+++++++++++++++++++++++++++++++++++++++++
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!
பகுதி ஒன்று!
ஒரு பழைய சம்பவம். வருடம் 1985ஆம் ஆண்டில் மே மாதம்.
புதிதாக ஒரு பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரை, அச்சமயம் கோவையில் அக்கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்த பிரவீன் ஆட்டோமோபைல்ஸ்’ நிறுவனத்தில் முழுப் பணத்தையும் செலுத்தி, (அப்போது அதன் விலை ரூ.11,000) விலைக்கு வாங்கினேன்.
அந்த மாடல் வண்டிக்கு, கிராக்கி அதிகம் இருந்ததால், காத்திருக்க விருப்பமின்றி, நண்பர் ஒருவர் உதவியுடன் முழுப்பணத்தையும், அதற்குச் சமமான அமெரிக்க டாலரில் செலுத்தி ஒரே வாரத்தில் வாங்கினேன்.
வாங்கியது முக்கியமில்லை. அதற்குப் பிறகு நடந்ததுதான் முக்கியம்.
ஆர்.டி.ஓ அலுவலகத்தில், அந்த இரு சக்கர வாகனத்திற்கான காகிதங்களை எல்லாம் சமர்ப்பித்து, பதிவு எண்ணிற்கு (Registration Number) விண்ணப்பித்திருந்தேன்.
அதுசமயம், ஒரு இடைத்தரகர் என்னிடம் வந்து, சார் ஒரு ஐநூறு ரூபாய் செலவழிக்க நீங்கள் தயார் என்றால், உங்களுக்கு நீங்கள் கேட்கும், பதிவு எண்ணை (fancy number) வாங்கித் தருவதாகச் சொன்னார்.
"கொடுக்காவிட்டால் என்ன ஆகும்?" என்று கேட்டேன்.
"கூட்டல் எண் எட்டாம் எண் வரும்படியாகப் போட்டுவிடுவார்கள்" என்று பயமுறுத்தும்படியாகச் சொன்னார்.
எட்டாம் எண், சனியினுடைய எண். சனி எனக்கு ராசிநாதன். போட்டால் போடட்டும். அதைப் போட்டுக்கொடுங்கள் என்று கேட்டால், அதற்கும் பணம் பறிப்பார்கள் என்று நினைத்தவன், ஒன்றும் சொல்லாமல், "பணம் எல்லாம் அனாவசியமாகத் தரமுடியாது. எந்த எண் வந்தாலும் எனக்குக் கவலையில்லை" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
நான் நினைத்தபடியே நடந்தது. எட்டாம் எண்ணையே போட்டுவிட்டார்கள். நானும் மகிச்சியோடு ஆர்.சி புத்தகத்தை வாங்கிக்கொண்டுவந்துவிட்டேன்.
அந்த எண்ணால் எனக்கு ஒரு பிரச்சினையும் ஏற்பட்டதில்லை!
நம் ஜாதகம் இருக்கும்போது, எண் நம்மை என்ன செய்துவிடப்போகிறது? என்னும் சிந்தனையும் அதற்குக் காரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரிகமபதநி’ என்று ஏழு ஸ்வரங்களுக்குள் ஒரு ஒலி அலை இருப்பதைப்போல, எண்களுக்கும் ஒரு ஒலி அதிர்வு உண்டு என்பார்கள்.
எட்டாம் எண், சனீஷ்வரனுக்கான எண்!
கறுப்பு நிறம் சனீஷ்வரனுக்கான நிறம்.
சில (இளம்) பெண்கள் கறுப்பு நிறத்தில் உள்ளாடைகள் மற்றும் வெளியாடைகள் அணிவதைப் பார்த்திருக்கிறேன்.நீங்களும் பார்த்திருக்கலாம். தெரிந்த பெண்ணாக இருந்தால், ’அணியாதே அம்மா’ என்று அறிவுரை சொல்வேன். ஜாதகத்தில், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரகளும், லக்கினக்காரர்களும், சனி உச்சமாக இருப்பவர்களும் அணியலாம். மற்றவர்கள் அணியும்போது பாதகமான நிலைமை ஏற்படும்.
சனியைப்பற்றியும், அவருடைய சேஷ்டைகளைப் பற்றியும், உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி நம்பிக்கை இல்லாதவரா நீங்கள்?
அதைப் பரிசோதித்துப் பார்க்க (அதாவது சனியின் பாதிப்பைப் பரிசோதித்துப் பார்க்க) ஒரு வழி இருக்கிறது.
என்ன வழி?
அதை நாளை சொல்கிறேன்!
(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteசுவாரசியமாக சென்றது அதற்குள்
நாளைத் தொடரும் என்று போட்டு விட்டீர்கள்.
நன்றி, இப்படியே அனைத்துக் கிரகங்களின்
தொடர்புடைய நிறங்களின் தொகுப்புத்
தொடரும் என நம்புகிறேன்.
நன்றிகள் குருவே!
அன்புடன்,
ஆலாசியம் கோ.
/////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம், சுவாரசியமாக சென்றது. அதற்குள் நாளை தொடரும் என்று போட்டு விட்டீர்கள்.
நன்றி, இப்படியே அனைத்துக் கிரகங்களின் தொடர்புடைய நிறங்களின் தொகுப்புத் தொடரும் என நம்புகிறேன். நன்றிகள் குருவே!
அன்புடன்,
ஆலாசியம் கோ./////
ஆகா, சுவாரசியமாகச் செல்கிறது என்று எழுதியுள்ளீர்கள் அல்லவா? சுவாரசியம் தொடரும். தெரிந்தவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக வரும். பொறுத்திருந்து படியுங்கள் ஆலாசியம்!
சில தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான சீனில் நாளை தொடரும் என போட்டுவிடுவார்கள்...அதுபோல் முக்கியமான இடத்தில் நாளை தொடரும் என போட்டுள்ளீர்கள்.கட்டுரை அருமை.வாழ்க வளமுடன்.வேலன்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசுவாரசியமாக சென்றது. அதற்குள் நாளை தொடரும் என்று போட்டு விட்டீர்கள்.
ஆனாலும் நீங்கள் போட்டுள்ள கஜோல் படம்....
ஆண்கள் கருப்பு நிறம் அணியலாமா ஐயா....
நான் 26ம் தேதி பிறந்தவன். சனி எனக்கு பாதி நல்லவர். (5,6ம் அதிபதி). இருப்பினும் 8ம் எண்ணையும் சனிக் கிழமைகளையும் தவிர்த்தே வருகிறேன். சனி சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் தவிர்க்க முடியவில்லை. (விதி?) அது, இப்போது எனக்கு சனி திசை நடப்பதுதான்.
ReplyDeleteSP.VR. SUBBIAH has left a new comment on the post "காதலிப்பார் யாருமில்லை!":
ReplyDelete/////kannan said...
வாத்தியார் ஐயா!
வணக்கம்.
”காதலிக்க நேரமுண்டு
காதலிப்பார் யாருமில்லை!
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் (தற்சமயம்) வழியுமுண்டு!”/////
>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<
உடன் வேலைபார்க்கும் ஒரு பெண்ணைப் பிடியுங்கள்.காதல் வசப்படாமலா போய்விடும்?
Post a comment.
Unsubscribe to comments on this post.
Posted by SP.VR. SUBBIAH to வகுப்பறை at Wednesday, February 24, 2010 4:57:00 PM
>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<
***********************************
வாத்தியார் ஐயா!
பொன்! அதி காலைப் பொழுது! வணக்கம்
உண்மையை சொன்னாள் அடுத்தனபர்கள் (கிராக்குகள்) வேண்டாததை மின் வலைக்கு அனுப்புகின்றனர் என்கின்றீர்கள் ஐயா!
எனது அறிவுக்கு எட்டியதை சொல்லுகின்றேன் ஐயா !
சுமார் 3,000 (KM) கிலோ மீட்டர்க்கு கடலின் அந்தபக்கம் இருந்துகொண்டு, அடியவன் கூட பெண்கள் வேலை செய்வது தங்களுக்கு எப்படி ஐயா தெரியும்,
சரி இருக்கட்டும்
தாங்கள் கூறியது 100 % (சதமானம்) உண்மை ஐயா!
பெண்கள், ஒருவர் அல்லது இருவர் அல்ல ஐயா !
குறைந்தபட்சம் பெண்கள் மட்டும் , பிருந்தாவனத்தில் பூத்திருக்கும் மலர்களைப்போல்
பல நாட்டு கட்டழகு கன்னியர் மட்டும் (கல்யாணம் ஆகாதவர்கள் )
(மொத்தம் வேலைபார்க்கும் நபர்கள் குறைந்தபட்சம் 26,000 க்கு மேல், அதில் மகளீர் மட்டும் 60 % மேல்,
கல்யாணம் ஆகாதவர்கள் எல்லாவசதி உடன் (பணம், படிப்பு, அழகு, மொழி etc.....) 25 % வருவார்கள் .
இதனிலையும் மேலாக, தங்களுடைய சீடனின்! அலுவலகம் உள்ள சிறிய (பிரித்தியேக) தனி கட்டமைப்பு உள்ள நகரத்தில், உள்ள மகளீர் மட்டும் 1100 க்கு மேல் தங்கி உள்ள விடுதி உள்ளது ஐயா !
அது எப்படி உண்மை என்று கேக்கிண்றீர்கலாக்கும்
அரசு மருத்துவமனை ஐயா!
தற்பொழுது அனைத்தும் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் ஐயா!
நிற்க!
இருந்தாலும், சிறிய வயது முதல் மனதில் கொண்ட வைராக்கியம்
( லட்சியம் ) என்ன தெரியுமா ?
இந்த பூத உடல்! எனக்கு (அடியவனுக்கு) என்று பிறந்தவள் கூடத்தான் வாழனும் என்று
'எம்தேவி! கோதை நாச்சியார் ஆண்டாள்!!!
'எம்பெருமான் மாயகண்ணனை'! நினைத்து ,
பாசுரம் பாடினாலே அதைப்போல',!
சுற்றம் சூழ உறவினர்கள், உற்றார், நண்பர்கள் மற்றும் நண்பர்கள் அல்லாதவர்களும் கூட வந்து
'அக்னி சாட்சியாக'! 'திரு நாராயணின் திருநாமம்'!
முதல்
பழமுதிர் சோலையில் அமர்திருக்கும் 'எம்மூல குருநாதனின்'!
குடும்பத்தினர் அனைவரும் வந்து மனதார ஆசிர்வதிக்க திருமணம் செய்ய வேண்டும் என்பதே ஐயா!
காத்திருகின்றேன், வாத்தியார் ஐயா! கூறியது போல், எனது ருக்குமணியின்! வருகைக்காக.
மகர ராசிக்காரியாகிய எனக்கு கறுப்புதான் பிடித்த கலர்.ராசியானதும் கூட. சமீபகாலமாக ஏனோ அது தகராறு செய்கிறது. வாட்சில் கூட ப்ளாக் டயல் வேணாம் என்கிறார் என் ரெய்கி குருநாதர்.
ReplyDeletePresent sir.
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
ReplyDeleteஇன்றைய பாடம் அருமை....என் தந்தை மகர ராசி ,கும்ப லக்னம் இதுவரை அவர் பெயரில் 3 இருசக்கர வாகனங்கள் வாங்கினார் அனைத்தும் கூட்டல் எண் 8 தான் ,அவர் பெயரின் கூடுதல் எண் ம் 8 தான் சனி நல்ல அமைப்பில் என் தந்தை ஜாதகத்தில் ...என் சந்தேகம் ச்னி நன்றாக இருப்பவர்களுக்கு இயல் பாக 8 ம் எண் அமையுமா?
நன்றி வணக்கம்
வணக்கம் ஐயா!!! ஆவலோடு காத்து இருக்கிறேன்
ReplyDeleteஇனிய காலை வணக்கம் அய்யா பொதுவாக சனி பகவான் பிடித்தால் கால் அடிக்கடி இடறிவிடும் சனிபகவானின் வாகனமான காகம் கொத்த வரும் துக்க செய்தி அடிக்கடி வரும்.
ReplyDeleteஅன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம்,
ReplyDeleteசனி கிரகத்திர்க்கான எட்டாம் எண் தானாக தேடி வரும்போது குறிப்பிட்ட நேரம், காலம் வரையில்_ அதாவது கோசார முறையில் , அல்லது தசா, புத்தி,அந்தரம் நன்மையாக நடக்கக்கூடிய நேரங்களிலும், நன்மைகளே ஏற்படும் என்றும், ஜாதகனுக்கு மகரம்,கும்பம் ராசியாதிபதி _லக்னாதிபதி யாக வும், சனி ஆட்சி _ உச்சம் பெற்று நல்ல கிரகங்களின் சேர்க்கை பார்வை இருப்பின், அதனால் நன்மைகளே _மேலும், மேலும் ஏற்படும் என்றும், _இருந்தாலும் நாம் மிக மிக எச்சரிக்கையுடன் நீதி, நேர்மையு டன் நடந்தால் தான் நன்மைகள் நீடிக்கும் இல்லாவிடில் எப்போது வேண்டுமானாலும் திடீரென்று நிலைமை மாறலாம்;. என கேள்விப்பட்டு இருக்கிறேன் இது யாவும் சரியா?
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-02-25
>>>அதைப் பரிசோதித்துப் பார்க்க (அதாவது சனியின் பாதிப்பைப் பரிசோதித்துப் பார்க்க) ஒரு வழி இருக்கிறது.<<<
ReplyDeleteஇது கொஞ்சம் வில்லங்கமல இருக்கு...
நான் நம்புகிறேன் அதனால பரிசோதிக்க விரும்பல எதுக்கு வம்பு...
////வேலன். said...
ReplyDeleteசில தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான சீனில் நாளை தொடரும் என போட்டுவிடுவார்கள்...அதுபோல் முக்கியமான இடத்தில் நாளை தொடரும் என போட்டுள்ளீர்கள்.கட்டுரை அருமை.வாழ்க வளமுடன்.வேலன்.////
எழுத்தில் ஒரு சுவாரசியம் சஸ்பென்ஸ் எல்லாம் வேண்டாமா? அதற்காகத்தான் வேலன்!
/////Success said...
ReplyDeleteவணக்கம்
சுவாரசியமாக சென்றது. அதற்குள் நாளை தொடரும் என்று போட்டு விட்டீர்கள்.
ஆனாலும் நீங்கள் போட்டுள்ள கஜோல் படம்....
ஆண்கள் கருப்பு நிறம் அணியலாமா ஐயா....///////
ஆண்களுக்கென்று தனிச்சட்டம் எல்லாம் கிடையாது. சனீஷ்வரன் இருபாலருக்கும் பொதுவானவர்!
எனக்குப் பிடித்த நடிகைகளில் கஜோலும் ஒருவர்...ஹி..ஹி!
/////ananth said...
ReplyDeleteநான் 26ம் தேதி பிறந்தவன். சனி எனக்கு பாதி நல்லவர். (5,6ம் அதிபதி). இருப்பினும் 8ம் எண்ணையும் சனிக் கிழமைகளையும் தவிர்த்தே வருகிறேன். சனி சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் தவிர்க்க முடியவில்லை. (விதி?) அது, இப்போது எனக்கு சனி திசை நடப்பதுதான்.//////
சனியை யாரும் விலக்கமுடியாது. அவர்தான் கர்மகாரகர்! நன்றி ஆனந்த்!
/////kannan said...
ReplyDeleteSP.VR. SUBBIAH has left a new comment on the post "காதலிப்பார் யாருமில்லை!":
/////kannan said...
வாத்தியார் ஐயா!
வணக்கம்.
”காதலிக்க நேரமுண்டு
காதலிப்பார் யாருமில்லை!
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் (தற்சமயம்) வழியுமுண்டு!”/////
>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<
உடன் வேலைபார்க்கும் ஒரு பெண்ணைப் பிடியுங்கள்.காதல் வசப்படாமலா போய்விடும்?
Post a comment.
Unsubscribe to comments on this post.
Posted by SP.VR. SUBBIAH to வகுப்பறை at Wednesday, February 24, 2010 4:57:00 PM
>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<
***********************************
வாத்தியார் ஐயா!
பொன்! அதி காலைப் பொழுது! வணக்கம்
உண்மையை சொன்னாள் அடுத்தனபர்கள் (கிராக்குகள்) வேண்டாததை மின் வலைக்கு அனுப்புகின்றனர் என்கின்றீர்கள் ஐயா!
எனது அறிவுக்கு எட்டியதை சொல்லுகின்றேன் ஐயா !
சுமார் 3,000 (KM) கிலோ மீட்டர்க்கு கடலின் அந்தபக்கம் இருந்துகொண்டு, அடியவன் கூட பெண்கள் வேலை செய்வது தங்களுக்கு எப்படி ஐயா தெரியும்,
சரி இருக்கட்டும்
தாங்கள் கூறியது 100 % (சதமானம்) உண்மை ஐயா!
பெண்கள், ஒருவர் அல்லது இருவர் அல்ல ஐயா !
குறைந்தபட்சம் பெண்கள் மட்டும் , பிருந்தாவனத்தில் பூத்திருக்கும் மலர்களைப்போல்
பல நாட்டு கட்டழகு கன்னியர் மட்டும் (கல்யாணம் ஆகாதவர்கள் )
(மொத்தம் வேலைபார்க்கும் நபர்கள் குறைந்தபட்சம் 26,000 க்கு மேல், அதில் மகளீர் மட்டும் 60 % மேல்,
கல்யாணம் ஆகாதவர்கள் எல்லாவசதி உடன் (பணம், படிப்பு, அழகு, மொழி etc.....) 25 % வருவார்கள் .
இதனிலையும் மேலாக, தங்களுடைய சீடனின்! அலுவலகம் உள்ள சிறிய (பிரித்தியேக) தனி கட்டமைப்பு உள்ள நகரத்தில், உள்ள மகளீர் மட்டும் 1100 க்கு மேல் தங்கி உள்ள விடுதி உள்ளது ஐயா !
அது எப்படி உண்மை என்று கேக்கின்றீர்கலாக்கும்
அரசு மருத்துவமனை ஐயா!
தற்பொழுது அனைத்தும் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் ஐயா!
நிற்க!
இருந்தாலும், சிறிய வயது முதல் மனதில் கொண்ட வைராக்கியம்
( லட்சியம் ) என்ன தெரியுமா ?
இந்த பூத உடல்! எனக்கு (அடியவனுக்கு) என்று பிறந்தவள் கூடத்தான் வாழனும் என்று
'எம்தேவி! கோதை நாச்சியார் ஆண்டாள்!!!
'எம்பெருமான் மாயகண்ணனை'! நினைத்து ,
பாசுரம் பாடினாலே அதைப்போல',!
சுற்றம் சூழ உறவினர்கள், உற்றார், நண்பர்கள் மற்றும் நண்பர்கள் அல்லாதவர்களும் கூட வந்து
'அக்னி சாட்சியாக'! 'திரு நாராயணின் திருநாமம்'!
முதல் பழமுதிர் சோலையில் அமர்திருக்கும் 'எம்மூல குருநாதனின்'!
குடும்பத்தினர் அனைவரும் வந்து மனதார ஆசிர்வதிக்க திருமணம் செய்ய வேண்டும் என்பதே ஐயா!
காத்திருகின்றேன், வாத்தியார் ஐயா! கூறியது போல், எனது ருக்குமணியின்! வருகைக்காக.//////
ருக்மணி, ருக்மணி...எங்கே இருக்கிறாய் அம்மணி? சீக்கிரம் வந்து உன் முகம் காட்டு. எங்கள் கண்ணன் அமைதி கொள்ளட்டும். ஆனந்தமடையட்டும்!
/////புதுகைத் தென்றல் said...
ReplyDeleteமகர ராசிக்காரியாகிய எனக்கு கறுப்புதான் பிடித்த கலர்.ராசியானதும் கூட. சமீபகாலமாக ஏனோ அது தகராறு செய்கிறது. வாட்சில் கூட ப்ளாக் டயல் வேணாம் என்கிறார் என் ரெய்கி குருநாதர்.//////
குரு சொல்வதைக் கேளுங்கள் சகோதரி!
//////Jeevanantham said...
ReplyDeletePresent sir.//////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
இன்றைய பாடம் அருமை....என் தந்தை மகர ராசி ,கும்ப லக்னம் இதுவரை அவர் பெயரில் 3 இருசக்கர வாகனங்கள் வாங்கினார் அனைத்தும் கூட்டல் எண் 8 தான் ,அவர் பெயரின் கூடுதல் எண் ம் 8 தான் சனி நல்ல அமைப்பில் என் தந்தை ஜாதகத்தில் ...என் சந்தேகம் சனி நன்றாக இருப்பவர்களுக்கு இயல்பாக 8 ம் எண் அமையுமா?
நன்றி வணக்கம்/////
ஆமாம். அதோடு விதி எண் எட்டாக உரியவர்களுக்கும், எல்லாம் எட்டாக அமையும்!
////Kumares said...
ReplyDeleteவணக்கம் ஐயா!!! ஆவலோடு காத்து இருக்கிறேன்//////
உங்கள் ஆவல் வீண்போகாது. தொடர்ந்து படியுங்கள் குமரேஸ்!
/////rajesh said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் அய்யா பொதுவாக சனி பகவான் பிடித்தால் கால் அடிக்கடி இடறிவிடும் சனிபகவானின் வாகனமான காகம் கொத்த வரும் துக்க செய்தி அடிக்கடி வரும்./////
தகவலுக்கு நன்றி! இப்போது பெரு நகரகங்களில் காக்கைகள் இல்லை:-))))
//////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம்,
சனி கிரகத்திற்கான எட்டாம் எண் தானாக தேடி வரும்போது குறிப்பிட்ட நேரம், காலம் வரையில்_ அதாவது கோசார முறையில் , அல்லது தசா, புத்தி,அந்தரம் நன்மையாக நடக்கக்கூடிய நேரங்களிலும், நன்மைகளே ஏற்படும் என்றும், ஜாதகனுக்கு மகரம்,கும்பம் ராசியாதிபதி _லக்னாதிபதியாகவும், சனி ஆட்சி உச்சம் பெற்று நல்ல கிரகங்களின் சேர்க்கை பார்வை இருப்பின், அதனால் நன்மைகளே மேலும், மேலும் ஏற்படும் என்றும்,இருந்தாலும் நாம் மிக மிக எச்சரிக்கையுடன் நீதி, நேர்மையுடன் நடந்தால் தான் நன்மைகள் நீடிக்கும் இல்லாவிடில் எப்போது வேண்டுமானாலும் திடீரென்று நிலைமை மாறலாம்;. என கேள்விப்பட்டு இருக்கிறேன் இது யாவும் சரியா?
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-02-25///////
விதி எண் எட்டாக உள்ளவர்களுக்குக் கடைசிவரை சனீஷ்வரன் துணை வருவார்!
குரு சொல்படிதான் கேட்கிறேன்.
ReplyDeleteமொத்தாமகவே கறுப்புக்கு குட்பை சொல்வதுதான் சிறந்ததா??
என்ன இப்படி சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள்?
ReplyDeleteஎன் கணவருக்கு 7-1/2 சனி ஆரம்பிக்கு முன்னால் ஒரு காக்கை கொத்த கொத்த வந்தது. அதற்கு முன் 3 வருடங்களாக சபரிமலை போய்க்கொண்டிருந்தார். ஆனால் அதன்பின் போக முடியாமல் செய்துவிட்டார் சனி பகவான். அப்போதுதானே சோதனைகளை தரமுடியும்? வரிசையாக அவர் அப்பா, அம்மா இருவரும் போனார்கள்.
என் பையனுக்கு 7-1/2 சனிyil கை உடைந்து பின் சேர்க்கப்பட்டது. பெண்ணுக்கு குரங்கு கடித்தது. ஸ்கூல் மற்றும்படி ஆனது. பையனுக்கும், பெண்ணுக்கும் இன்னும் முடியவில்லை. எனக்கு இனிமேல்தான் வரும். விருச்சிக ராசி.
ஆனால் எனக்கு மகர லக்னம், எனக்கு நவகிரஹங்களில் பிடித்தது சனி. என் கணவருடைய சிரமங்களைப் பார்த்திருந்தாலும், எனக்கென்னவோ அவர் மேல் பயம் இல்லை. எவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்தாலும், தாங்கும் சக்தியைத்தான் வேண்டுகிறேன்.
//////மதி said...
ReplyDelete>>>அதைப் பரிசோதித்துப் பார்க்க (அதாவது சனியின் பாதிப்பைப் பரிசோதித்துப் பார்க்க) ஒரு வழி இருக்கிறது.<<<
இது கொஞ்சம் வில்லங்கமல இருக்கு...
நான் நம்புகிறேன் அதனால பரிசோதிக்க விரும்பல எதுக்கு வம்பு.../////
நல்லது.நன்றி!
புதுகைத் தென்றல் said...
ReplyDeleteகுரு சொல்படிதான் கேட்கிறேன்.
மொத்தமாகவே கறுப்புக்கு குட்பை சொல்வதுதான் சிறந்ததா??/////
விதி எண் எட்டாக உள்ளவர்களுக்குக் கடைசிவரை சனீஷ்வரன் துணை வருவார்!ஆகவே உங்களுடைய பிறந்ததேதியைக் கூட்டிப்பாருங்கள். விடை எட்டு என்று வந்தால் நீங்கள் விடவேண்டாம்!
///////Uma said...
ReplyDeleteஎன்ன இப்படி சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள்?
என் கணவருக்கு 7-1/2 சனி ஆரம்பிக்கு முன்னால் ஒரு காக்கை கொத்த கொத்த வந்தது. அதற்கு முன் 3 வருடங்களாக சபரிமலை போய்க்கொண்டிருந்தார். ஆனால் அதன்பின் போக முடியாமல் செய்துவிட்டார் சனி பகவான். அப்போதுதானே சோதனைகளை தரமுடியும்? வரிசையாக அவர் அப்பா, அம்மா இருவரும் போனார்கள்.
என் பையனுக்கு 7-1/2 சனிyil கை உடைந்து பின் சேர்க்கப்பட்டது. பெண்ணுக்கு குரங்கு கடித்தது. ஸ்கூல் மற்றும்படி ஆனது. பையனுக்கும், பெண்ணுக்கும் இன்னும் முடியவில்லை. எனக்கு இனிமேல்தான் வரும். விருச்சிக ராசி.
ஆனால் எனக்கு மகர லக்னம், எனக்கு நவகிரஹங்களில் பிடித்தது சனி. என் கணவருடைய சிரமங்களைப் பார்த்திருந்தாலும், எனக்கென்னவோ அவர் மேல் பயம் இல்லை. எவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்தாலும், தாங்கும் சக்தியைத்தான் வேண்டுகிறேன்.////////
எனக்குக் கிரகங்களில் மிகவும் பிடித்தவர் அவர்தான். அவர்தான் உழைப்பிற்கு உரிய கிரகம். கர்மகாரகன். அதோடு எதையும் தாங்கும் மனவலிமையைக் கொடுப்பவர் அவர்தான். எந்த சூழ்நிலையையும் தாக்குப்பிடிக்கும் சக்தியைக்கொடுப்பவரும் அவர்தான். அவருடைய சிறப்புக்களைத் தொகுத்து எழுதித் தனியாக ஒரு புத்தகம் வெளியிடும் எண்ணம் உள்ளது.
அன்பு அய்யாவுக்கு வணக்கம், சனி பகவானுக்கு உரிய கருப்பு நிறம் பற்றிய பாடம் மிகவும் அருமை, எனக்கு மகர லக்கனம், சனி தசை நடந்துகொண்டிருக்கிறது,
ReplyDeleteநான் சில முக்கியமான நேரங்களில் கருப்பு சட்டைதான் அணிவேன், அதன் பலனை உணர்ந்தால்
மட்டுமே புரியும், சில பேர் சொல்வார்கள் நிறத்தில் என்ன இருக்கிறது என்று.
கருப்புக்கு என்று ஒரு சிறப்பு குணம் இருக்கிறது, அது வெப்பத்தை உள் வாங்கும் சக்தி.
மழை காலத்தில் மட்டும்தான் கருப்பு குடை உபயோகப்படுத்தவேண்டும், வெயில் காலத்தில்
கூடாது,அதுபோல் Solar Photo voltic cells பார்த்தால் தெரியும் கருப்பாகதான் இருக்கும்.
அன்புடன் ஜீவா
அப்பச் சரி விட்டுவிட வேண்டியதுதான்.
ReplyDeleteநான் பிறந்த தேதி 10
வணக்கம் ஐயா,
ReplyDeleteஎனக்கு 3ல் சனி அதாவது விருச்சிகத்தில், அவருக்கு அது பகை வீடு.
பிறந்ததேதியைக் கூட்டிப்பார்த்தால் 4 வருகிறது.
ஆகவே கறுப்புக்கு டா டா சொல்லி விடலாமா ஐயா?
எங்கள் குடும்பங்களில் பெண்ணுக்கு சீமந்தம் வளைகாப்புக்கு ஒரு புடவை கறுப்பு வண்ணத்தில் வாங்குவது வழக்கம்.இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா பெரும்பாலானவர்கள் கறுப்பு வண்ணத்தில் அணிகிறார்கள்.'ஜிகினா' எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்த கறுப்பு. சிலர் வெள்ளை ஹகோபா பின்னலாடையை பர்தாவிற்குப் பயன்படுத்துகிறார்கள்.சிலர் காப்பித்தூள், சாம்பல் நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.இஸ்லாமியர்களின் நடைமுறை வாழ்கை முறை அனைத்துக்கும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் திருக்குரானிலும்,ஹதீஜ் இலக்கியத்திலும் திட்டவட்டமான, மாற்றமுடியாத, மாற்றக்கூடாத கட்டளைகளை விட்டுச் சென்றுள்ளதாக இஸ்லாமிய அன்பர்கள் கூறுகிறார்கள். நான் தேடியவரை பர்தாவின் நிறம் பற்றி இஸ்லாமிய இலக்கியங்களில் ஒன்றும் இருப்பதாகக் காணவில்லை.யாராவது இதற்கான ஆதாரத்தைக் காண்பித்தால் நன்றி கூறிப் பாராட்டுவேன்.அப்படி நிறம் பற்றி ஒன்றும் ஆதாரம் இல்லையெனில், கறுப்பு நிறத்தில் பர்தா அணியச்சொல்லி ஆணையிட்டுள்ள அமைப்பு எது? ஏன் கறுப்பு வண்ணம் தேர்வு செய்துள்ளனர்?ஏதாவது விசேட காரணங்கள் உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன். நன்றி.
ReplyDelete/////ஜீவா said...
ReplyDeleteஅன்பு அய்யாவுக்கு வணக்கம், சனி பகவானுக்கு உரிய கருப்பு நிறம் பற்றிய பாடம் மிகவும் அருமை, எனக்கு மகர லக்கனம், சனி தசை நடந்துகொண்டிருக்கிறது,
நான் சில முக்கியமான நேரங்களில் கருப்பு சட்டைதான் அணிவேன், அதன் பலனை உணர்ந்தால்
மட்டுமே புரியும், சில பேர் சொல்வார்கள் நிறத்தில் என்ன இருக்கிறது என்று.
கருப்புக்கு என்று ஒரு சிறப்பு குணம் இருக்கிறது, அது வெப்பத்தை உள் வாங்கும் சக்தி.
மழை காலத்தில் மட்டும்தான் கருப்பு குடை உபயோகப்படுத்தவேண்டும், வெயில் காலத்தில்
கூடாது,அதுபோல் Solar Photo voltic cells பார்த்தால் தெரியும் கருப்பாகதான் இருக்கும்.
அன்புடன் ஜீவா/////
மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!
/////புதுகைத் தென்றல் said...
ReplyDeleteஅப்பச் சரி விட்டுவிட வேண்டியதுதான்.
நான் பிறந்த தேதி 10//////
பிறந்த தேதி 10 என்றால் உங்களுடைய அதிர்ஷ்ட எண் ஒன்று! விதி எண் என்று நான் சொன்னது இதுவல்ல! மொத்த கூட்டல் தொகையில் வருவது. அதாவது ஒருவருடைய பிறந்ததேதி 1.1.1980 என்றால், அதனுடைய கூட்டல் தொகை= 1 + 1 + 1 + 9 +8 = 20 = 2. அவருடைய விதி எண் 2. புரிகிறதா சகோதரி!
//////Naresh said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
எனக்கு 3ல் சனி அதாவது விருச்சிகத்தில், அவருக்கு அது பகை வீடு.
பிறந்ததேதியைக் கூட்டிப்பார்த்தால் 4 வருகிறது.
ஆகவே கறுப்புக்கு டாடா சொல்லி விடலாமா ஐயா?/////
சொல்லிவிடுங்கள்! நஷ்டம் என்ன இருக்கிறது?
/////kmr.krishnan said...
ReplyDeleteஎங்கள் குடும்பங்களில் பெண்ணுக்கு சீமந்தம் வளைகாப்புக்கு ஒரு புடவை கறுப்பு வண்ணத்தில் வாங்குவது வழக்கம்.இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா பெரும்பாலானவர்கள் கறுப்பு வண்ணத்தில் அணிகிறார்கள்.'ஜிகினா' எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்த கறுப்பு. சிலர் வெள்ளை ஹகோபா பின்னலாடையை பர்தாவிற்குப் பயன்படுத்துகிறார்கள்.சிலர் காப்பித்தூள், சாம்பல் நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.இஸ்லாமியர்களின் நடைமுறை வாழ்கை முறை அனைத்துக்கும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் திருக்குரானிலும்,ஹதீஜ் இலக்கியத்திலும் திட்டவட்டமான, மாற்றமுடியாத, மாற்றக்கூடாத கட்டளைகளை விட்டுச் சென்றுள்ளதாக இஸ்லாமிய அன்பர்கள் கூறுகிறார்கள். நான் தேடியவரை பர்தாவின் நிறம் பற்றி இஸ்லாமிய இலக்கியங்களில் ஒன்றும் இருப்பதாகக் காணவில்லை.யாராவது இதற்கான ஆதாரத்தைக் காண்பித்தால் நன்றி கூறிப் பாராட்டுவேன்.அப்படி நிறம் பற்றி ஒன்றும் ஆதாரம் இல்லையெனில், கறுப்பு நிறத்தில் பர்தா அணியச்சொல்லி ஆணையிட்டுள்ள அமைப்பு எது? ஏன் கறுப்பு வண்ணம் தேர்வு செய்துள்ளனர்?ஏதாவது விசேட காரணங்கள் உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன். நன்றி.//////
காரணம் தெரியவில்லை கிருஷ்ணன் சார்! யாராவது கூறுகிறார்களா என்று பார்ப்போம்!
அப்பவும் லக் இல்ல ஐயா, :))
ReplyDeleteவிதி எண் 3
Ayya 71/2 sani nadakum pothu thedi pidithu Karupu color thaan poda thonrum Keduthal nadaka enru en patti kooruvarkal.Athu unmai thaan pola..
ReplyDeleteUcham Petra Grahamgalin Nirangaluku nam dhinasari Valvodu thodarpu irukiratha?
Ennaku Chevvai & Sani Ucham..Piditha Nirangal Black & Red..Avoid seiya ninaithalum intha 2 nira udaigal thaanaga amainthu vidukinrana...
////புதுகைத் தென்றல் said...
ReplyDeleteஅப்பவும் லக் இல்ல ஐயா, :))
விதி எண் 3/////
நல்லது.நன்றி!
////Strider said...
ReplyDeleteAyya 71/2 sani nadakum pothu thedi pidithu Karupu color thaan poda thonrum Keduthal nadaka enru en patti kooruvarkal.Athu unmai thaan pola..
Ucham Petra Grahamgalin Nirangaluku nam dhinasari Valvodu thodarpu irukiratha?
Ennaku Chevvai & Sani Ucham..Piditha Nirangal Black & Red..Avoid seiya ninaithalum intha 2 nira udaigal thaanaga amainthu vidukinrana.../////
தகவலுக்கு நன்றி நண்பரே!
ஆசிரியர் அய்யா அவர்கள் அனுமதி உடன் எனக்கு தெரிந்த சனிபகவானின் சிறு விபரத்தை நான் தருகிறேன் எனக்கு சனிபகவான் மீது அதிக பிரியம் ஏன் என்றால் நான் மகர ராசி அதனால் என்னவோ அதன்மீது பிரியம். ஆனால் அவர் யாருக்கவும் இறங்கி வரமாட்டார் தப்பு செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு.மகர ராசி.கும்பராசி என்ற பாரபட்சம் கிடையாது. ஒரு சில சலுகைகள் உண்டு என்று கருதுகிறேன். இந்த உலகத்தை அவர் முழவதும் ஆக்கிரமித்து உள்ளார் எவ்வாறு என்றால் சனிபகவானின் நிறம் கருப்பு.நீலம். நாம் காணம் கடல்.வானம் நிறம் நீலகலராகவே உள்ளது, இதை பார்த்தலே சனிபகவானின் பிரமாண்டம் தெரியும் அதைவிட இந்தியா பார்த்தால் அனைத்து சாலைகளும் தார்சாலைகளே அதன் நிறம் கருப்பு. அதைபோல் நாம் காணம் நிறஙகள் அனைத்தும் சிகப்பு.நீலம்.பச்சை என்ற கலர் இருந்துதான் வருகிறது. இதிலும் சனிபகவானின் நீலம் வருகிறது.
ReplyDeleteசனிபகவானின் பண்புகள்
கை.கால் முறிவு.நுடம். அளவுக்கு அதிகமான சோர்வு ,மரணம் சம்பந்தப்பட்ட இடம்,தவறான அபிப்ராயம்,பொய் பேசுதல் தன் சாதியில் இருந்து ஒதுக்கி வைத்தல்,வீடு சுத்தம்மில்லாமல் வைத்தல் அழுக்கு ஆடைகள் அணிதல்,வேட்டையாடுதல் அனைத்து சனிபகவானின் வேலைகள்.
மனித உடல்
இரும்பு சத்து சனிபகவான் உடையது. நமது உடலில் ஹீமோகுளோபின் எனும் பொருளே ரத்தத்தை சிவப்பாகிறது. இந்த ஹீமோகுளோபின் பிராணவாயுவை நுரையீரலிருந்து எடுத்துக்கொண்டு ரத்தம் செல்லும் எல்லா திசுக்களுக்கும் எரிசக்தியை கொடுக்கிறது. இந்த செயல் தான் உயிர் வாழ இன்றியமையாது.இதனால்தான் சனிபகவானை ஆயுள்காரகன் என்கிறோம்.
இன்னும் ஏராளமான தகவல் உள்ளன நீங்கள் விரும்பினால் தருகிறேன் அய்யா. பிழை இருந்தால் மன்னிக்கவும் அய்யா. நன்றி அய்யா
அனுசம். விருச்சிகம்..ரிசப லக்னம்.
ReplyDeleteநான் மிகவும் விரும்பி அணிவது கருப்புத்தான்...
சுவாரஸ்யமாக இருக்கிறது..
Sir,
ReplyDelete100% correct , by birth date is 8th and Saturn is in exaltation in my horosope.For me most of the good things were happening on saturday only.
Thanks / Ashok
வணக்கம் சார்,
ReplyDeleteஉங்களுடைய விதி என்னை சொல்லவில்லையே?
Thanuja
////rajesh said...
ReplyDeleteஆசிரியர் அய்யா அவர்கள் அனுமதி உடன் எனக்கு தெரிந்த சனிபகவானின் சிறு விபரத்தை நான்
தருகிறேன் எனக்கு சனிபகவான் மீது அதிக பிரியம் ஏன் என்றால் நான் மகர ராசி அதனால் என்னவோ
அதன்மீது பிரியம். ஆனால் அவர் யாருக்கவும் இறங்கி வரமாட்டார் தப்பு செய்தால் கண்டிப்பாக தண்டனை
உண்டு.மகர ராசி.கும்பராசி என்ற பாரபட்சம் கிடையாது. ஒரு சில சலுகைகள் உண்டு என்று கருதுகிறேன்.
இந்த உலகத்தை அவர் முழவதும் ஆக்கிரமித்து உள்ளார் எவ்வாறு என்றால் சனிபகவானின் நிறம்
கருப்பு.நீலம். நாம் காணம் கடல்.வானம் நிறம் நீலகலராகவே உள்ளது, இதை பார்த்தலே சனிபகவானின்
பிரமாண்டம் தெரியும் அதைவிட இந்தியா பார்த்தால் அனைத்து சாலைகளும் தார்சாலைகளே அதன் நிறம்
கருப்பு. அதைபோல் நாம் காணம் நிறஙகள் அனைத்தும் சிகப்பு.நீலம்.பச்சை என்ற கலர் இருந்துதான்
வருகிறது. இதிலும் சனிபகவானின் நீலம் வருகிறது.
சனிபகவானின் பண்புகள்
கை.கால் முறிவு.நுடம். அளவுக்கு அதிகமான சோர்வு ,மரணம் சம்பந்தப்பட்ட இடம்,தவறான
அபிப்ராயம்,பொய் பேசுதல் தன் சாதியில் இருந்து ஒதுக்கி வைத்தல்,வீடு சுத்தம்மில்லாமல் வைத்தல் அழுக்கு
ஆடைகள் அணிதல்,வேட்டையாடுதல் அனைத்து சனிபகவானின் வேலைகள்.
மனித உடல்
இரும்பு சத்து சனிபகவான் உடையது. நமது உடலில் ஹீமோகுளோபின் எனும் பொருளே ரத்தத்தை
சிவப்பாகிறது. இந்த ஹீமோகுளோபின் பிராணவாயுவை நுரையீரலிருந்து எடுத்துக்கொண்டு ரத்தம் செல்லும்
எல்லா திசுக்களுக்கும் எரிசக்தியை கொடுக்கிறது. இந்த செயல் தான் உயிர் வாழ
இன்றியமையாது.இதனால்தான் சனிபகவானை ஆயுள்காரகன் என்கிறோம்.
இன்னும் ஏராளமான தகவல் உள்ளன நீங்கள் விரும்பினால் தருகிறேன் அய்யா. பிழை இருந்தால்
மன்னிக்கவும் அய்யா. நன்றி அய்யா////
உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி!
////கண்ணகி said...
ReplyDeleteஅனுசம். விருச்சிகம்..ரிசப லக்னம்.
நான் மிகவும் விரும்பி அணிவது கருப்புத்தான்...
சுவாரஸ்யமாக இருக்கிறது..//////
தகவலுக்கு நன்றி!
////Ashok said...
ReplyDeleteSir,
100% correct , by birth date is 8th and Saturn is in exaltation in my horosope.For me most of the good
things were happening on saturday only.
Thanks / Ashok/////
தகவலுக்கு நன்றி!
////Thanuja said...
ReplyDeleteவணக்கம் சார்,
உங்களுடைய விதி என்னை சொல்லவில்லையே?
Thanuja////
என்னுடைய விதி எண் ஆறு!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteகவியரசருக்கும் ஆறு தான் விதி எண்
என்றுக் கேள்விப் பட்டு இருக்கிறேன்.
உண்மையா குருவே!
அன்புடன்,
ஆலாசியம் கோ.