மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.10

Which is the greatest of all human blessings? ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Which is the greatest of all human blessings?  
ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?

எல்லோரும் வாழ்க்கையைப் பயணம் என்பார்கள். பயணத்திற்கு ஒரு துவக்கம் இருப்பதுபோல ஒரு முடிவும் இருக்கும். மரணம்தான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு.

கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார். வாழ்க்கையை வியாபாரம் என்றார். வியாபாரத்தில் வரவும் இருக்கும்; செலவும் இருக்கும்.ஜனனத்தை அவர் வரவு வைக்கச் சொன்னார். மரணத்தைச் செலவு எழுதச்சொன்னார்.

பாடலைப் பாருங்கள்:

போனால் போகட்டும் போடா! - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)

வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!
(போனால்)


இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

போனால் போகட்டும் போடா, என்று சர்வ அலட்சியத்துடன் பாடலைத் துவக்கியவர்,  கூக்குரலாலே உயிர்  திரும்பக் கிடைக்காது, கோர்ட்டுக்குப் போய் ரிட் பெட்டிஷன் போட்டாலும் ஜெயிக்காது, எமனின் கோட்டையில்
நுழைந்தவர்கள் யாரும் திரும்ப முடியாது என்று யதார்த்த உண்மைகளைச் சொன்னவர், முத்தாய்ப்பாய், ஆறுதலாய், நமக்கும் மேலே ஒருவனடா என்று சொல்லிப் பாடலை நிறைவு செய்தார்!

அதோடு கட்டுரை ஒன்றில் அவர் எழுதியிருந்தார்: “எமன் வந்து கூப்பிட்டால் அவனுடன் செல்வதற்கு நீ தயாராக  இருக்கிறாயா? இருந்தால், நீ அதிர்ஷ்டசாலி!” என்றார்.

அப்படி எத்தனை பேர்கள் இருக்கப்போகிறார்கள்?

நூற்றுக்கு ஒருவர் இருந்தால் ஆச்சரியமே!

எமனிடம் தாவா செய்ய முடியுமா?

எமன் வந்தவுடன், நம்மால் அவனிடம் இப்படிக் கேட்க முடியுமா?

“அப்பனே சற்று இரு; எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணிவிட்டு வருகிறேன். என் மனைவி அப்பாவி. வீட்டுச் சாவிகளை எல்லாம் எங்கே வைத்திருக்கி றேன், ரேசன் கார்டை எங்கே வைத்திருக்கிறேன் என்கின்ற சிறு
விஷயங்கள்  கூட அவளுக்குத் தெரியாது. கொடுக்கல், வாங்கலில் யாராரிடம், எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறேன், யாராருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சிக்கலான விஷயங்களும் அவளுக்குத் தெரியாது. எனக்குப் பின்னால் என்னுடைய மகனும், மருமகளும் சேர்ந்து, அவளுக்கு
உதவ மாட்டார்கள். அவள் தெருவில் நிற்கும்படியாகிவிடலாம்! அதனால் உயில் எழுதிப் பதிய வேண்டும். அதையும் செய்து விடுகிறேன். எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடு!”

இல்லை. கேட்டவுடன், அவர் கொடுக்கத்தான் போகிறாரா?

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்!

மரணப் படுக்கையில் படுத்திருப்பவன்கூட, வைத்தியர் நம்மைக் காப்பாற்றி விடுவார், சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்கின்ற நம்பிக்கையோடுதான் படுத்திருப்பான்.

என்ன காரணம்?

எந்த மனிதனுமே மரணத்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை! அதுதான் காரணம்
-------------------------------------------------------------------------------------------
ஒரு குழந்தை பிறப்பதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. சுகப்பிரசவம். தாயின் வயிற்றைச் சற்றுக் கிழித்துக்கொண்டு சிசேரியன் செய்யப்பட்டுப் பிறக்கும் குழந்தை.

மேலோட்டமாகப் பார்த்தால் மரணத்திலும் இரண்டுவகைதான். இயற்கையான மரணம் அல்லது துர் மரணம் (அகால மரணம்)

என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் மரணம் மரணம்தான். இழப்பு இழப்புத்தான். சாதாரண இழப்பல்ல. ஒரு உயிரின் இழப்பு.

தமிழில் மரணத்தை நாசுக்காகச் சொல்லும்போது, இறைவனடி சேர்ந்து விட்டார் என்போம். எங்கள் பகுதியில் சிவபதவி அடைந்துவிட்டார் என்று சொல்வார்கள். இயற்கை எய்திவிட்டார் என்றும் சொல்வார்கள். சிலர்
மரணத்தை வைகுண்டப் பிராப்தி அடைந்துவிட்டார் என்பார்கள்!
------------------------------------------------------------------------------------------
இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று நா‌ம் கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத்துவ உலக‌ம்  எ‌ன்ன சொ‌ல்‌கிறது?

உட‌ல் செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போவதுதா‌ன் மரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம்.
இதய‌ம் செய‌ல்படாம‌ல் ‌நி‌ன்று ‌வி‌ட்ட ‌பிறகு‌ம், மூளையானது இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் 2 ம‌ணி நேர‌ம் வரை கூட மூளை இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ப்பது உ‌ண்டு. இது ‌கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
‌பி‌ன்ன‌ர்தா‌ன் மூளை‌யி‌ன் இய‌க்கமு‌ம் ‌நி‌ன்று போ‌கிறது. இதை செ‌ரிபர‌ல் டெ‌த் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்கள‌்.

இ‌ப்போதுதா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.

‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி தலை‌யி‌ல் காய‌ம் அடை‌ந்தவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் மூளை தனது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்‌தி‌யிரு‌க்கு‌ம். ஆனா‌ல் இதய‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களது உட‌ல்க‌ள்தா‌ன் தானமாக
அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்.

Death is the termination of the biological functions that define a living organism. The word refers both to a particular process and to the condition that results thereby.
----------------------------------------------------------------------------------------------
மரணத்தை விரிவாகச் சொல்வதற்குத்தான் எத்தனை சொற்கள் இருக்கின்றன?

Died - சாவு, மரணம்

Expired - காலாவதியாகுதல். இறந்து போதல்

killed - put to death - கொல்லப்படுதல். பொதுவாக விபத்தில் இறப்பவர்களுக்கு இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்

Murdered - The unlawful killing of one human by another - கொலை செய்யப்பட்டு இறப்பதைக் குறிக்கும் சொல்

Assassination - An assassination is the targeted killing of a public figure, usually for political purposes. பிரபலங்கள், தலைவர்கள் கொல்லப்பட்டு இறக்கும்போது இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்

Strangled to death - To kill by squeezing the throat so as to choke or suffocate; throttle. கழுத்தை நெறித்துக் கொல்லப்படும் நிலைமை

Suffocated to death - To kill or destroy by preventing access of air or oxygen. மூச்சுத்திணறி இறக்கும் நிலைமை

Drowned to death - To kill by submerging and suffocating in water or another liquid. தண்ணீரில் மூழ்கி இறத்தல்

Killed in a stampede - A sudden headlong rush or flight of a crowd of people. கூட்ட நெரிசலில் சிக்கி இறத்தல்

Deceased - a more formal word for dead  - செத்துப்போனவரைக் குறிக்கும் யதார்த்தமான சொல்

Died in the fire accident - தீ விபத்தில் இறத்தல்

Shot dead - சுடப்பட்டு இறத்தல்

Hanged - தூக்கில் இடப்பட்டு இறத்தல் அல்லது தூக்கில் தொங்கி இறத்தல்

Suicide - The act or an instance of intentionally killing oneself. உயிரை மாய்த்துக்கொள்ளுதல். தற்கொலை

Poisoned to death -  விஷம் வைத்து அல்லது கொடுத்துக் கொல்லப்படுதல்

Electocuted - killed by an electric current - மின்சாரம் தாக்கி இறத்தல்

இன்னும் பல சொற்கள் உள்ளன: homicide, infanticide, fratricide, sororicide, matricide,patricide, parricide regicide.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தனை வகைவகையான, விரிவான சொற்கள் பிறப்பிற்குக் கிடையாது. அதை மனதில் கொள்க!
=====================================================
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

Which is the greatest of all human blessings?

மரணம்தான் அது.

உரிய காலத்தில் வலியில்லாமல், நாம் அறியாமல் உயிர் நம்மைவிட்டுப் பிரியும் நிலை இருக்கிறதே, அதுதான் உன்னதமான வரம். ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த வரம் கிடைக்க வேண்டும். அந்த வரம் கிடைத்திருக் கிறதா?  அல்லது இல்லையா என்பதைச் சொல்லும் இடம்தான் எட்டாம் வீடு!

“சாவை, வரம் என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?”

நான் சொல்லவில்லை சுவாமி! அதைச் சொன்ன ஞானியின் பெயருடனே அந்த வைர வரிகளைக் கீழே  கொடுத்துள்ளேன்

அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்:

Death may be the greatest of all human blessings.  ~ Socrates

மரணம்தான் மனிதனுக்குக் கிடைத்த உன்னதமான வரம்!
--சாக்ரட்டீஸ்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

30 comments:

  1. சிறுவயதில் தண்டவாளம் ஓரமாக நின்றுக் கொண்டு ஓடும் சேது விரைவு ரயில் வண்டியை பார்க்கும் போது நம்மைக் கடக்கும் ரயில்ப் பெட்டிகள் ஒருவித நெகிழ்ச்சியைக் கொடுக்கும், முடிந்த நேரத்தில் இன்னும் தொடராதா என்றும் தோன்றும். அதே உணர்வு கட்டுரையைப் படிக்கும் போது வந்தது. அவ்வளவு வேகம் கொடுத்தது எழுத்தின் நடை....

    "மரணம் தான் மனிதனுக்கு கிடைத்த உன்னத வரம்" உண்மையே அதிலும் பெரிய உண்மை.. அது ஒருவன் தனது உயரியப் படிப்பில் தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பது போன்று என்றும் கூறலாம்..... நன்றாக எழுதியவன் (வாழ்வில் நல்லவைகளே அதிகம் செய்தவன்) நம்பிக்கையோடு காத்திருப்பான்.....

    ReplyDelete
  2. எப்போதுமே நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள மனம் தயங்கும் . .

    அது போல தான் மரணம் என்பதும் கூட . .

    dependency இருப்பவர்கள் தான் மரணத்தை பற்றி பயப்படுவார்கள்.. கொஞ்சம் தெளிவானவர்கள் மரணத்தை தள்ளிப் போடுவார்கள் அல்லது அப்படி தள்ளிப் போட நினைப்பார்கள் . .

    உங்கள் மாணவர் விசுவைப் போன்று எந்த dependencyயும் இல்லாதவர் காத்துக் கொண்டிருப்பதில்லை . . ஆனால் கதவை தட்டியதும் பயமின்றி திறக்க தயாராக இருக்கிறார் ..

    ஆனாலும் இந்த படத்தை போட்டு இருக்க வேண்டாமே . .
    படத்தில் இறந்து இருப்பவர் வெடி குண்டு விபத்தில் இறந்தவர் தானே. .

    இந்த குடும்பத்தின் மூத்த தலைமுறை தான் கடவுள் இல்லாக் கொள்கையை முதன் முதலில் இந்திய மண்ணில் பரப்பியது . .

    இன்னமும் பயந்து வாழும் இந்த குடும்பம் இந்திய பொருளாதாரத்திலும் குழுப்பங்களை விளைவித்து வருகிறது . .

    பாட்டை கூட மாத்திலையே வாத்தியாரய்யா . . (ஆடி அடங்கும் வாழ்க்கையடா . . ஆறடி நிலைமே சொந்தமடா . என்ற பாடல் இருக்கும் என எதிர்பார்த்தேன்)

    ReplyDelete
  3. மிக உன்னதமான தத்துவக் கருத்து. இதனை கவிஞர் கண்ணதாசன் மிக அருமையாக எழுதியிருப்பதைப் பாராட்ட வேண்டும். வாழ்க்கைத் தத்துவத்தை உணரமுடிந்தால் உலகத்தில் பூசல், போட்டை, பொறாமை இவ்வளவையும் அகற்றிவிடமுடியும். ஆனால் இதை உணராததால்தான் இத்தனைத் துன்பங்களும் நமக்கு. ஒருவன் காலையில் அலுவலகம் போகிறான். மதியம் உணவு இடைவேளையில் கொண்டு வந்த சோற்றுமூட்டையைக் காலி செய்கிறான். நண்பர்களுடன் அரட்டை, மாலை ஐந்து ஆனதும் மீண்டும் வீடுநோக்கிப் பயணம். ஆகா, இதனை தினம்தினம் இவன் செய்துவந்தாலும் அலுப்பதில்லை. மாலை ஐந்து மணிக்குக் காத்திருக்கிறான். வாழ்க்கையும் அதுபோலத்தானே! காலையென்று ஒன்றிருந்தால் மாலை என்று ஒன்று வந்துதானே தீரும். இதைப் புரிந்து கொள்ளாமல் கோடி மேலே கோடிசேர்க்கவும், பிறரை வருத்தி செல்வம் சேர்க்கவும் முனைகிறான். மிருகங்களும், பறவைகளும் பகுத்தறிவு இல்லாத காரணத்தால் அவ்வப்போது கிடைப்பதை உண்கின்றன. அடுத்த வேளையைப் பற்றிக் கவலைப்படுபவன் மனிதன் ஒருவன் மட்டும்தான். பாரதியின் வாக்குப்படி "உலகெலாம் ஓர் பெருங்கனவு, அஃதுளே உண்டு, உறங்கி, இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும்" என்பதை உணர்ந்தால் பின்னர் வருத்தம் ஏது? 'தூங்குவது போலும் சாக்காடு'.ஒரு பிறவியில் துன்பப்பட்டால் அதன் காரணம் என்ன என்பதை உணர்தல் வேனண்டும். முற்பிறவியில் அவன் செய்த பாவங்களே துன்பத்திற்குக் காரணம் என்ற அறிவு வந்துவிட்டால், இப்பிறவியில் நன்மைகளே மட்டும் செய்வான். இந்த சக்தியை கடவுள் மனிதனுக்குக் கொடுக்கவில்லை. அதன்பயன் பாவமூட்டைகளை அளவின்றி செய்துவருகிறான். என்ன செய்யும் இந்த பாவம் என்ற உணர்வில்.

    ReplyDelete
  4. பாட்டும், படமும் அதன்
    பாவமும், பாவப் புண்ணிய
    கதைக் கூறுகின்றன........

    இடியும்-மின்னலுமாய்,
    அரவமும்-விசமுமாய்,
    தீயோரும்-கொடுமையுமாய்,
    வெட்டவெளி - அதிலே
    ஆங்காங்கே பட்ட மரம்,
    கொட்டும் பனி..
    கோபத்தையும், குரோதத்தையும்,
    தாங்கிய;
    அன்பையும், அருளையும்
    பொழிந்த; பூமிக்குள் புழு அறிக்கும்
    உடல்களைப் பேதமின்றி
    பதம் செய்கின்றன!

    உறவினர் கொண்ட
    அன்பின் உயரத்தை....
    ஓங்கி நிற்கும் சமாதிகளின்
    உயரம் காட்டுகின்றன!

    ஆடி அடங்கும் வாழ்க்கைக்கு
    இந்த ஆறடி நிலம் போதும் என்பதை யாரிவர்?
    அறிந்த, அவர் தம் அற்புத வாழ்வை இந்த ஊரறியும்!

    ReplyDelete
  5. //////Alasiam G said...
    சிறுவயதில் தண்டவாளம் ஓரமாக நின்றுக் கொண்டு ஓடும் சேது விரைவு ரயில் வண்டியை பார்க்கும் போது நம்மைக் கடக்கும் ரயில்ப் பெட்டிகள் ஒருவித நெகிழ்ச்சியைக் கொடுக்கும், முடிந்த நேரத்தில் இன்னும் தொடராதா என்றும் தோன்றும். அதே உணர்வு கட்டுரையைப் படிக்கும் போது வந்தது. அவ்வளவு வேகம் கொடுத்தது எழுத்தின் நடை....
    "மரணம் தான் மனிதனுக்கு கிடைத்த உன்னத வரம்" உண்மையே அதிலும் பெரிய உண்மை.. அது ஒருவன் தனது உயரியப் படிப்பில் தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பது போன்று என்றும் கூறலாம்..... நன்றாக எழுதியவன் (வாழ்வில் நல்லவைகளே அதிகம் செய்தவன்) நம்பிக்கையோடு காத்திருப்பான்.....////

    இரயிலை வைத்துச் சின்ன வயதில் எற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவங்கள் எனக்கும் உண்டு ஆலாசியம். நன்றி!

    ReplyDelete
  6. ////iyer said...
    எப்போதுமே நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள மனம் தயங்கும் .
    அது போல தான் மரணம் என்பதும் கூட .
    dependency இருப்பவர்கள் தான் மரணத்தை பற்றி பயப்படுவார்கள்.. கொஞ்சம் தெளிவானவர்கள் மரணத்தை தள்ளிப் போடுவார்கள் அல்லது அப்படி தள்ளிப் போட நினைப்பார்கள் . .
    உங்கள் மாணவர் விசுவைப் போன்று எந்த dependencyயும் இல்லாதவர் காத்துக் கொண்டிருப்பதில்லை . . ஆனால் கதவை தட்டியதும் பயமின்றி திறக்க தயாராக இருக்கிறார் ..
    ஆனாலும் இந்த படத்தை போட்டு இருக்க வேண்டாமே . .
    படத்தில் இறந்து இருப்பவர் வெடி குண்டு விபத்தில் இறந்தவர் தானே. .
    இந்த குடும்பத்தின் மூத்த தலைமுறை தான் கடவுள் இல்லாக் கொள்கையை முதன் முதலில் இந்திய மண்ணில் பரப்பியது . .
    இன்னமும் பயந்து வாழும் இந்த குடும்பம் இந்திய பொருளாதாரத்திலும் குழுப்பங்களை விளைவித்து வருகிறது . .
    பாட்டை கூட மாத்திலையே வாத்தியாரய்யா . . (ஆடி அடங்கும் வாழ்க்கையடா . . ஆறடி நிலைமே சொந்தமடா . என்ற பாடல் இருக்கும் என எதிர்பார்த்தேன்)////////

    உங்கள் கோரிக்கைகள் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன நண்பரே! பதிவை மீண்டும் பார்க்க வேண்டுகிறேன்! நன்றி!

    ReplyDelete
  7. //////Thanjavooraan said...
    மிக உன்னதமான தத்துவக் கருத்து. இதனை கவிஞர் கண்ணதாசன் மிக அருமையாக எழுதியிருப்பதைப் பாராட்ட வேண்டும். வாழ்க்கைத் தத்துவத்தை உணரமுடிந்தால் உலகத்தில் பூசல், போட்டி, பொறாமை இவ்வளவையும் அகற்றிவிடமுடியும். ஆனால் இதை உணராததால்தான் இத்தனைத் துன்பங்களும் நமக்கு. ஒருவன் காலையில் அலுவலகம் போகிறான். மதியம் உணவு இடைவேளையில் கொண்டு வந்த சோற்றுமூட்டையைக் காலி செய்கிறான். நண்பர்களுடன் அரட்டை, மாலை ஐந்து ஆனதும் மீண்டும் வீடுநோக்கிப் பயணம். ஆகா, இதனை தினம்தினம் இவன் செய்துவந்தாலும் அலுப்பதில்லை. மாலை ஐந்து மணிக்குக் காத்திருக்கிறான். வாழ்க்கையும் அதுபோலத்தானே! காலையென்று ஒன்றிருந்தால் மாலை என்று ஒன்று வந்துதானே தீரும். இதைப் புரிந்து கொள்ளாமல் கோடி மேலே கோடிசேர்க்கவும், பிறரை வருத்தி செல்வம் சேர்க்கவும் முனைகிறான். மிருகங்களும், பறவைகளும் பகுத்தறிவு இல்லாத காரணத்தால் அவ்வப்போது கிடைப்பதை உண்கின்றன. அடுத்த வேளையைப் பற்றிக் கவலைப்படுபவன் மனிதன் ஒருவன் மட்டும்தான். பாரதியின் வாக்குப்படி "உலகெலாம் ஓர் பெருங்கனவு, அஃதுளே உண்டு, உறங்கி, இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும்" என்பதை உணர்ந்தால் பின்னர் வருத்தம் ஏது? 'தூங்குவது போலும் சாக்காடு'.ஒரு பிறவியில் துன்பப்பட்டால் அதன் காரணம் என்ன என்பதை உணர்தல் வேனண்டும். முற்பிறவியில் அவன் செய்த பாவங்களே துன்பத்திற்குக் காரணம் என்ற அறிவு வந்துவிட்டால், இப்பிறவியில் நன்மைகளே மட்டும் செய்வான். இந்த சக்தியை கடவுள் மனிதனுக்குக் கொடுக்கவில்லை. அதன்பயன் பாவமூட்டைகளை அளவின்றி செய்துவருகிறான். என்ன செய்யும் இந்த பாவம் என்ற உணர்வில்.//////

    பற்றித்தொடரும் பாவமும் புண்ணியமும் என்றார் பட்டினத்தார். தற்கால மனிதனிடம் (பலபேரிடம்) பற்றித் தொடர பாவ மூட்டைகள் மட்டுமே உள்ளன! உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி சார்!

    ReplyDelete
  8. இனிய காலை வணக்கம்....

    எட்டாம் இடம் பற்றிய முன்னோட்டம் சிறப்பு நாளை முதல் விருவிருப்பான பாடம் ஆவலுடன் காத்துஇருக்கின்றோம்.....

    நன்றி

    ReplyDelete
  9. Well and clean way of approching the subject with clear exambles. Perfect timing and methods to regulate the class on a important lesson. I hope u will provide good examples with some personallity horoscope.

    ReplyDelete
  10. "சாவே உனக்கு ஒருநாள் சாவு வந்து சேராதோ?
    சஞ்ச‌லமே உன்னை ஒரு நாள் சஞ்சலத்தில் ஆழ்த்தேனோ?
    நோவே உனக்கொரு நாள் நோவு வந்து சேராதோ?
    தீயே உனக்கு ஒரு நாள் தீ மூட்டிப் பாரேனோ?"

    பண்டித ஜவ‌ஹர்லால் நேரு மறைந்தபோது கவியரசர் கண்ணதாசன் எழுதிப் படித்த இரங்கற்பா!

    ReplyDelete
  11. /////Alasiam G said...
    பாட்டும், படமும் அதன் பாவமும், பாவப் புண்ணிய
    கதைக் கூறுகின்றன........
    இடியும்-மின்னலுமாய், அரவமும்-விசமுமாய்,
    தீயோரும்-கொடுமையுமாய், வெட்டவெளி - அதிலே
    ஆங்காங்கே பட்ட மரம், கொட்டும் பனி..
    கோபத்தையும், குரோதத்தையும்,
    தாங்கிய; அன்பையும், அருளையும்
    பொழிந்த; பூமிக்குள் புழு அறிக்கும்
    உடல்களைப் பேதமின்றி பதம் செய்கின்றன!
    உறவினர் கொண்ட அன்பின் உயரத்தை....
    ஓங்கி நிற்கும் சமாதிகளின் உயரம் காட்டுகின்றன!
    ஆடி அடங்கும் வாழ்க்கைக்கு
    இந்த ஆறடி நிலம் போதும் என்பதை யாரிவர்?
    அறிந்த, அவர் தம் அற்புத வாழ்வை இந்த ஊரறியும்! ////

    இரண்டுமுறை பின்னூட்டங்களா? நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. /////astroadhi said...
    இனிய காலை வணக்கம்....
    எட்டாம் இடம் பற்றிய முன்னோட்டம் சிறப்பு நாளை முதல் விருவிருப்பான பாடம் ஆவலுடன் காத்துஇருக்கின்றோம்.....
    நன்றி//////

    நல்லது. உங்களின் ஆர்வத்திற்குப் பாரட்டுக்கள் ஆதிராஜ்!

    ReplyDelete
  13. //////Ram said...
    Well and clean way of approching the subject with clear exambles. Perfect timing and methods to regulate the class on a important lesson. I hope u will provide good examples with some personallity horoscope.//////

    எனக்குப் பிடித்த வீடு எட்டாம் வீடு. அதனால் தொடர் கட்டுரை சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். அனைவரையும் பொறுமையாகப் படித்துப்பயன்பெற வேண்டுகிறேன்.

    ReplyDelete
  14. /////kmr.krishnan said...
    "சாவே உனக்கு ஒருநாள் சாவு வந்து சேராதோ?
    சஞ்ச‌லமே உன்னை ஒரு நாள் சஞ்சலத்தில் ஆழ்த்தேனோ?
    நோவே உனக்கொரு நாள் நோவு வந்து சேராதோ?
    தீயே உனக்கு ஒரு நாள் தீ மூட்டிப் பாரேனோ?"
    பண்டித ஜவ‌ஹர்லால் நேரு மறைந்தபோது கவியரசர் கண்ணதாசன் எழுதிப் படித்த இரங்கற்பா!///////

    ஆமாம். நானும் படித்திருக்கிறேன். நினைவிற்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. Dear sir,

    this question is related to previous chapters,today i just seen the status of various plant again in my horoscope, i surprised to see that 4 planets 1. Guru in 7th house (Mithunam) 2. Mercurry in Lagnam, 3.Mars in Kadagam, 4. Satruan in Simmam are in Retrogression or Vakkiram. Is it will affect the life badly, like osama (u have mentioned he had 4 planets are in vakkiram.

    ReplyDelete
  16. 8ம் இடம் எனக்கும் பிடித்த வீடுதான். நமக்கு பிடித்ததற்கான காரணம் வேறு வேறாக இருக்கலாம். (எனக்குப் பிடித்த காரணத்தை 8ம் வீட்டிற்கான பாடம் வந்த பிறகு சொல்கிறேன்.) மரணத்தில் பசி, தூக்கம், கவலை, வலி இன்னும் பலவற்றிலிருந்து விடுதலை. சுருக்கமாக சொன்னால் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். எல்லோரும் இதை உணர்ந்து விட்டால் மாயவனாரின் காக்கும் தொழிலுக்கு அர்த்தமில்லாமல் போய் ஜனனத்திற்கு பிறகு வெறும் மரணம் என்று ஆகி எப்போதும் இருக்கும் சகஜ நிலை கெட்டு விடும். அதனால்தானோ என்னவோ இறைவன் எல்லா உயிர்க்கும் மரண பயம் என்ற ஒன்றை உருவாக்கியே படைத்திருக்கிறார். வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற மாயைக்குள் அனைவரையும் ஆழ்த்துவதால் (என்னையும் சேர்த்துதான்) மாயவன் என்ற பெயர் வந்ததோ என்னவோ.

    ReplyDelete
  17. Vanakam Sir,
    yes!!!!!! most expected lesson about 8th house is to be taught.

    Doubt:
    Does 4th lord in 12th house or
    9th lord in 12th house or
    lagna lord in 12th house indicates foreign travel/residence ? tell me some astrological hints about foreign travel/residency sir.

    ReplyDelete
  18. அன்புள்ள ஐயா, பலமுறையும் தவிர்த்து வந்த 8ம் இட பாடத்தை அனைவரையும் போல மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதில் பஞ்சாங்கத்தில் காலச்சக்கரம் என்ற விசயத்தை பார்த்தும் ஆயுள் சொல்கிறார்களே அதைப்பற்றியும் சற்று விளக்குங்கள்.மேலும் 8ம் பாடத்திற்கு தங்களுடைய மாணவர்களை கடந்த 2 பதிவுகளில் தயார் படுத்தி வருவது மிகவும் அருமை. நன்றி

    ReplyDelete
  19. விறு விறு நடை-அதில்
    மயங்குது மாணவர் படை.

    கண்ணதாசன் பாதி
    சுஜாதா மீதி
    கலந்து செய்த வாத்தியார்தான்....

    அன்புடன்
    செங்கோவி

    ReplyDelete
  20. :)
    வர-ம் = வருவது எதுவோ வரம்!

    எதிர் காலத்தை "வருங்"காலம்-ன்னும் சொல்லுறோம்!
    * ஆக வருங்காலமும் வரம் தான்!
    * வருங்கால முடிவினில் வரும் மரணமும் வரம் தான்!
    சரி தானே வாத்தியார் ஐயா? :)

    சனி பகவான் வரப் பிரசாதி-ன்னு அடுத்த பதிவில் சொல்லப் போறீயளா? :)

    சரி...
    விரும்பும் போது மரணம் என்று வரம் வாங்கி வைத்து இருந்தாரே பீஷ்மர்! அது வரமா? சாபமா??

    ReplyDelete
  21. ///////ananth said...
    8ம் இடம் எனக்கும் பிடித்த வீடுதான். நமக்கு பிடித்ததற்கான காரணம் வேறு வேறாக இருக்கலாம். (எனக்குப் பிடித்த காரணத்தை 8ம் வீட்டிற்கான பாடம் வந்த பிறகு சொல்கிறேன்.) மரணத்தில் பசி, தூக்கம், கவலை, வலி இன்னும் பலவற்றிலிருந்து விடுதலை. சுருக்கமாக சொன்னால் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். எல்லோரும் இதை உணர்ந்து விட்டால் மாயவனாரின் காக்கும் தொழிலுக்கு அர்த்தமில்லாமல் போய் ஜனனத்திற்கு பிறகு வெறும் மரணம் என்று ஆகி எப்போதும் இருக்கும் சகஜ நிலை கெட்டு விடும். அதனால்தானோ என்னவோ இறைவன் எல்லா உயிர்க்கும் மரண பயம் என்ற ஒன்றை உருவாக்கியே படைத்திருக்கிறார். வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற மாயைக்குள் அனைவரையும் ஆழ்த்துவதால் (என்னையும் சேர்த்துதான்) மாயவன் என்ற பெயர் வந்ததோ என்னவோ.//////

    வாழ்க்கை மாயையானது (illusion) அதைக் கட்டுக்குள் வைத்திருந்து அத்தனை மனிதர்களையும் ஆட்டிப் படைக்கும் இறைவனுக்கு மாயவன் என்னும் பெயர் சரியானதே! நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  22. //////Ram said...
    Dear sir,
    this question is related to previous chapters,today i just seen the status of various plant again in my horoscope, i surprised to see that 4 planets 1. Guru in 7th house (Mithunam) 2. Mercurry in Lagnam, 3.Mars in Kadagam, 4. Satruan in Simmam are in Retrogression or Vakkiram. Is it will affect the life badly, like osama (u have mentioned he had 4 planets are in vakkiram./////

    வக்கிரம் பெற்ற ஒரு விதியை மட்டும் வைத்துப் பார்க்கக்கூடாது. ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் பார்க்க வேண்டும். தனிப்பட்ட ஜாதகங்களை அலசிப் பலன் சொல்ல தற்போது நேரமில்லை.

    ReplyDelete
  23. //////Nareshkumar said...
    Vanakam Sir,
    yes!!!!!! most expected lesson about 8th house is to be taught.
    Doubt:
    Does 4th lord in 12th house or
    9th lord in 12th house or
    lagna lord in 12th house indicates foreign travel/residence ? tell me some astrological hints about foreign travel/residency sir.//////

    ஒன்பதாம் அதிபதி 12ல் அமர்ந்தால் வைத்தியத்திற்காக மட்டும் வெளிநாடு செல்லும் அமைப்பு என்று சொல்வார்கள். அந்த ஒரு விதியை மட்டும் வைத்துப் பார்க்கக்கூடாது. ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் பார்க்க வேண்டும். தனிப்பட்ட ஜாதகங்களை அலசிப் பலன் சொல்ல தற்போது நேரமில்லை.

    ReplyDelete
  24. /////கூடுதுறை said...
    அன்புள்ள ஐயா, பலமுறையும் தவிர்த்து வந்த 8ம் இட பாடத்தை அனைவரையும் போல மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதில் பஞ்சாங்கத்தில் காலச்சக்கரம் என்ற விசயத்தை பார்த்தும் ஆயுள் சொல்கிறார்களே அதைப்பற்றியும் சற்று விளக்குங்கள்.மேலும் 8ம் பாடத்திற்கு தங்களுடைய மாணவர்களை கடந்த 2 பதிவுகளில் தயார் படுத்தி வருவது மிகவும் அருமை. நன்றி///////

    திரைப்படங்களில் பின்னணி இசை மூலம் படம் பார்ப்பவர்களை வரவிருக்கும் காட்சிக்குத் தயார் படுத்துவார்களே - அதுபோலத்தான் இதுவும் கூடுதுறை! உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  25. ///////SHEN said...
    விறு விறு நடை-அதில்
    மயங்குது மாணவர் படை.
    கண்ணதாசன் பாதி
    சுஜாதா மீதி
    கலந்து செய்த வாத்தியார்தான்....
    அன்புடன்
    செங்கோவி//////

    அவர்களின் நூல்களை எல்லாம் விரும்பிப் படித்ததால், அந்த பாதிப்பு இருக்கலாம். நன்றி!

    ReplyDelete
  26. ///////kannabiran, RAVI SHANKAR (KRS) said... :)
    வர-ம் = வருவது எதுவோ வரம்!
    எதிர் காலத்தை "வருங்"காலம்-ன்னும் சொல்லுறோம்!
    * ஆக வருங்காலமும் வரம் தான்!
    * வருங்கால முடிவினில் வரும் மரணமும் வரம் தான்!
    சரி தானே வாத்தியார் ஐயா? :)////

    நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் கே.ஆர்.எஸ்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    சனி பகவான் வரப் பிரசாதி-ன்னு அடுத்த பதிவில் சொல்லப் போறீயளா? :)
    சரி...
    விரும்பும் போது மரணம் என்று வரம் வாங்கி வைத்து இருந்தாரே பீஷ்மர்! அது வரமா? சாபமா??///////

    சாபத்தை யாரும் வாங்கி வைப்பார்களா? ஆகவே அது வரம்தான்! அத்துடன் பாரத்தின் தவப்புதல்வர் அவர். அவர் வாங்கி வைத்திருந்தது வரம்தான்! இதிகாசங்களையும், புரானங்களையும் அதிகம் படித்தவர் நீங்கள்தான்! உங்களுக்குத் தெரியாதா என்ன?

    ReplyDelete
  27. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    எட்டாம் வீடு பற்றிய பாடத்தில் அவரவர்களின் கடைசி மூச்சு எந்த விதத்தில் நடை பெறப் போகிறது என்பதை அறிந்துக் கொள்வதற்கும்,அந்தக் கடைசி மூச்சு வலி இல்லாமல்,உரிய நேரத்தில்,நடைப் பெற்று உயிர் பிரியும் அந்த உன்னதமான வரத்தினைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கும்
    தங்களின் மூலமாக நல்ல வாய்ப்புக் கிடைத்தமைக்கு மிக்க நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-01

    ReplyDelete
  28. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    எட்டாம் வீடு பற்றிய பாடத்தில் அவரவர்களின் கடைசி மூச்சு எந்த விதத்தில் நடை பெறப் போகிறது என்பதை அறிந்துக் கொள்வதற்கும்,அந்தக் கடைசி மூச்சு வலி இல்லாமல்,உரிய நேரத்தில்,நடைப் பெற்று உயிர் பிரியும் அந்த உன்னதமான வரத்தினைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கும்
    தங்களின் மூலமாக நல்ல வாய்ப்புக் கிடைத்தமைக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி //////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி

    ReplyDelete
  29. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பின்னூட்டம் அளித்த முப்பது நிமிடங்களுக்குள் அதற்கான அங்கீகாரம் அளித்துள்ளீர்கள்.அதுவும் அதி காலை 2.52 --க்கு.எப்போதுதான் ஓய்வு எடுப்பீர்கள்.அய்யா உடல் நலனிலும் அக்கறைக்காட்டுங்கள்.
    மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-02

    ReplyDelete
  30. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பின்னூட்டம் அளித்த முப்பது நிமிடங்களுக்குள் அதற்கான அங்கீகாரம் அளித்துள்ளீர்கள்.அதுவும் அதி காலை 2.52 --க்கு.எப்போதுதான் ஓய்வு எடுப்பீர்கள்.அய்யா உடல் நலனிலும் அக்கறைக்காட்டுங்கள்.
    மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    மதியம் 1.30 - 3.30 நன்றாகத் தூங்கிவிடுவேன். அதனால் நடுநிசி விழிப்புக்கள் பாதிப்பதில்லை. நாள் ஒன்றிற்கு 6 மணி நேரத்தூக்கம் போதாதா? உங்கள் அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com