மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.6.17

அற்புதமான அறிவுரை கூற அவரால் மட்டுமே முடியும்!!!

அற்புதமான அறிவுரை கூற அவரால் மட்டுமே முடியும்!!!

*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*
*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*

*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*
*தேவைக்கு செலவிடு........*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*
*உன் குழந்தைகளை பேணு......*
*அவர்களிடம் அன்பாய் இரு.......*
*அவ்வப்போது பரிசுகள் அளி......*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*
*அடிமையாகவும் ஆகாதே.........*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க* *இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*
*அதைப்போல* *பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,* *வேண்டிக் கொள்ளலாம்*-*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,* *கடமை ,அன்பை அறியார்*
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்......*
*நிலைமையை அறிந்து* *அளவோடு கொடு*
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்**கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி**வைத்திராதே*
*நீ**எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து**காத்திருப்பர்.*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,**தரவேண்டியதை பிறகு கொடு.*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு.....*
*நடை பயிற்சி செய்து.....*
*உடல் நலம் பேணி......*
*இறை பக்தி கொண்டு......*
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*
*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*
நான்கு நபர்களை புறக்கணி*
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்காரன்
😏மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே*
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்*
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘☘☘☘☘☘☘☘☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. Good morning sir very useful and valuable information sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. ///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful and valuable information sir thanks sir vazhga valamudan
    Monday, June 26, 2017 4:06:00 AM////

    அதிகாலை 4 மணிக்கே பின்னூட்டமா? நைட் டூட்டியா? நல்லது. நன்றி!!!!

    ReplyDelete
    Replies
    1. Thanks for your reply sir, usually I will get early morning after seeing ur blog then only i start my routine work,as per your advce today onwards i started praying lord ganesha on bramha muhurta and I planned to pray Lord shiva on my jenma nakshtra sir,once again i thank you sir for your valuable words to me sir, vazhga valamudan sir

      Delete
  3. இராமலிங்க அடிகள் சிறு பாலகனாக இருந்த பொழது அவருடைய ஆசிரியர் "வேண்டாம்,வேண்டாம் " என முடியும் ஔவ்வையார் பாடல் சொல்லி தரப்பட்டது. அப்போது அடிகள் கூறினார் "ஏன், வேண்டாம், வேண்டாம் என கூறாமல், வேண்டியதை கேட்கலாமே" என்றார். ஆசிரியரோ, நீ வேண்டுமானால் அப்படி ஏழுதி வா என்றார். அப்போது உதயமானது தான்
    " ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவு வேண்டும்
    உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்!

    பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
    பொய்மை பேசாதிருக்க வேண்டும்
    பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
    மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

    மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
    உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
    மதி வேண்டும், நின் கருணைநிதி வேண்டும்
    நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்!"

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்
    நல்ல கருத்து உள்ளது

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா, நல்ல பல அறிவுறைகள்.19 ம் நூற்றாண்டிலேயே தேவைப்பட்டதெனில்,தற்போது அவசியம் தேவை.நன்றி.

    ReplyDelete
  6. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Thanks for your reply sir, usually I will get early morning after seeing ur blog then only i start my routine work,as per your advce today onwards i started praying lord ganesha on bramha muhurta and I planned to pray Lord shiva on my jenma nakshtra sir,once again i thank you sir for your valuable words to me sir, vazhga valamudan sir////

    நல்லது. தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நல்ல மாற்றமும், முன்னேற்றமும் தெரியும். நன்றி!!!

    ReplyDelete
  7. ////Blogger SELVARAJ said...
    இராமலிங்க அடிகள் சிறு பாலகனாக இருந்த பொழது அவருடைய ஆசிரியர் "வேண்டாம்,வேண்டாம் " என முடியும் ஔவ்வையார் பாடல் சொல்லி தரப்பட்டது. அப்போது அடிகள் கூறினார் "ஏன், வேண்டாம், வேண்டாம் என கூறாமல், வேண்டியதை கேட்கலாமே" என்றார். ஆசிரியரோ, நீ வேண்டுமானால் அப்படி ஏழுதி வா என்றார். அப்போது உதயமானது தான்
    " ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவு வேண்டும்
    உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்!
    பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
    பொய்மை பேசாதிருக்க வேண்டும்
    பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
    மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!
    மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
    உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
    மதி வேண்டும், நின் கருணைநிதி வேண்டும்
    நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்!"/////

    அவர் எழுதிய பிரபலமான பாடல் அது! தகவலுக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  8. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல கருத்து உள்ளது////

    நல்லது. நன்றி உதயகுமார்!!!

    ReplyDelete
  9. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா, நல்ல பல அறிவுறைகள்.19 ம் நூற்றாண்டிலேயே தேவைப்பட்டதெனில்,தற்போது அவசியம் தேவை.நன்றி./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com