மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.7.15

Half Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தால் என்ன ஆகும்?



Half Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தால் என்ன ஆகும்?

Quiz.90

10.7.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


ஜாதகத்தில் தன யோகம் உள்ளது. ஐந்தாம் வீட்டுக்காரனும் ஒன்பதாம் வீட்டுக்காரனும் ஒன்றாக இருப்பதோடு, அவர்களை இரண்டாம் வீட்டுக்காரன் வலிமையோடு தன் பார்வையில் வைத்திருக்கிறான். ஆகவே தன யோகம் உள்ளது. ஆனால் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்காரனுமான சனீஷ்வரனின் மகா திசை ஜாதகருக்கு வாழ்க்கையின் கடைசிப் பகுதியில்தான் வருகிறது. ஆகவே ஜாதகருக்கு யோகம் கிடைத்தும் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலைமை.

ஆனால் ஜாதகர் தனது 24வது வயதில் வேலைக்குச் செல்ல மறுத்து சொந்த வியாபாரம் செய்ய விரும்பினார். ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கு விருப்பமில்லை.

ஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள். ஜாதகர் வேலைக்குச் செல்ல வேண்டுமா? அல்லது வியாபாரம் செய்யலாமா? எது நல்லது? ஜாதகப்படி என்ன காரணம்?

கேள்வி: வேலையா அல்லது வியாபாரமா?
பதில்: ஒரே வரியில் காரணத்துடன்

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

37 comments:

  1. ஜாதகர் வேலைக்கு செல்வதே நல்லது. 24 வயதில் ஜாதகருக்கு சந்திர தசை, இராகு புக்தி கிட்டத்தட்ட முடிந்து குரு புக்தி தொடங்க இருக்கும். சந்திரன் 7ம் வீட்டு மாரகாதிபதி, குரு விரையாதிபதி, இராகுவும் விரையத்தில் உள்ளார். சந்திரன் 4ம் வீட்டில் செவ்வாயின் நேரடி பார்வையில் உள்ளார். பத்தாம் வீட்டில் பாதகாதிபதி செவ்வாய். பத்தாம் வீட்டு சுக்கிரன் அந்த வீட்டிற்கு 2ல் பாக்கியாதிபதியோடு இருந்தாலும், மற்ற அமைப்புகளால் ஜாதகர் வேலைக்கு செல்வதே நல்லது.

    ReplyDelete
  2. வேலைக்கு தான் செல்ல வேண்டும் . 12'ம் அதிபதி குருவின் புக்தி , சந்திர தசையில். சொந்த தொழில் ஆரம்பிக்க சரியான நேரம் இல்லை.
    அது மட்டும் இல்லாமல், அந்த நேரத்தில், 7.5 சனி நடந்தது அதுவும் விரய சனி . வியாபாரம் ஆரம்பித்து இருந்தால் அதில் கண்டிப்பாக தோற்றிருப்பார்

    ReplyDelete
  3. வேலைக்குச் செல்ல வேண்டுமா?
    Job going is governed by 6th place
    Laknathipathy and also Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
    1) Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
    2) Bagavaathipathy Bhudhan has 8 bindus but has the Retrograde Saneeswaran Parvai and in 11th place to Laknam.
    3) Bavagam has 28 Bindus and is with Kethu and has Suriyan and Guru Parvai but these Graghas are in 12th place to Laknam.
    4) Karmakaraghan is at 5th place to Laknam but in 12th place to Bavagam.
    5) Bagavaathipathy Bhudhan is at 11th place to Laknam but in 6th place to Bavagam.
    வியாபாரம் செய்யலாமா?
    Doing Business is governed by 10th place
    Laknathipathy and also Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
    1) Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
    2) Bagavaathipathy Sukkiran has 4 bindus but has the Parivarthanai yokam with Sevvai.
    3) Bavagam has 35 Bindus and is with Parivarthanai Sevvai and has Chandiran Parvai.
    4) Karmakaraghan is at 5th place to Laknam but in 8th place to Bavagam.
    5) Bagavaathipathy Sukkiran is at 11th place to Laknam but in 2nd place to Bavagam.

    From the above the Native should do Business.

    ReplyDelete
  4. Quiz.90 ற்கான பதில்,

    வணக்கம் வாத்தியாரே!

    மகர லக்கினாதிபதி ஸ்திர ராசியில்(ரிஷபம்), 3ம் அதிபதி 12ல் மறைந்து விட்டார். வியாபாரம் செய்ய ஏற்ற அமைப்பு. வியாபாரம் செய்ய வேண்டிய ஜாதகம். அதுதான் வரும்.


    ஒருவரியில் பதில் என்றால், வணக்கம் வாத்தியாரே! & அன்புள்ள மாணவன் ஆகியவை சேராது என்று நினைக்கிறன்.... ஹிஹி... ஹி....

    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  5. சர லக்னத்தில் பிறந்ததால் லாபாதிபதி பதாகாதபதி ஆகயால் வேலைக்கு செல்வதே உத்தமம்

    ReplyDelete
  6. அய்யா அவர்களுக்கு வணக்கன்கள்.
    தாமதாமான தன யோகம் பாதி புதிர் விடை - ஒரே வரியில் பதில்:
    ஜாதகர் வேலைக்குத்தான் செல்ல வேண்டும்.
    காரணம்: 9 & 10 க்குறிய புதன்,சுக்கிரன் 11ல் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் மட்டும் அல்லாது 10 & 11 அதிபதிகள் சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை. ஜாதகர் காவல் துறை அல்லது ராணுவத்திலோ பணிசெய்து கொண்டிருப்பார்.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  7. Answer to Quiz.90:

    ஆரம்பத்தில் வேலைக்கு சென்று பின் வியாபாரம் செய்து இருப்பார்.ராகு திசையில் வியாபாரம் ஆரம்பித்து குரு திசையில் வெற்றி பெற்று இருப்பார்.
    காரணம்: 10 ஆம் அதிபதி சுக்கிரன் 10 க்கு இரண்டில் மற்றும் 6 ஆம் அதிபதி புதன் உடன். மற்றும் ஆரம்ப கலத்தில் வந்த திசைகள்.

    மு.சாந்தி.

    ReplyDelete
  8. வணக்கம்,
    சனி நல்ல நிலையில் உள்ளதால் உடல் உழைப்பு சிறந்தது
    உத்யோக ஸ்தான அதிபனும் 4,11ம் இட அதிபனும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர்.
    நன்றி

    ReplyDelete
  9. He should've opted for a job. mahara lagna 11th house is considered badhakastham. mercury and venus in 11 th house will not give favaorable financial gains thru business. so its better to take a job to avoid financial loss.

    ReplyDelete
  10. Vanakkam Iyya,

    Jathagar velaiku thaan sella vendum, 11aam athipathi antha veetiruku 12il(Lagnathiruku 10il)

    nandri,
    Bala

    ReplyDelete
  11. வணக்கம் சார்......
    மகரலக்னம். லக்னாதிபதி 5ல். 5+9ஆம் அதிபதிகள் பார்வையுடன்.(5ஸ்டார் ஹோட்டலில் பால்ரூம்டான்ஸ் பார்பதுபோல)
    செவ்வாய் 10ல் திக்பலம். செவ்+சுக்=பரிவர்த்தனை. சந்+செவ்=நேரடிபார்வை(சந்திரமங்களயோகம்)
    ஜாதகன் வியாபாரம் சுயதொழில்தான் செய்வார் !!!

    ReplyDelete
  12. வியாபாரமே செய்யவேன்டும்.



    வியாபாரத்தை குறிக்கும் 7 ஆம் வீட்டு அதிபதி சந்திரன் , சுக (4ஆம்) இடத்தில்

    இருந்து , தொழில் பாவத்தில் உள்ள‌ லாபாதிபதி செவ்வாயை பார்க்கிறார்.

    செவ்வாய , சந்திரனையும்.லக்கினத்தையும் ,லக்னாதிபதியையும் பார்க்கிறார்

    லக்னாதிபதி சனிக்கும், வியாபார காரகன் புதனுக்கும் பார்வை.




    நன்றி, தயாநிதி, அவியனுர்

    ReplyDelete
  13. தடம் மாறிய
    தலை எழுத்து

    ReplyDelete
  14. He has to go for Job till the completion of Jubitor period

    G.Seenivasan
    Bhauch
    Gujarat

    ReplyDelete
  15. Dear Guruji,

    Business, 10th Place Mars gives him managing abilities. 10th Lord and yogakaraka for makara lagna in the 11th house with aspect of saturn.

    ReplyDelete
  16. Native in business,
    10th lord and 11 th parivarthana and
    For 10th 10th lord moon in 4th house and aspecting 10th house,9th & 10 th lord in 11th house,lagnathpathi in 5th house aspecting 11th house , but

    dhana jathagam

    ReplyDelete
  17. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    புதிர் எண் 90.
    மகர லக்னம் . லக்னாதிபதி சனி 5ல் மாந்தியுடன் இருக்கிறார்.
    பிறவியில் சுக்ர திசை குட்டி சுக்ரன் கொட்டி கொடுப்பான்..! சுக்ரன் 14 வருடங்கள் ..

    **6ம் &9ம் வீட்டுகாரனுடன் .10ம் வீட்டுக்காரன் கும்மி அடிக்கிறானே ????**புதன் 6ம் வீட்டுகரனும் கூட
    6ம் வீட்டுக்காரன் சம்பந்த பட்டால் கேடுதானே..!!!!
    **சுய தொழில சரிபட்டு வராது **

    8ம் வீட்டுக்காரன் 12.ல் ஒரு கெட்டவனுடன் [ராஹு ]விபரீத ராஜ யோகம் .
    11ம்வீட்டுகாரன செவ்வாய் 10ம் வீட்டுக்காரன் சுக்கிரன் பரிவர்த்தனை.யோகம்
    இருந்தாலும்.

    **இவர் அடிமை தொழில் செய்ய மட்டுமே.** .

    ReplyDelete
  18. quiz no :90 Ans:

    1.வேலையே நன்று
    2.சனி மாந்தி இணைவு

    M. Thirumal, Pavalathanur

    ReplyDelete
  19. ஜாதகர் 17 டிசம்பர் 1972 காலை 10 மணி 9 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.

    அஷ்ட வர்கப்படி வியாபாரத்திற்கு உரிய‌ மூன்றாம் இடத்திற்கு 30 பரல்.12 விரய ஸ்தானத்திற்கு 19 பரல் மட்டுமே.வியாபரத்திற்கு உரிய‌ புதனுக்கு சுயவர்கத்தில் 8க்கு எட்டு!

    என் ஓட்டு அவருக்கு வியாபரத்திற்கே!

    ReplyDelete
  20. Dear Sir,

    He will do Business. 10th lord and 11th lord exchange and encourage to do business.

    Thanking you,

    C.Jeevanantham.

    ReplyDelete
  21. He has to start a business but definitely not in Surya Dasa.

    1. Lord of 10 and 11 parivardhana for the native(Those were Lord of 4 and 5 also)
    2. The Labathibathi(also lard of 4th) is in 10th with Thik Bala
    3. The Tenth lord is in Leo in navamsa. So he has managerial capability to run a business
    4. Chandra mangal yoga also

    ReplyDelete
  22. வணக்கம் குரு,

    வேலைக்கு செல்வதே உத்தமம். காரணங்கள்,

    1. பத்தில் பரிவர்த்தனை யோகம், திக் பலம் மற்றும் விரயாதிபதி குருவின் சாரமும் பெற்ற பாதகாதிபதி செவ்வாய் பலமாக அமர்ந்ததோடு லக்னாதிபதியையும், லக்னத்தையும்(சந்திரா லக்னத்திற்கு 10மிடம்), 10க்கு 10மிட அதிபதி சந்திரனையும் பார்க்கிறார்.
    2. பாதகாதிபதி செவ்வாய் மற்றும் விரயாதிபதி குருவின் பார்வை பெற்ற சந்திரன் தசை செவ்வாய் புக்தி மற்றும் ஏழரை சனி நடப்பில் இருந்தது.
    3. தரும கருமாதிபதி யோகம் பாதக ஸ்தானத்தில் அமைந்தது.
    4. 6மிடம் 10மிடத்தை விட பலமாக உள்ளதால்(குரு, ராகு பார்வை, கேது அமர்வு மற்றும் 6ம் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு 6இல்) வேலைக்கு செல்வதே நல்லது.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  23. 1. வியாபரம்

    காரணங்கள்

    1. 10ம் அதிபதி சுக்கிரன் திரிகோணத்தில் + 1-ம் அதிபதி சனி பகவானின் சப்தம பார்வையில் சம்பந்தம்.
    2. லாபாதிபதி செவ்வாய் 10-ல் இருந்து , 8-ம் இட பார்வையில் லக்கினாதிபதி சனி
    3. 2,5,9 ம் ஸ்தானாதிபதிகள் சேர்க்கை மற்றும் பார்வைகள்

    சுக்கிரன் தசை மீதி 14 வருடம் + சந்திரன் திசை 10 வருடம் முடிந்து 24ம் வயதில் செவ்வாய் திசையில் தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுகிறது. ரியல் எஸ்டேட் அல்லது உணவு சம்பம்தம் பட்ட தொழிலாக இருக்கலாம்.

    ReplyDelete
  24. Respected Sir
    He should go to work. 11th lord is in 10th house (12th from its house)

    ReplyDelete
  25. வணக்கம் ஐயா:

    1. ஐந்தாம் வீட்டுக்காரனும் ஒன்பதாம் வீட்டுக்காரனும் ஒன்றாக இருப்பதோடு, அவர்களை இரண்டாம் வீட்டுக்காரன் வலிமையோடு தன் பார்வையில் வைத்திருக்கிறான்.
    2.10 க்கு உடைய சுக்கிரனும் 11க்கு உடைய செவ்வாயும் பரிவர்த்தனை.
    3.10 ம் இடம் நன்றாக உள்ளது, சசி மங்கள யோகம், நிபுணத்துவ யோகம் போன்ற பல சுப யோகங்கள் உள்ளன.
    4.சந்திர திசை சாதகமாக உள்ளது. ஜாதகர் தொழில் செய்யலாம்.

    நன்றி

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா,

    வெற்றி ஸ்தான அதிபதி குரு பன்னிரெண்டில் மறைந்ததோடு எட்டாம் அதிபதி சூரியனுடனும், ராகுவுடனும் சேர்ந்து ரொம்ப அடிபட்டு போயிட்டார்;அதுவுமில்லாமல் 12மிட ராகு 30 மாடி வரை ஏற்றி சென்று அப்புறம் குப்புற தள்ளி விடுவான். பேசாமல் வேலைக்கு போவது உத்தமம்.

    சரியா ஐயா?

    ReplyDelete
  27. ஜாதகர் வேலைக்குச் சென்றால் சோபிக்க மாட்டார். காரணம் சூரியன் 12ல் மற்றும் 6க்குரிய புதன் அதற்கு 6ம் இடத்தில். எனவே அரசு வேலை கிடைப்பதும் கிடைத்தாலும் அதில் சோபிப்பது அரிது.

    வியாபாரம் செய்தால் பலன் உண்டு காரணம்.

    1. 10 க்குரிய சுக்கிரனும் 11க்குரிய செவ்வாயும் பரிவர்த்தனை யோகத்தில்.
    2. 2 க்குரிய சனி ஏழாம் பார்வையால் 11ம் இடத்தைப் பார்ப்பதால் தன வருவாய் பாக்கியமாக உண்டு. 12 க்குரியவனும் வலுத்திருப்பதால் பணப்புழக்கம் - விரயம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் வியாபாரம் இவருக்கு ஒத்து வரும்.
    3. 10ம் இடத்தில் செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் இவருக்கு ரியல் எஸ்டேட் அல்லது construction business லாபகரமானதாக இருக்கும்.
    4. 24 வயதில் சூரியதிசையில் வியாபாரம் செய்தாரானால் 6 வருடங்கள் கழித்து வரும் செவ்வாய் திசையில் மிகுந்த யோகம் உண்டு.

    ReplyDelete
  28. ஜாதகர் வேலைக்கு செல்வதைவிட businees செய்தால் நல்ல பலன் கிடைகும். காரனம்
    1. 9ம் அதுபதி மற்றும் 10ம் அதிபதி சேர்ந்து தர்மகத்தா யொகம் அடைந்து திரிகோணம் ஏரி இருகின்றனர் அதும் லாபஸ்தானத்தில்.
    2.11ம் அதிபதி (லாபஸ்தான அதிபதி) 10ல் ஆக இவருக்கு தொழிலில் நஸ்டம் வர வாய்பே இல்லை

    ReplyDelete
  29. the native should start a business. because in eleventh place fifth and nineth conjunction. it is aspected by second house. Also fourth house is aspected by guru.

    Nellai padmanaban

    ReplyDelete
  30. Dear Sir
    The answer to the question is – yes he will venture into business which will be very successful and the reasons are
    1. As suggested by you 5th lord and 9th lord are occupying the 11th which is an important house to indicate a success in business.
    2. Saneeswaran is also important (Karakan) and lord of Lagna and is aspecting the 11th house.
    3. If the Lagna Lord or Lagna or moon in the sign of Taurus then this signifies the native will thrive in business. And also if sign of Taurus aspected or occupied by either Mercury or Jupiter or Venus then this gives a benefic influence to business career.

    Thanks
    Rajam Anand

    ReplyDelete
  31. QUIZ NO.90 வணக்கம்.
    17/12/1972 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 10.10.00 மணிக்கு பரணி நட்சத்திரத்தில் மகர லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
    மகர லக்கினம் : யோககாரர்கள்: சுக்கிரன், புதன்

    பதில் : வேலை

    காரணம்: 1
    வியாபாரம் செய்ய வேண்டுமானால் ஜாதகரின் தோற்றம்(லக்கினாதிபதி),உடல் வலிமை(சூரியன்),மனவலிமை (சந்திரன்)ஆகியவைகள் அவசியமாகும்.இந்த ஜாதகத்தில் இவைகள் நன்றாக இல்லை. இவைகள் நன்றாக இருந்தால்தான் ஜாதகர் வியாபாரத்தில் முழுபலனை அடையமுடியும்.
    லக்கினாதிபதி சனி(1 பரல்) இந்த ஜாதகத்தில் வக்கிரம். 5ம் வீட்டில் மாந்தியுடன் கூட்டு. 6ம் வீட்டு அதிபதி புதனின் 7ம் பார்வை. பவீனமாக உள்ளார்.
    உடல் வலிமை கொடுக்க்கூடுயவன் சூரியன் (3 பரல்) 8ம் வீட்டு அதிபதி 12ல் ராகுவுடன் கூட்டு.பவீனமாக உள்ளார். மனகாரகன் சந்திரன் (1 பரல்) 4ம் வீட்டில் அமர்ந்து 10ல் உள்ள செவ்வாயின் 7ம் பார்வை, 12ல் உள்ள குருவின் 5ம் பார்வை(குரு ராகு சண்டால யோகம்) பெற்றும் பவீனமாக உள்ளார்.

    காரணம்: 2
    10ல் வந்து அமர்ந்துள்ள செவ்வாயின் மீது சனியின் 6/8 பார்வை.
    பொருள் ஈட்டலுக்கு 2ஆம் வீட்டுக்காரனும், 11ஆம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் சாதகமாக இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 6/8 ல் உள்ளார்கள். அதாவது சனியும், செவ்வாயும் 6/8, 8/6 நிலையில் உள்ளார்கள்.

    காரணம்: 3
    இந்த ஜாதகர் சேவை செய்யகூடிய ஜாதகம்.2ம் வீடு, 6ம் வீடு, 10ம் வீடு அஷ்ட்டவர்க பரல்களின் கூட்டு தொகை 89 பரல்கள். இந்த ஜாதகர் வியாபாரம் செய்ய வேண்டுமானால் கூட்டு தொகை 100 பரல்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.அதாவது 2, 6, 10 ம் வீட்டு அஷ்ட்டவர்க கூட்டு தொகை. அதாவது 2, 6, 10 ம் வீட்டு அஷ்ட்டவர்க கூட்டு தொகை.

    4. 10ம் வீடு (35 பரல்)பலமாக உள்ளது.

    5.10ம் வீட்டு அதிபதி சுக்கிரன் (4 பரல்) 11ல் 6ம் வீட்டு அதிபதியுடன் புதனுடன் கூட்டு.மேலும்,11ம் வீடு பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் ராகு, மறுபக்கம் செவ்வாய்).

    6. 24 வயதில் சந்திர தசை. 10ம் வீட்டு அதிபதி சுக்கிரனின் பார்வை சந்திரனின் மீது 6/8 பார்வை.ஆகையால் வியாபாரம் செய்ய தகுதி இல்லை.மேலும், நவாம்சத்தில் சுக்கிரன் சிம்ம ராசியில் பகை வீட்டில் அமர்ந்துள்ளார்.

    7. அடுத்து வந்த செவ்வாய் தசை 30 வயதில்.10ம் வீட்டில் செவ்வாய் (5 பரல்). செவ்வாயும், சுக்கிரனும் பரிவர்தனை. சுக்கிரன் மகர லக்கினத்துக்குயோககாரன்.அவர் ஜாதகருக்கு நன்மை செய்ய வேண்டியவர்.

    ReplyDelete
  32. SIR, HIS JATHAGAM INDICATE HE IS SUITABLE FOR BUSINESS BECAUSE BOTH RASI AND NAVAMSA 10TH PLACE OCUUPYING MARS AND SAT 5TH IN RASI AND 11TH IN NAVAMASA, AND HE IS NOT SUITABLE FOR JOB BECAUSE 6TH PLACE OCCUPYING KATHU AND 6TH LORD BUDHA 6TH PLACE FROM THE 6TH PLACE.

    ReplyDelete
  33. Sir,

    I would like to join in your advance classes in Galaxy2007. Kindly sent me the verification code and allow me to register.

    Regarding this i sent mails to you.

    Kindly allow me to read your advance classes.

    I would like to thank you in advance for your kind consideration and action for the above.
    my details,
    Name: S. Umakanthan
    mail id: umakanth.suk@gmail.com

    ReplyDelete
  34. ஐயா வணக்கம்
    பதில்
    வேலைக்கு செல்வதே நல்லது.

    கர்மகாரகன் சனி மாந்தி வீட்டில் ,

    கர்மஸ்தான அதிபதி உடன் 6 ம் அதிபதி புதன் சேர்க்கை,

    யோக்காரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யில் உள்ளார்.

    கண்ணன்.

    ReplyDelete
  35. பாதி புதிர்: தனயோகம் தாமதமாக கிடைத்தால் என்ன ஆகும் ? வியாபரத்தில் நஷ்டமே உண்டாகும். வேலைக்கு செல்வதே உத்தமம்.
    அய்யா,
    மகர லக்கினம், மேச ராசி ஜாதகர். லக்கினாதிபதியும், தனாதிபதியுமான சனி 5ல் வக்கிரம். லாபாதிபதி செவ்வாயும் யோகாதிபதியும், தொழில் ஸ்தானாதிபதியுமான சுக்கிரனும் பரிவர்த்தனை அடைந்துள்ளனர். லாபஸ்தானத்தில் வில்லன் புதன் அமர்ந்துள்ளார்.

    ஜாதகரின் 24 வயதில் வந்த சந்திர தசை அவருக்கு வியாபாரம் செய்யும் ஆசையை தூண்டியது. அவரின் மேல் விரையாதிபதி குருவின் 5ம் தனிப்பார்வை உள்ளது. வியாபாரத்தை தொடங்கியிருந்தால் நஷ்டத்தையே சந்தித்திருப்பார். தவிர அடுத்தடுத்து வரும் தசாபுக்திகளும் வியாபாரத்திற்கு சாதகமாக இல்லை.மேற்கண்ட காரணங்களால், ஜாதகர் சொந்தத்தொழில் செய்வதை விட வேலைக்கு செல்வதே நல்லது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com