Quiz.no.82 Answer: கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)
வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே.
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)
மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்? - அந்தக்
காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)
படம்: மணப்பந்தல். ஆண்டு 1962
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
=========================================
புதிர் எண் 82ற்கான விடை
28.4.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், ஒரு ஜாதகத்தைக் கொடுத்து மூன்று கேள்விகள் கேட்டிருந்தேன். கேட்கப் பெற்றிருந்த கேள்விகள்:
1. ஜாதகர் பிறந்த தேதி என்ன?
2. ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?
3. அந்தக் கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலைச் செய்தது?
சரியான பதில்:
1. அது ஒரு அம்மணியின் ஜாதகம். அவர் பிறந்ததேதி: 1.7.1969
2. ஏழாம் வீட்டில் (களத்திர ஸ்தானத்தில்) வக்கிரகதியுடன் செவ்வாய்.
12ல் (அயன, சயன, போக ஸ்தானத்தில்) சனீஷ்வரன். இரண்டுமே
கேடானது. அதனால் மணவாழ்க்கைக்கு உரிய அமைப்பு கேடாக
இருந்தது.
3.அம்மணிக்குச் சிறிய வயதில் திருமணமானது. ஆனால் திருமண வாழ்வு சோபிக்கவில்லை. சோகத்தில் முடிந்தது.
விவாகம் ரத்தும் ஆனது.22 வயதில் திருமணமானது. 26 வயதில்
விவாகம் ரத்தானது.
ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!
ரிஷப லக்கின ஜாதகம்.
ஏழாம் வீட்டில் செவ்வாய். அதுவும் வக்கிரகதியில் (Rotrogation)
குரங்கு சேட்டைகளைச் செய்யும்.
அதுவும் கள் குடித்த குரங்கு என்ன செய்யும்.?
அதி மோசமான சேட்டைகளைச் செய்யும்.
7ல் உள்ள செவ்வாய் திருமணத்திற்குக் கேடானது.
அதுவும் வக்கிரகதியில் இருக்கும் செவ்வாய் அதிகக் கேடானது.
ஜாதகிக்கு ராகு திசை துவங்கியவுடன் திருமணம் சிறப்பாக நடந்தது.
ஆனால் அதே ராகு அவரை மகிழ்ச்சியாக வாழ்விடாமல் பிணக்கத்தை
உண்டு பண்ணி விவாகத்தையும் ரத்தாக்கி விட்டது.
சுபக்கிரகமான குருபகவான், கேதுவுடன் கூட்டாக இருப்பதோடு,
ராகுவின் பார்வையிலும் இருப்பதால், அவரும் ஒன்றும் தலையிட்டுச்
சரி பண்ண முடியாத நிலையில் இருந்துவிட்டார்.
கேடான விஷயங்கள் எல்லோருடைய ஜாதகத்திலும் இருக்கும்.
மிகவும் கேடான விஷயம் எது என்பதுதான் முக்கியம்.
இந்த ஜாதகத்தில் மிகவும் கேடான விஷயம் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பதுதான்.
நிறையப் பேர்கள் ஜாதகியின் புத்திர பாக்கியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
பள்ளிக்குப் போவதுதான் முதல் பாக்கியம். படித்துப் பட்டம் வாங்குவது இரண்டாவது விஷயம். பள்ளிக்கே போகவில்லை எனும்போது.
பட்டம் பெறாததைக் குறை சொல்வதில் பயனில்லை.
எட்டாம் வீட்டுக்காரன் குரு தன் வீட்டிற்குப் 10ல் அமர்ந்து லக்கினத்தையும், லக்கினாதிபதியையும் தன் பார்வையில் வைத்திருப்பதால், ஜாதகருக்கு ஆயுள் குறைபாடும் இல்லை!
போட்டியில் 30 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில்
23 பேர்கள் மட்டும் ஜாதகரின் பிறந்த தினத்தைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அது 1.7.1969
முக்கியமான கணிப்பை எழுதியவர்களுக்கு நட்சத்திரக் குறீயீடு கொடுத்துள்ளேன். பலனை ஒட்டி எழுதியவர்களையும்
கீழே சேர்த்துள்ளேன். இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------
1
//////OpenID guest2015 said...
பிறந்த தேதி
ஜுலை 1 1969 3.17 AM
ஜாதகத்தில் உள்ள கேடான அம்சங்கள்.
லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது. லக்னாதிபதிக்கும் அதே நிலைமை.
எட்டாம் அதிபதி (மிக வலுவாக 8 பரல்கள் கொண்ட) குருவின் ஒன்பதாம் பார்வை லக்னம் மற்றும் லக்னாதிபதியின்
மேல். அத்தோடு கேதுவின் கூட்டணி.
ஏழில் வக்கிர செவ்வாய் ஆட்சி. அதன் ஏழாம் பார்வை லக்னத்தின் மேல்.இரண்டில் சூரியன். சனி செவ்வாயின் பார்வை
இரண்டாம் வீட்டின் மேல்.
ஒன்பதாம் வீட்டில் (பாதக வீடு) மாந்தி மற்றும் சந்திரன். அந்த வீட்டின் அதிபதி சனியின் பத்தாம் பார்வை ஒன்பதாம் வீட்டின் மேல்.
சுக்கிரனும் சனியும் 1/12 என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
மிக கேடான அமைப்பு இரண்டு, ஐந்து, ஏழில் பாப கிரகங்கள். ஒன்பதில் மாந்தி குழந்தைகளால் மனக்கஷ்டம் வரலாம்.
தாய், தந்தை ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம். கண் பார்வை கோளாறு ஏற்பட்டிருக்கலாம். ராகு திசையில்
திருமணம் நிலைக்காமல் போயிருக்கலாம் அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பதற்கும் நிறைய வாய்ப்புள்ளது.
thanks
sree
Monday, April 27, 2015 12:56:00 PM/////
--------------------------------------------
2
/////Blogger Ravichandran said...
Ayya,
1. DOB: 1-July-1969, 4AM Chennai
2. Two bad reasons: a)Shani is sitting in 12th house, because he is owner for 9th and 10th houses.b) 8th house
hemmed by Chevvai & Mandhi. So he would have got minimal life(Arpa Ayul).
3. a)This person might not got all in luckily in his life, because Shani is sitting in 12th house(Shani is lucky house owner in his horoscope). Moreover he would not have got sexual desires in his life, because shani is sitting in his 12th house.
b) He would have undergone lot of struggles because of 8th house is under Papa Karthari Yogam.
Your Student,
Trichy Ravi
Monday, April 27, 2015 2:18:00 PM//////
----------------------------------------------
3
*****//////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our Quiz No.82:
1. He/she has born on 01.07.1969 at04:00 to 05:00am.
2. Saturn is placed in 12th place. This is the bad sign of this given horoscope.
3. When Saturn is situating 12th place, It makes Baba kathri Yoga for Lagna and Lagna lord. The Native has to struggle in their life.
4. Saturn is affecting couch pleasure as well as family life (Second house) and also second house lord Mercury is placing 12th place from its own house.
5. Saturn is the Yogakaraga as well as karmakaraga(Authority of 10th house). Hence, The native couldn't get better job in their life. It affects his life too.
6. Hence, Saturn is so weak and affects the Native's family life as well as profession.
With kind regards,
Ravichandran M.//////
------------------------------------------------
4
*****/////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ஜாதகர் பிறந்த தேதி – 01.07.1969 நேரம் 3.30 AM
லக்னமும் லக்னாதிபதியும் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு செவ்வாயின் நேரடிப்
பார்வை வேறு. 7ல் செவ்வாய் இருப்பது தாமத திருமணத்தைக் குறிக்கும்.
குடும்ப ஸ்தானமும், சந்திரனும் சனியின் பார்வை இருக்கிறது. அது குடும்ப வாழ்க்கையில் சண்டை ச்ச்சரவு மற்றும் பிரச்சினையை உண்டு பண்ணி பிரிவினையை ஏற்படுத்தும். சனி 12ல் இருப்பதால் ஜாதகர் தனியே வாழ நேரிடும்.லக்னத்துக்கும், லக்னாதிபதிக்கும், சந்திரனுக்கும் குரு பார்வை இருந்தாலும் குரு கேதுவாலும் ராகுவாலும் பாதிக்கப் பட்டிருக்கிறார்.
5ம் வீட்டில் குருவும் கேதுவும் சேர்ந்திருப்பது நல்லதல்ல. குரு 5ல் இருப்பதால் காரகோ பாவ நாஸ்தி. கேது
இருப்பதால் புத்திர நாஸ்தி
Monday, April 27, 2015 4:41:00 PM////
-------------------------------------------
5
*****/////Blogger thozhar pandian said...
ஜாதகர் ஜூலை 1 1969ம் ஆண்டு பிறந்தவர்.
ஜாதகத்தில் சற்று வலுவில்லாத அமைப்பு என்று பார்த்தால் இடப இலக்கினத்திற்கு யோககாரகரான சனி நீசம் அடைந்திருப்பது, பாக்கிய ஸ்தானத்தில் மாந்தி இருப்பது மற்றும் மாரகாதிபதி செவ்வாய் 7ம்
இடத்தில் இருந்து இலக்கினத்தை தனது நேரடி பார்வையில் வைத்து இருப்பது. இவற்றை விட கேடு என்றால் இலக்கினமும்
இலக்கினாதிபதி மற்றும் களத்திரகாரகரான சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருப்பது. இதனால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை இல்லாமல் போனது. அப்படியே திருமணம் நடந்திருந்தாலும் அதில் மகிழ்ச்சி
இருந்திருக்காது. புதனும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருப்பதால், கல்வியிலும் சிக்கல் இருக்கும். 14 வயதிற்கு
மேல் வரும் செவ்வாய் மகாதசை ஜாதகருக்கு பல சிரமங்களை கொடுத்திருக்கும். ஒரே ஆறுதல் இலக்கினத்திற்கும்
இலக்கினாதிபதிக்கும், சந்திரனுக்கும், புதனுக்கும் குரு பார்வை இருப்பதுதான்.
Monday, April 27, 2015 11:03:00 PM///////
--------------------------------------------
6
////Blogger Siva Radjane said...
1.ஜாதகர் பிறந்த தேதி என்ன?
01.07.1969
2.ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?
ஜாதகரின் 2 ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜாதகரின் 2 ம் வீட்டில் சூரியன் அமர்ந்து ,அந்த வீட்டை பாக்கியாதிபதி சனி’யின் நீச பார்வை. மேலும் 2 ம் வீட்டிற்கு
12 ம் அதிபதியின் 8 ம் பார்வை. ‘2 ம் அதிபன் புதன் ‘2’க்கு 12 ஸ்தானமான லக்கினத்தில் மறைந்து பாப கர்த்தாரியில்
உள்ளார்.
மேலும் சந்திரனுக்கு ‘2’ அதிபனான சனி’ நீசத்தில்..
3.அந்த கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலை செய்தது?
a. ஜாதகரின் வாக்கு ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாதகர் பிறவியிலேயே வாய் பேச வராதவர். கண்
பார்வை குறைபாடு உடையவராகவும் இருப்பார்..
b. 2 ம் வீடு பாதிப்பில் உள்ளதால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை அமைந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கை நிலைத்திருக்க வாய்ப்பில்லை.
க.சிவராஜன்
(பாண்டிச்சேரி)
Monday, April 27, 2015 11:58:00 PM/////
----------------------------------------------
7
////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
1. பிறந்த தேதி: 1/07/1969 காலை 03.30 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்துள்ளார். ( இடம்:
சென்னை)
2. கேடான அம்சம்: குடும்பஸ்தானம், (2ம்வீடு பலவீனமாக உள்ளது).
3. வாழ்க்கையில் குடும்பம் இல்லாமல் அமைந்து விட்டது.
Tuesday, April 28, 2015 3:51:00 AM//////
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம்
ReplyDeleteஓம் ஸ்ரீ குருப்யோ நம:
எதனால் ராஹு திசை சுய புக்தியில் திருமணம் நடைபெற்றது? 7ம் பாவத்திற்கும் 2ம் பாவத்திற்கும் ராகுவிற்கும் உள்ள தொடர்பு யென்ன?
அய்யா, வணக்கம்,
ReplyDeleteராகு-விற்கும், கேது-விற்கும் பார்வை கிடையாது அவர்கள் இருக்கும் இடத்தை தனக்கு சொந்த வீடாக எடுத்துகொள்ளும் என்று தாங்கள் கூறி உள்ளீர்கள்.
ஆசிரியருக்கு வணக்கம்
ReplyDeleteஉனக்குமட்டும் புதிரை பார்த்ததும்
தங்கள் சீடர்களின் ஆய்வுகள்
இன்று எப்படியிருக்கும் என
எதிர்பார்ப்புடன் ஆவலாக இருந்தேன்.
அபாரமான விளக்கங்கள் அற்புதம்!!!
தங்களின் தொண்டு பாராட்டுக்கு அப்பாற்ப்பட்டது .
சர்மா
அஷ்டவர்கத்தில் குருவுக்கு சுயவர்க பரல் எட்டு. சுக்கிரனுக்கு சுயவர்க பரல் ஐந்து.ஏழாம் இடத்திற்கு 23 பரல். சாதாரணமாக 19 பரல் இருந்தாலே திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது பாடம்.
ReplyDeleteஏழில் செவ்வாய் என்றாலும் செவ்வாய் ஆட்சி பெற்று தன் வீட்டில் இருக்கிறார். எனவே செவ்வாய் தோஷ பரிஹாரம் என்பது பாடம்.
திருமணத்திற்கு உப வீடுகளான 3க்கு 33 பரல், 11க்கு 26 பரல். எனவே இவர் திருமண வாழ்வு ஊற்றிக் கொண்டது ஆச்சரியம் தான்.
லக்கினத்திற்கு குருவின் சிறப்பு 9வது பார்வை! லக்கினத்திற்கு ஒருபுறம் சுக்கிரனும் புதனும். ரோகிணியில் உள்ள லக்கினத்தை பாபகர்த்தாரியில் உள்ளது என்றும் கூறமுடியாது.
நவாம்சத்தில் 7ம் இடத்திற்கு குருபார்வை.
இந்தப் பெண்ணிற்கு திருமண வாழ்வு மோசமானது என்பதற்கு என்னால் எந்தக் காரணத்தையும் சொல்ல முடியவில்லை.
Astrology has no thumb rule.
நேரமின்மை காரணமாக மிகவும் தாமதமாகப் பின்னூட்டம் இட வேண்டியதாகி விட்டது.
ReplyDelete2. ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?
3. அந்தக் கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலைச் செய்தது?
இரண்டாவது கேள்வியில் எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி, கெட்ட கொள்ளி, மிகவும் கெட்ட கொள்ளி என்று கேட்பது போல் உள்ளது. ஒரு ஜாதகத்தில் கேடான அம்சங்கள் நிறைய இருக்கலாம். மிகவும் கேடு என்பதற்கு அளவுகோல்தான் என்ன.
முதலில் இந்த 2 கேள்விகளையும் பார்த்தவுடன் வாத்தியாரைத் திட்ட வேண்டும் என்றுதான் தோன்றியது. 9 கிரகங்கள், 12 வீடுகள், ஒரு வீட்டிற்கு 3 காரகத்துவங்கள் வீதம் 36 இருக்கின்றன. இதில் எதைப் பற்றி கேட்க வருகிறீர்கள் என்றே சொல்லாமல் மொட்டையாகக் கேட்டால் எப்படி. இங்கு வருபவர்கள் எல்லாரும் professional ஜோதிடர்கள் இல்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் கேள்வி கேட்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
ஏன் தங்களிடமே மாணவர்கள் சொந்த அல்லது வேறொருவருடைய ஜாதகத்தை வைத்து எதாவது கேள்வி கேட்டால், நேரமில்லை. குறிப்பிட்ட ஏதாவது ஒன்றை (specific) கேள்வியாகக் கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் நிறைய நேரம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது.
/////Blogger ARIMALAM said...
ReplyDeleteவணக்கம்
ஓம் ஸ்ரீ குருப்யோ நம:
எதனால் ராஹு திசை சுய புக்தியில் திருமணம் நடைபெற்றது? 7ம் பாவத்திற்கும் 2ம் பாவத்திற்கும் ராகுவிற்கும் உள்ள தொடர்பு யென்ன?///////
ராகு 11ல் இருப்பதைப் பாருங்கள். தன் திசை துவங்கியவுடன் ஜாதகிக்கு நல்லதைச் செய்து வைத்தான். குரு லக்கினத்தைப் பார்ப்பதும், களத்திரகாரகன் சுக்கிரனைப் பார்ப்பதும், ராகு குருவின் வீட்டில் இருந்து குருபகவானைப் பார்ப்பதும் ஆக எல்லாப் பார்வைகளும் ஒன்று சேர்ந்து திருமணத்தை நடத்திவைத்தன!
logger C.Senthil said...
ReplyDeleteஅய்யா, வணக்கம்,
ராகு-விற்கும், கேது-விற்கும் பார்வை கிடையாது அவர்கள் இருக்கும் இடத்தை தனக்கு சொந்த வீடாக எடுத்துகொள்ளும் என்று தாங்கள் கூறி உள்ளீர்கள்.
கரெக்ட்! ராகு தான் அமர்ந்திருக்கும் இடமான குருவின் வேலையைத் தன் தசாபுத்தி துவங்கியவுடன், செய்யத் துவங்கினான். ஜாதகியின் திருமணத்தை நடத்தி வைத்தான்
/////Blogger சர்மா said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்
உனக்குமட்டும் புதிரை பார்த்ததும்
தங்கள் சீடர்களின் ஆய்வுகள்
இன்று எப்படியிருக்கும் என
எதிர்பார்ப்புடன் ஆவலாக இருந்தேன்.
அபாரமான விளக்கங்கள் அற்புதம்!!!
தங்களின் தொண்டு பாராட்டுக்கு அப்பாற்ப்பட்டது .
சர்மா/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅஷ்டவர்கத்தில் குருவுக்கு சுயவர்க பரல் எட்டு. சுக்கிரனுக்கு சுயவர்க பரல் ஐந்து.ஏழாம் இடத்திற்கு 23 பரல். சாதாரணமாக 19 பரல் இருந்தாலே திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது பாடம்.
ஏழில் செவ்வாய் என்றாலும் செவ்வாய் ஆட்சி பெற்று தன் வீட்டில் இருக்கிறார். எனவே செவ்வாய் தோஷ பரிஹாரம் என்பது பாடம்.
திருமணத்திற்கு உப வீடுகளான 3க்கு 33 பரல், 11க்கு 26 பரல். எனவே இவர் திருமண வாழ்வு ஊற்றிக் கொண்டது ஆச்சரியம் தான்.
லக்கினத்திற்கு குருவின் சிறப்பு 9வது பார்வை! லக்கினத்திற்கு ஒருபுறம் சுக்கிரனும் புதனும். ரோகிணியில் உள்ள லக்கினத்தை பாபகர்த்தாரியில் உள்ளது என்றும் கூறமுடியாது.
நவாம்சத்தில் 7ம் இடத்திற்கு குருபார்வை.
இந்தப் பெண்ணிற்கு திருமண வாழ்வு மோசமானது என்பதற்கு என்னால் எந்தக் காரணத்தையும் சொல்ல முடியவில்லை.
Astrology has no thumb rule.//////
செவ்வாய் தோஷத்தைப் பற்றி இரு வேறான கருத்து வேறுபாடுகள் உள்ளன. இரண்டையும் பார்த்தால் தலை சுற்றும். செவ்வாய் 7 அல்லது 8 இருந்தால் அது தோஷம்தான். அதன் உடன் அல்லது அதன் மேல் சுபக்கிரகமான குருவின் பார்வை இருந்தால் மட்டுமே தோஷத்திற்கு விலக்கு என்கிறது அனுபவம். அதுவும் செவ்வாய் வக்கிரகதியில் இருந்தால் தோஷத்திற்கு விதி விலக்கு இல்லை. ஆகவே தான் ஜாதகியின் திருமண வாழ்க்கை ஊற்றிக் கொண்டுவிட்டது. அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி புதன் தன் வீட்டிற்குப் பன்னிரெண்டில் போய் அமர்ந்து கெட்டுப் போய் உள்ளான். லக்கினத்திற்குப் 12ல் சனி. எல்லாமும் சேர்ந்துதான் ஜாதகியின் விவாகத்தைக் காலி செய்தன!
/////Blogger Kirupanandan A said...
ReplyDeleteநேரமின்மை காரணமாக மிகவும் தாமதமாகப் பின்னூட்டம் இட வேண்டியதாகி விட்டது.
2. ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?
3. அந்தக் கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலைச் செய்தது?
இரண்டாவது கேள்வியில் எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி, கெட்ட கொள்ளி, மிகவும் கெட்ட கொள்ளி என்று கேட்பது போல் உள்ளது. ஒரு ஜாதகத்தில் கேடான அம்சங்கள் நிறைய இருக்கலாம். மிகவும் கேடு என்பதற்கு அளவுகோல்தான் என்ன.
முதலில் இந்த 2 கேள்விகளையும் பார்த்தவுடன் வாத்தியாரைத் திட்ட வேண்டும் என்றுதான் தோன்றியது. 9 கிரகங்கள், 12 வீடுகள், ஒரு வீட்டிற்கு 3 காரகத்துவங்கள் வீதம் 36 இருக்கின்றன. இதில் எதைப் பற்றி கேட்க வருகிறீர்கள் என்றே சொல்லாமல் மொட்டையாகக் கேட்டால் எப்படி. இங்கு வருபவர்கள் எல்லாரும் professional ஜோதிடர்கள் இல்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் கேள்வி கேட்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
ஏன் தங்களிடமே மாணவர்கள் சொந்த அல்லது வேறொருவருடைய ஜாதகத்தை வைத்து எதாவது கேள்வி கேட்டால், நேரமில்லை. குறிப்பிட்ட ஏதாவது ஒன்றை (specific) கேள்வியாகக் கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் நிறைய நேரம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது./////
கணக்காயவாளரே, உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இனி கேள்விகள் தனித்தன்மையுடன் இருக்கும். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!