நகைச்சுவை: பையனுக்கு லூஸ் மோஷன்; டாக்டருக்கு என்ன மோஷன்?
நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்; வேறு விவகாரம் வேண்டாம்!
--------------------------------------------------------------------------------------
1
மே ஐ கமின் டாக்டர்.
வந்துட்டீங்களே! உட்காருங்க!
தேங்க் யூ!
சொல்லுங்க!
என்னது?
என்ன பிரச்னைன்னு சொல்ல சொன்னேன்!
ஓ! பையனுக்கு ஒடம்பு சரியில்லை!
பேர் என்னம்மா?
மஞ்சுளா!
என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?
டாக்டர் அது என் பேரு!
பையன் பேர சொல்லுங்கம்மா!
குஞ்சு!
மொத்தமே அதுதான் பேரா?
இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!
படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?
லூஸ் மோஷன்!
எப்படிப் போறான்?
மஞ்சளா!
அதுதான் மொதல்லியே சொல்லிட்டீங்களே பையனப் பத்தி சொல்லுங்கம்மா!
நான் ஸ்டூல் கலரைக் கேட்டேன்!
இந்த ஸ்டூல் வெள்ளை, அங்கிட்டு இருக்கே அது சிகப்பு!
அந்த சுவர் வெள்ளை, இந்த ஸ்க்ரீன் நீலம்!
ஏம்மா, இது என்ன கண் ஆஸ்பத்திரியா?
பையன் எப்படி வெளியே போறான்னு கேட்டேன்!
அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனேஓடிப்போயிடுவான்!
அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!
இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன்! இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!
கடவுளே! அம்மா, பையன் ஆய், ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன்! புரிஞ்சுதா!
அதுதான் சொன்னேனே, மஞ்சளா!
ஐயோ, அது உங்க பேருன்னு சொன்னீங்க?
இல்ல டாக்டர், என் பேரு இல்ல, இவன் மஞ்சளாப் போறான்னு சொன்னேன்!
ஓ! சாரி! சாப்ட்டானா?
இல்ல டாக்டர், நல்லவேளை,அதுக்குள்ளே கையைக் கழுவி விட்டுட்டேன்!
அம்மா, நான் அதக் கேட்கலம்மா! இப்படிப் படுத்தறீங்களே! உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?
இல்லைங்க அவரு துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு!
என்னம்மா இது பையனுக்கு ரெண்டு வயசு! அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்! எப்படி இது? ஸ்கைப்லயேவா !
சீ! அவர் நடுவுல ஒரு ரெண்டுநாள் வந்திருந்தார்! ஒரு பிரச்னைக்கு!
வந்தபோது பிரச்னை பண்ணிட்டார் போல! சரி, சொல்லுங்க, என்ன பிரச்னை!
அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்!
அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க? நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்!
அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்!
ஓ சாரி!
அதுதான் சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?
ஆண்டவா! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்!
இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்!
சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?
தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?
ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னும் கொடுக்கறீங்களா?
ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி!
என்னம்மா இவ்வளவு பச்சையா ...
இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!
அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!
டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க! அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.
எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை! பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?
இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.
முருகா! ஏம்மா இப்படி! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?
அவர் இன்னும் அஞ்சு வருஷம்கழிச்சுத்தான் வருவார்!
ம் ...கொடுத்து வெச்சவன்! சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?
வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!
ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க, பிரியாணி சாப்பிடலாமா?
ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?
அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது. புரிஞ்சுதா? சரி, எத்தனைதடவை போனான்?
எங்க டாக்டர்?
ம்! என் தலை மேல! லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?
அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ! நாலுதடவை!
தண்ணி மாதிரி போனானா?
இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா!
அம்மா, மஞ்சுளா, உங்க சாம்பார் பத்தி நான் கேட்கலம்மா! சாம்பார் எப்படியிருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கன்னு நெனைச்சாலே
திக்குங்குது! இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்!
இந்த மாத்திரைய மூணு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க!
அப்புறம் இந்த பௌடர,
பூசிவிடவா டாக்டர்?
ம். ஆமாம், அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க! சாவடிக்கறீங்களே! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா
நடத்துறேன்? சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா! ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா, வந்து காட்டுங்க!
டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டுவரவா டாக்டர்?
அம்மா பரதேவதே,
என் பேர் மஞ்சுளா டாக்டர்!
உங்க பையன் குஞ்சுவைக் கொண்டாந்து காமிங்க! புரிஞ்சுதா?
மோஷன் பின்னாடிதான போகும், அப்புறம் ஏன் குஞ்சுவை...
அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!
இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது! வெளியில ஹ்ரிதிக் ரோஷன்ன்னு கூப்பிடுவோம்!
நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க! எனக்கென்ன போச்சு!
டாக்டர், டயட் சொல்லலியே!
என்ன எங்கம்மா பேச விட்டே நீ!
காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி!
அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்!
தாயே, அது உங்களுக்கு! ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும்!
அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் சிக்கனை என்ன செய்ய?
உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!
ஏன், அவங்க உங்க செட் அப்பா?
கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்!
டாக்டர் பீஸ்?
நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா!
அப்போ செட் அப்புதான்! நான் வரேன் டாக்டர்!
வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!
====================================================
2
பாவிகளா, இடத்தை விற்கும் போது....
ரயில் நிலையம் வரும்..
விமான நிலையம் வரும்...
பஸ் நிலையம் வரும்..
பள்ளிக்கூடம் வரும்...
கல்லூரி வரும்...
IT கம்பெனி வரும்னு சொன்னீங்களே,
யாராவது
"மழை வெள்ளம் வரும்"னு சொன்னீங்களாடா?
=======================================================
3
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது
செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது
WIFE: செம அடி அடிக்குது.
HUSBAND: வாங்கு வாங்குன்னு வாங்குது..
--------------------------------------------
4
நாம் குறைக்கவேண்டிய சில "உப்புகள்"
மாமியார் - சிடுசிடுப்பு
மருமகள் - கடுகடுப்பு
கணவன் - படபடப்பு
மனைவி - நச்சரிப்பு
டீன்ஏஜ் - பரபரப்பு
ஓல்டுஏஜ் - தொணதொணப்பு
அரசியல்வாதிகள் – ஆர்ப்பரிப்பு
தொண்டர்கள் - அர்ப்பணிப்பு
ஆசிரியர்கள் - கண்டிப்பு
மாணவர்கள் - ஏய்ப்பு
வக்கீல் - ஒத்திவைப்பு
வைத்தியர் - புறக்கணிப்பு
குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு - "சிரிப்பு :) :)
---------------------------------------------------------
5
என்னங்க...நீங்க பேசறது இப்ப நல்லாக் கேட்குது. எங்க டவர் பக்கத்தில இருக்கீங்களா?
நான் டவர் மேலதான் இருக்கேன். வீடுதான் கீழ தண்ணீரில மிதக்குது!
-------------------------------------------------------------------------------
அத்தனையும் வாட்ஸப்பில் வந்தது.
எது மிகவும் நன்றாக உள்ளது சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
சிரிக்க முடியவில்லை
ReplyDeleteசெயல் இழந்து கிடக்கு
சிங்கார சென்னை கிட்டத்தட்ட
சீரழிந்து விட்டது முழுமையாக
ஊரெங்கும் ஒரே மழை..
ஒருவர் கூட சௌகரியமாக இல்லை ...
எல்லா தெருவிலும் தண்ணீர்
எல்லா மக்கள் கண்ணிலும் (கண்ணீர்)
அரை அடிக்கு மேல் சில இடங்களில்
அய்ந்து அடிக்கு மேல் பல இடங்களில்... தண்ணீர்
கார் எடுத்து போக முடியாது
காரு(க்குள்ள)புல்லா தண்ணீர்...
டூ வீலர் தள்ளி
கிட்டு தான் போகனும் .
அங்கங்கே பள்ளம் தோண்டி இருப்பதால்
அப்படி நடந்தும் போக முடியாது...
வீட்டிலும் மின்சாரம் இல்லை..
விவரம் சொல்ல செல்போன் சார்ஜ் இல்லை
இன்டர்நெட் இல்லை - மெய்யாலுமே
இப்போ சொல்லுங்க எப்படி சிரிக்க ?
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
ReplyDeleteஅத்தனை நகைச்சுவைகளுமே அருமை!
ரசித்து சிரிக்கும் மனநிலை பாதிக்கப் பட்டுள்ளது!
”துன்பம் வரும் வேளையிலே சிரிங்க! என்று சொல்லி வச்சார் வள்ளுவரும் சரிங்க!!வெள்ளம் வந்து சூழுகையில்,பாழும் மக்கள் தவிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு!!!....
இயற்கையை கைக்குள் அடக்க எத்தனிக்கும் மனித முயற்ச்சியின் எதிர் விளைவே,இன்றைய சிங்காரச் சென்னையின் அலங்கோலம்!!!!......
கடல் எல்லையின் பரப்பைக் குறைத்து,இயற்லையைச் சிதைத்து, மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கட்டி சாதனை படைத்து விட்டோம்.....
ஆனால்,இயற்கையின் சீற்றத்திற்க்கு ஈடுகொடுக்க முடியாது மனித குலம் தவிக்கின்றது.....
காரணம்?????........... சந்திரபாபு அதனால்தான் பாடினார்,
“சிரிப்பு வருது,சிரிப்பு வருது, சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது,சின்ன மனுஷன்,பெரிய மனுஷன் செயலைப் பாத்து சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது!!!!!!!!!!!!!!!!”
quote-“இறைவனாகப் பார்த்து கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது! இறைவனால் தடுக்கப் பட்டதை யாராலும் கொடுக்க முடியாது!!!”-unquote
-அன்புடன்,
-பொன்னுசாமி.
அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..
ReplyDeleteமழை பெய்வதை ஜோதிடர் எப்பிடி கூறுவார்..???
மந்தமாக பெய்கிறது .....சேமமா பெய்கிறது
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே!
ReplyDeleteஉப்புள்ள பண்டம் தொப்பையிலே!
வாட்ஸப் துணுக்குகள் வகுப்பறையிலே!
வயிறு குலுங்கும் சிரிப்பு 3வதிற்கே!
Respected Sir,
ReplyDeleteHappy morning... All are superb... especially No.3
With best regards,
Ravi-avn
குருவே வணக்கம்.
ReplyDeleteமுதலாவது நகைச்சவை: படுத்திவிட்டீர்களய்யா!!!
குறைக்கவேண்டிய உப்புக்கள்: "நறுக்"!!
எல்லாமே ரொம்ப நல்லாக இருககினறது். முதலாவது ரொம்ப நீளம் எப்படி வட்ஸ்அப்பில் வாசித்தார்களோ தெரியவில்லை.
ReplyDeleteநன்றி வாத்தியார்
ராஜம் ஆனந்த்
//////Blogger வேப்பிலை said...
ReplyDeleteசிரிக்க முடியவில்லை
செயல் இழந்து கிடக்கு
சிங்கார சென்னை கிட்டத்தட்ட
சீரழிந்து விட்டது முழுமையாக
ஊரெங்கும் ஒரே மழை..
ஒருவர் கூட சௌகரியமாக இல்லை ...
எல்லா தெருவிலும் தண்ணீர்
எல்லா மக்கள் கண்ணிலும் (கண்ணீர்)
அரை அடிக்கு மேல் சில இடங்களில்
அய்ந்து அடிக்கு மேல் பல இடங்களில்... தண்ணீர்
கார் எடுத்து போக முடியாது
காரு(க்குள்ள)புல்லா தண்ணீர்...
டூ வீலர் தள்ளி
கிட்டு தான் போகனும் .
அங்கங்கே பள்ளம் தோண்டி இருப்பதால்
அப்படி நடந்தும் போக முடியாது...
வீட்டிலும் மின்சாரம் இல்லை..
விவரம் சொல்ல செல்போன் சார்ஜ் இல்லை
இன்டர்நெட் இல்லை - மெய்யாலுமே
இப்போ சொல்லுங்க எப்படி சிரிக்க ?////
உங்களின் (சென்னைவாசிகளின்) கஷ்டங்கள் தெரியாமலா? அதை சற்று மறப்பீர்கள் என்ற் நினைப்பில்தான் இந்தப் பதிவை வலை ஏற்றினேன் வேப்பிலையாரே!
/////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
அத்தனை நகைச்சுவைகளுமே அருமை!
ரசித்து சிரிக்கும் மனநிலை பாதிக்கப் பட்டுள்ளது!
”துன்பம் வரும் வேளையிலே சிரிங்க! என்று சொல்லி வச்சார் வள்ளுவரும் சரிங்க!!வெள்ளம் வந்து சூழுகையில்,பாழும் மக்கள் தவிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு!!!....
இயற்கையை கைக்குள் அடக்க எத்தனிக்கும் மனித முயற்ச்சியின் எதிர் விளைவே,இன்றைய சிங்காரச் சென்னையின் அலங்கோலம்!!!!......
கடல் எல்லையின் பரப்பைக் குறைத்து,இயற்லையைச் சிதைத்து, மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கட்டி சாதனை படைத்து விட்டோம்.....
ஆனால்,இயற்கையின் சீற்றத்திற்க்கு ஈடுகொடுக்க முடியாது மனித குலம் தவிக்கின்றது.....
காரணம்?????........... சந்திரபாபு அதனால்தான் பாடினார்,
“சிரிப்பு வருது,சிரிப்பு வருது, சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது,சின்ன மனுஷன்,பெரிய மனுஷன் செயலைப் பாத்து சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது!!!!!!!!!!!!!!!!”
quote-“இறைவனாகப் பார்த்து கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது! இறைவனால் தடுக்கப் பட்டதை யாராலும் கொடுக்க முடியாது!!!”-unquote
-அன்புடன்,
-பொன்னுசாமி.//////
சென்னையில் 160 ஏரிகளைக் காணவில்லை. அத்தனையும் காலனிகளாக மாறிவிட்டன. என்று ஒரு பத்திரிக்கைச் செய்தி குறிப்பிடுகின்றது. ஏரிகளைக் காவு கொடுத்ததன் பலனைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!
/////Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..
மழை பெய்வதை ஜோதிடர் எப்பிடி கூறுவார்..???
மந்தமாக பெய்கிறது .....சேமமா பெய்கிறது/////
கரெக்ட். நன்றி கணபதியாரே!
/////Blogger venkatesh r said...
ReplyDeleteஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே!
உப்புள்ள பண்டம் தொப்பையிலே!
வாட்ஸப் துணுக்குகள் வகுப்பறையிலே!
வயிறு குலுங்கும் சிரிப்பு 3வதிற்கே!////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... All are superb... especially No.3
With best regards,
Ravi-avn////
நல்லது. நன்றி அவனாசி ரவிச்சந்திரன்!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுருவே வணக்கம்.
முதலாவது நகைச்சவை: படுத்திவிட்டீர்களய்யா!!!
குறைக்கவேண்டிய உப்புக்கள்: "நறுக்"!!///
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
/////Blogger Rajam Anand said...
ReplyDeleteஎல்லாமே ரொம்ப நல்லாக இருககினறது். முதலாவது ரொம்ப நீளம் எப்படி வட்ஸ்அப்பில் வாசித்தார்களோ தெரியவில்லை.
நன்றி வாத்தியார்
ராஜம் ஆனந்த்/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!