இரண்டாம் வீட்டில் சனியிருந்தால் என்ன ஆகும்?
வார மலர்
---------------------------------------------------------------------------------------------
நான் என் சிறு வயது முதலே கொஞ்சம் வாய்த் துடுக்கு உள்ளவனாகவே இருந்துள்ளேன். இப்போது நினைத்துப் பார்த்தால் ஏன் அப்படியெல்லாம் நடந்து கொண்டோம் என்று வருத்தமாகக் கூட இருக்கிறது. சிறியவர் பெரியவர் என்ற பேதம் இல்லாமல் என் 'வெடுக்கு வெடுக்கு' என்ற பேச்சால் மகிழ்வித்தும் இருக்கிறேன்; புண்படுத்தியும் இருக்கிறேன்.சில நிகழ்வுகளைச் சொல்ல விழைகிறேன்.
ஒருமுறை எனக்கு சுரம் கண்டிருந்தது.7 வயது இருக்கலாம் அப்போது.படுக்கையில் படுத்திருந்த என்னருகில் அப்பா ஆறுதலாக வந்து அமர்ந்தார்கள். அப்பாவின் மடிமீது என்கால்களைச்செல்லமாகப் போட்டுக்
கொண்டேன். அந்த சமயம் பார்த்து வலசையூர் தலைமையாசிரியர் என்று நாங்கள் அழைக்கும் அப்பாவின் நண்பர் இல்லத்திற்கு வந்தார். அவர் பள்ளிப் பிள்ளைகளிடம் பேசிப் பேசி எப்போதும் ஒரே அதட்டலாகத்தான் பேசுவார். குரலும் கணீரென ஓங்கி ஒலிக்கும். நான் அப்பா மடி மீது கால் போட்டுப் படுத்திருப்பதைப் பார்த்து விட்டு,
"என்னடா இது!? சிறிதும் மரியாதை இல்லாமல்..? அப்பா மடி மீது கால் போட்டுக்கொண்டு படுத்து இருக்கிறாய்? எடுடா காலை.."என்று அதட்டினார்
அவர் அப்படிப் பேசியது எனக்கு சற்றும் ரசிக்கவில்லை. அவருக்குப் பதிலடி கொடுத்தேன் இப்படி:
"என் அப்பா மடி! என்னோட காலு.. உமக்கு ஏனய்யா கண்ணை உறுத்துகிறது? உங்கள் மடியிலா கால் போட்டேன்?" வலசையூர் தலைமை ஆசிரியருக்கு நல்ல சிவந்த முகம். என் பேச்சைக்கேட்டு மேலும் சிவந்துவிட்டது.அவர் அவமானப் பட்டுக் கோபித்துக் கொண்டு 'விருட்'டென்று வெளியேறி விட்டார்.இன்று நினைத்தாலும் அவரைப் புண்படுத்தியது மிகவும் மனதுக்குச் சோகமாகவே உள்ளது.இளங்கன்று பயம் அறியாது என்பது போல நடந்து கொண்டு விட்டேனே என்று இப்போதும் நினைத்து வருந்துகிறேன்.
**********************************************************************
நான் 9வது படிக்கும் போது ஒரு நாள் வகுப்புக்கு வர வேண்டிய ஆசிரியர் எதிர்பாராத விடுப்பு எடுத்து விட்டதால், எங்கள் தலைமை ஆசிரியரே எங்கள் வகுப்புக்கு வந்தார்."பொதுவான கருத்துக்களைச் சொல்கிறேன்; பாடம் ஒன்றும் வேண்டாம்"என்று கூறினார். பல செய்திகளை அழகாகக் கூறி வந்தவர், நெப்போலியன் போனபார்ட்டே என்ற கவிதையை உருக்கமாக நடித்துக் காண்பித்தார்.நெப்போலியன் குன்றின் மீது நின்று கொண்டு தன்னைச் சூழ்ந்துள்ள எதிரிப் படையை கண்காணிக்கிறார்.அவர்களுடைய வலிமையை மதிப்பிடுகிறார்.
"canon to the front of him
canon to the left of him
canon to the right of him
canon behind him...
yet he stood like a rock ...."
கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு நெப்போலியனைப் போலவே சுற்று முற்றும் பார்த்து எதிரிகளின் பீரங்கிப் படையை 'சர்வே'செய்யும் காட்சியை எங்கள் தலைமை ஆசிரியர் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தார்.
அதை நிறுத்தி விட்டு தன் திறமையில் தானே மகிழ்ந்து போய்,
"எந்தக் கம்மனாட்டியாவது என்னை மாதிரி இந்தக் கவிதையை நடிப்போடு சொல்ல முடியுமாடா..?"என்று கொக்கரித்தார்.அவர் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவர். தஞ்சை மாவட்டத்தில் செல்லத் திட்டு கம்மனாட்டி'! மதுரை, நெல்லைக்கு எப்படி 'மூதியோ' அப்படி தஞ்சைக்குக் 'கம்மனாட்டி'!சென்னைக்கு அதுவே 'கஸ்மால'மாக மாறும்.
வகுப்பே மெளனம் சாதிதது.எந்தக் 'கம்மனாட்டி'யும் பதில் சொல்லாத போது, நான் எழுந்து "இந்தக் கம்மனாட்டி சொல்கிறேன் சார்!" என்றேன்.
நானும் அவரைப்போலவே 'கம்மனாட்டி' என்ற சொல்லைப் பயன் படுத்தியதைக் கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ந்து போனார்.கோபத்தில் என்னை இரண்டு தட்டு தட்டினார். பின்னர், "சவாலாடா விடுகிறாய்! இப்பவே போட்டி வைக்கிறேன்!நடிப்போடு சொல்லணும்! முடியுமாடா உன்னால்!?" என்றார்.
"முடியும் சார்!"
ஏவலாளரை அழைத்து ஆசிரியர் அறையில் ஓய்வாக இருக்கும் இரண்டு ஆசிரியர்களை அழைத்து வரச் செய்தார். அவர்களை நடுவராக வைத்தார்.
"இந்தப் பாட்டை நான் சொல்லுவேன் முதலில். என்னைத் தொடர்ந்து இவன் சொல்லணும். நான் சொல்லும் பாவத்தில் சொல்கிறானா என்று நீங்கள் தீர்ப்புச் சொல்லணும்.யார் சொல்லுவது சிறப்பாக இருந்தது என்று சொல்லணும்." நடுவர்களுக்குப் போட்டியின் நிபந்தனைகளை விளக்கினார்.
முதலில் அவர் சொல்லிக் காண்பித்தார்.தொடர்ந்து நான் சொன்னேன்.
நடுவர்கள் தங்களுக்குள் ஆலோசித்தார்கள்.பின்னர்,"ஐயா! நாங்கள் சொல்லும் தீர்ப்பால் எங்கள் மீது கோபப் படமாட்டீர்கள் என்றால் சொல்கிறோம். இல்லாவிட்டால் தீர்ப்புச் சொல்லாமல் வெளியேறுகிறோம்"என்று தலைமை ஆசிரியரிடம் சொன்னார்கள்.
"எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். நான் கோவம் கொள்ளவில்லை!"
"அந்தப் பையன் உங்களைக் காட்டிலும் கம்பீரமாகக நல்ல பாவத்துடன் சொல்கிறான் ஐயா!இந்தப் போட்டியில் அவனே வெற்றி பெற்றான் ஐயா!"
தலைமை ஆசிரியர் மகிழ்ந்து போனார்.எந்தக் கையால் என்னை அடித்தாரோ அந்தக் கையாலேயே என்னை அணைத்துப் பாராட்டினார்.மறுபடியும் பல தடவை'கம்மனாட்டி கம்மனாட்டி' என்று செல்லமாக அழைத்தார்.ஒரு புத்தகத்தை எனக்குப் பரிசாகக் கொடுத்து வெகுவாகப் பாராட்டினார். தலமை ஆசிரியர் திரு வி. சுப்பிரமணிய ஐயர்.நடுவராக இருந்தவர் என் பழைய ஆக்கம் "முன்னுக்கு வாடா கண்ணா"வில் வரும் திரு கோபால கிருஷ்ண ஐயர்.மற்றொரு நடுவர் திரு என் ஆர். வெங்கடராமன்.
என் வாய்க் கொழுப்பு எனக்குப் புகழ் சேர்த்த சம்பவம் இது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நான் 7வது படிக்கும் சமயம் நெல்லை சென்று இருந்தேன்.என் தாயாரும் நானும் மட்டும் அங்கு சென்று இருந்தோம்.அங்கு என் அத்தை மகன் திரு கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தோம்.அவர் எனக்கு 20 வயதாவது மூத்தவர்.மதுரை வங்கியில் உயர் பதவி வகித்தவர்.
"டேய்! அம்மாஞ்சி! (அம்மான் சேய்,மாமன் மகனே என்று பொருள்) உன்னுடைய வேதம் என்ன என்று தெரியுமாடா உனக்கு?!" என்று கேட்டார்.
"தெரியும் ஓய்! ராவணன் அழுகைதான் என் வேதம் என்றேன்".
என் பதிலை சற்றும் எதிர்பார்க்காத அயித்தான் சற்றே திகைத்தார்.அப்புறம் சமாளித்துக்கொண்டார். நான் சொன்னதில் உள்ள நயம் அவருக்குப் புலப்பட்டது.
"அடே அப்பா! புராணம் இதிஹாசம் எல்லாம் இப்பவே அத்துப்படியாடா உனக்கு?" என்று பாராட்டினார்.
என் தாயாரிடம்,"இவனைச் சரியாக வளர்க்க வேண்டும். குயுக்தியான மூளை உள்ளவனாக இருக்கிறான். சரியாக வழி நடத்தாவிட்டால் சிக்கலில் போய் மாட்டுவான்.அல்லது பெரிய வக்கீலாக வருவான்" என்றார்.
நான் கூறிய பதிலில் இருந்து என் வேதம் என்னவென்று சொல்ல முடியுமா வகுப்பறைத் தோழர்களே!?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஒரு முறை மடத்து சுவாமிகள் ஒருவருடன் எனக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
"உனக்குக் காமாலைக் கண். அதனால்தான் உனக்கு எல்லாம் மஞ்சளாகத் தெரிகிறது" என்றார்.
"சரி,ஒப்புக்கொள்கிறேன். ஆனால் காமாலை நோயால் பதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று நான் அறியமாட்டேன். ஆனால் நீங்களோ கலர் கண்ணாடி அணிந்துள்ளீர்கள்.அதனால் எல்லாமும் உங்களுக்கு கண்ணாடியின் நிறத்தில் தெரிகிறது. நீங்கள் விரும்பினால் கண்ணாடியை கழற்றிவிட்டு வெறும் கண்களால் பார்த்துத் தெளிவாக அறியமுடியும். ஆனால் நீங்களோ கண்ணாடியைப் பிடிவாதமாகக் கழற்ற மறுக்கிறீர்கள்!" என்றேன்
அதன் பின்னர் எங்கள் தொடர்பே அற்றுப் போய் விட்டது.அவரை நான் என் நாக்கால் சுட்டு விட்டேன் என்பது இப்போது புரிகிற்து.என்ன செய்ய முடியும்? சிந்திய பாலும்,சிதறிய வார்த்தையும் மீண்டும் பயன்படுமா?
ஒரு தியாகியை நோக அடித்ததற்காக வருந்துகிறேன்.
**********************************************************************
இதற்கெல்லாம் என்ன காரணம்? என் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் சனீஸ்வரன், சூரியன் புதனுடன் கோலோச்சுகிறார். கடக ராசி, கடக லக்கினம்.
நன்றி! வணக்கம்!
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===
வாழ்க வளமுடன்!
நன்றி அய்யா!என் இந்த ஆக்கம் பெரும்பாலும் வெளியிட மாட்டீர்கள் என்றே எண்ணினேன்.
ReplyDeleteஇதையும் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
என் மனைவியாரின் வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டம் இட்ட உங்கள் பெருந்தன்மை யாருக்கு வரும் ஐயா!? இந்த பரந்த மனதால்தான் உங்களுக்கு இப்போது 2300 பின் தொடர்பவர்கள்.
அவர்கள் சார்பாகவும் மீண்டும் நன்றி ஐயா!
http://jeyalakshmi-anuradha.blogspot.com
சுவையான நிகழ்ச்சிகள். ஆனால் இவற்றுக்கெல்லாம் காரணம் அவர் சொல்வது போல, சனியோ, ஞாயிறோ எனக்கு அந்த அளவுக்கு இந்தத் துறையில் ஞானம் கிடையாது. ஆனால் ஒன்று தெரிகிறது. வாய்த்துடுக்கு இருந்திருக்கிறது. போகட்டும். இவர் ஆசிரியர் 'கம்மனாட்டி' என்று அழைத்ததாகச் சொன்னதும் எனக்கு பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் எழுதியுள்ள ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அவரை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் 'வெள்ளி நாக்கு' சீனிவாச சாஸ்திரியார் அப்படித்தான் அழைப்பாராம், அங்கு அவர் மாணவராக இருந்த காலத்தில். அந்த சொல்லுக்கு பொருள் கிடையாது. 'சும்மா' அன்போடு அழைக்கும் சொல். பலே! வகுப்பறையின் உதவி ஆசிரியர் பொறுப்பை அன்பருக்குக் கொடுத்து விடுங்களேன், நீங்கள் விடுப்பில் செல்லும் போதெல்லாம் அவர் வகுப்பை நடத்துவார்.
ReplyDeleteஅப்படி நடந்து கொள்வது "வாய்துடுக்கு" எனச் சொல்வது அடுத்தவர் நிலையில் இருந்து...
ReplyDeleteஅதனை சுயமதிப்பு "Self Esteem" எனச் சொல்வது தன் நிலையில் இருந்து ...
அப்படி சொல்வது தானே சிறப்பாக இருக்கும்..
இது தானே நேர்முறை அணுகு முறையாக இருக்கும்
அப்படிச் சொல்வது தான்..
அடுத்தவர்களை வளர்க்கும்..
இல்லையேல் படித்து ரசித்து விட்டு போகும்படி அமையும் ..
சரி தானே...
இதனையே "வாய் கொழுப்பு" எனச் சொல்வது நகைச் சுவையாக இருக்கும்
ReplyDelete//அதனை சுயமதிப்பு "Self Esteem" எனச் சொல்வது தன் நிலையில் இருந்து ...//
ReplyDeleteIf you have self confidence it is ego!If i have ego it is self confidence!
SELF ESTEEM AND IMPERTINENCE ARE RELATIVE TERMS. IT WILL CHANGE ACCORDING TO PERSON,TIME AND PLACE.
Thank you Aiyar.
/////////Thanjavooraan said...
ReplyDeleteஅந்த சொல்லுக்கு பொருள் கிடையாது.
'சும்மா' அன்போடு அழைக்கும் சொல்.///////////////
ஆடவரைக் குறித்தோ சிறுவரைக் குறித்தோ விளையாட்டாக சொல்லும் போது இந்த வார்த்தை பொருளில்லாததாகக் கொள்ளப்படும் வழக்கம் தஞ்சைப்பகுதியில் இருக்கின்றதென்றாலும் கணவனை இழந்த பெண்மணியாரைக் குறிக்கும் அவப்பெயராகவே பொருள் பொதிந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்..
/////"என்னடா இது!? சிறிதும் மரியாதை இல்லாமல்..? அப்பா மடி மீது கால் போட்டுக்கொண்டு படுத்து இருக்கிறாய்? எடுடா காலை.."என்று அதட்டினார்////
ReplyDelete/////"என் அப்பா மடி! என்னோட காலு.. உமக்கு ஏனய்யா கண்ணை உறுத்துகிறது? உங்கள் மடியிலா கால் போட்டேன்?"////
தலைமை ஆசிரியருக்குமே....இரண்டில் சனி இருந்திருக்கும் போலத் தெரிகிறது...
எவ்வளவு தான் கட்டுப்பாடுடன் (வேண்டாம் என்று நடிக்க துணிந்தாலும்) பிறவி அமைப்பு காலை வாரி விட்டுவிடும் என்பது தானே உண்மை...
மலரும் நினைவுகளாக வந்து வகுப்பறையை மணக்கச் செய்துள்ளது நன்றி கிருஷ்ணன் சார்...
kmrk க்கு இரண்டில் சனி இருந்த காரணத்தால் இந்த வார்த்தையைத் தேடிக் கண்டுபிடித்தேன் என்றும் கூட எடுத்துக் கொள்ளலாம்..
ReplyDeleteஎனக்கு இரண்டிலே இரண்டுக்கும் ஐந்துக்கும் அதிபதி குரு தனுசிலே குரு ஆட்சி,மூலத்திரிகோணம்,கூடவே பத்தாம் ஆதி சூரியன், கூடவே ராகு.யாரும் அஸ்தமனமோ கிரக யுத்தத்திலோ இல்லை..
ராகு நவாம்சத்தில் உச்சம்.. பத்தாம் ஆதி சம்பந்தத்தில் அந்நிய மொழி காரகன் ராகுவுடன் தனாதிபதி குருவும் சேர்ந்தமையால் எனக்கு குரு தசையில் அந்நிய மொழி (ஜப்பானீஸ்) காரணமாக அமைந்த வேலை(ளை)யில்
(15 -06 -2008 to 11 -11 -2010 வரையில் குரு தசை ராகு புத்தி) அதுவும் குறிப்பாக ராகு புத்தியில் இந்த அமைப்பிலே வருமானம் வந்தது..2007 லே ஜப்பானுக்கு சென்ற எனக்கு அந்த மொழியின் நுணுக்கங்கள் கைவரப் பெற்று சரளமாகப் பேச ஆரம்பித்து சகஜமாகிப் போனதென்னவோ மிகச்சரியாக இந்த காலகட்டத்தில்தான்..கனவில் கூட நான் அங்கே செல்வேன் என்றெல்லாம் நினைத்திருக்கவில்லை..
ஆனால் நடந்தது..என்னைவிட மிகவும் இளையோர் கூட தடுமாறும் பொது 35 வயதுக்கு மேலே எனக்கு இந்த மொழி கைவரப்பெற்ற காரணமாக என் நினைவாற்றல் மற்றும் ஆர்வத்துடன் கூடிய கடும் முயற்சி
என்றெல்லாம் நடைமுறை ரீதியில் காரணங்கள் சொல்லப்பட்டாலும் எனக்கென்னவோ இதே அளவில் முயற்சிகள் செய்தும் இங்கே தடுமாறும் சக தோழர்களுக்குக் கிடைக்காத ஒரு மொழியாளுமை மிக இயல்பான வகையிலே எனக்கு கிடைத்ததற்கு மேல்சொன்ன இயற்கைக் காரணிகள் காரணமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்..
//இவர் ஆசிரியர் 'கம்மனாட்டி' என்று அழைத்ததாகச் சொன்னதும் எனக்கு பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் எழுதியுள்ள ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அவரை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் 'வெள்ளி நாக்கு' சீனிவாச சாஸ்திரியார் அப்படித்தான் அழைப்பாராம்,//
ReplyDeleteதஞ்சாவூரான் அவர்களே. இது புதிய செய்தி. வலங்கைமான்காரரல்லவா வெள்ளி நாக்குக்காரர்? நல்ல வடி கட்டிய தஞ்சைமண் ஆயிற்றே குடந்தை அருகாமையில் உள்ள வலங்கைமான்! அவர் அப்படிக் கூப்பிட்டதில் தவறில்லை. நான் கூறிய தலைமை ஆசிரியர் உங்களுக்குப் பிடித்த திருவையாற்றுக்காரர். ஈ ஸி ஆர் ராமச்சந்திரனின் மாம்னார்.!
//minorwall said...
ReplyDeleteஆடவரைக் குறித்தோ சிறுவரைக் குறித்தோ விளையாட்டாக சொல்லும் போது இந்த வார்த்தை பொருளில்லாததாகக் கொள்ளப்படும் வழக்கம் தஞ்சைப்பகுதியில் இருக்கின்றதென்றாலும் கணவனை இழந்த பெண்மணியாரைக் குறிக்கும் அவப்பெயராகவே பொருள் பொதிந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்..//
நீங்கள் கூறும் பொருளும் அதற்கு உண்டென்றாலும், அப்படி அபலை ஆகும் பெண்ணை நேரடியாக அச் சொல்லை வைத்து விளிக்கும் வழக்கம் கிடையாது.
ஆனால் ஆடவர்களையும், சிறுவர்களையும் அடிக்கடி அச்சொல்லால் விளிப்பார்கள்.
///Alasiam G said...தலைமை ஆசிரியருக்குமே....இரண்டில் சனி இருந்திருக்கும் போலத் தெரிகிறது...எவ்வளவு தான் கட்டுப்பாடுடன் (வேண்டாம் என்று நடிக்க துணிந்தாலும்) பிறவி அமைப்பு காலை வாரி விட்டுவிடும் என்பது தானே உண்மை..///
ReplyDeleteமுக்காலும் உண்மை ஹாலாஸ்யம்ஜி! பிறவி அமைப்புத்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிற்து.நம் வாய்க்கொழுப்பு சீலையில் வழியவேண்டும்;அதனால் குழப்பம் விளைய வேண்டும் என்று இருந்தால் எவ்வளவுதான் கட்டுப்பாட்டோடு இருந்தாலும் வீண் சர்ச்சையில் மாட்டுவோம்.
//..சக தோழர்களுக்குக் கிடைக்காத ஒரு மொழியாளுமை மிக இயல்பான வகையிலே எனக்கு கிடைத்ததற்கு மேல்சொன்ன இயற்கைக் காரணிகள் காரணமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்..//
ReplyDeleteவாத்தியார் வருடக்கணக்காக சோதிடப் பாடம் நடத்தியதன் பலனை உங்கள் பின்னூட்டத்தில் பார்க்கிறேன் மைனர்வாள்!
அய்யாகிட்ட கொஞ்சம் ஜாக்ரதையாத் தான் இருக்கணும் போலிருக்கே!
ReplyDeleteஐயா வணக்கம்.
ReplyDeleteசில வேளைகளில் நம்மையும் அறியாமல் நாம் பேசி விடுகின்றோம் பின்னர் தான் யோகிக்கின்றோம் நாம் ஏன் அவ்வாறு பேசினோம் என்று அல்லவா ஐயா .
ஆனால் உள்ளத்தில் ஒன்றுமே இருக்காது அதாவது கள்ளம் கபடம் இல்லையா ஐயா ?
///"செங்கோவி said...
ReplyDeleteஅய்யாகிட்ட கொஞ்சம் ஜாக்ரதையாத் தான் இருக்கணும் போலிருக்கே!"///
அதெல்லாம் பழைய கதை.அப்புறம் எவ்வளவோ மாறியாச்சு.
ஆனாலும் ஜாக்கிரதை உணர்வு என்பது என்னிடம் மட்டுமல்ல் பொதுவாக அனைவரிடமும் நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.
வணக்கம் சார்.
ReplyDeleteகோபாலன் சார் சொன்னது போல்
இரண்டாம் வீட்டில்
யார் இருந்தாங்கன்னு எனக்கும் தெரியலை.
ஆனா ஒன்று தெரிகிறது.
அந்த வயசிலேயே பதிலுக்கு பதில்
சொல்லும் சாமர்த்த்தியம் உங்களிடம்
இருந்திருக்கிறது.
இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
வாய்ப்பவர்கள் பயன் படுத்திக் கொள்வதில்லை.
ஆம். வக்கீலாகவும் ஆகியிருக்கலாம்.
"//ஒன்று தெரிகிறது.அந்த வயசிலேயே பதிலுக்கு பதில்சொல்லும் சாமர்த்த்தியம் உங்களிடம் இருந்திருக்கிறது."//
ReplyDeleteஇப்போதும் இருக்கிறது.இப்போது அனுபவ முதிர்ச்சியால் இடம் பொருள் ஏவல் தெரிந்து,எதிரில் இருப்பவரின் வயது,படிப்பு, பதவி ஆகியவைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, சரியான சொற்கள்,வாக்கியயங்களை பயன் படுத்துகிறேன்.
அவ்வளவுதான் வித்தியாசம்.
நன்றி மதுமிதா அவர்களே! என் முந்தின ஆக்கங்களைப் படித்தீர்களா?
நான் கூறிய பதிலில் இருந்து என் வேதம் என்னவென்று சொல்ல முடியுமா //
ReplyDeleteசாமவேதம்னுதான் முன்னர் ஒரு பதிவிலேயே சொல்லியிருந்தீர்களே?