மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.9.09

எங்கே இருப்பாள் சரஸ்வதி?


++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கே இருப்பாள் சரஸ்வதி?

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாளாம். வீணையின் இனிய நாதத்தில்
இருப்பாளாம். மக்களுக்கு இன்பத்தை தருகின்ற கவிதைகளை வடிக்கின்ற
கவிஞர்களின் உள்ளத்தில் இருப்பளாம். வேதத்தின் பொருளை தேடி உணர்ந்து,
அதை மனதிலேற்றிச் சொல்லும் பக்தர்களின் முன் நின்று காட்சி கொடுப்பாளம்.
உண்மையான துறவிகள் மக்களுக்கு கூறுகின்ற வாசகங்களாகவும் அவள்
இருப்பாளாம். அறிவிற்கு, கல்விக்குத் தேவியான சரஸ்வதி.

சொன்னது யார்?

முண்டாசுக் கவிஞன் பாரதியைத் தவிர வேறு யாரால் இத்தனை
அழகாகச் சொல்லமுடியும்?

பாட்டாகச் சொன்னது பாரதியார்.

பாடலைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்
--------------------------------------------------------------------
சரஸ்வதி தேவியார் அறிவிற்கு அதிபதி. கல்விக்கு, கற்றலுக்கு, நுண்ணறிவிற்கு,
எதையும் எதிர்கொள்ளூம் தன்மைக்கும் அவர்தான் அதிபதி. அஷ்டலக்‌ஷ்மிகள் எட்டு
வடிவங்களாக உங்களிடத்தில் இருந்தாலும், சரஸ்வதியின் அருள் இல்லையென்றால்,
உங்களால் அவற்றை அனுபவிக்க முடியாது. அறிவில்லாமல் எதையும் அனுபவிக்க
முடியுமா என்ன? ஆகவே சரஸ்வதியின் பங்களிப்பு அவசியமானது.

சரஸ்வதிதேவி பிரம்மாவின் மனைவி. அதை நம்புங்கள்.

இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது? பெற்றோர் செய்து வைத்த
திருமணமா? அல்லது கலப்புத் திருமணமா? சார்பதிவாளர் அலுவலத்தில்
அவர்களுடைய திருமணம் பதிவு செய்யப்பெற்றுள்ளதா? என்பது போன்ற
கேள்விகளைக் கேட்டுக் கொண்டிராமல், அவர்களைத் தம்பதி சமேதராக
ஏற்றுக் கொண்டு வணங்குங்கள்.

உங்கள் அறிவு விருத்தியாகும். அதாவது அறிவு அசுர வளர்ச்சி பெறும்.
ஜாதகத்தில் உள்ள அளவுதானே வரும் என்று கேட்கவேண்டாம். அதையும்
மீறி உங்கள் அறிவு வளர அன்னை உதவுவாள்

Goddess Saraswati (Sarasvati) is the wife (consort) of Lord Brahma and
possesses the powers of speech, wisdom and learning. She has four hands
representing four aspects of human personality in learning; mind, intellect,
alertness and ego.She has sacred scriptures in one hand and a lot us
(a symbol of true knowledge) in the second. With her other two hands
she plays the music of love and life on the violin (veena).
She is dressed in white (sign of purity) and rides on a white goose (swan).

அனைவருக்கும் சரஸ்வதி தின வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
2. வெள்ளைத் தாமரை
(ராகம் ஆனந்த பைரவி, தாளம் சாப்பு)

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்,
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின் றொளிர்வாள்,
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்

(வெள்ளைத்) 1

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழழையில் உள்ளாள்,
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவுச் சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்

(வெள்ளைத்) 2

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்,
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லா
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.

(வெள்ளைத்) 3

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்,
உய்வ மென்ற கருத்திடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்,
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்,
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்,
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்,
வந்த னம் இவட் கேசெய்வ தென்றால்
வாழியஃதிங் கௌiதன்று கண்டீர்,
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தினத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம் இவள் பூசளை யன்றாம்.

(வெள்ளைத்) 5

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்,
நகர்கெளுங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுத மென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.

(வெள்ளைத்) 6

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளி பெறுநாடு,
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோணலத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க.

(வெள்ளைத்) 7

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் என்று பெரிதிழைக் கின்றீர்,
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்

(வெள்ளைத்) 8

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவ
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்.

(வெள்ளைத்) 9

நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்,
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,
அதுவு மற்றவர் வாய்ச்சொல் தாரீர்,
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்,
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்,
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்.

(வெள்ளைத்) 10
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - --


வாழ்க வளமுடன்!

39 comments:

  1. இந்தமாதம், இதுவரை, 27 நாட்களில், 27 இடுகைகளைப் பதிந்துள்ளேன்.
    இதுவரை வகுப்பறையில் ஒரு மாதத்தில் அதிகமான இடுகைகளைப் பதிந்தது
    இந்த மாதத்தில்தான். அதற்குக் காரணம் உங்களின் ஆதரவு. அதனால்தான்
    உற்சாகமாக என்னாலும் பல இடுகைகளைப் பதிய முடிந்தது. உங்கள்
    அனைவருக்கும் நன்றி.

    வாத்தியாருக்கு 3 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
    வகுப்பறைக்கும் 3 நாட்கள் விடுமுறை!

    அடுத்த வகுப்பு 1.10.2009 வியாழனன்று ஜோதிடப் பாடத்துடன் துவங்கும்!

    ஜோதிடத்தை சற்று மறந்துவிட்டு, விடுமுறையைக் கொண்டாடி மகிழுங்கள்.

    அன்புடன்
    நட்புடன்
    SP.VR.சுப்பையா

    ReplyDelete
  2. வாத்தியார் அய்யாவுக்கு, விஜயத‌சமி வண‌க்கம்.சரஸ்வதி தேவி ப்ரத்யக்ஷமாக‌
    வெளீப்படுவ்து ஆசிரியர் மூலம் தான். வாத்தியாரை வணங்கினால் அதுவே கலைமகள் வண‌க்கம்.

    "அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம்

    பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் உன் அருளிலே நாட்டம்

    இவை எனக்கு அருள்வாய்

    குறி குணம் இலாத தனிப்பெரும் பொருளே!"

    மஹாகவி சுப்ரமணிய பாரதியார்

    ReplyDelete
  3. அறிவு இருக்கும் இடத்தில்
    சரஸ்வதி தேவி இருப்பாள்.
    சுத்தமும் சுகமும் இருக்கும் இடத்தில்
    லட்சுமிதேவி இருப்பாள்.
    வீரமும் விவேகமும் இருக்கும்
    இடத்தில் சக்திதேவி குடி கொண்டு
    இருப்பாள்.
    நன்றி அய்யா.
    எல்லா வாசகர்களுக்கும் சரஸ்வதி, ஆயுத பூஜை
    தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சரஸ்வதி தேவி அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டுகிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அய்யாவுக்கு வணக்கம்.
    சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.
    ஹரி, சித்தரி, நன்றாக குரு வாழ்க, குருவே துணை, குருவே சரணம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. //ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்
    மான மற்று விலங்குக ளொப்ப
    மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
    போன தற்கு வருந்துதல் வேண்டா,
    புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்//

    இந்த வரிகள் மனதை ரொம்பவே தொட்டு விட்டது.

    //அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
    பின்ன ருள்ள தருமங்கள் யாவ
    பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்.

    நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்,
    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,
    அதுவு மற்றவர் வாய்ச்சொல் தாரீர்,
    ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்,
    மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
    வாணி பூசைக் குரியன பேசீர்,
    எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
    இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்.
    //


    இதெல்லாம் இந்த பாடலில் புரட்சி கவிஞனா சொன்னது?

    இப்போது தான் அறிந்தேன்.


    உங்களுக்கும், அனைவருக்கும் ஆயுதபூஜை & விஜய தசமி திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சரஸ்வதி பூஜையன்று வாத்தியாருக்கு வணக்கங்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  9. அய்யா

    சரஸ்வதியை பாடிய பாரதி தானே
    சுத்த அறிவே தெய்வம் என்று உணர்
    என்றும் சொல்லி இருக்கிறான்

    அது சரி . . .

    அறிவு என்றால் என்ன
    என சொல்ல வில்லையே . .

    ReplyDelete
  10. ////kmr.krishnan said...
    வாத்தியார் அய்யாவுக்கு, விஜயத‌சமி வண‌க்கம்.சரஸ்வதி தேவி ப்ரத்யக்ஷமாக‌
    வெளீப்படுவ்து ஆசிரியர் மூலம் தான். வாத்தியாரை வணங்கினால் அதுவே கலைமகள் வண‌க்கம்.
    "அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம்
    பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் உன் அருளிலே நாட்டம்
    இவை எனக்கு அருள்வாய்
    குறி குணம் இலாத தனிப்பெரும் பொருளே!"
    மஹாகவி சுப்ரமணிய பாரதியார்/////

    நன்றாகச் சொன்னீர்கள் கிருஷ்ணன் சார். நான் என்றும் நினத்துக்கொள்வது எனக்கு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் தமிழ் வாத்தியாராக இருந்த திரு.நா.சித்தையன் அவர்களையும், உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்த திரு. முருகுசுப்பிரமணியன் அவர்களையும்.
    இன்றும் அவர்களை நினைத்து வணங்குகிறேன். அந்த மாதிரி ஆசிரியர்களை எல்லாம் இன்று காண முடியாது.

    ReplyDelete
  11. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    நன்றி ஷியாம்!

    ReplyDelete
  12. /////thirunarayanan said...
    அறிவு இருக்கும் இடத்தில்
    சரஸ்வதி தேவி இருப்பாள்.
    சுத்தமும் சுகமும் இருக்கும் இடத்தில்
    லட்சுமிதேவி இருப்பாள்.
    வீரமும் விவேகமும் இருக்கும்
    இடத்தில் சக்திதேவி குடி கொண்டு
    இருப்பாள்.
    நன்றி அய்யா.
    எல்லா வாசகர்களுக்கும் சரஸ்வதி, ஆயுத பூஜை
    தின வாழ்த்துக்கள்.////

    நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  13. ////DHANA said...
    நன்றி ஐயா////

    நன்றி தனா!

    ReplyDelete
  14. ////krish said...
    சரஸ்வதி தேவி அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டுகிறேன்.
    வாழ்த்துகள்.////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  15. /////Meena said...
    அய்யாவுக்கு வணக்கம்.
    சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.
    ஹரி, சித்தரி, நன்றாக குரு வாழ்க, குருவே துணை, குருவே சரணம்.//////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. /////சிவமுருகன் said...
    //ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்
    மான மற்று விலங்குக ளொப்ப
    மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
    போன தற்கு வருந்துதல் வேண்டா,
    புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்//
    இந்த வரிகள் மனதை ரொம்பவே தொட்டு விட்டது.
    //அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
    பின்ன ருள்ள தருமங்கள் யாவ
    பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்.
    நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்,
    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,
    அதுவு மற்றவர் வாய்ச்சொல் தாரீர்,
    ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்,
    மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
    வாணி பூசைக் குரியன பேசீர்,
    எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
    இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்.
    // இதெல்லாம் இந்த பாடலில் புரட்சி கவிஞனா சொன்னது?
    இப்போது தான் அறிந்தேன்.
    உங்களுக்கும், அனைவருக்கும் ஆயுதபூஜை & விஜய தசமி திருநாள் வாழ்த்துக்கள்/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////chaks said...
    சரஸ்வதி பூஜையன்று வாத்தியாருக்கு வணக்கங்களும் நன்றிகளும்./////

    நன்றி சக்கரவர்த்தி!

    ReplyDelete
  18. /////iyer said...
    அய்யா
    சரஸ்வதியை பாடிய பாரதி தானே
    சுத்த அறிவே தெய்வம் என்று உணர்
    என்றும் சொல்லி இருக்கிறான்
    அது சரி . . .
    அறிவு என்றால் என்ன
    எனச் சொல்ல வில்லையே . .///////

    அறிவு என்றால் என்னவென்று சொல்லவா?
    அறிவு இருப்பவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல வேண்டாம்.
    அது இல்லாதவர்களுக்கு அதைச் சொல்லிப் பயனில்லை!

    ReplyDelete
  19. டெஸ்ட் மாட்ச் போய் ஒன்
    டே மாட்சும் போய் இன்று

    ட்வெண்டி,ட்வெண்டியாகவே
    வண்டி,வண்டியாய் பதிவிட்டு

    அண்டமெலாம் பின் தொடர
    அசத்தும் ஆசானின் ரகசியம்

    அன்னை கலைமகள் சரஸ்வதி
    அள்ளித்தந்த கல்விக்கடாட்சம்

    ஆயுதபூஜையும் 3 நாள் ஓய்வும்
    ஆசானுக்கும் அரிதாக,இனிதாக!

    என்றும் அன்புடன்
    மாணவன்-தமாம் பாலா

    ReplyDelete
  20. Dear Sir

    Arumai Iyya. Kalvi Ellorukkum Kidaipathillai. Saraswathiyai vananguvom.

    Saraswathi manthra:

    "Ohm Sarasvadhe Namasthuppiyam varadhe kamaroopini vidhyarabham karushyami sithyar bhavakedhara
    Om Saravasvadhe namaha"

    Padikkum mun bakthiyodu sollavendiya mathram.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  21. knowledge is power.
    (implies knowledge is the rootcause of power..power=சக்தி)

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை.
    (implies monetary gains are secondary when comparing knowledge)

    சக்தியா? செல்வமா?கல்வியா?
    என்ற கேள்விக்கு பதில் இதிலே அடக்கம்.
    so..சரஸ்வதி அம்மாவுக்கு ஜே.......

    ReplyDelete
  22. குருவே வணக்கம்,

    அன்னை சரஸ்வதியின் அருளும்
    ஆசான் உங்களின் ஆசியும் என்றும்
    கிடைக்க வேண்டி வணங்குகிறேன்.

    அன்புடன் மாணவன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  23. அன்புமிகு ஆசிரியருக்கு!
    என் தாழ்மையான குரு வணக்கம்!..
    உங்களின் மேலான ஆசிகள் எங்களுக்கு எப்போதும் தேவை!...............

    ReplyDelete
  24. Saraswathi Poojai andru, Saraswathi deviai Vathiyaar Iyya Ninaivudan Kondadiya Magilchi, Nandri Iyya.Sakthi Ganesh.

    ReplyDelete
  25. ////தமாம் பாலா (dammam bala) said...
    டெஸ்ட் மாட்ச் போய் ஒன்
    டே மாட்சும் போய் இன்று
    ட்வெண்டி,ட்வெண்டியாகவே
    வண்டி,வண்டியாய் பதிவிட்டு
    அண்டமெலாம் பின் தொடர
    அசத்தும் ஆசானின் ரகசியம்
    அன்னை கலைமகள் சரஸ்வதி
    அள்ளித்தந்த கல்விக்கடாட்சம்
    ஆயுதபூஜையும் 3 நாள் ஓய்வும்
    ஆசானுக்கும் அரிதாக,இனிதாக!
    என்றும் அன்புடன்
    மாணவன்-தமாம் பாலா////

    உங்கள் அன்பிற்கு நன்றி பாலா!

    ReplyDelete
  26. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Arumai Iyya. Kalvi Ellorukkum Kidaipathillai. Saraswathiyai vananguvom.
    Saraswathi manthra:
    "Ohm Sarasvadhe Namasthuppiyam varadhe kamaroopini vidhyarabham karushyami sithyar bhavakedhara
    Om Saravasvadhe namaha"
    Padikkum mun bakthiyodu sollavendiya mathram.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராம்!

    ReplyDelete
  27. ///minorwall said...
    knowledge is power.
    (implies knowledge is the rootcause of power..power=சக்தி)
    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை.
    (implies monetary gains are secondary when comparing knowledge)
    சக்தியா? செல்வமா?கல்வியா?
    என்ற கேள்விக்கு பதில் இதிலே அடக்கம்.
    so..சரஸ்வதி அம்மாவுக்கு ஜே.......////

    கேடு இல்லாத செல்வம் கல்விதான் என்று அய்யன் வள்ளுவன் அடித்துச் சொல்லியிருக்கிறார் மைனர். ஆகவே கல்வியும், அதனால் கிடைக்கும் அறிவும் உயர்ந்தது என்று போற்றுவோம்!

    ReplyDelete
  28. /////Alasiam G said...
    குருவே வணக்கம்,
    அன்னை சரஸ்வதியின் அருளும்
    ஆசான் உங்களின் ஆசியும் என்றும்
    கிடைக்க வேண்டி வணங்குகிறேன்.
    அன்புடன் மாணவன்,
    ஆலாசியம் கோ./////

    என் ஆசி நம் வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் உண்டு! நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. /////நேசன்..., said...
    அன்புமிகு ஆசிரியருக்கு!
    என் தாழ்மையான குரு வணக்கம்!..
    உங்களின் மேலான ஆசிகள் எங்களுக்கு எப்போதும் தேவை!...............//////

    என் ஆசி நம் வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் உண்டு! நன்றி நேசன்!

    ReplyDelete
  30. /////Blogger Sakthi Ganesh said...
    Saraswathi Poojai andru, Saraswathi deviai Vathiyaar Iyya Ninaivudan Kondadiya Magilchi, Nandri Iyya.Sakthi Ganesh.///

    நன்றி சக்தி கணேஷ்!

    ReplyDelete
  31. ஏழாவது பாடலில் உள்ள சாடல் மிகவும் அருமை. அப்போதைய சாடல் இப்போதும் பொருந்துகிறது. நல்ல பதிவு அய்யா.

    ReplyDelete
  32. வாத்தியார்
    அய்யாவுக்கு,வண‌க்கம்.சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. வாத்தியார் அய்யாவுக்கு,
    வண‌க்கம்.சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. /////பித்தன் said...
    ஏழாவது பாடலில் உள்ள சாடல் மிகவும் அருமை. அப்போதைய சாடல் இப்போதும் பொருந்துகிறது. நல்ல பதிவு அய்யா.////

    நன்றி பித்தன்!

    ReplyDelete
  35. /////Vannamalar said...
    வாத்தியார்
    அய்யாவுக்கு,வண‌க்கம்.சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.////

    நன்றி சகோதரி !

    ReplyDelete
  36. வாத்தியார் ஐயாவுக்கு வண‌க்கம்.
    சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. ///singaiSuri said...
    வாத்தியார் ஐயாவுக்கு வண‌க்கம்.
    சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.///

    நன்ரி மிஸ்டர் சூரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com