மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.6.17

குடும்ப தெய்வத்தை வணங்குவதால் என்ன பயன்?


குடும்ப தெய்வத்தை வணங்குவதால் என்ன பயன்?

தெய்வம்> ஊர் காவல் தெய்வம் > குலதெய்வம்> குடும்ப தெய்வம்!!!

அடடா, தெய்வங்களில் இத்தனை பிரிவுகள் இருக்கின்றனவா?

ஆமாம்......சாமி.....ஆமாம்!
------------------------------
சிறுதெய்வம் என்ற சொல்லுக்குக் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி மக்கள் தம் குறை நீக்கும் தெய்வம் என்ற விளக்கத்தைத் தருகிறது

நாட்டுப்புற மக்கள் என்றும் நாட்டார் என்றும் தொடர்ந்து ஒரே மண்ணில் வாழும் மக்களைக் குறிக்கின்ற சொற்களையே பயன்படுத்தி, நாட்டுப்புற தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் என்று சிறு தெய்வங்களைக் கூறுகின்றார்கள்.  தமிழில் செய்யப்படுகின்ற பூஜைகளும், தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் சடங்களும் இதில் மிகச்சிறப்பு.

சிறு தெய்வங்கள் குடும்ப தெய்வம், குலதெய்வம், ஊர் தெய்வம் என்று மூவகையினதாகக் காணப்படுகின்றன.

குடும்ப தெய்வம்-

குடும்ப தெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குரிய தெய்வம் ஆகும். இது பெரும்பாலும் குடும்பத்தில் கன்னிப் பெண்ணாக இறந்து போனவர்களே தெய்வமாகப் போற்றி வணங்கப்படுகின்றனர். குடும்பத்தின் நன்மைக்காக நினைவில் வைத்துக் கொள்ள இந்த குடும்ப தெய்வ முறை காணப்படுகின்றது.

தெய்வாக மாறியவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளையோ செய்தோ, பொங்கல் வைத்தோ குடும்ப தெய்வத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. குடும்பத்தின் தலைவரே பூஜையை செய்கிறார். வீட்டில் நடக்கின்ற நல்ல காரியங்களுக்கு குடும்ப தெய்வத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே செயலில் ஈடுபடுகின்றனர். சில வசதி படைத்தவர்கள் சாமி வீடு என சிறு குடிசையை அல்லது வீட்டைக் கட்டி அதிலும் இந்த தெய்வத்தை வைத்து வணங்குகின்றனர்.

குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டாலோ, வீட்டில் சண்டை சச்சரவு போன்ற குழப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலோ குடும்ப தெய்வத்திற்குப் பூசை செய்வர். மந்திர தந்திரங்கள் இல்லாது, முழு நம்பிக்கையுடன் மட்டுமே பூஜை நிகழ்த்தப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர்.

குலதெய்வம் :

குலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள். பல்வேறு சாதிகளுக்கு பொதுவான குலதெய்வங்கள் காணப்படுகின்றன. கருப்பு, ஐயனார், மதுரை வீரன், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு சாதியை சார்ந்த மக்கள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர்.

ஊர் தெய்வம்:

ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து வணங்கும் தெய்வம் என்று இதை எடுத்துக்கொள்ளுங்கள்
-------------------------------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு  வருகிறேன்:

நாங்கள் எப்போது தேவகோட்டைக்குச் சென்றாலும், அருகில் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோட்டூர் அகஸ்தீஸ்வரர் சிவனாலயத்திற்குச் சென்று அங்கே உறைந்திருக்கும் எங்கள் குடும்ப தெய்வத்தை வணங்கிவிட்டு வருவது தொன்று தொட்ட வழக்கம். தொன்று என்பது 100 ஆண்டுகளுக்கு மேலானது என்பதை மனதில் வையுங்கள்.

100 ஆண்டுகளுக்கு முன்பு - 1910ம் ஆண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் தாத்தாவின் முதல் மனைவி - அவருக்கு அப்போது 14 வயதுதான். பால்ய விவாகம் - அதாவது பத்து வயதில் திருமணம். மனைவியின் பெயர் உமையாள் (உமையவள் - பார்வதி தேவியின் பெயர்களில் ஒன்று.)

அந்த உமையாள் என்ற பெண், தனது 14 வயதில் புஷ்பதியான போது, காய்ச்சல் வந்து இறந்துபோய் விட்டார். அந்தப் பெண்மணியின் ஆத்மா சாந்தியடையாமல் தான் பிறந்த வீட்டையும், வாழ்க்கைப் பட்ட எங்கள் வீட்டையுமே சுற்றிச் சுற்றி வந்துள்ளது. அனைவரும் கலக்கமடைந்து போய்விட்டார்களாம்.

ஒரு பெரிய ஜோதிடரை அழைத்துவந்து பிரசன்னம் பார்த்ததில் - அவர் இவர்கள் சொல்லாமலேயே சொல்லிவிட்டாராம்.  ஒரு கன்னி தெய்வம் இந்த வீட்டைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஒரு பதுமை செய்து, ஒரு நல்ல நாளில் அருகில் உள்ள சிவன் கோவிலில் கொண்டுபோய் விட்டு விட்டு வந்து விடுங்கள். அவள் ஆத்மா சாந்தியடைந்துவிடும் என்றாராம்

அதன்படி ஐம்பொன்னில் சுமார் ஒன்றரை அடி உயரத்தில் பதுமை ஒன்றைச் செய்து, மேள தாளத்துடன் இரு வீட்டாரும் பதுமையை சகல மரியாதையுடன் தூக்கிச் சென்று - எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டூர் சிவனாலாத்தில் வைத்து விட்டு வந்து விட்டார்கள்.

தேவகோட்டை நகரச் சிவன் கோவில் என்றால் - உள்ளூர் கோவில் - எல்லா மக்களுக்கும் பொதுவான கோவில். அங்கே வைக்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கும் உடன் பங்காளிகளுக்கும் சொந்தமான கோவில் என்பதால் கோட்டூர் அகஸ்தீஸ்வரர் சிவன் கோயிலைத் தேர்ந்தெடுத்து அங்கே வைத்துள்ளார்கள்.

அந்தப் பதுமை இன்றும் அந்தக் கோவிலின் கருவறைக்கு அருகே அர்த்த மண்டபத்தில், ஈஷ்வரனை வணங்கும் கோலத்தில் இருக்கிறது..

பதுமை{:
Tamil-lexicon
doll {verb noun }
idol {noun }

பட்டில் சிற்றாடை தைத்துக் கொண்டுபோய் அந்தப் பதுமைக்கு அணிவித்து, மல்லிகைப் பூ மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி வைத்து சாஷ்டாங்கமாக வணங்கி விட்டு வருவது எங்கள் வழக்கம். இன்று இரு வீட்டையும் சேர்ந்த 30ற்கும் மேற்பட்ட குடும்ப வாரிசுகள் அனைவரும் பய பக்தியுடன் வணங்கி விட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும்!!!!.

உங்களின் பார்வைக்காக அந்தப் பதுமையின் படத்தைக் கீழே பதிவிட்டுள்ளேன்.



பதுமையின் முகத்தில் என்னவொரு மலர்ச்சி பாருங்கள்!

கண்ட பயன் என்ன?

மன மகிழ்ச்சி, மனத் தெம்பு இரண்டும் கிடைக்கிறது!!!! வாழ்வில் பல நல்ல காரியங்கள் நடந்துள்ளன!!!

அதைவிட வேறு என்ன வேண்டும்?
---------------------------------
இரவில் படுக்கும்போது காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் படுக்கிறோம். அதுபோல எழுகிறோம். எழுவதற்கு யாரும் கியாரண்டி தரமுடியுமா என்ன? அதை ஆண்டவன் அல்லவா தரவேண்டும்!!!

ஆகவே இந்தக் கட்டுரையில் உள்ள செய்தியை படித்தபின்பு நம்பிக்கை வையுங்கள்.  குல தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லையா? நோ மேட்டர் உங்கள் அவ நம்பிக்கையை கடாசி விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். உங்கள் அவநம்பிக்கையை பின்னூட்டமாக இடாதீர்கள்!!!!

இது வேண்டுகோள்
-------------------------------------
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. Kalai vanakkam ayya... Nalla suvaiyana pathivu....

    ReplyDelete
  2. Nan thangaludaiya puthu manavan... thangali palaya pathivukalai pin eruthnthu padithu varukiren.. Kalaiyel muthal velai athuthan... Kurainthathu 3 pathivukalaiyavathu padithu vittuthan adutha veelai...

    ReplyDelete
  3. Truely said sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,குடும்ப தெய்வங்களை வேண்டி வணங்கினால் நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும்.அனுபவத்தில் அறிந்தது. நன்றி.

    ReplyDelete
  5. So happy to know your family story sir...

    ReplyDelete
  6. மிக நல்ல பதிவு. ஆனால் சோதிடத்திற்காக வரும் எத்தனை பேர் படிப்பார்கள் என்று தெரியவில்லை.சோதிடம் பலிப்பதற்கும் இத்தகைய வழிபாடு தேவைதான்
    என்பதை இளையவர்கள் அறிய வேண்டும்.

    எங்கள் இல்லங்களிலும் இது போன்ற தெய்வங்கள் உண்டு.பிரசவத்திற்கு அழைத்து வந்த போது வழியில் இறந்த பெண்ணிற்கு வழிபாடு செய்கிறார்கள்.

    ReplyDelete
  7. ////Blogger Ravi Raina said...
    Kalai vanakkam ayya... Nalla suvaiyana pathivu....///

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  8. //Blogger Ravi Raina said...
    Nan thangaludaiya puthu manavan... thangali palaya pathivukalai pin eruthnthu padithu varukiren.. Kalaiyel muthal velai athuthan... Kurainthathu 3 pathivukalaiyavathu padithu vittuthan adutha veelai...////

    நல்லது. தொடர்ந்து செய்யுங்கள். நன்றி!!!!

    ReplyDelete
  9. ///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Truely said sir thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,குடும்ப தெய்வங்களை வேண்டி வணங்கினால் நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும்.அனுபவத்தில் அறிந்தது. நன்றி.//////

    உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete
  11. /////Blogger Shruthi Ramanath said...
    So happy to know your family story sir...////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    மிக நல்ல பதிவு. ஆனால் சோதிடத்திற்காக வரும் எத்தனை பேர் படிப்பார்கள் என்று தெரியவில்லை.சோதிடம் பலிப்பதற்கும் இத்தகைய வழிபாடு தேவைதான் என்பதை இளையவர்கள் அறிய வேண்டும்.
    எங்கள் இல்லங்களிலும் இது போன்ற தெய்வங்கள் உண்டு.பிரசவத்திற்கு அழைத்து வந்த போது வழியில் இறந்த பெண்ணிற்கு வழிபாடு செய்கிறார்கள். /////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  13. Sir, we don't know our kuladeivam... Thathaa. .patti.. Printhu vittadhal. . Patti thatta mel kovam kondu.. Kuladeivan yaar endru sollavillai.. Tha atha vin peyar. meenakshi sundaram devakottaiyai senthavar endru mattum theriyum. Ku la deivavathai epadi kandu pidipathu... En husband oda patti... Thangammal. Meenaksi sundram. .ungalukku theritha ariurai konj sollunga sir. Romba nalla theduginrom.

    ReplyDelete
  14. 4.5 வ‌ய‌தில் இற‌க்கும் பெண் குழந்தை க‌ன்னி தெய்வ‌ம் ஆகுமா? எந்த‌ வ‌ய‌தில் அது க‌ன்னி தெய்வ‌மாகும்?எப்ப‌டி வ‌ண‌ங்க‌ வேண்டும்?
    Jack

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com