மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.3.09

Evidence for the existence of God இறைவனுக்குச் சான்று கேட்டவர்கள்!

Evidence for the existence of God இறைவனுக்குச் சான்று கேட்டவர்கள்!

ஆன்மீகத்தில் திளைப்பவர்களுக்கு அன்னை எனும் மூன்று சொல் எழுத்து
ஒருவரைத்தான் சுட்டிக் காட்டும். அது பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு
வந்து பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்து தனது இறுதி
மூச்சுவரை ஆன்மிகப் பணி செய்த அன்னையையே குறிக்கும்

"மலர்போல மலர்கின்ற மனம்வேண்டும் தாயே
பலர்போற்றிப் பாராட்டும் குணம்வேண்டும் தாயே!
வரம்தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே
வரம்தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே"

என்று கங்கைஅமரன் அவர்களின் அற்புதமான பாடல் அன்னைக்காகவே எழுதப்
பெற்றது. முன்பு, விஜய் தொலைக்காட்சியின் அதிகாலைத் துவக்கப் பாடலாக
ஒலித்து, தமிழ்கூறும் நல்லுலகத்தில் மிகவும் பிரபலமான பாடலானது.

இந்தியாவின் ஆன்மிக செல்வத்தை எப்போதும் சிலாகித்துப் பேசும் அன்னை
அவர்கள், இந்திய மக்களை எப்போதும் கேட்டுக்கொண்டது இதுதான்:

"எதற்காகவும் உங்கள் இறையுணர்வை விட்டுக் கொடுக்காதீர்கள்"

ஒருமுறை மூன்று அமெரிக்க விஞ்ஞானிகள் அன்னையை சந்தித்துப் பேசிக்
கொண்டிருக்கும்போது கேட்டார்கள்.

"தாயே, நாங்கள் எல்லாம் விஞ்ஞானிகள். எல்லாவற்றிற்கும் சான்று கேட்பவர்கள்.
இறைவன் இருப்பதற்கு தாங்கள் ஒரு சான்றாவது கொடுத்து உதவ வேண்டும்"

புன்னகைத்த அன்னை, அதற்குப் பதில் உரைத்தார்.

"ஆகா, தருகிறேன்.அதற்கு முன்னால் நீங்கள் என் கேள்வி ஒன்றிற்குப் பதில்
சொல்ல வேண்டும்"

"சொல்கிறோம், கேளுங்கள்"

"ஒரே நேரத்தில் இடத்திற்கு இடம் சீதோஷ்ண நிலை ஏன் வேறுபடுகிறது?"

(ஒரு குறிப்பபிட்ட நேரத்தில் சென்னையில் 40 டிகிரி சீதோஷ்ணம் என்றால்,
கோவையில் 36ம் ஊட்டியில் 22ம் இருக்கும் நிலை)

அதற்கு அவர்கள் பதில் சொன்னார்கள்.

"ஒரு இடத்தில் இருக்கும் காற்றின் அடர்த்தியை வைத்தும், சம வெளிகளில்
இருந்து ஒரு இடம் இருக்கும் உயரத்தை வைத்தும் சீதோஷ்ண நிலை மாறுபடும்"

Weather occurs due to density (temperature and moisture) differences between
one place and another. These differences can occur due to the sun angle at any
particular spot, which varies by latitude from the tropics.

அன்னை அவர்களைத் திருப்பிக் கேட்டார்,"அதே காற்றின் அடர்த்தியை
வைத்து காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவு மட்டும் ஏன் மாறுபடுவதில்லை?"

Does the percentage of oxygen in air change as altitude increases? Or is it still
around 21% at say, the top of a hill?

அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

"தெரியவில்லை" என்று சொன்னார்கள்

அன்னை அவர்கள் சொன்னார்கள்:

"அதுதான் இறை சக்தி. தான் படைத்த ஜீவராசிகள் சுவாசிக்க வேண்டும்
என்பதற்காக காற்றில் உள்ள பிராணவாயுவின் அளவை மாறாமல்
வைத்திருப்பவரின் பெயர்தான் இறைவன்"

++++++++++++++++++++
சென்னையாகட்டும் அல்லது அமைதிப் பள்ளதாக்குப் போன்ற அடர்ந்த மலைப்
பிரதேமாகட்டும் அல்லது ராஜஸ்தானின் தார் பாலைவனமாகட்டும் அல்லது
வங்கக் கடலாகட்டும் எங்கும் காற்றில் உள்ள பிராணவாயுவின் அளவு மட்டும்
மாறாமல் இருக்கும்

அதுபோல தான் படைத்த ஜீவராசிகள் அனைத்திற்கும் உரிய உணவையும்
இறைவன் குறைவில்லாமல் அளித்திருக்கிறார். எந்தப் பறவையாவது உணவின்றி
மடிந்திருக்கிறதா? கல்லிற்குள் இருக்கும் தேரைக்கும் அரவணைப்பு அளிக்கும்
கருணை மிக்கவர் இறைவன்.

+++++++++++++++++++++

The circumference of the Earth at the equator is 25,000 miles.
The Earth rotates in about 24 hours. Therefore, if you were to hang above the
surface of the Earth at the equator without moving, you would see 25,000 miles
pass by in 24 hours, at a speed of 25000/24 or just over 1000 miles per hour.

160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் இருந்து தலையை நீட்டிப் பாருங்கள்.
எதிர்கொள்ளும் காற்றின் வேகத்தில் மூச்சுத் திணரும்.

ஆனால் அதே நேரத்தில் இந்தப் பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோ மீட்டர்
வேகத்தில் சுற்றிக் கொள்கிறது. அதன் வேகம் உங்களைப் பாதிக்கிறதா?
இல்லையே? அதுதான் இறைசக்தி!

உலகின் நிலப்பரப்பில் 3ல் 2பங்கு தண்ணீர். இந்தச் சுழற்சியில் ஒரு சொட்டுத்
தண்ணீராவது, பூமியிலிருந்து பிரிந்து அண்டத்தில் விழுகிறதா? கேட்டால் புவியீர்ப்பு
என்பார்கள். அந்த ஈர்ப்புதான் இறைசக்தி!

Space, time and earth மூன்றுமே ஒன்றுதான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க
முடியாது. மூன்றுமே இறைசக்தி

புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்.

It is his problem!

++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

72 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் ஆசானே..

    நெருப்பு சுடும் என்பதை சொல்லலாம். அது எப்படி இருக்கும் என்பதை உணரத்தான் முடியும்.

    அது மாதிரித்தான் இறைவன் என்பதை உணரத்தான் முடியும்.

    ReplyDelete
  3. DEar Sir

    Pullarikiradhu..Oru Sila Jenmangal En Adhai Unaramattargala endru irukkiradhu..

    Super Story..But Real(GOD).

    They must know before die - Yes god is there....

    Super Super Super...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  4. Dear Sir

    Kadhai Arumai.Idhu Kadhayalla Nijam..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  5. Dear Sir

    Story Is Good. But this is real not story..

    Thank you

    Loving StudentArulkumar Rajaraman

    ReplyDelete
  6. ஐயா

    காலை வணக்கம், ஜாதக மென்பொருளில் 4 விதமான ayanamasa, Chart style, Dasa System bava bala methode உள்ளன. இவற்றை எந்த முறையில் அமைப்பது என்றும் இவற்றின் மாறுபாடு பற்றியும் விளக்கவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. Dear Sir

    Story is very nice

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  8. //புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்.

    It is his problem!//

    புரிகிறவனுக்கு நீங்கள் விளக்கத் தேவையில்லை, புரியாதவனுக்கு உங்கள் விளக்கம் தேவையில்லை.
    :)

    பதிவு தலைப்பில் கூவிவிட்டு, முடிவில் அலுப்பு ஏன் ?

    நிரூபனம் கேட்பவர்கள் என்ன தான் சொன்னாலும் நம்பமாட்டார்கள், நம்புபவர்களுக்கு நிரூபனம் தேவையில்லை. :)

    ***

    நம்புங்க, என்னால் கடவுளைக் காட்ட முடியும் ! :)

    ReplyDelete
  9. இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

    ReplyDelete
  10. கதை அருமை. பூமியில் எங்கும் ஓரே மாதிரியான ஆக்ஸிசன் பற்றிய விளக்கம் அருமை. இதுவரை நான் அறிந்திராத - இறைவனைப்பற்றிய புதிய கோணத்தில் விளக்கம்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. //////Blogger இராகவன் நைஜிரியா said...
    அருமையான விளக்கம் ஆசானே..
    நெருப்பு சுடும் என்பதை சொல்லலாம். அது எப்படி இருக்கும் என்பதை உணரத்தான் முடியும்.
    அது மாதிரித்தான் இறைவன் என்பதை உணரத்தான் முடியும்.//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Pullarikiradhu..Oru Sila Jenmangal En Adhai Unaramattargala endru irukkiradhu..
    Super Story..But Real(GOD).
    They must know before die - Yes god is there....
    Super Super Super...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  13. //////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kadhai Arumai.Idhu Kadhayalla Nijam..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  14. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Story Is Good. But this is real not story..
    Thank you
    Loving StudentArulkumar Rajaraman//////

    எத்தனை பின்னூட்டம் இடுவீர்கள் சுவாமி? கை வலிக்காதா?

    ReplyDelete
  15. ////Blogger velan said...
    ஐயா
    காலை வணக்கம், ஜாதக மென்பொருளில் 4 விதமான ayanamasa, Chart style, Dasa System bava bala methode உள்ளன. இவற்றை எந்த முறையில் அமைப்பது என்றும் இவற்றின் மாறுபாடு பற்றியும் விளக்கவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//////

    எந்த மென்பொருள் என்பதைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  16. //////Blogger கோவி.கண்ணன் said...
    //புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்.
    It is his problem!//
    புரிகிறவனுக்கு நீங்கள் விளக்கத் தேவையில்லை, புரியாதவனுக்கு உங்கள் விளக்கம் தேவையில்லை.
    :)
    பதிவு தலைப்பில் கூவிவிட்டு, முடிவில் அலுப்பு ஏன் ?/////////////

    ஒகோ இதுதான் அலுப்பு என்பதா? அப்படி எழுதாவிட்டால் நீங்கள் எங்கே வரப்போகிறீர்கள்?
    உங்களை வரவழைப்பதற்காக சில சமயம் அப்படி எழுத வேண்டியதிருக்கிறது?

    ReplyDelete
  17. //////Blogger அப்பாவி தமிழன் said...
    இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites////////

    அதைப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா. தங்களின் ஆன்மீக பாடம் மிக அருமை. எ(இ)தையும் புரிந்து கொள்ள ஞானம் வேண்டும். அது எல்லோருக்கும் வந்து விடாது.

    ReplyDelete
  19. A new explanation for God. Thanks. Your insight and the way you express the same is remarkable.

    ReplyDelete
  20. நண்பரே,நீங்கள் கூறும் பதிவின் உள்ளடக்கத்தை நான் பாராட்டுகிறேன்;ஆனாலும் இதில் ஒரு தகவல் பிழை இருக்கிறது எனப் படுகிறது.

    மலைகளின் மேலான காற்று மண்டலத்தில் உண்மையில் ஆக்ஸிஜனின் அளவு குறைவே,அறிவியல் நிரூபித்த உண்மைகளின் படி.இதன் காரணமாகவே மிக உயர்ந்த மலைத்தொடர்களில் சிறிது நடந்தாலும் நமக்கு மூச்சு வாங்குகிறது,காரணம் பிராணவாயு பற்றாக்குறைதான்.

    இந்த சுட்டியில் மேலதிகத் தகவல் பெறலாம்..

    http://query.nytimes.com/gst/abstract.html?res=9B07E5D81F3CE633A25750C0A9679D946396D6CF

    ReplyDelete
  21. //மலைகளின் மேலான காற்று மண்டலத்தில் உண்மையில் ஆக்ஸிஜனின் அளவு குறைவே,அறிவியல் நிரூபித்த உண்மைகளின் படி.இதன் காரணமாகவே மிக உயர்ந்த மலைத்தொடர்களில் சிறிது நடந்தாலும் நமக்கு மூச்சு வாங்குகிறது,காரணம் பிராணவாயு பற்றாக்குறைதான்.
    //

    மலை மனிதன் வசிக்கத்தகுந்த இடம் இல்லை. நாமாக தேடிக் கொள்வதை எப்படி குறைபாடாக கருத முடியும் ?
    :))))))

    ReplyDelete
  22. மொத்தத்தில் மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்தியே தீருவான் என்று சொல்லிவிட்டிர்கள் . முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்று ஒரு பாடம் எடுப்பார்கள். அதுபோல நம் வகுப்பிலும் நடப்பது மகிழ்ச்சியே .

    ReplyDelete
  23. /////Blogger வேலன். said...
    கதை அருமை. பூமியில் எங்கும் ஓரே மாதிரியான ஆக்ஸிசன் பற்றிய விளக்கம் அருமை. இதுவரை நான் அறிந்திராத - இறைவனைப்பற்றிய புதிய கோணத்தில் விளக்கம்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  24. /////Blogger ananth said...
    வணக்கம் ஐயா. தங்களின் ஆன்மீக பாடம் மிக அருமை. எ(இ)தையும் புரிந்து கொள்ள ஞானம் வேண்டும். அது எல்லோருக்கும் வந்து விடாது./////

    உண்மைதான்! உங்கள் பின்னூட்டத்திர்கு நன்றி!

    ReplyDelete
  25. //////Blogger krish said...
    A new explanation for God. Thanks. Your insight and the way you express the same is remarkable./////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி கிரீஷ்

    ReplyDelete
  26. //////Blogger நாமக்கல் சிபி said...
    நல்ல பதிவு!
    நன்றி!/////

    நன்றி சிபியாரே!

    ReplyDelete
  27. //////Blogger அறிவன்#11802717200764379909 said...
    நண்பரே,நீங்கள் கூறும் பதிவின் உள்ளடக்கத்தை நான் பாராட்டுகிறேன்;ஆனாலும் இதில் ஒரு தகவல் பிழை இருக்கிறது எனப் படுகிறது.
    மலைகளின் மேலான காற்று மண்டலத்தில் உண்மையில் ஆக்ஸிஜனின் அளவு குறைவே,அறிவியல் நிரூபித்த உண்மைகளின் படி.இதன் காரணமாகவே மிக உயர்ந்த மலைத்தொடர்களில் சிறிது நடந்தாலும் நமக்கு மூச்சு வாங்குகிறது,காரணம் பிராணவாயு பற்றாக்குறைதான்.
    இந்த சுட்டியில் மேலதிகத் தகவல் பெறலாம்..
    http://query.nytimes.com/gst/abstract.html?res=9B07E5D81F3CE633A25750C0A9679D946396D6CF/////

    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மகாபலேஷ்வர் போன்ற மலைப்பிரதேசங்களில் மக்கள் வசிக்கவில்லையா?
    பனி சூழ்ந்த இமயத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அது மனிதன் வசிப்பதற்கு ஏற்ற இடமல்ல என்பது தெரிந்ததுதானே!

    ReplyDelete
  28. ///////Blogger கோவி.கண்ணன் said...
    //மலைகளின் மேலான காற்று மண்டலத்தில் உண்மையில் ஆக்ஸிஜனின் அளவு குறைவே,அறிவியல் நிரூபித்த உண்மைகளின் படி.இதன் காரணமாகவே மிக உயர்ந்த மலைத்தொடர்களில் சிறிது நடந்தாலும் நமக்கு மூச்சு வாங்குகிறது,காரணம் பிராணவாயு பற்றாக்குறைதான்.
    //
    மலை மனிதன் வசிக்கத்தகுந்த இடம் இல்லை. நாமாக தேடிக் கொள்வதை எப்படி குறைபாடாக கருத முடியும் ?
    :))))))

    கை கொடுக்க வந்தமைக்கு நன்றி கோவியாரே!

    ReplyDelete
  29. /////Blogger Ragu Sivanmalai said...
    மொத்தத்தில் மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்தியே தீருவான் என்று சொல்லிவிட்டிர்கள் . முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்று ஒரு பாடம் எடுப்பார்கள். அதுபோல நம் வகுப்பிலும் நடப்பது மகிழ்ச்சியே /////.

    வகுப்பு என்றால் அது இல்லாமலா? அதனால்தான் இடையிடையே நீதிப்பாடங்கள்!

    ReplyDelete
  30. அருமையான விளக்கம்!!
    இறைவன் என்பதை உணரத்தான் முடியும்.
    உணர்ந்தவர்களுக்கு சான்று தேவை இல்லை .
    உணராதவர்கள் இல்லை என்று கூருவதொன்றும் வியப்பில்லை .

    நன்றி ஐயா.

    ReplyDelete
  31. அழகான விளக்கம்.
    நன்றி அய்யா .

    ReplyDelete
  32. thank u sir . your statements are realy true sir i am in pondicherry the thousands of people come to ashram and get peacefull mind . in ashram we pray front of annai jeeva samathi mind is very rlaxed sir .

    ReplyDelete
  33. வணக்கம் ஐய்யா

    இனிமேல் கடவுள் இருப்பதற்கு என்னிடம் யாராவது ஆதாரம் கேட்டாள்
    இங்கே பாடித்தை சொல்வேன் :-)).................

    ReplyDelete
  34. வணக்கம் ஐயா

    ஒரு ராசியில் கிரகம் வக்கிரம் பெற்றால் அது எதிர் மறை பலன்களை
    செய்யும் அதனால் வக்ரம் பெற்ற கிரகம் நீசம் பெற்றால் அது உச்ச பலம்
    பெரும்என்று ஒரு ஜோதிட புத்தகத்தில் படித்தேன்.அது உண்மையா?

    ReplyDelete
  35. ////Blogger கனிமொழி said...
    அருமையான விளக்கம்!!
    இறைவன் என்பதை உணரத்தான் முடியும்.
    உணர்ந்தவர்களுக்கு சான்று தேவை இல்லை .
    உணராதவர்கள் இல்லை என்று கூருவதொன்றும் வியப்பில்லை .
    நன்றி ஐயா./////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  36. ///Blogger Geekay said...
    அழகான விளக்கம்.
    நன்றி அய்யா ./////

    பாராட்டிற்கு நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  37. /////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
    thank u sir . your statements are realy true sir i am in pondicherry the thousands of people come to ashram and get peacefull mind . in ashram we pray front of annai jeeva samathi mind is very rlaxed sir .//////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. //////Blogger sundar said...
    வணக்கம் ஐய்யா
    இனிமேல் கடவுள் இருப்பதற்கு என்னிடம் யாராவது ஆதாரம் கேட்டால்
    இங்கே படித்ததைச் சொல்வேன் :-))

    ஆகா, சொல்லுங்கள் சுந்தர்!

    ReplyDelete
  39. ஹலோ சார்,

    ஆஹா, இதை விட அழகாக அற்புதமாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை சொல்ல முடியாது னு நான் நினைக்கிறேன்.சும்மா நச்சுனு சொல்லிட்டீங்க. ஒரு பெரிய்ய்ய்ய்ய சபாஷ் உங்களுக்கு.

    ReplyDelete
  40. அதனால் தான் என்னுடைய இந்த‌ இயற்கையை இன்றளவும் இறைவனாக வழிபடுகிறேன்

    ReplyDelete
  41. \\எந்த மென்பொருள் என்பதைச் சொல்லுங்கள்!//

    வகுப்பறை மாணவர் திலகம் கரூர் தியாகராஜன் வழங்கியுள்ள மென்பொருள் ஐயா

    ReplyDelete
  42. Dear Sir,

    Reading all your lessons, but due to lack of time I could not post the comments. Good Luck for your publication.

    -Shankar

    ReplyDelete
  43. கண்ணன் மற்றும் நண்பர் சுப்பையா,
    நான் சுட்டியது கதையில் சுட்டி இருக்கும் தகவல் பிழை பற்றி...

    உயர்ந்த மலைத்தொடர்கள் மட்டுமல்ல,ஊட்டி,கொடைக்கானல் போன்ற இடங்களிலும் கூட சமவெளிகளை விட பிராணவாயு கண்டென்ட் குறைவுதான்...

    அந்த தகவல் பிழைதான் சுட்டப்பட்டது.

    எப்படியும் கண்ணன் கடவுளின் கட்சியில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி !!!!

    ReplyDelete
  44. திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களுக்கு,

    கேள்விகள் ஏற்கனவே வேறு பதிவில் கேட்டவை போல இருக்கே?? ஆனால் கதைச் சூழல் புதுசா இருக்கு..

    "old wine in new bottle" business style aa.. :)

    ReplyDelete
  45. Percentage of oxygen is same while breathing air in plains or high altitude.( around 21%). But atmospheric pressure decreases as one goes higher up. Lower atmospheric pressure is the reason for breadthlessness. This happens only at very high altitude lihe Mt. Everest. Not at ooty or kodaikanal.

    ReplyDelete
  46. Mighavum arumayana vilakkangal Iyya...
    anbudan,
    kandhiah

    ReplyDelete
  47. ///புரிகிறவனுக்கு நீங்கள் விளக்கத் தேவையில்லை, புரியாதவனுக்கு உங்கள் விளக்கம் தேவையில்லை.
    :)

    நிரூபனம் கேட்பவர்கள் என்ன தான் சொன்னாலும் நம்பமாட்டார்கள், நம்புபவர்களுக்கு நிரூபனம் தேவையில்லை.///

    இதெல்லாம் கோவியாரால் மட்டுமே முடியும்.

    ReplyDelete
  48. /////Blogger Sumathi. said...
    ஹலோ சார்,
    ஆஹா, இதை விட அழகாக அற்புதமாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை சொல்ல முடியாதுன்னு நான்

    நினைக்கிறேன்.சும்மா நச்சுனு சொல்லிட்டீங்க. ஒரு பெரிய்ய்ய்ய்ய சபாஷ் உங்களுக்கு./////

    இல்லை சொல்லலாம். என்னை விட நன்றாக எழுதக்கூடியவர்கள் இருக்கிறார்கள். உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  49. //////Blogger KaveriGanesh said...
    அதனால் தான் என்னுடைய இந்த‌ இயற்கையை இன்றளவும் இறைவனாக வழிபடுகிறேன்//////

    இயற்கை வேறு இறைவன் வேறு அல்ல!:-))))

    ReplyDelete
  50. /////Blogger velan said...
    \\எந்த மென்பொருள் என்பதைச் சொல்லுங்கள்!//
    வகுப்பறை மாணவர் திலகம் கரூர் தியாகராஜன் வழங்கியுள்ள மென்பொருள் ஐயா/////

    /////////ஜாதக மென்பொருளில் 4 விதமான ayanamasa, Chart style, Dasa System bava bala methode உள்ளன. இவற்றை எந்த முறையில் அமைப்பது என்றும் இவற்றின் மாறுபாடு பற்றியும் விளக்கவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்./////////

    Ayanamsa = Lahiri
    Chart Style = South India
    Dasa System = 365.25 Days
    Bhava Bala Method = Nature of Mercury terminated by association

    இதைப் பார்த்தாலே தெரியும் இது திருக்கணிதத்தின் அடிப்படையில் உள்ளது. இதுதான் துல்லியமாக இருக்கும்

    ReplyDelete
  51. //////Blogger hotcat said...
    Dear Sir,
    Reading all your lessons, but due to lack of time I could not post the comments. Good Luck for your publication.
    -Shankar////

    பின்னூட்டத்தைப் பற்றிய கவலை எதற்கு? விட்டுத்தள்ளுங்கள். நேரம் இருக்கும்போது எழுதினால் போதும்

    ReplyDelete
  52. ///////Blogger அறிவன்#11802717200764379909 said...
    கண்ணன் மற்றும் நண்பர் சுப்பையா,
    நான் சுட்டியது கதையில் சுட்டி இருக்கும் தகவல் பிழை பற்றி...
    உயர்ந்த மலைத்தொடர்கள் மட்டுமல்ல,ஊட்டி,கொடைக்கானல் போன்ற இடங்களிலும் கூட சமவெளிகளை விட

    பிராணவாயு கண்டென்ட் குறைவுதான்...
    அந்த தகவல் பிழைதான் சுட்டப்பட்டது.
    எப்படியும் கண்ணன் கடவுளின் கட்சியில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி !!!!/////

    விளக்கத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  53. ///////Blogger கையேடு said...
    திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களுக்கு,
    கேள்விகள் ஏற்கனவே வேறு பதிவில் கேட்டவை போல இருக்கே?? ஆனால் கதைச் சூழல் புதுசா இருக்கு..
    "old wine in new bottle" business style aa.. :)/////

    எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள் நண்பரே! சில சமயம் எனது விளக்கங்களே எழுத்தில் இரண்டாவது முறையாக அமைந்து விடுவது உண்டு. இறைவனுக்கு விளக்கம் எத்தனை முறை எழுதினால் என்ன? உண்மையாக இருந்தால் சரிதான்

    ReplyDelete
  54. ///////Blogger கையேடு said...

  55. ///////////Blogger mayakunar said...
    Percentage of oxygen is same while breathing air in plains or high altitude.( around 21%). But atmospheric pressure

    decreases as one goes higher up. Lower atmospheric pressure is the reason for breadthlessness. This happens only at

    very high altitude lihe Mt. Everest. Not at ooty or kodaikanal.//////////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  56. /////////////Blogger kandhiah said...
    Mighavum arumayana vilakkangal Iyya...
    anbudan,
    kandhiah///////////////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி கந்தைய்யா!

    ReplyDelete
  57. ///////////////Blogger தியாகராஜன் said...
    ///புரிகிறவனுக்கு நீங்கள் விளக்கத் தேவையில்லை, புரியாதவனுக்கு உங்கள் விளக்கம் தேவையில்லை.
    :) நிரூபனம் கேட்பவர்கள் என்ன தான் சொன்னாலும் நம்பமாட்டார்கள், நம்புபவர்களுக்கு நிரூபனம் தேவையில்லை.///
    இதெல்லாம் கோவியாரால் மட்டுமே முடியும்./////////

    ஆமாம்!

    ReplyDelete
  58. வாத்தியாரய்யா !
    புரியாதவனுக்கு புரிய வைக்கலாம் .
    புரியாததுபோல் நடிப்பவனுக்கு எப்படி புரிய வைக்க முடியும் ?

    ReplyDelete
  59. அய்யா,

    கவியரசரின் பாடல் தான் நினைவு வருகிறது

    "தெய்வம் என்றால் அது தெய்வம்.. வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான்"

    நம்பிக்கை தான் கடவுள் என்பதை புரியாதவர்க்கு சொன்ன பாடல்.

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  60. வணக்கம் சார்!

    ஆன்மீகப் பதிவு நன்றாக இருந்தது.

    இதே ஆன்மீகத்தை ஒட்டியே நான் முன்பு இட்ட பதிவை பதிக்கிறேன். உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.

    1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
    1 : 1 - குர்ஆன்

    புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
    8 : 1 : 1 -ரிக் வேதம்

    2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
    1 : 2 - குர்ஆன்

    அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
    3 : 34 : 1 - ரிக் வேதம்

    3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
    1 : 5

    எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
    40 : 16 - யஜுர் வேதம்.

    4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
    2 : 107 - குர்ஆன்

    பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
    1 : 100 : 1 - ரிக் வேதம்

    5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
    2 : 115 - குர்ஆன்

    அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
    10 :12 :14 - ரிக் வேதம்

    கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
    10 : 36 : 14 - ரிக் வேதம்

    இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
    10 : 81 : 3 - ரிக் வேதம்

    6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
    25 : 2 - குர்ஆன்

    பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
    7 : 19 : 1 - அதர்வண வேதம்

    7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
    25 : 62 - குர்ஆன்

    இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
    10 : 190 : 2 - ரிக் வேதம்

    8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
    6 : 96 - குர்ஆன்

    அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
    10 : 190 : 3 - ரிக் வேதம்

    9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
    57 : 3 - குர்ஆன்

    ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
    1 : 31 : 2 - ரிக் வேதம்.

    10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
    48 : 23 - குர்ஆன்

    அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
    18 : 15 - அதர்வண வேதம்

    11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
    10 : 64 - குர்ஆன்

    இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
    1 : 24 : 10 - ரிக் வேதம்

    12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
    13 : 9 - குர்ஆன்

    இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
    20 : 58 : 3 - அதர்வண வேதம்

    மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்களைத் தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.

    ReplyDelete
  61. நண்பர் சுவனப்பிரியன் போல் இவ்வளவு படித்து ஒப்பிட்டு எழுத என்னால் முடியாது. இங்குள்ள பழைய பாடத்தை படித்து முடிக்கலாம் என்றால் கூட நேரம் போதவில்லை. அவருடைய சிரத்தைக்கு எனது பாராட்டுகள். எல்லாம் வல்ல இறைவன் இவரை போல் ஆட்களை இங்கு அனுப்பி வைப்பாராக.

    ReplyDelete
  62. அருமையான பதிவு..பின்னூட்டம் இட தாமதமாகிவிட்டது..சாரி

    இந்த மாதிரி எதார்த்தமான கட்டுரைகள் நிறைய தரவேண்டும்(பாடத்தின் இடையில்) என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அன்பு மாணவர்,
    மோகன்

    ReplyDelete
  63. /////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    வாத்தியாரய்யா !
    புரியாதவனுக்கு புரிய வைக்கலாம் .
    புரியாததுபோல் நடிப்பவனுக்கு எப்படி புரிய வைக்க முடியும் ?/////

    யாரையும் மாற்ற முடியாது! அதுதான் உண்மை!

    ReplyDelete
  64. ////Blogger Sridhar said...
    அய்யா,
    கவியரசரின் பாடல் தான் நினைவு வருகிறது
    "தெய்வம் என்றால் அது தெய்வம்.. வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான்"
    நம்பிக்கை தான் கடவுள் என்பதை புரியாதவர்க்கு சொன்ன பாடல்.
    நன்றி,
    ஸ்ரீதர்////

    நன்றி ஸ்ரீதர்!

    ReplyDelete
  65. Blogger சுவனப்பிரியன் said...
    வணக்கம் சார்!
    ஆன்மீகப் பதிவு நன்றாக இருந்தது.
    இதே ஆன்மீகத்தை ஒட்டியே நான் முன்பு இட்ட பதிவை பதிக்கிறேன். உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.
    1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
    1 : 1 - குர்ஆன்
    புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
    8 : 1 : 1 -ரிக் வேதம்
    2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
    1 : 2 - குர்ஆன்
    அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
    3 : 34 : 1 - ரிக் வேதம்
    3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
    1 : 5
    எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
    40 : 16 - யஜுர் வேதம்.
    4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
    2 : 107 - குர்ஆன்
    பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
    1 : 100 : 1 - ரிக் வேதம்
    5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
    2 : 115 - குர்ஆன்
    அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
    10 :12 :14 - ரிக் வேதம்
    கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
    10 : 36 : 14 - ரிக் வேதம்
    இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
    10 : 81 : 3 - ரிக் வேதம்
    6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
    25 : 2 - குர்ஆன்
    பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
    7 : 19 : 1 - அதர்வண வேதம்
    7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
    25 : 62 - குர்ஆன்
    இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
    10 : 190 : 2 - ரிக் வேதம்
    8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
    6 : 96 - குர்ஆன்
    அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
    10 : 190 : 3 - ரிக் வேதம்
    9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
    57 : 3 - குர்ஆன்
    ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
    1 : 31 : 2 - ரிக் வேதம்.
    10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
    48 : 23 - குர்ஆன்
    அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
    18 : 15 - அதர்வண வேதம்
    11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
    10 : 64 - குர்ஆன்
    இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
    1 : 24 : 10 - ரிக் வேதம்
    12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
    13 : 9 - குர்ஆன்
    இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
    20 : 58 : 3 - அதர்வண வேதம்
    மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்களைத் தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்./////

    எனக்கு வேதங்களைப் படிக்கும் வாய்ப்பும் நேரமும் கிடைக்கவில்லை. உங்கள் பின்னூடத்திற்கு நன்றி!
    நீங்கள் சொல்வது உண்மைதான். எல்லா மதங்களுமே இறைவனை அடையாளப்படுத்துவதில் ஒன்றாகத்தான் உள்ளன!

    ReplyDelete
  66. ////Blogger ananth said...
    நண்பர் சுவனப்பிரியன் போல் இவ்வளவு படித்து ஒப்பிட்டு எழுத என்னால் முடியாது. இங்குள்ள பழைய பாடத்தை படித்து முடிக்கலாம் என்றால் கூட நேரம் போதவில்லை. அவருடைய சிரத்தைக்கு எனது பாராட்டுகள். எல்லாம் வல்ல இறைவன் இவரை போல் ஆட்களை இங்கு அனுப்பி வைப்பாராக./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  67. ////Blogger Mohan said...
    அருமையான பதிவு..பின்னூட்டம் இட தாமதமாகிவிட்டது..சாரி
    இந்த மாதிரி எதார்த்தமான கட்டுரைகள் நிறைய தரவேண்டும்(பாடத்தின் இடையில்) என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    அன்பு மாணவர்,
    மோகன்////

    இடையில் எழுதிக்கொண்டிருக்கிறேன் நண்பரே! தொடர்ந்து எழுதுவேன்!

    ReplyDelete
  68. //ஆனால் அதே நேரத்தில் இந்தப் பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோ மீட்டர்
    வேகத்தில் சுற்றிக் கொள்கிறது. அதன் வேகம் உங்களைப் பாதிக்கிறதா?
    இல்லையே? அதுதான் இறைசக்தி!

    உலகின் நிலப்பரப்பில் 3ல் 2பங்கு தண்ணீர். இந்தச் சுழற்சியில் ஒரு சொட்டுத்
    தண்ணீராவது, பூமியிலிருந்து பிரிந்து அண்டத்தில் விழுகிறதா? கேட்டால் புவியீர்ப்பு
    என்பார்கள். அந்த ஈர்ப்புதான் இறைசக்தி!

    Space, time and earth மூன்றுமே ஒன்றுதான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க
    முடியாது. மூன்றுமே இறைசக்தி\\

    இந்த உண்மையை மனித குலம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து
    கொண்டு வந்தாலே உலகம் அமைதியும்,இனிமையும் பெற்றுவிடும். இந்தப் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதற்காக பாராட்டுகிறேன்.

    \\புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்\\
    வாத்தியார் வாயில் சாபம் போன்ற
    வார்த்தை அமைப்பு இனிமேல் வராது என நம்புகிறேன். உண்மையில் புரியாதவனுக்கு புரிய வைக்க நம்மை
    மேம்படுத்திக் கொள்வோம். புரியாத மாதிரி நடிப்பவரிடம் இருந்து ஒதுங்கிவிடுவோம்.

    ReplyDelete
  69. // அறிவன்#11802717200764379909 said...

    அந்த தகவல் பிழைதான் சுட்டப்பட்டது.

    எப்படியும் கண்ணன் கடவுளின் கட்சியில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி !!!!
    //

    அறிவன் சார், அதுபோன்ற கேள்விகளுக்கு மதவாதிகள் கொடுக்கும் விளக்கத்தைத்தான் நான் சொன்னேன். சொந்த கருத்து எதுவும் இல்லை. குறைபாடு உள்ள பிள்ளைகள் பிறப்பது இறைவனின் செயலா ? என்று கேட்ட போது ஒருவர் என்னிடம், 'பெற்றோர்களின் தவறான உணவு பழக்கத்தினால் நேர்ந்த பிழை அதில் இறை தொடர்பு இல்லை' என்றார்

    அதன் பிறகு அவரிடம் விவாதம் செய்ய முடியுமா ?

    ஆனால் அதே கேள்வியை இந்து நண்பர்களிடம் கேட்டால், 'முன் வினை' என்பார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் 30 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை இன்றைக்கு 120 கோடி, கிட்டதட்ட 60 விழுக்காட்டிற்கும் மேல் பிறப்பவை அனைத்தும் முன்வினை எதுமின்றி முதன் முதலில் பிறந்தவைதான். இப்படி புதிதாக (முதல் ஜென்மமாக) பிறந்ததில் குறைபாடு இல்லாத குழந்தைகளே இல்லையா ?

    நீங்கள் சொன்னதை மறுப்பதற்காக இதைச் சொல்லவில்லை. நல்லதை இறைவனின் திருவுளம் என்றும் தீயது நடந்தால் முன்வினை என்று சொல்லும் கட்சியில் நான் இல்லை. எனக்கே எனக்கான நம்பிக்கைகள் எனக்கும் உண்டு.

    ReplyDelete
  70. Blogger அறிவே தெய்வம் said...
    //ஆனால் அதே நேரத்தில் இந்தப் பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோ மீட்டர்
    வேகத்தில் சுற்றிக் கொள்கிறது. அதன் வேகம் உங்களைப் பாதிக்கிறதா?
    இல்லையே? அதுதான் இறைசக்தி!
    உலகின் நிலப்பரப்பில் 3ல் 2பங்கு தண்ணீர். இந்தச் சுழற்சியில் ஒரு சொட்டுத்
    தண்ணீராவது, பூமியிலிருந்து பிரிந்து அண்டத்தில் விழுகிறதா? கேட்டால் புவியீர்ப்பு
    என்பார்கள். அந்த ஈர்ப்புதான் இறைசக்தி!
    Space, time and earth மூன்றுமே ஒன்றுதான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க
    முடியாது. மூன்றுமே இறைசக்தி\\
    இந்த உண்மையை மனித குலம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து/////

    கொண்டு வந்தாலே உலகம் அமைதியும்,இனிமையும் பெற்றுவிடும். இந்தப் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதற்காக பாராட்டுகிறேன்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    \\புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்\\
    வாத்தியார் வாயில் சாபம் போன்ற
    வார்த்தை அமைப்பு இனிமேல் வராது என நம்புகிறேன். உண்மையில் புரியாதவனுக்கு புரிய வைக்க நம்மை
    மேம்படுத்திக் கொள்வோம். புரியாத மாதிரி நடிப்பவரிடம் இருந்து ஒதுங்கிவிடுவோம்./////////

    அது சாபம் அல்ல! வரமோ அல்லது சாபமோ கொடுக்கக்கூடிய தகுதியும் எனக்கில்லை!
    அது அவர்களைப் பற்றிய மன வெளிப்பாடு அவ்வளவுதான் நண்பரே!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  71. Blogger கோவி.கண்ணன் said...
    // அறிவன்#11802717200764379909 said...
    அந்த தகவல் பிழைதான் சுட்டப்பட்டது.
    எப்படியும் கண்ணன் கடவுளின் கட்சியில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி !!!!
    //

    அறிவன் சார், அதுபோன்ற கேள்விகளுக்கு மதவாதிகள் கொடுக்கும் விளக்கத்தைத்தான் நான் சொன்னேன். சொந்த கருத்து எதுவும் இல்லை. குறைபாடு உள்ள பிள்ளைகள் பிறப்பது இறைவனின் செயலா ? என்று கேட்ட போது ஒருவர் என்னிடம், 'பெற்றோர்களின் தவறான உணவு பழக்கத்தினால் நேர்ந்த பிழை அதில் இறை தொடர்பு இல்லை' என்றார்
    அதன் பிறகு அவரிடம் விவாதம் செய்ய முடியுமா ?
    ஆனால் அதே கேள்வியை இந்து நண்பர்களிடம் கேட்டால், 'முன் வினை' என்பார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் 30 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை இன்றைக்கு 120 கோடி, கிட்டதட்ட 60 விழுக்காட்டிற்கும் மேல் பிறப்பவை அனைத்தும் முன்வினை எதுமின்றி முதன் முதலில் பிறந்தவைதான். இப்படி புதிதாக (முதல் ஜென்மமாக) பிறந்ததில் குறைபாடு இல்லாத குழந்தைகளே இல்லையா ?
    நீங்கள் சொன்னதை மறுப்பதற்காக இதைச் சொல்லவில்லை. நல்லதை இறைவனின் திருவுளம் என்றும் தீயது நடந்தால் முன்வினை என்று சொல்லும் கட்சியில் நான் இல்லை. எனக்கே எனக்கான நம்பிக்கைகள் எனக்கும் உண்டு.//////

    உங்கள் தன்னிலை விளக்கத்திற்கு நன்றி கோவியாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com