மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.10.17

Cinema: இளையராஜா: கோடை காலம் எப்போது குளிர்ச்சியாகும்?


Cinema: இளையராஜா: கோடை காலம் எப்போது குளிர்ச்சியாகும்?

சொல்லாத காதலின் வலியை மிக அற்புதமாகச் சொல்லிய பாடல் இது.

ஜெயச்சந்திரன் மற்றும் சுசீலா... ஆண் பெண் குரல்கள் அழகாக இணைந்து வரும் பாட்டு.

ஒருவர் விட்ட இடத்தில் மற்றொருவர் தொடங்க, அட... அட... அருமை.

பாடல் முடியும் பொழுது விழியோரமாய்த் துளிர்க்கும் இரு சொட்டு கண்ணீர் தான் இந்த பாடலின் அற்புதம்...

1980களில் நடிகை ராதிகாவுக்குப் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். நிறையப் படங்கள் இவரை மையப்படுத்தியே
வந்திருந்தன.

குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் வாயால் கலையரசி என்ற பட்டத்தையும் பெற்றதோடு அவரின் வசனத்தில் மிளிர்ந்த பல

படங்களில் நடித்திருக்கின்றார் ராதிகா.

இந்தப் பாடல் கவிஞர் வாலி அவர்கள் கலையுலகில் 25 ஆம் ஆண்டு பூர்த்தியான போது எழுதிய பாடல்.

அவர் தான், தன் முதல் பாடலைப் பாடிய சுசீலா இதையும் பாடவேண்டும் என்று சொல்ல, உடனே இசைஞானி அவர்கள் அதை

நிறைவேற்ற, நமக்குக் கிடைத்த இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். இதோ உங்களுக்காக...

பாடல்:
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்.
படம்: நானே ராஜா... நானே மந்திரி (1985).
இசை: இளையராஜா.
பாடலாசிரியர்: வாலி.
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & பி. சுசீலா.

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

(மயங்கினேன்) 

உறக்கம் இல்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கம் இல்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடை காலமும் நீ வந்தால் வசந்தம் ஆகலாம்
கொதித்திருக்கும் கோடை காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

என்னாளும் தனிமையே எனது நிலமையோ
வந்த கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ

(மயங்கினேன்) 

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ

மணவறையில் நீயும் நானும் தான்
பூச்சூடும் நாளும் தோன்றுமோ

பொன் ராகம் பொழுது தான் இனிய பொழுது தான்
உந்தன் உறவு தான் உறவு
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே
===========================================
படித்ததில் பிடித்தது: பகிர்ந்துள்ளேன்
அன்புடன்
 வாத்தியார்

பாடலின் காணொளி:



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=========================================================

13 comments:

  1. Good morning sir very excellent song by Vaali sir and illayaraja sir thanks for posting sir vazhga valamudan

    ReplyDelete

  2. மிக நன்று! வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
  3. கோடை காலம் எப்போது குளிர்ச்சியாகும்? தென்றல் வந்து தீண்டும் பொழுது...

    ReplyDelete
  4. Good morning iyya nice song thanks for sharing this video

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... Nice to share....

    Have a great day...

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. தமிழினத்துக்கு ஒரு வள்ளுவர்தான், ஒரு அவ்வைதான், ஒரு கம்பர்தான், ஒரு இளங்கோதான், ஒரு அருள்மொழி வர்மன் தான், ஒரு பிரபாகரன் தான், ஒரு காமராசர்தான், ஒரே ஒரு இளையராஜாதான்.

    ReplyDelete
  7. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent song by Vaali sir and illayaraja sir thanks for posting sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  8. ////Blogger ponnusamy gowda said..
    மிக நன்று! வாழ்க வளமுடன்!!!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!!!!

    ReplyDelete
  9. /////Blogger SELVARAJ said...
    கோடை காலம் எப்போது குளிர்ச்சியாகும்? தென்றல் வந்து தீண்டும் பொழுது.../////

    தென்றல் எல்லோரையும்தான் தீண்டுகிறது. ஆனால் மகிழ்ச்சியடைவதற்கு சில காரணங்கள், சில சமயங்களில் இருக்கும் அவற்றில் ஒன்று இது போன்ற பாடலைக் கேட்கும்போது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
    Replies
    1. தென்றல் வந்து தீண்டும் பொழுது... என்பதும் இளையராஜா பாடலே...

      Delete
  10. /////Blogger Subathra Suba said...
    Good morning iyya nice song thanks for sharing this video////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  11. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice to share....
    Have a great day...
    Thanks & Regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  12. //////Blogger thozhar pandian said...
    தமிழினத்துக்கு ஒரு வள்ளுவர்தான், ஒரு அவ்வைதான், ஒரு கம்பர்தான், ஒரு இளங்கோதான், ஒரு அருள்மொழி வர்மன் தான், ஒரு பிரபாகரன் தான், ஒரு காமராசர்தான், ஒரே ஒரு இளையராஜாதான்.////

    உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி பாண்டியரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com