கவியரசரின் பண்பும் பணிவும்!
தொலைக்காட்சி நம் நாட்டிற்குள் புகாத பொற்காலம் அது..!
.
அகில இந்திய வானொலி அத்தனை வீடுகளிலும் அரசாட்சி செய்து வந்த நேரம் .
.
அந்தக் காலத்தில்தான் , அநத கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
.
பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ...அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் .
.
கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..!
ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
.
இதோ ..அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது :
"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை
அழைத்திருந்தார்கள்.
நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில்
எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து
நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து
என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”
.
அவ்வளவுதான் ..!
அடுக்கடுக்காக போன் கால்கள் ..!
யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!
.
“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம். நீங்கள்
எடுத்துச் சொன்ன பிறகுதான் , இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது
தெரிகிறது.. அற்புதமாக பேசினீர்கள்..!”
.
இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க , உச்சி குளிர்ந்து போனது
அந்தப் பெண்ணுக்கு ..!
மறுபடியும் ஒரு போன் கால் !
=
“இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண்.
மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."
.
பதறிப் போனார் அந்தப் பெண் . அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!
உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள , போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க ஸார் ..”
.
தொடர்ந்து கண்ணதாசன் :
"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு
தெளிவு படுத்த விரும்புகிறேன்.
பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் , உங்களைப்போன்ற
பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.
ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் , பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும்
சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது.
அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை
எளிமைப்படுத்தி தருகிறேன்.
உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் , கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை
எடுத்துக்காட்ட
'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு' என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?
ஆனால் அதையே நான்
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"
என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?"
.
ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் , இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த
கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் : “மன்னித்துக் கொள்ளுங்கள் ஸார் ..”
.
# இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை :
“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது".
.
இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் ...அவர் பேச்சில் இருந்த எளிமை ...உண்மை..!
.
அடுத்த காரணம் .. திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் , இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு
நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!
.
ஆம் ..!
.
“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்”
.
வாழ்க வளமுடன்..!
Whatsappல் படித்ததில், பிடித்து பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன்......
அன்புடன்
வாத்தியார்
===========================
Good morning sir what an attitude of kannadasan sir, even he is simma lagna? Thanks sir vazhga valamudan
ReplyDeleteGood morning sir,
ReplyDeleteNice msg. Thanks for sharing sir.
நான் எண்ன சொல்ல, இறுதியில் உள்ள நான்கு வரி பாடலில் தீர்ப்பு உள்ளதே.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning.... Every great poet...
Thanks for sharing...
Have great day.
With regards,
Ravi-avn
ஐயா வணக்கம்
ReplyDeleteகவியரசு கவியரசு தான் ஐயா
கண்ணன்
கண்ணதாசன் தான் எழுதிய பாடல்களுக்கு இந்த சங்க இலக்கிய பாடல் தான் மூலம் என்று எழுதி அந்த பாடல்களுக்கு உரிய மரியாதையை வழங்கி இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. எவ்வாறு வெளியிட்டிருக்கலாம். இசைத்தட்டிலோ, திரைப்படத்தில் பாடல்கள் இன்னார் என்று குறிப்பிடும் இடத்திலோ, இந்த பாடலுக்கு ஆதாரம் இந்த இலக்கிய பாடல் என்று கூறியிருந்தால் பிரச்சனையே இருந்திருக்காது. கண்ணதாசன் தானே இவற்றை சுயமாக சிந்தித்ததாக பலர் கருத்து கொண்டிருந்தாலும், அவர் மக்களை ஏமாற்றியதாக நான் நினைக்கவில்லை. இன்றிருப்பது போல் வலைத்தளங்கள் மூலம் கருத்துகளை பகிர்ந்து கொள்ள அப்போது வழியில்லை. ஆனால் தமிழ் இலக்கியங்களை இன்றைய காலத்தை விட அதிக பேர் படித்த காலமது. அதனால் கண்ணதாசன் இவை தனது சுய சிந்தனை என்று ஏமாற்ற நினைத்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. தமிழ் இலக்கிய சிந்தனைகளை எளிய தமிழில் மக்கள் புரிந்து கொள்ள அவர் பயன்படுத்தியதாகவே தோன்றுகிறது.
ReplyDeleteஇருந்தாலும் அவரை விளாசியவரை அழைத்து தனது நிலையை விளக்கிய கண்ணியம் அவரை பாராட்ட வைக்கிறது.
//////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir what an attitude of kannadasan sir, even he is simma lagna? Thanks sir vazhga valamudan//////
நல்லது. நன்றி சண்முககசுந்தரம்!!!!
/////Blogger gokila srinivasan said...
ReplyDeleteGood morning sir,
Nice msg. Thanks for sharing sir./////
நல்லது. நன்றி சகோதரி!!!!
/////Blogger SELVARAJ said...
ReplyDeleteநான் எண்ன சொல்ல, இறுதியில் உள்ள நான்கு வரி பாடலில் தீர்ப்பு உள்ளதே./////
நல்லது. நன்றி செல்வராஜ்!!!!
ReplyDelete/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning.... Every great poet...
Thanks for sharing...
Have great day.
With regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
////Blogger Kannan L R said...
ReplyDeleteஐயா வணக்கம்
கவியரசு கவியரசு தான் ஐயா
கண்ணன் /////
நல்லது. நன்றி கண்ணன்!!!!!
//////Blogger thozhar pandian said...
ReplyDeleteகண்ணதாசன் தான் எழுதிய பாடல்களுக்கு இந்த சங்க இலக்கிய பாடல் தான் மூலம் என்று எழுதி அந்த பாடல்களுக்கு உரிய மரியாதையை வழங்கி இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. எவ்வாறு வெளியிட்டிருக்கலாம். இசைத்தட்டிலோ, திரைப்படத்தில் பாடல்கள் இன்னார் என்று குறிப்பிடும் இடத்திலோ, இந்த பாடலுக்கு ஆதாரம் இந்த இலக்கிய பாடல் என்று கூறியிருந்தால் பிரச்சனையே இருந்திருக்காது. கண்ணதாசன் தானே இவற்றை சுயமாக சிந்தித்ததாக பலர் கருத்து கொண்டிருந்தாலும், அவர் மக்களை ஏமாற்றியதாக நான் நினைக்கவில்லை. இன்றிருப்பது போல் வலைத்தளங்கள் மூலம் கருத்துகளை பகிர்ந்து கொள்ள அப்போது வழியில்லை. ஆனால் தமிழ் இலக்கியங்களை இன்றைய காலத்தை விட அதிக பேர் படித்த காலமது. அதனால் கண்ணதாசன் இவை தனது சுய சிந்தனை என்று ஏமாற்ற நினைத்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. தமிழ் இலக்கிய சிந்தனைகளை எளிய தமிழில் மக்கள் புரிந்து கொள்ள அவர் பயன்படுத்தியதாகவே தோன்றுகிறது.
இருந்தாலும் அவரை விளாசியவரை அழைத்து தனது நிலையை விளக்கிய கண்ணியம் அவரை பாராட்ட வைக்கிறது.//////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி பாண்டியரே!!!!