====================================================
வீட்டிற்குள் எப்படி வந்தார்?
கோவை விஜயா பதிப்பகத்தில் புத்தகம் வாங்கியபோது அதை ஒரு உறையில் (Craft Paper cover) வைத்துக் கொடுத்தார்கள். அந்த உறையில் அவர்கள் பதிப்பக முகவரிக்கு மேல் இருந்த இடத்தை வெற்றிடமாக விடாமல், சிந்தனைக்கு
என்று தலைப்பிட்டுக் கொடுத்திருந்த வரிகளைக் கீழே கொடுத்துளேன்:
அன்னையும் பிதாவும்
முன்னெறி தெய்வமாம்
முதியோர் இல்லத்தில்
- பரவை பாரதி
திண்ணையில் வசித்த தாத்தா
வீட்டுக்குள் - வந்தார்
புகைப்படமாக!
- சேது மாதவன்
--------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
8.6.10
Subscribe to:
Post Comments (Atom)
Dear Sir
ReplyDeleteNarukendra Vasakangal manadhai Thirakkum...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
பயணம் முடிந்து
ReplyDeleteபதிவு தந்த ஆசிரியருக்கு
நன்றி!!
பேசும் தெய்வங்களாம் பெற்றவர்கள்
ReplyDeleteஅதனாலே அவர்களின் பேச்சு..
நம் காதுகளுக்குக் கேட்பதில்லை.
நன்றி ஐயா!
நல்ல வேளையாக என் பெற்றோரைக் கடைசி நாள் வரை அருகில் இருந்து சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.90 வயதான தங்கள் தாயாரைத்
ReplyDeleteதாங்கள் அருகிருந்து சேவை செய்வதை நேரில் கண்டு நெகிழ்ந்தேன். வாழ்க!வளர்க!
good morning sir,,,,,,
ReplyDeletenice lines sir........
thank you sir......
நன்றாகவுள்ளது.
ReplyDeleteஅம்மா அன்பின் மொத்த உருவம்,
ReplyDeleteஅவளே அழகு, அவளே உலகு.
கறந்தப் பாலினும் சிறந்த,
கலப்படமில்லா அமுதமவள்
தாயை மறந்தோர் தரணி ஆண்டதில்லை
தரணி ஆள்பவர் தாயை மறந்ததில்லை
கற்சிலையை தொழாதவரும் தனது அன்னையை
பொற்சிலையாய் வடித்து பூஜிப்பதுண்டு
அவர்கள் தாம் உண்மையான தெய்வத்தை
அடையாளம் கண்டவர்கள்.
சத்தியத் தாயின் புதல்வனாய் - தன்னால்
சாத்தியமான அத்தனைக்கும்
அன்னையின் பெயர் சூட்டியதுண்டு,
குடியிருந்த கோவிலென்று
கூடியக் கூட்டமெங்கும் கூவித்
திரிந்து மகிழ்ந்ததுண்டு.
இசையை அருந்தும் சாதகப் பறவை
இளங்கோவோ! ஈன்றவளுக்கு
(பண்)ணபுரத்தில் உன்னதக்
கோவில் எழுப்பினான்.
கடலும், நதியும்,நாடும்,மொழியும்
தனக்கென வாழாதன - அதனாலே
அவைகளை
தாயெனக் கண்டான் மனிதன்..
அம்மாவைப் போல் மனைவிவேண்டும் என்று
அரசமரம் அமர்ந்தவன் முதல்.........
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற- பல
ஆயிரம் மைல்கள் தோலில் சுமந்த அந்த
அற்புத மனிதன் வரை இன்னும் சொல்ல
ஆயிரம் உண்டு.
யுகங்கள் மாறலாம்
வாழ்வின் உத்தி மாறலாம்
ஆனால் மாறாதது,
அம்மாவும் அவளின் அன்பும் மாத்திரமே!
///Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Narukendra Vasakangal manadhai Thirakkum...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
அதனால்தான் பதிவில் ஏற்றினேன். நன்றி ராஜாராமன்!
////Pugazhenthi said...
ReplyDeleteபயணம் முடிந்து
பதிவு தந்த ஆசிரியருக்கு
நன்றி!!////
நல்லது. நன்றி நண்பரே!
////kmr.krishnan said...
ReplyDeleteநல்ல வேளையாக என் பெற்றோரைக் கடைசி நாள் வரை அருகில் இருந்து சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.90 வயதான தங்கள் தாயாரைத் தாங்கள் அருகிருந்து சேவை செய்வதை நேரில் கண்டு நெகிழ்ந்தேன். வாழ்க!வளர்க!////
உங்களின் பாச உணர்வும், பாராட்டும் உணர்வும் வாழ்க! வளர்க! நன்றி கிருஷ்ணன் சார்!
/////Alasiam G said...
ReplyDeleteபேசும் தெய்வங்களாம் பெற்றவர்கள் அதனாலே அவர்களின் பேச்சு.. நம் காதுகளுக்குக் கேட்பதில்லை.
நன்றி ஐயா!//////
நல்லது. நன்றி ஆலாசியம்!
////astroadhi said...
ReplyDeletegood morning sir,,,,,,
nice lines sir........
thank you sir......////
அருமையான வரிகள் என்ற பாராட்டு, அதை எழுதியவர்களையே சேரும்!
////முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteநன்றாகவுள்ளது./////
நன்றி முனைவர் அய்யா!
/////Alasiam G said...
ReplyDeleteஅம்மா அன்பின் மொத்த உருவம்,
அவளே அழகு, அவளே உலகு.
கறந்தப் பாலினும் சிறந்த,
கலப்படமில்லா அமுதமவள்
தாயை மறந்தோர் தரணி ஆண்டதில்லை
தரணி ஆள்பவர் தாயை மறந்ததில்லை
கற்சிலையை தொழாதவரும் தனது அன்னையை
பொற்சிலையாய் வடித்து பூஜிப்பதுண்டு
அவர்கள் தாம் உண்மையான தெய்வத்தை
அடையாளம் கண்டவர்கள்.
சத்தியத் தாயின் புதல்வனாய் - தன்னால்
சாத்தியமான அத்தனைக்கும்
அன்னையின் பெயர் சூட்டியதுண்டு,
குடியிருந்த கோவிலென்று
கூடியக் கூட்டமெங்கும் கூவித்
திரிந்து மகிழ்ந்ததுண்டு.
இசையை அருந்தும் சாதகப் பறவை
இளங்கோவோ! ஈன்றவளுக்கு
(பண்)ணபுரத்தில் உன்னதக்
கோவில் எழுப்பினான்.
கடலும், நதியும்,நாடும்,மொழியும்
தனக்கென வாழாதன - அதனாலே
அவைகளை
தாயெனக் கண்டான் மனிதன்..
அம்மாவைப் போல் மனைவிவேண்டும் என்று
அரசமரம் அமர்ந்தவன் முதல்.........
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற- பல
ஆயிரம் மைல்கள் தோலில் சுமந்த அந்த
அற்புத மனிதன் வரை இன்னும் சொல்ல
ஆயிரம் உண்டு.
யுகங்கள் மாறலாம்
வாழ்வின் உத்தி மாறலாம்
ஆனால் மாறாதது,
அம்மாவும் அவளின் அன்பும் மாத்திரமே!///////
மாறாதது மட்டும் அல்ல - குறையாததும் தாயன்பே! நன்றி ஆலாசியம்!
நீர் நிறைந்த கண்களுடன் சுமை நிறைந்த நெஞ்சமுடன்...
ReplyDeleteVISU IYER
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDelete" விஜயா பதிப்பகத்தார்,சிந்தனைக்கு
என்று தலைப்பிட்டுக் கொடுத்திருந்த வரிகளை",
எங்களுக்கும் அளித்து,
மாதா,பிதா,குரு,தெய்வங்களின் வரிசையில்
முதல் இரண்டு இடங்களில் உள்ள பெற்றோர்களைப்
பேணிக்காக்க வேண்டும் என்பதை,
மாதா,பிதா,குரு,தெய்வங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில
குருவாக உள்ள தாங்கள், தங்கள் மாணவர்களை
சிந்தனையில் ஆழ்த்தி தெளிவுப் படுத்தியுள்ளது மிகவும்
வரவேற்கத் தகுந்தது.
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-06-08
////////visu said...
ReplyDeleteநீர் நிறைந்த கண்களுடன் சுமை நிறைந்த நெஞ்சமுடன்...
VISU IYER/////
உங்கள் உணவுகளை வெளிபடுத்திப் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி நண்பரே!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
" விஜயா பதிப்பகத்தார்,சிந்தனைக்கு
என்று தலைப்பிட்டுக் கொடுத்திருந்த வரிகளை",
எங்களுக்கும் அளித்து,
மாதா,பிதா,குரு,தெய்வங்களின் வரிசையில்
முதல் இரண்டு இடங்களில் உள்ள பெற்றோர்களைப்
பேணிக்காக்க வேண்டும் என்பதை,
மாதா,பிதா,குரு,தெய்வங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில
குருவாக உள்ள தாங்கள், தங்கள் மாணவர்களை
சிந்தனையில் ஆழ்த்தி தெளிவுப் படுத்தியுள்ளது மிகவும்
வரவேற்கத் தகுந்தது.
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
நல்லது. நன்றி, தட்சணாமூர்த்தி