மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.3.09

ஆசைப்பட்டதை வாங்குவது எப்படி?

ஆசைப்பட்டதை வாங்குவது எப்படி?

என்ன கேள்வி இது? ஆசைப்பட்டது எதுவாக இருந்தாலும் வாங்கிவிடலாம்
கையில் தேவையான பணம் இருந்தால் போதும்.

ஆனால் ஒன்றை மட்டும் எந்தக் கொம்பனாலும், எத்தனை கோடி பணம்
இருந்தாலும் வாங்க முடியாது

அது என்ன?

அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அது அன்பே வடிவான தாய்!

தாயன்பைப் பற்றி தாயை இழந்து தவிக்கிறவர்களிடம் கேட்டால் தெரியும்.
தாயன்பைப்பற்றித் தாய் இருக்கிற பலபேர்கள் உணர்வதில்லை.

அதுதான் மனித சோகம்!

ஒரு குழந்தை வளர்ந்து ஆளாகின்ற வரை, அதாவது பதினான்கு வயதுவரை
தாய் முக்கியம். பெண் குழந்தையாக இருந்தால் அதி முக்கியம்.

அதனால்தான் முதல் கேந்திர வீடாக தாய் வீடு அமைந்துள்ளது.
தாய்க்குப் பிறகுதான் தாரம். அதனால்தான் கேந்திர வரிசையில் ஏழாம் வீடு
இரண்டாவதாக அமைந்துள்ளது.

குழந்தைப் பருவம் அவலமில்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்றால்
நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------
ஒரு சினிமாக் கவிஞர் அதைப் பாட்டில் வைத்தார். அவரை மனமுவந்து
பாராட்டுகிறேன் இந்த இடத்தில் அந்தப் பாடலின் துவக்க வரிகளையும்
கொடுத்து மகிழ்கிறேன்

''ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா..... ஓ....ஓ....
அம்மாவை வாங்க முடியுமா...
உன்னையும் என்னையும் படைச்சதிங்கே யாருடா
அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அந்த தாயடா...

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா..... ஓ....ஓ....
அம்மாவை வாங்க முடியுமா..."
-----------------------------------------------------------------------------------------------
4th House (முன் பாடத் தொடர்ச்சி)
பொதுப் பலன்கள்.

1
நான்கில் குரு வந்தமர்ந்தும், நான்காம் அதிபதி வேறு சுபக் கிரகங்களுடன்
கூட்டணி போட்டும் இருந்தால் ஜாதகனுக்கு நல்ல உறவுகளும்,
நண்பர்களும் மிகுந்திருப்பார்கள். ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக
இருக்கும்.

2
நான்கில் தீய கிரகங்கள் வந்தமர்ந்தும், நான்காம் அதிபதி வேறு தீய
கிரகங்களுடன் கூட்டணி போட்டும் இருந்தால் ஜாதகனுக்கு நல்ல
உறவுகளும், நண்பர்களும் இருக்கமாட்டார்கள். ஜாதகனின் வாழ்க்கை
பிரச்சினைகள் உரியதாக இருக்கும்.

3
நான்காம் அதிபதி லக்கினத்தில் இருந்தாலும், அல்லது 7லில் அமர்ந்து
லக்கினத்தைப் பார்த்தாலும் ஜாதகனுக்கு சிரமங்களின்றி வீடு அமையும்.

4
நான்காம் அதிபதி 6ம் வீடு அல்லது 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடுகளில்
சென்றமர்ந்தும், சுபக்கிரகங்களின் பார்வையைப் பெறாமலும் இருந்தால்
ஜாதகனின் தாயார் அவனுடைய சிறுவயது அல்லது இளம் வயதிலேயே
மரணமாகி விடுவாள்.

5
நான்காம் அதிபதி லக்கினத்திலும், நான்கில் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன்
செல்வந்தனாக இருப்பான். அல்லது செல்வந்தனாக உயர்வடைவான்.

6
நான்காம் அதிபதி பகை வீடுகளில் சென்றமர்ந்தும், நான்காம் வீட்டில்
சனி அல்லது செவ்வாய் வந்து அமர்ந்தும் இருந்தால், ஜாதகன் சொத்து
செல்வம் எதுவும் இல்லாமல் இருப்பான். இருந்தால் அனைத்தும் அவனை
வீட்டு நீங்கும் அல்லது தொலைந்து போகும்.

7
நான்காம் அதிபதி எட்டில் அமர்ந்தாலும் அல்லது நீசமடைந்திருந்தலும்
அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது அஸ்தமணமாகி
இருந்தாலும் ஜாதகனுக்கு வீடு வாசல் சொத்து சுகம் இருக்காது.
இருந்தாலும் விரைவில் அவனை விட்டு அவைகள் நீங்கிவிடும் அல்லது
தொலைந்து விடும் அல்லது கரைந்து விடும். எப்படி வேண்டுமென்றாலும்
வைத்துக் கொள்ளுங்கள்.

8
நான்காம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்
ஜாதகனுக்கு நிறைய இடங்களையும், நிலங்களையும் வாங்கிச் சேர்க்கும்
யோகம் உண்டு!

9
அப்படிப் பரிவத்தனை பெறும் கிரகங்கள் வலுவாகவும் அல்லது சுய
வர்க்கத்தில் அதிக பரல்களுடனும் இருந்தால் ஜாதகன் அரசனுக்கு
நிகரான சொத்துக்களுடன் இருப்பான். சிலர் ஆட்சிபீடத்திலும்
அமர்வார்கள்.

10
நான்காம் வீட்டு அதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியும் பர்வர்த்தனை
ஆகியிருந்தால் ஜாதகன், சிக்கலிருக்கும் தன் முன்னோர் சொத்துக்களை
மீட்கும் வேலையில் வெற்றி பெறுவான். அவைகள் உரிய காலத்தில்
அவனிடம் வந்து சேரும்.

11
நான்கில் இருக்கும் குரு பலமில்லாமல் இருந்தால், ஜாதகனுக்கு
சொத்து இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.

12
நான்காம் அதிபதி நீசம் பெற்று சூரியனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனின்
சொத்துக்கள் அரச தண்டனையில் பறிபோகும். அல்லது நீதிமன்ற
வழக்குகளில் பறி போகும்.

13
நான்காம் வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் இருந்து, நான்காம்
அதிபதியும் பகை வீட்டில் இருந்தால், ஜாதகன் தயக்கமில்லாமல் பல
பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான்.

14
அதே நிலை ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால், ஜாதகி ஒழுக்கம்
தவறி பல ஆடவர்களைக் கூடி மகிழ்பவளாக இருப்பாள்.

15
நான்கில் சந்திரன் இருக்க, அந்த வீட்டைத் தீய கிரகங்கள் பார்த்தால்
ஜாதகன் தன் தாயைச் சின்ன வயதில் பறிகொடுக்க நேரிடும்.

16
நான்காம் வீட்டைக் குரு பார்த்தால், ஜாதகன் நேர்மையானவனாக
இருப்பான்.

17
நான்காம் வீட்டை ராகு பார்த்தால் அல்லது நான்கில் இருந்தால்
ஜாதகன் கல்மிஷம் பிடித்த மனதுக்காரனாக இருப்பான்.

18
நான்காம் வீடு இதயத்திற்கான் வீடு. இந்தவீட்டில் ராகு அமர்வது
சுகக்கேடு. சிலருக்கு இதய நோய்ஏற்படும். The heart may be afflicted
if rahu is posited in the fourth. (As the Fourth House rules the heart).

19
If rahu is in the 4th house, the native will be devoid of happiness,
landed properties, relatives and conveyances and all relatives will become
enemies. This position of the Rahu is detrimental in getting affection
from mother.

20
நான்காம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தாலும் அல்லது
லக்கினாதிபதிக்கு எட்டில் இருந்தாலும், ஜாதகனுக்குத் தன் தாயுடன்
சுமூகமான, அன்பான உறவு இருக்காது.

21
நான்காம் வீட்டில் இருக்கும் சுக்கிரனும், பத்தாம் அதிபதியும் வலுவாக
இருந்தால் ஜாதகன் இசையில் பெரிய ஆளாக வருவான்.

22
நான்காம் வீட்டில் இருக்கும் குருவும், பத்தாம் அதிபதியும் வலுவாக
இருந்தால் ஜாதகன் சிறந்த கல்வியாளனாக விளங்குவான்.அத்துறையில்
புகழ் பெறுவான்.

23
சூரியனும், புதனும் ஒன்று சேர்ந்து நான்கில் இருந்தாலும் அல்லது
நான்காம் வீட்டைப் பார்த்தாலும், ஜாதகன் கணிதப் பாடத்தில் உயர்
கல்விவரை படிப்பான்.

24
நான்காம் அதிபதியும் புதனும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால் ஜாதகன்
பெரிய சிந்தனையாளனாக வருவான்

25
நான்காம் அதிபதியும் சூரியன் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால் ஜாதகன்
தலைவனாக வருவான் அல்லது தலைமைப் பதவிக்கு உயர்வான்.

26
நான்காம் அதிபதியும் செவ்வாயும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால்
ஜாதகன் படைத்தளபதி உயர்வான்.

27
நான்காம் அதிபதியும் குருவும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால்
ஜாதகன் நீதிபதியாக உயர்வான்

28
4th lord + சுக்கிரன் வலுவாக இருந்தால் ஜாதகன் = கவிஞன் தத்துவஞானி

29
4th lord + சனி வலுவாக இருந்தால் ஜாதகன் = statesman and leader

30
4th lord + ராகு வலுவாக இருந்தால் ஜாதகன் = diplomat

31
4th lord + கேது வலுவாக இருந்தால் ஜாதகன் = spiritualist, seer, prophet

32
நான்காம் அதிபதி, லக்கின அதிபதி, குரு, புதன் ஆகிய நான்கு
அம்சங்களும் சேர்ந்துதான் ஒரு ஜாதகனின் கல்வியையை நிர்ணயம்
செய்யும். இவற்றுள் லக்கின அதிபதி மிகவும் 'வீக'காக இருந்தால்
மற்ற மூன்றும் பலனற்றதாகிவிடும்

இவற்றையெல்லாம் அலசித்தான் ஒரு ஜோதிடர் பலனைச் சொல்ல வேண்டும்
இல்லையென்றால் அவர் சொல்லும் பலன் பலனற்றதாகிவிடும்

(அலசல் தொடரும்)


வாழ்க வளமுடன்!

63 comments:

  1. நான் தான் முதலாவதாக வந்திருக்கிறன் போல, ஆனால் வாசிக்க நேரம் எடுக்கும் போல இருக்கு.. ஞாபகபடுத்த .. :) . நன்றி..

    ReplyDelete
  2. பொறுமையாக இத்தனை விவரங்கள் தட்டச்சியதற்கு நன்றி!!! இன்னொரு முறை விரிவாக படித்துக் கொள்ள வேண்டும்.

    //4th lord + ராகு வலுவாக இருந்தால்// அல்லது //4th lord + கேது வலுவாக இருந்தால்// என்றால் என்ன? புரியவில்லை.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    பாடம் ரொம்பவும் நீளமாக இருக்கிறது அதில் எனக்கு இருக்கின்ற சந்தேகத்தை கேட்கிறேன் ,எனக்கு நான்காம் அதிப்தி செவ்வாய் பதினொன்றில் ஆட்சியில் குருவும் புதனும் சேர இருக்கிறார்கள் ,நான்கில் கேது ஐந்தில் குரு இருந்தும் கல்வியில் சரியாக முன்னேற்றம் ஏற்படவில்லை ,நான் பத்தாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் மூன்றாவது மாணவனாக வந்தேன் என்னுடைய ஆசையெல்லாம் மருத்துவர் அல்லது இன்ஜினியரிங் படிக்கவேண்டும் என்பது ,அனால் நடந்தது வேறு டிப்ளோமா படித்து விட்டு இப்போது தனியாக தொழில் செய்துகொண்டுஇருக்கிறேன் .
    எதற்கு எதாவது காரணம்இதில் தெரிகிறதா
    என்னுடைய ராசி கும்பம் லக்னம் மகரம் ,சனி எழில் கடகத்தில் [பகை ]வீட்டில் இருக்கிறார்
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  4. மிகவும் அருமையான விளக்கங்கள்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  5. /////Blogger Emmanuel Arul Gobinath said...
    நான் தான் முதலாவதாக வந்திருக்கிறன் போல, ஆனால் வாசிக்க நேரம் எடுக்கும் போல இருக்கு.. ஞாபகபடுத்த .. :) . நன்றி..///////

    மெதுவாகப் படியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  6. /////Blogger கெக்கே பிக்குணி said...
    பொறுமையாக இத்தனை விவரங்கள் தட்டச்சியதற்கு நன்றி!!! இன்னொரு முறை விரிவாக படித்துக் கொள்ள வேண்டும்.
    //4th lord + ராகு வலுவாக இருந்தால்// அல்லது //4th lord + கேது வலுவாக இருந்தால்// என்றால் என்ன? புரியவில்லை./////

    நேற்றையப் பாடத்தில் எழுதியிருந்தேனே சகோதரி! படிக்கவில்லையா நீங்கள்?
    சரி, உங்களுக்காக அதை மீண்டும் கொடுத்துள்ளேன்
    ...............................................................................................................................
    நன்றாக இருப்பது என்பது என்ன? சோப்புப் போட்டுக் குளித்து, படிய தலை
    வாரி, ஜோவன் மஸ்க் சென்ட் அடித்துக் கொண்டு, வான் ஹுஸைய்ன் ஆயத்த
    அடைகளை அனிந்து கொண்டு, அரவிந்தசாமி லுக்கில் இருப்பதா? இல்லை!

    சம்பந்தப்பட்ட கிரகம், கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் இருப்பதும்,
    ஆட்சி, உச்சம் பெற்று இருப்பதும், அதோடு சுயவர்க்கத்தில் நல்ல பரல்களைப்
    பெற்று இருப்பதுமே ஆகும். அதோடு சுப கிரகங்களுடன் கூடி இருத்தல்
    கூடுதலான விஷேசம். அதைவிடச் சிறப்பு பத்தாம் வீட்டில் அமர்ந்து தனது
    வீட்டை நேரடியான பார்வையில் வைத்திருத்தல்.

    இப்படிப் பலவற்றையும் அலசித்தான் ஒரு வீட்டின் பலனைப் பார்க்க வேண்டும்
    .......................................................................................

    ReplyDelete
  7. //////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    பாடம் ரொம்பவும் நீளமாக இருக்கிறது அதில் எனக்கு இருக்கின்ற சந்தேகத்தை கேட்கிறேன் ,எனக்கு நான்காம் அதிப்தி செவ்வாய் பதினொன்றில் ஆட்சியில் குருவும் புதனும் சேர இருக்கிறார்கள் ,நான்கில் கேது ஐந்தில் குரு இருந்தும் கல்வியில் சரியாக முன்னேற்றம் ஏற்படவில்லை ,நான் பத்தாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் மூன்றாவது மாணவனாக வந்தேன் என்னுடைய ஆசையெல்லாம் மருத்துவர் அல்லது இன்ஜினியரிங் படிக்கவேண்டும் என்பது ,அனால் நடந்தது வேறு டிப்ளோமா படித்து விட்டு இப்போது தனியாக தொழில் செய்துகொண்டுஇருக்கிறேன் .
    எதற்கு எதாவது காரணம் இதில் தெரிகிறதா
    என்னுடைய ராசி கும்பம் லக்னம் மகரம் ,சனி எழில் கடகத்தில் [பகை ]வீட்டில் இருக்கிறார்
    நன்றி
    கணேசன்///////

    நான்காம் அதிபதி அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்ததாலும், லக்கினாதிபதி பகை வீட்டில் அமர்ந்ததாலும் பலன் குறைந்துவிட்டது. நான்கில் கேது வந்து அமர்ந்ததும் ஒரு கூடுதல் காரணம்!

    ReplyDelete
  8. /////////Blogger thirunarayanan said...
    மிகவும் அருமையான விளக்கங்கள்.
    நன்றி ஐயா./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. நல்ல படம். நல்ல பாடம். பாடங்களின் பதிவு அருமை.

    வாழ்க வளமுடன்:,
    வேலன்.

    ReplyDelete
  10. ஐயா எனது ஜாதகத்தின் நான்காம் வீட்டு அதிபதி சந்திரன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். ஐந்தாம் வீட்டுக்கு குரு பார்வை இருக்கிறது. 9-ல்(தனுசு) குரு இருக்கிறார். 9-ஆம் பார்வை இராசி வீடான சிம்மத்தைப் பார்க்கிறார். இதற்கான பலன் என்ன?

    ReplyDelete
  11. ஐயா,
    வணக்கம். பாடம் மிக அருமை. எனக்கு ஒரு சந்தேகம்... எனது லக்னம் தனுசு லக்னாதிபதி, 4ம் அதிபதியான குரு எட்டில் (வ) 5ம் அதிபதி, 9ம்பதியான சூரி, செவ் (அஸ்தங்கம்) - மகரத்தில்... குரு தனது 9ம் பார்வையாக 4ம் இடத்தைப் பார்க்கிறார். 4ம் அதிபதி 8ல் இருக்கிறார்... இதன் பலனை எப்படி கணக்கிடுவது?

    ReplyDelete
  12. Dear Sir

    Nice lesson sir. 4th(Saturn) house 9th place(Kadakam), Lagnadhibhadhi 11th place(Sevvai).

    Saturn parvai 11th house(sevvai)- that time (When Dasa came)-- naan niraya land vanguven solkirargale??

    ungal karuthu enna...(Already you mention shani parvai sevvaikku agadhu (Anal Enaku Sevvai Lagnadhibadhi) matrum 3rd and 4th lord is Saturn).

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  13. //////Blogger வேலன். said...
    நல்ல படம். நல்ல பாடம். பாடங்களின் பதிவு அருமை.
    வாழ்க வளமுடன்:,
    வேலன்./////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  14. ////Blogger VIKNESHWARAN said...
    ஐயா எனது ஜாதகத்தின் நான்காம் வீட்டு அதிபதி சந்திரன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். ஐந்தாம் வீட்டுக்கு குரு பார்வை இருக்கிறது. 9-ல்(தனுசு) குரு இருக்கிறார். 9-ஆம் பார்வை இராசி வீடான சிம்மத்தைப் பார்க்கிறார். இதற்கான பலன் என்ன?/////

    ஒன்பதில் குரு இருப்பதும், அவர் 5ல் இருக்கும் சந்திரனைப் பார்ப்பதும் நன்மைகளைத்தரும் அமைப்பாகும். மன மகிழ்ச்சி இருக்கும். ஒன்பதில் இருக்கும் குருவும், நட்பு வீட்டில் இருக்கும் நான்காம் அதிபதியும் எல்லா பாக்கியங்களையும் பெற்றுத்தருவார்கள்.

    ReplyDelete
  15. Blogger Mangaalam said...
    ஐயா,
    வணக்கம். பாடம் மிக அருமை. எனக்கு ஒரு சந்தேகம்... எனது லக்னம் தனுசு லக்னாதிபதி, 4ம் அதிபதியான குரு எட்டில் (வ) 5ம் அதிபதி, 9ம்பதியான சூரி, செவ் (அஸ்தங்கம்) - மகரத்தில்... குரு தனது 9ம் பார்வையாக 4ம் இடத்தைப் பார்க்கிறார். 4ம் அதிபதி 8ல் இருக்கிறார்... இதன் பலனை எப்படி கணக்கிடுவது?///////

    நான்காம் அதிபதி எட்டில் மறைந்தாலும் உச்சமடைந்திருக்கிறார். பார்வையில் தனது வீட்டைப் பார்க்கிறார். நன்மைகளைச் செய்வார். எட்டில் இருப்பதால் பலன்கள் சற்றுக் குறையும். அதோடு தாமதமாகும்.

    ReplyDelete
  16. Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Nice lesson sir. 4th(Saturn) house 9th place(Kadakam), Lagnadhibhadhi 11th place(Sevvai).
    Saturn parvai 11th house(sevvai)- that time (When Dasa came)-- naan niraya land vanguven solkirargale??
    ungal karuthu enna...(Already you mention shani parvai sevvaikku agadhu (Anal Enaku Sevvai Lagnadhibadhi) matrum 3rd and 4th lord is Saturn).
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///////

    லக்கினாதிபதி 11ல் இருப்பது குறைந்த முயற்சி அதிக பலன்கள். கவலையை விடுங்கள். எல்லாம் உரிய காலத்தில் செவ்வாய் திசையில் செவ்வாய் புத்திகளில் நடக்கும்! நான்காம் அதிபதி லக்கினாதிபதியைப் பார்ப்பதால் இடங்களை வாங்கும் யோகம் உண்டு. அதுவும் அந்தக் காலத்தில் (செவ்வாய் திசையில் செவ்வாய் புத்திகளில்) நடக்கும்

    ReplyDelete
  17. My 4th house lord mars is in the 3rd house (Tulam). I have read that it is not a good placement, The 3rd house lord venus is the strongest graha in my horoscope in 6th house. Please write about their effect.

    ReplyDelete
  18. வகுப்பறையில் இன்று எனக்கு கடைசி பென்ச். ஆசிரியர் ஏற்கனவே சொன்னதுதான். இவற்றோடு நல்ல தசா புத்தி நடந்தால் நல்ல பலன்கள் இரட்டிப்பாகும். கெடு பலன்கள் குறையும். இதோடு கோச்சாரத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சில ஜோதிட புத்தகங்களை படிக்கும் போது அதில் பார்த்தது/படித்தது. சனி, ராகு, கேது போன்ற கிரகங்களின் தீய ஆதிபத்தியத்தால்/இட அமர்வு/ பார்வை/சேர்க்கை இவற்றால் பாதிப்படைபவர்கள், காளி/ துர்க்கை போன்ற உக்ர தெய்வங்களை கும்பிட்டால் ஓரளவு நிவாரனம் அடையலாம். இன்றைக்கு கும்பிட்டு விட்டு நாளைக்கே ஒன்றும் நடக்கவில்லையே என்று கேட்காதிர்கள். அவரவர் குல/இஷ்ட தெய்வத்தை நம்பிக்கையோடு கும்பிட்டால் கூட போதுமானதுதான். ஒரு குழந்தை எப்படி சிறுக சிறுக வளர்ந்து பெரியவன்(ள்) ஆகிறதோ அது போல்தான் தெய்வ அருளும். கும்பிட கும்பிடதான் சக்தியும்/ அருளும் பெருகும். போதும் ஐயா இதற்கு மேல் எழுதினால் யார் படிக்கப் போகிறார்கள். பாதி படித்ததும் கொட்டாவி விட்டு விட்டு அடுத்த பின்னூட்டத்திற்கு தாவி விடுவார்கள். ஆனால் வாத்தியார் பொறுமைசாலி. அவர் எவ்வளவு எழுதினாலும் பொருமையாக படித்து விட்டு பதில் எழுதுவார். குறைந்த பட்சம் வாத்தியார் படிப்பாரே என்றுதான் பின்னூட்டம் இடுகிறேன்.

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா. நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அவர்களுக்கு நில சம்பந்தமான் சொத்து அமையும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் சரியா தவறா என்று சொல்லுங்கள் குருவே .

    ReplyDelete
  20. இதற்கு முன்பு கிரக வக்கிரத்தைப் பற்றி எழுதும் போது சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. கிரகங்களின் சஞ்சார வேகம் எப்போதும் ஒரே மாதிரியான அல்லது ஒரே சீரான வேகத்தில் இருப்பதில்லை. காரணம் அவற்றின் ஈர்ப்பு சக்தி அல்லது ஒன்றை மற்றொன்று பற்றி இழுக்கும் சக்தி. (கிரகங்கள் என்றாலே பற்றி இழுத்தல் என்று தானே பொருள்) உதாரணத்திற்கு செவ்வாய், சனி, குரு இவர்களை நோக்கி சூரியன் அருகில் வர வர இவர்களின் வேகம் அதிகமாக இருக்கும். தூரத்தில் போக போக வேகம் குறைந்து விடும். சூரியன் இவர்களை விட்டு 5ம் இடத்தில் இருக்கும் போது மிகவும் மெதுவாக சஞ்சரித்து பிறகு வக்கிரம் அடைந்து பின்னோக்கி செல்வார்கள். சூரியன் இவர்களுக்கு 7ம் இடம் வரும் வரை பின் செல்லும் வேகம் கூடிக்கொண்டே போகும். பிறகு 9ம் இடத்தில் வக்கிர நிவர்த்தியாகும் வரை பின் செல்லும் வேகம் குறைந்து கொண்டு வரும். வக்கிர நிவர்த்தியானவுடன் மெதுவாக முன்னே சென்று பின் வேகம் அதிகமாகும். புதன், சுக்கிரன் இவர்களுக்கும் இதே மாதிரிதான். சில ஜோதிடர்கள் இந்த மெது வேகம், அதி வேகம். சாதாரன வக்கிரம் அதி வக்கிரம் இதற்கு வெவ்வேறான பலன்கள் சொல்வார்கள். நமக்கு (வகுப்பறை மாணவர்களுக்கு) சுப்பையா வாத்தியார் சொல்லும் பலன்களே போதும். குரு பகவானும் மேலே சொன்ன 4 வகையான வேகத்தில் இருந்துதான் ஒரு ராசியில் ஒரு வருட சஞ்சாரத்தில் இருப்பார். இல்லாவிட்டால் இந்த வருடம் போல் 6 மாதம்தான். இவை நமக்கு தெரியாவிட்டால் குரு பகவானுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை முன் கூட்டியே பெயர்ச்சியாகிறார். பிறகு மனது கேட்காமல் முன்பிருந்த ராசிக்கே திரும்பி வந்து விடுகிறாரோ என்று நினைத்துக் கொள்வோம். அதற்காகத்தான் இந்த சிறு விளக்கம்.

    ReplyDelete
  21. /////Blogger krish said...
    My 4th house lord mars is in the 3rd house (Tulam). I have read that it is not a good placement, The 3rd house lord venus is the strongest graha in my horoscope in 6th house. Please write about their effect./////

    Mars in the fourth house - bad for mother but acquisition of property and vehicles will be there.
    The next lesson is about third house.Please wait!

    ReplyDelete
  22. /////Blogger krish said...
    My 4th house lord mars is in the 3rd house (Tulam). I have read that it is not a good placement, The 3rd house lord venus is the strongest graha in my horoscope in 6th house. Please write about their effect./////

    Mars in the fourth house - bad for mother but acquisition of property and vehicles will be there.
    The next lesson is about third house.Please wait!

    ReplyDelete
  23. Blogger ananth said...
    வகுப்பறையில் இன்று எனக்கு கடைசி பென்ச். ஆசிரியர் ஏற்கனவே சொன்னதுதான். இவற்றோடு நல்ல தசா புத்தி நடந்தால் நல்ல பலன்கள் இரட்டிப்பாகும். கெடு பலன்கள் குறையும். இதோடு கோச்சாரத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சில ஜோதிட புத்தகங்களை படிக்கும் போது அதில் பார்த்தது/படித்தது. சனி, ராகு, கேது போன்ற கிரகங்களின் தீய ஆதிபத்தியத்தால்/இட அமர்வு/ பார்வை/சேர்க்கை இவற்றால் பாதிப்படைபவர்கள், காளி/ துர்க்கை போன்ற உக்ர தெய்வங்களை கும்பிட்டால் ஓரளவு நிவாரனம் அடையலாம். இன்றைக்கு கும்பிட்டு விட்டு நாளைக்கே ஒன்றும் நடக்கவில்லையே என்று கேட்காதிர்கள். அவரவர் குல/இஷ்ட தெய்வத்தை நம்பிக்கையோடு கும்பிட்டால் கூட போதுமானதுதான். ஒரு குழந்தை எப்படி சிறுக சிறுக வளர்ந்து பெரியவன்(ள்) ஆகிறதோ அது போல்தான் தெய்வ அருளும். கும்பிட கும்பிடதான் சக்தியும்/ அருளும் பெருகும். போதும் ஐயா இதற்கு மேல் எழுதினால் யார் படிக்கப் போகிறார்கள். பாதி படித்ததும் கொட்டாவி விட்டு விட்டு அடுத்த பின்னூட்டத்திற்கு தாவி விடுவார்கள். ஆனால் வாத்தியார் பொறுமைசாலி. அவர் எவ்வளவு எழுதினாலும் பொருமையாக படித்து விட்டு பதில் எழுதுவார். குறைந்த பட்சம் வாத்தியார் படிப்பாரே என்றுதான் பின்னூட்டம் இடுகிறேன்.//////

    ஏன் அவநம்பிக்கை? அனைவரும் படிப்பார்கள். எழுதுங்கள் ஆனால் சுருக்கமாக எழுதுங்கள் நன்றி!

    ReplyDelete
  24. Blogger RamKumar said...
    வணக்கம் ஐயா. நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அவர்களுக்கு நில சம்பந்தமான சொத்து அமையும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் சரியா தவறா என்று சொல்லுங்கள் குருவே.

    அமையும். அதுபற்றிய விவரம் அடுத்த பாடத்தில் வர உள்ளது. பொறுத்திருந்து படியுங்கள்

    ReplyDelete
  25. //////Blogger ananth said...
    இதற்கு முன்பு கிரக வக்கிரத்தைப் பற்றி எழுதும் போது சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. கிரகங்களின் சஞ்சார வேகம் எப்போதும் ஒரே மாதிரியான அல்லது ஒரே சீரான வேகத்தில் இருப்பதில்லை. காரணம் அவற்றின் ஈர்ப்பு சக்தி அல்லது ஒன்றை மற்றொன்று பற்றி இழுக்கும் சக்தி. (கிரகங்கள் என்றாலே பற்றி இழுத்தல் என்று தானே பொருள்) உதாரணத்திற்கு செவ்வாய், சனி, குரு இவர்களை நோக்கி சூரியன் அருகில் வர வர இவர்களின் வேகம் அதிகமாக இருக்கும். தூரத்தில் போக போக வேகம் குறைந்து விடும். சூரியன் இவர்களை விட்டு 5ம் இடத்தில் இருக்கும் போது மிகவும் மெதுவாக சஞ்சரித்து பிறகு வக்கிரம் அடைந்து பின்னோக்கி செல்வார்கள். சூரியன் இவர்களுக்கு 7ம் இடம் வரும் வரை பின் செல்லும் வேகம் கூடிக்கொண்டே போகும். பிறகு 9ம் இடத்தில் வக்கிர நிவர்த்தியாகும் வரை பின் செல்லும் வேகம் குறைந்து கொண்டு வரும். வக்கிர நிவர்த்தியானவுடன் மெதுவாக முன்னே சென்று பின் வேகம் அதிகமாகும். புதன், சுக்கிரன் இவர்களுக்கும் இதே மாதிரிதான். சில ஜோதிடர்கள் இந்த மெது வேகம், அதி வேகம். சாதாரன வக்கிரம் அதி வக்கிரம் இதற்கு வெவ்வேறான பலன்கள் சொல்வார்கள். நமக்கு (வகுப்பறை மாணவர்களுக்கு) சுப்பையா வாத்தியார் சொல்லும் பலன்களே போதும். குரு பகவானும் மேலே சொன்ன 4 வகையான வேகத்தில் இருந்துதான் ஒரு ராசியில் ஒரு வருட சஞ்சாரத்தில் இருப்பார். இல்லாவிட்டால் இந்த வருடம் போல் 6 மாதம்தான். இவை நமக்கு தெரியாவிட்டால் குரு பகவானுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை முன் கூட்டியே பெயர்ச்சியாகிறார். பிறகு மனது கேட்காமல் முன்பிருந்த ராசிக்கே திரும்பி வந்து விடுகிறாரோ என்று நினைத்துக் கொள்வோம். அதற்காகத்தான் இந்த சிறு விளக்கம்.////////////

    6 மாதங்கள் அல்ல! அடுத்த பெயர்ச்சி வரைக்கும் சிலசமயம் அடுத்த ராசியையும் தொட்டுவிட்டு வருவார்! கால அளவு 11 மாதம் முதல் 13 மாதங்கள் வரை வேறுபடும். முழுச்சுற்றையும் முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகும்!

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா

    நான்காம் ஸ்தானம் பற்றிய பாடம் மிக ஆர்வமாக இருந்தது
    ஒரு மனிதனுக்கு நான்காம் ஸ்தானம் எவ்வளவு முக்கியம் என்பது
    தெரிந்து கொண்டேன். படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.
    நான்காம் இடமும் பத்தாம் இடமும் பரிவர்த்னை பெறுகின்ற பலன்
    மிக அருமை.ஐயா இரண்டாம் இடமும் பதினொன்றாம் இடமும்
    பரிவர்த்னை பெற்றாள் என்ன பலன்?

    ReplyDelete
  27. முதல் கேந்திரம் தாய் சரிதான். 2ம் கேந்திரம் தொழிலாக இருந்திருக்க வேண்டும். எனது வரிசை தாய், தொழில், பிறகுதான் தாரம். (சும்மா தான் சொல்கிறேன், விதண்டாவாதம் செய்யவில்லை) நிழலின் அருமை வெயிலில் போனால்தான் தெரிவதைப் போல் தாயின் அருமை அவர் இல்லாவிட்டால்தான் பலருக்கு தெரிகிறது. அலுவல் காரணமாக மீண்டும் செவ்வாய் கிழமைதான் வகுப்பறைக்கு வர இயலும். Tata Bye bye.

    ReplyDelete
  28. Thayin perumayodu Thandhaiyin perumaiyum avvare Uyarndhadhu enre karudhugiraen.
    Onrillaamal matronru mullumay peruvadhay irukkaadhu enru karudhugiraen.
    Irundu perumaighalayum namakku indha piraviyil kidaikkum baakyathai Iraivan namakku arulvaaragha..

    anbudan.

    ReplyDelete
  29. ஐயா
    நான்காம் அதிபதி செவ்வாய் நீசம் பெற்று 7-இல் (கடகத்தில்) சனியுடன்(லக்னாதிபதியுடன்) சேர்ந்து உள்ளார். நான்காம் அதிபதி செவ்வாய் 7-இல் இருந்து லக்னத்தை பார்க்கிறார்.நான்காம் அதிபதியும் லக்னாதிபதியும் கூட்டணி போட்டு 7-இல் உள்ளனர்.நான்காம் வீட்டின் பரல் 36. நான்காம் வீட்டிக்கு ராகு பார்வை வேறு .
    நான்கில் குருவும் கேதுவும் கூட்டணி போட்டு அமர்ந்து உள்ளனர்.இதனால் சொத்து வீடு மனை வாங்கும் யோகம் எப்படி இருக்கும் ?

    ReplyDelete
  30. மிகவும் அருமை

    பொறுமையாக இத்தனை விவரங்கள் தட்டச்சியதற்கு நன்றி!!!

    ReplyDelete
  31. //////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    நான்காம் ஸ்தானம் பற்றிய பாடம் மிக ஆர்வமாக இருந்தது
    ஒரு மனிதனுக்கு நான்காம் ஸ்தானம் எவ்வளவு முக்கியம் என்பது
    தெரிந்து கொண்டேன். படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.
    நான்காம் இடமும் பத்தாம் இடமும் பரிவர்த்னை பெறுகின்ற பலன்
    மிக அருமை.ஐயா இரண்டாம் இடமும் பதினொன்றாம் இடமும்
    பரிவர்த்னை பெற்றால் என்ன பலன்?//////

    மூன்றாம் இடத்தைப் பற்றிய பாடமும், இரண்டாம் இடத்தைப் பற்றிய பாடமும் அடுத்து வரவுள்ளது. பொத்றுத்திருந்து படிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  32. //////Blogger ananth said...
    முதல் கேந்திரம் தாய் சரிதான். 2ம் கேந்திரம் தொழிலாக இருந்திருக்க வேண்டும். எனது வரிசை தாய், தொழில், பிறகுதான் தாரம். (சும்மா தான் சொல்கிறேன், விதண்டாவாதம் செய்யவில்லை) நிழலின் அருமை வெயிலில் போனால்தான் தெரிவதைப் போல் தாயின் அருமை அவர் இல்லாவிட்டால்தான் பலருக்கு தெரிகிறது. அலுவல் காரணமாக மீண்டும் செவ்வாய் கிழமைதான் வகுப்பறைக்கு வர இயலும். Tata Bye bye./////

    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  33. /////////////Blogger kandhiah said...
    Thayin perumayodu Thandhaiyin perumaiyum avvare Uyarndhadhu enre karudhugiraen.
    Onrillaamal matronru mullumay peruvadhay irukkaadhu enru karudhugiraen.
    Irundu perumaighalayum namakku indha piraviyil kidaikkum baakyathai Iraivan namakku arulvaaragha..
    anbudan.//////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி கந்தைய்யா!

    ReplyDelete
  34. ///////Blogger உங்கள் மாணவி said...
    ஐயா
    நான்காம் அதிபதி செவ்வாய் நீசம் பெற்று 7-இல் (கடகத்தில்) சனியுடன்(லக்னாதிபதியுடன்) சேர்ந்து உள்ளார். நான்காம் அதிபதி செவ்வாய் 7-இல் இருந்து லக்னத்தை பார்க்கிறார்.நான்காம் அதிபதியும் லக்னாதிபதியும் கூட்டணி போட்டு 7-இல் உள்ளனர்.நான்காம் வீட்டின் பரல் 36. நான்காம் வீட்டிக்கு ராகு பார்வை வேறு .
    நான்கில் குருவும் கேதுவும் கூட்டணி போட்டு அமர்ந்து உள்ளனர்.இதனால் சொத்து வீடு மனை வாங்கும் யோகம் எப்படி இருக்கும்?////////////

    நான்காம் வீட்டில் அதிகமான பரல்கள் உள்ளதால் வாய்ப்பு உண்டு சகோதரி!

    ReplyDelete
  35. நல்ல படம் + பாடம்.
    அருமையான விளக்கங்கள்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  36. ///////Blogger VA P RAJAGOPAL said...
    Thanks for today lesson.//////

    நன்றி கோபால்

    ReplyDelete
  37. ////////////Blogger dubai saravanan said...
    மிகவும் அருமை
    பொறுமையாக இத்தனை விவரங்கள் தட்டச்சியதற்கு நன்றி!!!//////////

    நன்றி சரவணன்!

    ReplyDelete
  38. //////////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
    NICE LESSON SIR,..//////////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  39. //////////Blogger Geekay said...
    நல்ல படம் + பாடம்.
    அருமையான விளக்கங்கள்.
    நன்றி ஐயா./////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  40. ஆகா, முதல் ஆலா முந்தினாலும் , புதன் சூரியனின் 5 பாகைக்குள் அதால ஞாபகம் நிக்குதில்ல .. :) . இப்படி சொல்லி தப்பிக்கலாமா ? எப்படி ஜயா இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கிறியல், இன்னாரு சந்தேகம் எப்படி ஜயா எமக்காக நேரம் ஒதுக்குகின்றீர்கள் .

    ReplyDelete
  41. அய்யா,

    அலுவுலக பணி காரணமாக என்னால் சில வகுப்புகளை நேரத்தோடு படிக்க முடிய வில்லை. நாகாம் விடு பற்றிய பாடம் அருமை!

    நன்றி,

    Sridhar

    ReplyDelete
  42. ஐயா
    பாட விளக்கங்கள் அருமை.
    லக்கினாதிபதியும் 4ம் அதிபதியுமான குரு உச்சமாகி 5ம் + 12ம் அதிபதியான செவ்வாயுடன் கூடி 8ல் கடகத்தில் இருந்தால் நல்லதா?

    ReplyDelete
  43. //////Blogger Emmanuel Arul Gobinath said...
    ஆகா, முதல் ஆளா முந்தினாலும் , புதன் சூரியனின் 5 பாகைக்குள் அதால ஞாபகம் நிக்குதில்ல .. :) . இப்படி சொல்லி தப்பிக்கலாமா ? எப்படி ஜயா இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கிறியல், இன்னாரு சந்தேகம் எப்படி ஜயா எமக்காக நேரம் ஒதுக்குகின்றீர்கள்??///

    ஒரு தாயால், இரவு பகலென்று பார்க்காமல் தன் குழந்தைக்கு எப்படி நேரம் ஒதுக்க முடிகின்றதோ, அப்படி என் வகுப்பறை மாணவர்களுக்காக நானும் நேரத்தை ஒதுக்குகிறேன். எல்லாம் ஒரு மிகுதியான அன்பினால்தான்! If there is a will, there will be a way!

    ReplyDelete
  44. ////Blogger Sridhar said...
    அய்யா,
    அலுவுலக பணி காரணமாக என்னால் சில வகுப்புகளை நேரத்தோடு படிக்க முடிய வில்லை. நாகாம் விடு பற்றிய பாடம் அருமை!
    நன்றி,
    Sridhar//////

    தேர்விற்கா படிக்கிறீர்கள்? நேரம் கிடைக்கும்போது படித்தால் போதும் ஸ்ரீதர்!

    ReplyDelete
  45. ///Blogger செல்லி said...
    ஐயா
    பாட விளக்கங்கள் அருமை.
    லக்கினாதிபதியும் 4ம் அதிபதியுமான குரு உச்சமாகி 5ம் + 12ம் அதிபதியான செவ்வாயுடன் கூடி 8ல் கடகத்தில் இருந்தால் நல்லதா?/////

    12ஆம் அதிபதியுடன் கூட்டு இருப்பதோ எட்டாம் வீடு. ஆகவே நன்மைகள் பாதியாகக் குறைந்துவிடும் சகோதரி!

    ReplyDelete
  46. ஐயா, நன்றி.

    //லக்கினாதிபதியும் 4ம் அதிபதியுமான குரு உச்சமாகி 5ம் + 12ம் அதிபதியான செவ்வாயுடன் கூடி 8ல் கடகத்தில் இருந்தால் நல்லதா?/////

    12ஆம் அதிபதியுடன் கூட்டு இருப்பதோ எட்டாம் வீடு. ஆகவே நன்மைகள் பாதியாகக் குறைந்துவிடும் சகோதரி!//

    உச்ச குருவும் நீச செவ்வாயும் சேர்ந்த நீசபங்க ராஜயோகம் நன்மைகூடச் செய்யாதா?

    ReplyDelete
  47. DEAR SIR .,
    HOW TO DOWNLODE ALL THE OLD LESSIONS 1-132 . FOR THE LOST THREE DAYS I SAW YOUR LESSIONS . IT IS VERY INTERS .

    HOW TO DOWNLODE AND HOW TO READE .
    I DON'T HAVE ANY TAMIL SOFTWARE . AS PER ADVICE (TODAY I RECEIVED YOUR MAIL )I DOWNLODE ,COPY & PASTE IN THE MS OFFICE FILE ,BUT IT SHOW SOME SQURE BLOCKS IT IS NOT REDABLE . PLEASE HELP ME IN THIS MATTER .

    ---THOTAVAU192-ANDHRA

    ReplyDelete
  48. DEAR SIR .,
    HOW TO DOWNLODE ALL THE OLD LESSIONS 1-132 . FOR THE LOST THREE DAYS I SAW YOUR LESSIONS . IT IS VERY INTERS .

    HOW TO DOWNLODE AND HOW TO READE .
    I DON'T HAVE ANY TAMIL SOFTWARE . AS PER ADVICE (TODAY I RECEIVED YOUR MAIL )I DOWNLODE ,COPY & PASTE IN THE MS OFFICE FILE ,BUT IT SHOW SOME SQURE BLOCKS IT IS NOT REDABLE . PLEASE HELP ME IN THIS MATTER .

    ---THOTAVAU192-ANDHRA

    ReplyDelete
  49. Thank you sir,
    i have also check it English date 25/05/1985,,time 5.07am...tamil date vaikashi 12,,alayam star,,mesha laganm,,cancer rasi,

    mesham lagana
    > 1st house bhuthan,rahu
    > 2nd house sun,mars,
    > 4th moon,
    > 7th kethu,
    > 8th sani,
    > 10th guru,
    > 12th venus,//////
    i have 2 question sir,
    1.i lost around 7 lacks for share trading,somebody said 12th house
    venus,and your entire property will going to zero.(now iam zero)so is
    it happen in my life?
    2.when i earn single rupee in my life.////
    3.can i do continue share trading now,or later in my life(when do you say).
    thank you sir.

    நீங்கள் எழுதியுள்ள பிறப்பு விவரங்களுக்கு ரிஷப லக்கினம் என்று வருகிறது. நீங்கள் மேஷ லக்கினம் என்று எழுதியுள்ளீர்கள். குழப்பம் இருக்கிறது. ஒன்று நீங்கள் கொடுத்துள்ள தேதி தவறானது அல்லது லக்கினம் தவறானது. எது தவறு என்று பாருங்கள்.

    சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள பிறப்புக்களுக்கு இந்தத் தேதிக் குழப்பம் ஏற்படுவது இயற்கை.
    ஆங்லத்தேதிகள் இரவு 12 மணிக்கு மாறிவிடும்
    தமிழ்த் தேதிகள் சூரிய உதயத்திற்குப் பிறகுதான் மாறும்

    ReplyDelete
  50. Dear Sir,

    My 4th lord Saturn is along with Mars in thulam lagnam (no combust), is this good combination, will it do harmful to my mother and my life partner?, how ever we have lost our own house in Mars Dasa Saturn Bukthi, my date of birth and time 2nd August 1984, morning 11.34AM hastham 4th part...waiting for your Reply

    Regards
    Vinod

    ReplyDelete
  51. நன்றி மிகவும் அருமையான படைப்பு !

    மேசம் ராசி பரணி நட்சத்திரம்மிற்க்கு பனிரெண்துவில் செவ்வாய் இருய்ந்தால் அது செவ்வாய் தோசமா?

    ReplyDelete
  52. 4 th lord + ராகு வலுவாக இருந்தால் ஜாதகன் = diplomat

    4 th lord + கேது வலுவாக இருந்தால் ஜாதகன் = spiritualist,seer,prophet

    ராகு மற்றும் கேதுவின் வலிமையை எப்படி தெரிந்து கொள்ளலாம் ? அல்லது ராகு ,கேது வலுவாக உள்ளது என்று எப்படி சொல்லாம்.

    ஏன் என்றால் ராகு கேதுவுக்கு பரல் கணக்கு கிடையதே .

    ReplyDelete
  53. //////Blogger செல்லி said...
    ஐயா, நன்றி
    //லக்கினாதிபதியும் 4ம் அதிபதியுமான குரு உச்சமாகி 5ம் + 12ம் அதிபதியான செவ்வாயுடன் கூடி 8ல் கடகத்தில் இருந்தால் நல்லதா?/////
    12ஆம் அதிபதியுடன் கூட்டு இருப்பதோ எட்டாம் வீடு. ஆகவே நன்மைகள் பாதியாகக் குறைந்துவிடும் சகோதரி!//
    உச்ச குருவும் நீச செவ்வாயும் சேர்ந்த நீசபங்க ராஜயோகம் நன்மைகூடச் செய்யாதா?///////

    நீச பங்க ராஜ யோகம் உண்டு சகோதரி. அந்த யோகத்தைத் தரக்கூடிய இருவருமே எட்டில் இருப்பதால், பல தடை, தடங்கல்களுடன் அது கிடைக்கும்!

    ReplyDelete
  54. //////Blogger vasuki said...
    DEAR SIR .,
    HOW TO DOWNLODE ALL THE OLD LESSIONS 1-132 . FOR THE LOST THREE DAYS I SAW YOUR LESSIONS . IT IS VERY INTERS .
    HOW TO DOWNLODE AND HOW TO READ .
    I DON'T HAVE ANY TAMIL SOFTWARE . AS PER ADVICE (TODAY I RECEIVED YOUR MAIL )I DOWNLODE ,COPY & PASTE IN THE MS OFFICE FILE ,BUT IT SHOW SOME SQURE BLOCKS IT IS NOT REDABLE . PLEASE HELP ME IN THIS MATTER
    ---THOTAVAU192-ANDHRA/////

    உங்களுக்குப் பதில் கொடுத்திருக்கிறேன்!

    ReplyDelete
  55. //////Blogger Vinodh said...
    Dear Sir,
    My 4th lord Saturn is along with Mars in thulam lagnam (no combust), is this good combination, will it do harmful to my mother and my life partner?, how ever we have lost our own house in Mars Dasa Saturn Bukthi, my date of birth and time 2nd August 1984, morning 11.34AM hastham 4th part...waiting for your Reply
    Regards
    Vinod///////

    துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அவனுடைய புத்தியில் வீட்டை இழந்தீர்களா? வீட்டை இழந்ததற்கு உங்கள் பெற்றோர்களின் ஜாதகம் காரணமாக இருக்கும். நீங்கள் உங்களை வைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள்!

    ReplyDelete
  56. //////Blogger Mathi said...
    நன்றி மிகவும் அருமையான படைப்பு !
    மேசம் ராசி பரணி நட்சத்திரத்திற்கு பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோசமா?/////

    ஏன் குழப்பம்? லக்கினம் என்ன சுவாமி? அதை வைத்தல்லவா தோஷத்தைப் பார்க்க வேண்டும்?

    ReplyDelete
  57. Blogger Ragu Sivanmalai said...
    4 th lord + ராகு வலுவாக இருந்தால் ஜாதகன் = diplomat
    4 th lord + கேது வலுவாக இருந்தால் ஜாதகன் = spiritualist,seer,prophet
    ராகு மற்றும் கேதுவின் வலிமையை எப்படி தெரிந்து கொள்ளலாம் ? அல்லது ராகு ,கேது வலுவாக உள்ளது என்று எப்படி சொல்லாம்.
    ஏன் என்றால் ராகு கேதுவுக்கு பரல் கணக்கு கிடையதே/////

    ராகு & கேது combust ஆகாமல், சனியுடன் சேராமல், பகை வீடுகளில் இல்லாமல் இருந்தாலும், சுபக்கிரகங்களுடன் கூடி இருந்தாலும் வலிமையாக உள்ளார்கள் என்று பொருள்!

    ReplyDelete
  58. SP.VR. SUBBIAH said...
    //////Blogger Mathi said...
    நன்றி மிகவும் அருமையான படைப்பு !
    மேசம் ராசி பரணி நட்சத்திரத்திற்கு பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோசமா?

    ஏன் குழப்பம்? லக்கினம் என்ன சுவாமி? அதை வைத்தல்லவா தோஷத்தைப் பார்க்க வேண்டும்? /////

    உங்கள் பதிலுக்கு நன்றி .. கண்ணி லக்கணம் அய்யா .. !

    ஏதாவது விலக்குகள் உண்டா ?

    ReplyDelete
  59. //Blogger Mathi said...
    SP.VR. SUBBIAH said...
    //////Blogger Mathi said...
    நன்றி மிகவும் அருமையான படைப்பு !
    மேசம் ராசி பரணி நட்சத்திரத்திற்கு பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோசமா?
    ஏன் குழப்பம்? லக்கினம் என்ன சுவாமி? அதை வைத்தல்லவா தோஷத்தைப் பார்க்க வேண்டும்? /////
    உங்கள் பதிலுக்கு நன்றி .. கன்னி லக்கணம் அய்யா .. !
    ஏதாவது விலக்குகள் உண்டா ?/////

    மேஷ ராசிக்கு 12ல் செவ்வாய் எனும்போது கன்னி லக்கினத்திற்கு 7ல் செவ்வாய். தோஷம் உண்டு நண்பரே!
    செவ்வாய் தோஷமுடைய மங்கையாகத் திருமணம் செய்துகொள்ளுங்கள். பிரச்சினை இருக்காது!

    ReplyDelete
  60. ஐயா நான் மேஷ லக்கினம். எட்டாம் இடமான விருட்சகத்தில் செவ்வாயும்(212.22பாகை) மற்றும் கேதுவும் (226.55பாகை)இருக்கிறது. எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா?

    ReplyDelete
  61. ////Blogger VIKNESHWARAN said...
    ஐயா நான் மேஷ லக்கினம். எட்டாம் இடமான விருட்சகத்தில் செவ்வாயும்(212.22பாகை) மற்றும் கேதுவும் (226.55பாகை)இருக்கிறது. எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா?/////

    மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் அதிபதி. ஆகவே தோஷம் கிடையாது. அதிபதி தனக்குத்தானே தோஷத்தைக் கொடுத்துக்கொள்ள மாட்டான்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com