குருப் பெயர்ச்சிப் பலன்கள்
குருப்பெயர்ச்சி அன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்!
குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா...என்று பார்க்க வேண்டும்!!!
உதாரணமாக ஒவ்வொருவருக்கும் திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதையே முதலில் பார்ப்போம்.
2017-ம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது ஆவணி மாதம் 17ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 02.09.2017 சுக்ல ஏகாதசியும் சனிக்கிழமையும் பூராட நக்ஷத்ரமும் சௌபாக்கியம் நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.20க்கு - காலை 9.21க்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்குப் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
-----------------------------------
வணங்க வேண்டிய ஸ்தலங்களைக் கீழே கொடுத்துள்ளேன் .
பலன்கள எங்கே என்கிறீர்களா?
பலன்கள் ஏ4 சைஸ் தாளில் 10 பக்கங்கள் உள்ளன. அவற்றை இங்கே பதிவிட்டால் அனுமார் வால் போல அவை நீண்டதாக இருக்கும். உண்மையில் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள். எனக்கு மின்னஞ்சலில் எழுதுங்கள். நீங்கள் படிக்கும் படியாக பி.டி.எஃப் வடிவத்தில் உங்களுக்கு உடனே அனுப்பி வைக்கிறேன். மறக்காமல் Subject Boxல் குருப் பெயர்ச்சி (Transit Jupiter) என்று குறிப்பிடுங்கள். மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
நிறைய அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தத் திடீர்ப் பதிவு!!!!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------
குருப்பெயர்ச்சி அன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்....
#திருச்செந்தூர்
ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாகக் கருதப்படும் திருச்செந்தூர் குரு பகவானின் பரிகாரத்துக்கு ஏற்ற தலமாகும். கடலோரத்தில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானையும், குரு பகவானையும் வழிபட்டு பரிகாரம் செய்வது நல்ல பலனை அளிக்கும்.
#தென்குடி_திட்டை
இந்த குருஸ்தலம் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சந்நதியில் காட்சி அளிக்கிறார்.
#பட்டமங்கலம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த கோலத்தோடு காட்சி தருகிறார்.
#திருவாலிதாயம்
சென்னையை அடுத்த பாடி, முகப்பேறு அருகில் உள்ளது. இங்குள்ள குருபகவான் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார்.
#ஆலங்குடி
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் தெற்கு நோக்கி வீற்றிருந்து தனி சன்னிதியில் குரு பகவான் அருள்பாலிக்கிறார்.
#குருவித்துறை
மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ளது. இங்குள்ள பெருமாள் கோவிலில் சிறப்பாக காட்சி தருகிறார் குருபகவான்.
#தக்கோலம்
அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஜலநாதீசுவரர் கோயில். இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப்படுகிறார்.
#மயிலாடுதுறை
இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோயிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிர்வத்தியாகும்.
#அயப்பாக்கம்
சென்னை, அயப்பாக்கத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தியாகும். குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம்.
#கும்பகோணம்
கும்பகோணத்தில், கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.
#குச்சனூர்
தேனி மாவட்டம் குச்சனூரில் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
#திருவொற்றியூர்
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல் அமைந்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களிலும் குருபகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு வீற்றிருப்பார். அது மட்டுமில்லாமல் தனி சந்நதியில் தட்சிணாமூர்த்தியாகவும் இடம் பெற்றிருப்பார். : குரு எனப்படும் வியாழ பகவான் நவக்ரஹங்களில் ஒருவர். தேவர்களின் குரு. சுமாராக வருஷத்திற்கு ஒரு முறை zodiac எனப்படும் ராசி மண்டலத்தில் மாற்றம் அடைவார். தக்ஷிணாமூர்த்தி தெற்கே பார்த்து அமர்நதுள்ள ஞான ஸ்வரூபி. பரமேஷ்வரனின் அம்சம்
-------------------------------------------------------------------------------
Good morning sir, thanks for posting transit of Jupiter
ReplyDeleteayya oru doubt. innum 12 yearsla guru again same positionku varuvar. appavum avarda balan ithuva than irukkuma? or differenta irukkuma? priority rankingla kocharatha vida janana jathagathukku than power kudanu solli koduthatha nyabagam. enakum oru copy kidaikuma???? mail id : vino2420@gmail.com
ReplyDeleteகுரு வாழ்க,குருவே துணை.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Thanks for your effort and info.
Have a great day.
Kind regards,
Ravi-avn
////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir, thanks for posting transit of Jupiter////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!
/////Blogger Stylish Thamizhan said...
ReplyDeleteayya oru doubt. innum 12 yearsla guru again same positionku varuvar. appavum avarda balan ithuva than irukkuma? or differenta irukkuma? priority rankingla kocharatha vida janana jathagathukku than power kudanu solli koduthatha nyabagam. enakum oru copy kidaikuma???? mail id : vino2420@gmail.com/////
இது எல்லா வயதினருக்கும் ஆன பொதுப்பலன். மற்றபடி உங்கள் வயதை வைத்தும், நடக்கும் தசா புத்திகளை வைத்தும் அவருடைய சுற்றின் எண்ணிக்கையை வைத்தும் பலன்கள் மாறுபடும்! அர்த்தமானதா சாமி?
///Blogger SELVARAJ said...
ReplyDeleteகுரு வாழ்க,குருவே துணை.////
நல்லது. நன்றி நண்பரே!!!
ReplyDelete////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Thanks for your effort and info.
Have a great day.
Kind regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!
Good evening sir,
ReplyDeleteThanks for posting guru peyarchi for our request sir.
////Blogger gokila srinivasan said...
ReplyDeleteGood evening sir,
Thanks for posting guru peyarchi for our request sir.////
ஆமாம். மாணவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவது வாத்தியாரின் கடமையல்லவா!!! நன்றி சகோதரி!!!
Thank u sir
ReplyDelete