வாருங்கள் சவால்களை சமாளிப்போம்!!!!!
பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது !
ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது !
பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன !
மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன !
ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன !
சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன !
தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன !
ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன !
இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால் வாழ முடியாதோ ? ! ?
எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை . . .
அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய் !
சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !
எனது அஹம்பாவங்களை தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத் தந்த என் கஷ்டங்களுக்கு மனதார நன்றி !
என்னை அவமரியாதை செய்து எனக்கு வைராக்கியம் வரக்காரணமான என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு மனதார நன்றி !
எனக்கு வலியைத்தந்து அடுத்தவரின் வலியை எனக்குப் புரியவைத்த புரியாத நோய்களுக்கு மனதார நன்றி !
எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த, என் பலவீனத்திற்கும்,உடலுக்கும் மனதார நன்றி !
என்னை ஆழமாக சிந்திக்கவைக்க எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த என்னுடைய பிரச்சனைகளுக்கு மனதார நன்றி !
என் பலத்தை நான் உணர்ந்து என் வாழ்வை நானே நடத்தக் காரணமான என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு மனதார நன்றி !
என் உடல் உறுப்புகளின் மதிப்பை எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த உடல் ஊனமுற்றோருக்கு என் மனதார நன்றி !
மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை எனக்குத் தெளிவாகப் புரியவைத்த மரணத்திற்கு மனதார நன்றி !
என் பெற்றோரின் பெருமையை, என் புத்தியில் அழுத்தமாய் பதித்த அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு மனதார நன்றி !
ஒரு சிரிப்பினால் உலகையே வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச் சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு மனதார நன்றி !
பணத்தினால் மட்டுமே வாழ்வில் எல்லா சுகமும் கிடைத்துவிடாது என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத பணக்காரர்களுக்கு மனதார நன்றி !
பக்தி என்பது வெளிவேஷமல்ல என்பதை எனக்குப் பயங்கரமாய் புரியவைத்த வெளிவேஷதாரிகளுக்கு எப்பொழுதும் மனதார நன்றி !
நாமஜபத்தின் அற்புத மஹிமையை எனக்குச் சரியாகப் புரியவைத்த என்னுடைய பாபங்களுக்கு என்றுமே மனதார நன்றி !
ஒவ்வொரு முறையும் மனிதரிடம் ஏமாந்துக் கொண்டிருந்த என்னை, அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய என் இறைவனுக்கு மனதார நன்றி !
இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் ! இந்த வாழ்நாள் போதாது
ஆகவே வருகின்ற சவால்களை சமாளித்து நாம் வாழ வேண்டும்!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir very useful information about self confidence, right post at a valuable time thanks sir vazhga valamudan
ReplyDeleteமேலைத்தேசங்களில் பணம் கொடுத்து அல்லது வைத்தியரின் பரிந்துரையில் மன நல ஆலோசனை(counseling) அமர்வுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் இதுபோன்ற நல்லாசான்களை அல்லது நல்ல கருத்துக்களை தினசரி வாழ்வில் நம்மவர்கள் கொண்டிருப்பார்களா என்றால், சவால்தான் !!!
ReplyDeleteVery very nice.
ReplyDeleteவணக்கம் ஐயா,அருமையான மனவள பதிவு.நன்றி.
ReplyDeleteGood Morning sir,
ReplyDeleteSuper very super sir.
Thank U
Respected Sir,
ReplyDeleteHappy morning... Wonderful article....
Thanks for sharing....
Have a great day.
With regards,
Ravi-avn
அருமை வாத்தியார் ஐயா.
ReplyDeleteGood afternoon sir,
ReplyDeletePadithavudan manan nimmathi adhainthadhu, vaalkaiyai poradi vaalavendum yendru thoondriyadhu, kadavul yendrum thunai iruppar. All the lines are very nice & excellent. Thank you very much sir for sharing.
/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very useful information about self confidence, right post at a valuable time thanks sir vazhga valamudan/////
நல்லது. உங்களின் அதிகாலை பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!
/////Blogger Thanga Mouly said...
ReplyDeleteமேலைத்தேசங்களில் பணம் கொடுத்து அல்லது வைத்தியரின் பரிந்துரையில் மன நல ஆலோசனை(counseling) அமர்வுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் இதுபோன்ற நல்லாசான்களை அல்லது நல்ல கருத்துக்களை தினசரி வாழ்வில் நம்மவர்கள் கொண்டிருப்பார்களா என்றால், சவால்தான் !!!//////
இல்லை! தற்சமயம் நிலைமை மாறிவிட்டது. சுகி சிவம், பேராசிரியர் அருள் பிரகாசம் போன்ற பல பேச்சாளர்கள் மனவளக் கலைப் பாடத்தை மேடை தோறும் போதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery very nice./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
ReplyDelete/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,அருமையான மனவள பதிவு.நன்றி./////
நல்லது. நன்றி நண்பரே!!!!
////Blogger VM. Soosai Antony said...
ReplyDeleteGood Morning sir,
Super very super sir.
Thank U/////
நல்லது. நன்றி நண்பரே!!!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Wonderful article....
Thanks for sharing....
Have a great day.
With regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!
/////Blogger SELVARAJ said...
ReplyDeleteஅருமை வாத்தியார் ஐயா.///
நல்லது. நன்றி செல்வராஜ்!!!!
/////Blogger gokila srinivasan said...
ReplyDeleteGood afternoon sir,
Padithavudan manan nimmathi adhainthadhu, vaalkaiyai poradi vaalavendum yendru thoondriyadhu, kadavul yendrum thunai iruppar. All the lines are very nice & excellent. Thank you very much sir for sharing./////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!
AYYA Vanakkam. Thank God for giving a guru like you also sir. Very nice. Anbudan kittuswamy
ReplyDelete//////Blogger kittuswamy palaniappan said...
ReplyDeleteAYYA Vanakkam. Thank God for giving a guru like you also sir. Very nice. Anbudan kittuswamy////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிட்டுசாமி!!!!