++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வியும் நானே! பதிலும் நானே!
எப்போதும் மகிழ்ச்சி என்பது சாத்தியமா?
மகிழ்ச்சியை, மகிழ்ச்சியான நிலையை அல்லது சூழ்நிலையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமுடியாது.
எல்லோரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கத்தான் விரும்புகிறோம்.
நடக்கிறதா?
நடக்காது!
ஏன் நடக்காது?
மகிழ்ச்சிக்கு அளவுகோல் இல்லை!
மகிழ்ச்சி என்பது ஒரு செயல் அல்ல! செயலின் விளைவுதான் மகிழ்ச்சி. செயலுக்கு சாதகமான விளைவு உண்டாகும்போது மகிழ்ச்சி உண்டாகும். இல்லையென்றால் மகிழ்ச்சி இருக்காது.
எடுத்துச் செய்யும் எல்லாச் செயல்களுமே நல்ல விளைவுகளைக் கொடுக்கும் என்றால் அல்லது நாம் எதிர்பார்க்கும் விளைவுகளைக் கொடுக்கும் என்றால், தொடர்ந்து மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுவதற்குச் வாய்ப்பு (சான்ஸ்) உண்டு.
சுருக்கமாகச் சொன்னால், நாம் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும்.
சரி, நினைப்பதெல்லாம் நடக்குமா? நியாயமான, நம் தகுதிக்கேற்ற நினைப்புக்களும், அதைச் செயல் படுத்துவதற்கான, முயற்சியும், உழைப்பும் இருந்தால் - அது நடக்கும். நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
அதற்குக்கூட நமக்கு (ஜாதகப்படி) நல்ல நேரமும், தெய்வ அருளும் வேண்டும்.
அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இப்ப்டிப் பாட்டில் சொன்னார்:
”நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நெருப்பு என்பதற்கு விளக்கம் சொல்லலாம். அதன் தன்மை எல்லா இடத்திலும் ஒன்றுபோல இருக்கும்.. மகிழ்ச்சிக்கு அப்படி விளக்கம் சொல்ல முடியாது. அது மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.
சின்னக் குழந்தைக்கு ஒரு எக்ளேர் சாக்லெட் மகிழ்ச்சியைக்கொடுக்கும். ஒரு குடிமகனுக்கு, இலவசமாகக் கிடைக்கும் ஒரு பாட்டில் விஸ்கி அல்லது பிராந்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். வேலையில் இருப்பவனுக்கு, பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒரு இளைஞனுக்கு, அழகான இளம் பெண்ணின் சிநேகிதம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.வயதானவர்களுக்கு நோயில்லா வாழ்வு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒரு அரசியல்வாதிக்கு, அமைச்சர் பதவி மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஏழைக்குப் பணமும், பணக்காரனுக்கு மரியாதை மற்றும் புகழ் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இப்படி மகிழ்ச்சியைக் கொடுக்கும்
விஷயங்களை வகைப்படுத்தி எழுதிக்கொண்டே போகலாம்.
மகிழ்ச்சியைப்பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?
4ஆம் வீடுதான் மகிழ்ச்சிக்கான இடம் என்கிறது.
நான்காம் இடம்தான், நல்ல தாய், சொத்து, சுகம், இடம், வண்டி, வாகனம், கல்வி என்று அடிப்படை மகிழ்ச்சிகளை அள்ளித்தரும் இடம்.
4ஆம் வீடு, 4ஆம் அதிபதி, 4ஆம் இடத்திற்குக் காரகர்களான சந்திரன், மற்றும் சுக்கிரன் ஆகியவைகள் ஒருவருடைய ஜாதகத்தில் மேம்பட்டு இருந்தால், மகிழ்ச்சி நிலவும்.
அதோடு மற்ற சில விஷயங்களும் ஜாதகத்தில் நன்றாக இருக்கவேண்டும். குருவும், புதனும் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். செவ்வாயும் வலுவாக இருக்க வேண்டும்.
மகிழ்ச்சியைக் கொடுப்பதில் முதல்தரக் கிரகம் என்றால் அது குருபகவான் மட்டுமே! அவர் நன்றாக இருந்தால் வாழ்க்கையின் அத்தனை செல்வங்களும் (16 பேறுகள் என்கிறார்களே - அவை அனைத்தும்) ஜாதகனைத் தேடிவரும். லக்கினத்தில் குரு வலுவாக அமையப் பெற்ற ஜாதகன், எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். அவனுடைய ஜாதகத்தைப் பார்த்துப் பலன் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
லக்கினாதிபதி 4ல் இருந்தாலும் அல்லது 4ஆம் அதிபதி லக்கினத்தில் இருந்தாலும், ஜாதகனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அந்த இரண்டு வீடுகளையும் தவித்து, ஜாதகத்தில் வேறு இடங்களில் அமையப்பெற்ற சுபக் கிரகங்களும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் வல்லமை பெற்றவை.
சுபக்கிரகங்கள் (சந்திரன், புதன், சுக்கிரன், அல்லது குரு போன்ற கிரகங்கள்) கேந்திரம் அல்லது திரிகோணங்களில் இருக்கவேண்டும். அசுப கிரகங்கள் (சூரியன், செவ்வாய், சனி, ராகு & கேது போன்ற கிரகங்கள்) 3, 6,அல்லது 11ஆம் வீடுகளில் இருக்க வேண்டும். ஜாதகத்தில் இப்படியாக அமையப்பெற்றவன் வெற்றி பெறுபவனாகவும், மகிழ்ச்சி உடையவனாகவும் இருப்பான்.
செவ்வாய் மன உறுதிக்கும், விடாமுயற்சிக்கும், உரிய கிரகம். ஆதலால் அவரை இந்த ஆட்டத்திற்கு சேர்த்துக்கொள்ளவில்லை. நமது செயல்பாடுகளை, திறமையோடு செய்து முடிப்பதற்கு உதவுபவர் அவர்தான்!
Mars gives us the necessary drive to do our works successfully.
மகிழ்ச்சியைத் தரும் அல்லது வழங்கும் சில கிரக அமைப்புக்கள்:
1. மிதுனம் அல்லது கன்னியில் புதன் இருப்பதுடன், அது ஜாதகனின் லக்கினமாகவும் இருந்தால், ஜாதகனின் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
2. சுக்கிரன் 4ஆம் வீட்டில் இருப்பது.
3. குருவின் பார்வையில் சந்திரன் இருக்கும் அமைப்பு.
4. கடகராசியில் சந்திரன் வலுவாக இருந்தால், மற்ற கிரகங்களின் தசா/புத்திகளில், துவக்கத்தில் மகிழ்ச்சி, விருது, செல்வம், என்று அனைத்தையும் கொடுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்.
5.குரு ஜாதகத்தில் வலுவாக (கேந்திரம் அல்லது திரிகோணங்களில் இருக்கும் நிலைப்பாடு) இருந்தால், ஜாதகனின் மகிழ்ச்சியில் குறையிருக்காது. தனது தசா/புத்திகளில் அவர் ஜாதகனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்.
6. லக்கின அதிபதி வலுவாக 4ஆம் வீட்டில் இருந்தால், அவர் ஜாதகனுக்கு, இடம், வீடு, வாகனம், தாய்வழிச் சொத்துக்கள் என்று அனைத்தையும் கொடுத்து ஜாதகனை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்.
7. அதேபோல நான்காம் வீட்டு அதிபதி, லக்கினத்தில் வந்து அமர்ந்திருந்தால், ஜாதகன் அதிகம் கற்றவனாகவும், மகிழ்ச்சியை உடையவனாகவும் இருப்பான்.
8. நான்காம் அதிபதி, இரண்டாம் வீட்டில் இருந்து, இரண்டாம் வீட்டிற்கு உரிய கிரகம், தன் சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது உச்சமடைந்திருந்தாலும் (ராசி அல்லது நவாம்சத்தில்) ஜாதகனுக்கு பலவிதத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல குடும்பவாழ்க்கையும் கிடைக்கும்.
9. நான்காம் அதிபதி வலுவாக கேந்திரம் அல்லது திரிகோணங்களில் அமர்ந்திருந்தால், ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சியை உடையதாக இருக்கும்.
10. சந்திரனுடன் கூட்டாகச் சேர்ந்திருக்கும் கிரகங்கள் (சனி, ராகு & கேதுவைத் தவிர்த்து) ஜாதகனுக்கு மகிழ்ச்சியைத் தங்கள் தசா/புத்திகளில், வாரி வழங்கும்!
11. மிதுனத்தில் இருக்கும் சந்திரன் ஜாதகனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
12. அதேபோல மிதுனத்தில் இருக்கும் சந்திரன், செவ்வாயின் பார்வையைப் பெற்றால், ஜாதகன்/ஜாதகிக்கு, அறிவு, அழகு, செல்வம், உடல்வலிமை, மகிழ்ச்சி என்று அனைத்தையும் கொடுக்கும்.
13.மீனத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மகிழ்ச்சியை உடையவனாகவும், மற்றவர்களை வெல்லும் மேன்மை உடையவனாகவும் இருப்பான். அத்துடன் இசை, கலை, சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவனாகவும் இருப்பான்.
14. ரிஷபம் அல்லது துலா ராசியில் சுக்கிரன் இருப்பதோடு, சந்திரனின் பார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகன் மதிப்பு, மரியாதை, சொத்து, செல்வம், மகிழ்ச்சி என்று அனைத்தையும் உடையவனாக இருப்பான்.
15. சுயவர்க்கத்தில் சந்திரன் 8 பரல்களுடன் இருந்தால், ஜாதகன் மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.
16. ஒன்பதாம் வீட்டில் சந்திரன் இருந்தால், ஜாதகன் அறிவு, செல்வம், மகிழ்ச்சி, நல்ல குழந்தைகளை உடையவான இருப்பான். அதோடு பெண்களை ஈர்க்கக்கூடியவனாக இருப்பான்.பக்திமானாகவும், குடும்ப பாரம்பரியத்தைக் காக்கக்கூடியவனாகவும் இருப்பான்.
17.இரண்டாம் வீட்டில் சந்திரன் இருந்தால், ஜாதகனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். பணம் சேரும். அதிக அளவில் நண்பர்களும் கிடைப்பார்கள்.
18. சுக்கிரனும், சந்திரனும் கூட்டாக லக்கினத்தில் இருந்தால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
19. பதினொன்றாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அவர் தனது தசா/புத்திகளில் ஜாதகனுக்கு எல்லாவிதமான மகிழ்ச்சியையும் கொடுப்பார். The native will enjoy money, good food, nice clothes, recreation, wife, son and happiness
20. சிம்மராசியில் சந்திரன் இருந்து, அவர் புதனின் பார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகனின் வாழ்வில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
குருபகவான்தான் அறிவு, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், வளர்ச்சி, ஞானம், அனுபவங்கள், செல்வம், நிதி, நீதி, நியாயம், தர்மம், கருணை, இரக்கம், புத்திசாலித்தனம், இறையுணர்வு ஆகியவற்றிற்கான கிரகம். அதை மனதில்
வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

அய்யா,
ReplyDeleteஎனக்கு மிதுன ராசி (மிதுன ராசியில் சந்திரன்) மற்றும் லக்னம். புதன் கன்னி ராசியில், நான்காம் வீட்டில். சுக்கிரனும் கன்னி ராசியில் (நீச்ச பங்க ராஜ யோகம்), புதனுக்கு கேந்திர அதிபதி தோஷம் என்று சிலர் சொல்லுகிறார்கள். குரு ஏழாம் வீட்டில் சனியுடன். வெளி உலகக்கு நான் மகிழிசியாக இருப்பதாக (அவனுக்கு என்ன குறை என்று என் காது படவே பேசுவார்கள்) தோன்றினாலும் என் மனதளவில் அமைதி இல்லை.
ஒரு சிலர் என் வாழ்கையின் முதல் பகுதி மன போராட்டமாக இருக்கும், பின்னர் ராஜ யோகம் தான் என்றனர். உன்ன உணவு, உடுக்க உடை மற்றும் இருக்க இருப்பிடம் தான் சந்தோஷமா?
நன்றி,
ஸ்ரீதர்
வணக்கம் சார்,
ReplyDeleteஇந்த பாடம் நான் திருப்பி திருப்பி வந்து படிப்பேன், மகிழ்ச்சி தரும் கிரகம் சந்திரனும் அண்ட் நாலாம் வீடும் மட்டும் எண்டுதான் முதல்ல எனக்கு தெரியும்,
ராசி லக்னம் மீனமாக இருந்து, மிதுனம் நாலாம் வீடாக வரும், ஆனால் நவாம்ச லக்னம் கும்பமாக இருந்து, அந்த சனிபகவான் மிதுனத்தில் இருந்தால் (with guru & sukran aspecting saturn), இந்த பலன் நவாம்சத்தையும் சேர்த்து எப்படி இருக்கும் சார்?
நன்றி
தனுஜா
வணக்கம் ஐயா,
ReplyDeleteஇன்றைய பதிவு நன்றாக இருந்த்து,
ஆனால் ஒரு சந்தேகம் அது என்ன என்றால்,
4ஆம் வீடு அதன் அதிபதி குரு ஆக அமைந்து அவர் 7ஆம் வீட்டில்(சொந்த வீட்டில்) அமர்ந்து இருந்தால், ஜாதகனக்கு செல்வம், மகிழ்ச்சி என்று அனைத்தையும் அவன் மனைவி மூலமாக ஜாதகனக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? அல்லது இந்த அமைப்பின் பலன் எவ்வாறு இருக்கும்?
நன்றி ஐயா!
சார் வணக்கம்,
ReplyDeleteஅப்போ லக்கனத்தில்ல(சிம்மத்தில்) குரு 35 ப்ரலகள் சுயவர்க்கம் 7 விருச்சிகத்தில் லக்கனாதிபதி சூரியன் புதனோடு இருக்கிறார் மகரத்தில் செவ்வாய்
சுயவ்ர்க்கம் 7 ப்ரல் மொத்தம் 38 அப்புறம் 3ல் கேது ஆ எனக்கு சந்தோஷத்தில்ல குறையிருக்கதா ஆ புனர்பூ தோஷமிருக்குது அதுதான் என்க்கு
ச்ந்தோஷத்தை கெடுக்குது அப்புறம வி ர யோகத்தையும் குடுக்கும் சார்.
இனறையா பாடம் நல்லாயிருந்தது ரொம்ப நன்றி சார்.
சுந்தரி
இந்த பாட்டைப் படித்தவுடன் பி பி ஸ்ரீநிவாஸ் குரல் ஞாபகம் வந்தது.
ReplyDeleteசந்தோஷத்திற்காக நீங்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பில் சில இருந்தாலும், என் சுபாவப்படி கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக இருப்பதால், மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்ப்பது கிடையாது. இதுபோல், மனதளவில் சந்தோஷமாக இருக்க, எந்த அமைப்பு இருக்க வேண்டும்?
நான் அனுப்பிய மெயில் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
மிகவும் நன்றாக உள்ளது அய்யா
ReplyDeleteஇனிய காலை வணக்கம் ஐயா!!!
ReplyDeleteஇரண்டாம் வீட்டில் சந்திரன் இருந்தால், ஜாதகனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். பணம் சேரும். அதிக அளவில் நண்பர்களும் கிடைப்பார்கள்.
ஆனாலும் ஒரு நல்ல ஹாப்பியா இருந்த 3 நாள் பீலிங்க்ஸ் ஆ இருக்கு
சந்திரன் சனியின் வீட்டில்(கும்பம்) போய் இருப்பதும் ஒரு காரணமா இருக்குமோ????
நான்காம் வீட்டின் அதிபதியான சுக்ரன், அதன் சொந்த வீட்டிலேயே புதனுடன் சேர்ந்து 29 பரல்களுடன் இருந்தாலும் பாபா கர்த்தாரியில் உள்ளது. இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா ஐயா?
ReplyDeleteஅன்பு அய்யா வணக்கம், "மகிழ்ச்சி என்பது செயல் அல்ல!செயலின் விளைவுதான் மகிழ்ச்சி"
ReplyDeleteமிகவும் அருமையான விளக்கம், நல்ல பாடம் வாழ்த்துக்கள்
அன்புடன் ஜீவா
அய்யா வணக்கம்,
ReplyDeleteஇன்றய பாடம் அருமை ....மகிழ்ச்சி பற்றிய ஜோதிட அமைப்புகளை மனம் மகிழம் வண்ணம் விளக்கி உள்ளீர்கள்...
எனக்கு குரு லக்னாதிபதி (தனுசு லக்னம்) அவர் 4இல் ஆட்சி (6பரல்,4ம் இடத்தில் 32பரல்),மகிழ்ச்சிக்கு குறை வில்லை ஆனால் 4 இல் உடன் ராகு இருகின்றார் அவர் எதாவது விள்ளங்கம் செய்வாரா?
நன்றி வணக்கம்
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteபாடம் அருமை! நன்றிகள்!! பல சங்கதிகள் எனக்குப் பொருந்துகிறது.
நான்குக்கு அதிபதி குரு (லக்னாதிபதியும் அவரே) பதினொன்றில்,உடன் சுக்கிரன் ஆட்சி.
ஐந்தில் சந்திரன்(வர்கோத்தமம்) ஏழாம் பார்வையாக குரு(வர்கோத்தமம்) மற்றும் சுக்கிரனுடன் பரஸ்பரம்.
ஐந்தில் உள்ள சந்திரனின் வீட்டுக்கு சொந்தகாரர் செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்று
சந்திரனை நான்காம் பார்வையில் வைத்துள்ளார்.
தற்போது சந்திரதிசை கடந்த ஏழு வருடங்களில் சந்தோசங்களுக்கு குறைவில்லை.
(கூடுதல் தகவல்; அம்சத்தில்; சுக்கிரன் உச்சம்,புதன் உச்சம்,சூரியன் ஆட்சி,கேது உச்சம்
குருவும், சந்திரனும் வர்கோத்தமம்).
இப்பாடம் எனக்கு ஒரு தெளிவையும் சந்தோசத்தையும் தந்துள்ளது.
"அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும்??" குருவே!
ஐந்துக்கு உரியவன் செவ்வாய் மகரத்தில் உச்சம், நான்கு பரல்கள்.
வீட்டின் பரல் 27 செவ்வாய்க்கு கேந்திரத்தில் குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன்.
நன்றிகள் குருவே!
/////Sridhar Subramaniam said...
ReplyDeleteஅய்யா,
எனக்கு மிதுன ராசி (மிதுன ராசியில் சந்திரன்) மற்றும் லக்னம். புதன் கன்னி ராசியில், நான்காம் வீட்டில். சுக்கிரனும் கன்னி ராசியில் (நீச்ச பங்க ராஜ யோகம்), புதனுக்கு கேந்திர அதிபதி தோஷம் என்று சிலர் சொல்லுகிறார்கள். குரு ஏழாம் வீட்டில் சனியுடன். வெளி உலகக்கு நான் மகிழிசியாக இருப்பதாக (அவனுக்கு என்ன குறை என்று என் காது படவே பேசுவார்கள்) தோன்றினாலும் என் மனதளவில் அமைதி இல்லை.
ஒரு சிலர் என் வாழ்கையின் முதல் பகுதி மன போராட்டமாக இருக்கும், பின்னர் ராஜயோகம் தான் என்றனர். உண்ண உணவு, உடுக்கஉடை மற்றும் இருக்க இருப்பிடம் தான் சந்தோஷமா?
நன்றி,
ஸ்ரீதர்//////
உண்ண உணவு, உடுக்கஉடை மற்றும் இருக்க இருப்பிடம் தான் சந்தோஷமா? என்று ஏன் நினைக்கிறீர்கள்?
அதற்கே உலகின் ஜனத்தொகையில் பாதி அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது!
/////Thanuja said...
ReplyDeleteவணக்கம் சார்,
இந்த பாடம் நான் திருப்பி திருப்பி வந்து படிப்பேன், மகிழ்ச்சி தரும் கிரகம் சந்திரனும் அண்ட் நாலாம் வீடும் மட்டும் எண்டுதான் முதல்ல எனக்கு தெரியும்,
ராசி லக்னம் மீனமாக இருந்து, மிதுனம் நாலாம் வீடாக வரும், ஆனால் நவாம்ச லக்னம் கும்பமாக இருந்து, அந்த சனிபகவான் மிதுனத்தில் இருந்தால் (with guru & sukran aspecting saturn), இந்த பலன் நவாம்சத்தையும் சேர்த்து எப்படி இருக்கும் சார்?
நன்றி
தனுஜா/////
ராசிக்கு மட்டும் லக்கினத்தை வைத்துக் கிரகங்களைப் பாருங்கள். நவாம்சத்திற்கு நேரடியாக கிரகங்களைப் பாருங்கள்.
/////Naresh said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
இன்றைய பதிவு நன்றாக இருந்த்து,
ஆனால் ஒரு சந்தேகம் அது என்ன என்றால், 4ஆம் வீடு அதன் அதிபதி குரு ஆக அமைந்து அவர் 7ஆம் வீட்டில்(சொந்த வீட்டில்) அமர்ந்து இருந்தால், ஜாதகனுக்கு செல்வம், மகிழ்ச்சி என்று அனைத்தையும் அவன் மனைவி மூலமாக ஜாதகனுக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? அல்லது இந்த அமைப்பின் பலன் எவ்வாறு இருக்கும்?
நன்றி ஐயா!////
அங்கிருக்கும் குரு, நேரடியாக லக்கினத்தைப் பார்ப்பதால், எல்லா நன்மைகளையும் ஜாதகனுக்குத் தேடிக்கொடுப்பார். அதோடு நல்ல மனைவியும் கிடைப்பார்.
////sundari said...
ReplyDeleteசார் வணக்கம்,
அப்போ லக்கனத்தில்ல(சிம்மத்தில்) குரு 35 ப்ரலகள் சுயவர்க்கம் 7 விருச்சிகத்தில் லக்கனாதிபதி சூரியன் புதனோடு இருக்கிறார் மகரத்தில் செவ்வாய் சுயவ்ர்க்கம் 7 பரல் மொத்தம் 38 அப்புறம் 3ல் கேது ஆ எனக்கு சந்தோஷத்தில்ல குறையிருக்கதா ஆ புனர்பூ தோஷமிருக்குது அதுதான் எனக்கு சந்தோஷத்தை கெடுக்குது அப்புறம விர யோகத்தையும் குடுக்கும் சார். இனறைய பாடம் நல்லாயிருந்தது ரொம்ப நன்றி சார்.
சுந்தரி////
திருமணமான எல்லாப்பெண்களுமே சந்தோஷமாக இருக்கிறார்களா என்ன? எல்லாத் தீமைகளிலுமே ஒரு நன்மை இருக்கும் சகோதரி!
Uma said...
ReplyDeleteஇந்த பாட்டைப் படித்தவுடன் பி பி ஸ்ரீநிவாஸ் குரல் ஞாபகம் வந்தது.
சந்தோஷத்திற்காக நீங்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பில் சில இருந்தாலும், என் சுபாவப்படி கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக இருப்பதால், மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்ப்பது கிடையாது. இதுபோல், மனதளவில் சந்தோஷமாக இருக்க, எந்த அமைப்பு இருக்க வேண்டும்?
நான் அனுப்பிய மெயில் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.//////
மனதளவில் சந்தோஷப்படுவதற்கு ஐந்தாம் வீடும் (House of mind), மனகாரகன் சந்திரனும் ஜாதகத்தில் வலுவாக இருக்கவேண்டும். உங்களின் மின்னஞ்சலுக்குப் பதில் எழுதுகிறேன்!
/////rajesh said...
ReplyDeleteமிகவும் நன்றாக உள்ளது அய்யா/////
நல்லது.நன்றி!
/////Kumares said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் ஐயா!!!
இரண்டாம் வீட்டில் சந்திரன் இருந்தால், ஜாதகனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். பணம் சேரும். அதிக அளவில் நண்பர்களும் கிடைப்பார்கள்.
ஆனாலும் ஒரு நல்ல ஹாப்பியா இருந்த 3 நாள் பீலிங்க்ஸ் ஆ இருக்கு
சந்திரன் சனியின் வீட்டில்(கும்பம்) போய் இருப்பதும் ஒரு காரணமா இருக்குமோ????//////
குமரேசன் எனும் பெயரே மகிழ்ச்சியைக்கொடுக்கும் பெயர் ஸ்வாமி! வாழ்க வளமுடன்!
//////Dr.Vidhya said...
ReplyDeleteநான்காம் வீட்டின் அதிபதியான சுக்ரன், அதன் சொந்த வீட்டிலேயே புதனுடன் சேர்ந்து 29 பரல்களுடன் இருந்தாலும் பாபா கர்த்தாரியில் உள்ளது. இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா ஐயா?/////
வெள்ளிக்கிழமை துர்கையை வழிபடுங்கள். இருக்கும் இடத்தில் இருந்தே மனதில் நினைத்துக்கொண்டு வழிபடுங்கள். அதுதான் பரிகாரம்!
/////ஜீவா said...
ReplyDeleteஅன்பு அய்யா வணக்கம், "மகிழ்ச்சி என்பது செயல் அல்ல!செயலின் விளைவுதான் மகிழ்ச்சி"
மிகவும் அருமையான விளக்கம், நல்ல பாடம் வாழ்த்துக்கள்
அன்புடன் ஜீவா////
நல்லது.நன்றி!
//////astroadhi said...
ReplyDeleteஅய்யா வணக்கம்,
இன்றய பாடம் அருமை ....மகிழ்ச்சி பற்றிய ஜோதிட அமைப்புகளை மனம் மகிழம் வண்ணம் விளக்கி உள்ளீர்கள்...
எனக்கு குரு லக்னாதிபதி (தனுசு லக்னம்) அவர் 4இல் ஆட்சி (6பரல்,4ம் இடத்தில் 32பரல்),மகிழ்ச்சிக்கு குறை வில்லை ஆனால் 4 இல் உடன் ராகு இருகின்றார் அவர் எதாவது வில்லங்கம் செய்வாரா?
நன்றி வணக்கம்//////
குருவுடன் இருக்கும் ராகுவால் நன்மைகளே உண்டாகும். கவலை வேண்டாம்!
/////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
பாடம் அருமை! நன்றிகள்!! பல சங்கதிகள் எனக்குப் பொருந்துகிறது.
நான்குக்கு அதிபதி குரு (லக்னாதிபதியும் அவரே) பதினொன்றில்,உடன் சுக்கிரன் ஆட்சி.
ஐந்தில் சந்திரன்(வர்கோத்தமம்) ஏழாம் பார்வையாக குரு(வர்கோத்தமம்) மற்றும் சுக்கிரனுடன் பரஸ்பரம்.
ஐந்தில் உள்ள சந்திரனின் வீட்டுக்கு சொந்தகாரர் செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்று
சந்திரனை நான்காம் பார்வையில் வைத்துள்ளார்.
தற்போது சந்திரதிசை கடந்த ஏழு வருடங்களில் சந்தோசங்களுக்கு குறைவில்லை.
(கூடுதல் தகவல்; அம்சத்தில்; சுக்கிரன் உச்சம்,புதன் உச்சம்,சூரியன் ஆட்சி,கேது உச்சம்
குருவும், சந்திரனும் வர்கோத்தமம்).
இப்பாடம் எனக்கு ஒரு தெளிவையும் சந்தோசத்தையும் தந்துள்ளது.
"அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும்??" குருவே!
ஐந்துக்கு உரியவன் செவ்வாய் மகரத்தில் உச்சம், நான்கு பரல்கள்.
வீட்டின் பரல் 27 செவ்வாய்க்கு கேந்திரத்தில் குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன்.
நன்றிகள் குருவே!/////////
உச்சமான கிரகத்தின் திசை நன்றாக இருக்கும். கவலை எதற்கு? தைரியமாக இருங்கள்!
So many combinations to be happy...
ReplyDeleteYenakku Thala Suthuthu...
வணக்கம்...
ReplyDeleteசுபக்கிரகங்கள் (சந்திரன், புதன், சுக்கிரன், அல்லது குரு போன்ற கிரகங்கள்) கேந்திரம் அல்லது திரிகோணங்களில் இருக்கவேண்டும். அசுப கிரகங்கள் (சூரியன், செவ்வாய், சனி, ராகு & கேது போன்ற கிரகங்கள்) 3, 6,அல்லது 11ஆம் வீடுகளில் இருக்க வேண்டும். ஜாதகத்தில் இப்படியாக அமையப்பெற்றவன் வெற்றி பெறுபவனாகவும், மகிழ்ச்சி உடையவனாகவும் இருப்பான்.
இங்கு 3, 6,அல்லது 11ஆம் வீடுகளில் இருக்க வேண்டும். என கூரியுள்ளீர் 11ஆம் வீடுதானா அல்லது 12 ஆம் வீடா என்பதை மீண்டும் ஒருமுறை confirm செய்ய வேண்டுகின்றேன்.
நன்றி
குரு வணக்கம்
ReplyDeleteராசி சக்கரம்: மகர ராசி, துலா லக்கினம் குரு 11ல் (சனி & ராகு) உடன் உள்ளார்,
அம்சத்தில் மீன லக்கினம், கடகத்தில் குரு உச்சம் ( ராகு ) உடன் உள்ளார்.
என்னுடைய கேள்வி என்னவென்றால் மேற்படி உள்ள ஜாதக அமைப்புக்கு குருதசை நன்மை பயக்குமா விளக்கம் வேண்டுகின்றேன் [குரு சுயவர்கம் 7 பரல், குரு நின்ற வீட்டின் பரல் 37]
ஏனெனில் குரு தசையின் பலன்கள் என கீழ் உள்ளவாரு படித்ததாக ஞாபகம்....
மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னம்/ராசிகளில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் மிகப்பெரிய ராஜயோகத்தை வழங்குவார். ரிஷபத்திற்கு நல்லதும், கெட்டதுமாக பலன் வழங்குவார். மிதுனம், கன்னி ஆகிய 2 ராசிகளுக்கும் குரு பகவான் முக்கிய கிரகமாக இருந்தாலும், பாதகாதிபதியாகவும் வருவதால் நல்லதையும், கெட்டதையும் கலந்து வழங்குபவராகத் திகழ்கிறார். துலாம் ராசிக்கும் 50% நற்பலன், 50% கெடு பலனே குருவால் கிடைக்கும். மகரம், கும்ப ராசிகளுக்கு சமமான பலன் (பெரிய பாதிப்பும் கிடையாது, லாபமும் கிடையாது) கிடைக்கும்.
வாழ்க வளமுடன்
Dear Sir,
ReplyDeleteWhat will happen if 4th lord Mercury is at 8th for meena lagna with 6 parals and also with association with Saturn , Jupiter , Sun and venus?
ஐயா!!!
ReplyDeleteஎனக்கு லக்னம்,4க்கு அதிபதியான குரு 7மிட மிதுனத்தில் சந்திரனுடன் இருக்கிறார். 7, 10 ம் அதிபதி புதன் லக்னத்தில் இருக்கிறார். எனவே கேந்திராதிபத்ய தோசம் இல்லை.ஆனால் 2ல் சுக்கிரனோடு சூரியன் சேர்ந்து உள்ளார். 9மிட சிம்மத்தில் 2க்குடைய சனி.2மிடம் படுமோசம்.எனவே அதிக சம்பளம் இருந்தும் கையில் காசு தங்கவில்லை.உங்களின் புதிய கீதை மாதிரிதான் என் எண்ணங்களும் செயல்களும்.லக்னாதிபதி குரு சந்திரனுடன் சேர்ந்து லக்னத்தை பார்ப்பதால் மகிழ்ச்சி மனம் சம்பந்தபட்டது என்பதை புரிய வைத்துள்ளார்.நல்ல அன்பான மனைவியை கொடுத்துள்ளார்.திருப்தியை கொடுத்துள்ளார்.நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற பெரு நோக்கை கொடுத்துள்ளார்.நீங்கள் நரேஸ் அவர்களுக்கு சொன்ன பதில் நூற்றுக்கு நூறு உண்மை...குரு சந்திர யோகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்!!!
//////மிஸ்டர் அரட்டை said...
ReplyDeleteSo many combinations to be happy...
Yenakku Thala Suthuthu.../////
சுற்றும் தலையுடன் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதில்தான் சிறப்பு உள்ளது!
//////Success said...
ReplyDeleteவணக்கம்...
சுபக்கிரகங்கள் (சந்திரன், புதன், சுக்கிரன், அல்லது குரு போன்ற கிரகங்கள்) கேந்திரம் அல்லது திரிகோணங்களில் இருக்கவேண்டும். அசுப கிரகங்கள் (சூரியன், செவ்வாய், சனி, ராகு & கேது போன்ற கிரகங்கள்) 3, 6,அல்லது 11ஆம் வீடுகளில் இருக்க வேண்டும். ஜாதகத்தில் இப்படியாக அமையப்பெற்றவன் வெற்றி பெறுபவனாகவும், மகிழ்ச்சி உடையவனாகவும் இருப்பான்.
இங்கு 3, 6,அல்லது 11ஆம் வீடுகளில் இருக்க வேண்டும். என கூரியுள்ளீர் 11ஆம் வீடுதானா அல்லது 12 ஆம் வீடா என்பதை மீண்டும் ஒருமுறை confirm செய்ய வேண்டுகின்றேன்.
நன்றி/////
சந்தேகம் வேண்டாம். பதினொன்றாம் வீடுதான்!
//////Success said...
ReplyDeleteகுரு வணக்கம்
ராசி சக்கரம்: மகர ராசி, துலா லக்கினம் குரு 11ல் (சனி & ராகு) உடன் உள்ளார்,
அம்சத்தில் மீன லக்கினம், கடகத்தில் குரு உச்சம் ( ராகு ) உடன் உள்ளார்.
என்னுடைய கேள்வி என்னவென்றால் மேற்படி உள்ள ஜாதக அமைப்புக்கு குருதசை நன்மை பயக்குமா விளக்கம் வேண்டுகின்றேன் [குரு சுயவர்கம் 7 பரல், குரு நின்ற வீட்டின் பரல் 37]
ஏனெனில் குரு தசையின் பலன்கள் என கீழ் உள்ளவாறு படித்ததாக ஞாபகம்....
மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னம்/ராசிகளில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் மிகப்பெரிய ராஜயோகத்தை வழங்குவார். ரிஷபத்திற்கு நல்லதும், கெட்டதுமாக பலன் வழங்குவார். மிதுனம், கன்னி ஆகிய 2 ராசிகளுக்கும் குரு பகவான் முக்கிய கிரகமாக இருந்தாலும், பாதகாதிபதியாகவும் வருவதால் நல்லதையும், கெட்டதையும் கலந்து வழங்குபவராகத் திகழ்கிறார். துலாம் ராசிக்கும் 50% நற்பலன், 50% கெடு பலனே குருவால் கிடைக்கும். மகரம், கும்ப ராசிகளுக்கு சமமான பலன் (பெரிய பாதிப்பும் கிடையாது, லாபமும் கிடையாது) கிடைக்கும்.
வாழ்க வளமுடன்
துலா லக்கினத்திற்கு குரு 3 & 6ஆம் இடங்களுக்கு உரியவன். கலவையான (mixed results) பலன்கள்
/////Ashok said...
ReplyDeleteDear Sir,
What will happen if 4th lord Mercury is at 8th for meena lagna with 6 parals and also with association with Saturn , Jupiter , Sun and venus?/////
எட்டாம் இடத்தில் அமரும் கிரகங்களால், பலன்கள் தாமதப்படும். உரிய காலத்தில் கிடைக்காது!