நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பாருங்கள். வேறு விவகாரம் எதுவும் வேண்டாம்
----------------------------------------------------------------------------------------
1
கஷ்டம் எப்பவும் நம் கூடவே இருக்கும்..
ஆனால் சந்தோஷம் வந்து வந்து போகும்.
இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் .....
.
"My Wife is With Me, But, Her Sister Comes and Goes .... !!
----------------------------------
2
சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?
B: கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?
A: கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.
B: கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.
A: அப்போ பின்னாடி.
B: அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை
-----------------------------------------
3
நீதியின் நிலை இது தான்..
காட்டிலிருந்து அலறியடித்து ஓடிய பசுவைத் தடுத்த யானை, “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டது.
“காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிப்பதற்குஅரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது”என்றது பசு.
“நீ பசுதானே.. அப்புறம் ஏன்ஓடுகிறாய்?” என யானை கேட்க,“நான் பசுங்கிறது எனக்குத் தெரியும். ஆனா என்னை அரசாங்கம் பிடிச்சுதுன்னா நான் எருமையில்லை, பசுன்னுநிரூபிக்க 20 வருசமாயிடும்” என்றது பசு.
இப்போது பசுவுடன் சேர்ந்துயானையும் ஓட ஆரம்பித்தது....
-------------------------------------------
4
ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....)
கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய....
இன்றைக்கு நான் இருக்கும் இந்த நல்ல நிலைக்கு நீ மட்டுமே காரணம்
என் அன்பே....
என் வாழ்வில் நீ வந்தது என் அதிர்ஷ்டம்
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள் நீ ...
நீ என் தேவதை ...
-
-
-
-
மனைவியின் பதில் மெசேஜ் :
குடிச்சிருக்கியா ..??..? அமைதியா வீட்டுக்கு வந்துடு,
பயப்படாதே....!! எதுவும் செய்ய மாட்டேன்...!!!
கணவர் : Thank You.
----------------------------------------
5
ஜோதிடர்:- தம்பி உன் ஜாதகத்துல தோஷம் இருக்கு 36 வயசு பொண்ணைk கட்டிக்கோ,,,,
இரண்டு 18வயதுகளைக் கட்டிக்கலாமா.. ?
ஜோதிடர்:- ஏன் நாலு ஒன்பதுகளைக் கட்டிக்கோயேன்
-------------------------------------------
6
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச் சென்று விட்டது.
“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.
“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன் என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு கொண்டேன்” என்றாள்.
“அப்படியா! உங்கம்மாவைக் கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக் காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன் சொன்னார் அப்பா.
-------------------------------------------------
இந்த ஆறில் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
3, 5
ReplyDeleteஏன் நாலு ஒன்பதுகள கட்டிக்கோயன்
ReplyDeleteசோதிடரின் ப்தில் மிகவும் அருமை.
நன்றி. தயாநிதி, அவியனுர்
Family court is open to issue diverse..
ReplyDeleteஏன் கஷ்ட பட்டு ஒருவரோடு வாழ வேண்டும்
நீதியின் நிலை நிஜம், நகைச்சுவை அல்ல.
ReplyDeleteஜோதிடரின் பதில் மிக அருமை.
ஐந்து - நான்கு ஒன்பது கட்டி கொள்.
ReplyDeleteஅய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ReplyDeleteரசித்தது : ஜோக் 1.... கஷ்டமும் சந்தோஷமும்.
இணைந்தது : ஜோக் 2.... வேண்டாத தெய்வமில்லை.
உணர்ந்தது : ஜோக் 3.... பசு,யானையின் ஓட்டம்(மெய்யாலுமா?)..இருக்கும்!இருக்கும்!!!.
மெய் மறந்தது: ஜோக் 4 ... வந்துரு,வந்துரு, தானா வந்துரு???????.
வியந்தது : ஜோக் 5 ... ஒரு ஒம்பதிலேயே கவுந்துடுவானே?...நாலா.............????.
சிரித்தது : ஜோக் 6 ... ஏர்போர்ட் கஸ்டம்ஸ் ஜோக்கை ரயில் பயணமாக்கியது.
ஆனால் மனைவியிடம் மாமியார் பற்றி................
தவித்தது : பாதி புதிர் போட்டியில் கறிவேப்பிலை மணம் வீசாதது.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
////Blogger daya nidhi said...
ReplyDeleteஏன் நாலு ஒன்பதுகள கட்டிக்கோயன்
சோதிடரின் ப்தில் மிகவும் அருமை.
நன்றி. தயாநிதி, அவியனுர்/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தயாநிதி
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteFamily court is open to issue diverse..
ஏன் கஷ்ட பட்டு ஒருவரோடு வாழ வேண்டும்////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!
/////Blogger SELVARAJ said...
ReplyDeleteநீதியின் நிலை நிஜம், நகைச்சுவை அல்ல.
ஜோதிடரின் பதில் மிக அருமை.////
நல்லது. நன்றி!
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteஐந்து - நான்கு ஒன்பது கட்டி கொள்.////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
//////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஅய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ரசித்தது : ஜோக் 1.... கஷ்டமும் சந்தோஷமும்.
இணைந்தது : ஜோக் 2.... வேண்டாத தெய்வமில்லை.
உணர்ந்தது : ஜோக் 3.... பசு,யானையின் ஓட்டம்(மெய்யாலுமா?)..இருக்கும்!இருக்கும்!!!.
மெய் மறந்தது: ஜோக் 4 ... வந்துரு,வந்துரு, தானா வந்துரு???????.
வியந்தது : ஜோக் 5 ... ஒரு ஒம்பதிலேயே கவுந்துடுவானே?...நாலா.............????.
சிரித்தது : ஜோக் 6 ... ஏர்போர்ட் கஸ்டம்ஸ் ஜோக்கை ரயில் பயணமாக்கியது.
ஆனால் மனைவியிடம் மாமியார் பற்றி................
தவித்தது : பாதி புதிர் போட்டியில் கறிவேப்பிலை மணம் வீசாதது.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.///////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி!
-------------------------------------------------------
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDelete3, 5////
நல்லது.நன்றி தூத்துக்குடிக்காரரே!
aarume arumai !. aaraavathu miga arumai !
ReplyDeleteஐயா வணக்கம்
ReplyDelete/////நீதியின் நிலை இது தான்..///
சூப்பர் ஐயா