ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 6
By SP.VR.SUBBIAH
வானவெளியில் கோள்களின் சுழற்சியைப் படமாகக்
கொடுத்துள்ளேன்.இது நான் போட்ட படமல்ல!
அமெரிக்க விஞ்ஞானக் கழகத்தின் இணையதளம்
ஒன்றிலிருந்து எடுத்தேன்.
இந்த விஞ்ஞான வளர்ச்சியெல்லாம் சுமார் 200 ஆண்டு
களுக்குள்தான். சென்னையில் உள்ள கோளரங்கத்திலோ
அல்லது கல்கத்தாவில் உள்ள கோளரங்கத்திலோ
இதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் கடைசி தினத்தில் இந்து'
நாளிதழிலும் அந்த மாதத்தின் கோள்கள் நிலைப் பாட்டை
கோளரங்கத்தில் வாங்கித் தங்கள் வாசகர்களுக்காக
வெளியிடுகிறார்கள்.
ஆனால் இது எதுவுமில்லாமல் நமது பஞ்சாங்கத்தில்
இந்த விவரங்கள் எல்லாம் உள்ளன.
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் உஜ்ஜயினியில்
வாழந்த ஆர்யபட்டர் என்னும் வானசாஸ்திரம், மற்றும்
ஜோதிட சாஸ்திர வல்லுனரால் இவை எல்லாம்
துல்லியமாகக் கணிக்கப் பெற்று எழுதிவைக்கப்
பெற்றுள்ளது!
Telescope, satellite, computer என்று எந்தவித உபகரணங்களும்
இல்லாத அந்தக் காலத்தில் இவற்றையெல்லாம் அந்த
மனிதர் எப்படிக் கண்டுபிடித்தார் என்பது வியப்பான
விஷயம்.
அவருக்குப் பிறகு வந்த பிருகு முனிவர், பராசரர்,
வராகமிஹிரர், ஜெய்மானி போன்றவர்களும் பெரும்
தொண்டாற்றியிருக்கின்றார்கள்.
அவர்கள் காலத்திலும், பிறகு அவர்களுக்குப் பின்னால்
அவர்கள் வழி வந்த அவர்களுடைய சீடர்கள் காலத்திலும்
ஐந்து லெட்சத்திற்கும் மேற்பட்ட மனிதர்களின்
ஜாதகங்கள் வாங்கப் பெற்று, ஆராயப் பெற்று பல அரிய
குறிப்புக்களும், செய்திகளும். ஜோதிட விதிகளும் ஓலைச்
சுவடியில் எழுதிவைக்கப்பட்டிருந்தன. அவையெல்லாம்
நாலந்தா பலகலைக்கழகத்தில் இருந்தனவாம். பிற்காலத்தில்
ஏற்பட்ட படையெடுப்புக்களில் பாதி மட்டுமே காப்பாற்றப்
ப்ட்டனவாம். மீதி படையெடுத்தவர்களால் தீக்கிரையாககப்
பட்டனவாம். இது வரலாறு கூறும் உண்மை!
அந்தமுனிவர்களுக்கு தீர்க்க தரிசனம் இருந்திருக்கலாம்
அதானால்தான் கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது.
Intuition (Power of understanding something immediately without
reasoning) சக்தி உள்ளவர்களாலும் அப்படிச் செய்யமுடியும்
சரி, அதெல்லாம் முக்கியமில்லை - ஒரு தகவலுக்காக
உங்களுக்குச் சொன்னேன்!
பாடத்திற்கு வருகிறேன்.
கோள்கள் வானவெளியில் ஒரு ஒழுங்கில் சுற்றி
வருகின்றன. அவற்றின் பெயர்களையும் அவைகள் ஒரு
சுற்றை முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தின்
அளவையும் கீழே கொடுத்துள்ளேன்
அதேபோல வானவெளி வட்டம் 12 பகுதிகளாகப்
பிரிக்கப் பெற்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு
பெயரிடப் பெற்றுள்ளது. அதையும் கீழே கொடுத்துள்ளேன்
இவை அனைத்தும் வான சாஸ்திரத்தை அடிப்படையாகக்
கோண்டவை. நட்சத்திரங்களும், கோள்களும் எல்லையற்ற
அண்டத்தில் (Space) உள்ளவை. ஆகர்ஷண சக்தியின்
விதிகளுக்கு (Laws of Gravitation) உட்பட்டவை
-------------------------------------------------------------
-------------------------------------------------------------
இன்று நடத்திய பாடங்கள் அத்தனையும் அஸ்திவாரம்
போன்றது. அவை அனைத்தையும் மனதில் உள்வாங்கிக்
கொள்வது நல்லது.
இல்லையென்றால் அடுத்து வரும் பாடங்கள் புரியாது!மறுபடியும் நாளை சந்திப்போம்
(தொடரும்)

எந்த உபகரணமும் இல்லாமல் இவ்வளவு விபரங்கள் பஞ்சாங்கத்தில் இருப்பது வியப்பே!!
ReplyDeleteஎனக்கென்னவோ இதற்கும் மேலும் அவர்கள் தெரிந்திருக்க்கூடும் என்று தோனுகிறது.
ராமாயணம்,மகாபாரதம் போன்றவை வந்த மாதிரி இவையெல்லாம் ஏன் வரவில்லை?
//வ்டுவூரர் அவர்கள் சொல்லியது: எந்த உபகரணமும் இல்லாமல் இவ்வளவு விபரங்கள் பஞ்சாங்கத்தில் இருப்பது வியப்பே!!
ReplyDeleteஎனக்கென்னவோ இதற்கும் மேலும் அவர்கள் தெரிந்திருக்க்கூடும் என்று தோனுகிறது.
ராமாயணம்,மகாபாரதம் போன்றவை வந்த மாதிரி இவையெல்லாம் ஏன் வரவில்லை? //
ராமாயணம், மகாபாரதம் எல்லாம் காவியங்கள். ஒரு பெரிய நாவலில் இருக்கும் அளவிற்கு,
அவற்றில், கருத்துக்கள், சுவாரசியமான திருப்பங்கள், தொய்வில்லாத சம்பவங்கள் என்று
ஜெப்ஃபரி ஆர்ச்சரின் நாவல்களைப் ப்டிக்கும் சுவாரசியம் உள்லது. தானால் இளம் வயதில்
அனைவரும் விரும்பிப் படிப்பார்கள்
வயதானவர்கள், பக்திமிகுதியால், அது இறைவனைப் ப்ற்றிய காவியம் என்று ஆர்வம் மேலிடத்த்
திரும்பத் திரும்பப் படிக்கின்றார்கள்
ஆனால் வானசாஸ்திரமும், ஜோதிடமும் அப்படியல்ல!
முழுவதும், கணக்கையும், விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டது
பொறியியல் கல்லூரிப் பாடங்கள் போல நிறைய டெக்னிகல் விஷயங்களும்
பல சூத்திரங்களும் அடங்கியது.அதைப் படித்துப் புரிந்து கொள்வதற்குத
தனித் திறமையும், அதைவிட அதிகமாகப் பொறுமையும் வேண்டும்
அதனால்தான் அது நிறைய மக்களைச் சென்றடையவில்லை
என் வகுப்பிற்கு இப்போது தினமும் 200 க்கும் மேற்பட்டவர்கள் தினமும் வந்து செல்வதாக
ஹிட் கவுன்ட்டர் சொல்கிற்து. பத்துப்பாடங்களுக்குப் பிற்கு எத்தனைபேர் பயந்து ஒதுங்கப்
போகிறார்களோ தெரியவில்லை!:-))))))))))
நான் டெய்லி வந்து பாக்குறேன்..
ReplyDeleteஆனா டைம் இல்லாததால அட்டெண்டஸ் கொடுக்க முடியல.
இனிமே அட்டெண்டஸும் கொடுத்துடறேன்.
சென்ஷி
படித்துவிட்டேன் வாத்தியாரே....நன்றி.
ReplyDeleteபடித்துவிட்டேன் வாத்தியாரே....நன்றி.
ReplyDeleteஒரு சின்ன சந்தேகம், ஆரியபட்டருக்குபின் வந்தவர்கள் தான் பிருகு, அகத்தியர் என்பது போல எழுதியுள்ளீர்கள்.....இது இந்த பதிவிற்கு சம்மந்தமில்லாத கேள்வி என்றாலும், நீங்க அந்த மாதிரி எழுதி இருப்பதால் ஏதேனும் காரணம்/சுட்டி இருக்குமென நினைக்கிறேன். விளக்க முடியுமா?.
///நான் டெய்லி வந்து பாக்குறேன்..
ReplyDeleteஆனா டைம் இல்லாததால அட்டெண்டஸ் கொடுக்க முடியல.
இனிமே அட்டெண்டஸும் கொடுத்துடறேன்.///
அதைச் செய்யுங்கள்!
அப்போதுதானே - எத்தனை பேர் வகுப்பிற்கு டிமிக்கி என்று தெரியும்:-)))
///ஆரியபட்டருக்குபின் வந்தவர்கள் தான் பிருகு, அகத்தியர் என்பது போல எழுதியுள்ளீர்கள்.....இது இந்த பதிவிற்கு சம்மந்தமில்லாத கேள்வி என்றாலும், நீங்க அந்த மாதிரி எழுதி இருப்பதால் ஏதேனும் காரணம்/சுட்டி இருக்குமென நினைக்கிறேன். விளக்க முடியுமா?. ///
ReplyDeleteவானவியலுக்கு அவர் முன்னோடி என்பதால் அவரை முன்னிலைப் படுத்தினேன். அவ்வளவுதான்
புலிப்பாணி, அகத்தியர் எல்லாம அவருக்கு முந்திய காலத்தவர்கள்
இப்போது பாடத்தின் குறுக்கே அவர்களைப் பற்றியெல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் பதிவு திசை திரும்பிவிடும்.
பாடங்களெல்லாம் முடியட்டும் - 18 சித்தர்களுக்கும்
வட இந்திய முனிவர்களுக்கும் சேர்த்து தனியாக Special Classes வைத்துக் கொள்வோம்!:-))))
ஐயா,
ReplyDeleteபாடங்கள் அருமை. நன்றி
-அமராவதியான்
///பாடங்கள் அருமை. நன்றி
ReplyDelete-அமராவதியான்///
அதைவிட அருமை ஒன்று உள்ளது.அதுதான் நீங்கள் இந்தப் பாடங்களைப் படித்து மனதில் வைப்பது!
சுப்பைய்யை ஐயா ?
ReplyDeleteகிரகத்துக்கு ஏன் கிரகம் பிடிக்கலை ?
ஆனானப் பட்ட ஈஸ்வரனையே சனி துரத்தோ துரத்துன்னு துரத்தி அவர் புங்கன் கொட்டையில் பதுங்கி அவஸ்தைப் பட்டதாக சொல்றாங்க !
என் குருவுக்கோ மற்ற கிரகங்களுக்கோ சனிப் பார்வை படவில்லை ?
விளக்க முடியுமா ?
உள்ளேன் அய்யா.
ReplyDeleteஒரு சின்ன விளக்கம் தருகிறீர்களா?. தோஷ நிவர்திக்காக புண்ணிய ஸ்தலங்களுக்கும் கோவில்களுக்கும் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஸ்தலங்கள் இந்து மதத்துக்கு உரியவை. இது பிற மத அன்பர்களுக்கும் பொருந்துமா?
// கோவியார் கேட்டது:
ReplyDeleteசுப்பையா ஐயா ?
கிரகத்துக்கு ஏன் கிரகம் பிடிக்கலை ?//
கவிதை எழுதுவதைப் பற்றி அதிகமாக யோசித்து யோசித்து ஒரு வழியாகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்:-))))
சரி இவற்றிற்குப் பதில் சொல்லுங்கள் தீக்குத் தீ வைத்தால் என்ன ஆகும்??
நீருக்குத் தாகமெடுக்குமா?
காற்று காற்று இல்லாத இடத்தில் என்ன செய்யும்?
///புங்கன் கொட்டை///
இது நாகபட்டிணத்துக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த் கொட்டையாக இருக்கலாம். ஆகவே அதில் ஒன்றை அனுப்பிவயுங்கள் பார்த்துவிட்டுப் பதில் சொல்கிறேன்
//என் குருவுக்கோ மற்ற கிரகங்களுக்கோ சனிப் பார்வை படவில்லை ?
விளக்க முடியுமா ? //
ந்ல்ல வேளை ராகுவை மறந்து விட்டீர்கள்!
கிரகங்கள் 30 பாகைக்குள் ஒன்று சேர்வது என்பதைக் Combust என்பார்கள் (கிரக அஸ்தமணம்)அப்படி ஒன்று சேரும் கிரகங்கள் நன்மை பயக்கும் கிரகங்களாக (Benific planets)இருந்தால் நன்மையைச் செய்யாது.
இல்லை இரண்டும் (சனி, ராகு) தீய கிரகங்களாக இருந்தால் (Melefic planets)தீமையை அதிகமாகச் செய்யும்
உதர்ரணத்திற்கு, ராகுவும், மாந்தியும் ஒன்று சேர்ந்து 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பேச்சு வராது - ஊமையாக இருப்பான்
கிரகங்கள் தங்களூக்குள் ஒன்றுக்கொன்று ஒன்றும் செய்து கொள்ளாது.(அங்கே ஒரே கூட்டணிதான்)
வானத்தில் மேகங்கள்தான் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளூம்.
மின்னல், இடி, மழையாக வந்து நாகைப்பட்டிணத்துக்காரர்களை
கவிதை எழுதவைக்கும்:-)))))
//பாடங்களெல்லாம் முடியட்டும் - 18 சித்தர்களுக்கும்
ReplyDeleteவட இந்திய முனிவர்களுக்கும் சேர்த்து தனியாக Special Classes வைத்துக் கொள்வோம்!:-))))//
நன்றி.....ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.
/// மடையன் அவர்கள் சொல்லியது: ஒரு சின்ன விளக்கம் தருகிறீர்களா?. தோஷ நிவர்திக்காக புண்ணிய ஸ்தலங்களுக்கும் கோவில்களுக்கும் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஸ்தலங்கள் இந்து மதத்துக்கு உரியவை. இது பிற மத அன்பர்களுக்கும் பொருந்துமா?///
ReplyDeleteதோஷத்திற்கு எல்லாம் முழு நிவர்த்தி கிடையாது.திருபுள்ளாணி, ராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களில் கடலில் நீராடி இறைவனை வழிபடுபவர்களுக்கு, அந்த தோஷங்களைத் தாங்கும் சக்தியை இறைவன் அளிப்பார்.
(The aAlmighty will confer you standing power)
கிரகங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவை!
மாந்தி எப்பிடி கண்டு பிடிப்பது ? மாந்தி பலன் என்ன ?
ReplyDelete/////Blogger achukichan said...
ReplyDeleteமாந்தி எப்படிக் கண்டு பிடிப்பது ? மாந்தி பலன் என்ன ?
மாந்தி என்பது உபகிரகம். பதிவின் சைடு பாரில் இருக்கும் ஜகந்நாதஹோரா மென்பொருளைப் பயன்படுத்துங்கள். அது உங்கள் ஜாதகத்தில் மாந்தி இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டும். மாந்தி தான் இருக்கும் வீட்டின் செயற்பாடுகளைக் கெடுக்கும்!
உதாரணத்திற்கு இரண்டில் மாந்தி இருந்தால், அது ஜாதகனைக் குடும்பம் நடத்த விடாது. ஜாதகன் ஒரு இடத்தில் இருப்பான். அவன் மனைவி ஒரு இடத்தில் இருப்பாள்.