நகைச்சுவை: உங்கள் டெக்னிக்!
மார்வாரி இளைஞன் ஒருவனுக்கு ஆதங்கமாக இருந்தது. அவனுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. கையில்
காசு இல்லை. சொந்த வீடு இல்லை. அதோடு கண்பார்வையில்லாத
தாயும் உடன் இருந்தாள்.
மனமுருகி பிரார்த்தனை செய்தான்.
அவன்முன் காட்சி கொடுத்த கடவுள், ஒரே ஒரு வரம் தருகிறேன். என்ன வேண்டினாலும் கிடைக்கும். கேள் என்றார்.
என்னடா சோதனை? ஒரே ஒரு வரமா? எதைக் கேட்பது? எதை விடுவது?
மின்னலென யோசித்தவன் சட்டென்று கேட்டான்.
என்ன கேட்டான்?
ஸ்க்ரோல் செய்து பாருங்கள்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
"அரண்மனை போன்ற எனது சொந்த வீட்டிலமர்ந்து, என் மனைவி எங்கள் குழந்தைக்கு, வைர வளையல்களை அணிவிக்கும் காட்சியைப் பார்த்து என்தாய் மகிழ வேண்டும்!"
அதாவது 4 in one!
கடவுள் கொடுத்தாரா? அதுதான் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தாரே, அதனால் கொடுக்கும்படியாகிவிட்டது.
கொடுத்த பிறகு, கடவுள் சொன்னார்: “ மார்வாரிகளிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!”
-----------------------------------------------------------------
கதையின் நீதி:
"Compile all requirements and present in one line rather than boring the appraiser for long time"
----------------------------------------------------------------
இது ஒன்றும் நம் மாணவக் கண்மணிகளுக்குப் புதிதல்ல. வாத்தியார் ஜாதகத்துடன் ஒரு கேள்விமட்டும் கேளுங்கள் என்று சொல்லும்போது,
அவர்கள் இந்த டெக்னிக்கைத்தான் உபயோகிக்கிறார்கள்
------------------------------------------------------------------------------------
விழாக்காலக் கலக்கல் பதிவு சீரியலில் இது 6 வது பதிவு!
விழாக்காலம் என்பது, ரம்ஜான் மற்றும் சரஸ்வதி பூஜைக் காலம்!
படித்து, மகிழுந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வணக்கம் ஆசானே
ReplyDeleteநகைச்சுவை நன்று,
அது சரி இனி எப்போது பாடம் ஆரம்பம் ,ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
சிரிக்க வைத்து விட்டீர்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் அய்யா! சதயவானைக் கப்பாற்ற சாவித்ரி தர்மராஜாவிடம் இதைப்போலத்தான் வரம் கேட்டார்கள். கட உபநிஷதத்தில் நசிகேதன் மறுபடியும் தர்மராஜவை இப்படிதான் அவுட்டாக்கினார்
ReplyDeletekmr.krishnan
http://parppu.blogspot.com
Vanakam sir,
ReplyDeleteInteresting joke! I think this story shows marvadi people are really greedy and smart. Wishing a good saraswathi pooja for you also sir!!!
////KS said...
ReplyDeleteவணக்கம் ஆசானே
நகைச்சுவை நன்று,
அது சரி இனி எப்போது பாடம் ஆரம்பம் ,ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.////
இந்த மாதம் முதல் 17 நாட்களில் 14 பாடங்களை நடத்தியிருக்கிறேன்.
இப்போது விழாக்கால விடுமுறைக் கொண்டாட்டங்கள். சற்று பாடங்களை மறந்துவிட்டு,
மற்ற பதிவுகளையும் படியுங்கள். பாடங்கள் மீண்டும் அடுத்த வாரம்தன்!
////kmr.krishnan said...
ReplyDeleteவணக்கம் அய்யா! சதயவானைக் கப்பாற்ற சாவித்ரி தர்மராஜாவிடம் இதைப்போலத்தான் வரம் கேட்டார்கள். கட உபநிஷதத்தில் நசிகேதன் மறுபடியும் தர்மராஜவை இப்படிதான் அவுட்டாக்கினார்
kmr.krishnan
http://parppu.blogspot.com////
அதே டெக்னிக்கைத்தான் நமது வகுப்பறை மாணவர்களில் சிலர் பயன்படுத்துகிறார்கள். பழநி அப்பன் என்னை அவுட் ஆகாமல் பார்த்துக் கொள்கிறான். சில சமயம் பவுன்சர்களும் வரும். அப்போது அடிபடாமல் அவன்தான் பார்த்துக்கொள்கிறான். நன்றி கிருஷ்ணன் சார்!
////Thanuja said...
ReplyDeleteVanakam sir,
Interesting joke! I think this story shows marvadi people are really greedy and smart. Wishing a good saraswathi pooja for you also sir!!!///
நன்றி சகோதரி!
////Shyam Prasad said...
ReplyDeleteசிரிக்க வைத்து விட்டீர்கள்.///
நன்றி ஷியாம்!
நல்ல வேளை அவர் கடவுளை அடமானமாக கேட்கவில்லை.
ReplyDelete// KS said...
வணக்கம் ஆசானே
நகைச்சுவை நன்று,
அது சரி இனி எப்போது பாடம் ஆரம்பம் ,ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.//
My guess: நம் வாத்தியார் சனி பெயர்ச்சி பலன்களை கணித்து கொண்டிருக்கலாம்.
விழாக்கால விடுமுறைக் கொண்டாட்ட பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது ஐயா.
ReplyDeleteசிரிக்க சிந்திக நல்ல matter.
ReplyDeleteநன்றி
ஏற்கனவே படித்த ஜோக் தான் என்றாலும் அதற்கான விளக்கம் அருமை.
ReplyDeleteபிரபாகர்.
////PowerPix365 said...
ReplyDeleteநல்ல வேளை அவர் கடவுளை அடமானமாக கேட்கவில்லை.
// KS said...
வணக்கம் ஆசானே
நகைச்சுவை நன்று,
அது சரி இனி எப்போது பாடம் ஆரம்பம் ,ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.//
My guess: நம் வாத்தியார் சனி பெயர்ச்சி பலன்களை கணித்து கொண்டிருக்கலாம்.////
பாடங்கள் அடுத்த வாரம்! இந்த மாதம் முதல் 17 நாட்களில் 14 பாடங்கள் வந்துள்ளன. அலுக்கவில்லையா?
///DHANA said...
ReplyDeleteவிழாக்கால விடுமுறைக் கொண்டாட்ட பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது ஐயா.////
நன்றி நண்பரே!
singaiSuri said...
ReplyDeleteசிரிக்க சிந்திக்க நல்ல matter.
நன்றி//////
நன்றி சூரி!
////பிரபாகர் said...
ReplyDeleteஏற்கனவே படித்த ஜோக் தான் என்றாலும் அதற்கான விளக்கம் அருமை.
பிரபாகர்.////
நன்றி பிரபாகர்!
வணக்கம் . . அய்யா . .
ReplyDeleteபள்ளியிலே காலாண்டு விடுமுறை
தேர்வுக்குப்பின் . .
நம் பள்ளியிலே . .
காலன்(சனி) ஆண்டு விடுமுறை
தேர்வுகள் இன்றியே . . (சனி பெயர்ச்சி)
காரணம் விழா தான் என்றாலும் . .
காலன்(சனி பெயர்சி) மாறுவதும்
விழா தானே . .
ஊழல் வழக்கில் மாட்டிக் கொள்ளதா
சனிபகவானைப் போல் . .
ஊழல் லஞ்சம் வாங்காத யோகத்தை தேடிக் கொண்டு . .
நிறைந்த ஆயுள்
நீடித்த வாழ்வு பெற்று
மகரத்தில் பிறந்த நீர்
சிகரத்தில் இருந்து
மாணவர்களை தொடர்ந்து
மாசற்ற நட்புடன் . .
மாறாத அன்புடன் . .
மாற்றமில்ல சிந்தையுடன் வாழ
வாழ்த்துகிறோம் . . வணங்குகிறோம் . .
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
என்பது போல . .
உங்கள் அனுமதியுடன்
உங்களை வாழ்த்தும் பேறு பெறுகிறோம் . .
இது அது அல்ல . .
விழாக்கால வாழ்த்து . .
வணக்கம் வாத்தியார் ஐயா,
ReplyDeleteபாடங்கள், நகைச்சுவை அனைத்தும் அருமை. எல்லாப் பின்னூட்டங்களுக்கும் பதில் தரும் உங்கள் பொறுமைக்கு ஒரு சிறப்பு நன்றி.
அன்புடன்
மதுரை சுப்பு
////iyer said...
ReplyDeleteவணக்கம் . . அய்யா . .
பள்ளியிலே காலாண்டு விடுமுறை. தேர்வுக்குப்பின் . நம் பள்ளியிலே . .
காலன்(சனி) ஆண்டு விடுமுறை தேர்வுகள் இன்றியே . . (சனி பெயர்ச்சி)
காரணம் விழா தான் என்றாலும் . . காலன்(சனி பெயர்சி) மாறுவதும்
விழா தானே . . ஊழல் வழக்கில் மாட்டிக் கொள்ளதா
சனிபகவானைப் போல் . . ஊழல் லஞ்சம் வாங்காத யோகத்தை தேடிக் கொண்டு . .
நிறைந்த ஆயுள் நீடித்த வாழ்வு பெற்று மகரத்தில் பிறந்த நீர்
சிகரத்தில் இருந்து மாணவர்களை தொடர்ந்து
மாசற்ற நட்புடன் . . மாறாத அன்புடன் . . மாற்றமில்ல சிந்தையுடன் வாழ
வாழ்த்துகிறோம் . . வணங்குகிறோம் . .
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
என்பது போல . உங்கள் அனுமதியுடன்
உங்களை வாழ்த்தும் பேறு பெறுகிறோம் . .
இது அது அல்ல . .
விழாக்கால வாழ்த்து . .////
நீண்ட......பின்னூட்டத்திற்கு நன்றி அய்யர்
உங்கள் உண்மைப் பெயர் என்ன ஸ்வாமி?
/////subbu said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார் ஐயா,
பாடங்கள், நகைச்சுவை அனைத்தும் அருமை. எல்லாப் பின்னூட்டங்களுக்கும் பதில் தரும் உங்கள் பொறுமைக்கு ஒரு சிறப்பு நன்றி.
அன்புடன்
மதுரை சுப்பு/////
சும்மா படித்துதுவிட்டுச் சென்று விடாமல், பின்னூட்டம் போட்டுவிட்டுச் செல்கிறவர்களுக்கு
பதில் அளிப்பதுதான் வலையுலகத்தின் முதல் பண்பாடு. வாத்தியார் நானே, பண்பாட்டை மீறலாமா? ஆகவேதான் அனைத்திற்கும் பொறுமையாகப் பதிலளித்துவருகிறேன்!
பாடங்களை எதிர் பார்த்து வந்தால், நல்ல விழ கால பரிசு கொடுக்கிறார் வாத்தியார்!!! சிறப்பு பாடங்கள் மிக சிறப்பு.
ReplyDeleteவகுப்பறை-இல் உள்ள அனைவருக்கும் விழா கால வாழ்துக்கள்.
Dear Sir,
ReplyDeleteசிரிக்க, மற்றும் சிந்திக்க வைத்துவிட்டிர்கள், அன்பு, பண்பு, நியாம், நேர்மை, தர்மம்,
இவைகளெல்லாம் தமிழர்களின் இரத்தத்தில் ஊரிகிடக்கின்றன உங்கள் மாணவர்களாகிய எங்களுக்கு நல்ல சம்பாத்தியம் செய்வது எப்படி என்று கொஞ்சம் சொல்லிகொடுக்கவும். இந்த கால கட்டதிற்கு மிகவும் தேவையானது.
Rgds
Nainar
பண்பாட்டை காப்பாற்றும்
ReplyDeleteவாத்தியார் அய்யா அவர்களே
இந்த பதிவு உங்கள் வேறொரு
பதிவிலே உள்ளது தானே அய்யா.
பதிவு அருமை.
நன்றி அய்யா.
////Scorpion King said...
ReplyDeleteபாடங்களை எதிர்பார்த்து வந்தால், நல்ல விழாக்காலப் பரிசு கொடுக்கிறார் வாத்தியார்!!! சிறப்பு பாடங்கள் மிகச் சிறப்பு.
வகுப்பறை-இல் உள்ள அனைவருக்கும் விழா கால வாழ்துக்கள்.////
நன்றி நண்பரே!
/////arumuga nainar said...
ReplyDeleteDear Sir,
சிரிக்க, மற்றும் சிந்திக்க வைத்துவிட்டிர்கள், அன்பு, பண்பு, நியாம், நேர்மை, தர்மம்,
இவைகளெல்லாம் தமிழர்களின் இரத்தத்தில் ஊரிகிடக்கின்றன உங்கள் மாணவர்களாகிய எங்களுக்கு நல்ல சம்பாத்தியம் செய்வது எப்படி என்று கொஞ்சம் சொல்லிகொடுக்கவும். இந்த கால கட்டதிற்கு மிகவும் தேவையானது.
Rgds
Nainar/////
தற்சமயம் நேரம் இல்லை. பின்னால் எழுதுகிறேன் நண்பரே!
/////thirunarayanan said...
ReplyDeleteபண்பாட்டை காப்பாற்றும் வாத்தியார் அய்யா அவர்களே
இந்த பதிவு உங்கள் வேறொரு பதிவிலே உள்ளது தானே அய்யா.
பதிவு அருமை.
நன்றி அய்யா.//////
எனக்கு நினைவில் இல்லை! இருந்தால் கண்டு பிடித்து அதன் லிங்கைக் கொடுங்கள்