Evidence for the existence of God இறைவனுக்குச் சான்று கேட்டவர்கள்!
ஆன்மீகத்தில் திளைப்பவர்களுக்கு அன்னை எனும் மூன்று சொல் எழுத்து
ஒருவரைத்தான் சுட்டிக் காட்டும். அது பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு
வந்து பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்து தனது இறுதி
மூச்சுவரை ஆன்மிகப் பணி செய்த அன்னையையே குறிக்கும்
"மலர்போல மலர்கின்ற மனம்வேண்டும் தாயே
பலர்போற்றிப் பாராட்டும் குணம்வேண்டும் தாயே!
வரம்தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே
வரம்தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே"
என்று கங்கைஅமரன் அவர்களின் அற்புதமான பாடல் அன்னைக்காகவே எழுதப்
பெற்றது. முன்பு, விஜய் தொலைக்காட்சியின் அதிகாலைத் துவக்கப் பாடலாக
ஒலித்து, தமிழ்கூறும் நல்லுலகத்தில் மிகவும் பிரபலமான பாடலானது.
இந்தியாவின் ஆன்மிக செல்வத்தை எப்போதும் சிலாகித்துப் பேசும் அன்னை
அவர்கள், இந்திய மக்களை எப்போதும் கேட்டுக்கொண்டது இதுதான்:
"எதற்காகவும் உங்கள் இறையுணர்வை விட்டுக் கொடுக்காதீர்கள்"
ஒருமுறை மூன்று அமெரிக்க விஞ்ஞானிகள் அன்னையை சந்தித்துப் பேசிக்
கொண்டிருக்கும்போது கேட்டார்கள்.
"தாயே, நாங்கள் எல்லாம் விஞ்ஞானிகள். எல்லாவற்றிற்கும் சான்று கேட்பவர்கள்.
இறைவன் இருப்பதற்கு தாங்கள் ஒரு சான்றாவது கொடுத்து உதவ வேண்டும்"
புன்னகைத்த அன்னை, அதற்குப் பதில் உரைத்தார்.
"ஆகா, தருகிறேன்.அதற்கு முன்னால் நீங்கள் என் கேள்வி ஒன்றிற்குப் பதில்
சொல்ல வேண்டும்"
"சொல்கிறோம், கேளுங்கள்"
"ஒரே நேரத்தில் இடத்திற்கு இடம் சீதோஷ்ண நிலை ஏன் வேறுபடுகிறது?"
(ஒரு குறிப்பபிட்ட நேரத்தில் சென்னையில் 40 டிகிரி சீதோஷ்ணம் என்றால்,
கோவையில் 36ம் ஊட்டியில் 22ம் இருக்கும் நிலை)
அதற்கு அவர்கள் பதில் சொன்னார்கள்.
"ஒரு இடத்தில் இருக்கும் காற்றின் அடர்த்தியை வைத்தும், சம வெளிகளில்
இருந்து ஒரு இடம் இருக்கும் உயரத்தை வைத்தும் சீதோஷ்ண நிலை மாறுபடும்"
Weather occurs due to density (temperature and moisture) differences between
one place and another. These differences can occur due to the sun angle at any
particular spot, which varies by latitude from the tropics.
அன்னை அவர்களைத் திருப்பிக் கேட்டார்,"அதே காற்றின் அடர்த்தியை
வைத்து காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவு மட்டும் ஏன் மாறுபடுவதில்லை?"
Does the percentage of oxygen in air change as altitude increases? Or is it still
around 21% at say, the top of a hill?
அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"தெரியவில்லை" என்று சொன்னார்கள்
அன்னை அவர்கள் சொன்னார்கள்:
"அதுதான் இறை சக்தி. தான் படைத்த ஜீவராசிகள் சுவாசிக்க வேண்டும்
என்பதற்காக காற்றில் உள்ள பிராணவாயுவின் அளவை மாறாமல்
வைத்திருப்பவரின் பெயர்தான் இறைவன்"
++++++++++++++++++++
சென்னையாகட்டும் அல்லது அமைதிப் பள்ளதாக்குப் போன்ற அடர்ந்த மலைப்
பிரதேமாகட்டும் அல்லது ராஜஸ்தானின் தார் பாலைவனமாகட்டும் அல்லது
வங்கக் கடலாகட்டும் எங்கும் காற்றில் உள்ள பிராணவாயுவின் அளவு மட்டும்
மாறாமல் இருக்கும்
அதுபோல தான் படைத்த ஜீவராசிகள் அனைத்திற்கும் உரிய உணவையும்
இறைவன் குறைவில்லாமல் அளித்திருக்கிறார். எந்தப் பறவையாவது உணவின்றி
மடிந்திருக்கிறதா? கல்லிற்குள் இருக்கும் தேரைக்கும் அரவணைப்பு அளிக்கும்
கருணை மிக்கவர் இறைவன்.
+++++++++++++++++++++
The circumference of the Earth at the equator is 25,000 miles.
The Earth rotates in about 24 hours. Therefore, if you were to hang above the
surface of the Earth at the equator without moving, you would see 25,000 miles
pass by in 24 hours, at a speed of 25000/24 or just over 1000 miles per hour.
160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் இருந்து தலையை நீட்டிப் பாருங்கள்.
எதிர்கொள்ளும் காற்றின் வேகத்தில் மூச்சுத் திணரும்.
ஆனால் அதே நேரத்தில் இந்தப் பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோ மீட்டர்
வேகத்தில் சுற்றிக் கொள்கிறது. அதன் வேகம் உங்களைப் பாதிக்கிறதா?
இல்லையே? அதுதான் இறைசக்தி!
உலகின் நிலப்பரப்பில் 3ல் 2பங்கு தண்ணீர். இந்தச் சுழற்சியில் ஒரு சொட்டுத்
தண்ணீராவது, பூமியிலிருந்து பிரிந்து அண்டத்தில் விழுகிறதா? கேட்டால் புவியீர்ப்பு
என்பார்கள். அந்த ஈர்ப்புதான் இறைசக்தி!
Space, time and earth மூன்றுமே ஒன்றுதான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க
முடியாது. மூன்றுமே இறைசக்தி
புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்.
It is his problem!
++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅருமையான விளக்கம் ஆசானே..
ReplyDeleteநெருப்பு சுடும் என்பதை சொல்லலாம். அது எப்படி இருக்கும் என்பதை உணரத்தான் முடியும்.
அது மாதிரித்தான் இறைவன் என்பதை உணரத்தான் முடியும்.
DEar Sir
ReplyDeletePullarikiradhu..Oru Sila Jenmangal En Adhai Unaramattargala endru irukkiradhu..
Super Story..But Real(GOD).
They must know before die - Yes god is there....
Super Super Super...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir
ReplyDeleteKadhai Arumai.Idhu Kadhayalla Nijam..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir
ReplyDeleteStory Is Good. But this is real not story..
Thank you
Loving StudentArulkumar Rajaraman
ஐயா
ReplyDeleteகாலை வணக்கம், ஜாதக மென்பொருளில் 4 விதமான ayanamasa, Chart style, Dasa System bava bala methode உள்ளன. இவற்றை எந்த முறையில் அமைப்பது என்றும் இவற்றின் மாறுபாடு பற்றியும் விளக்கவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Dear Sir
ReplyDeleteStory is very nice
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
//புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்.
ReplyDeleteIt is his problem!//
புரிகிறவனுக்கு நீங்கள் விளக்கத் தேவையில்லை, புரியாதவனுக்கு உங்கள் விளக்கம் தேவையில்லை.
:)
பதிவு தலைப்பில் கூவிவிட்டு, முடிவில் அலுப்பு ஏன் ?
நிரூபனம் கேட்பவர்கள் என்ன தான் சொன்னாலும் நம்பமாட்டார்கள், நம்புபவர்களுக்கு நிரூபனம் தேவையில்லை. :)
***
நம்புங்க, என்னால் கடவுளைக் காட்ட முடியும் ! :)
இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/
ReplyDeleteகதை அருமை. பூமியில் எங்கும் ஓரே மாதிரியான ஆக்ஸிசன் பற்றிய விளக்கம் அருமை. இதுவரை நான் அறிந்திராத - இறைவனைப்பற்றிய புதிய கோணத்தில் விளக்கம்.
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
//////Blogger இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஅருமையான விளக்கம் ஆசானே..
நெருப்பு சுடும் என்பதை சொல்லலாம். அது எப்படி இருக்கும் என்பதை உணரத்தான் முடியும்.
அது மாதிரித்தான் இறைவன் என்பதை உணரத்தான் முடியும்.//////
நன்றி நண்பரே!
/////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Pullarikiradhu..Oru Sila Jenmangal En Adhai Unaramattargala endru irukkiradhu..
Super Story..But Real(GOD).
They must know before die - Yes god is there....
Super Super Super...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நன்றி ராஜாராமன்!
//////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Kadhai Arumai.Idhu Kadhayalla Nijam..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////
நன்றி ராஜாராமன்!
/////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Story Is Good. But this is real not story..
Thank you
Loving StudentArulkumar Rajaraman//////
எத்தனை பின்னூட்டம் இடுவீர்கள் சுவாமி? கை வலிக்காதா?
////Blogger velan said...
ReplyDeleteஐயா
காலை வணக்கம், ஜாதக மென்பொருளில் 4 விதமான ayanamasa, Chart style, Dasa System bava bala methode உள்ளன. இவற்றை எந்த முறையில் அமைப்பது என்றும் இவற்றின் மாறுபாடு பற்றியும் விளக்கவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//////
எந்த மென்பொருள் என்பதைச் சொல்லுங்கள்!
//////Blogger கோவி.கண்ணன் said...
ReplyDelete//புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்.
It is his problem!//
புரிகிறவனுக்கு நீங்கள் விளக்கத் தேவையில்லை, புரியாதவனுக்கு உங்கள் விளக்கம் தேவையில்லை.
:)
பதிவு தலைப்பில் கூவிவிட்டு, முடிவில் அலுப்பு ஏன் ?/////////////
ஒகோ இதுதான் அலுப்பு என்பதா? அப்படி எழுதாவிட்டால் நீங்கள் எங்கே வரப்போகிறீர்கள்?
உங்களை வரவழைப்பதற்காக சில சமயம் அப்படி எழுத வேண்டியதிருக்கிறது?
//////Blogger அப்பாவி தமிழன் said...
ReplyDeleteஇங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites////////
அதைப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி நண்பரே!
வணக்கம் ஐயா. தங்களின் ஆன்மீக பாடம் மிக அருமை. எ(இ)தையும் புரிந்து கொள்ள ஞானம் வேண்டும். அது எல்லோருக்கும் வந்து விடாது.
ReplyDeleteA new explanation for God. Thanks. Your insight and the way you express the same is remarkable.
ReplyDeleteநல்ல பதிவு!
ReplyDeleteநன்றி!
நண்பரே,நீங்கள் கூறும் பதிவின் உள்ளடக்கத்தை நான் பாராட்டுகிறேன்;ஆனாலும் இதில் ஒரு தகவல் பிழை இருக்கிறது எனப் படுகிறது.
ReplyDeleteமலைகளின் மேலான காற்று மண்டலத்தில் உண்மையில் ஆக்ஸிஜனின் அளவு குறைவே,அறிவியல் நிரூபித்த உண்மைகளின் படி.இதன் காரணமாகவே மிக உயர்ந்த மலைத்தொடர்களில் சிறிது நடந்தாலும் நமக்கு மூச்சு வாங்குகிறது,காரணம் பிராணவாயு பற்றாக்குறைதான்.
இந்த சுட்டியில் மேலதிகத் தகவல் பெறலாம்..
http://query.nytimes.com/gst/abstract.html?res=9B07E5D81F3CE633A25750C0A9679D946396D6CF
//மலைகளின் மேலான காற்று மண்டலத்தில் உண்மையில் ஆக்ஸிஜனின் அளவு குறைவே,அறிவியல் நிரூபித்த உண்மைகளின் படி.இதன் காரணமாகவே மிக உயர்ந்த மலைத்தொடர்களில் சிறிது நடந்தாலும் நமக்கு மூச்சு வாங்குகிறது,காரணம் பிராணவாயு பற்றாக்குறைதான்.
ReplyDelete//
மலை மனிதன் வசிக்கத்தகுந்த இடம் இல்லை. நாமாக தேடிக் கொள்வதை எப்படி குறைபாடாக கருத முடியும் ?
:))))))
மொத்தத்தில் மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்தியே தீருவான் என்று சொல்லிவிட்டிர்கள் . முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்று ஒரு பாடம் எடுப்பார்கள். அதுபோல நம் வகுப்பிலும் நடப்பது மகிழ்ச்சியே .
ReplyDelete/////Blogger வேலன். said...
ReplyDeleteகதை அருமை. பூமியில் எங்கும் ஓரே மாதிரியான ஆக்ஸிசன் பற்றிய விளக்கம் அருமை. இதுவரை நான் அறிந்திராத - இறைவனைப்பற்றிய புதிய கோணத்தில் விளக்கம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////
நன்றி வேலன்!
/////Blogger ananth said...
ReplyDeleteவணக்கம் ஐயா. தங்களின் ஆன்மீக பாடம் மிக அருமை. எ(இ)தையும் புரிந்து கொள்ள ஞானம் வேண்டும். அது எல்லோருக்கும் வந்து விடாது./////
உண்மைதான்! உங்கள் பின்னூட்டத்திர்கு நன்றி!
//////Blogger krish said...
ReplyDeleteA new explanation for God. Thanks. Your insight and the way you express the same is remarkable./////
உங்கள் பாராட்டிற்கு நன்றி கிரீஷ்
//////Blogger நாமக்கல் சிபி said...
ReplyDeleteநல்ல பதிவு!
நன்றி!/////
நன்றி சிபியாரே!
//////Blogger அறிவன்#11802717200764379909 said...
ReplyDeleteநண்பரே,நீங்கள் கூறும் பதிவின் உள்ளடக்கத்தை நான் பாராட்டுகிறேன்;ஆனாலும் இதில் ஒரு தகவல் பிழை இருக்கிறது எனப் படுகிறது.
மலைகளின் மேலான காற்று மண்டலத்தில் உண்மையில் ஆக்ஸிஜனின் அளவு குறைவே,அறிவியல் நிரூபித்த உண்மைகளின் படி.இதன் காரணமாகவே மிக உயர்ந்த மலைத்தொடர்களில் சிறிது நடந்தாலும் நமக்கு மூச்சு வாங்குகிறது,காரணம் பிராணவாயு பற்றாக்குறைதான்.
இந்த சுட்டியில் மேலதிகத் தகவல் பெறலாம்..
http://query.nytimes.com/gst/abstract.html?res=9B07E5D81F3CE633A25750C0A9679D946396D6CF/////
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மகாபலேஷ்வர் போன்ற மலைப்பிரதேசங்களில் மக்கள் வசிக்கவில்லையா?
பனி சூழ்ந்த இமயத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அது மனிதன் வசிப்பதற்கு ஏற்ற இடமல்ல என்பது தெரிந்ததுதானே!
///////Blogger கோவி.கண்ணன் said...
ReplyDelete//மலைகளின் மேலான காற்று மண்டலத்தில் உண்மையில் ஆக்ஸிஜனின் அளவு குறைவே,அறிவியல் நிரூபித்த உண்மைகளின் படி.இதன் காரணமாகவே மிக உயர்ந்த மலைத்தொடர்களில் சிறிது நடந்தாலும் நமக்கு மூச்சு வாங்குகிறது,காரணம் பிராணவாயு பற்றாக்குறைதான்.
//
மலை மனிதன் வசிக்கத்தகுந்த இடம் இல்லை. நாமாக தேடிக் கொள்வதை எப்படி குறைபாடாக கருத முடியும் ?
:))))))
கை கொடுக்க வந்தமைக்கு நன்றி கோவியாரே!
/////Blogger Ragu Sivanmalai said...
ReplyDeleteமொத்தத்தில் மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்தியே தீருவான் என்று சொல்லிவிட்டிர்கள் . முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்று ஒரு பாடம் எடுப்பார்கள். அதுபோல நம் வகுப்பிலும் நடப்பது மகிழ்ச்சியே /////.
வகுப்பு என்றால் அது இல்லாமலா? அதனால்தான் இடையிடையே நீதிப்பாடங்கள்!
அருமையான விளக்கம்!!
ReplyDeleteஇறைவன் என்பதை உணரத்தான் முடியும்.
உணர்ந்தவர்களுக்கு சான்று தேவை இல்லை .
உணராதவர்கள் இல்லை என்று கூருவதொன்றும் வியப்பில்லை .
நன்றி ஐயா.
அழகான விளக்கம்.
ReplyDeleteநன்றி அய்யா .
thank u sir . your statements are realy true sir i am in pondicherry the thousands of people come to ashram and get peacefull mind . in ashram we pray front of annai jeeva samathi mind is very rlaxed sir .
ReplyDeleteவணக்கம் ஐய்யா
ReplyDeleteஇனிமேல் கடவுள் இருப்பதற்கு என்னிடம் யாராவது ஆதாரம் கேட்டாள்
இங்கே பாடித்தை சொல்வேன் :-)).................
வணக்கம் ஐயா
ReplyDeleteஒரு ராசியில் கிரகம் வக்கிரம் பெற்றால் அது எதிர் மறை பலன்களை
செய்யும் அதனால் வக்ரம் பெற்ற கிரகம் நீசம் பெற்றால் அது உச்ச பலம்
பெரும்என்று ஒரு ஜோதிட புத்தகத்தில் படித்தேன்.அது உண்மையா?
////Blogger கனிமொழி said...
ReplyDeleteஅருமையான விளக்கம்!!
இறைவன் என்பதை உணரத்தான் முடியும்.
உணர்ந்தவர்களுக்கு சான்று தேவை இல்லை .
உணராதவர்கள் இல்லை என்று கூருவதொன்றும் வியப்பில்லை .
நன்றி ஐயா./////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
///Blogger Geekay said...
ReplyDeleteஅழகான விளக்கம்.
நன்றி அய்யா ./////
பாராட்டிற்கு நன்றி ஜீக்கே!
/////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
ReplyDeletethank u sir . your statements are realy true sir i am in pondicherry the thousands of people come to ashram and get peacefull mind . in ashram we pray front of annai jeeva samathi mind is very rlaxed sir .//////
தகவலுக்கு நன்றி நண்பரே!
//////Blogger sundar said...
ReplyDeleteவணக்கம் ஐய்யா
இனிமேல் கடவுள் இருப்பதற்கு என்னிடம் யாராவது ஆதாரம் கேட்டால்
இங்கே படித்ததைச் சொல்வேன் :-))
ஆகா, சொல்லுங்கள் சுந்தர்!
ஹலோ சார்,
ReplyDeleteஆஹா, இதை விட அழகாக அற்புதமாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை சொல்ல முடியாது னு நான் நினைக்கிறேன்.சும்மா நச்சுனு சொல்லிட்டீங்க. ஒரு பெரிய்ய்ய்ய்ய சபாஷ் உங்களுக்கு.
அதனால் தான் என்னுடைய இந்த இயற்கையை இன்றளவும் இறைவனாக வழிபடுகிறேன்
ReplyDelete\\எந்த மென்பொருள் என்பதைச் சொல்லுங்கள்!//
ReplyDeleteவகுப்பறை மாணவர் திலகம் கரூர் தியாகராஜன் வழங்கியுள்ள மென்பொருள் ஐயா
Dear Sir,
ReplyDeleteReading all your lessons, but due to lack of time I could not post the comments. Good Luck for your publication.
-Shankar
கண்ணன் மற்றும் நண்பர் சுப்பையா,
ReplyDeleteநான் சுட்டியது கதையில் சுட்டி இருக்கும் தகவல் பிழை பற்றி...
உயர்ந்த மலைத்தொடர்கள் மட்டுமல்ல,ஊட்டி,கொடைக்கானல் போன்ற இடங்களிலும் கூட சமவெளிகளை விட பிராணவாயு கண்டென்ட் குறைவுதான்...
அந்த தகவல் பிழைதான் சுட்டப்பட்டது.
எப்படியும் கண்ணன் கடவுளின் கட்சியில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி !!!!
திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteகேள்விகள் ஏற்கனவே வேறு பதிவில் கேட்டவை போல இருக்கே?? ஆனால் கதைச் சூழல் புதுசா இருக்கு..
"old wine in new bottle" business style aa.. :)
Percentage of oxygen is same while breathing air in plains or high altitude.( around 21%). But atmospheric pressure decreases as one goes higher up. Lower atmospheric pressure is the reason for breadthlessness. This happens only at very high altitude lihe Mt. Everest. Not at ooty or kodaikanal.
ReplyDeleteMighavum arumayana vilakkangal Iyya...
ReplyDeleteanbudan,
kandhiah
///புரிகிறவனுக்கு நீங்கள் விளக்கத் தேவையில்லை, புரியாதவனுக்கு உங்கள் விளக்கம் தேவையில்லை.
ReplyDelete:)
நிரூபனம் கேட்பவர்கள் என்ன தான் சொன்னாலும் நம்பமாட்டார்கள், நம்புபவர்களுக்கு நிரூபனம் தேவையில்லை.///
இதெல்லாம் கோவியாரால் மட்டுமே முடியும்.
/////Blogger Sumathi. said...
ReplyDeleteஹலோ சார்,
ஆஹா, இதை விட அழகாக அற்புதமாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை சொல்ல முடியாதுன்னு நான்
நினைக்கிறேன்.சும்மா நச்சுனு சொல்லிட்டீங்க. ஒரு பெரிய்ய்ய்ய்ய சபாஷ் உங்களுக்கு./////
இல்லை சொல்லலாம். என்னை விட நன்றாக எழுதக்கூடியவர்கள் இருக்கிறார்கள். உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
//////Blogger KaveriGanesh said...
ReplyDeleteஅதனால் தான் என்னுடைய இந்த இயற்கையை இன்றளவும் இறைவனாக வழிபடுகிறேன்//////
இயற்கை வேறு இறைவன் வேறு அல்ல!:-))))
/////Blogger velan said...
ReplyDelete\\எந்த மென்பொருள் என்பதைச் சொல்லுங்கள்!//
வகுப்பறை மாணவர் திலகம் கரூர் தியாகராஜன் வழங்கியுள்ள மென்பொருள் ஐயா/////
/////////ஜாதக மென்பொருளில் 4 விதமான ayanamasa, Chart style, Dasa System bava bala methode உள்ளன. இவற்றை எந்த முறையில் அமைப்பது என்றும் இவற்றின் மாறுபாடு பற்றியும் விளக்கவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்./////////
Ayanamsa = Lahiri
Chart Style = South India
Dasa System = 365.25 Days
Bhava Bala Method = Nature of Mercury terminated by association
இதைப் பார்த்தாலே தெரியும் இது திருக்கணிதத்தின் அடிப்படையில் உள்ளது. இதுதான் துல்லியமாக இருக்கும்
//////Blogger hotcat said...
ReplyDeleteDear Sir,
Reading all your lessons, but due to lack of time I could not post the comments. Good Luck for your publication.
-Shankar////
பின்னூட்டத்தைப் பற்றிய கவலை எதற்கு? விட்டுத்தள்ளுங்கள். நேரம் இருக்கும்போது எழுதினால் போதும்
///////Blogger அறிவன்#11802717200764379909 said...
ReplyDeleteகண்ணன் மற்றும் நண்பர் சுப்பையா,
நான் சுட்டியது கதையில் சுட்டி இருக்கும் தகவல் பிழை பற்றி...
உயர்ந்த மலைத்தொடர்கள் மட்டுமல்ல,ஊட்டி,கொடைக்கானல் போன்ற இடங்களிலும் கூட சமவெளிகளை விட
பிராணவாயு கண்டென்ட் குறைவுதான்...
அந்த தகவல் பிழைதான் சுட்டப்பட்டது.
எப்படியும் கண்ணன் கடவுளின் கட்சியில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி !!!!/////
விளக்கத்திற்கு நன்றி நண்பரே!
///////Blogger கையேடு said...
ReplyDeleteதிரு. சுப்பையா ஆசிரியர் அவர்களுக்கு,
கேள்விகள் ஏற்கனவே வேறு பதிவில் கேட்டவை போல இருக்கே?? ஆனால் கதைச் சூழல் புதுசா இருக்கு..
"old wine in new bottle" business style aa.. :)/////
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள் நண்பரே! சில சமயம் எனது விளக்கங்களே எழுத்தில் இரண்டாவது முறையாக அமைந்து விடுவது உண்டு. இறைவனுக்கு விளக்கம் எத்தனை முறை எழுதினால் என்ன? உண்மையாக இருந்தால் சரிதான்

///////////Blogger mayakunar said...
ReplyDeletePercentage of oxygen is same while breathing air in plains or high altitude.( around 21%). But atmospheric pressure
decreases as one goes higher up. Lower atmospheric pressure is the reason for breadthlessness. This happens only at
very high altitude lihe Mt. Everest. Not at ooty or kodaikanal.//////////
தகவலுக்கு நன்றி நண்பரே!
/////////////Blogger kandhiah said...
ReplyDeleteMighavum arumayana vilakkangal Iyya...
anbudan,
kandhiah///////////////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி கந்தைய்யா!
///////////////Blogger தியாகராஜன் said...
ReplyDelete///புரிகிறவனுக்கு நீங்கள் விளக்கத் தேவையில்லை, புரியாதவனுக்கு உங்கள் விளக்கம் தேவையில்லை.
:) நிரூபனம் கேட்பவர்கள் என்ன தான் சொன்னாலும் நம்பமாட்டார்கள், நம்புபவர்களுக்கு நிரூபனம் தேவையில்லை.///
இதெல்லாம் கோவியாரால் மட்டுமே முடியும்./////////
ஆமாம்!
வாத்தியாரய்யா !
ReplyDeleteபுரியாதவனுக்கு புரிய வைக்கலாம் .
புரியாததுபோல் நடிப்பவனுக்கு எப்படி புரிய வைக்க முடியும் ?
அய்யா,
ReplyDeleteகவியரசரின் பாடல் தான் நினைவு வருகிறது
"தெய்வம் என்றால் அது தெய்வம்.. வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான்"
நம்பிக்கை தான் கடவுள் என்பதை புரியாதவர்க்கு சொன்ன பாடல்.
நன்றி,
ஸ்ரீதர்
வணக்கம் சார்!
ReplyDeleteஆன்மீகப் பதிவு நன்றாக இருந்தது.
இதே ஆன்மீகத்தை ஒட்டியே நான் முன்பு இட்ட பதிவை பதிக்கிறேன். உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.
1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்
புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்
2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்
அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
3 : 34 : 1 - ரிக் வேதம்
3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5
எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.
4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்
பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்
5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
2 : 115 - குர்ஆன்
அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
10 :12 :14 - ரிக் வேதம்
கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
10 : 36 : 14 - ரிக் வேதம்
இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
10 : 81 : 3 - ரிக் வேதம்
6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்
பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்
7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
25 : 62 - குர்ஆன்
இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
10 : 190 : 2 - ரிக் வேதம்
8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
6 : 96 - குர்ஆன்
அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
10 : 190 : 3 - ரிக் வேதம்
9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
57 : 3 - குர்ஆன்
ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
1 : 31 : 2 - ரிக் வேதம்.
10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
48 : 23 - குர்ஆன்
அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
18 : 15 - அதர்வண வேதம்
11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்
இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்
12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
13 : 9 - குர்ஆன்
இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
20 : 58 : 3 - அதர்வண வேதம்
மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்களைத் தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.
நண்பர் சுவனப்பிரியன் போல் இவ்வளவு படித்து ஒப்பிட்டு எழுத என்னால் முடியாது. இங்குள்ள பழைய பாடத்தை படித்து முடிக்கலாம் என்றால் கூட நேரம் போதவில்லை. அவருடைய சிரத்தைக்கு எனது பாராட்டுகள். எல்லாம் வல்ல இறைவன் இவரை போல் ஆட்களை இங்கு அனுப்பி வைப்பாராக.
ReplyDeleteஅருமையான பதிவு..பின்னூட்டம் இட தாமதமாகிவிட்டது..சாரி
ReplyDeleteஇந்த மாதிரி எதார்த்தமான கட்டுரைகள் நிறைய தரவேண்டும்(பாடத்தின் இடையில்) என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்பு மாணவர்,
மோகன்
/////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ReplyDeleteவாத்தியாரய்யா !
புரியாதவனுக்கு புரிய வைக்கலாம் .
புரியாததுபோல் நடிப்பவனுக்கு எப்படி புரிய வைக்க முடியும் ?/////
யாரையும் மாற்ற முடியாது! அதுதான் உண்மை!
////Blogger Sridhar said...
ReplyDeleteஅய்யா,
கவியரசரின் பாடல் தான் நினைவு வருகிறது
"தெய்வம் என்றால் அது தெய்வம்.. வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான்"
நம்பிக்கை தான் கடவுள் என்பதை புரியாதவர்க்கு சொன்ன பாடல்.
நன்றி,
ஸ்ரீதர்////
நன்றி ஸ்ரீதர்!
Blogger சுவனப்பிரியன் said...
ReplyDeleteவணக்கம் சார்!
ஆன்மீகப் பதிவு நன்றாக இருந்தது.
இதே ஆன்மீகத்தை ஒட்டியே நான் முன்பு இட்ட பதிவை பதிக்கிறேன். உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.
1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்
புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்
2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்
அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
3 : 34 : 1 - ரிக் வேதம்
3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5
எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.
4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்
பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்
5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
2 : 115 - குர்ஆன்
அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
10 :12 :14 - ரிக் வேதம்
கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
10 : 36 : 14 - ரிக் வேதம்
இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
10 : 81 : 3 - ரிக் வேதம்
6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்
பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்
7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
25 : 62 - குர்ஆன்
இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
10 : 190 : 2 - ரிக் வேதம்
8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
6 : 96 - குர்ஆன்
அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
10 : 190 : 3 - ரிக் வேதம்
9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
57 : 3 - குர்ஆன்
ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
1 : 31 : 2 - ரிக் வேதம்.
10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
48 : 23 - குர்ஆன்
அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
18 : 15 - அதர்வண வேதம்
11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்
இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்
12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
13 : 9 - குர்ஆன்
இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
20 : 58 : 3 - அதர்வண வேதம்
மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்களைத் தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்./////
எனக்கு வேதங்களைப் படிக்கும் வாய்ப்பும் நேரமும் கிடைக்கவில்லை. உங்கள் பின்னூடத்திற்கு நன்றி!
நீங்கள் சொல்வது உண்மைதான். எல்லா மதங்களுமே இறைவனை அடையாளப்படுத்துவதில் ஒன்றாகத்தான் உள்ளன!
////Blogger ananth said...
ReplyDeleteநண்பர் சுவனப்பிரியன் போல் இவ்வளவு படித்து ஒப்பிட்டு எழுத என்னால் முடியாது. இங்குள்ள பழைய பாடத்தை படித்து முடிக்கலாம் என்றால் கூட நேரம் போதவில்லை. அவருடைய சிரத்தைக்கு எனது பாராட்டுகள். எல்லாம் வல்ல இறைவன் இவரை போல் ஆட்களை இங்கு அனுப்பி வைப்பாராக./////
நன்றி நண்பரே!
////Blogger Mohan said...
ReplyDeleteஅருமையான பதிவு..பின்னூட்டம் இட தாமதமாகிவிட்டது..சாரி
இந்த மாதிரி எதார்த்தமான கட்டுரைகள் நிறைய தரவேண்டும்(பாடத்தின் இடையில்) என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்பு மாணவர்,
மோகன்////
இடையில் எழுதிக்கொண்டிருக்கிறேன் நண்பரே! தொடர்ந்து எழுதுவேன்!
//ஆனால் அதே நேரத்தில் இந்தப் பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோ மீட்டர்
ReplyDeleteவேகத்தில் சுற்றிக் கொள்கிறது. அதன் வேகம் உங்களைப் பாதிக்கிறதா?
இல்லையே? அதுதான் இறைசக்தி!
உலகின் நிலப்பரப்பில் 3ல் 2பங்கு தண்ணீர். இந்தச் சுழற்சியில் ஒரு சொட்டுத்
தண்ணீராவது, பூமியிலிருந்து பிரிந்து அண்டத்தில் விழுகிறதா? கேட்டால் புவியீர்ப்பு
என்பார்கள். அந்த ஈர்ப்புதான் இறைசக்தி!
Space, time and earth மூன்றுமே ஒன்றுதான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க
முடியாது. மூன்றுமே இறைசக்தி\\
இந்த உண்மையை மனித குலம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து
கொண்டு வந்தாலே உலகம் அமைதியும்,இனிமையும் பெற்றுவிடும். இந்தப் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதற்காக பாராட்டுகிறேன்.
\\புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்\\
வாத்தியார் வாயில் சாபம் போன்ற
வார்த்தை அமைப்பு இனிமேல் வராது என நம்புகிறேன். உண்மையில் புரியாதவனுக்கு புரிய வைக்க நம்மை
மேம்படுத்திக் கொள்வோம். புரியாத மாதிரி நடிப்பவரிடம் இருந்து ஒதுங்கிவிடுவோம்.
// அறிவன்#11802717200764379909 said...
ReplyDeleteஅந்த தகவல் பிழைதான் சுட்டப்பட்டது.
எப்படியும் கண்ணன் கடவுளின் கட்சியில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி !!!!
//
அறிவன் சார், அதுபோன்ற கேள்விகளுக்கு மதவாதிகள் கொடுக்கும் விளக்கத்தைத்தான் நான் சொன்னேன். சொந்த கருத்து எதுவும் இல்லை. குறைபாடு உள்ள பிள்ளைகள் பிறப்பது இறைவனின் செயலா ? என்று கேட்ட போது ஒருவர் என்னிடம், 'பெற்றோர்களின் தவறான உணவு பழக்கத்தினால் நேர்ந்த பிழை அதில் இறை தொடர்பு இல்லை' என்றார்
அதன் பிறகு அவரிடம் விவாதம் செய்ய முடியுமா ?
ஆனால் அதே கேள்வியை இந்து நண்பர்களிடம் கேட்டால், 'முன் வினை' என்பார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் 30 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை இன்றைக்கு 120 கோடி, கிட்டதட்ட 60 விழுக்காட்டிற்கும் மேல் பிறப்பவை அனைத்தும் முன்வினை எதுமின்றி முதன் முதலில் பிறந்தவைதான். இப்படி புதிதாக (முதல் ஜென்மமாக) பிறந்ததில் குறைபாடு இல்லாத குழந்தைகளே இல்லையா ?
நீங்கள் சொன்னதை மறுப்பதற்காக இதைச் சொல்லவில்லை. நல்லதை இறைவனின் திருவுளம் என்றும் தீயது நடந்தால் முன்வினை என்று சொல்லும் கட்சியில் நான் இல்லை. எனக்கே எனக்கான நம்பிக்கைகள் எனக்கும் உண்டு.
Blogger அறிவே தெய்வம் said...
ReplyDelete//ஆனால் அதே நேரத்தில் இந்தப் பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோ மீட்டர்
வேகத்தில் சுற்றிக் கொள்கிறது. அதன் வேகம் உங்களைப் பாதிக்கிறதா?
இல்லையே? அதுதான் இறைசக்தி!
உலகின் நிலப்பரப்பில் 3ல் 2பங்கு தண்ணீர். இந்தச் சுழற்சியில் ஒரு சொட்டுத்
தண்ணீராவது, பூமியிலிருந்து பிரிந்து அண்டத்தில் விழுகிறதா? கேட்டால் புவியீர்ப்பு
என்பார்கள். அந்த ஈர்ப்புதான் இறைசக்தி!
Space, time and earth மூன்றுமே ஒன்றுதான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க
முடியாது. மூன்றுமே இறைசக்தி\\
இந்த உண்மையை மனித குலம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து/////
கொண்டு வந்தாலே உலகம் அமைதியும்,இனிமையும் பெற்றுவிடும். இந்தப் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதற்காக பாராட்டுகிறேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
\\புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்\\
வாத்தியார் வாயில் சாபம் போன்ற
வார்த்தை அமைப்பு இனிமேல் வராது என நம்புகிறேன். உண்மையில் புரியாதவனுக்கு புரிய வைக்க நம்மை
மேம்படுத்திக் கொள்வோம். புரியாத மாதிரி நடிப்பவரிடம் இருந்து ஒதுங்கிவிடுவோம்./////////
அது சாபம் அல்ல! வரமோ அல்லது சாபமோ கொடுக்கக்கூடிய தகுதியும் எனக்கில்லை!
அது அவர்களைப் பற்றிய மன வெளிப்பாடு அவ்வளவுதான் நண்பரே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Blogger கோவி.கண்ணன் said...
ReplyDelete// அறிவன்#11802717200764379909 said...
அந்த தகவல் பிழைதான் சுட்டப்பட்டது.
எப்படியும் கண்ணன் கடவுளின் கட்சியில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி !!!!
//
அறிவன் சார், அதுபோன்ற கேள்விகளுக்கு மதவாதிகள் கொடுக்கும் விளக்கத்தைத்தான் நான் சொன்னேன். சொந்த கருத்து எதுவும் இல்லை. குறைபாடு உள்ள பிள்ளைகள் பிறப்பது இறைவனின் செயலா ? என்று கேட்ட போது ஒருவர் என்னிடம், 'பெற்றோர்களின் தவறான உணவு பழக்கத்தினால் நேர்ந்த பிழை அதில் இறை தொடர்பு இல்லை' என்றார்
அதன் பிறகு அவரிடம் விவாதம் செய்ய முடியுமா ?
ஆனால் அதே கேள்வியை இந்து நண்பர்களிடம் கேட்டால், 'முன் வினை' என்பார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் 30 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை இன்றைக்கு 120 கோடி, கிட்டதட்ட 60 விழுக்காட்டிற்கும் மேல் பிறப்பவை அனைத்தும் முன்வினை எதுமின்றி முதன் முதலில் பிறந்தவைதான். இப்படி புதிதாக (முதல் ஜென்மமாக) பிறந்ததில் குறைபாடு இல்லாத குழந்தைகளே இல்லையா ?
நீங்கள் சொன்னதை மறுப்பதற்காக இதைச் சொல்லவில்லை. நல்லதை இறைவனின் திருவுளம் என்றும் தீயது நடந்தால் முன்வினை என்று சொல்லும் கட்சியில் நான் இல்லை. எனக்கே எனக்கான நம்பிக்கைகள் எனக்கும் உண்டு.//////
உங்கள் தன்னிலை விளக்கத்திற்கு நன்றி கோவியாரே!