மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.2.17

எதை அடக்க வேண்டாம்?


எதை அடக்க வேண்டாம்?

"சிறுநீரை அடக்க வேண்டாம்.."

ஒரு உண்மை சம்பவம்...

15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை மருத்துவரும் அச்சிறுமியின் பெற்றோரும் அறிய வந்தனர்.

என்னவெனில் அச்சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது என்பது.

அச்சிறுமியின் பெற்றோர் கலங்கி விட்டனர்.

எவ்வாறு இந்த பெரிய சங்கடம் உருவானது என்று மருத்துவர் அறிய அச்சிறுமியிடம் விசாரித்தபோது தான் தெரிந்தது அச்சிறுமி பள்ளி செல்லும்
பொதெல்லாம் சிறுநீரை கழிக்கவே மாட்டாராம்.

ஏனெனில் சிறுநீர் கழிக்க அச்சிறுமிக்கு இருந்த தயக்கமும் அப்பள்ளியில் அதற்கான வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்ததுமே இதற்கு முக்கிய
காரணமாக இருந்துள்ளது.

சிறுநீரை அடக்கும் இந்த  பழக்கத்தால் அச்சிறுமியின் சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டு இறுதியில் சிறுநீரகமே செயலிழந்து போனது தான்
கொடூரத்தின் உச்சம்.

அதைவிட கொடூரம் என்னவெனில் நான் சந்தித்த இரண்டாவது நாள் அச்சிறுமி மரணத்தையும் தழுவி விட்டாள் என்பது மிகுந்த மன
வேதனைக்குள்ளாக்கி விட்டது.

பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கழிவறைகளை கண்டீர்களானால் நம் வயிற்றுக்குள் உணவு செல்லாது.
அவ்வளவு கொடூரமாக இருக்கிறது கழிவறைகள்.

அது மட்டுமில்லாமல் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறுநீர் கழிக்கும் இடைவெளியை வெறும் 10 நிமிடத்திற்கு ஒதுக்கி 400 மாணவர்களை
அங்கு தள்ளுகின்றனர்.

இதனால் பல மாணவர்கள் கூச்சப்பட்டுக் கொண்டு இயற்கை உபாதைகளை கழிக்காமலே அடக்கிக் கொள்கின்றனர்.

இதனால் குழந்தைகள் சிறுநீர் தொற்றிற்கு உள்ளாகி உயிரை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

அன்பர்களே தயவு செய்து இந்த பதிவை முடிந்த அளவு உங்கள் நண்பர்கள் மற்றும் குழுக்களுக்கு பகிர்ந்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்த உதவுங்கள்.

மேலும் அரசிற்கும், பள்ளி கல்வித்துறைக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் இப்பதிவின் மூலம்
கோரும் வேண்டுகோள் என்னவெனில்

1. ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் மாணவர்கள் சிறுநீர் கழிப்பதை முறையாக கொண்டுள்ளனரா என்பதை அக்கறையுடன் வினவ வேண்டும்.

2. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை தங்கள் குழந்தை போல் பாவித்து இம்மாதிரியான அபாயத்திற்குள் சென்று விடாமல் பாதுகாக்க முனைய
வேண்டும்.

3. அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பள்ளிக் கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விட்டு கழிப்பறை இல்லாத
பள்ளிகளின் கல்லூரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும்.

மேலும் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நேரத்தை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒதுக்கவும் ஆணையிட வேண்டும்.

4, பெற்றோர்கள் தவறாது குழந்தைகள் இயற்கை உபாதைகளை சரியான நேரத்தில் கழிக்கின்றனரா என்பதை தீர ஆராய வேண்டும்.

5. பெற்றோர்கள் இவ்விஷயத்தை பற்றி பள்ளிகளிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

நமது நாடு மற்றம் வீட்டின் வருங்காலத் தூண்களை சிறுநீரகமற்ற தூண்களாக மாற்றி வளரும் பயிர்களை முளையிலேயே கருகவிட்டு விடாதீர்கள்.

*"சிறுநீர் மட்டுமல்லாமல் இயற்கை உபாதைகள் (மலம், தும்மல், இருமல், தாகம், பசி, விக்கல், அபான வாயு...) எதையும் அடக்க கூடாது."*

தயவுசெய்து நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர
கவனிக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻

படித்ததில்_உறைத்தது !!!
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Respected Sir,

    Happy morning... Useful information...

    Thanks for sharing...

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.கோபம்,துக்கம்,காமம் போன்ற உணர்வுகளையும் அடக்கக்கூடாது என்கிறார்களே?அது சாத்தியமா?.நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயமாக
    உணர்ந்து தங்களின் குழந்தைகள் இயற்கை உபாதைகளால் அவதிப்படாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் உண்மைச் சம்பவம்..மெய்
    சிலிர்த்தது!

    ReplyDelete
  4. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Useful information...
    Thanks for sharing...
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  5. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.கோபம்,துக்கம்,காமம் போன்ற உணர்வுகளையும் அடக்கக்கூடாது என்கிறார்களே?அது சாத்தியமா?.நன்றி.////

    மனதைக் கட்டுப்படுத்தினால் எல்லாம் சாத்தியம்தான்!

    ReplyDelete
  6. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயமாக
    உணர்ந்து தங்களின் குழந்தைகள் இயற்கை உபாதைகளால் அவதிப்படாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் உண்மைச் சம்பவம்..மெய்
    சிலிர்த்தது!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com