மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.2.17

Astrology: ஜோதிடம்: வாத்தியார் வேலைதான் கிடைக்கும் என்பது எப்படித் தெரிந்தது?


Astrology: ஜோதிடம்: வாத்தியார் வேலைதான் கிடைக்கும் என்பது எப்படித் தெரிந்தது?

அலசல் பாடம்!

ஒரு இளைஞனின் வீட்டில், அவனை ஒரு ஐ.ஏ.எஸ் பட்டதாரியாக்கி, மாவட்ட ஆட்சியாளர் வேலையில் அமரவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் ஆசை நிறைவேறியதா? பையன் ஐ.ஏ.எஸ்சில் தேர்ச்சி பெறவில்லை ஜாதகத்தைக் கொண்டுபோய் ஒரு ஜோதிடரிடம் கொடுத்து, ஜாதகப்படி எந்த வேலை கிடைக்கும்? என்று கேட்டபோது, அவர் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து விட்டு, ஜாதகப்படி பையனுக்கு வாத்தியார் வேலைதான் சிறப்பாக இருக்கும் என்றும் அவன் அதில் படிப்படியாக முன்னுக்கு வருவான் என்றும் சொன்னார்

எப்படிச் சொன்னார்?

வாருங்கள் ஜாதகத்தை நாமும் பார்ப்போம்!



மீன லக்கின ஜாதகம். பூராட நட்சத்திரம்

1. உயர் கல்விக்கு உரிய ஐந்தாம் வீட்டு அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு ஆறில் அமர்ந்துள்ளார். உடன் செவ்வாயும் ராகுவும் உள்ளார்கள். அதனால் 2. உயர்கல்விக்கான (அதாவது I.A.S அல்லது I.F.S அல்லது I.PS போன்ற படிப்புக்கள்) அமைப்பு ஜாதகத்தில் இல்லை.
3. பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பது நிர்வாக வேலை அமைவதைக் குறிக்கும். ஆனால் உடன் ராகு இருப்பதால் நிர்வாக வேலயில் தொடர்ந்து பிரச்சினைகள் உண்டாகும்
4. பத்தாம் அதிபதி பதினொன்றில், ஆகவே பார்க்கும் வேலையில், அது எந்த வேலையாக இருந்தாலும் உயர்வு இருக்கும்
5. ஐந்தாம் அதிபதி சந்திரனும் பத்தில் இருக்கிறார். அதுவும் நன்மையானதே!
6. லக்கினம் குருவுடையதாக இருப்பதாலும், பத்தாம் வீடும் குருவுடையதாக இருப்பதாலும் வாத்தியார் வேலைதான் ஜாதகனுக்குச் சிறந்ததாக இருக்கும். அதுவே அமைந்தது.

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
========================================================

18 comments:

  1. வணக்கம் குருவே!
    அலசல் நல்ல கலக்கல்!
    புரியும்படி இருக்கிறது!

    ReplyDelete
  2. Good lesson today, one doubt, in the same kataga lagna, moon in 9th place, Mars and Guru in 10th place, in lagna saturn is there, then what is the solution?

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,
    அருமையான அலசல். லக்கினாதிபதியும் 5க்கு உடையவனும் 5லயே இருந்து 10க்கு உடையவன் 10லயே இருந்தா உயர் கல்வி கிடைக்குமா? 10க்கு உடையவன் 10லயே வக்ரமோ அஸ்தமனமோ பெட்டிருந்தால் உயர் கல்வி கிடைக்குமா?
    நன்றி ஐயா

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,
    அருமையான அலசல். லக்கினாதிபதியும் 5க்கு உடையவனும் 5லயே இருந்து 10க்கு உடையவன் 10லயே இருந்தா? உயர் கல்வி கிடைக்குமா? 10க்கு உடையவன் 10லயே வக்ரமோ அஸ்தமனமோ பெட்டிருந்தால் உயர் கல்வி கிடைக்குமா?
    நன்றி ஐயா

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,எனக்கு முதலில் தோன்றியது,5ம் அதிபதி 10ல்.அதுவும் நட்பு வீட்டில்.எப்படி உயர் கல்வி கிடைக்காமல் போனதென வியந்தேன்.விளக்கம் படித்ததும் புரிந்தது.நன்றி.

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அலசல் நல்ல கலக்கல்!
    புரியும்படி இருக்கிறது!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  7. ////Blogger t.nagoji rao said...
    Good lesson today, one doubt, in the same kataga lagna, moon in 9th place, Mars and Guru in 10th place, in lagna saturn is there, then what is the solution?/////

    உதிரியான கிரக நிலைகளை வைத்து பலன் சொல்லக்கூடாது. முழு ஜாதகத்தையும் பார்க்க வேண்டும்!!!!

    ReplyDelete
  8. ////Blogger VM. Soosai Antony said...
    வணக்கம் ஐயா,
    அருமையான அலசல். லக்கினாதிபதியும் 5க்கு உடையவனும் 5லயே இருந்து 10க்கு உடையவன் 10லயே இருந்தா உயர் கல்வி கிடைக்குமா? 10க்கு உடையவன் 10லயே வக்ரமோ அஸ்தமனமோ பெற்றிருந்தால் உயர் கல்வி கிடைக்குமா?
    நன்றி ஐயா////

    உதிரியான கிரக நிலைகளை வைத்து பலன் சொல்லக்கூடாது. முழு ஜாதகத்தையும் பார்க்க வேண்டும்!!!!

    ReplyDelete
  9. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,எனக்கு முதலில் தோன்றியது,5ம் அதிபதி 10ல்.அதுவும் நட்பு வீட்டில்.எப்படி உயர் கல்வி கிடைக்காமல் போனதென வியந்தேன்.விளக்கம் படித்ததும் புரிந்தது.நன்றி./////

    புரிதலுக்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  10. Vankkam Sir,

    I would like to get your appointment for my Jathaga palan.
    Kindly guide me, how to proceed further.

    Thanks & Regards
    Revathy

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா

    உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன். நன்றி


    இந்த பதிவில் ஒரு சந்தேகம் ஐயா

    உயர்கல்விக்கு உரிய ஐந்தாம் அதிபதியுடன் எத்தனை கிரகம் இருக்கிறதோ அத்தனை பட்டம் கிடைக்க வாய்ப்பு உண்டா.

    ReplyDelete
  12. /////Blogger Freelancer / Virtual Assitant said...
    Vankkam Sir,
    I would like to get your appointment for my Jathaga palan.
    Kindly guide me, how to proceed further.
    Thanks & Regards
    Revathy/////

    நான் எவரையும் நேரில் சந்தித்து, ஜாதக பலன்களை எல்லாம் சொல்வதில்லை. வருகிறவர்கள் என்னுடைய நேரத்தை வீணாக்குகிறார்கள்.
    மேலும் என்னுடைய வேலைப் பளு காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் நான் யாருக்கும் பலன்களைப் பார்த்து சொல்வதில்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  13. /////Blogger Ganapathy Subramanian said...
    Navaamsa amaippu kanakkilvaruma/////

    வரும் நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம். அதை மனதில் வையுங்கள்!

    ReplyDelete
  14. ////Blogger prasanna venkatraman said...
    வணக்கம் ஐயா
    உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன். நன்றி
    இந்த பதிவில் ஒரு சந்தேகம் ஐயா
    உயர்கல்விக்கு உரிய ஐந்தாம் அதிபதியுடன் எத்தனை கிரகம் இருக்கிறதோ அத்தனை பட்டம் கிடைக்க வாய்ப்பு உண்டா./////

    அந்த வீட்டில் குரு, சந்திரன், சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருப்பது மட்டும்தான் நன்மையானது.தீய கிரகங்களான சனி, ராகு போன்றவைகள் இருந்தால் தீமையானது!!!

    ReplyDelete
  15. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    Very nice sir. Thank you.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. I.A.S அல்லது I.F.S அல்லது I.PS போன்ற ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com