மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.12.15

Astrology: ஜோதிடம்: உரல் என்றால் தெரியும்; பரல் என்றால் என்ன?


Astrology உரல் என்றால் தெரியும்; பரல் என்றால் என்ன?

இது இன்றைக்கு 2வது பதிவு. முதல் பதிவு சீனியர் மாணவர்களுக்கு. இந்தப் பதிவு ஜூனியர் மாணவர்களுக்கு. அதாவது புது முகங்களுக்கு. ஆகவே குழப்பம் இல்லாமல் அவரவருக்கு உரிய பதிவுகளை அவரவர் படியுங்கள்.
=====================================================
கண்மணிகளில் பலர் அஷ்டகவர்க்கத்தை எப்படிக் கணக்கிடுவது? சுயவர்க்கத்தை எப்படிக் கணக்கிடுவது? என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் நடத்தி முடிக்கப்பெற்ற பாடம். புதிது புதிதாக வருபவர்களுக்கெல்லாம் மறுபடி மறுபடி அதே பாடத்தைச் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அதைவிடச் சிரமம் சிலர் பரல் என்றால் என்ன என்று கேட்டு மின்னஞ்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் முகமாக அஷ்டகவர்க்கத்தில் உள்ள அடிப்படிப் பாடங்கள் சிலவற்றை மீண்டும் வலையில் ஏற்ற உள்ளேன். இன்று முதல் பாடம்!

அஷ்டவர்க்கம் என்பது ஜோதிடத்தில் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம்! தமிழ் நாட்டு ஜோதிடர்கள் பலருக்கு அந்த பிரசாதத்தைப் பற்றித் தெரியாது.

அடியவன் ஜோதிடத்தை ஆங்கில வழியில் படித்ததால், எனக்கு பல வடமொழி ஜோதிட நூல்களின் ஆங்கிலப் பதிப்புக்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தமிழில் இருக்கும் ஜோதிட நூல்களெல்லாம் (நான் படித்த காலத்தில்) செய்யுள் வடிவில் இருந்ததால், படித்து உணர மிகவும் சிரமப்பட்டேன். அதனால் வாங்கிய நூல்களை எல்லாம் மூட்டை கட்டிப் பரண் மேல் வைத்துவிட்டு, ஆங்கிலத்திற்குத் தாவினேன்.

குமாரசுவாமியம் என்னும் அற்புதமான தமிழ் ஜோதிட நூலில் இருந்து உங்கள் பார்வைக்காக, ஒரு செய்யுளைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.

"அரிலவனிரவிமதிக் கருணனிரசதஞ்சே
    யமரர்குசையவர் கட்சுவலம்வலமாக
விருபுறமுமொவ்வொரின்னே ரிதிற்சனிசேய்க்கிடமற்
    றெய்துதன் மற்றவர்க் காட்சியில்லனுமற்ரிலமா
மொருவிடைபெண்கயல் கலைநண்டோர்துலைமுன்போனே
    ருச்சமிவைக்கேழவம் பாம்புக்குறவாடரியாந்
தெரிவையிலானலவனுச்சஞ் சிகிக்கிவைநேர்மிகுத்
    தீதிலவர்பல்கைநீசந் தீர்க்குமின்மித்திரமே

ஏதாவது புரிகிறதா?

சூரியன் முதலான ஒன்பது கிரகங்களுக்குரிய ஆட்சி,  உச்ச, நீச, பகை மற்றும் நட்பு வீடுகளைச் சொல்லும் பாடல் இது.அகத்தியர் காலத் தமிழ் இது. அப்படித்தான் இருக்கும். முருகன் அருளினால் அகத்தியர் அருளிய ஜோதிட நூல் குமாரசுவாமீயம். அதில் இல்லாத ஜோதிட விஷயங்களே இல்லை. அதன் பொருளை அறிந்து கொள்வதற்குள் நம் ஆயுள் முடிந்துவிடும். நமது தமிழ் அறிவு அவ்வளவுதான்!

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளிலும், எந்தந்த கிரகங்கள் ஆட்சி வலிமையுடன் இருக்கும், எந்தந்த கிரகங்கள் உச்சமடையும் அல்லது நீசமடையும், பகை அல்லது நட்புடன் விளங்கும் என்பதைச் சொல்லும் பாடல் இது. மொத்தம் 60 மேட்டர்கள். ஒரே பாடலில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் அகத்தியர்.

“அவருக்கென்ன சொல்லிவிட்டார்
அகப்பட்டது நாமல்லவா!”

என்று கவியரசர் வரிகளைச் சொல்லிப் புலம்பாமல், நாம் வேறு வழிகளில் செல்ல வேண்டியதுதான். அதாவது நமக்கு வசப்படும் மொழியில் படிக்க வேண்டியதுதான்.

மணிகண்ட கேரள ஜோதிடம் என்னும் நூலில் இருந்து மாதிரிக்காக ஒரு பாடலைக் கொடுத்துள்ளேன். இதில் ஒரு வசதி தலைப்பை அத்தியாயத்தின் துவக்கதில் கொடுத்திருப்பார்கள். ஆகவே பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

தலைப்பு தனக் காண்டம். (Chapter on wealth)

ஆட்சியாய் நின்ற பேர்க்குத் தாட்சியுங்கொஞ்சமுண்டு
  தாட்சியாய் நின்றபேர்க்கிங் காட்சியுங்கொஞ்சமுண்டு
ஆட்சியைமகிழ்ந்துபார்த்துத் தாட்சியைத்தள்ளவேண்டாம்
  கேட்சியாயூடுதாக்கிச் சரிப்படச்சொல்வாய்மாதே

பொருள்: தனம், பாக்கியம், லாப ஸ்தான அதிபதிகள் (That is the lords of the 2nd, 9th and 11th) சுபக்கிரகங்களுடன் சேர்ந்திருக்க (In association with benefic planets), லக்கினாதிபதியும் ஆட்சிபலம் பெற்றிருக்க
(Lagna lord in his own sign) அவற்றின் மேல் பாவக்கிரகங்களின் பார்வை இல்லாமல் இருக்க, (without the aspect of melefic planets)  ஜாதகனிடம் செல்வம் இருக்கும் அல்லது செல்வத்தைச் சேர்ப்பான். இதே அமைப்பில் லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தால் (Lagna lord in exaltation) ஜாதகனிடம் அமோகமான அளவு (un imaginable) செல்வம் சேரும்!

தமிழில் உரை எழுதியவர்களும் கடினமான தமிழில் எழுதியுள்ளார்கள். படிப்பவனுக்குக் குழ்ப்பம்தான் மிஞ்சி நிற்கும். எளிய நடையில் யாரும் எழுதவில்லை. அதனால்தான் நான் எழுதும்பாடங்களை எளிமைப்படுத்தி என்னுடைய நடையில் எழுதுகிறேன். நான் பட்ட சிரமங்களை யாரும் படக்கூடாது என்பதுதான் என்னுடைய முதல் நோக்கம்!
_________________________________________________________
அஷ்டகவர்க்கம்.

அஷ்டக் என்றால் வடமொழியில் எட்டு என்று பொருள். வர்க்கம் என்றால் அட்டவனை என்று பொருள். அஷ்டகவர்க்கம் என்றல் எட்டு அட்டவனைகள் என்று பொருள்.

ஒரு ஜாதகத்திற்குக் கிரகங்களால் கிடைக்கும் எட்டுவிதமான சக்திகள் (energy) அல்லது பலத்தை (strength)  எட்டுவிதமான அட்டவனைகள் (charts) மூலம் அறிந்து கொள்வதற்கு உதவுவதே அஷ்டகவர்க்கம் எனப்படும்.

அது என்ன எட்டு அட்டவனைகள். லக்கினம் + ஏழு கிரகங்கள் ஆகியவற்றிற்கான அட்டவனைகள். அவைகள்தான் சுயவர்க்க அட்டவனைகள் (Own chart) எனப்படும். அவற்றைக் கூட்டினால் வருவது சர்வாஷ்டகவர்க்க அட்டவனை (combined chart) எனப்படும்.

கிரகங்கள் ஒன்பது அல்லவா? ஏன் இங்கே எழு மட்டும் கணக்கிடப்படுகிறது?

ராகு & கேது இருவருக்கும் சொந்த வீடு கிடையாது. ஆகவே அவர்கள் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளப் படவில்லை!

ஒவ்வொரு கிரகமும், லக்கினத்துடன் சேர்த்து ஒன்றை மற்றொன்று ஈர்க்கிறது. உங்கள் மொழியில் சொன்னால் வசியப்படுத்துகிறது. அது நல்ல வசியமாகவும் இருக்கலாம். அல்லது தீமையான வசியமாகவும் இருக்கலாம். அதைக் கணக்கிட்டு ஒவ்வொருகிரகத்திற்கும் பார்ப்பதுதான் சுய வர்க்கம். அவற்றை அதாவது எட்டு அட்டவனைகளையும் கூட்டி மொத்தமாகக் கணக்கிடுவதுதான் சர்வ அஷ்டக வர்க்கம் ஆகும்!

அதாவது நீங்கள் மொத்தம் 65 அட்டவனைகளைத் தயார் செய்ய வேண்டியதிருக்கும். அதைச்  சொல்லித் தரவுள்ளேன்.

கணினியில் தற்போது வசதி உள்ளது. அது ஒரே விநாடியில் அவை அனைத்தையும் கணக்கிட்டுக் கொடுத்துவிடும்.
கணினி வரும் முன்பு அதை ஜோதிடர்களும், ஜோதிடம் அறிந்தவர்களும் தன்னிச்சையாகத்தான் அவற்றைத் தயார் செய்தார்கள். நானும் 1997ற்கு முன்பு அப்படித்தான் செய்து பயிற்சி மேற்கொண்டேன்.

அதை எப்படிக் கணக்கிடுவது?

பாடம் மிகவும் நீளமானது. நாளை முதல் அதைப் பார்ப்போம்.

உங்களின் பொறுமை கருதியும், பதிவின் நீளம் கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

(பாடம் தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

மேலதிகத் தகவல்:
Sage Parashara has advocated to consider eight source of energy (7 planets & 1 Lagna) in Ashtakavarga.  In this system, each and every planet including Lagna influences one and another in particular way or other to their natal position.  In any horoscope ascendant is taken as the epitom of promises therein. So when Lagna is got influenced obviously other houses, which are in existence only due to Lagna, also get influenced.  When such influence is to be shown in charts, eight charts are needed to prepare which are known Ashtakvarga.
=========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

  1. Astavarga paadangal meendum alippatharku nantri vazhgavalamudan

    ReplyDelete
  2. உள்ளேன் ஐயா
    ஆவலுடன் காத்திருப்பேன் ஐயா

    ReplyDelete
  3. வணக்கம் குரு,

    கற்க ஆர்வமாக உள்ளோம். தொடருங்கள்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  4. குரு வந்தனம்.
    குரு, ஆசிரியர், வாத்தியார் என்று எந்த வார்த்தைகளில் வேண்டுமானாலும் அழைக்கப்படுபவர்களுக்கு அடிப்படையில் அவரிடம் கற்க வருபவர்கட்கு கற்பிக்கத் தேவையான தகுதிகள் (includes knowledge of particular lessons+ patience to teach + interest in imparting the self knowledge of such portions to the needy) உடையவராக இருத்தல் வேண்டும் என்பது தான் நியதி.இப்பணி ஏற்று நடத்தும் எத்தனை பேர் இத்தகுதிகள் தாங்கியோர்?? மிகச் சிலர் என்பது கண்கூடு!! பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூட இது தெளிவு!? காரணம் "சட்டி இல் இருந்தால் தானே அகப்பை இல் வரும்?"
    ஆனால், நமது வகுப்பறை வாத்தியார் இவ்விஷயத்தில் மிகவும் தெளிவாக, நம்மிடம் தெரிவித்துள்ளார்: புரியாத பாடங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களென்று. அதேபோல நமது கேள்விகளையும், அன்னார் பதில்களுடன் பிரசுரிக்கிறார்.மிக எளிமையான விளக்கங்களுடன் வரும் முறையானபதில்களால் நமது ஜோதிட அறிவில் தெளிவு பெறுகிறோம் என்றால் மிகையாகாது!
    இன்றைய இரண்டாவது பாடத்தில் புதிய மாணாக்கர்களுக்காக மீண்டும் "பரல் மற்றும் அஷ்டகவர்க்கம்" பற்றி எழுதவாரம்பித்துள்ளது என்னைப் போன்றே பலருக்கும் உபயோகமாயிருக்கும் என்று நம்புகிறேன்.
    அன்புள்ளத்துடன் தான் பெற்றுள்ள ஜோதிட அறிவைப் எங்களுக்குப்
    பகிர்ந்தூட்டும் வாத்தியாரையாவுக்கு
    வகுப்பறையின் சார்பில் மனமுவந்து தரும் வணக்கத்தினை ஏற்றுக்கொள்ளுங்கள், ஐயா.

    ReplyDelete
  5. அய்யா வணக்கம்!!!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி

    ReplyDelete
  6. When a lagna is fortified with below for example
    - with vargothama lagna on navamsa
    - benefic aspects lagna
    - asta varga score >4 for lagna

    but if lagna lord is
    - conjucted/receives aspects with malefic
    - positioned on enemy house or 6/8/12
    - debilitated

    what kind of ill effects it can bring to a person?

    whenever in future you consider providing us a sample educational horoscope, if you can consider these on mind it will be really helpful. I find your lessons extremely helpful when the rules are assessed with a horoscope.

    ReplyDelete
  7. Dear Sir,
    have a sense of how the parals work, but do not know how to calculate them yet.
    I haven't yet had a chance of reading your old lesson about calculating the parals.
    Still reading your old posts one by one whenever I have free time.
    But, posting this lesson here is good.
    Thanking you
    Sincerely
    Mrs N Anpalagan

    ReplyDelete
  8. /////Blogger Gajapathi Sha said...
    Astavarga paadangal meendum alippatharku nantri vazhgavalamudan/////

    எல்லாம் உங்களுக்காததான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா
    ஆவலுடன் காத்திருப்பேன் ஐயா/////

    உங்களுடைய காத்திருப்பு வீண் போகாது!

    ReplyDelete
  10. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    கற்க ஆர்வமாக உள்ளோம். தொடருங்கள்.
    நன்றி
    செல்வம்//////

    உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. ///////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    குரு, ஆசிரியர், வாத்தியார் என்று எந்த வார்த்தைகளில் வேண்டுமானாலும் அழைக்கப்படுபவர்களுக்கு அடிப்படையில் அவரிடம் கற்க வருபவர்கட்கு கற்பிக்கத் தேவையான தகுதிகள் (includes knowledge of particular lessons+ patience to teach + interest in imparting the self knowledge of such portions to the needy) உடையவராக இருத்தல் வேண்டும் என்பது தான் நியதி.இப்பணி ஏற்று நடத்தும் எத்தனை பேர் இத்தகுதிகள் தாங்கியோர்?? மிகச் சிலர் என்பது கண்கூடு!! பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூட இது தெளிவு!? காரணம் "சட்டி இல் இருந்தால் தானே அகப்பை இல் வரும்?"
    ஆனால், நமது வகுப்பறை வாத்தியார் இவ்விஷயத்தில் மிகவும் தெளிவாக, நம்மிடம் தெரிவித்துள்ளார்: புரியாத பாடங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களென்று. அதேபோல நமது கேள்விகளையும், அன்னார் பதில்களுடன் பிரசுரிக்கிறார்.மிக எளிமையான விளக்கங்களுடன் வரும் முறையானபதில்களால் நமது ஜோதிட அறிவில் தெளிவு பெறுகிறோம் என்றால் மிகையாகாது!
    இன்றைய இரண்டாவது பாடத்தில் புதிய மாணாக்கர்களுக்காக மீண்டும் "பரல் மற்றும் அஷ்டகவர்க்கம்" பற்றி எழுதவாரம்பித்துள்ளது என்னைப் போன்றே பலருக்கும் உபயோகமாயிருக்கும் என்று நம்புகிறேன்.
    அன்புள்ளத்துடன் தான் பெற்றுள்ள ஜோதிட அறிவைப் எங்களுக்குப்
    பகிர்ந்தூட்டும் வாத்தியாரையாவுக்கு
    வகுப்பறையின் சார்பில் மனமுவந்து தரும் வணக்கத்தினை ஏற்றுக்கொள்ளுங்கள், ஐயா.//////

    ஏற்றுக்கொண்டேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா வணக்கம்!!!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி////

    உங்களுடைய வணக்கத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  13. ////Blogger selvaspk said...
    When a lagna is fortified with below for example
    - with vargothama lagna on navamsa
    - benefic aspects lagna
    - asta varga score >4 for lagna
    but if lagna lord is
    - conjucted/receives aspects with malefic
    - positioned on enemy house or 6/8/12
    - debilitated
    what kind of ill effects it can bring to a person?
    whenever in future you consider providing us a sample educational horoscope, if you can consider these on mind it will be really helpful. I find your lessons extremely helpful when the rules are assessed with a horoscope.//////

    சொந்த ஜாதகத்தை அல்லது தெரிந்தவர்களின் ஜாதகத்தைக் கொடுத்து பலன் கேட்காதீர்கள். அலசிப் பலன் சொல்லவெல்லாம் எனக்கு நேரமில்லை!

    ReplyDelete
  14. //////Blogger Mrs Anpalagan N said...
    Dear Sir,
    have a sense of how the parals work, but do not know how to calculate them yet.
    I haven't yet had a chance of reading your old lesson about calculating the parals.
    Still reading your old posts one by one whenever I have free time.
    But, posting this lesson here is good.
    Thanking you
    Sincerely
    Mrs N Anpalagan//////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. நன்றி
    மிகவும் பயனுள்ளது

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com