வருபவை எல்லாம் அவன் விரும்பி தருபவை தானே!
பக்தி மலர்
இன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்று நிறைவு செய்கிறது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
=====================================================
எனக்கென்ன முருகா ... வருவது வரட்டும்
எல்லாம் உந்தன் மனம்போலே
இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே
(எனக்கென்ன முருகா ... )
நடக்கட்டும் குமரா ... உன் புகழ் இசைத்தால்
நான்கு திசைகளில் வரவேற்பு
என்னை படைத்தவன் உன்னை ... மீண்டும் மீண்டும்
பாடுவதொன்றே என் பிழைப்பு
(எனக்கென்ன முருகா ... )
ஆகட்டும் அழகா ... எங்கே போவாய்
என்முன் ஒருநாள் வாராமல்
நான் அதுநாள் வரையில் ... எது நேர்ந்தாலும்
அன்பை வளர்ப்பேன் மாறாமல்
(எனக்கென்ன முருகா ... )
இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே.
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம் ஆசானே.
ReplyDeleteஅவனை வணங்க மனம் இல்லை . ஆனாலும் வணங்காமல் இருக்கவும் முடியவில்லை.
எல்லாம் அவன் செயல் .
நன்றி ஆசானே .
அருமையான பாடல் ஐயா!
ReplyDeleteஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்
ReplyDeleteமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
////Blogger kannan Seetha Raman said...
ReplyDeleteவணக்கம் ஆசானே.
அவனை வணங்க மனம் இல்லை . ஆனாலும் வணங்காமல் இருக்கவும் முடியவில்லை.
எல்லாம் அவன் செயல் .
நன்றி ஆசானே ./////
எல்லாம் அவன் செயல்தான். கவலை எதற்கு?
/////Blogger Sabareesh Muralidharan said...
ReplyDeletevery good ayya muruganin thirupugazhai paada en tha oru piravi pothumendral athu thavaragum OM SARAVANABHAVA !!
Eppadikku anbulla manavan (NEW)
M.SABAREESH//////
உண்மைதான் நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅருமையான பாடல் ஐயா!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger senapathi siva said...
ReplyDeleteஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!/////
அருள்வான். அருணகிரியாருக்கு அருளியதைப்போல நமக்கும் அருள்வான்!
Muruga...
ReplyDeleteMuruga..