மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.2.18

வெந்தய டீ!

வெந்தய டீ!

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.

அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.

அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என நீங்கல் செய்திருப்பீர்கள். வெந்தய தே நீரை குடித்திருக்கிறீர்களா? அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும், அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.

தயாரிக்கும் முறை :

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.

வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :

குடலை சுத்தமாக்க :

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.

ரத்த சோகை :

இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வெந்தய டீ அருமருந்தாகிறது.

மாதவிடாய் வலிக்கு :

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

டீன் ஏஜ் பெண்கள் :

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

தாய்ப்பால் அதிகரிக்க :

முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது. தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.

கொழுப்பு கரைய :கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.

மலச்சிக்கல் :

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

உடல் எடைக்கு :

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.

இதய நோய்கள் :

தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.

அசிடிட்டி :

அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது. இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.

சர்க்கரை வியாதி :

தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம். அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

கூந்தல் வளர்ச்சி :

இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.

பித்த நோய்கள் :

நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

அனைவருக்கும் பகிருங்கள்
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. வெந்தய டீ என்றதும் நான் வேறு மாதிரி நினைத்தேன்.

    :))

    ReplyDelete
  2. Good morning sir very useful tips for healthy life thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. தங்க பஸ்ப குணம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    நல்ல பயனுள்ள பதிவு!
    ஆனால், எவ்வளவு தண்ணீர்/வெந்தயம்...விகிதம் ஒன்றும் இல்லையே ஐயா!
    இருந்தால் தெரிவிக்கவும்! நன்றி
    வாத்தியாரையா!

    ReplyDelete
  5. Sir when should we drink this vendaya tea

    ReplyDelete
  6. /////Blogger ஸ்ரீராம். said...
    வெந்தய டீ என்றதும் நான் வேறு மாதிரி நினைத்தேன்.:))/////

    நல்லது. இப்போது தெரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful tips for healthy life thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  8. ////Blogger SELVARAJ said...
    தங்க பஸ்ப குணம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்//////

    இருக்கலாம், உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நல்ல பயனுள்ள பதிவு!
    ஆனால், எவ்வளவு தண்ணீர்/வெந்தயம்...விகிதம் ஒன்றும் இல்லையே ஐயா!
    இருந்தால் தெரிவிக்கவும்! நன்றி
    வாத்தியாரையா!//////

    200எம்.எல் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் வெந்தயம் என்ற அளவில் எடுத்துக்கொள்ளுங்கள் வரதராஜன். நன்றி!!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் குருவே!
      தங்களின் அன்பான பதிலுக்கு
      நன்றி!
      அந்த விகிதத்தில் வெந்தயம் டீ தயார் செய்கிறேன்!

      Delete
  10. /////Blogger Shruthi Ramanath said...
    Sir when should we drink this vendaya tea/////

    காலையில் வெறும் வயிற்றில் குடித்தீர்கள் என்றால் நிறைந்த பலன் இருக்கும் சகோதரி!!!

    ReplyDelete
  11. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    தங்களின் அன்பான பதிலுக்கு
    நன்றி!
    அந்த விகிதத்தில் வெந்தயம் டீ தயார் செய்கிறேன்!/////

    நல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com