புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்!
கல்லறை வாசகங்கள் என்றால் சாதாரணமானதா? எத்தனையோ புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் உள்ளன. நீங்கள் தெரிந்துகொள்வதற்காக புகழ்பெற்ற சில கல்லறை வாசகங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
1
கவிஞர் ஷெல்லி தன் தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :
சப்தமிட்டு நடக்காதீர்கள்
இங்கேதான்என் அம்மா
இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!.
2
உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்.
‘உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது.
நல்ல வேளையாகப் பிணமானாள்.
இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும்’.
3
மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்:
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு
இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது.".
4
ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளியின் கல்லறை வாசகம்
"இங்கும் புதை குழியில் கூட
இவன் கறையான்களால் சுரண்டப்படுகின்றான்.".
5
அரசியல்வாதியின் கல்லறை மீது எழுதப்பட்ட வாசகம்
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள்,
இவன் எழுந்துவிடப்போகிறான்."
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
nanraga ualathu aya
ReplyDelete1st. & last super
ReplyDeleteஒரு போர்வீரனின் கல்லறயில்:
ReplyDelete"மற்றவர்கள் வாழ்வதற்காகத் தான் இறந்தவர்."
As a Comrade, I appreciate Commeades command
ReplyDeleteவகுப்பாசிரியர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். இது ஒர் அருமையான பதிவு. மிகவும் நன்றாக இருந்தது. பாராட்டுகள் பல பல..
ReplyDeleteநான் இது போன்ற ஒரு வாசகத்தை படித்து இருக்கிறேன். ஆனால் புலவரின் பெயர் சரியாக நினைவில் இல்லை. “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்” என்பது தான் அந்த வாசகம்.
மேலும், தாங்கள் எழுதிய பாடங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரையில் 50 பாடங்கள் முடித்து இருக்கிறேன். எனது கேள்விக்களுக்கு ஏன் பதில் எழுதவில்லை என்று தெரியவில்லை.நீங்கள் பதில் தந்துருந்தால் நான் படித்து இருக்க மாட்டேன். இதன் பேரும் புகலும் உங்களையே சேரும். மிகவும் நன்றி நன்றி.
என்னுடய கல்லறையில்
ReplyDeleteஎன்ன எழுத போகிறிர்கள்
வணக்கம் வாத்தியார் ஐயா!
ReplyDeleteதிருமலா திருப்பதி பாதயாத்திரை அழைப்பிதழை தங்களுக்கு அனுப்பி உள்ளேன் என்பதனை தெரியபடுத்துகின்றேன் .
நன்றி ஐயா
////Blogger My Mobile Studios said...
ReplyDeletenanraga ualathu aya/////
நல்லது. நன்றி நண்பரே!
///Blogger Prakash Kumar said...
ReplyDelete1st. & last super////
உங்கள் தெரிவிற்கும் அதைப் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தியதற்கும் நன்றி நண்பரே!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஒரு போர்வீரனின் கல்லறயில்:
"மற்றவர்கள் வாழ்வதற்காகத் தான் இறந்தவர்."////
உண்மைதான். நன்றாக உள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஒரு போர்வீரனின் கல்லறயில்:
"மற்றவர்கள் வாழ்வதற்காகத் தான் இறந்தவர்."////
உண்மைதான். நன்றாக உள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger SELVARAJ said...
ReplyDeleteAs a Comrade, I appreciate Commeades command////
நல்லது. நன்றி!
/////Blogger C.P. Venkat said...
ReplyDeleteவகுப்பாசிரியர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். இது ஒர் அருமையான பதிவு. மிகவும் நன்றாக இருந்தது. பாராட்டுகள் பல பல..
நான் இது போன்ற ஒரு வாசகத்தை படித்து இருக்கிறேன். ஆனால் புலவரின் பெயர் சரியாக நினைவில் இல்லை. “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்” என்பது தான் அந்த வாசகம்.
மேலும், தாங்கள் எழுதிய பாடங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரையில் 50 பாடங்கள் முடித்து இருக்கிறேன். எனது கேள்விக்களுக்கு ஏன் பதில் எழுதவில்லை என்று தெரியவில்லை.நீங்கள் பதில் தந்துருந்தால் நான் படித்து இருக்க மாட்டேன். இதன் பேரும் புகழும் உங்களையே சேரும். மிகவும் நன்றி நன்றி./////
நாளொன்றிற்கு 50ற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வருகின்றன. அனைத்தையும் படித்துப் பதில் எழுத விருப்பம்தான். ஆனால் நேரத்திற்கு எங்கே போவது? நேரமின்மைதான் காரணம்!
/////Blogger Visu Iyer said...
ReplyDeleteஎன்னுடய கல்லறையில்
என்ன எழுதப் போகிறிர்கள்?//////
நமக்கு, அதாவது நம் இருவருக்கும் கல்லறை ஏது? இறந்தால் 24 மணி நேரத்திற்குள் எரித்து சாம்பலாக்கி விடமாட்டார்களா என்ன? அஸ்தியை சின்ன டின்னில் அடைத்து வாரணாசிக்கு அனுப்பிவிடுவார்களே!
//////Blogger kannan Seetha Raman said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார் ஐயா!
திருமலா திருப்பதி பாதயாத்திரை அழைப்பிதழை தங்களுக்கு அனுப்பி உள்ளேன் என்பதனை தெரியபடுத்துகின்றேன் .
நன்றி ஐயா/////
நல்லது. பார்த்து வலையில் ஏற்றுகிறேன்.
//நான் இது போன்ற ஒரு வாசகத்தை படித்து இருக்கிறேன். ஆனால் புலவரின் பெயர் சரியாக நினைவில் இல்லை. “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்” என்பது தான் அந்த வாசகம்.//
ReplyDeleteஜி யு போப் தனது கல்லறயில் அந்த வாசகம் பொறிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் அது அவ்வாறு செயல் படுத்தபடவில்லை.
வகுப்பாசிரியர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். பின்னூட்த்திற்கு பதில் தந்ததற்கு மிகுந்த நன்றி மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் சரியான பதில் தந்த கிருஷ்ணனன் அவர்களுக்கு நன்றிகள் பல. எனது திருமணம் தாமதம் ஆகி கொண்டிருக்கிறது. இது ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் இது மிகவும் முக்கியமான கட்டம் இல்லையா? இதில் சோதிடர்கள் தோஷம் இருப்பதாக சொல்கிறார்கள். மணமகள் விட்டார்கள் பெண் தர மறுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தடை போல இருக்கிறது. எனவேதான் தாங்கள் அடியேனுகு தயவுசெய்து சற்று நேரம் ஒதுக்கி கவனிக்க வேண்டிகொள்கிறேன்.தங்களுக்கு நேரகாலம் போதாது என்பது என்க்கு புரிகிறது.பிறகு விதி விட்ட வழியில் முயற்சி செய்து பார்கிறேன்...
ReplyDelete///C.P. Venkat said...
ReplyDeleteஎனது திருமணம் தாமதம் ஆகி கொண்டிருக்கிறது. மணமகள் விட்டார்கள் பெண் தர மறுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தடை போல இருக்கிறது. ///
கொடுத்து வைத்தவர் என்று சொல்லி வாழ்த்தட்டுமா திருமணம் செய்து
கொள்ளமலே சுகமாக வாழ முடியும்...
என்னுடய ஆலோசனை இது தான்
எப்போதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்
கால சுழல் அதற்கேற்ப நாம் வாழ வேண்டாமா
காலம் கொடுத்த பரிசு என சந்தோஷமாக இருங்கள்.
தனிமையில் இனிமை காண முடியும்
தரமான வாழ்க்கை தாராளமாக கிடைக்கும்
மனம் போல் வாழ்க
/// visu lyer said..
ReplyDeleteகொடுத்து வைத்தவர் என்று சொல்லி வாழ்த்தட்டுமா திருமணம் செய்து
கொள்ளமலே சுகமாக வாழ முடியும்...
என்னுடய ஆலோசனை இது தான்
எப்போதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்
கால சுழல் அதற்கேற்ப நாம் வாழ வேண்டாமா
காலம் கொடுத்த பரிசு என சந்தோஷமாக இருங்கள்.
தனிமையில் இனிமை காண முடியும்
தரமான வாழ்க்கை தாராளமாக கிடைக்கும்
மனம் போல் வாழ்க///
என்னுடைய திருமணம் தாமதம் ஆகி கொண்டிருக்கிறதுதான். எனது ஜாதகத்தில் 7 ல் சந்திரன் ஆட்சி, சுக்ரனும் சேர்ந்து உள்ளது. சிலர் தோஷம் எனவும், தாயா தாரமா என என்னை பயமுறுத்துகிறார்கள்.சிலர் உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆனாதால் ஒன்றுமில்லை என்றும் சொல்கின்றார்கள்.எனவேதான் குருஜியிடம் விளக்கம் கேட்டேன்.குருஜிதான் பதில் தராமல் இருக்கிறார்...
எனக்கு நிறைய வாழ்க்கை அனுபவம் உண்டு.கரடுமுரடான பாதைகளில் தான் எனது பயணம் இருந்திருக்கிறது.எத்தனை தீமைகள், நன்மைகள் வந்தாலும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்பது எனது எண்ணம். அடுத்த பிறவி வேண்டவே வேண்டாம்.
எனக்கு தந்தையார் இல்லை.தாய் மட்டும்தான் எங்களை வளர்கக,படிக்க என அவர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லிலாகது. அவர்கள் விருப்பத்தை நிறைவு செய்ய வேண்டும்.