Astrology: ஜோதிடம் :அவயோகங்கள் - பகுதி 1
யோகங்களைப் பற்றிய பாடம்!!!
ஆங்கில வினைச்சொற்களின் முன்பாக ‘dis' என்னும் சொல்லைச் சேர்த்தால், அது, அந்த வினைச் சொல்லின் பொருளை எதிர் மறையாக மாற்றிவிடும்.
உதாரணம்:
appear - disappear,
allow - disallow,
arm - disarm,
connect - disconnect,
continue - discontinue
If you add the suffix 'dis' in front of a verb it will reverses the meaning of the verb! example: disappear, disallow, disarm, disconnect, discontinue
அதுபோல தமிழில் ‘அவ’ என்னும் குறியை ஒரு சொல்லின் முன் சேர்த்தால், அதுவும் பொருளை எதிர்மறையாக்கிவிடும்
உதாரணம்
லட்சணம் - அவலட்சணம்
மானம் - அவமானம்
மதிப்பு - அவமதிப்பு
யோகம் - அவயோகம்
-----------------------------------------------------------------
ஆகவே ஒருவரது ஜாதகத்தில் யோகங்கள் இருப்பதைப் போலவே அவயோகங்களும் இருக்கும்.
இனி வரப்போவது, அவயோகங்களைப் பற்றிய பாடம். சார்’ எனக்கு இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்.
அதுபோல தங்கள் ஜாதகத்தை வைத்து, 30 வரிகளில் மின்னஞ்சல் அனுப்பி, கிரகங்களின் நிலையை வர்ணித்து, சார்’ எனக்கு
இருக்கிறதா பார்த்துச் சொல்லுங்கள் என்று யாரும் கேட்க வேண்டாம்.
பாடங்கள் எளிமையாக இருக்கும். உங்களுக்கு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்
4 வயதுக் குழந்தை என்றால் நாம் குளிக்க வைக்கலாம். 25 வயது ஆசாமி, அவனாகத்தானே குளிக்க வேண்டும்.
நீங்கள் படித்துக் கொண்டிருப்பது மேல் நிலைக் கல்வி. ஆகவே சோப்பு, துண்டோடு யாரும் வரவேண்டாம்:-))))
---------------------------------------------------------------
அவயோகம் 1
லக்கின அதிபதி 6, 8, 12ஆம் வீடுகளில் இருந்தால் அது அவயோகம்
பலன்: ஜாதகன் பலருக்கும் தெரியாதவனாக இருப்பான். அறியப்படாதவனாக இருப்பான். அவன் வீட்டிலேயே அவனுக்கு முக்கியத்துவம் இருக்காது. மற்றவர்கள் அவனை மதிக்க மாட்டார்கள். பல இடங்களில் அவமானப் பட நேரிடும். தீயவர்களின் கூட்டணியில் சேர நேரிடும். வாழ்க்கையில் ஒரு நிலையான தன்மை இருக்காது. அல்லது கிடைக்காது.
எச்சரிக்கை: இது பொதுப்பலன். சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் இந்தப் பலன்கள் சிலருக்கு இல்லாமல்
இருக்கலாம்.
--------------------------------------------------------------
அவயோகம் 2
மூன்றாம் வீட்டு அதிபதி 6, 8, 12 ஆம் வீடுகளில் குடியேறி இருந்தால் அது இந்த அவயோகத்தைக் குறிக்கும்
பலன்: ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு ஏராளமான எதிரிகள் இருப்பார்கள். அவர்களால் எல்லாத் துன்பங்களையும் எதிர் கொள்ள நேரிடும். இளைய உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் அல்லது அவர்களின் வெறுப்பை வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும்.
உடல்வலிமை, மனதைரியம், செல்வத்தை இழக்க நேரிடும். மறைமுக சேட்டைகளைச் செய்து அல்லது ரகசிய உறவுகளை
ஏற்படுத்திக் கொண்டு அவதிப்பட நேரிடும்
-------------------------------------------------------------
அவயோகங்கள் தொடரும். நிறைய உள்ளன. ஒரேயடியாகக் கொடுத்தால் ஓவர் டோஸாகிவிடும். அதனால் இன்று இரண்டு மாத்திரைகள்!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir, very nice sir thanks sir vazhga valamudan
ReplyDeleteVanakkam iyya,
ReplyDeleteMudhal maathirai Enaku ullathu.. Lagna athipathi 12il
Aanal nashta edum vazhanga patullathu..
Guru bagavan 5il amarnthu lagnathai than paarvayil veithu Ullar.
Nandri,
Bala
Sir, thanks for the Lesson. For Dhanusu Lagnam, Lagnathypathy gets Ucham at 8th House, For Virichigam Lagnam, Lagnathypathy gets Ucham at 3rd House. So those cases cld be exceptional from thr First rule. ThanK you once again Sir.
ReplyDeleteநன்றி. வணக்கம்
ReplyDeleteஇது அவயோகம் பாடம். நன்றாக உள்ளது என்று சொல்லகூடாது.
வாத்தியார் அவர்கள் பாடத்தை நடத்திச் செல்லும் பாணி(method) அருமை. இரத்தினச் சுருக்கம் மற்றும் தெளிவு.
ReplyDeleteAyya vanakkam.Clearly defined information sir thanks a lot
ReplyDeleteGood afternoon sir,
ReplyDeleteThanks for avayogam lesson sir. In astrology, some difference will be there for men and women. Please taught us about that lesson when you have time sir.
மூன்றாம் வீட்டு அதிபதி 6, 8, 12 ஆம் வீடுகளில் குடியேறி இருந்தாலும் 3 ஆம் வீடு சுபகர்த்தாரி யோகத்தில் அமைந்திருந்தால் அவயோகம் உண்டா ஐயா?
ReplyDeleteஅவயோகத்திற்கு பரிகாரமுண்டா?????
ReplyDeleteSir could you tell me about vagram, is any temple for the same. In horoscopes guru uttacham annal vakkram. Do you suggest any temple. Here i remember kamal hasan horoscopes given your book. Same guru vakkram is it so,
ReplyDeletePls post your comment in the feedback.
Thank you guru,
/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir, very nice sir thanks sir vazhga valamudan/////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
ReplyDelete////Blogger bala said...
Vanakkam iyya,
Mudhal maathirai Enaku ullathu.. Lagna athipathi 12il
Aanal nashta edum vazhanga patullathu..
Guru bagavan 5il amarnthu lagnathai than paarvayil veithu Ullar.
Nandri,
Bala/////
கரெக்ட். அதுதான் முக்கியம். புரிந்துணர்விற்கு நன்றி!!!!
/////Blogger KJ said...
ReplyDeleteSir, thanks for the Lesson. For Dhanusu Lagnam, Lagnathypathy gets Ucham at 8th House, For Virichigam Lagnam, Lagnathypathy gets Ucham at 3rd House. So those cases cld be exceptional from thr First rule. ThanK you once again Sir.//////
நல்லது. உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteநன்றி. வணக்கம்
இது அவயோகம் பாடம். நன்றாக உள்ளது என்று சொல்லகூடாது./////
இல்லை அன்பரே!! சொல்வதால் ஒன்றும் தவறில்லை. ஒன்றும் நேர்ந்து விடாது அல்லவா:---))))
/////Blogger Thanga Mouly said...
ReplyDeleteவாத்தியார் அவர்கள் பாடத்தை நடத்திச் செல்லும் பாணி(method) அருமை. இரத்தினச் சுருக்கம் மற்றும் தெளிவு./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!!!!
/////Blogger kittuswamy palaniappan said...
ReplyDeleteAyya vanakkam.Clearly defined information sir thanks a lot/////
நல்லது. நன்றி கிட்டுசாமி!!!
////Blogger gokila srinivasan said...
ReplyDeleteGood afternoon sir,
Thanks for avayogam lesson sir. In astrology, some difference will be there for men and women. Please taught us about that lesson when you have time sir./////
நல்லது. உங்களின் பரிந்துரைக்கு நன்றி நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன் சகோதரி!!
////Blogger karthi keyan said...
ReplyDeleteமூன்றாம் வீட்டு அதிபதி 6, 8, 12 ஆம் வீடுகளில் குடியேறி இருந்தாலும் 3 ஆம் வீடு சுபகர்த்தாரி யோகத்தில் அமைந்திருந்தால் அவயோகம் உண்டா ஐயா?/////
இல்லை அன்பரே!!!
ReplyDelete//////Blogger Sinavar said...
அவயோகத்திற்கு பரிகாரமுண்டா?????/////
செலவில்லாத ப்ரிகாரம் உண்டு சாமி! அதுதான் பிரார்த்தனை!
/////Blogger Kesavaraj & Kalaivani said...
ReplyDeleteSir could you tell me about vagram, is any temple for the same. In horoscopes guru uttacham annal vakkram. Do you suggest any temple. Here i remember kamal hasan horoscopes given your book. Same guru vakkram is it so,
Pls post your comment in the feedback.
Thank you guru,//////
குரு பகவானுக்கு ஆலங்குடி என்னும் ஊரில் உள்ள கோவில்தான் பரிகார ஸ்தலம்! அங்கே சென்று வழிபடலாம்!!!!
3rd Venus in 12th
ReplyDelete12th moon in
3rd house has Guru,Mars.
Now, it form the second avayoga and also another avayoga due to 12th parivartana. Though guru is in 3rd it's 8th house lord too.
So will there be any good things.
///Blogger selvaspk said...
ReplyDelete3rd Venus in 12th
12th moon in
3rd house has Guru,Mars.
Now, it form the second avayoga and also another avayoga due to 12th parivartana. Though guru is in 3rd it's 8th house lord too.
So will there be any good things.////
எல்லா ஜாதகத்திற்கும் நஷ்ட ஈடும் வழங்கப்பெற்றிருக்கும் - இல்லாவிட்டால் அனைவருக்கும் 337 எப்படி வரும் நண்பரே!!! ஆகவே அதையும் பாருங்கள் நண்பரே!!!