நீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்!!!
எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும்?
காலை உணவு :
🍚 காலை உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். அப்போது தான் எளிதாக செரிமானம் ஆகும். 10 மணிக்கு மேல் காலை உணவை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
🍚 காலை உணவு என்பது, அந்த நாளைத் தொடங்குவதற்கான சக்தியைத் தரக்கூடியது. காலை உணவு, மூளைக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. உடலின் இயக்கத்துக்கு உதவுகிறது.
🍚 அவசரமாகக் கிளம்பும் சூழலில், காலை உணவைப் பலரும் தவிர்ப்பார்கள். இப்படித் தவிர்ப்பதால், அவர்களுக்கு தலைவலி, செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
🍚 காலை உணவைத் தவிர்ப்பவர்கள், மதிய உணவை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். இதனால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
🍚 காலை உணவில் இருக்க வேண்டிய உணவு வகைகள் தோசை, சப்பாத்தி, பொங்கல், காய்கறி உப்புமா, பூரி.
மிட் மார்னிங் :
🍚 காலை மற்றும் மதிய உணவு வேளைக்கு நடுவில் உள்ள மிட்மார்னிங் நேரமான 10:45 முதல் 11:30 மணி நேரமாகும். இந்த நேரத்தில் பழச்சாறுகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
🍚 டீ, காபி போன்றவற்றை மதிய உணவு வேளைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகப் பருகலாம்.
மதிய உணவு :
🍚 மதிய உணவை 12 மணி முதல் 1.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். அப்போது தான் எளிதாக செரிமானம் ஆகும். 3 மணிக்கு மேல் மதிய உணவை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
🍚 மதிய உணவுக்கும், காலை உணவுக்கும் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். அப்போது தான் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரியாகப் பராமரிக்கப்படும். இதனால் அதிகப் பசி மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
🍚 சரியான நேரத்துக்குச் சாப்பிட்டால் வாயுக்கோளாறு, நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
🍚 மதிய உணவில் இருக்க வேண்டிய உணவுகள் கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், அசைவம், அரிசி சாதம், சாம்பார், கூட்டு.
மாலை ஸ்நாக்ஸ் :
🍚 மாலையில் 4 முதல் 5 மணிக்குள் ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். ஸ்முத்தீஸ், ஹெல்த்தி ஸ்நாக்ஸ், பழச்சாறுகள், காய்கறி சாலட், தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
இரவு உணவு :
🍚 இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
🍚 இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே சாப்பிட வேண்டும். இல்லையெனில், தொப்பை, உடல்பருமன், செரிமானப் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.
🍚 சாப்பிட்டவுடன் தூங்கினால், உணவின் கலோரிகள் ஆற்றலாக மாறாமல், உடலில் சேர்ந்து உடல்பருமனுக்கு வழிவகுக்கும்.
🍚 இரவு உணவில் இருக்க வேண்டியவை இட்லி, இடியாப்பம், புட்டு, சப்பாத்தி, தோசை வகைகள்.
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
உபயோகமான பகிர்வு. 80 சதவிகிதம் இதை நான் கடைப்பிடித்து வருகிறேன்.
ReplyDeleteGood morning sir very useful information thanks sir vazhga valamudan
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteஉடல் நலத்தைப் பேணும் வகையில்
மிக நேர்த்தியான அட்வைஸ்!
எந்த நேரத்தில் எந்த உணவு நல்லது என்பது தெளிவாக்கப் பட்டிருக்கிறது!
சூப்பர் பதிவு!
////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteஉபயோகமான பகிர்வு. 80 சதவிகிதம் இதை நான் கடைப்பிடித்து வருகிறேன்.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very useful information thanks sir vazhga valamudan/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!
//Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
உடல் நலத்தைப் பேணும் வகையில்
மிக நேர்த்தியான அட்வைஸ்!
எந்த நேரத்தில் எந்த உணவு நல்லது என்பது தெளிவாக்கப் பட்டிருக்கிறது!
சூப்பர் பதிவு!////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!