--------------------------------------------------------------------------------
எப்போது மூத்தவள் வழிபார்த்துப் போவாள்?
புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 9
Òகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!
------------------------------------------------------------------------
பாடியவர் : டி எம் சௌந்தரராஜன்
ஆக்கம்: எம்.பி. சிவம்
இராகம்: மஹேஸ்வரி
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்த நேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து
அந்த நேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள்
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடடா
தினம்தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடடா
தீர்ந்திடும் அச்சம் எல்லாம் தெய்வம் துணை காக்குமடா
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
-------------------------------
அருஞ்சொற்பொருள்;
குந்தகங்கள் - ஒரு ஒழுங்கில் இருப்பதைக் குலைத்துவிடக்கூடிய கேடு; கெடுதல்!
மூத்தவள் - மூத்தவள் மூதேவி (இளையவள் ஸ்ரீதேவி)
மணம் மிகுந்த சாம்பல் - திருநீறு
-------------------------------
மேலதிகத்தகவல்
பகவான் கிருஷ்ணரிடம், ஸ்ரீதேவியும், அவள் சகோதரி மூதேவியும் சென்று கேட்டார்கள்
“கிருஷ்ணா, எங்கள் இருவரில் யார் அழகு?”
புன்னகைத்த பகவான் சொன்னார், “இருவருமே அழகு!”
விடவில்லை. தொடர்ந்து கேட்டார்கள்
“நீங்கள் ஒருவரை மட்டும்தான் குறிப்பிடவேண்டும். இருவரில் யார் அதிகமான அழகு?”
பகவான் அற்புதமாகப் பதில் சொன்னார்:
”ஸ்ரீதேவி, நீ வரும்போது அழகு: மூதேவி நீ போகும்போது அழகு!”
--------------------------------------------------------------------------------------------
இதைவைத்துக் கவியரசர் கண்ணதாசன் ஒரு குட்டிக்கதை சொல்வார். உங்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்
ஒரு செல்வந்தர் இருந்தார். ஊருக்கு வெளியில் - அதாவது நுழைவாயிலில் ஒரு கோடி ரூபாய் செலவில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினார். வெள்ளிக்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமம், புதுமனை புகுவிழா, காலைச் சிற்றுண்டி, மதிய விருந்து என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
அதற்கு முந்தைய வியாழக்கிழமையும் முகூர்த்த நாள்தான். அன்று அதிகாலை, பிரம்ம முகூர்த்தத்தில் தன் புதுவீட்டில் மங்கலகரமான சொல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக, தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணை (அவள் பெயர் ஸ்ரீதேவி) புதன்கிழமை இரவு அங்கே போய்த் தங்கியிருக்கச் சொல்லிவிட்டார்.
குறிப்பிட்ட அந்த நேரத்தில், அவர் தன் நண்பருடன், அங்கே சென்று கதவைத் தட்டி உள்ளே யார்? என்று கேட்க, வேலைக்காரப் பெண், அய்யா, நான்தான் (உங்கள்) ஸ்ரீதேவி என்று மங்கலகரமாகச் சொல்வாள் என்று எதிர்பார்த்தார்.
விதி யாரை விட்டது?
அவளுக்கு இந்த விவரம் முழுமையகத் தெரியாது. செல்வந்தர், அந்த வீட்டில் தன்னைக் காவலுக்காகப் படுத்துக்கொள்ளச் சொல்கிறார் என்று நினைத்து விட்டாள்.
அவள் பச்சைப் பிள்ளைக்காரி. அதாவது கைப்பிள்ளைக்காரி. குழந்தையை வீட்டில் தன் மூத்த சகோதரியிடம் விட்டு விட்டுவந்துதான் செல்வந்தர் வீட்டில் அவள் வேலை செய்வது வழக்கம். அன்றும் அப்படித்தான்
செய்திருந்தாள்..
அன்று இரவு அவளைக் காணாமல், குழந்தை விடாது அழுது கூக்குரல் கொடுக்க, சகோதரி, அவளைத் தேடிவந்துவிட்டாள். வந்ததோடு மட்டு மல்லாமல், “நம் வீட்டிற்குப் போய் குழந்தையை நீ பார்த்துக்கொள். புதுவீட்டிற்குக் காவலாக நான் படுத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லித் தங்கையை அனுப்பியும் வைத்துவிட்டாள்
-----------------------------------------
பொழுது புலர்ந்தது. தன் நண்பருடன் அங்கே ஆர்வமுடன் வந்த செல்வந்தர், கதவைத் தட்டியதோடு, அதே வேகத்தில் கேட்டார்:
”வீட்டிற்குள்ளே யார்?”
சட்டென்று பதில் வந்தது.
“அய்யா, நான் தான் லெட்சுமியின் அக்கா!”
-----------------------------------------------------------------------------------------------
எப்படி இருக்கிறது கவியரசரின் கதை?
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
26.6.10
எப்போது மூத்தவள் வழிபார்த்துப் போவாள்?
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல ஸ்வாரஸ்யமான பதிவு. லக்ஷ்மியும் அக்கா தேவியும் நாரதரிடம் அழகுப் பிரச்சனையைக் கொண்டு சென்றதாகவும்,அவர் அவர்களை நடக்கச் சொல்லி மதிப்பெண் போட்டதாகவும், இருவருடைய கோபத்திற்கும் ஆளாகாமல் இருக்க சாமர்த்தியமாக ('முன்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை, பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை' என்று சாட்சி சொன்ன கதை போல்)லக்ஷ்மி முன்னழகு, அதாவது வரும் போது அழகு, அக்காதேவி பின்னழகு, அதாவது போகும்போது அழகு" என்று தீர்ப்பு சொல்லி தப்பித்துக்கொண்டாரம்
ReplyDeleteநாரதர்.ஆக, முதல் முதலாக 'கேட் வாக்' நடக்கச் சொல்லி அழகுப்போட்டி நடத்தியவர் நாரதர்! எல்லாம் நகைச்சுவை.நம் மதத்தில் மட்டும் தான் தேவ தேவியரைக் கூட தமாஷ் பண்ண சர்வ சுதந்திரம்.பிற மதங்களில் இப்படி ஏதாவது செய்தால் தலையில் சுடப்படுவோம்.மதுரை ஆதீனம் அவர்கள் சகோதர மதத்தை தோற்றுவித்தவரை 'தெய்வமாகப் போற்றுகிறேன்' என்று
பேசிவிட்டார்.அப்படி பேசியது தவறு என்று ஆதீனத்தை மன்னிப்புக் கேட்கச்சொன்னார்கள்.அவரும் மன்னிப்புக் கேட்டார்.உயர்த்திச் சொல்லியதற்கே மன்னிப்பு!வேறு வகையாகப் பேசிவிட்டால் கேட்கவே வேண்டாம். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஇறைவனின் புகழைப் பாடும்,புகழ் பெற்ற பாடல்களில்
"கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்",
என்ற இந்தப் பாடல் என்றென்றும் மனதில் நிலைத்து நின்று விட்ட அருமையான பாடலாகும்.
அதர்க் கேற்ப கதையும் மிக நன்றாக உள்ளது.
நினைவூட்டிய தங்களுக்கு மிக்க
நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-06-26
அய்யா,
ReplyDeleteதிருநீரு என்பதை திருநீறு என்றும் திருனீரணிந்தால் என்பதைத் திருநீறணிந்தால் என்றும் மாற்றி விடுங்கள்.
”ஸ்ரீதேவி, நீ வரும்போது அழகு: மூதேவி நீ போகும்போது அழகு!”-இந்த மாதிரி கதைகள் நிஜமாகவே ஏதாவது புராணங்களில் சொல்லப் பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. இங்கேயே இதை நாரதர் சொன்னதாகவும் [கருத்து சொன்னவர்], கிருஷ்ணர் [கட்டுரையாளர்] சொன்னதாகவும் இரண்டு முரணான முறையில் கருத்துக்கள் பதிவாகி உள்ளன. அனால் ஒன்று, தூக்கம் என்ற ஒன்று ஏதோ அபசகுனமானது, கேட்டது என்பது போல முன் நிறுத்துவது ஏற்கத் தக்கது அல்ல. ஒரு மனிதன் கட்டாயம் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்று அறிவியல் சொல்கிறது. தூக்கத்தில் அறிவியலால் விளக்க முடியாத அற்புதங்கள் நிகழ்கின்றன. இதை தூங்கி எழுந்தவுடன் கிடைக்கும் புத்துணர்ச்சியில் இருந்து அறிந்து கொள்ளலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சி பெறுகிறது. தூங்கும் போது உடல் வலியுடன் தூங்கினாலும் எழும் போது அது நிவாரணம் அடைந்து விடுகிறது. பகலில் மதியம் ஒரு பத்து நிமிடம் குட்டித் தூக்கம் போட்டால் செயல் திறன் அதிகரிக்கும் என்று கண்டறியப் பட்டுள்ளது.தூக்கம் என்ற ஒன்று மட்டும் இல்லை எனில் மனிதன் வாழ்க்கை ஒரு வாரத்திலேயே சலித்துப் போய் விடும். தூக்கம் பற்றிய அருமையை அறிய வேண்டுமானால் தூக்கமின்மை நோயினால் அவதியுருபவர்களிடம் கேட்டுப் பாருங்க. அதிக தூக்கம் சோம்பேறித் தனத்தை வரவழைக்கும், அதிகமாக ஏன் தூங்க வேண்டும்? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடமாகும் என்பது பழமொழி அன்றோ!
ReplyDelete/////kmr.krishnan said...
ReplyDeleteநல்ல ஸ்வாரஸ்யமான பதிவு. லக்ஷ்மியும் அக்கா தேவியும் நாரதரிடம் அழகுப் பிரச்சனையைக் கொண்டு சென்றதாகவும்,அவர் அவர்களை நடக்கச் சொல்லி மதிப்பெண் போட்டதாகவும், இருவருடைய கோபத்திற்கும் ஆளாகாமல் இருக்க சாமர்த்தியமாக ('முன்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை, பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை' என்று சாட்சி சொன்ன கதை போல்)லக்ஷ்மி முன்னழகு, அதாவது வரும் போது அழகு, அக்காதேவி பின்னழகு, அதாவது போகும்போது அழகு" என்று தீர்ப்பு சொல்லி தப்பித்துக்கொண்டாரம்
நாரதர்.ஆக, முதல் முதலாக 'கேட் வாக்' நடக்கச் சொல்லி அழகுப்போட்டி நடத்தியவர் நாரதர்! எல்லாம் நகைச்சுவை.நம் மதத்தில் மட்டும் தான் தேவ தேவியரைக் கூட தமாஷ் பண்ண சர்வ சுதந்திரம்.பிற மதங்களில் இப்படி ஏதாவது செய்தால் தலையில் சுடப்படுவோம்.மதுரை ஆதீனம் அவர்கள் சகோதர மதத்தை தோற்றுவித்தவரை 'தெய்வமாகப் போற்றுகிறேன்' என்று
பேசிவிட்டார்.அப்படி பேசியது தவறு என்று ஆதீனத்தை மன்னிப்புக் கேட்கச்சொன்னார்கள்.அவரும் மன்னிப்புக் கேட்டார்.உயர்த்திச் சொல்லியதற்கே மன்னிப்பு!வேறு வகையாகப் பேசிவிட்டால் கேட்கவே வேண்டாம். எல்லாப் புகழும் இறைவனுக்கே!//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
//////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
இறைவனின் புகழைப் பாடும்,புகழ் பெற்ற பாடல்களில்
"கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்",
என்ற இந்தப் பாடல் என்றென்றும் மனதில் நிலைத்து நின்று விட்ட அருமையான பாடலாகும்.
அதற்கேற்ப கதையும் மிக நன்றாக உள்ளது.
நினைவூட்டிய தங்களுக்கு மிக்க
நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!
///////பிரகாசம் said...
ReplyDeleteஅய்யா,
திருநீரு என்பதை திருநீறு என்றும் திருனீரணிந்தால் என்பதைத் திருநீறணிந்தால் என்றும் மாற்றி விடுங்கள்.//////
எழுத்துப்பிழையைச் சுற்றிக் காண்பித்தமைக்கு நன்றி! பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்!
///////Jayadeva said...
ReplyDelete”ஸ்ரீதேவி, நீ வரும்போது அழகு: மூதேவி நீ போகும்போது அழகு!”-இந்த மாதிரி கதைகள் நிஜமாகவே ஏதாவது புராணங்களில் சொல்லப் பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. இங்கேயே இதை நாரதர் சொன்னதாகவும் [கருத்து சொன்னவர்], கிருஷ்ணர் [கட்டுரையாளர்] சொன்னதாகவும் இரண்டு முரணான முறையில் கருத்துக்கள் பதிவாகி உள்ளன. அனால் ஒன்று, தூக்கம் என்ற ஒன்று ஏதோ அபசகுனமானது, கேட்டது என்பது போல முன் நிறுத்துவது ஏற்கத் தக்கது அல்ல. ஒரு மனிதன் கட்டாயம் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்று அறிவியல் சொல்கிறது. தூக்கத்தில் அறிவியலால் விளக்க முடியாத அற்புதங்கள் நிகழ்கின்றன. இதை தூங்கி எழுந்தவுடன் கிடைக்கும் புத்துணர்ச்சியில் இருந்து அறிந்து கொள்ளலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சி பெறுகிறது. தூங்கும் போது உடல் வலியுடன் தூங்கினாலும் எழும் போது அது நிவாரணம் அடைந்து விடுகிறது. பகலில் மதியம் ஒரு பத்து நிமிடம் குட்டித் தூக்கம் போட்டால் செயல் திறன் அதிகரிக்கும் என்று கண்டறியப் பட்டுள்ளது.தூக்கம் என்ற ஒன்று மட்டும் இல்லை எனில் மனிதன் வாழ்க்கை ஒரு வாரத்திலேயே சலித்துப் போய் விடும். தூக்கம் பற்றிய அருமையை அறிய வேண்டுமானால் தூக்கமின்மை நோயினால் அவதியுருபவர்களிடம் கேட்டுப் பாருங்க. அதிக தூக்கம் சோம்பேறித் தனத்தை வரவழைக்கும், அதிகமாக ஏன் தூங்க வேண்டும்? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடமாகும் என்பது பழமொழி அன்றோ!/////
புராணங்களை மேடைகளில் கேட்ட நினைவில் எழுதுகிறோம். சிலவற்றைப் படித்த நினைவில் எழுதுகிறோம்.
கருத்து முரண்படாது. சொன்னவர்களின் பெயர் வேறுபடலாம். இதுபோன்ற சமயங்களில் கருத்தைமட்டும் எடுத்துக்கொள்வோம் நண்பரே!
ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.
ReplyDeleteநாரதர்,கிருஷ்ணர்,அல்லது கண்ணதாசர் என்று யார் சொல்லி இருந்தாலும்
முடிவான கருத்து ஒன்றுதானே.மூத்தவளை (அதாவது) சோம்பலை வீட்டில்
இருந்து விரட்டி அடித்தால் இளையவள் (அதாவது)செல்வம் வீட்டில் தானே
வந்து சேரும்.நல்ல கதை,நல்ல கருத்து அய்யா.
அரசு.
////ARASU said...
ReplyDeleteஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.
நாரதர்,கிருஷ்ணர்,அல்லது கண்ணதாசர் என்று யார் சொல்லி இருந்தாலும்
முடிவான கருத்து ஒன்றுதானே.மூத்தவளை (அதாவது) சோம்பலை வீட்டில்
இருந்து விரட்டி அடித்தால் இளையவள் (அதாவது)செல்வம் வீட்டில் தானே
வந்து சேரும்.நல்ல கதை,நல்ல கருத்து அய்யா.
அரசு. /////
நல்லது. நன்றி நண்பரே!