மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.7.15

ஓஹோ அதுதான் பெயர்க் காரணமா?


ஓஹோ அதுதான் பெயர்க் காரணமா?
------------------------------------------
சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை
தெரிந்துகொள்வோம் ...!

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்... சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...

* 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...

* Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...

* chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...

* 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...

* மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...

* தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...

* சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...

* முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...

* உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...

* சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...

* கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்...

* சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...

* பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...

* சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...

* நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...

* புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...

* அதிக அளவில் மல்லிகை பூக்கள்  பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...

* 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...

* முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...

* மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...

* பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...

* சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...

* திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...

* பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என
பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...

* தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே
இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...

* வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது.

வாட்ஸ்அப்பில் வந்தது. படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
=======================================================================
வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!

6 comments:

  1. அருமை வாத்தியாரே!!!

    ReplyDelete
  2. பெயருக்கு காரணம் சொல்வது சரி அதற்க்கு முன் உள்ள
    பெயரை யாரவது சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்

    கட்டிய வீட்டிற்கு பழுது சொல்வார்கள் வீட்டை
    கட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்

    ஆமாம் போடுவதற்கு நாம் என்ன
    அரசியல்வாதிகளா என்ன

    பல பெயர்கள் அவர்கள் பெருந்தன்மையில்
    பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது

    ReplyDelete
  3. ஊர்/இடத்தின் பெயர் ஆராய்ச்சி செய்தால் பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும்.

    நால்வர் பாடிய பாடல்களில், பாடல் பெற்ற ஸ்தலத்தின் புவிஇயல்( ஜியாகரஃபி), வரலாறு, சிறப்பு ஆகியவை கூறப்பட்டிருக்கும்.எடுத்துக்காட்டாக 'காவிரி வடகரை மாந்துறை' என்று எங்கள் ஆங்கரை கிராமத்திற்கு அடுத்த கிராமத்தை பத்து செய்யுட்களில் சீர்காழிப் பிள்ளையார் கூறுவார்.இன்றும் அது வடகரையில்தான் இருப்பதால் அதுதான் 1500 வருடங்களுக்கு முன்பிருந்த கோவில் என்பது உறுதியாகிறது.

    இது போல ஒவ்வொருவரும் ஆய்ந்தால் பல த‌கவல்கள் கிடைக்கும். சென்னையைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  4. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமை வாத்தியாரே!!!////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////Blogger Visu Iyer said...
    பெயருக்கு காரணம் சொல்வது சரி அதற்க்கு முன் உள்ள
    பெயரை யாரவது சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்
    கட்டிய வீட்டிற்கு பழுது சொல்வார்கள் வீட்டை
    கட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்
    ஆமாம் போடுவதற்கு நாம் என்ன
    அரசியல்வாதிகளா என்ன
    பல பெயர்கள் அவர்கள் பெருந்தன்மையில்
    பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது /////

    எவர்கள் பெருந்தன்மையில் வேப்பிலையாரே?

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    ஊர்/இடத்தின் பெயர் ஆராய்ச்சி செய்தால் பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும்.
    நால்வர் பாடிய பாடல்களில், பாடல் பெற்ற ஸ்தலத்தின் புவிஇயல்( ஜியாகரஃபி), வரலாறு, சிறப்பு ஆகியவை கூறப்பட்டிருக்கும்.எடுத்துக்காட்டாக 'காவிரி வடகரை மாந்துறை' என்று எங்கள் ஆங்கரை கிராமத்திற்கு அடுத்த கிராமத்தை பத்து செய்யுட்களில் சீர்காழிப் பிள்ளையார் கூறுவார்.இன்றும் அது வடகரையில்தான் இருப்பதால் அதுதான் 1500 வருடங்களுக்கு முன்பிருந்த கோவில் என்பது உறுதியாகிறது.
    இது போல ஒவ்வொருவரும் ஆய்ந்தால் பல த‌கவல்கள் கிடைக்கும். சென்னையைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஐயா!//////

    ஆங்கரை கிராமம் வாழ்க! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com