மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.2.10

வெற்றியின் ரகசியம் என்ன?



+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெற்றியின் ரகசியம் என்ன?

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC)

அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன் வந்து அவரை சந்தித்தான். வெற்றியின் ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச் சந்தித்தான் அவன்.

தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும் நடந்தான்.

மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

அப்போதுதான் அது நடந்தது.

சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.

ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில் இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை.

ஒரு நிமிட மரணப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். முகம் சிவந்துவிட்டது. மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.

சாக்ரடீசின்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அமைதியாகக் கேட்டான்:

“ஐயா, ஏன் இப்படிச் செய்தீர்கள்?”

“செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல் முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார் சாக்ரடீஸ்.

“காற்று. சுவாசிப்பதற்கான காற்று!”

“வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ? வெற்றியும் அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம்
ஒன்றும் இல்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படி உள்ளது கதை?

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

28 comments:

  1. நல்ல கதை. எதுவும் போராடி பெற்றால்தான் அதற்கு மதிப்பு. வாழ்க்கையில் இருக்கும் ஒரு முரண்பாடு என்னவென்றால் படுத்துக் கொண்டே ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். அதிகம் போராடி தோற்றவர்களும் இருக்கிறார்கள். முயற்சி, போராட்டம் இவற்றை சிறுமை படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. ஒரு உதாரணத்திற்கு சொன்னேன்.

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    சாக்ரடீஷின் தத்துவத் துளிகளில் ஒன்று.
    அது மிகவும் நன்று.

    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  3. பதிவிற்கு நன்றி.

    கால நேரம் சரியா இல்லை என்றால் போராட்டம் நீண்டுகொண்டே போகும் ஆனால் இறைவனின் அருள் இருந்தால் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
  4. படித்த கதைதான் என்றாலும், நீங்கள் சொல்லிய விதம் நன்று. நன்றி அய்யா.

    ReplyDelete
  5. அன்பு அய்யாவுக்கு வணக்கம் , சாக்ரடீஷின் தத்துவ கதை முகவும் அழகாக இருந்தது, மூச்சு விடுபவன் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே மனிதன் என்பதை புரியவைத்துவிட்டீர்கள்,நன்றி அய்யா வாழ்த்துக்கள்(Most people don’t plan to fail, they just fail to plan)

    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா.
    நல்ல வேளை சாக்ரடீஸ்
    இப்போது இல்லை.இல்லையென்றால்
    அவரை அடித்தே கொன்று விடுவார்கள்.
    கதை நன்றாகவே இருந்தது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  7. சார் வணக்கம்,
    கதை நல்ல தத்துவமாயிருந்தது வெள்ளமாயிருக்கிற இடத்திலும் பாலைவனத்திலும் தண்ணீரின தேவை/அருமை/பயன்பாடு எப்படி என்பதைப்போல தங்கள காற்றின் அவசியத்தை உணர்த்தியதோடு எந்தந்த பொருள் எப்பொழுது நம்க்கு தேவையோ அது கிடைத்துவிட்டால் வெற்றி. இல்லையா சார்.பயற்சி வகுப்பு ஜாதக புத்தகம் இதைப்பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே. புத்தகம்வேணும்.
    சுந்தரி

    ReplyDelete
  8. /////ananth said...
    நல்ல கதை. எதுவும் போராடி பெற்றால்தான் அதற்கு மதிப்பு. வாழ்க்கையில் இருக்கும் ஒரு முரண்பாடு என்னவென்றால் படுத்துக் கொண்டே ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். அதிகம் போராடி தோற்றவர்களும் இருக்கிறார்கள். முயற்சி, போராட்டம் இவற்றை சிறுமை படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. ஒரு உதாரணத்திற்கு சொன்னேன்./////

    அதைக்கவியரசர் கண்ணதாசனும் தன் பாடலில் எழுதிவைத்துவிட்டுப்போனார்:
    “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை!

    ReplyDelete
  9. ////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், சாக்ரடீஷின் தத்துவத் துளிகளில் ஒன்று.
    அது மிகவும் நன்று. நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  10. /////dhilse said...
    Dear sir,
    Story, super.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  11. ////மதி said...
    பதிவிற்கு நன்றி.
    காலநேரம் சரியா இல்லை என்றால் போராட்டம் நீண்டுகொண்டே போகும் ஆனால் இறைவனின் அருள் இருந்தால் வெற்றி நிச்சயம்.////

    நிதர்சனமான உண்மை! நன்றி~!

    ReplyDelete
  12. /////பித்தனின் வாக்கு said...
    படித்த கதைதான் என்றாலும், நீங்கள் சொல்லிய விதம் நன்று. நன்றி அய்யா./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம் , சாக்ரடீஷின் தத்துவ கதை முகவும் அழகாக இருந்தது, மூச்சு விடுபவன் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே மனிதன் என்பதை புரியவைத்துவிட்டீர்கள்,நன்றி அய்யா வாழ்த்துக்கள்(Most people don’t plan to fail, they just fail to plan)
    அன்புடன் ஜீவா//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    நல்ல வேளை சாக்ரடீஸ் இப்போது இல்லை.இல்லையென்றால் அவரை அடித்தே கொன்று விடுவார்கள்.
    கதை நன்றாகவே இருந்தது. நன்றி அய்யா.

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  15. /////sundari said...
    சார் வணக்கம்,
    கதை நல்ல தத்துவமாயிருந்தது வெள்ளமாயிருக்கிற இடத்திலும் பாலைவனத்திலும் தண்ணீரின தேவை/அருமை/பயன்பாடு எப்படி என்பதைப்போல தங்கள காற்றின் அவசியத்தை உணர்த்தியதோடு எந்தந்த பொருள் எப்பொழுது நம்க்கு தேவையோ அது கிடைத்துவிட்டால் வெற்றி. இல்லையா சார்.பயற்சி வகுப்பு ஜாதக புத்தகம் இதைப்பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே. புத்தகம்வேணும்.
    சுந்தரி////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி! புத்தகம் ஏப்ரல் மாதம் வெளிவரும் சகோதரி!

    ReplyDelete
  16. ராகுவின் ராகு காலத்திற்கான பதிவிற்கு பிறகு கேதுவின் எமகண்டத்தைப் பற்றி பதிவிடுவீர்கள் என்று நினைத்தேன். தங்களுக்கு நேரமின்மை பிரச்சினை என்பது எமக்குப் புரிகிறது. நான் ராகு எமகண்ட காலங்களை ஒரு பொருட்டாக என்றும் எடுத்துக் கொண்டது கிடையாது. திருஞான சம்பந்தர் நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது என்று சொன்னது போல் இவையெல்லாம் நம்மை பெரிதாக என்ன செய்து விட போகிறது என்ற எண்ணம் தான் காரணம்.

    இரண்டு நாட்களுக்கு சேர்த்து இரண்டு பின்னூட்டமாக இட்டு விட்டேன். எனக்கு வாரம் 5 நாட்கள் வேலை. சனி ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை. மீண்டும் திங்களன்று வந்து பதிவுகளைப் படித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  17. நல்ல கதை. எதுவும் போராடி பெற்றால்தான் அதற்கு மதிப்பு.

    ReplyDelete
  18. இராமகிருஷ்ண பரமஹம்சரும் இந்தக்கதையை இறைவனை உணர இப்படிப்பட்ட உயிர்போகும்போது அல்லது உயிருக்குப் போராடும் மனநிலை வேண்டும் என்கிறார். அந்தக்கதையிலும் குரு தண்ணீருக்குள்தான் சீடனை அமுக்கியதாகச் சொல்லியுள்ளார். பரம ஹம்சருக்குப் பல ஆங்கிலம் படித்த‌
    சீடர்கள். தான் அவர்களுக்கு உபதேசம் செய்வது போலவே அவ்ர்களிடமும் அவர்களுக்குத் தெரிந்ததை சத்சங்க‌த்தில் பேசச் சொல்லியும், படிக்கச் சொல்லியும் கேட்பார்.அப்படி,சுவாமி விவேகானந்தர் போல யாராவது சாக்ரடீஸ் பற்றி சத்சங்கத்தில் பேசியதைக் கூட பரமஹம்சர் பேசியிருக்கலாம்.
    இதை ஏன் சொல்கிறேன் என்றால் பரமஹம்சர் தன் முக்தி தினம் வரை தானும் கற்றுக் கொண்டு, பிறருக்கும் கற்பித்தார். அந்தணரின் அறு தொழில்களில் இவை இரு தொழில்கள்

    ReplyDelete
  19. வாத்தியார் ஐயா !
    வணக்கம்.

    கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்,
    இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC)

    நிற்க!!!

    அந்நிய தேசத்தில் வாழும்!, நாங்கள் ( நான்!கண்ணன் என்ற எனது பெயரை) இந்து பாரம்பரியத்தை காக்க! நாங்கள் படும் பாடு உள்ளதே ஐயா

    கண்ணன் ஆகிய கள்வனிடமே!

    மதம் மாற்றும் எண்ணத்துடன், வலம்வரும் வேட்டைநாய்கள்!, சொறிநாய்கள்! , உயிரோடு மனிதனின் மாமிச கறி தின்னும் உற்ற உறவுகளை கூட பிரிக்கும் எண்ணத்துடன், வெறிபிடித்த (மதவெறி)

    கலியுக அரக்க குணம் படைத்த, கல்வி ஞானத்தில் மாபெரும் பட்டங்கள் வாங்கிய, படித்த பூதங்கள், தனது சொந்த மண்ணில் தனது திறமையை (மதம் மாற்றும்) காண்பிக்க இயலாது,

    அந்நிய தேசத்தில் மதம் என்னும் நாமத்தை மட்டும் கொண்டு (அடையாளத்தை கொண்டு) செயலில் அல்லது வேலையில் அல்லது படிப்பில் அல்லது திறமையில்! ஒன்றில் கூட தனி திறமை இல்லாது

    வெறும் வார்த்தை மற்றும் பதவியில் மட்டும் இருந்து கொண்டு

    மோட்சம் ! புத்தி! ஞானம் ! செல்வம் , பெண் , பொன் , பொருள் , வேலை , விஞ்ஞானம் , அறிவியல் , புவியியல் , பொறியல் , கூட்டுக்கறி, சாம்பார், சால்னா, சப்பாத்தி என்ற நிலை இல்லாத வார்த்தை ஜாலங்களை மட்டும் வைத்து கொண்டு!

    கலியுகத்தின் புனிதமதம்! என்று பல அண்ட சகாசர பொய்களை கூறிக்கொண்டு, தற்பொழுது உள்ள உலகத்தில் ஒரு தாய்க்கு பிறந்த இரு சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு! நான் தான் முதலிடம்! நான் அதிவிரைவில் முதலிடம் வந்து விடுவேன் என்று, நித்தம் அடுத்த ஆத்மாவை! அல்லது ஜீவனை! அணு அணுவாக கொல்லும்! கொலை செய்யும் அல்லது தங்களுக்கு உள்ளேயே தினமும் கொன்று குவிக்கும் விலங்குகளை என்ன வென்று சொல்லுவது வாத்தியாரே !!!

    திறமை உள்ளவரை! சாது குணம் கொண்டவரை! எல்லோரையும் சகோதர சகோதரியாக உள்ளன்போடு (காணும்) பார்க்கும் நபரை! நல்லது செய்த! செய்துகொண்டு உள்ள நபர் வாழ! வழி கூறுங்கள் வாத்தியாரே!

    எந்த! ஒரு சுயநலம் இன்றி

    சாதியோ! உலகில், முதலில் உள்ள மதமோ! இரண்டாவது உள்ள மதமோ! மாநிலமோ! தனது சொந்த நாடோ என்று கூட பாராமல் பல வீட்டின் விளக்குகளை ஏற்றிவைத்தவனை (துன்பங்கள் பல அனுபவித்து) !, இன்று அதிகபடியான வீட்டு விளக்குகளை அணைக்க தூண்டுகின்றவர்களை என்ன வாத்தியாரே செய்ய!

    ( அணைக்கவும் தெரியும்! ஆனால் மனம் இல்லாமல்)

    தாங்கள் மிகவும் அருமையாக பொன்வரிகளில் வரைந்து உள்ளீர்கள் ! கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்,

    இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC) என்று

    முதலில் மற்றும் இரண்டாவது உள்ளவர்களின் மதங்கள் தோன்றும் முன்னர், கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், போல் கோடானு கோடி புனித ஆத்மாக்கள்! அன்று தோன்றவில்லையா! ஏன்! இன்றும் கூட நமது இந்து மதத்தில் இல்லையா !

    ஏன்! கண்களை மூடிக்கொன்று உலகம் இருட்டு என்கின்றனர் மூடர்கள் வாத்தியாரே!!!

    எம்பெருமான் மாயகண்ணனை போல் வாழ்தால் தான் இன்று வாழமுடியுமா வாத்தியாரே !!!

    இதற்காக தான் அன்றே எம்பெருமான்

    கருநீல வண்ணன் கண்ணன் வாழ்ந்து

    காட்டி சென்றாரா வாத்தியாரே!!


    இது தனி நபரின் பிரச்சனை மட்டும் இல்லை ! தாங்கள் தான் கூறியுள்ளீர்கள் நன்றாக, நமது பண்பாடு! , ஆன்மிகம்! என நமது பாரம்பரியத்தை இளைய தலைமுறை கட்டி காக்கவேண்டும் என்று ,

    வாத்தியாரின் பதிலுக்காக ?

    ReplyDelete
  20. //////ananth said...
    ராகுவின் ராகு காலத்திற்கான பதிவிற்கு பிறகு கேதுவின் எமகண்டத்தைப் பற்றி பதிவிடுவீர்கள் என்று நினைத்தேன். தங்களுக்கு நேரமின்மை பிரச்சினை என்பது எமக்குப் புரிகிறது. நான் ராகு எமகண்ட காலங்களை ஒரு பொருட்டாக என்றும் எடுத்துக் கொண்டது கிடையாது. திருஞான சம்பந்தர் நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது என்று சொன்னது போல் இவையெல்லாம் நம்மை பெரிதாக என்ன செய்து விட போகிறது என்ற எண்ணம் தான் காரணம்.//////

    உண்மை! உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  21. /////Vasanthan said...
    நல்ல கதை. எதுவும் போராடி பெற்றால்தான் அதற்கு மதிப்பு./////

    ஆமாம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////kmr.krishnan said...
    இராமகிருஷ்ண பரமஹம்சரும் இந்தக்கதையை இறைவனை உணர இப்படிப்பட்ட உயிர்போகும்போது அல்லது உயிருக்குப் போராடும் மனநிலை வேண்டும் என்கிறார். அந்தக்கதையிலும் குரு தண்ணீருக்குள்தான் சீடனை அமுக்கியதாகச் சொல்லியுள்ளார். பரம ஹம்சருக்குப் பல ஆங்கிலம் படித்த‌
    சீடர்கள். தான் அவர்களுக்கு உபதேசம் செய்வது போலவே அவ்ர்களிடமும் அவர்களுக்குத் தெரிந்ததை சத்சங்க‌த்தில் பேசச் சொல்லியும், படிக்கச் சொல்லியும் கேட்பார்.அப்படி,சுவாமி விவேகானந்தர் போல யாராவது சாக்ரடீஸ் பற்றி சத்சங்கத்தில் பேசியதைக் கூட பரமஹம்சர் பேசியிருக்கலாம்.
    இதை ஏன் சொல்கிறேன் என்றால் பரமஹம்சர் தன் முக்தி தினம் வரை தானும் கற்றுக் கொண்டு, பிறருக்கும் கற்பித்தார். அந்தணரின் அறு தொழில்களில் இவை இரு தொழில்கள்///////

    தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  23. /////kannan said...
    வாத்தியார் ஐயா !
    வணக்கம்.
    கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்,
    இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC)
    நிற்க!!!
    அந்நிய தேசத்தில் வாழும்!, நாங்கள் ( நான்!கண்ணன் என்ற எனது பெயரை) இந்து பாரம்பரியத்தை காக்க! நாங்கள் படும் பாடு உள்ளதே ஐயா........................................................>>>>>>>>>>>>>>>>>>>>>> வாத்தியாரின் பதிலுக்காக ?///////

    இதில் நான் பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை! கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC) என்று ஒரு தகவலுக்காகக் கொடுத்துள்ளேன். வேறு நோக்கம் எதுவுமில்லை.

    கவியரசர் கண்ணதாசன் அடிக்கடி சொல்வார்: ”உலகில் தோற்றுவித்தவன் (founder) இல்லாத ஒரே மதம் இந்துமதம். அதை யாராலும் அழிக்க முடியாது. தன்னைத் தானே காக்கும் சக்தி அதற்கு உண்டு.”

    ஆகவே நீங்கள் ஆதங்கம் கொள்ளாமல் இருப்பதே நல்லது!

    ReplyDelete
  24. Dear Sir,

    In your busy schedule, I really wonder how you could collect so many information , stories and cosolidate everything which is very useful in practical life. You are Great !!

    ReplyDelete
  25. ////karthik said...
    Dear Sir,
    In your busy schedule, I really wonder how you could collect so many information , stories and cosolidate everything which is very useful in practical life. You are Great !!/////

    ஆர்வம், முயற்சி, உழைப்பு இம்மூன்றும் இருந்தால் முடியாதது ஒன்றும் இல்லை!

    ReplyDelete
  26. /////Sabarinathan TA said...
    Arumayana Kathai./////

    நல்லது. நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com