பெட்டி போனால் என்ன? சாவி இருக்கிறது!
தந்தையும், பதினைந்து வயது மகனும் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம்
அவகாசம் இருந்தது.
பையன் பொறுப்பில்லாதவன். விளயாட்டுப்பிள்ளை. அம்மா செல்லம். சொல்வதைக்
கேட்கமாட்டான்.
ஆகவே, தந்தை தன்னுடைய டிராவல் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு,
"டேய், முதல் பிளாட்பாரத்தில் ரயில்வே கேன்டீன் இருக்கிறது. போய்க் காப்பி
சாப்பிட்டுவிட்டு, ரயிலில் சாப்பிடுவதற்கு ஏதாவது பார்த்து வாங்கிக்கொண்டு
வருகிறேன். நீ இங்கேயே இரு. உன் சூட்கேசைப் பார்த்துக் கொள். எம்ப்டி
சூட்கேஸ் மட்டுமே 1,500 ரூபாய் விலை. ஜாக்கிரதை!" என்று சொல்லிவிட்டுப் போனார்.
பையன் சுவாரசியமில்லாமல் மண்டையை அசைத்து அவரை அனுப்பி வைத்தான்
++++++++++++++++++++++++++++++++++++
சென்றவர் அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார்
பையனையும் காணவில்லை அவனுடைய பெட்டியையும் காணவில்லை.
பதற்றமாகிவிட்டது.
அந்த பிளாட்பாரத்தின் வலதுபுறம் சற்றுத் தள்ளி ஒரு குளிர்பானக் கடை
இருப்பதும், பையன் அங்கே வெறுமனே நிற்பதும் தெரிந்தது.
விரைந்தார்.
பையன் கண்களை மூடியவாறு பெப்சியை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான்.
"டேய் ராசா, நான் வர்றதுக்குள்ளே என்னடா அவசரம்?"
"தாகமா இருந்துச்சு நைனா, அதான் பெப்சி குடிக்க வந்தேன்"
"பெட்டி எங்கேடா ராசா?"
"அதை நாம நின்ன இடத்துல வச்சுட்டுத்தான், இங்க வந்தேன்"
சட்டென்று தந்தையின் ப்ளட் பிரஷர் எகிறி விட்டது. காட்டுக் கத்தலாகக் கத்தினார்
"டேய் அறிவு கெட்டவனே, உன் மேம்போக்குத்தனத்துக்கு அளவே இல்லையா?"
"இப்ப என்ன ஆச்சுன்னு நைனா இப்படிக் கத்தறே?"
"பெட்டி அங்கே இல்லை. யாரோ லவட்டிக் கொண்டு போய் விட்டான். நான்
நினைத்தபடியே ஆகிவிட்டது."
பையன் கூலாகச் சொன்னான்,"பெட்டியை எடுத்துக் கொண்டு போனவன்
திரும்ப நம்மகிட்டதான் வருவான்"
"எப்படிடா அறிவுகெட்டவனே?"
"சாவி எங்கிட்டயில்ல இருக்கு!"
-------------------------------------------------------------------------------------------------------------------
இணையத்தில் எழுதுகிற அத்தனை பேர்களின் நிலையும், அந்தப் பையனின்
நிலைதான்.
அத்தனை பேர்களும் அப்பாவிகள். சாவி நம்மிடம் இருக்கிறது என்று நினைத்துக்
கொண்டிருப்பவர்கள். அதாவது வலைப்பூ நம்மிடம், நம் பெயரில் இருக்கிறது
என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.
எழுதும் ஆக்கங்கள் எல்லாம் எப்படி எப்படித் திருடப்படுகிறதோ, யாருக்குத் தெரியும்?
-------------------------------------------------------------------------------------------------
திருட்டைப் பற்றி நான் கவலைப் படவில்லை. அதை மலைமேல் இருக்கும்
போலீஸ்காரர் (தமிழ்க் கடவுள்) பார்த்துக் கொள்வார்.
அதற்குப் பெயர்தான் இறை நம்பிக்கை!
----------------------------------------------------------------------------------------
பாடத்தில் இன்னும் எழுத வேண்டிய பகுதிகள் மூன்றாம் வீடு, நான்காம் வீடு,
எட்டாம் வீடு. அவைகளை முழுமையாக எழுத வேண்டும். அத்துடன் லக்கினம்
இரண்டாம் வீடு ஆகியவைகளில் இன்னும் சரிபாதியை எழுத வேண்டும்
யோகங்களைப் பற்றி முழுமையாக எழுத வேண்டும்.
அஷ்டவர்க்கத்தில் இன்னும் சரிபாதியை எழுத வேண்டும்
எல்லாவற்றையும் இன்னும் நான்கு மாதங்களுக்குள் முடித்துவிட எண்ணியுள்ளேன்.
அதற்குப் பிறகு, பாடங்கள் முடிந்தாலும், உங்கள் விருப்பத்தைப் பொறுத்து,
வேறு ஒரு தலைப்பில் ஜோதிடக்கட்டுரைகள் தொடரும்
-------------------------------------------------------------------------------------------------
நான்கு மாதங்களில் பாடங்கள் முடிந்தவுடன், எழுதிய ஆக்கங்களை இரண்டு
(Volume) நூல்களாக வெளியிட உள்ளேன்.
முதல் பதிப்பு வகுப்பறை மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
நூலிலும் அது சமர்ப்பணம் என்று குறிப்பிடப்படும்
அப்போது உங்கள் ஆதரவைத் (Support) தாருங்கள்.
புத்தகத்தில் பாடங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு, அட்டவனைகள்
ஒழுங்கு படுத்தப்பட்டு, படிப்பதற்கு வசதியாக, அசத்தலாக இருக்கும்.
அதைப் பற்றிய அறிவிப்பை, பாடங்கள் முடிந்த பிறகு வெளிப்படுத்துகிறேன்
--------------------------------------------------------------------------------------------------
அடுத்த பாடம் தாய், கல்வி, சுகம் ஆகியவற்றைத் தரும் நான்காம் வீட்டைப்
பற்றியது.
அது நாளை வெளிவரும்!
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
23.3.09
பெட்டி போனால் என்ன? சாவி இருக்கிறது!
Subscribe to:
Post Comments (Atom)
அடுத்து சுகஸ்தானத்தைப் பற்றிய பாடம். அதற்காக இப்போதே waiting.
ReplyDeleteதாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. சாவி நம்மிடம்தான் உள்ளது.ஆனால் பெட்டி யார்யார் கை மாறி உள்ளதோ? வலைப்பதிவுகளும் அவ்வாறே...
ReplyDeleteபுத்தக வெளியிட்டை ஆவலுடன் எதி்ர்பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வாத்தியார் நூல்கள் நல்ல முறையில் வெளிவர வாழ்த்துகள் !
ReplyDeleteWe are waiting for your book. Best wishes.
ReplyDeleteவகுப்பறை மாணவர்கள் மேல் தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு அடிபணிகின்றேன். உங்கள் பணி என்றும் தொடர ஆறு படையப்பன் அருள் புரிவாராக!
ReplyDeleteநான்காம் வீடா , எதிற்பார்க்கிறேன் நிறைய
ReplyDeleteDear Sir
ReplyDeleteNandri Iyya..We(Iam) are waiting sir.
Enakku oru Copy(Special) , I will give my US Address Sir..please
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
இப்படிக் களவு கொடுப்பவர்களுக்கு ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் ,
ReplyDeleteநான் எப்போதும் அப்படித்தான்.
வணக்கம் ஐயா
ReplyDeleteவாத்தியார் ஐயாவின் புத்தக வெளியீடு மகிழ்ச்சி மிக்க செய்தி எங்கள் வாழ்த்துகளும்,
ஆதரவும் தெருவிகிறோம்.எங்கள் வாத்தியருக்கு அவருடைய வாத்தியார் மலைமேல்
இருக்கும் வேலாயுதன் துணை இருப்பார்.
தாய் ஸ்தான பலன்களை ஆவலுடன் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன்.
ReplyDelete//////Blogger ananth said...
ReplyDeleteஅடுத்து சுகஸ்தானத்தைப் பற்றிய பாடம். அதற்காக இப்போதே waiting.//////
உங்கள் வெயிட்டிங் வீண் போகாது. பாடம் சிறப்பாக இருக்கும்!
எனக்குப் பிடித்த வீடுகளில் ஒன்று அது!
/////Blogger வேலன். said...
ReplyDeleteதாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. சாவி நம்மிடம்தான் உள்ளது.ஆனால் பெட்டி யார்யார் கை மாறி உள்ளதோ? வலைப்பதிவுகளும் அவ்வாறே...
புத்தக வெளியிட்டை ஆவலுடன் எதி்ர்பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////
நன்றி வேலன்!
///////Blogger கோவி.கண்ணன் said...
ReplyDeleteவாத்தியார் நூல்கள் நல்ல முறையில் வெளிவர வாழ்த்துகள்!//////
நன்றி கோவியாரே!
/////////Blogger krish said...
ReplyDeleteWe are waiting for your book. Best wishes.////////
நன்றி க்ரீஷ்!
/////////Blogger N.K.S.Anandhan. said...
ReplyDeleteவகுப்பறை மாணவர்கள் மேல் தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு அடிபணிகின்றேன். உங்கள் பணி என்றும் தொடர ஆறு படையப்பன் அருள் புரிவாராக!///////////
நன்றி ஆனந்தன்!
/////Blogger KaveriGanesh said...
ReplyDeleteநான்காம் வீடா , எதிர்பார்க்கிறேன் நிறைய/////////
பாடம் சிறப்பாக இருக்கும்! விரிவாக எழுதுகிறேன்
எனக்குப் பிடித்த வீடுகளில் ஒன்று அது!
நூல்கள் நல்ல முறையில் வெளிவர வாழ்த்துகள் ஐயா!!
ReplyDelete/////////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Nandri Iyya..We(Iam) are waiting sir.
Enakku oru Copy(Special) , I will give my US Address Sir..please
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////////
நம் மாணவக் கண்மணிகள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும், அவர்களுடைய முகவரிக்குப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். விரிவான அறிவிப்பு பின்னால் வரும்.
////////Blogger KS said...
ReplyDeleteஇப்படிக் களவு கொடுப்பவர்களுக்கு ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் ,
நான் எப்போதும் அப்படித்தான்.////////
லக்கினாதிபதி 6, 8, 12ல் மறைந்திருப்பார். அவர்கள்தான் அதிக ஏமாற்றங்களுக்கும் துரோகங்களுக்கும் ஆளாவார்கள்
////////////Blogger sundar said...
ReplyDeleteவணக்கம் ஐயா
வாத்தியார் ஐயாவின் புத்தக வெளியீடு மகிழ்ச்சி மிக்க செய்தி எங்கள் வாழ்த்துகளும்,
ஆதரவும் தெருவிக்கிறோம்.எங்கள் வாத்தியருக்கு அவருடைய வாத்தியார் மலைமேல்
இருக்கும் வேலாயுதன் துணை இருப்பார்.//////////////
ஆமாம் எனக்கு என்றும் அவன்தான் துணை! உற்சாகத்தைக் கொடுப்பவனும் அவன்தான்!
/////////Blogger Sai said...
ReplyDeleteதாய் ஸ்தான பலன்களை ஆவலுடன் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன்./////
ஆகா, உங்கள் ஆவல் பூர்த்தியாகும். பொறுத்திருந்து படியுங்கள்!
//////////Blogger Geekay said...
ReplyDeleteநூல்கள் நல்ல முறையில் வெளிவர வாழ்த்துகள் ஐயா!!//////
நன்றி ஜீக்கே!
ஆவலுடன் தங்கள் புத்தகம் வரும் நாளை எதிர்நோக்கியுள்ளோம் !
ReplyDeleteஅன்புடன்,
பாஸ்கர் .
Dear Sir,
ReplyDeleteWish you a very great success in your writing career....awaiting for your book publication.
Keep up your good job!
-Shankar
எப்ப வரும்..? எப்ப வரும்..? என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் வாத்தியாரே..
ReplyDeleteஆவலுடன் தங்கள் புத்தகம் வரும் நாளை எதிர்நோக்கியுள்ளோம் !
ReplyDeleteஇரண்டு நாட்களாக வேலையோடு சேர்ந்த விடுமுறையில் இருந்ததால் வகுப்பறைக்கு இன்றுதான் வந்தேன். காலையில் வேலையின் காரணமாக பின்னூட்டம் அதிகம் எழுதவில்லை. தங்கள் புத்தக வெளியீடு வெற்றி பெற எனது வாழ்த்துகள். லக்னாதிபதி 6,8,12 மறைந்தால் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் அதிகம் இருக்கும் என்றீகள். அதற்கு 1 பரிகாரம். எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஏமாற்றம் குறையும். சும்மா தமாஷ். எனக்கு கன்னி லக்னாதிபதி புதன் சுக்கிரனோடு 8ல் மறைந்துள்ளார்
ReplyDeleteஆசிரியப் பெருந்தகையே,
ReplyDeleteமண்மணம் கமழும் மந்திர எழுத்துக்கள் உம்முடையது...
சோதிடமும் சிறுகதைகளும் பாலுடன் சேர்ந்த சர்க்கரை ...
உங்களின் ‘அஷ்டவர்க்க' அனுபவப் பகிர்வுகள் மிகவும் உபயோகமானவை (படித்ததை மட்டுமில்லாமல் உங்களது அனுபவன்களையும் சேர்த்து எழுதுவதால் அவ்வாறு பதிவிட்டேன்)
வளர்க உங்கள் நேசத் தொண்டு.
-அன்புடன்
சிங்கப்பூர் சீனு
வாழ்த்துகள் ஐயா
ReplyDelete///////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ReplyDeleteஆவலுடன் தங்கள் புத்தகம் வரும் நாளை எதிர்நோக்கியுள்ளோம் !
அன்புடன்,
பாஸ்கர் .///////
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி பாஸ்கர்!
////////Blogger hotcat said...
ReplyDeleteDear Sir,
Wish you a very great success in your writing career....awaiting for your book publication.
Keep up your good job!
-Shankar/////
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சங்கர்!
////////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஎப்ப வரும்..? எப்ப வரும்..? என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் வாத்தியாரே..////////
முதல் பிரதி உங்களுக்குத்தான் உண்மைத் தமிழரே! பழனியப்பனின் உத்தரவு அது!
//////////Blogger YOGANANDAM M said...
ReplyDeleteஆவலுடன் தங்கள் புத்தகம் வரும் நாளை எதிர்நோக்கியுள்ளோம் !///////////
உங்கள் எதிர்பார்ப்பு சீக்கிரம் நிறைவேறும்!
////////////Blogger ananth said...
ReplyDeleteஇரண்டு நாட்களாக வேலையோடு சேர்ந்த விடுமுறையில் இருந்ததால் வகுப்பறைக்கு இன்றுதான் வந்தேன். காலையில் வேலையின் காரணமாக பின்னூட்டம் அதிகம் எழுதவில்லை. தங்கள் புத்தக வெளியீடு வெற்றி பெற எனது வாழ்த்துகள். லக்னாதிபதி 6,8,12 மறைந்தால் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் அதிகம் இருக்கும் என்றீகள். அதற்கு 1 பரிகாரம். எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஏமாற்றம் குறையும். சும்மா தமாஷ். எனக்கு கன்னி லக்னாதிபதி புதன் சுக்கிரனோடு 8ல் மறைந்துள்ளார்/////////
ஆசைகளைக் குறைத்துக்கொள்ளலாம். பொதுவான ஏமாற்றங்களுக்கும், துரோகங்களுக்கும் என்ன செய்வது?:-))))
//////////Blogger Cheenu said...
ReplyDeleteஆசிரியப் பெருந்தகையே,
மண்மணம் கமழும் மந்திர எழுத்துக்கள் உம்முடையது...
சோதிடமும் சிறுகதைகளும் பாலுடன் சேர்ந்த சர்க்கரை ...
உங்களின் ‘அஷ்டவர்க்க' அனுபவப் பகிர்வுகள் மிகவும் உபயோகமானவை (படித்ததை மட்டுமில்லாமல் உங்களது அனுபவன்களையும் சேர்த்து எழுதுவதால் அவ்வாறு பதிவிட்டேன்)
வளர்க உங்கள் நேசத் தொண்டு.
-அன்புடன்
சிங்கப்பூர் சீனு///////////
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சீனா!
////////Blogger VA P RAJAGOPAL said...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா//////////
நன்றி கோபால்!
//அத்தனை பேர்களும் அப்பாவிகள். சாவி நம்மிடம் இருக்கிறது என்று நினைத்துக்
ReplyDeleteகொண்டிருப்பவர்கள். அதாவது வலைப்பூ நம்மிடம், நம் பெயரில் இருக்கிறது
என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.
எழுதும் ஆக்கங்கள் எல்லாம் எப்படி எப்படித் திருடப்படுகிறதோ, யாருக்குத் தெரியும்?
.//
எதுவும் பிரச்னையா? திருட்டு விசிடி போல் திருட்டு புத்தகம் எதுவும் வந்துவிட்டதா?
பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளுங்களேன். எங்களைப் போன்ற புதியவர்களுக்கு பயன்படும்.
நம் வலைப்பூவை மற்றவர்கள் காப்பியடிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
//புத்தகத்தில் பாடங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு, அட்டவனைகள்
ReplyDeleteஒழுங்கு படுத்தப்பட்டு, படிப்பதற்கு வசதியாக, அசத்தலாக இருக்கும்.
அதைப் பற்றிய அறிவிப்பை, பாடங்கள் முடிந்த பிறகு வெளிப்படுத்துகிறேன்
-------------------------------------------------//
எதிர்பார்க்கிறோம்
////////Blogger மெனக்கெட்டு said...
ReplyDelete//அத்தனை பேர்களும் அப்பாவிகள். சாவி நம்மிடம் இருக்கிறது என்று நினைத்துக்
கொண்டிருப்பவர்கள். அதாவது வலைப்பூ நம்மிடம், நம் பெயரில் இருக்கிறது
என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.
எழுதும் ஆக்கங்கள் எல்லாம் எப்படி எப்படித் திருடப்படுகிறதோ, யாருக்குத் தெரியும்?
.//
எதுவும் பிரச்னையா? திருட்டு விசிடி போல் திருட்டு புத்தகம் எதுவும் வந்துவிட்டதா?
பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளுங்களேன். எங்களைப் போன்ற புதியவர்களுக்கு பயன்படும்.
நம் வலைப்பூவை மற்றவர்கள் காப்பியடிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?///////
நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கட்டற்ற சுதந்திரம். முதலில் உங்களுக்குத் தெரியாது. உங்கள் பதிவுகளைப் படிப்பவர்கள் யாரவது வந்து சொன்னால் மட்டுமே தெரியும். அப்பொது ஓரமாக உட்கார்ந்து வருத்தப்படாலாம். அது மட்டுமே சாத்தியம்!:-)))
இந்தக் காப்பி அடித்து எழுதுவது ஆர்குட்டில் அதிகம்! திருடனாய்ப் பார்த்துத் திருந்த வேண்டும்!
/////Blogger புருனோ Bruno said...
ReplyDelete//புத்தகத்தில் பாடங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு, அட்டவனைகள்
ஒழுங்கு படுத்தப்பட்டு, படிப்பதற்கு வசதியாக, அசத்தலாக இருக்கும்.
அதைப் பற்றிய அறிவிப்பை, பாடங்கள் முடிந்த பிறகு வெளிப்படுத்துகிறேன்
-------------------------------------------------//
எதிர்பார்க்கிறோம்//////
உங்கள் எதிர்பார்ப்பிற்கு நன்றி டாக்டர். முறையான அறிவிப்பை, புத்தகத்தின் Final Proof தயாரானவுடன் அறிவிப்பதாக உள்ளேன்! நன்றிகள் பல!
I want to reserve one copy of the book...No RAC or Waiting List for me....
ReplyDeleteரொம்ம நல்ல இருக்க
ReplyDeleteayya,
ReplyDeleteappidiyae MANTHI patriyum yezuthavum.
Eargly awaiting for your books.
Thanks
Rathinavel.C
வணக்கம்,
ReplyDeleteமுதல் பதிப்பு எங்களுக்குத்தான் என்ற போது ம்கிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தயை கூர்ந்து நீண்ட காலம் காக்க வைத்து விடாதிர்கள்.
ஞான குருவின் அருளால் தங்கள் பணி இனிது தொடர இறைவனை இறைஞ்சுகிறேன்.
ஒரு விண்ண்ப்பம்: அஷ்ட வ்ர்க்கத்தை பற்றியும் பரல்களைப் பற்றியும் இன்னமும் எழுதுங்கள் அல்லது தங்களின் புத்தகத்திலும் இட்ம் பெறச் செய்யுங்கள்.
அன்புடன்,
செந்தில் முருகன். வே.
புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஆசிரியர் ஐயா.
ReplyDelete/////Blogger Ragu Sivanmalai said...
ReplyDeleteI want to reserve one copy of the book...No RAC or Waiting List for me..../////
முதல் பதிப்பு - மொத்தம் 1,000 பிரதிகள் - அத்தனையும் நமது வகுப்பறை மாணவர்களுக்குத்தான். அவர்களுக்குக் கொடுத்தது அல்லது அனுப்பியது போக மீதம் இருந்தால் மட்டுமே வெளியில் உள்ள மற்றவர்களுக்கு (அதாவது என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு). ஆகவே நீங்கள் கேட்கும் பிரதிகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!
/////Blogger பாண்டி-பரணி said...
ReplyDeleteரொம்ம நல்ல இருக்க/////
நன்றி நண்பரே!
////////Blogger Rathinavel.C said...
ReplyDeleteayya,
appidiyae MANTHI patriyum yezuthavum.
Eargly awaiting for your books.
Thanks
Rathinavel.C/////
நன்றி நினைவு படுத்தியதற்கு!
//////Blogger senthil said...
ReplyDeleteவணக்கம்,
முதல் பதிப்பு எங்களுக்குத்தான் என்ற போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தயை கூர்ந்து நீண்ட காலம் காக்க வைத்து விடாதிர்கள்.
ஞான குருவின் அருளால் தங்கள் பணி இனிது தொடர இறைவனை இறைஞ்சுகிறேன்.
ஒரு விண்ணப்பம்: அஷ்ட வ்ர்க்கத்தை பற்றியும் பரல்களைப் பற்றியும் இன்னமும் எழுதுங்கள் அல்லது தங்களின் புத்தகத்திலும் இடம் பெறச் செய்யுங்கள்.
அன்புடன்,
செந்தில் முருகன். வே.///////////
அதையெல்லாம் நிச்சயம் எழுதுகிறேன். எழுதிய அனைத்தும் புத்தகத்தில் பாடங்களின் தனிப்பட்ட வரிசையில் கொடுக்க உள்ளேன். rearranging of lessons செய்து வெளியிட உள்ளேன்.
/////////Blogger பாலராஜன்கீதா said...
ReplyDeleteபுத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஆசிரியர் ஐயா./////
உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
வணக்கம் ஐயா
ReplyDeleteதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்களே ,அதுவரை ............
இறைவனை மாதிரி கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான் மற்றவை எல்லாம் அவன் பார்த்துகொள்வான் ஐயா ,'விழலுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் ' இல்லீங்களா .
ஒரு சிறிய ஆலோசனை தங்களிடம் ,புத்தகம் வெளயிடும் பாத்து ஒவ்வொரு தலைப்புகளிலும் இடப்படும் பின்னுட்டங்களையும் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய விருப்பம் , இது தங்களிடம் நிச்சயம் யோசனையில் இருக்கும் என்றாலும் தெரிவிக்கலாம் என்று பின்னுட்டமிட்டேன்
நன்றி
கணேசன்
///முதல் பதிப்பு - மொத்தம் 1,000 பிரதிகள் - அத்தனையும் நமது வகுப்பறை மாணவர்களுக்குத்தான். அவர்களுக்குக் கொடுத்தது அல்லது அனுப்பியது போக மீதம் இருந்தால் மட்டுமே வெளியில் உள்ள மற்றவர்களுக்கு (அதாவது என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு). ஆகவே நீங்கள் கேட்கும் பிரதிகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!////
ReplyDeleteI think you are more than 1000, but make sure that you include in this list sir please. I need a copy of that book.
-Shankar
புத்தக வெளியிட்டுக்கு முழு ஆதரவு உண்டு....வாழ்த்துக்கள் ஐயா!!
ReplyDeleteஎங்கே,எப்படி பெற்றுகொள்ளலாம் என தகவல் தரவும்.
நன்றி,
மோகன்
ஐயா வணக்கம்
ReplyDeleteபுத்தகத்தின் முதல் பதிப்பு எங்களுக்குத்தான் என்று நீங்கள் சொன்னதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் ஒரு புத்தகத்தை முன் பதிவு செய்து வைக்கவும் .
எங்கே,எப்படி பெற்றுகொள்ளலாம் என தகவல் தரவும்.
நீங்கள் மென் மேலும் பல புத்தகங்களை எழுத மாணவ கண்மணிகளின் சார்பில் வாழ்த்துக்கள் .
//////////Blogger choli ganesan said...
ReplyDeleteவணக்கம் ஐயா
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்களே ,அதுவரை ............
இறைவனை மாதிரி கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான் மற்றவை எல்லாம் அவன் பார்த்துகொள்வான் ஐயா ,'விழலுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் ' இல்லீங்களா .
ஒரு சிறிய ஆலோசனை தங்களிடம் ,புத்தகம் வெளியிடும் பாத்து ஒவ்வொரு தலைப்புகளிலும் இடப்படும் பின்னுட்டங்களையும் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய விருப்பம் , இது தங்களிடம் நிச்சயம் யோசனையில் இருக்கும் என்றாலும் தெரிவிக்கலாம் என்று பின்னுட்டமிட்டேன்
நன்றி
கணேசன்//////
பாடம் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களை வெளியிடலாம். பரிசீலனையில் உள்ளது! இல்லை அவற்றையும் பாடத்தோடு
சேர்த்துவிடலாம்.
/////Blogger hotcat said...
ReplyDelete///முதல் பதிப்பு - மொத்தம் 1,000 பிரதிகள் - அத்தனையும் நமது வகுப்பறை மாணவர்களுக்குத்தான். அவர்களுக்குக் கொடுத்தது அல்லது அனுப்பியது போக மீதம் இருந்தால் மட்டுமே வெளியில் உள்ள மற்றவர்களுக்கு (அதாவது என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு). ஆகவே நீங்கள் கேட்கும் பிரதிகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!////
I think you are more than 1000, but make sure that you include in this list sir please. I need a copy of that book.
-Shankar/////
நீங்கள் hit counter ஐ வைத்துச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அறிவிப்பு வெளியிட்டவுடன் வரும் பதில்களை வைத்து உண்மையான எண்ணிக்கை தெரியும்! அப்போது பார்க்கலாம் சங்கர்!
Blogger Mohan said...
ReplyDeleteபுத்தக வெளியிட்டுக்கு முழு ஆதரவு உண்டு....வாழ்த்துக்கள் ஐயா!!
எங்கே,எப்படி பெற்றுகொள்ளலாம் என தகவல் தரவும்.
நன்றி,
மோகன்////
வெளியிடும் சமயத்தில் நிச்சயம் விவரங்களைத் தருகிறேன் மோகன்!
Blogger உங்கள் மாணவி said...
ReplyDeleteஐயா வணக்கம்
புத்தகத்தின் முதல் பதிப்பு எங்களுக்குத்தான் என்று நீங்கள் சொன்னதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் ஒரு புத்தகத்தை முன் பதிவு செய்து வைக்கவும் .
எங்கே,எப்படி பெற்றுகொள்ளலாம் என தகவல் தரவும்.
நீங்கள் மென் மேலும் பல புத்தகங்களை எழுத மாணவ கண்மணிகளின் சார்பில் வாழ்த்துக்கள் .//////
உங்கள் அன்பிற்கு நன்றி சகோதரி!
வாத்தியாரின் புத்தக வெளியீட்டிற்கு எனது மணமார்த வாழ்துக்கள். அன்புடன் செல்லி.
ReplyDeleteUngal noolai aavaludan ethirnoakugirom.
ReplyDeleteAnbudan,
Sara
CMB
Anbu Aiyya,
ReplyDeleteI just went through the comments. Whatever is written and said , no body can deny that through classroom we have got just a wonderful Vaathiyaar. From the time I started reading this site I have shared a lot of things with my colleagues and I just cant express in words the respect I have developed for our Vaathiyaar. I assume that there must me many having a same feeling from the comments they post. Engal maanaseega GURU aagiya neengal intha anbu ullangalukkaga antha thirudargalaiyum poruththarula vendugirom.
Sara
CMB
வாத்தியாரையா,
ReplyDeleteபத்தகம் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அப்படியே பி.டி.எப் கோப்பாகவும் வெளியிடவும். பொது கோப்பாக அல்ல. பாதுகாக்கப் பட்ட கோப்பாக வெளியிட்டால் வாங்கப்பட்ட கம்ப்யூட்டரில் மட்டுமே படிக்க முடியும்.
/////Blogger கத்துக்குட்டி(Selli) said...
ReplyDeleteவாத்தியாரின் புத்தக வெளியீட்டிற்கு எனது மணமார்ந்த வாழ்துக்கள். அன்புடன் செல்லி.////
நன்றி சகோதரி!
//////Blogger sara said...
ReplyDeleteUngal noolai aavaludan ethirnoakugirom.
Anbudan,
Sara
CMB/////
நன்றி சரவணன். நீங்கள் ஆரம்பகால மாணவர். புத்தகம் வெளிவந்தவுடன் ஒரு பிரதியை உங்கள் கொழும்பு முகவரிக்கே அனுப்பிவைக்கிறேன்.
/////Blogger sara said...
ReplyDeleteAnbu Aiyya,
I just went through the comments. Whatever is written and said , no body can deny that through classroom we have got just a wonderful Vaathiyaar. From the time I started reading this site I have shared a lot of things with my colleagues and I just cant express in words the respect I have developed for our Vaathiyaar. I assume that there must me many having a same feeling from the comments they post. Engal maanaseega GURU aagiya neengal intha anbu ullangalukkaga antha thirudargalaiyum poruththarula vendugirom.
Sara
CMB//////
அவர்களை எல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. என் மாணவர்களுக்காக அவர்களை விட்டுவிட்டேன்!
////Blogger அமர பாரதி said...
ReplyDeleteவாத்தியாரையா,
பத்தகம் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அப்படியே பி.டி.எப் கோப்பாகவும் வெளியிடவும். பொது கோப்பாக அல்ல. பாதுகாக்கப் பட்ட கோப்பாக வெளியிட்டால் வாங்கப்பட்ட கம்ப்யூட்டரில் மட்டுமே படிக்க முடியும்.
நன்றி அமர பாரதி. வெளிவரும் சமயத்தில் அது பற்றி (PDF) முடிவெடுக்கலாம்!
4 மாதங்கள் காத்திருக்க வேண்டுமா? நூல்களை விரைவில் வெளியிடுங்கள்.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
dear sir,
ReplyDeletemy date of birth 26/05/1985(tamil vikasi12),,,time 5.15am,,,,place
mecheri,,,(near mettur 20km)
mesham lagana
> 1st house bhuthan,rahu
> 2nd house sun,mars,
> 4th moon,
> 7th kethu,
> 8th sani,
> 10th guru,
> 12th venus,//////
i have 2 question sir,
1.i lost around 7 lacks for share trading,somebody said 12th house
venus,and your entire property will going to zero.(now iam zero)so is
it happen in my life?
2.when i earn single rupee in my life.
/////////Blogger இராசகோபால் said...
ReplyDelete4 மாதங்கள் காத்திருக்க வேண்டுமா? நூல்களை விரைவில் வெளியிடுங்கள்.
அன்புடன்
இராசகோபால்/////
பாடங்கள் முடிந்தபிறகுதானே வேளியிட முடியும் நண்பரே! வேண்டுமென்றால் முதல் தொகுப்பை
(First Volume ஐ) சற்று முன்பு வெளியிடலாம். முயற்சிக்கிறேன் நண்பரே!
sir why you did not replay me.i have any mistake,you are not interest in my chart.
ReplyDeletedear sir,
my date of birth 26/05/1985(tamil vikasi12),,,time 5.15am,,,,place
mecheri,,,(near mettur 20km)
mesham lagana
> 1st house bhuthan,rahu
> 2nd house sun,mars,
> 4th moon,
> 7th kethu,
> 8th sani,
> 10th guru,
> 12th venus,//////
i have 2 question sir,
1.i lost around 7 lacks for share trading,somebody said 12th house
venus,and your entire property will going to zero.(now iam zero)so is
it happen in my life?
2.when i earn single rupee in my life.
/////Blogger anandanm said...
ReplyDeletesir why you did not replay me.i have any mistake,you are not interest in my chart.
dear sir,
my date of birth 26/05/1985(tamil vikasi12),,,time 5.15am,,,,place
mecheri,,,(near mettur 20km)
mesham lagana
> 1st house bhuthan,rahu
> 2nd house sun,mars,
> 4th moon,
> 7th kethu,
> 8th sani,
> 10th guru,
> 12th venus,//////
i have 2 question sir,
1.i lost around 7 lacks for share trading,somebody said 12th house
venus,and your entire property will going to zero.(now iam zero)so is
it happen in my life?
2.when i earn single rupee in my life.////
நீங்கள் எழுதியுள்ள பிறப்பு விவரங்களுக்கு ரிஷப லக்கினம் என்று வருகிறது. நீங்கள் மேஷ லக்கினம் என்று எழுதியுள்ளீர்கள். குழப்பம் இருக்கிறது. ஒன்று நீங்கள் கொடுத்துள்ள தேதி தவறானது அல்லது லக்கினம் தவறானது. எது தவறு என்று பாருங்கள்.
சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள பிறப்புக்களுக்கு இந்தத் தேதிக் குழப்பம் ஏற்படுவது இயற்கை.
ஆங்லத்தேதிகள் இரவு 12 மணிக்கு மாறிவிடும்
தமிழ்த் தேதிகள் சூரிய உதயத்திற்குப் பிறகுதான் மாறும்
sir why you did not replay me.i have any mistake,you are not interest in my chart.
ReplyDeletedear sir,
my date of birth 26/05/1985(tamil vikasi12),,,time 5.15am,,,,place
mecheri,,,(near mettur 20km)
mesham lagana
> 1st house bhuthan,rahu
> 2nd house sun,mars,
> 4th moon,
> 7th kethu,
> 8th sani,
> 10th guru,
> 12th venus,//////
i have 2 question sir,
1.i lost around 7 lacks for share trading,somebody said 12th house
venus,and your entire property will going to zero.(now iam zero)so is
it happen in my life?
2.when i earn single rupee in my life.////
நீங்கள் எழுதியுள்ள பிறப்பு விவரங்களுக்கு ரிஷப லக்கினம் என்று வருகிறது. நீங்கள் மேஷ லக்கினம் என்று எழுதியுள்ளீர்கள். குழப்பம் இருக்கிறது. ஒன்று நீங்கள் கொடுத்துள்ள தேதி தவறானது அல்லது லக்கினம் தவறானது. எது தவறு என்று பாருங்கள்.
சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள பிறப்புக்களுக்கு இந்தத் தேதிக் குழப்பம் ஏற்படுவது இயற்கை.
ஆங்லத்தேதிகள் இரவு 12 மணிக்கு மாறிவிடும்
தமிழ்த் தேதிகள் சூரிய உதயத்திற்குப் பிறகுதான் மாறும்
Thank you sir,
i have also check it English date 25/05/1985,,time 5.07am...tamil date vaikashi 12,,mesha laganm,,cancer rasi,
Sir,
ReplyDeleteI'm waiting for your Book!
Please let me know, i would purchase it at any cost
Siva
Sir,
ReplyDeleteI'm waiting for your Book!
Please let me know, i would purchase it at any cost
Siva
/////Blogger Siva said...
ReplyDeleteSir,
I'm waiting for your Book!
Please let me know, i would purchase it at any cost
Siva/////
நன்றி சிவா, புத்தகம் அச்சில் ஏறும் சமயம், அறிவிக்கிறேன்! நன்றி
வலைப்பதிவில் நீங்கள் வெற்றி பெற்றதைப் போல , புத்தகபதிப்பிலும் வெற்றி பெற குன்றக்குடி முருகன் அருள் புரிவாராக
ReplyDelete////Blogger san said...
ReplyDeleteவலைப்பதிவில் நீங்கள் வெற்றி பெற்றதைப் போல , புத்தகபதிப்பிலும் வெற்றி பெற குன்றக்குடி முருகன் அருள் புரிவாராக!////
நன்றி! உங்கள் ஊர் குன்றக்குடியா?
Illai Ayya Naan Kundrakudi Illai , I am from Devakottai
ReplyDelete//////Blogger Slakshmanan said...
ReplyDeleteIllai Ayya Naan Kundrakudi Illai , I am from Devakottai/////
தகவலுக்கு நன்றி!
வாத்தியார் நூல்கள் நல்ல முறையில் வெளிவர வாழ்த்துகள் !
ReplyDeletePlease advance book one set for me Sir.
Thanks.
////Blogger கூடுதுறை said...
ReplyDeleteவாத்தியார் நூல்கள் நல்ல முறையில் வெளிவர வாழ்த்துகள் !
Please advance book one set for me Sir.
Thanks.////
வகுப்பறை மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் பிரதிகள் உண்டு. அவர்களுக்குக் கொடுத்ததுபோக மீதமுள்ளது மட்டுமே வெளி நபர்களுக்கு (அதாவது விற்பனைக்கு)