++++++++++++++++++++++++++++++++++++++++++
கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்காதது எது?
கேள்வியும் நானே - பதிலும் நானே!
++++++++++++++++++++++++++++++++++==
சனியை நினைத்தால் சிலருக்குப் பயமாக இருக்கிறதே - பயத்தைப் போக்க என்ன செய்யலாம்?
சனியை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். அவர்தான் கர்மகாரகர். இந்த உலகில் நீங்கள் பிறவி எடுத்த கர்மத்தின்படி, நீங்கள் பார்க்கவேண்டிய செயலை அல்லது உத்தியோகத்தை அல்லது வேலையை நிர்ணயிப்பவர் அவர்தான். அதோடு அனைவருக்கும் ஆயுள்காரகனும் அவர்தான். இந்த உலகில் ஒருவன் வாழ வேண்டிய நாட்களை நிர்ணயிப்பவரும் அவர்தான். கணக்குப்படி நாட்கள் முடிந்துவிட்டால், உங்களை ஒரு நொடிகூடத் தாமதிக்கவிடாமல் அள்ளிக்கொண்டு போகிறவரும் அவர்தான்!
அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிப் பாட்டில் வைத்தார்:
"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல்
இந்தமண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா..."
இந்தப்பாடலில் உள்ள முக்கியமான வரிகள்: “கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது”
கர்மவினைப்படிதான் நமது வாழ்க்கை அமையும் - தனது
தர்மம்படிதான் சனீஷ்வரன் நடந்துகொள்வார்.
ஆகவே சனீஷ்வரனைக் கண்டு யாரும் பயப்படவோ அல்லது கவலை கொள்ளுவதோ வேண்டாம்.
சனியைவிடப் பயப்பட வேண்டிய ஆசாமி ஒருவன் இருக்கிறான் என்றால், அது ராகு! தண்டிக்க வேண்டிய ஒருவனை சனி சும்மா அடிப்பார். ஆனால் அதே நிலையில் மாட்டுபவனை ராகு சும்மா அடிக்க மாட்டார். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிப்பார். (Rahu is a merciless planet) ராகு மகா தசையில் அதை
அனுபவித்தவர்களுக்குத்தான் அந்த வலி நன்கு தெரியும்.
=-------------------------------------------------
வானவட்டத்தில் பத்து மற்றும் பதினொன்றாம் ராசிகளுக்கு அதிபதி சனி. மகர ராசியும், கும்ப ராசியும் அவருடைய சொந்த ராசிகள். சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் சனி உச்சம் பெறுவார். செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் அவன் நீசமடைவார். அவர் வானவெளியில் ஒரு சுற்றைச் சுற்றி முடிக்க
எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள். இதெல்லாம் அடைப்படை விஷயங்கள்.
கட்டுப்பாடுகள் (restriction), வரைமுறைகள் (limitation), தாமதம் (delay) ஆகியவை நம்மை மீறியும் உண்டாவதற்குக் காரணம் சனிதான். சனிதான் வாழ்க்கையின் யதார்த்தத்தை, அர்த்தத்தை நமக்குப் போதிக்கும் ஆசான் ஆவார். தடைகள், தாமதங்கள், தோல்விகள் என்று அடுத்தடுத்து ஏற்பட்டு நமக்கு பலவிதமான அனுபவங்களைக் கொடுத்து நம்மை நெறிப்படுத்து பவரும் அவர்தான்.
Saturn is the guru who teaches us the realities of our earthly existence. Obstacles,
delays and failures!
வெறுப்பு (frustrations) பதவியிறக்கம் (displacement) தனிமை (loneliness) என்று வாழ்க்கையின் பல நிலைப்பாடுகளை ஜாதகனுக்கு, அவனுடைய மதிப்பு, மரியாதை, சாதனைகள், செல்வம், சமூக அந்தஸ்து என்று எதையும் கணக்கில் கொள்ளாமல், (அவனைப்) புரட்டிப்போட்டுக் கற்றுக் கொடுப்பவரும் அவர்தான்!
நமது கர்மாவை உணரவைத்து, “எல்லாம் என் தலை எழுத்து” என்று சொல்ல வைப்பவரும் அவர்தான்.
Saturn walks us through these educating experiences and leads us to where we belong and what we deserve according to our action or Karma.
ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமச்சனி என்று கோள்சாரப்படி தனது ஒவ்வொரு சுற்றிலும் மொத்தம் 10 ஆண்டுகளும், தனது தசா அல்லது புத்திகளின் மூலம் மொத்தம் 19 ஆண்டுகளும், பல ஜாதகர்களை அவர் வறுத்தெடுப்பது, ஜாதகனுக்கு பல (கஷ்டங்களின் மூலம்) அனுபவத்தைக் கொடுப்பதறகாகத் தான்.
சிலர் இந்தக் கஷ்டங்களில் இருந்து தப்பிவிடுவார்கள். அதற்குக் காரணம், சந்திரராசியிலும், அதற்கு முன் பின் ராசிகளிலும், சந்திரராசிக்கு எட்டாவது ராசியிலும் 30 அல்லது 30ற்கு மேற்பட்ட பரல்கள் அவர்கள் ஜாதகத்தில் இருக்கும். அந்த நான்கில் எத்தனை ராசிகளில் அப்படி இருக்கிறதோ அத்தனை பெருக்கல் இரண்டரை ஆண்டுகளைத் தப்பிக்கும் ஆண்டுகளாக எடுத்துக்கொள்ளலாம். அதேபோல சனி தன் சுயவர்க்கத்தில் 4 பரல்களுக்கு அதிகமான பரல்களுடன் இருந்தால், சனியின், தசா/புத்தி, ஜாதகனுக்கு
தீமைகளைச் செய்யாமல் நன்மைகளைச் செய்யும். ஆகவே அதையும் பாருங்கள்.
தொழில் ஸ்தானத்தை (Tenth House) முதல் இடமாகக்கொண்டு அன்றையக் கோச்சாரச் சனி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். அந்த இடத்தில் இருந்து கோள்சாரப்படி அவர் 6 அல்லது 8 அல்லது 12ஆம் இடங்களில் இருந்தால், உங்கள் வேலைகளில், அல்லது செய்யும் தொழில்களில் சிக்கல் உண்டாகும்.
அந்த இடத்தை அவர் கடந்த பிறகு, அந்தச் சிக்கல்கள் நீங்கிவிடும்.
சனியின் மகோன்னதத்தை அல்லது மேன்மையைப் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்!
Know the time periods of Saturn in your life from your Horoscope and live a meaningful life.
----------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDelete"நல்லவனுக்கு நல்லவன்"
"தர்மத்தின் தலைவன்"
"உழைப்பாளி"
என்று இன்னும் பலவற்றிற்கும் காரணக் கர்த்தாவின்,
சத்தியத்தின் திருஉருவான நீதிகளின் தலைவனின் கடமைகளை,
சாக வரம் பெற்ற பாடல்களின் பாட்டுத் தலைவனின் பாடல்கள் கொண்டும்,
தங்களுக்கே உரிய சொல்லும் பொருளும் சுந்தரமும் மிளிரும் நடையில்;
மிகவும் அருமையான கேள்வியும் பதிலும் அங்கம்.
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.
வாத்தியார் ஐயா !
ReplyDeleteவணக்கம் .
'பிள்ளையையும் கில்லி விட்டு'! 'தொட்டுளையும் ஆட்டுகின்றானே!,
'(சனி) ஈஸ்வரன்'!
இது சரிதான! இல்லை முறைதான!
செய்த வினைக்கு இப்பிறப்பு!
பிறந்து உள்ள காலமோ 'கலியுகம்' !
'பெற்ற தாயையே கொன்று'!
'மாமிசம் தின்னும் மிருகங்கள்'!
'வாழும் இடத்தில் (கலியுகத்தில்) பிறந்து விட்டு,!
வாங்கிவந்த வரத்தை அனுபவிப்பதே பெரும்பாடாக உள்ளது.
'கண்விழிகள் பிதுங்குகின்றன,!
இதில்! எங்கு வாத்தியாரே விமோசனம் பெறுவதிற்கு வழி உள்ளது .
அது எப்படி (சாத்விகம் ஆகும் ) வாய்ப்பும் கூட அமையும் .
'தர்ம சீலனாக வாழ்வதிற்கு'!
'கலியுகம்' ! அல்லவா?
'எல்லாவற்றையும், ஒரு நொடி நினைத்தாலே தலை சுட்ருகின்றது'!
வாத்தியார் ஐயா !
"சனிதான் வாழ்க்கையின் யதார்த்தத்தை, அர்த்தத்தை நமக்குப் போதிக்கும் ஆசான் ஆவார்".
ReplyDeletenalla ஆசான்!
Good saturn...not deviating from him duties....God is great.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteThansk for this lession, it really erase the mindset thinking bad on saturan generally from all our minds
அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், சனி பற்றிய
ReplyDeleteபாடம் மிகவும் தெளிவாகவும், புரியும்படியாகவும்
இருந்தது மிக்க நன்றி.அய்யா, பொதுவாக மகர, கும்ப
லக்கனக்காரர்களை சனி அதிகம் படுத்தாது என்பது உண்மையா?
அன்புடன் ஜீவா
ஐயா வணக்கம்
ReplyDeleteஎனக்கு ராகு திசை. முதலில் சனி நிற்க வைத்து அடிப்பார், ஆனால் ராகு தொங்க விட்டு அடிப்பார் என்றீர்கள். இப்போது தலை கீழாக தொங்க விட்டு அடிப்பார் என்கிறீர்கள். ஏழு வருடங்கள் தாண்டி விட்டேன். இன்னும் 12 வருடங்கள் உள்ளது.
எது எப்படியோ, ராகு திசை பாதி நாட்கள் கஷ்டத்தை கொடுப்பார், மீதி நாட்கள் நல்லது செய்வார் என்று என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். நல்லதை எதிபார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.
என் மனைவி கேட்க்க சொன்னது. " வீடு கட்டும் யோகம் யாருக்கு, எப்போது, ? "
நன்றி
வாழ்த்துக்கள்
//////Alasiam G said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
"நல்லவனுக்கு நல்லவன்" "தர்மத்தின் தலைவன்" "உழைப்பாளி"
என்று இன்னும் பலவற்றிற்கும் காரணக் கர்த்தாவின், சத்தியத்தின் திருஉருவான நீதிகளின் தலைவனின் கடமைகளை, சாக வரம் பெற்ற பாடல்களின் பாட்டுத் தலைவனின் பாடல்கள் கொண்டும்,
தங்களுக்கே உரிய சொல்லும் பொருளும் சுந்தரமும் மிளிரும் நடையில்; மிகவும் அருமையான கேள்வியும் பதிலும் அங்கம். நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!
//////kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா !
வணக்கம் . 'பிள்ளையையும் கிள்ளி விட்டு'! 'தொட்டுளையும் ஆட்டுகின்றானே!, '(சனி) ஈஸ்வரன்'!
இது சரிதானா? இல்லை முறைதானா?
செய்த வினைக்கு இப்பிறப்பு!
பிறந்து உள்ள காலமோ 'கலியுகம்' !
'பெற்ற தாயையே கொன்று'! 'மாமிசம் தின்னும் மிருகங்கள்'!
'வாழும் இடத்தில் (கலியுகத்தில்) பிறந்து விட்டு,!
வாங்கிவந்த வரத்தை அனுபவிப்பதே பெரும்பாடாக உள்ளது.
'கண்விழிகள் பிதுங்குகின்றன,!
இதில்! எங்கு வாத்தியாரே விமோசனம் பெறுவதிற்கு வழி உள்ளது .
அது எப்படி (சாத்விகம் ஆகும் ) வாய்ப்பும் கூட அமையும் . 'தர்ம சீலனாக வாழ்வதிற்கு'!
'கலியுகம்' ! அல்லவா?
'எல்லாவற்றையும், ஒரு நொடி நினைத்தாலே தலை சுற்றுகின்றது'!
வாத்தியார் ஐயா !//////
தலை சுற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு சம்பந்தம் இல்லாததைக் கண்டு கொள்ளாமல் விட்டாலே பாதித் தலைவலி இல்லாமல் போய்விடும். ஒரு கோக் வாங்கி அடித்துவிட்டு சந்தோஷமாக இருங்கள். எல்லாவற்றையும் இறைவனும் பார்த்துக்கொண்டிருக்கிறார். தண்டிக்க வேண்டியவர்களை அவர் தண்டிப்பார்!
/////ramakrishnan said...
ReplyDelete"சனிதான் வாழ்க்கையின் யதார்த்தத்தை, அர்த்தத்தை நமக்குப் போதிக்கும் ஆசான் ஆவார்".
nalla ஆசான்!/////
அதிலென்ன சந்தேகம்? பல அனுபங்கள் மூலம் நம்மை நெறிப்படுத்துவதும் அவர்தான்!
/////jee said...
ReplyDeleteGood saturn...not deviating from him duties....God is great.////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
/////Ram said...
ReplyDeleteDear Sir,
Thansk for this lession, it really erase the mindset thinking bad on saturan generally from all our minds/////
நல்லது.நன்றி!
/////ஜீவா said...
ReplyDeleteஅன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், சனி பற்றிய பாடம் மிகவும் தெளிவாகவும், புரியும்படியாகவும்
இருந்தது மிக்க நன்றி.அய்யா, பொதுவாக மகர, கும்ப லக்கனக்காரர்களை சனி அதிகம் படுத்தாது என்பது உண்மையா?
அன்புடன் ஜீவா//////
உண்மைதான். அவர் அந்த லக்கினங்களுக்கு அதிபதி.
/////T K Arumugam said...
ReplyDeleteஐயா வணக்கம்
எனக்கு ராகு திசை. முதலில் சனி நிற்க வைத்து அடிப்பார், ஆனால் ராகு தொங்க விட்டு அடிப்பார் என்றீர்கள். இப்போது தலை கீழாக தொங்க விட்டு அடிப்பார் என்கிறீர்கள். ஏழு வருடங்கள் தாண்டி விட்டேன். இன்னும் 12 வருடங்கள் உள்ளது.
எது எப்படியோ, ராகு திசை பாதி நாட்கள் கஷ்டத்தை கொடுப்பார், மீதி நாட்கள் நல்லது செய்வார் என்று என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். நல்லதை எதிபார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.
என் மனைவி கேட்க்க சொன்னது. " வீடு கட்டும் யோகம் யாருக்கு, எப்போது, ? "
நன்றி
வாழ்த்துக்கள்/////
ராகு கேந்திர திரிகோணங்களில் இருந்தால், தன்னுடைய தசா/புத்தியில் ஜாதகனுக்குக் குறைவான துன்பத்தையே கொடுப்பார். தொங்கவிடமாட்டார்:-))))
" வீடு கட்டும் யோகம் யாருக்கு, எப்போது, ? " - இது பற்றிய கட்டுரை வர உள்ளது. பொறுத்திருந்து படியுங்கள்
பதிவு எளிமையாக நன்றாக உள்ளது.பழைய பாடம் படிக்காதவர்களுக்குப் பயன் படும்.
ReplyDeleteசனி பகவன் வழிபாடு உலகம் எங்கும் பரவி இருந்துள்ளது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ம்க்காவில் உள்ள காபாவில் அவர் தோன்றுவதற்கு முன்பு இருந்தே வழிபாட்டில் இருந்த 360 சிலைகளை உடைத்து வீதியில் எறிந்துவிட்டு, இஸ்லாத்தைத் துவக்கினார்.அதில் ஒருசிலை "அல் சைஸான்". அல் என்பது ஆங்கிலத்தில் வரும் ஆர்டிகிள் போல. a, an, the என்பதைப் போல. சைஸான் என்றால் சனீஸ்வரன்.கிட்டத்தட்ட உச்சரிப்புக்கூட ஒன்று போல ஒலிப்பதை காண்க.
வேலை, திருமணம், குழந்தைப் பேறு அனத்தும் 7 1/2 சனி சமயம் கூடிவருதே!சனி தான் காரணமா ? அல்லது மற்ற மற்ற கிரஹங்களும்
அந்த சமயம் கூடி நன்மைசெய்யுமா?
very good lesson... as u said vazhkaiyin yatharthathai sani than enakku puriya vaithaar.. ashtama saniyil nan patta paadu ethirikku kuda vara koodathu endrea vizhaikirean... all i realised is "expect the unexpected in your life... "
ReplyDeleteSir
ReplyDeleteGenerally speaking If Saturn is combusted then all the port folios are at stake ?
thanks
இன்றைய பாடம் அருமை..
ReplyDeleteஆமா சார் ? உங்களோட இன்றைய நடையில் ஒரேயடியா மேஜர் சுந்தரராஜனின் வாடை அடிக்குதே?ஏன், என்ன ஆச்சு?
அடிக்கடி தமிழ் வாக்கியத்துக்கு இங்கிலீஷ் translation ..?
எனக்கு 10வருடத்துக்கு முன்னாடி சனி ஒரு ஏழரையை போட்டு (4லே ஒரு இடத்தில் கூட 30பரல் இல்லை.)சொந்தஊரை விட்டு துரத்தினார்.இன்றைக்கும் நினைத்தால் அந்த பகீர் பாடம்தான் சில விஷயங்களில் காலை வைக்கும்முன் யோசிக்க வைக்கிறது..
வேண்டவே வேண்டாம் என்று தீர்மானமாக விலகிட வழி செய்கிறது. அந்த நாட்களில் என் கூட பக்கத்துணையாக இருந்த நல்ல
நண்பர்களை மட்டும் தொடர்ந்து நல்ல தொடர்பில் வைத்துள்ளேன்.
ராகு எனக்கு நல்ல விசுவாசமான நண்பர்களை கொடுத்தார்.(நவாம்சத்தில் உச்சம்.)நல்ல சுகானுபவங்களை கொடுத்தவர் கூடவே திடீர் தோல்வியையும் கொடுத்தார்..
டிகிரியை கொடுத்தவர் அதையே கெடுக்கவும் செய்தார்.(பழியை யார் மேலயாவுது போட்டுட்டா கொஞ்சம் நிம்மதிதானே?)
KMR krishnan அண்ணாச்சியின் கேள்வியை அபிடியே நானும் ரிபீட் வுட்டுக்குறேன்..
/////kmr.krishnan said...
ReplyDeleteபதிவு எளிமையாக நன்றாக உள்ளது.பழைய பாடம் படிக்காதவர்களுக்குப் பயன் படும்.
சனி பகவன் வழிபாடு உலகம் எங்கும் பரவி இருந்துள்ளது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ம்க்காவில் உள்ள காபாவில் அவர் தோன்றுவதற்கு முன்பு இருந்தே வழிபாட்டில் இருந்த 360 சிலைகளை உடைத்து வீதியில் எறிந்துவிட்டு, இஸ்லாத்தைத் துவக்கினார்.அதில் ஒருசிலை "அல் சைஸான்". அல் என்பது ஆங்கிலத்தில் வரும் ஆர்டிகிள் போல. a, an, the என்பதைப் போல. சைஸான் என்றால் சனீஸ்வரன்.கிட்டத்தட்ட உச்சரிப்புக்கூட ஒன்று போல ஒலிப்பதை காண்க.
வேலை, திருமணம், குழந்தைப் பேறு அனத்தும் 7 1/2 சனி சமயம் கூடிவருதே!சனி தான் காரணமா ? அல்லது மற்ற மற்ற கிரஹங்களும்
அந்த சமயம் கூடி நன்மைசெய்யுமா?////
நீங்கள் சொல்லும் அனைத்தையும், சனி, குரு பகவானின் துணையோடுதான் செய்வார். பார்வை சேர்க்கை, தசா புத்தி, கோள்சாரச் சுற்று இப்படியாக/வழியாக!
/////Poornima said...
ReplyDeletevery good lesson... as u said vazhkaiyin yatharthathai sani than enakku puriya vaithaar.. ashtama saniyil nan patta paadu ethirikku kuda vara koodathu endrea vizhaikirean... all i realised is "expect the unexpected in your life... "////
உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!
/////CUMAR said...
ReplyDeleteSir
Generally speaking If Saturn is combusted then all the port folios are at stake ?/////
மற்ற அமைப்புக்கள் அவற்றைப் பார்த்துக்கொள்ளும்!
அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு வணக்கம், சனி பற்றிய பாடம் - தொழில்/உத்தியோகம் எப்படி இருக்கும் என்ற விளக்கம் அருமை. வழக்கம் போல் சுய ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, நமக்கு எப்படி என்று பார்த்தால் சரியாக வரவில்லையே? மேஷ லக்னம், இதற்க்கு பத்தாம் வீடு மகரம், அங்கே இருந்து தற்போது சனி உள்ள கன்னி வரை எண்ணினால் ஒன்பதாம் வீடாக வருகிறது, சனியின் சுய பரல் ஐந்து, , இன்னும் தொழில் முன்னேற்றம் எதையும் காணோமே, சனி கன்னிக்கு வந்து ஆறு மாதம் ஆகப்போகிறதே. தயவு செய்து விளக்கம் சொல்லும்படி வேண்டுகி றேன்
ReplyDelete=லக்ஷ்மணன்
நீங்கள் நடத்தும் பாடம் புரிகிறது.இதில் ஒன்றுடன் ஓன்று சம்மதப்பட்டிருப்ப்பதால் கணிப்பதற்கு சிரமமாக இருக்கிறது.பரவ இல்லை செந்தமிழும் நா பழக்கம் விடுங்கள்.ஒரு கேள்வி துலாம்னுக்கு சுக்கிரன் ஆச்சி ,சனி உச்சம் இரண்டும் அந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்(என்னுடைய நண்பனின் ஜாதகத்தில் உள்ளது என்னக்கு என்ன சொல்லு வது என்று தெரியவில்லை .அதுவும்11 ஆம் இடம் )
ReplyDeleteAyya 7 1/2 Saniyin pothu Kalil Adi padum enbathu unmaiya?
ReplyDeleteJathagathil Sani Ucham adainthu irunthal 7 1/2 Sani bathipu kuraiyuma?
Vinayagar Sani pidika varum pothu "Inru poi Nalai vaa" enrum Anjeneyar Ramar Palam Katum velaiyil Sani avarai pidithagavum Sanieswaranai Malai/Karkal kondu avar aluthiyathal Sani avarai vitu vitathagavum koorum Kathigal kelvi patu irukingala?
/////minorwall said...
ReplyDeleteஇன்றைய பாடம் அருமை..
ஆமா சார் ? உங்களோட இன்றைய நடையில் ஒரேயடியா மேஜர் சுந்தரராஜனின் வாடை அடிக்குதே?ஏன், என்ன ஆச்சு?//////
எங்கே அடிக்கிறது என்று சொல்லுங்கள் பினாயில் போட்டுக் கழுவி விடுவோம்!:-)))
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அடிக்கடி தமிழ் வாக்கியத்துக்கு இங்கிலீஷ் translation ..?
இலங்கை, மற்றும் சுத்தமான மலேசியத் தமிழ் வாசகர்களுக்காக அது! அவர்களுக்கு நம் அளவிற்கு தமிழ் சொற்களில் பாண்டித்யம் இருக்காது என்பதற்காக அது!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எனக்கு 10வருடத்துக்கு முன்னாடி சனி ஒரு ஏழரையை போட்டு (4லே ஒரு இடத்தில் கூட 30பரல் இல்லை.)சொந்தஊரை விட்டு துரத்தினார்.இன்றைக்கும் நினைத்தால் அந்த பகீர் பாடம்தான் சில விஷயங்களில் காலை வைக்கும்முன் யோசிக்க வைக்கிறது..
வேண்டவே வேண்டாம் என்று தீர்மானமாக விலகிட வழி செய்கிறது. அந்த நாட்களில் என் கூட பக்கத்துணையாக இருந்த நல்ல நண்பர்களை மட்டும் தொடர்ந்து நல்ல தொடர்பில் வைத்துள்ளேன்.
ராகு எனக்கு நல்ல விசுவாசமான நண்பர்களை கொடுத்தார்.(நவாம்சத்தில் உச்சம்.)நல்ல சுகானுபவங்களை கொடுத்தவர் கூடவே திடீர் தோல்வியையும் கொடுத்தார்..
டிகிரியை கொடுத்தவர் அதையே கெடுக்கவும் செய்தார்.(பழியை யார் மேலயாவுது போட்டுட்டா கொஞ்சம் நிம்மதிதானே?)
KMR krishnan அண்ணாச்சியின் கேள்வியை அபிடியே நானும் ரிபீட் வுட்டுக்குறேன்..////
நல்லது. நன்றி மைனர்!
/////Shiva said...
ReplyDeleteஅன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு வணக்கம், சனி பற்றிய பாடம் - தொழில்/உத்தியோகம் எப்படி
இருக்கும் என்ற விளக்கம் அருமை. வழக்கம் போல் சுய ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, நமக்கு எப்படி
என்று பார்த்தால் சரியாக வரவில்லையே? மேஷ லக்னம், இதற்கு பத்தாம் வீடு மகரம், அங்கே இருந்து
தற்போது சனி உள்ள கன்னி வரை எண்ணினால் ஒன்பதாம் வீடாக வருகிறது, சனியின் சுய பரல் ஐந்து, ,
இன்னும் தொழில் முன்னேற்றம் எதையும் காணோமே, சனி கன்னிக்கு வந்து ஆறு மாதம் ஆகப்போகிறதே.
தயவு செய்து விளக்கம் சொல்லும்படி வேண்டுகிறேன்
=லக்ஷ்மணன்/////
ஒரு விதியை (Rule) வைத்துக்கொண்டு மட்டும் எப்படிப் பலன் பார்ப்பீர்கள்? பத்தாம் வீட்டை வைத்து மற்ற விதிகளையும் பாருங்கள். அதற்கு முன் பழைய பாடங்கள் அனைத்தையும் நன்றாகப் படியுங்கள்.
/////ngs said...
ReplyDeleteநீங்கள் நடத்தும் பாடம் புரிகிறது.இதில் ஒன்றுடன் ஓன்று சம்மதப்பட்டிருப்ப்பதால் கணிப்பதற்கு சிரமமாக
இருக்கிறது.பரவாயில்லை செந்தமிழும் நா பழக்கம் விடுங்கள்.ஒரு கேள்வி துலாம்னுக்கு சுக்கிரன் ஆட்சி ,சனி
உச்சம் இரண்டும் அந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்(என்னுடைய நண்பனின் ஜாதகத்தில் உள்ளது
என்னக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை .அதுவும்11 ஆம் இடம் )/////
துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அவன் உச்சமடைந்து லக்கினத்தில் அதுவும் லக்கினாதிபதியுடன் இருப்பது பல நன்மைகளைத்தரும். அந்த நன்மைகள் அவர்களுடைய தசா/புத்திகளில் கிடைக்கும்
/////Strider said...
ReplyDeleteAyya 7 1/2 Saniyin pothu Kalil Adi padum enbathu unmaiya?/////
அஜாக்கிரதையாக இருந்தால் காலில் எப்போது வேண்டுமென்றாலும் அடிபடும்:-))))
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////// Jathagathil Sani Ucham adainthu irunthal 7 1/2 Sani bathipu kuraiyuma?//////
பாதிப்பு குறையும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///Vinayagar Sani pidika varum pothu "Inru poi Nalai vaa" enrum Anjeneyar Ramar Palam Katum velaiyil Sani avarai pidithagavum Sanieswaranai Malai/Karkal kondu avar aluthiyathal Sani avarai vitu vitathagavum
koorum Kathigal kelvi patu irukingala?//////
கேட்டு இருக்கிறேன். நன்றி
அருமையான பாடம்.
ReplyDeleteவிதித்தப்படி தான் நடக்கும் எனில் நாம் எச்சரிக்கையாக இருந்தாலும் அது நடந்தே தீரும் தானே. நல்லவனாக இருந்தால் கெடுதல் தவிர்க்கப்படுமோ.. இதற்கும் நீங்கள் நிச்சயம் முந்தைய பாடங்களில் பதில் சொல்லி இருப்பீர்கள்... தேடிப் பார்க்கிறேன்.
நான் புதிதாகச் சேர்ந்த மாணவன். பழைய மின்னஞ்சல் பாடங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
/////Sathish K said...
ReplyDeleteஅருமையான பாடம்.
விதித்தப்படி தான் நடக்கும் எனில் நாம் எச்சரிக்கையாக இருந்தாலும் அது நடந்தே தீரும் தானே. நல்லவனாக இருந்தால் கெடுதல் தவிர்க்கப்படுமோ.. இதற்கும் நீங்கள் நிச்சயம் முந்தைய பாடங்களில் பதில் சொல்லி இருப்பீர்கள்... தேடிப் பார்க்கிறேன்.
நான் புதிதாகச் சேர்ந்த மாணவன். பழைய மின்னஞ்சல் பாடங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.////
உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் மின்னஞ்சல் பாடங்களை அனுப்ப முடியும். எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com