியெல்லாம் பிரவாகமாக ஓடியதாம். ஆடி அமாவசை அன்று இந்த நிகழ்வு இப்போதும் விசேஷம்.5000 பேருக்கு மேல் அந்தக் கிணற்றில் அன்று நீராடுவார்கள். அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சியை 'நான் ஏன் கம்யூனிஸ்டு ஆகவில்லை' என்ற என் ஆக்க‌த்தில் கூறியுள்ளேன்.
    திருமங்களக்குடி கோவில் முதலில் தரிசனம் செய்துவிட்டுப்பின்னர் சூரியனார் கோவில் செல்ல வேண்டும்.திருமணஞ்சேரிபோல திருமணம் ஆகாதவர்களுக்கு இக்கோவில் தரிசனம் சீக்கிரம் திருமணத்தை செய்விக்கும் என்பது நம்பிக்கை.
    'ஆஸ்லேஷா' நட்சத்திரம் என்று சமஸ்கிருதம் கூறுவதைநாம் ஆயில்யம் என்கிறோம்.
    Tuesday, February 14, 2012 3:49:00 AM/////

    அதிகாலை 3.30 மணிக்குப் பதிவை ஏற்றினால், 3:49ற்கே பின்னூட்டமா? என்ன வேகமமய்யா சுவாமி? இந்தியாவில், அதிகாலையிலேயே விழித்து வேலை செய்பவர்களுக்குப் பரிசு கொடுத்தால் நம் இருவருக்கும்தான் கொடுக்க வேண்டும்! அதிகாலை சுறுசுறுப்பிற்கு ஈடு இணையே கிடையாது!

    ReplyDelete
  3. //அதிகாலையிலேயே விழித்து வேலை செய்பவர்களுக்குப் பரிசு கொடுத்தால் நம் இருவருக்கும்தான் கொடுக்க வேண்டும்! //

    இரவு 8.30க்கெல்லாம் தூங்கிவிடுவதால் காலையில் 3 மணிக்கு எழுகிறேன்.
    முதல் வேலையாக வகுப்பறைதான் வாசிப்பேன்.பகவானுக்குக்கூட 2வது இடம் கொடுத்தாயிற்று.

    தேவையானால் சிறிது பகல் ஓய்வு (63 வயது அல்லவா)கொடுக்கிறேன்.
    சீஸ்டா 20 நிமிடங்கள் கொடுத்தால், 2 மணி நேரம் உற்சாகமாக இருக்கும்.
    வங்கி போன்று வெளி வேலைகள் இருதால் சீஸ்டா கட்.

    ReplyDelete
  4. நேற்று தம் அடிக்கப்போன‌ கணவனுக்காகாக் காத்திருந்த குழந்தையும் சரி, இன்று சப்பாத்தி தேய்க்கும் குழந்தையும் சரி செம 'க்யூட்'.எங்கிருந்து கிடைக்கிறது ஐயா உங்களுக்கு இப்படிப்பட்ட படங்கள்?

    ReplyDelete
  5. //// kmr.krishnan said...
    //அதிகாலையிலேயே விழித்து வேலை செய்பவர்களுக்குப் பரிசு கொடுத்தால் நம் இருவருக்கும்தான் கொடுக்க வேண்டும்! //
    இரவு 8.30க்கெல்லாம் தூங்கிவிடுவதால் காலையில் 3 மணிக்கு எழுகிறேன்.முதல் வேலையாக வகுப்பறைதான் வாசிப்பேன்.பகவானுக்குக்கூட 2வது இடம் கொடுத்தாயிற்று. தேவையானால் சிறிது பகல் ஓய்வு (63 வயது அல்லவா)கொடுக்கிறேன்.
    சீஸ்டா 20 நிமிடங்கள் கொடுத்தால், 2 மணி நேரம் உற்சாகமாக இருக்கும்.
    வங்கி போன்று வெளி வேலைகள் இருதால் சீஸ்டா கட்./////

    சீஸ்டா ... = ?

    ReplyDelete
  6. //// kmr.krishnan said...
    நேற்று தம் அடிக்கப்போன‌ கணவனுக்காகாக் காத்திருந்த குழந்தையும் சரி, இன்று சப்பாத்தி தேய்க்கும் குழந்தையும் சரி செம 'க்யூட்'.எங்கிருந்து கிடைக்கிறது ஐயா உங்களுக்கு இப்படிப்பட்ட படங்கள்?/////

    மாண்வக் கண்மணிகள் அனுப்பிவைக்கும் படங்கள்தான் அவைகள்.

    ReplyDelete
  7. சப்பாத்தி சுடும் என்பேத்தி -அதில்ரெண்டு
    தப்பாம இடும்மே நெய்யூத்தி!

    அப்படின்னு சொல்ற மாதிரி இருக்குது ஐயா!

    பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  8. ஆயில்ய நட்சத்திரம் என் தம்பிக்கு. ஆயில்ய நட்சத்திரக்கார்களுக்கு ராசி - கடக/நண்டு ராசி. இதனால் நண்டுக் கதையோ எனத் தோன்றுகிறது. கும்பகோணம் அருகே வசிப்பவர்கள் தினம் ஒரு கோயில் போகும் அளவுக்கு சுற்று வட்டாரத்தில் கோயில்கள் இருக்கும் போலிருக்கிறது. அத்துடன் நட்சத்திர கோயில்களும் பெரும்பாலும் கும்பகோணத்தை சுற்றியே இருப்பது போல் தெரிகிறது. பதிவிற்கு நன்றி ஐயா.

    A siesta (Spanish word) is a short nap taken in the early afternoon, often after the midday meal. Such a period of sleep is a common tradition in some countries, particularly those where the weather is warm (source-wiki)

    ReplyDelete
  9. ஐயா, இந்தக் கேள்வி சற்று ஆர்வக் கோளாறினால் தோன்றியது.
    ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா?

    குறிப்பாக லக்கினாபதி விரைய இடத்தில் இருப்பவர்கள் எப்படி? அவர்களுக்கு தூங்க அவ்வளவாக கொடுத்து வைத்திருக்காது என்று பாடம் சொன்னாலும், நான் பார்த்த வரை அனுபவத்தில் குறட்டை கூரையைத் தூக்குவதுதான் உண்மை.
    மைனர் உங்கள் ஆராய்ச்சி என்ன சொல்கிறது இதைப் பற்றி?

    ReplyDelete
  10. நான்காம் நூற்றாண்டு காதலை
    நச்சுன்னு காதலர் தினத்தில் சொன்னது

    பன்ஞ்ச்... அது சரி குசராத்தி ரொட்டி
    பிரட்டும் அந்த குழந்தை குமரிக்கு

    இலவச கேஸ் கிடைக்காதோ..
    இலவச சுரம் தமிழகத்தில் மட்டுந்தானா

    யாருக்காக இத்தனை வேகமாக
    ரொட்டி செய்கிறாள்-?

    இதுவும்
    இன்றை நாளுக்கேற்ற ஸ்பெஷலா?

    வணக்கமும் வாழ்த்துக்களும்..
    வழக்கம் போல் ..

    ReplyDelete
  11. //ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா? //

    12 என்பது விரயம் மட்டுமல்லாமல் தூக்கம், படுக்கையையும் குறிக்கும், கடகராசி, லக்னம் ஆகிய எனக்கு செவ்வாய் 5,10க்கு உரியவராகி யோககாரனாகிறார்.ஆகவே அவர் அந்த இடத்திற்கு உரிய தூக்கத்தை சீக்கிரமாகக் கொடுத்து, சீக்கிரமாக எழுப்பியும் விடுகிறார் போல.அவருக்குக் கொஞ்சம் சுறு சுறுப்புக்கூட அல்லவா? ஹி ஹி ஹி..!

    புத த‌சையில் தூக்கம் வராமல் தவித்துள்ளேன்.மாரகன் அல்லவா?இப்போதும் சூரியன் இரண்டுக்குரியவர், தியரிப்படி மார‌கர் ஆனாலும் பெரிதாக இதுவரை ஒன்றும் பெரிய சிரமங்களைக் கொடுக்கவில்லை.சனி7,8 அதிபதி) புக்தி செப் 2012 வரை.
    ஐயா கூறுவதுபோல எல்லாம் 'அவன்' பார்த்துக் கொள்வான்.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. அதுசரி! துர்வாசர் என்றால் பொருள் தெரியுமோ? நான் சொன்னால் என் மேல் கோபித்துக் கொண்டு சாபம் இட்டாலும் இட்டு விடுவார். துணிச்சல் இருப்பவர்கள் துர்வாசருக்குப் பொருள் சொல்லலாம்.

    ReplyDelete
  14. /////தேமொழி said...
    ஐயா, இந்தக் கேள்வி சற்று ஆர்வக் கோளாறினால் தோன்றியது.
    ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா?

    குறிப்பாக லக்கினாபதி விரைய இடத்தில் இருப்பவர்கள் எப்படி? அவர்களுக்கு தூங்க அவ்வளவாக கொடுத்து வைத்திருக்காது என்று பாடம் சொன்னாலும், நான் பார்த்த வரை அனுபவத்தில் குறட்டை கூரையைத் தூக்குவதுதான் உண்மை.////



    அட ஆமாம், நானும் இதைப் பார்க்கிறேன்... தாங்கள் சொல்வது போல் இருக்கலாம் சகோதிரியாரே! வாத்தியார் என்ன சொல்கிறார் என்றுப் பார்ப்போம்... இந்த அமைப்பு உள்ளவர்கள் / தெரிந்தவர்கள் உறுதிப் படுத்தினால் நன்றாக இருக்கலாம்... முதல் பிள்ளைகளாக பிறந்தவர்களுக்கு பெரும் பாலும் இந்த அமைப்பு பெற வழி இருக்கிறது... இரண்டாவது பிள்ளையோடு ஒப்பிட்டு உதை வாங்கவும் வழி இருக்கிறது.:)

    ReplyDelete
  15. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    சப்பாத்தி சுடும் என்பேத்தி - அதில்ரெண்டு
    தப்பாம இடுமே நெய்யூத்தி!
    அப்படின்னு சொல்ற மாதிரி இருக்குது ஐயா!
    பாடத்திற்கு நன்றிகள் ஐயா!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. //// தேமொழி said...
    ஆயில்ய நட்சத்திரம் என் தம்பிக்கு. ஆயில்ய நட்சத்திரக்கார்களுக்கு ராசி - கடக/நண்டு ராசி. இதனால் நண்டுக் கதையோ எனத் தோன்றுகிறது. கும்பகோணம் அருகே வசிப்பவர்கள் தினம் ஒரு கோயில் போகும் அளவுக்கு சுற்று வட்டாரத்தில் கோயில்கள் இருக்கும் போலிருக்கிறது. அத்துடன் நட்சத்திர கோயில்களும் பெரும்பாலும் கும்பகோணத்தை சுற்றியே இருப்பது போல் தெரிகிறது. பதிவிற்கு நன்றி ஐயா.
    A siesta (Spanish word) is a short nap taken in the early afternoon, often after the midday meal. Such a period of sleep is a common tradition in some countries, particularly those where the weather is warm (source-wiki)////

    சியெஸ்டா' விற்கு விளக்கம் சொன்னதற்கு நன்றி. அதைச் சில இடங்களில் கோழித்தூக்கம் என்பார்கள்!

    ReplyDelete
  17. //// தேமொழி said...
    ஐயா, இந்தக் கேள்வி சற்று ஆர்வக் கோளாறினால் தோன்றியது.
    ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா?
    குறிப்பாக லக்கினாபதி விரைய இடத்தில் இருப்பவர்கள் எப்படி? அவர்களுக்கு தூங்க அவ்வளவாக கொடுத்து வைத்திருக்காது என்று பாடம் சொன்னாலும், நான் பார்த்த வரை அனுபவத்தில் குறட்டை கூரையைத் தூக்குவதுதான் உண்மை.
    மைனர் உங்கள் ஆராய்ச்சி என்ன சொல்கிறது இதைப் பற்றி?/////

    செவ்வாய் ஆற்றலுக்கு உரிய கிரகம். அவருக்கும் தூக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? தூக்கத்திற்கு உரிய வீடு பன்னிரெண்டாம் வீடு. அதன் அதிபதியைப் பாருங்கள் சகோதரி!

    ReplyDelete
  18. //// அய்யர் said...
    அய்ந்து///

    இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்ரன - புதிர் விடுபடுவதற்கு!

    ReplyDelete
  19. ///// அய்யர் said...
    நான்காம் நூற்றாண்டு காதலை
    நச்சுன்னு காதலர் தினத்தில் சொன்னது
    பன்ஞ்ச்... அது சரி குசராத்தி ரொட்டி
    பிரட்டும் அந்த குழந்தை குமரிக்கு
    இலவச கேஸ் கிடைக்காதோ..
    இலவச சுரம் தமிழகத்தில் மட்டுந்தானா
    யாருக்காக இத்தனை வேகமாக
    ரொட்டி செய்கிறாள்-?
    இதுவும்
    இன்றை நாளுக்கேற்ற ஸ்பெஷலா?
    வணக்கமும் வாழ்த்துக்களும்..
    வழக்கம் போல் ../////

    நீங்கள்தான் பாடலைச் சுழ விடுவீர்கள். இன்று உங்களுக்காக நான் ஒரு பாடலைச் சுழல விடுகிறேன்
    -----------------
    வாடிக்கை மறந்ததும் ஏனோ? - என்னை
    வாட்டிட ஆசை தானோ - பல
    கோடி மலரழகை மூடி வைத்து மனதை
    கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை)

    வாடிக்கை மறந்திடுவேனோ? - என்னை
    வாட்டிடும் கேள்விகள் ஏனோ? - புது
    மங்கை எந்தன் மனதில்,பொங்கிவரும் நினைவில்
    மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை)

    அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
    அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
    அமுத விருந்தும் மறந்து போனால்
    உலகம் வாழ்வதும் ஏது? - பல
    உயிர்கள் மகிழ்வதும் ஏது? - நெஞ்சில்
    இனித்திடும் உறவை இன்பமெனும் உணவைத்
    தனித்துப் பெறமுடியாது

    அந்தி நேரம் போனதால்
    ஆசை மறந்தே போகுமா?
    அன்புக் கரங்கள் சேரும்போது
    வம்பு வார்த்தைகள் ஏனோ?
    இன்ப வேகம் தானோ..? (வாடிக்கை)

    காந்தமோ இது கண்ணொளிதானோ?
    காதல் நதியில் நீந்திடும் மீனோ?
    கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ..?

    பொறுமை இழந்திடலாமோ? - பெரும்
    புரட்சியில் இறங்கிடலாமோ? - நான்
    கருங்கல்லுச் சிலையோ காதலெனக் கில்லையோ
    வரம்பு மீறுதல் முறையோ..?

    சைக்கிளும் ஓட மண் மேலே - இரு
    சக்கரம் சுழல்வது போலே - அணை
    தாண்டிவரும் சுகமும்,தூண்டிவிடும் முகமும்
    சேர்ந்ததே உறவாலே

    பாடல்: வாடிக்கை மறந்ததும் ஏனோ
    திரைப்படம்: கல்யாணப்பரிசு (1959)
    இசை: A.M.ராஜா
    வரிகள்: கவிஞர் கல்யாணசுந்தரம்
    பாடியவர்கள்: A.M.ராஜா - P.சுசிலா

    ReplyDelete
  20. //// kmr.krishnan said...
    //ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா? //
    12 என்பது விரயம் மட்டுமல்லாமல் தூக்கம், படுக்கையையும் குறிக்கும், கடகராசி, லக்னம் ஆகிய எனக்கு செவ்வாய் 5,10க்கு உரியவராகி யோககாரனாகிறார்.ஆகவே அவர் அந்த இடத்திற்கு உரிய தூக்கத்தை சீக்கிரமாகக் கொடுத்து, சீக்கிரமாக எழுப்பியும் விடுகிறார் போல.அவருக்குக் கொஞ்சம் சுறு சுறுப்புக்கூட அல்லவா? ஹி ஹி ஹி..!
    புத த‌சையில் தூக்கம் வராமல் தவித்துள்ளேன்.மாரகன் அல்லவா?இப்போதும் சூரியன் இரண்டுக்குரியவர், தியரிப்படி மார‌கர் ஆனாலும் பெரிதாக இதுவரை ஒன்றும் பெரிய சிரமங்களைக் கொடுக்கவில்லை.சனி7,8 அதிபதி) புக்தி செப் 2012 வரை.
    ஐயா கூறுவதுபோல எல்லாம் 'அவன்' பார்த்துக் கொள்வான்./////

    அது.... அதுதான் கரெக்ட்!'அவன்' பார்த்துக் கொள்ளட்டும்!

    ReplyDelete
  21. //// kmr.krishnan said...
    அதுசரி! துர்வாசர் என்றால் பொருள் தெரியுமோ? நான் சொன்னால் என் மேல் கோபித்துக் கொண்டு சாபம் இட்டாலும் இட்டு விடுவார். துணிச்சல் இருப்பவர்கள் துர்வாசருக்குப் பொருள் சொல்லலாம்.////

    Durvasa, literally means one who is difficult to live with உடனிருந்து, அதாவது சேர்ந்து வாழ்வதற்கு லாயக்கற்ற்வர் என்று பொருள். அத்தனை குணக்கேடானவர். துர் என்றால் கேடான என்று பொருள்படும். துர்வாசர் என்றால் கேடுகள் நிறைந்தவர் என்று ஒரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்

    ReplyDelete
  22. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    /////தேமொழி said...
    ஐயா, இந்தக் கேள்வி சற்று ஆர்வக் கோளாறினால் தோன்றியது.
    ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா?
    குறிப்பாக லக்கினாபதி விரைய இடத்தில் இருப்பவர்கள் எப்படி? அவர்களுக்கு தூங்க அவ்வளவாக கொடுத்து வைத்திருக்காது என்று பாடம் சொன்னாலும், நான் பார்த்த வரை அனுபவத்தில் குறட்டை கூரையைத் தூக்குவதுதான் உண்மை.////
    அட ஆமாம், நானும் இதைப் பார்க்கிறேன்... தாங்கள் சொல்வது போல் இருக்கலாம் சகோதிரியாரே! வாத்தியார் என்ன சொல்கிறார் என்றுப் பார்ப்போம்... இந்த அமைப்பு உள்ளவர்கள் / தெரிந்தவர்கள் உறுதிப் படுத்தினால் நன்றாக இருக்கலாம்... முதல் பிள்ளைகளாக பிறந்தவர்களுக்கு பெரும் பாலும் இந்த அமைப்பு பெற வழி இருக்கிறது... இரண்டாவது பிள்ளையோடு ஒப்பிட்டு உதை வாங்கவும் வழி இருக்கிறது.:)////

    அயன சயன போக் பாக்கியங்களுக்கு உரிய பன்னிரெண்டாம் வீட்டதிபதி உச்சமடைந்திருந்தாலும் அல்லது கேந்திர கோணங்களில் இருந்தாலும் ஜாதகனுக்கு அந்த பாக்கியங்கள் எல்லாம் குறைவின்றி கிடைக்கும். FM Radio வைப் போட்டுவிட்டுப் படுத்தால், இரண்டாவது பாட்டிலேயே தூங்கிவிடுவான்.

    ReplyDelete
  23. The challenge in rishi's living time always happens only if we compare with current living pattern. For example, The rishi Bhrigu is one of the sapatarishi who has the capability of doing thapas for 10,000 of years. In fact during his thapas he forget about his own family and in thapas for 1000's of years. When he return back to the state, he realizes the truth and found his actual son has gone through the cycle of birth and rebirth many times and with his thapas power he was able to identify hime and made him as "sukra graha" .. On seeing this the public were astonished. At that time there is no "chandra" in earth. People wants a light for every house during the night time and with his power Bhrigu is able to create "Chandra" a one time light for all irrespective of people who support or hate or who request or not request. an example for actual "Samththuvam"...

    ReplyDelete
  24. ///// kmr.krishnan said...
    திருமணஞ்சேரிபோல திருமணம் ஆகாதவர்களுக்கு இக்கோவில் தரிசனம் சீக்கிரம் திருமணத்தை செய்விக்கும் என்பது நம்பிக்கை.

    kmrk sir,எனக்கு,ஒரே ஒரு தடவைதான் கல்யாணம் ஆகிருக்கு, நான் அங்கு போகலாமா!?

    SP.VR. SUBBAIYA said...
    சீஸ்டா ... = ?
    நாஸ்டா போல ஒரு தூக்கம்.போலிருக்குது!!

    ReplyDelete
  25. தேமொழி said...

    "ஐயா, இந்தக் கேள்வி சற்று ஆர்வக் கோளாறினால் தோன்றியது.
    ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா?"

    அதென்ன சாமி ஆட்டம்......

    ReplyDelete
  26. SP.VR. SUBBAIYA said...
    அயன சயன போக் பாக்கியங்களுக்கு உரிய பன்னிரெண்டாம் வீட்டதிபதி உச்சமடைந்திருந்தாலும் அல்லது கேந்திர கோணங்களில் இருந்தாலும் ஜாதகனுக்கு அந்த பாக்கியங்கள் எல்லாம் குறைவின்றி கிடைக்கும்.

    விளக்கத்திற்கு நன்றி ஐயா. எல்லாம் வாங்கி வந்த வரம்... சுகமான குறட்டை ஒலியின் காரணம், அயன சயன போக பாக்கியங்களுக்கு உரிய பன்னிரெண்டாம் வீட்டதிபதி இருப்பது ஐந்தில்... திரிகோணத்தில்.

    ReplyDelete
  27. அய்யா இன்றும் நான் வகுப்புக்கு லேட் . இரண்டு நாள் பாடத்தையும் இன்றே படித்து விட்டேன் . அமாம் , ஒவ்வொரு நக்ஷத்ர கோவில்கள் பற்றி நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள் ? அதுவும் இன்று நேற்று மற்றும் பழகதையும் Correlate செய்து சொல்வது சூப்பர்.

    நேற்றைய பாடத்தின் பின்னோட்டம் இது.

    ஆனாலும் பாடம் அருமை . எளிமையாக இருந்தது. அதைவிட பின்னூடங்கள் அருமை.
    உங்களுக்கு தேவிகா பிடிக்கும் என்பது கூடுதல் தகவல். நீங்கள் சொல்வது போல் சனி அவர்கள் எனக்கும் நன்மைகளே அதிகம் செய்துள்ளார் .
    காலேஜ் படிக்கும் சமயம் செராக்ஸ் எடுக்க சென்றால் அது வேலை செய்யாது . அது வேலை செய்யும் போது சென்றால் கரண்ட் இருக்காது.
    அதற்கும் மேல கடையே மூடிவிட்டு சென்று விடுவார். கடைசியில் அந்த புக்கே எனக்கு கிடைத்து விடும் . இப்படி சனி என்னை ரொம்ப சோதித்து நன்மை
    செய்து உள்ளார். ஆனால், சரி எப்படியும் சனி பகவான் நமக்கு நல்லது செய்து விடுவார் என்று நம்பி உக்கார்ந்தால் சரியாக கவுத்து விடுவார்.
    ஆதலால் ஓடி கொண்டே இருந்தேன், அவர் அசாத்திய , மற்றவர் பொறாமை கொள்ளும் விஷயங்களை எனக்கு செய்து தந்தார் அவருடைய ஏழரை காலத்தில். என்ன மூச்சு வாங்க கூட அவர் அனுமதிக்க வில்லை. விரட்டி கொண்டே என்னை ஒரு நல்ல இடத்தில (கணவரோடு ) அமர்த்திவிட்டு தான் சென்றார்.

    ReplyDelete
  28. //// Ravi said...
    The challenge in rishi's living time always happens only if we compare with current living pattern. For example, The rishi Bhrigu is one of the sapatarishi who has the capability of doing thapas for 1,000 of years. In fact during his thapas he forget about his own family and in thapas for 1000's of years. When he return back to the state, he realizes the truth and found his actual son has gone through the cycle of birth and rebirth many times and with his thapas power he was able to identify him and made him as "sukra graha" .. On seeing this the public were astonished. At that time there is no "chandra" in earth. People wants a light for every house during the night time and with his power Bhrigu is able to create "Chandra" a one time light for all irrespective of people who support or hate or who request or not request. an example for actual "Samththuvam"...////

    உங்களுடைய புதிய தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. //// Ananthamurugan said...
    ///// kmr.krishnan said...
    திருமணஞ்சேரிபோல திருமணம் ஆகாதவர்களுக்கு இக்கோவில் தரிசனம் சீக்கிரம் திருமணத்தை செய்விக்கும் என்பது நம்பிக்கை.
    kmrk sir,எனக்கு,ஒரே ஒரு தடவைதான் கல்யாணம் ஆகிருக்கு, நான் அங்கு போகலாமா!? ////

    எதற்கும் முன ஜாமீன் வாங்கி வைத்துக் கொண்டு, பிறகு செல்லுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////SP.VR. SUBBAIYA said...
    சீஸ்டா ... = ?
    நாஸ்டா போல ஒரு தூக்கம்.போலிருக்குது!!/////

    வேஷ்டா இல்லாமலிருந்தால எதுவுமே தப்பில்லை!

    ReplyDelete
  30. //// Ananthamurugan said...
    தேமொழி said...
    "ஐயா, இந்தக் கேள்வி சற்று ஆர்வக் கோளாறினால் தோன்றியது.
    ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா?"
    அதென்ன சாமி ஆட்டம்......////

    அக்காவைக் கேட்டு எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? கிராமத்துக் கோவில் திருவிழாக்களுக்குச் சென்று பாருங்கள்!

    ReplyDelete
  31. /// தேமொழி said...
    SP.VR. SUBBAIYA said...
    அயன சயன போக் பாக்கியங்களுக்கு உரிய பன்னிரெண்டாம் வீட்டதிபதி உச்சமடைந்திருந்தாலும் அல்லது கேந்திர கோணங்களில் இருந்தாலும் ஜாதகனுக்கு அந்த பாக்கியங்கள் எல்லாம் குறைவின்றி கிடைக்கும்.
    விளக்கத்திற்கு நன்றி ஐயா. எல்லாம் வாங்கி வந்த வரம்... சுகமான குறட்டை ஒலியின் காரணம், அயன சயன போக பாக்கியங்களுக்கு உரிய பன்னிரெண்டாம் வீட்டதிபதி இருப்பது ஐந்தில்... திரிகோணத்தில்.////

    தூக்கம் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி நெஞ்சினில் நிலவட்டுமே!
    - கவியரசர் கண்ணதாசன்

    ReplyDelete
  32. தேமொழி said...

    "ஐயா, இந்தக் கேள்வி சற்று ஆர்வக் கோளாறினால் தோன்றியது.
    ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா?"

    நமக்கு லக்னாதிபதி சனி,12 செவ்வாய் மகரத்தில் தூக்கம் ஒரு நிலைப்பாடு இல்லாமல் இருக்கிறது.
    கோழியெல்லாம் எழுப்பமாட்டேன்.எங்க வீட்டில் பைரவர் இருக்கிறார்.அவருடன் வாக்கிங்...

    ReplyDelete
  33. /// Kalai said...
    அய்யா இன்றும் நான் வகுப்புக்கு லேட் . இரண்டு நாள் பாடத்தையும் இன்றே படித்து விட்டேன் . அமாம் , ஒவ்வொரு நக்ஷத்ர கோவில்கள் பற்றி நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள் ? அதுவும் இன்று நேற்று மற்றும் பழகதையும் Correlate செய்து சொல்வது சூப்பர்.
    நேற்றைய பாடத்தின் பின்னோட்டம் இது.
    ஆனாலும் பாடம் அருமை . எளிமையாக இருந்தது. அதைவிட பின்னூடங்கள் அருமை.
    உங்களுக்கு தேவிகா பிடிக்கும் என்பது கூடுதல் தகவல். நீங்கள் சொல்வது போல் சனி அவர்கள் எனக்கும் நன்மைகளே அதிகம் செய்துள்ளார் .
    காலேஜ் படிக்கும் சமயம் செராக்ஸ் எடுக்க சென்றால் அது வேலை செய்யாது . அது வேலை செய்யும் போது சென்றால் கரண்ட் இருக்காது.
    அதற்கும் மேல கடையே மூடிவிட்டு சென்று விடுவார். கடைசியில் அந்த புக்கே எனக்கு கிடைத்து விடும் . இப்படி சனி என்னை ரொம்ப சோதித்து நன்மை
    செய்து உள்ளார். ஆனால், சரி எப்படியும் சனி பகவான் நமக்கு நல்லது செய்து விடுவார் என்று நம்பி உக்கார்ந்தால் சரியாக கவுத்து விடுவார்.
    ஆதலால் ஓடி கொண்டே இருந்தேன், அவர் அசாத்திய , மற்றவர் பொறாமை கொள்ளும் விஷயங்களை எனக்கு செய்து தந்தார் அவருடைய ஏழரை காலத்தில். என்ன மூச்சு வாங்க கூட அவர் அனுமதிக்க வில்லை. விரட்டி கொண்டே என்னை ஒரு நல்ல இடத்தில (கணவரோடு ) அமர்த்திவிட்டு தான் சென்றார்.////

    கஷ்டங்களைக் கொடுப்பது மட்டுமல்ல, விட்டுச் செல்லும்போது ஜாதகனுக்கு மேலான நன்மையையும் அவர் செய்துவிட்டுத்தான் போவார்!

    ReplyDelete
  34. SP.VR. SUBBAIYA said...
    //// kmr.krishnan said...
    அதுசரி! துர்வாசர் என்றால் பொருள் தெரியுமோ? நான் சொன்னால் என் மேல் கோபித்துக் கொண்டு சாபம் இட்டாலும் இட்டு விடுவார். துணிச்சல் இருப்பவர்கள் துர்வாசருக்குப் பொருள் சொல்லலாம்.////

    Durvasa, literally means one who is difficult to live with உடனிருந்து, அதாவது சேர்ந்து வாழ்வதற்கு லாயக்கற்ற்வர் என்று பொருள். அத்தனை குணக்கேடானவர். துர் என்றால் கேடான என்று பொருள்படும். துர்வாசர் என்றால் கேடுகள் நிறைந்தவர் என்று ஒரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்//

    நான் பணிபுரிந்து அலுவலகத்தில் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் இட்ட பெயர் 'துர்வாசர்'. அதை கே.எம்.ஆர். முன்பொரு முறை குறிப்பிட்டிருக்கிறார். அவர் பதிவிலும் அதைச் சொன்னால் என்னை சாபமிட்டுவிடுவார் என்று ஒருமையில் கூறியிருக்கிறார். அந்த மர்மம் தெரியாமல் ஆசிரியரும் துர்வாசருக்குப் பொருள் சொல்லிவிட்டார். இருக்கட்டும். துர்வாசராக இருக்க வேண்டிய சூழ்நிலையில் அப்படி இருந்தாகிவிட்டது. இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதையொன்று உண்டு. ஒரு சந்நியாசி வழியோடு போய்க்கொண்டிருந்தார். அங்கொரு மரத்தடியில் சில சிறுவர்கள் ஐயா அந்த மரத்தடிக்குப் போகாதீர்கள் அங்கொரு பாங்கு கடிக்க வரும் என்றார்கள். சாமியார் போனார். பாம்பு சீறிக்கொண்டு வந்தது. அவர் சொன்னார், ஏ, பாம்பே ஏன் இப்படி அநாவசியமாக எல்லோரையும் கடிக்க வருகிறாய். நீ அமைதியாக இரு. மக்கள் பயமின்றி இருப்பர் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சாமியார் சொல் ஆச்சே! பாம்பு அப்படியே நடந்து கொண்டது. சில நாட்களில் சாமியார் திரும்ப வரும்போது மரத்தடியில் அந்த பாம்பைப் பார்த்தார். அது உடலெங்கும் காயம்பட்டு சாகக் கிடந்தது. என்ன ஆயிற்று என்று விசாரித்தார். பாம்பு சொன்னது, சாமி! நீங்கள் சொன்னபடி அமைதியாக இருந்தேன். போகிற வருகிற அனைவரும் என்னைக் கல்லால் அடித்து இப்படி ஆக்கிவிட்டனர் என்றது. சாமியார் சொன்னார், அடப்பாவி! உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன், உன் சுபாவப்படி சீறக்கூடாது என்று சொல்லவில்லையே. கடிக்காமல் சீறியிருந்தால் உன்னை ஒருவரும் அடித்திருக்க மாட்டார்களே என்றாராம். ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையை நன்கு தெரிந்த ராமகிருஷ்ணருக்கும் இந்தக் கதை தெரியும். ஆகவே துர்வாசர் தற்காப்புக்காக சீறவேண்டியிருந்ததால் அந்தப் பெயரைப் பெற்றார். அவ்வளவே.

    ReplyDelete
  35. //////Thanjavooraan said...
    SP.VR. SUBBAIYA said...
    //// kmr.krishnan said...
    அதுசரி! துர்வாசர் என்றால் பொருள் தெரியுமோ? நான் சொன்னால் என் மேல் கோபித்துக் கொண்டு சாபம் இட்டாலும் இட்டு விடுவார். துணிச்சல் இருப்பவர்கள் துர்வாசருக்குப் பொருள் சொல்லலாம்.////

    Durvasa, literally means one who is difficult to live with உடனிருந்து, அதாவது சேர்ந்து வாழ்வதற்கு லாயக்கற்ற்வர் என்று பொருள். அத்தனை குணக்கேடானவர். துர் என்றால் கேடான என்று பொருள்படும். துர்வாசர் என்றால் கேடுகள் நிறைந்தவர் என்று ஒரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்//

    நான் பணிபுரிந்து அலுவலகத்தில் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் இட்ட பெயர் 'துர்வாசர்'. அதை கே.எம்.ஆர். முன்பொரு முறை குறிப்பிட்டிருக்கிறார். அவர் பதிவிலும் அதைச் சொன்னால் என்னை சாபமிட்டுவிடுவார் என்று ஒருமையில் கூறியிருக்கிறார். அந்த மர்மம் தெரியாமல் ஆசிரியரும் துர்வாசருக்குப் பொருள் சொல்லிவிட்டார். இருக்கட்டும். துர்வாசராக இருக்க வேண்டிய சூழ்நிலையில் அப்படி இருந்தாகிவிட்டது. /////

    இதையும் "இயல்பது கரவேல்" எனக் கொள்ளலாம் போலும்...
    இயற்கையில் படைக்கப் பட்ட குணத்தின் அவசியத்தை உணர்ந்து வாழும்; சாமர்த்தியமும் தேவை தான் என்பது புரிகிறது...
    "ஆட்டுக்கு வால் அளந்து தான் வைத்துள்ளான்" என்பதும் இயற்கையே!:)

    துர்வாசரின் வகுப்பறை வாசத்தால் -இங்கே
    நிர்மல செய்தியொன்று வசமானது.

    பெரியவர்கள் யாவருக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  36. ///ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையை நன்கு தெரிந்த ராமகிருஷ்ணருக்கும் இந்தக் கதை தெரியும். ஆகவே துர்வாசர் தற்காப்புக்காக சீறவேண்டியிருந்ததால் அந்தப் பெயரைப் பெற்றார். அவ்வளவே.///

    நாட்டியாஞ்சலி பணிகளில் மூழ்கி இதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார் என்றெல்லவா நினைத்து கொளுத்திப் போட்டேன்! இப்படி காட்டுத்தீ போல பற்றிக் கொள்ளூம் என்று எதிபார்க்கவில்லை.

    "சிறுமை கண்டு பொங்குவாய்!" என்பதை இடம் பொருள் ஏவல் என்றெல்லாம் பார்க்காமல் துர்வாசராக இருந்த காலம் ஒன்று பெரியவருக்கு உண்டு.இப்போது பொதுக் காரியங்கள் நன்கு நடைபெற அவர் காட்டும் பொறுமை வியக்க வைக்கிறது.
    19, 20 21 ஆகிய மூன்று நாட்கள் திருவையாறு பஞ்சநதீஸ்வரார் சன்னிதியில்
    நாட்டியாஞ்சலி நட‌க்கவுள்ளது.மாலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை ஒவ்வொரு நாளும் 10 குழுக்கள் சிவன் முன்னிலையில் நாட்டியத்தால் வழிபாடுசெய்வர். 20 (மகாசிவன் ராத்திரி) அன்று பல்லாயிரக்கணக்கான‌ மக்கள் அருகருகேயுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு சுமார் 15 கிமீ நடைப்பயணமாகச் சென்று வழிபடுவர். அவர்கள் அனைவரும் நாட்டியத்தைக் கண்டு களிப்பர்.

    சிதம்பரத்தில் நடைபெரும் நாட்டியாஞ்சலிக்கு மத்திய அரசு பொருளுதவி உண்டு. தஞ்சையில் நடைபெரும் பிரஹன் நாட்டியாஞ்சலிக்கும் அவ்வாறே!
    ஆனால் திருவையாறு நாட்டியாஞ்சலி தஞ்சாவூராரின் ஊக்கத்தால் மட்டுமே நடை பெறுகிறது.சுமார் ஒரு லட்சம் செலவாகும் இந்த நிகழ்ச்சிக்கு தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து எந்த பாலிடிக்ஸையும் அண்டவிடாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடத்திவருவதே ஒன்றை காட்டுகிறது. அதாவது அவர் உண்மையில் துர்வாசர் அல்ல என்பதே!

    பின் குறிப்பு:அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்தெல்லாம் நாட்டியமணிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.அதைப்பற்றிய கலர்ஃபுல் ஆர்டிகிள் பெரியவர் இங்கே அளிக்க வேண்டும் என்று வகுப்பறையின் சார்பில் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  37. வணக்கம் ஐயா,
    ஆயில்யம் நட்சத்திர கோவில்கள் பற்றிய இன்றைய ஆக்கத்தில் புராண கதைகள் தான் நான் விரும்பிப் படித்தது...நாம் இறைவனை ந‌ம்புவ‌து போல் புராண க‌தைகளையும் ஏன் நம்பக்கூடாது...நான் புராண கதைகளை மிகவும் விரும்பி படிப்பேன்... "கோவில்களின் நகரம்",என்பது கும்பகோணம் நகரத்திற்கு அதனால் தான் மிகவும் பொருந்துகிறது...


    இன்றைய‌ பின்னூட்ட‌த்தில் "தூக்க‌ம்" ப‌ற்றி அதிக‌ம் கூற‌ப்ப‌ட்ட‌தால் என் ப‌ங்கிற்கு நானும் ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்புகின்றேன்...12ம் அதிப‌தி என‌க்கும் வாத்தியார் ஐயா குறிப்பிட்டது போலவே லக்ன கேந்திர‌த்தில் அம‌ர்ந்து என‌க்கு ந‌ல்ல‌ உற‌க்க‌த்தை கொடுத்துவிட்டார்...விர‌ய‌த்தை கொடுத்தாலும் ந‌ல்ல‌ உற‌க்க‌த்தை கொடுத்த‌ "ச‌ந்திர‌னுக்கு" என் ந‌ன்றிக‌ள்...ஹிஹிஹி

    ReplyDelete
  38. ஐயா...நேற்றும்,இன்றும் வந்த இரு சிறுமிகளும் ரொம்ப ரொம்ப ""...அழகான படங்கள்..."யாரை நம்புவது" வரிகள் மிகவும் அருமை...உண்மையான உணர்வுகளை மூன்றே வரிகளில் தந்த அந்த "ஞானி"க்கு பெரிய பாராட்டுக்கள்...பதிவிட்ட தங்களுக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  39. /////தேமொழி said...
    ஐயா, இந்தக் கேள்வி சற்று ஆர்வக் கோளாறினால் தோன்றியது.
    ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா?

    குறிப்பாக லக்கினாபதி விரைய இடத்தில் இருப்பவர்கள் எப்படி? அவர்களுக்கு தூங்க அவ்வளவாக கொடுத்து வைத்திருக்காது என்று பாடம் சொன்னாலும், நான் பார்த்த வரை அனுபவத்தில் குறட்டை கூரையைத் தூக்குவதுதான் உண்மை.
    மைனர் உங்கள் ஆராய்ச்சி என்ன சொல்கிறது இதைப் பற்றி?///////

    எனக்கு பன்னிரெண்டில் லக்கினாதிபதி செவ்வாய் என்று மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு ஆராயக் கூடாது..வாத்தியார் சொன்னபடி பன்னிரண்டாம் அதிபதி சுக்கிரன் லக்கினமேறி லக்கினாதிபதி பன்னிரண்டிலே ஹாயா படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார்..ஆனா அங்கேயும் 33 பரலோடு செவ்வாய் 5 சுயவர்க்கம் என்று ஸ்ட்ரோங் ஆகத்தான் இருக்கார்..

    செவ்வாய் சுக்கிரன் ரெண்டு பேருமே பரிவர்த்தனை ஆகி உச்ச அளவுக்கு இருந்து ரெண்டு பேரின் சொந்த வீடுகளான ஆறு, ஏழு இடங்களைத் தன நேரடிப் பார்வையில் வைத்துள்ளதும் காரணமாக விரயங்கள் இருந்தும் சுபவிரயங்களே அதிகம் என்ற நிலைதான்..

    தூக்கத்தில் நேரவிரயம் செய்த காலங்கள் என்று ஒன்று உண்டு..இப்போது இல்லை..இப்போது ஒரு நாளைக்கு ஆறு அல்லது ஏழு மணிநேரம்தான் தூக்கம்..

    சீஷ்டா (KMRKஉபயம்) எட்டு /பத்து நிமிடங்கள் மட்டுமே..12.50PMக்கு வேலைக்கு செல்லவேண்டும்..12PM லேருந்து 12.20PM க்குள் லஞ்ச் முடித்து அதன்பின் கிட்டத்தட்ட எல்லோரும்

    குட்டித் தூக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள்..நானும் வொர்க்ஸ்மேனேஜரும்(ஜப்பானீஸ்)மட்டும் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்துவிட்டு நான் மட்டும் கடைசி எட்டு நிமிடங்கள் 12.40PM to 12.48PM வரை மட்டுமே குறட்டை விட்டுத் தூங்கி எழுவதுதான் வழக்கம்..அந்த ஏழெட்டு நிமிடங்களுக்குள் குறட்டைவிடும் அளவுக்குத் தூங்குவதுதான் ஸ்பெஷல்..எப்படி முடிகிறது என்று எல்லோருமே ஆச்சரியமாகக்கேட்பார்கள்..

    ReplyDelete
  40. கண்ணன் இந்த சிறுமிகளின் படத்தொகுப்பை ஏற்கனவே எனக்கு மெயில் பண்ணியிருந்தார்..பெரிய பொம்பளை போல வேஷம் போட்டிருப்பது நல்ல அழகு..

    வாத்தியார் கமென்ட் இன்னும் அழகு..

    ReplyDelete
  41. Uma S
    to me
    நட்சத்திரக் கோவில்கள் வரிசையில் இன்று எங்க ஆத்துக்காரர் நட்சத்திரம். கர்கடேஸ்வரர் கோயில் முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். ஊருக்குப்போகும்போது போய் வருகிறோம். நன்றி! அடுத்து என்னோட நட்சத்திரக்கோயில் என்று ஊகிக்கிறேன், சரியா?

    எஸ். உமா, தில்லி

    ReplyDelete
  42. அவசரப் பயணமாக வெளியூர் சென்று விட்டு வந்தேன். அதனால்தான் வகுப்பறைக்கு சில நாட்கள் வர இயலாமல் போய் விட்டது. Ipad, tablet PC போன்றவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால், எந்த இடத்தில் இருந்தும், இணைய வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒன்றை வாங்க எண்ணியுள்ளேன்.

    ஒவ்வொரு நட்சத்திர கோயில்களுக்கும் விதமான கதைகள் இருப்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

    தூக்கம் என்று அல்ல, எந்த விஷயமாக இருந்தாலும் அதற்குரிய கிரகம், அந்த ஸ்தானாதிபதி, அதில் இருக்கும் பரல்கள், போன்றவற்றோடு அப்போது நடக்கும் தசா புத்தியும் முடிவு செய்வதாக இருக்கும். எனக்கு நடக்கும் இந்த சனி தசையில் முன்பு அவ்வளவாக தூங்க முடியாமல் இருந்தது. இப்பொழுது நன்றாக துங்க வேண்டும் போல் இருக்கிறது. தூங்கிக் கொண்டும் இருக்கிறேன். இதற்கு முந்தைய குரு தசையில் கூட இப்படி இருந்ததில்லை.

    ReplyDelete
  43. //// Thanjavooraan said...
    SP.VR. SUBBAIYA said...
    //// kmr.krishnan said...
    அதுசரி! துர்வாசர் என்றால் பொருள் தெரியுமோ? நான் சொன்னால் என் மேல் கோபித்துக் கொண்டு சாபம் இட்டாலும் இட்டு விடுவார். துணிச்சல்
    இருப்பவர்கள் துர்வாசருக்குப் பொருள் சொல்லலாம்.////
    Durvasa, literally means one who is difficult to live with உடனிருந்து, அதாவது சேர்ந்து வாழ்வதற்கு லாயக்கற்ற்வர் என்று பொருள். அத்தனை குணக்கேடானவர். துர் என்றால் கேடான என்று பொருள்படும். துர்வாசர் என்றால் கேடுகள் நிறைந்தவர் என்று ஒரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்//
    நான் பணிபுரிந்து அலுவலகத்தில் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் இட்ட பெயர் 'துர்வாசர்'. அதை கே.எம்.ஆர். முன்பொரு முறை குறிப்பிட்டிருக்கிறார்.

    அவர் பதிவிலும் அதைச் சொன்னால் என்னை சாபமிட்டுவிடுவார் என்று ஒருமையில் கூறியிருக்கிறார். அந்த மர்மம் தெரியாமல் ஆசிரியரும் துர்வாசருக்குப் பொருள் சொல்லிவிட்டார். இருக்கட்டும். துர்வாசராக இருக்க வேண்டிய சூழ்நிலையில் அப்படி இருந்தாகிவிட்டது. இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதையொன்று உண்டு. ஒரு சந்நியாசி வழியோடு போய்க்கொண்டிருந்தார். அங்கொரு மரத்தடியில் சில சிறுவர்கள் ஐயா அந்த மரத்தடிக்குப் போகாதீர்கள்
    அங்கொரு பாங்கு கடிக்க வரும் என்றார்கள். சாமியார் போனார். பாம்பு சீறிக்கொண்டு வந்தது. அவர் சொன்னார், ஏ, பாம்பே ஏன் இப்படி அநாவசியமாகஎல்லோரையும் கடிக்க வருகிறாய். நீ அமைதியாக இரு. மக்கள் பயமின்றி இருப்பர் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சாமியார் சொல் ஆச்சே! பாம்பு அப்படியே நடந்து கொண்டது. சில நாட்களில் சாமியார் திரும்ப வரும்போது மரத்தடியில் அந்த பாம்பைப் பார்த்தார். அது உடலெங்கும் காயம்பட்டு சாகக் கிடந்தது. என்ன ஆயிற்று என்று விசாரித்தார். பாம்பு சொன்னது, சாமி! நீங்கள் சொன்னபடி அமைதியாக இருந்தேன். போகிற வருகிற அனைவரும் என்னைக் கல்லால் அடித்து இப்படி ஆக்கிவிட்டனர் என்றது. சாமியார் சொன்னார், அடப்பாவி! உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன், உன் சுபாவப்படி சீறக்கூடாது என்று சொல்லவில்லையே. கடிக்காமல் சீறியிருந்தால் உன்னை ஒருவரும் அடித்திருக்க மாட்டார்களே என்றாராம். ராமகிருஷ்ண பரமஹம்சர்
    கதையை நன்கு தெரிந்த ராமகிருஷ்ணருக்கும் இந்தக் கதை தெரியும். ஆகவே துர்வாசர் தற்காப்புக்காக சீறவேண்டியிருந்ததால் அந்தப் பெயரைப் பெற்றார்.
    அவ்வளவே.////

    துர்வாசருக்கான பெயர் விளக்கத்தை லால்குடிக்காரர் வைத்துள்ள பொடி தெரியாமல், நான் யதேட்சையாகத் தான் எழுதினேன்! உங்களின் உண்மை விளக்கத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  44. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    //////Thanjavooraan said...
    SP.VR. SUBBAIYA said...
    //// kmr.krishnan said...
    அதுசரி! துர்வாசர் என்றால் பொருள் தெரியுமோ? நான் சொன்னால் என் மேல் கோபித்துக் கொண்டு சாபம் இட்டாலும் இட்டு விடுவார். துணிச்சல்
    இருப்பவர்கள் துர்வாசருக்குப் பொருள் சொல்லலாம்.////
    Durvasa, literally means one who is difficult to live with உடனிருந்து, அதாவது சேர்ந்து வாழ்வதற்கு லாயக்கற்ற்வர் என்று பொருள். அத்தனை குணக்கேடானவர். துர் என்றால் கேடான என்று பொருள்படும். துர்வாசர் என்றால் கேடுகள் நிறைந்தவர் என்று ஒரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்//
    நான் பணிபுரிந்து அலுவலகத்தில் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் இட்ட பெயர் 'துர்வாசர்'. அதை கே.எம்.ஆர். முன்பொரு முறை குறிப்பிட்டிருக்கிறார்.
    அவர் பதிவிலும் அதைச் சொன்னால் என்னை சாபமிட்டுவிடுவார் என்று ஒருமையில் கூறியிருக்கிறார். அந்த மர்மம் தெரியாமல் ஆசிரியரும் துர்வாசருக்குப் பொருள் சொல்லிவிட்டார். இருக்கட்டும். துர்வாசராக இருக்க வேண்டிய சூழ்நிலையில் அப்படி இருந்தாகிவிட்டது. /////
    இதையும் "இயல்பது கரவேல்" எனக் கொள்ளலாம் போலும்...
    இயற்கையில் படைக்கப் பட்ட குணத்தின் அவசியத்தை உணர்ந்து வாழும்; சாமர்த்தியமும் தேவை தான் என்பது புரிகிறது...
    "ஆட்டுக்கு வால் அளந்து தான் வைத்துள்ளான்" என்பதும் இயற்கையே!:)
    துர்வாசரின் வகுப்பறை வாசத்தால் - இங்கே நிர்மல செய்தியொன்று வசமானது. பெரியவர்கள் யாவருக்கும் நன்றிகள்..////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  45. //// kmr.krishnan said...
    ///ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையை நன்கு தெரிந்த ராமகிருஷ்ணருக்கும் இந்தக் கதை தெரியும். ஆகவே துர்வாசர் தற்காப்புக்காக சீறவேண்டியிருந்ததால்
    அந்தப் பெயரைப் பெற்றார். அவ்வளவே.///
    நாட்டியாஞ்சலி பணிகளில் மூழ்கி இதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார் என்றெல்லவா நினைத்து கொளுத்திப் போட்டேன்! இப்படி காட்டுத்தீ போல பற்றிக்கொள்ளூம் என்று எதிபார்க்கவில்லை.
    "சிறுமை கண்டு பொங்குவாய்!" என்பதை இடம் பொருள் ஏவல் என்றெல்லாம் பார்க்காமல் துர்வாசராக இருந்த காலம் ஒன்று பெரியவருக்கு உண்டு.இப்போது பொதுக் காரியங்கள் நன்கு நடைபெற அவர் காட்டும் பொறுமை வியக்க வைக்கிறது.
    19, 20 21 ஆகிய மூன்று நாட்கள் திருவையாறு பஞ்சநதீஸ்வரார் சன்னிதியில்
    நாட்டியாஞ்சலி நட‌க்கவுள்ளது.மாலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை ஒவ்வொரு நாளும் 10 குழுக்கள் சிவன் முன்னிலையில் நாட்டியத்தால்
    வழிபாடுசெய்வர். 20 (மகாசிவன் ராத்திரி) அன்று பல்லாயிரக்கணக்கான‌ மக்கள் அருகருகேயுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு சுமார் 15 கிமீ
    நடைப்பயணமாகச் சென்று வழிபடுவர். அவர்கள் அனைவரும் நாட்டியத்தைக் கண்டு களிப்பர்.
    சிதம்பரத்தில் நடைபெரும் நாட்டியாஞ்சலிக்கு மத்திய அரசு பொருளுதவி உண்டு. தஞ்சையில் நடைபெரும் பிரஹன் நாட்டியாஞ்சலிக்கும் அவ்வாறே!
    ஆனால் திருவையாறு நாட்டியாஞ்சலி தஞ்சாவூராரின் ஊக்கத்தால் மட்டுமே நடை பெறுகிறது.சுமார் ஒரு லட்சம் செலவாகும் இந்த நிகழ்ச்சிக்கு
    தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து எந்த பாலிடிக்ஸையும் அண்டவிடாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடத்திவருவதே ஒன்றை
    காட்டுகிறது. அதாவது அவர் உண்மையில் துர்வாசர் அல்ல என்பதே!
    பின் குறிப்பு:அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்தெல்லாம் நாட்டியமணிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.அதைப்பற்றிய கலர்ஃபுல் ஆர்டிகிள் பெரியவர் இங்கே அளிக்க வேண்டும் என்று வகுப்பறையின் சார்பில் வேண்டுகிறேன்./////

    கலர்ஃபுல் என்பதில் பொடி ஏதும் இல்லையே?:-))))

    ReplyDelete
  46. ////R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    ஆயில்யம் நட்சத்திர கோவில்கள் பற்றிய இன்றைய ஆக்கத்தில் புராண கதைகள் தான் நான் விரும்பிப் படித்தது...நாம் இறைவனை ந‌ம்புவ‌து போல் புராண க‌தைகளையும் ஏன் நம்பக்கூடாது...நான் புராண கதைகளை மிகவும் விரும்பி படிப்பேன்... "கோவில்களின் நகரம்",என்பது கும்பகோணம் நகரத்திற்கு அதனால் தான் மிகவும் பொருந்துகிறது...இன்றைய‌ பின்னூட்ட‌த்தில் "தூக்க‌ம்" ப‌ற்றி அதிக‌ம் கூற‌ப்ப‌ட்ட‌தால் என் ப‌ங்கிற்கு நானும் ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்புகின்றேன்...12ம் அதிப‌தி என‌க்கும் வாத்தியார் ஐயா குறிப்பிட்டது போலவே லக்ன கேந்திர‌த்தில் அம‌ர்ந்து என‌க்கு ந‌ல்ல‌ உற‌க்க‌த்தை கொடுத்து விட்டார்...விர‌ய‌த்தை கொடுத்தாலும் ந‌ல்ல‌உற‌க்க‌த்தை கொடுத்த‌ "ச‌ந்திர‌னுக்கு" என் ந‌ன்றிக‌ள்...ஹிஹிஹி////

    ஆமாம், அது முக்கியம்!

    ReplyDelete
  47. //// R.Srishobana said...
    ஐயா...நேற்றும்,இன்றும் வந்த இரு சிறுமிகளும் ரொம்ப ரொம்ப ""...அழகான படங்கள்..."யாரை நம்புவது" வரிகள் மிகவும் அருமை...உண்மையான
    உணர்வுகளை மூன்றே வரிகளில் தந்த அந்த "ஞானி"க்கு பெரிய பாராட்டுக்கள்...பதிவிட்ட தங்களுக்கும் என் நன்றிகள்...////

    நல்லது. உங்களின் ரசனை உணர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. //// minorwall said...
    /////தேமொழி said...
    ஐயா, இந்தக் கேள்வி சற்று ஆர்வக் கோளாறினால் தோன்றியது.
    ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் "செவ்வாய்" இருப்பவர்கள் இரவு எட்டு மணிக்கு சாமியாடி காலையில் கோழியை எழுப்பி விடுபவர்களா?
    குறிப்பாக லக்கினாபதி விரைய இடத்தில் இருப்பவர்கள் எப்படி? அவர்களுக்கு தூங்க அவ்வளவாக கொடுத்து வைத்திருக்காது என்று பாடம் சொன்னாலும், நான்

    பார்த்த வரை அனுபவத்தில் குறட்டை கூரையைத் தூக்குவதுதான் உண்மை.மைனர் உங்கள் ஆராய்ச்சி என்ன சொல்கிறது இதைப் பற்றி?///////
    எனக்கு பன்னிரெண்டில் லக்கினாதிபதி செவ்வாய் என்று மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு ஆராயக் கூடாது..வாத்தியார் சொன்னபடி பன்னிரண்டாம்

    அதிபதி சுக்கிரன் லக்கினமேறி லக்கினாதிபதி பன்னிரண்டிலே ஹாயா படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார்..ஆனா அங்கேயும் 33 பரலோடு செவ்வாய் 5

    சுயவர்க்கம் என்று ஸ்ட்ரோங் ஆகத்தான் இருக்கார்..
    செவ்வாய் சுக்கிரன் ரெண்டு பேருமே பரிவர்த்தனை ஆகி உச்ச அளவுக்கு இருந்து ரெண்டு பேரின் சொந்த வீடுகளான ஆறு, ஏழு இடங்களைத் தன நேரடிப்

    பார்வையில் வைத்துள்ளதும் காரணமாக விரயங்கள் இருந்தும் சுபவிரயங்களே அதிகம் என்ற நிலைதான்..
    தூக்கத்தில் நேரவிரயம் செய்த காலங்கள் என்று ஒன்று உண்டு..இப்போது இல்லை..இப்போது ஒரு நாளைக்கு ஆறு அல்லது ஏழு மணிநேரம்தான் தூக்கம்..
    சீஷ்டா (KMRKஉபயம்) எட்டு /பத்து நிமிடங்கள் மட்டுமே..12.50PMக்கு வேலைக்கு செல்லவேண்டும்..12PM லேருந்து 12.20PM க்குள் லஞ்ச் முடித்து
    அதன்பின் கிட்டத்தட்ட எல்லோரும் குட்டித் தூக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள்..நானும் வொர்க்ஸ்மேனேஜரும்(ஜப்பானீஸ்) மட்டும் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்துவிட்டு நான் மட்டும் கடைசி எட்டு நிமிடங்கள் 12.40PM to 12.48PM வரை மட்டுமே குறட்டை விட்டுத் தூங்கி எழுவதுதான் வழக்கம்..அந்த ஏழெட்டு நிமிடங்களுக்குள் குறட்டைவிடும் அளவுக்குத் தூங்குவதுதான் ஸ்பெஷல்..எப்படி முடிகிறது என்று எல்லோருமே ஆச்சரியமாகக் கேட்பார்கள்..////

    மைனர்களுக்கு அடையாளமே குறட்டைதானே - நீங்கள் மைனர் என்பது உங்கள் ஜப்பனியத் தோழர்களுக்குத் தெரியாதா?

    ReplyDelete
  50. /// minorwall said...
    கண்ணன் இந்த சிறுமிகளின் படத்தொகுப்பை ஏற்கனவே எனக்கு மெயில் பண்ணியிருந்தார்..பெரிய பொம்பளை போல வேஷம் போட்டிருப்பது நல்ல அழகு..
    வாத்தியார் கமென்ட் இன்னும் அழகு..////

    நல்லது. உங்களின் ரசனை உணர்விற்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  51. //// SP.VR. SUBBAIYA said...
    Uma S to me
    நட்சத்திரக் கோவில்கள் வரிசையில் இன்று எங்க ஆத்துக்காரர் நட்சத்திரம். கர்கடேஸ்வரர் கோயில் முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். ஊருக்குப்போகும்போது போய் வருகிறோம். நன்றி! அடுத்து என்னோட நட்சத்திரக்கோயில் என்று ஊகிக்கிறேன், சரியா?
    எஸ். உமா, தில்லி/////

    க்ரெக்ட், புதனின் நட்சத்திரவரிசையில் ஆயில்யத்திற்கு அடுத்த நட்சத்த்திரம் கேட்டை. ஆமாம், உங்கள் இருவருக்கும் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வித்தார்களா? பார்த்திருந்தால் ஜோதிடர் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை என்று சொல்லியிருப்பாரே? மனப் பொருத்தம் இருந்தால் போதும். மற்ற பொருத்தங்கள் அதற்கு அடுத்தபடிதான்!

    ReplyDelete
  52. //// ananth said...
    அவசரப் பயணமாக வெளியூர் சென்று விட்டு வந்தேன். அதனால்தான் வகுப்பறைக்கு சில நாட்கள் வர இயலாமல் போய் விட்டது. Ipad, tablet PC போன்றவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால், எந்த இடத்தில் இருந்தும், இணைய வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒன்றை வாங்க எண்ணியுள்ளேன்.
    ஒவ்வொரு நட்சத்திர கோயில்களுக்கும் விதமான கதைகள் இருப்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.
    தூக்கம் என்று அல்ல, எந்த விஷயமாக இருந்தாலும் அதற்குரிய கிரகம், அந்த ஸ்தானாதிபதி, அதில் இருக்கும் பரல்கள், போன்றவற்றோடு அப்போது நடக்கும் தசா புத்தியும் முடிவு செய்வதாக இருக்கும். எனக்கு நடக்கும் இந்த சனி தசையில் முன்பு அவ்வளவாக தூங்க முடியாமல் இருந்தது. இப்பொழுது
    நன்றாக துங்க வேண்டும் போல் இருக்கிறது. தூங்கிக் கொண்டும் இருக்கிறேன். இதற்கு முந்தைய குரு தசையில் கூட இப்படி இருந்ததில்லை.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com