மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.2.07

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 4

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 4
By. SP. VR. SUBBIAH


எங்கள் பகுதி மக்களெல்லாம் தமிழிலும், பக்தியிலும்
ஊறித் திளைத்தவர்கள்.

தமிழையும், சைவத்தையும் இரண்டு கண்களாகப்
போற்றுபவர்கள். பெயர்கள் எல்லாம் தூய தமிழ்ப்
பெயர்களாக இருக்கும்

சிறு வய்தில் இருந்தே வீட்டிலும் தமிழைச் சொல்லித்
தருவார்கள்.

வீட்டுப் பெரியவர்கள், சிறுவர்கள் எழுதும்போது
திருத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள்

க, கி, கீ, கோ, என்று எழுதும் போது (மேற்கோடுகளுக்கு
கொம்பு என்ற பெயர்) அவைகள் திருத்தமாக இல்லை
யென்றால் மறுபடி, மறுபடி எழுதச் சொல்லி
தண்டனை கிடைக்கும்

'கொம்பு சுழி கோணாமல், தம்பி நீ எழுதினால்தான்
சோறுண்டு'
என்ற வரிகளைக் கவிதையாகச் சொல்லிப்
பசியில் தவிக்க வைத்து விடுவார்கள்

"பொழுதெப்ப விடியும்
பூவெப்ப மலரும்
சிவனெப்ப வருவார்
வரமெப்பத் தருவார்"
என்று பாட்ல்களையும் சொல்லிக்
கொடுப்பார்கள்.

"துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகளைச் சொல்லும்"
போன்ற சினிமாப் பாடல்களெல்லாம் வீட்டிற்கு
வெளியேதான்.

சற்றுப் பெரிய குழந்தைகளுக்குக் கடிதங்கள்
எழுதச் சொல்லித் த்ருவார்கள். அதே சாக்கில்
அவர்களுடைய கடிதங்களுக்கும் dictation கொடுத்து
குழந்தைகளையே எழுதவைத்து விடுவார்கள்

காகிதத்தைக் கையில் எடுத்தவுடனேயே 'பிள்ளையார்
சுழி, சிவமயம் என்று எழுதிவிட வேண்டும். இல்லையென்றால்
பளார் என்று முதுகில் ஒன்று விழுந்துவிடும்

அதேபோல கடிதத்தை முடிக்கும்போது,
வேணும், அண்ணாமலையார் துணை என்று
எழுதித்தான் முடிக்கவேண்டும்.

அன்புள்ள மான்விழியே அல்லது அன்புள்ள மன்னவனே,
அன்புள்ள நண்பனே
என்றெல்லாம் கடிதம் எழுதும்
வழக்கம் உலகத்தில் உள்ளது என்பது எனக்குப் பதினான்கு
வயதிற்குமேல்தான் தெரிந்தது.

அண்ணாமலை என்பது திருவண்ணமலையில் உறையும்
அண்ணாமலையாரைக் குறிக்கும்

“பிறந்தால் சிதம்பரத்தில் பிறக்க வேண்டும்,
வாழ்ந்தால் ஆருரில் வாழவேண்டும்,
இறந்தால் காசியில் இறக்கவேண்டும்.
இவை மூன்றிற்கும் சாத்தியமில்லை என்பதால்
அண்ணாமலையாரை நினைக்க வேண்டும்”
என்பார்கள்.

சற்று வயதானவுடன், என் பெரியப்பாவிடம் எதற்கு
இது என்றபோது "அண்ணாமலையை நினைதாலே முக்தி !
ஆகவே பேசாமல் எழுது!" என்று சொல்லி என்
வாயை அடைத்துவிட்டார்.

ஓகோ அவருக்கு முக்தி கிடைக்க அடுத்தவன்தான்
எழுத வேண்டுமா என்று அறிவீனமாய் நினைக்காமல்
நல்லதுக்குத்தான் சொல்கிறார் என்று அப்போது நினைப்பேன்

இப்போது உலகம், ஜெட் விமான வேகத்தில் போய்க்
கொண்டிருக்கிறது. யாருக்கும் எதற்கும் நேரமில்லை!
இந்தப் பழங்கதைகளையெல்லாம் சொன்னால்
அடிக்க வருவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்
பகிரங்கமாகப் பக்தியைப் பற்றியும், முக்தியைப் பற்றியும்
பேசினால் கத்தியை காட்டுவார்கள்.

கடிதத்தில் தேதி எழுதும் பொது, விய ஆண்டு
மாசித் திங்கள் 13ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்றுதான்
எழுத வேண்டும். 25.02.2007 என்று எழுதவிட மாட்டார்கள்.

அதனால் எனக்குச் சிறுவயதிலேயே தமிழ் மாதங்களின்
பெயர்களும், வருடங்களின் பெயர்களும் சுத்தமாகத் தெரியும்.

(அப்பாடா, Subjectற்கு வந்து விட்டேன்)

"சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி. புரட்டாசி
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி"

என்று தமிழ் மாதங்களின் பெயர்களைக் கடகட
வென்று சொல்வேன்

அதே போல தமிழ் ஆண்டுகளின் பெயர்களும் தெரியும்

பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரஜோற்பத்தி,
ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய,
பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண,
பார்த்திப, விய,

சர்வஜித், சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய,
ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விஹாரி,
சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசு,
பராபவ,

பிலவங்க, கீலக, செளமிய, சாதாரண, விரோதிகிருது,
பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராஷச, நள, பிங்கல, காளயுக்தி,
சித்தார்த்தி, ரெளத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி,
ரக்தாஷி, குரோதன, அக்ஷ்ய

அப்பாடா, 60 ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்களை ஒரே ஓட்டத்தில்
சொல்லிவிட்டேன்.

இந்த இரண்டும்தான் இன்றைய பாடம். பாடங்கள்
எப்போதும் மருந்தைப் போன்றது: மருந்தைத் தேனில்
குழைத்துக் கொடுப்பார்கள்.

ஜொதிடப் பாடங்கள் என்னும் மருந்தை, என் சொந்தக்
கதைகள் என்னும் தேனோடு கலந்து, இன்று
முக்கியமான செய்திகள் இரண்டை இன்று பாடமாக
நடத்திவிட்டேன்

ஒன்று மாத்ங்கள், மற்றொன்று வருடங்கள்.
இது கணினியுகம். இவற்றைத் தெரிந்துவைத்துக்
கொண்டால் போதும். மனனம் செய்ய வேண்டிய
அவசியமில்லை!

அடுதத பாடம் மொத்தமும் மருந்துதான்.
அதுவும் வைத்திருந்து அவ்வப்போது சாப்பிட வேண்டியது.
அதனால் தேன் கலக்காமல் அப்படியே தருவேன்
சாப்பிடும்போது தேவைப்பட்டால் நீங்கள் கலந்து கொள்ளலாம்:-)))


(தொடரும்)

------------------------------------------------

மேலும் ஒரு ஜோதிடம் சம்பந்தமான இணையதள முகவரி:
Astro Data Bank என்னும் இணையதள முகவரி சுட்டி இங்கே உள்ளது



21 comments:

  1. /// எஸ்.கே அவர்கள் சொல்லியது:
    உள்ளேன் ஐயா! //

    உள்ளேன் ஐயா மட்டும்தானா....?:-)))

    ReplyDelete
  2. என் தாத்தாவும் இந்த 60 வருடங்களை கோர்வையாக சொல்வார்.
    என்னிடம் சில தடவை சொன்னாலும்,என்னை மனனம் செய்யச் சொல்லவில்லை.அதனால் அப்படியே போய்விட்டது.
    என் அப்பாவுக்கு கூட தெரியுமா என்று தெரியாது!!

    ReplyDelete
  3. \\ ஒன்று மாத்ங்கள், மற்றொன்று வருடங்கள்.
    இது கணினியுகம். இவற்றைத் தெரிந்துவைத்துக்
    கொண்டால் போதும். மனனம் செய்ய வேண்டிய
    அவசியமில்லை!//

    வருடங்களின் வரிசையை
    படித்ததும் எங்கே மனனம்
    செய்யச் சொல்லிவிடுவீர்களோ
    என்று கொஞ்சம்
    பயமாக இருந்தது அடுத்த
    வரியைப் பார்த்ததும் தான்
    நிம்மதி :-)

    ReplyDelete
  4. நானும் ஊள்ளெனையா
    60வருடங்களும் முன்பு பாடம்.தற்போது புத்தகத்தில் பார்க்க வேண்டி உள்ளது.
    அத்துடன்

    ReplyDelete
  5. உள்ளேன் ஐயா என்றால் வகுப்புக்கு வந்து கவனமகப் படிக்கிறேன் எனப் பொருள் ஆசானே!

    அடுத்த வகுப்புக்காகக் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  6. ஐயா,
    நீங்கள் இணைத்துள்ள படங்கள் அனைத்தும் சின்னதாகவே உள்ளன. பெரிதுபடுத்திப் பார்க்க முடியவில்லை. Resize செய்யாமல் முழுப் படத்தையும் இணைக்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  7. ஆஜர் சார்....

    சனி, ஞாயிறு விடுமுறையானதால் மிச்ச பாடத்தையும் படித்து விட்டேன்.

    நன்றி..

    சென்ஷி

    ReplyDelete
  8. காடு வெட்டிப் போட்டு
    கடிய நிலந் திருத்தி
    வீடு கட்டிக் கொண்டிருக்கும்
    வேள்வணிகர் வீடுகட்கு
    அன்றைக்கு வந்த
    அம்மா லக்குமியே
    என்றைக்கும் நீங்காதிரு..

    ReplyDelete
  9. ஐயா,

    விடுப்பிலிருந்து திரும்பிவிட்டேன், விடுபட்ட பாடங்களை படித்துவிட்டு வருகிறேன்....

    மாதங்கள் தெரியும், வருடங்கள் பரிதாபியிலிருந்து (நான் பிறந்த வருடம்) பாடம் செய்து வருகிறேன் (இன்னும் 25 வருடங்கள் பிடிக்கும் மிச்சம் மனனமாக...ஹிஹிஹி).

    ReplyDelete
  10. ///என் தாத்தாவும் இந்த 60 வருடங்களை கோர்வையாக சொல்வார்.
    என்னிடம் சில தடவை சொன்னாலும்,என்னை மனனம் செய்யச் சொல்லவில்லை.அதனால் அப்படியே போய்விட்டது.
    என் அப்பாவுக்கு கூட தெரியுமா என்று தெரியாது!!///

    இது தெரியாவிட்டால் பரவாயில்லை
    தற்போது நிறையக் குழந்தைகள் ஐ.டி.
    பிரிவு/ வெளிநாட்டு வேலை/ 4k or 5k
    சம்பளம் ஆகிய கன்வில் படிப்பது ஆங்கில வழிக்கல்வி, அவர்களுக்கெல்லாம் தமிழில் பேச மட்டுமே தெரியும் என்பது வருந்தக் கூடிய விஷ்யம்

    ReplyDelete
  11. //முத்துலெட்சுமி அவர்கள் சொல்லியது: வருடங்களின் வரிசையை
    படித்ததும் எங்கே மனனம்
    செய்யச் சொல்லிவிடுவீர்களோ
    என்று கொஞ்சம்
    பயமாக இருந்தது அடுத்த
    வரியைப் பார்த்ததும் தான்
    நிம்மதி :-)///

    பின்னால் மனனம் செய்ய வேண்டிய பகுதிகள் நிறைய உள்ளனவே அம்மணி (சகோதரி)!

    அடடா, பேசாமல் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து விடுங்கள்:-))))

    ReplyDelete
  12. ///செல்லி அவர்கள் சொல்லியது: நானும் ஊள்ளெனையா
    60வருடங்களும் முன்பு பாடம்.தற்போது புத்தகத்தில் பார்க்க வேண்டி உள்ளது.
    அத்துடன் ///

    என்ன அம்மணி அத்துடன் என்று ஏதோ சொல்லவந்தவர்கள் - நிறுத்திவிட்டீர்களே?

    ReplyDelete
  13. // எஸ்.கே அவர்கள் சொல்லியது: உள்ளேன் ஐயா என்றால் வகுப்புக்கு வந்து கவனமகப் படிக்கிறேன் எனப் பொருள் ஆசானே!

    அடுத்த வகுப்புக்காகக் காத்திருக்கிறேன்! ///

    ஆகா, தெரியாமல் சொல்லிவிட்டேனே..உள்ளேன் அய்யாவிற்கு இப்படியும் ஒரு அர்த்தம் உள்ளதா?:-)))

    நீங்கள் படிப்பீர்கள் என்று தெரிந்துதான் நானும் கவனமாகப் பாட்ம் நடத்துகிறேன்!!!!

    ReplyDelete
  14. ///பச்சப்புள்ளே அவர்கள் சொல்லியது: ஐயா,
    நீங்கள் இணைத்துள்ள படங்கள் அனைத்தும் சின்னதாகவே உள்ளன. பெரிதுபடுத்திப் பார்க்க முடியவில்லை. Resize செய்யாமல் முழுப் படத்தையும் இணைக்கவும்.///

    எந்தப் படமென்று பார்த்து மறுபடியும்
    வலையேற்றி விடுகிறேன்
    ஒரு நாள் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  15. ///சென்ஷி அவர்கள் சொல்லியது: சனி, ஞாயிறு விடுமுறையானதால் மிச்ச பாடத்தையும் படித்து விட்டேன்.

    நன்றி..///

    ஆகா, அதனால்தானே முதல் பெஞ்சில் உட்காரவைத்திருக்கிறேன்:-))))

    ReplyDelete
  16. // மணிகண்டன் அவர்கள் சொல்லியது:
    காடு வெட்டிப் போட்டு
    கடிய நிலந் திருத்தி
    வீடு கட்டிக் கொண்டிருக்கும்
    வேள்வணிகர் வீடுகட்கு
    அன்றைக்கு வந்த
    அம்மா லக்குமியே
    என்றைக்கும் நீங்காதிரு!///

    நல்ல பாட்டு!
    எங்க ஊர்பக்கம் பல
    வீடுகள்ல எழுதி மாட்டி வைத்திருப்பார்கள்!

    பாடலை எழுதியது யாரென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

    ReplyDelete
  17. /// மதுரையம்பதி அவர்கள் சொல்லியது: பாடம் செய்து வருகிறேன் (இன்னும் 25 வருடங்கள் பிடிக்கும் மிச்சம் மனனமாக...ஹிஹிஹி). ///

    அதுவரைக்கும் நான் இருக்கணும்ல!:-))))

    ReplyDelete
  18. //நல்ல பாட்டு!
    எங்க ஊர்பக்கம் பல
    வீடுகள்ல எழுதி மாட்டி வைத்திருப்பார்கள்!
    //

    இந்த பாட்டை வீட்டில அடிக்கடி சொல்வாங்க.அதனால் பாட்டு தான் ஞாபகமிருக்கு. பாடியவர் பேரு 'முத்தப்பர்'னு நினைக்கிறேன்.சரியா தெரியலை.

    ReplyDelete
  19. /// மணீகண்டன் அவர்கள் சொல்லியது: இந்த பாட்டை வீட்டில அடிக்கடி சொல்வாங்க.அதனால் பாட்டு தான் ஞாபகமிருக்கு. பாடியவர் பேரு 'முத்தப்பர்'னு நினைக்கிறேன்.சரியா தெரியலை.///

    சரிதான் நண்பரே! என்ன தயக்கம்?
    பாடுவார் முத்தப்பர் - பெரிய கவிஞர்
    கீழச்செவல்பட்டிக்காரர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்

    ReplyDelete
  20. //அன்புள்ள மான்விழியே அல்லது அன்புள்ள மன்னவனே,
    அன்புள்ள நண்பனே என்றெல்லாம் கடிதம் எழுதும்
    வழக்கம் உலகத்தில் உள்ளது என்பது எனக்குப் பதினான்கு
    வயதிற்குமேல்தான் தெரிந்தது//

    ஹிஹி..எங்களுக்கெல்லாம் 8 வயசுலயே தெரிஞ்சிடுச்சு!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com