மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.4.15

எத்தனை பெயர்கள் சாமிகளா!


எத்தனை பெயர்கள் சாமிகளா!

48 வகை நீர்நிலைகள் : அனைத்திற்கும் தனித்தனிப் பெயர்கள். தெரிந்துகொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------
1. அகழி (moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர்நிலை.
2.அருவி (water falls) மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது.
3. ஆழ்கிணறு (moat) கடல் அருகில் தோண்டிக் கட்டிய கிணறு.
4. ஆறு (river) பெருகி ஓடும் நதி.
5. இலஞ்சி (reservoir of drinking and other purpose) குடிப்பதற்கும் வேறு
வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.
6. உறை கிணறு (ring well) மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண்
அல்லது பைஞ்சுதையினால் வலையமிட்ட கிணறு.
7. ஊறுணி (drinking well tank) மக்கள் குடிப்பதற்கு உள்ள நீர் நிலை.
8. ஊற்று (spring) அடியிலிருந்து நீர் ஊறுவது.
9. ஏரி (irrigation tank) வேளாண்மைப் பாசன நீர்த் தேக்கம்.
10. ஓடை (brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் எப்பொழுதும்
பொசித்து வாய்க்கால் வழியாக ஓடும் ஒரு நீர் நிலை.
11. கட்டுக் கிணறு (built in well) சரளை நிலத்தில் வெட்டி கல், செங்கலால் உள்சுவர் எழுப்பிய கிணறு.
12. கடல் (sea) மாபெரும் நீர்ப் பரப்பு.
13. கம்வாய் (irrigation tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
14. கலிங்கு (sluicae with many ventways) ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கம்.
உடைப்பு எடுக்காமல் முன் எச்சரிக்கையாகக் கற்களால் உறுதியாகக் கட்டப்பட்டு பலவகைகளால் அடைத்துத் திறக்கக் கூடியதாய் உள்ள நீர்
செல்லும் அமைப்பு.
15. கால் (channel) நீரோடும் வழி.
16. கால்வாய் (supply channel to a tank) ஏரி, குளம், ஊருணிக்கு நீர் ஊட்டும் பாய்கால் வழி.
17. குட்டம் (large pond) பெரிய குட்டை.
18. குட்டை (small pond) சிறிய குட்டம். கால்நடை முதலியவற்றை குளிப்பாட்டும் நீர்நிலை.
19. குண்டம் (small pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர்நிலை.
20. குண்டு (pool) குளிப்பதற்கான சிறு குளம்.
21. குமிழி (rock cut well) நிலத்தின் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழும்பி வரச் செய்த குடைக்கிணறு.
22. குமிழி ஊற்று (artesion fountain) அடிநிலத்து நீர் நிலமட்டத்துக்குக் கொப்பளித்து வரும் ஊற்று.
23. குளம் (bathing tank) ஊரின் அருகே மக்கள் குளிக்கப் பயன்படுத்தும் நீர்நிலை.
24. குளம் (irrigation tank) கொங்கு மண்டலத்தைச் சார்ந்த இடங்களில்
ஏரிக்கு வழங்கும் பெயர்.
25. கூவம் (abnormal well) ஒழுங்கில் அமையாத கிணறு.
26. கூவல் (hollow) ஆழமற்ற கிணறு போன்ற ஒரு பள்ளம்.
27. கேணி (large well) அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.
28. சிறை (reservoir) தேக்கி வைக்கப்பட்டுள்ள பெரிய நீர்நிலை.
29. சுனை (mountain pool) மலையில் இயல்பாய் அமைந்த நீர்நிலை.
30. சேங்கை (tank with duck weed) பாசிக் கொடி மண்டிய குளம்.
31. தடம் (beautifully constructed tank) அழகாக நான்கு புறமும் கட்டப்பட்ட
குளம்.
32. தனிக்குளம் (tank surrounding tank) கோயிலின் நான்கு புறமும் சுற்றி
அமைந்த அகழி போன்ற நீர் நிலை.
33. தாங்கல் (irrigation tank) இந்தப் பெயர் தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியைக் குறிக்கும்.
34. திருக்குளம் (temple tank) கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
35. தெப்பக்குளம் (temple tank with inside pathway along parpet walls) ஆளோடியுடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. தொடுகிணறு (digwell) ஆற்றின் உள்ளேயும் அருகிலும் அவ்வப்போது மணலைத் தோண்டி நீர் கொள்ளும் இடம்.
37. நடை கேணி (large well with steps on one side) இறங்கிக் செல்லும் படிக்கட்டு அமைந்து பெருங்கிணறு.
38. நீராழி (bigger tank with centre mantapa) நடுவில் மண்டபத்துடன் கூடிய பெரும் குளம்.
39. பிள்ளைக் கிணறு (well in middle of a tank) குளம். ஏரியின் நடுவில் அமைந்த கிணறு.
40. பொங்கு (well with bubbing spring) ஊற்றுக்கால் கொப்புளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
41. பொய்கை (lake) தாமரை முதலியன மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்ட நீர்நிலை.
42. மடு (deep place in a river) ஆற்றின் இடையேயுள்ள மிக ஆழமான பள்ளம்.
43. மடை (small with single ventway) ஒரு கண் மட்டும் உள்ள சிறு மதகு.
44. மதகு (sluice with many ventways) பல கண்களைக் கொண்ட ஏரிநீர்
வெளிப்படும் பெரிய மடை.
45. மறுகால் (surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46. வலயம் (round tank) வட்டமாய் அமைந்துள்ள குளம்.
47. வாய்க்கால் (small water cource) ஏரி முதலிய நீர் நிலைகளிலிருந்து பயிருக்கு நீர் பாயும் சிறிய கால்.
48. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லும்!
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. இத்தனை தண்ணியா
    இது அங்கிருப்பது போல்

    இங்கிருந்தால்
    இந்த பிரச்சனை இராது

    ReplyDelete
  2. பல சொற்கள் புதியவை.நல்ல சேகரிப்பு.பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்
    அடைப்புக்குள் ஆங்கில வார்த்தை கொடுத்தது இன்னும் மெருகு கூட்டுகிறது
    நன்றி
    கண்ணன்.

    ReplyDelete
  4. நீர் நிலைகளுக்கு இத்தனைப் பெயர்களா என்று ஆச்சரியப்பட்டேன்.

    இதைப் படித்த பொழுது ஆறென்றும், நதியென்றும், ஓடையென்றாலும் அது நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் என்ற பாடல் வரி ஞாபகத்திற்கு வந்தது.

    ReplyDelete
  5. /////Blogger வேப்பிலை said...
    இத்தனை தண்ணியா
    இது அங்கிருப்பது போல்
    இங்கிருந்தால்
    இந்த பிரச்சனை இராது/////

    பிரச்சினை இல்லாவிட்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காதே சுவாமி!

    ReplyDelete
  6. //////Blogger kmr.krishnan said...
    பல சொற்கள் புதியவை.நல்ல சேகரிப்பு.பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  7. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    அடைப்புக்குள் ஆங்கில வார்த்தை கொடுத்தது இன்னும் மெருகு கூட்டுகிறது
    நன்றி
    கண்ணன்./////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. /////Blogger Kirupanandan A said...
    நீர் நிலைகளுக்கு இத்தனைப் பெயர்களா என்று ஆச்சரியப்பட்டேன்.
    இதைப் படித்த பொழுது ஆறென்றும், நதியென்றும், ஓடையென்றாலும் அது நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் என்ற பாடல் வரி ஞாபகத்திற்கு வந்தது./////

    தமிழ் செம்மொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று கிருபானந்தன்.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com