உங்கள் ஜாதகப் பலன்!!!
தங்கள் ஜாதகப் பலனை அறிந்து கொள்வதில் யாருக்குமே அதீத விருப்பம் இருக்கும்.
ஒரு முறை என் நண்பர் ஒருவர், தன் நெருங்கிய உறவினரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டுவந்தார். வந்தவர், பிரச்சினை என்ன என்பதைச் சொல்லாமல், “இந்த ஜாதகருக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. ஜாதகத்தை வைத்து அது என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.
பொதுவாக மாந்தி அமர்ந்திருக்கும் இடத்தை வைத்து பிரச்சினையைக் கண்டு பிடித்து விடலாம்.
ஜாதகத்தைப் பார்த்தேன்.
ஐந்தாம் இடத்தில் மாந்தி. உடன் ஆறாம் வீட்டுக்காரனும் அங்கே உள்ளான்.
ஐந்தாம் வீட்டில் மாந்தி இருந்தால் மனப்போராட்டம். உடன் ஆறாம் வீட்டுக்காரனும் சேர்ந்திருந்தால், அது மன நோயாக மாறிவிடும்.
உடனே நான் சொன்னேன்: “ஜாதகன் மனநோயாளி ! (Mentally retarded) சரியா?”
வந்தவர் அதிரிந்து போய் விட்டார்.“பொட்டில் அடித்தது போல, எப்படி சரியாகச் சொன்னீர்கள்?” என்று கேட்டார்
”ஜாதகம் அதைத்தான் சொல்கிறது” என்றேன்.
அதேபோல இன்னொரு முறை நண்பர் ஒருவர் வந்தார். “வியாபாரத்தில் பிரச்சினை. அது எப்போது தீரும் என்று பாருங்கள்”
என்றார்
வியாபாரத்தில் பிரச்சினை என்றால், பணத்தை வைத்துத்தான் பெரும்பாலும் பிரச்சினைகள் இருக்கும்.
ஜாதகத்தை வாங்கிப் பார்த்தேன். சிம்ம லக்கின ஜாதகர். இரண்டாம் வீட்டில் மாந்தி. குரு மகா திசையில் புதன் புத்தி. மாந்தி அமர்ந்த இடத்து நாதனின் புத்தி. அது சிக்கலாக இருக்கும். தசா புத்தி எப்போது துவங்கியது என்று பார்த்துவிட்டுச் சொன்னேன்.
”உங்களுக்கு பத்து மாதங்களாக கடும் பணப் பிரச்சினை? சரியா? “ என்று கேட்டேன்.
அவர் அசந்து போய்ச் சொன்னார். “சரிதான். சரக்குக் கொடுத்த இடத்தில் எல்லாம் பணம் வரவில்லை. அது எப்போது சரியாகும்?” என்றார். அந்த தசாபுத்திக் காலம் 27 மாதங்கள். 17 மாதங்கள் பாக்கி இருந்தது. அதற்குப் பிறகுதான் தீரும். அதைச் சொல்லி அவரை அனுப்பி வைத்தேன். அதன் படியே நடந்தது.
-----------------------------------------------------------------------
அதுபோல உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் கேளுங்கள். ஒருவர் ஒரு கேள்விதான் கேட்கலாம்.
அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. என்ன நிபந்தனை?
அது சஸ்பென்ஸ்.
என்ன சார் சஸ்பென்ஸில் விடுகிறீர்கள்?
நான் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதுவதில் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு.. இதுவரை 140 சிறுகதைகள் எழுதியுள்ளேன். சஸ்பென்ஸ் இல்லாமல் கதையில் சுவாரசியம் ஏது?
விருப்பம் இருந்தால் எழுதுங்கள். நிபந்தனை சாதாரணமானதுதான்.
spvrsubbiah@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்!
Subject boxல் ஜாதகப்பலன் என்று மறக்காமல் குறிப்பிடுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com