மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.12.13

Astrology: Quiz No.26: அடித்துத் துவைத்து அலசுவோம் வாருங்கள்!

 
Astrology: Quiz No.26: அடித்துத் துவைத்து அலசுவோம் வாருங்கள்!

அலசல் புதிர்:தொடர் - பகுதி இருபத்தியாறு!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும்! இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

சரியான விடையும், உங்கள் அனைவரின் பின்னூட்டமும் நாளை காலையில் வெளியாகும். அனைவருக்கும் வாய்ப்புக்கொடுக்க வேண்டுமல்லவா? அதனால் பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

26 comments:

  1. 1. Kalasharba Dosha Jathakam. Ketu in front, not a good one.
    2. Laknam has Laknathipathi and uchha Ragu. Brave lady. Will have skin or breathing related issues.
    3. 2nd lord is in 3rd, neecham, Sani parvai also. not favourable.
    4. Moon is in 4th place, Dhik balam. Strong minded. Good Education.
    5. 3rd and 5th lord parivarthani. Since 5th lord is in 11th poision, will have kids, but since Sani is there, delayed with problems.
    6. Sun and Kathu in 7th position and 7th lord/Sukra in 6th place with 8th lord. Not sure Vipareetha raja yogam will apply here or not. But Since Guru parivai is there on 7th house, she will be married.

    ReplyDelete
  2. விருச்சிக இலக்கின ஜாதகி. இலக்கினாதிபதி செவ்வாய் இலக்கினத்தில் அமர்ந்திருக்கிறார். யோககாரகர்கள் குரு (3ம் இடம்), சூரியன் (7ம் இடம்), சந்திரன் (4ம் இடம்).

    2ம் இடம்: இந்த வீட்டிற்கு அதிபதி குரு சனியுடன் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்துள்ளார். 2ம் வீட்டிற்கு 2ம் வீட்டில் இருப்பதால், ஜாதகி செல்வந்தர் வீட்டில் பிறந்திருப்பார். குடும்ப காரகர் மற்றும் தன காரகர் குருவே இந்த வீட்டிற்கும் அதிபதி. அவர் இந்த வீட்டிற்கு 2ம் இடத்தில் அமர்வது நல்லதே. ஆனால் 2ம் வீட்டை சனி பகவான் தனது விசேஷ பார்வையான 10ம் பார்வையால் பார்க்கிறார். சனி புக்தியிலும், ஜாதகிக்கு 30 வயதுக்கு மேல் வரும் சனி தசையிலும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். ஆனால் திரிகோண பதவி அடைந்திருக்கும் மற்றும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ள சனி பகவானால் அவை சிறிய பிரச்சனைகளாகவே இருந்திருக்கும்.

    5ம் இடம்: இந்த வீட்டிற்கும் அதிபதி குருவே. அவர் இந்த வீட்டிற்கு 11ம் இடத்தில் அமர்ந்து அந்த வீட்டில் இருக்கும் சனி பகவானோடு பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார். அதனால் ஜாதகிக்கு குழந்தைகள் உண்டு.

    7ம் இடம்: இந்த வீட்டிற்கு அதிபதி சுக்கிரன். இவரே களத்திர காரகர். இவர் 12ம் வீட்டிற்கும் அதிபதி. இவர் 6ம் வீட்டில் 8ம் அதிபதி புதனோடு விபரீத இராஜ யோகத்தில் இருக்கிறார். குரு பகவான் பார்வையும் சனி பகவான் பார்வையும் 7ம் வீட்டிற்கு உண்டு. இலக்கினாதிபதி செவ்வாய் இலக்கினத்தில் அமர்ந்து 7ம் வீட்டை நேரடியாக பார்க்கிறார். இதனால் ஜாதகிக்கு திருமண யோகம் உண்டு. ஆனால் 7ம் வீட்டில் சூரியனும் முக்கியமாக கேதுவும். அதனால் சில பிரச்சனைகளை கடந்தே திருமணம் நடை பெற்றிருக்கும். காதல் அல்லது கலப்புத் திருமணமாக இருக்கும். குரு தசையில் திருமணம் நடந்து குழந்தைகளும் பிறந்திருக்கும்.

    ஆக கேது 7ம் வீட்டில் இருந்தாலும் குரு பார்வையும் இலக்கினாதிபதி பார்வையும் இருப்பதாலும் 7ம் வீட்டு அதிபதி மற்றும் களத்திர காரகர் சுக்கிரன் விபரீத இராஜ யோகத்தில் இருப்பதாலும் திருமணம் நடை பெற்றிருக்கும்.

    ReplyDelete
  3. 1) ஜாதகி தைரியமானவர்
    2) கணவர் மற்றும் குழந்தைகள் அமையும்படியான குடும்ப வாழ்க்கை கிடையாது
    3) தத்துப் பெண்/ பிள்ளை எடுத்து வளர்த்திருப்பார்.
    4) திருமண வாழ்க்கை கிடையாது.

    லக்கினாதிபதியான செவ்வாய் (தைரியம்) லக்கினத்தில் அமர்ந்ததும் தைரியஸ்தானிபதி குருவுடன் பரிவர்த்தனை ஆனதும், சந்திரன் நல்ல சுயபரல்களுடன் கேந்திரத்தில் இருப்பதும், லக்கினத்தில் இருக்கும் அதிக எண்ணிக்கை பரல்களும் ஜாதகர் தைரியமானவர் என்பதைக் குறிக்கின்றன.

    குடும்பஸ்தானாதிபதி நீச்சமானதும், இரண்டாம் இடத்தைச் சனி பார்ப்பதும் திருமண வாழ்க்கைக்கு முட்டுக் கட்டை காரணங்கள்.

    ஐந்தாம் அதிபன் நீச்சம். மேலும் ஐந்தாம் இடத்தில் சனியின் இருப்பு. இருந்தாலும், மூன்று மற்றும் ஐந்தாம் அதிபதிகள் பரிவர்த்தனையால் ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்தவராக இருப்பார்.

    ஏழாம் வீடு சூரியன் மற்றும் கேது இருப்பால் கெட்டிருக்கிறது. ஏழாம் அதிபன் ஆறில் எட்டாம் அதிபனுடன் சேர்ந்து மறைவு. மேலும் இவ்விரு சுபர்களும் கத்தரி நடுவே மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். செவ்வாயும் ராஹுவும் சனியும் ஏழாம் இடத்தைப் பார்க்கின்றனர். இந்தக் காரணங்களால் திருமணம் ஆகியிருக்காது.

    கேது கொடிபிடிக்கும் ஜாதகம். வாழ்க்கையில் கஷ்டம் நிறைய இருந்திருந்தாலும் திறமையாகவும் தைரியமாகவும் சமாளித்து இருப்பார் - 02-June-1937 அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த இந்த ஜாதகி.

    ReplyDelete
  4. the native is of adamant & bold nature & possess high willpower. ruling mars & rahu present in the ascendant are the causes. less mother care. can have any remarkable bad quality.
    becoz of exchange of jupiter & saturn [ 3 rd & 5 th ] the native will have an amaicable relationship with her co-borns & mother. not living with husband but with children.fortunate in money matters also due to that in later stage.
    can have adopted children due to 5 th saturn & deblitated jupiter eventhough deblitation gets cancelled by exchange.
    no married life . must have ended up in divorce . venus in paapa kartari & with 8 th lord , sun & ketu sitting in 7 th house & saturn aspects it.


    ReplyDelete
  5. 1937 ஜூன் 1 மாலை 6.30க்கு பிறந்த பெண்ணின் ஜாதகம். லக்னாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று லக்னத்தில் ஆட்சி - ரூசக யோகம். ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர். லக்னத்தில் ராகு. கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். கேது கொடி பிடித்து செல்கிறார். துறவை / இழப்பைக்குறிக்கிறது.
    இரண்டாம் அதிபன் குரு வக்ரம் + நீசம் பெற்று மூன்றில். ஏழாம் வீட்டை நீசம், வக்ரம் பெற்ற குரு மற்றும் சனி பார்க்கிறார்கள். ஏழாம் அதிபன் சுக்கிரன் ஆறில் மறைவு. 7+8 ஆம் அதிபதிகள் 6ல் இணைவு திருமணம் ஆகியும் கணவனை உடனடியாக நோய்வாய்ப்பட்டு உயிர் இழக்கச்செய்திருப்பார்கள். ஆகையால் குடும்ப வாழ்க்கை இல்லை. குழந்தைகள் இல்லை. சமூகசேவை என்று வாழ்க்கையை நடத்தியவர். அதன் மூலம் புகழ் பெற்றிருப்பார். ஜாதகிக்கு standing power உண்டு.

    ReplyDelete
  6. Sir,

    1. 2nd and 5th house owner Guru is neesam. So family life will be in trouble.

    2. Suriyan and kethu at 7th house is not favour for marraige life. Though because of Guru's 5th aspect to 7th house, She got married and that ends in divorce or...

    3. Sani at 5th place also not favor for child/family. So totally her marraige life will be in trouble.

    4. Sevvai at lagnam will help to achieve in profession. Chandran aspect to 10th house is also good for profession.

    ReplyDelete
  7. ஐயா,
    1.கால சர்ப்ப தோஷ ஜாதகம். ஜாதகிக்கு லக்னத்தில் செவ்வாய்+ராகு இந்த அமைப்பினால் ஜாதகி யாருடனும் அனுசரித்து போகமாட்டார்.லக்னாதிபதி ஆட்சி பெற்று இருப்பதால் ஜாதகி சுயமரியாதையுடனும் சுயகெளரவத்துடன் வாழ்வார்.
    2.ஏழாம் வீட்டில் சூரியன்+கேது அதற்கு சனி,செவ்வாய் பார்வை.திருமண வாழ்வு விவாகரத்தில் முடிந்து இருக்கும். விபரீத ராஜயோக அமைப்பினாலும்(12th lord and 8th lord in 6th house) 7ம் விட்டிற்கு குரு பார்வையினாலும் இவருக்கு திருமணம் நடந்தது.
    3. 2 & 5 க்குடைய குரு 3ல் நீசம், சனி ஐந்தாம் வீட்டில் அதனால் குடும்பம் குழந்தை போன்றவை இவருக்கு அமையாமல் போய் விட்டது.

    ReplyDelete
  8. விருச்சிக லக்னம் . கும்ப ராசி. லக்னத்தில் ராகு உச்சம். செவ்வாய் ஆட்சி.ஆனால் வக்கிரம்.
    பெண் தைரியமானவர். உச்ச ராகுவுடன் கூட்டணி. அதிக தைரியம். சதய நட்சத்திரம். ராகுவின் நட்சத்திரம். கால சர்ப்ப தோஷம். கேது கொடி பிடிக்கும் விலோம் யோகம்.
    (2) இரண்டாம் வீட்டில் கிரஹங்கள் இல்லை. சனியின் பார்வை மட்டும். வீட்டு அதிபதி குரு வக்கிரம் மற்றும் நீசம். உச்ச பலன் உண்டு ! சனியின் வீட்டில். சனியுடன் ஐந்தாம் வீட்டு பரிவர்த்தனை. பெண்மணி பொறுமைசாலி !. துறவி போல் இருப்பார் !. குடும்பம் உண்டு !. ஆனால் ரத்த சம்பந்தம் உள்ள குடும்பம் என்று சொல்ல முடியாது !. பொது சேவை என வைத்து கொள்ளலாம்.
    (3) ஐந்தாம் வீட்டில் சனி. அதிபதி குருவுடன் பரிவர்த்தனை. மூன்று மற்றும் நான்காம் வீட்டு அதிபதி சனி, புதிரக்காரகன் குரு மூன்றில் மறைவு !. புத்திர தோஷம் வேறு !. குழந்தைகள் கிடையாது !. பூர்வ புண்யம் வலுவாக இருக்கும், குரு சனி பரிவர்த்தனையால். பக்தி இருக்கும் !.
    (4) ஏழாம் வீட்டில் சூரியன். கேதுவுடன். கடும் களத்ர தோஷம். லக்னத்தில் இருந்து செவ்வாய் ராகு பார்வை வேறு!. களத்தீரக்காரகன் சுக்ரன் 6-ம் வீட்டில் அதுவும் செவ்வாயின் வீட்டில். ஏழாம் வீட்டு அதிபதியும் அவனே. தன் வீட்டிற்கு பணிரண்டாம் வீட்டில் (விரய ஸ்தானத்தில்) .குரு பார்வை இருக்கிறது.!. ஆனால் சனியின் பார்வையும் இருக்கிறது !. திருமண தடை !.கூட்டி கழித்து பார்த்தால், திருமணம் ஆகி இருக்காது !.

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 26 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி இந்த ஜாததிக்கு,

    லக்கினாதிபதி லக்கினத்தில் ஆட்சியாக இருப்பதால் நீண்ட ஆயுளும், நல்ல ஜீவன வசதி உள்ளவராகவும் இருப்பார்.

    2ம் வீட்டு அதிபதி குரு நீச்சம், அந்த வீட்டை சனியும் பார்க்கிறார். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. உடன் பிறந்த சகோதரர் தயவில் வாழ்க்கை நடத்துபவராக இருப்பார்.

    5இல் சனி இருப்பதாலும் 10ஆம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் புத்திர பாக்யம் இல்லை.

    குரு ஐந்தாம் பார்வையாகவும், சனி 5இல் இருந்து களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் தாமதமாக திருமணம் நடந்திருக்கும். 7ஆம் வீட்டு அதிபதி அந்த இடத்துக்கு 12இல் இருப்பதால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருந்திருக்காது. 6இல் களத்திர ஸ்தான அதிபதி சுக்கிரன் மறைந்து விட்டதாலும் 7க்கு எட்டாமிடத்தில் குரு நீச்சம் பெற்று விட்டதாலும் கணவருக்கு ஆயுள் குறைவு.
    தொழில் ஸ்தான அதிபதி சூரியன் ஏழில் அமர்ந்து லக்கினத்தைப் பார்ப்பதால் இவர் மருத்துவத்துறையில் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி இருப்பார்.

    ReplyDelete
  10. 7th lord is in 6th house joins with 8th lord.
    So her husband suffering by any major disease or should be in prison.
    Her marriage life is not at all happy.
    As per first house,lagna lord joins with Ragu and aspects by kethu and sun from 7th house,it is also not favourable for happy married life.

    2nd lord is debliated ,there is no sufficiant income for her life.

    ReplyDelete
  11. கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் 1) லக்னாதிபதி லக்னத்திலேயே தன் சொந்த வீட்டில் ராகுவுடன் இருப்பதாலும் 10 ம் வீட்டிற்கு அதிபதியான சூரியன் லக்னத்தை பார்ப்பதாலும் ஜாதகி ஒரு famous personlity ஆக இருந்தவர். அவருடைய தொழிலில் மேம்பட்டவர்.
    2. இரண்டாம் வீட்டு அதிபதி குரு மூன்றில் நீசமடைந்தாலும் பரிவர்த்தனை பெற்று ஐந்தில் சொந்த வீட்டில் உள்ளதனால் நல்ல பணக்கார குடும்பத்தில் வாழ்க்கை பட்டவர்.
    3. ஐந்தாம் வீட்டு அதிபதி அதற்கு பதினொன்றில் நீசம். சனி ஐந்தில் இருப்பதால் ஜாதகிக்கு குழந்தைகள் கிடையாது. பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பார்.
    4.ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன் அதற்கு 12ல். சுக்கிரனுக்கு 8ல் களத்திர காரகன் ராகுவுடன் இருப்பது கடுமையான களத்திர தோஷம். அதை தவிர 7ல் கேது இருப்பதால் ஜாதகி கணவனை இழந்தவர்.

    இது என்னுடைய முதல் அலசல். ஏதாவது கறை (தவறு) இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  12. 1.காலசர்பதோக்ஷம் உள்ள சாதகம்.
    2.3,4ஆம் அதிபதியும்,2,5ஆம் அதிபதியும் பரிவ்ர்தனை.
    நல்ல குடும்பம்,(late marriage)குழந்தைகள் உண்டு.
    3.7ஆம் அதிபதி மறைவு,7 ல் சூரியன் அரசாக உத்யோகம் பார்ப்பார்

    மு.சாந்தி.

    ReplyDelete
  13. லக்னம் - செவ்வாய்- ராகு சேர்க்கை. லக்னாதிபதி லக்னத்தில் இருப்பதால் நல்ல தோற்றம் உடையவர்.

    இரண்டாம் இடத்தை சனி பார்ப்பதாலும், இரண்டாம் அதிபதி நீசம் பெற்றததாலும் குடும்ப வாழ்க்கை நன்றாக அமையாது.

    ஐந்தாம் இடத்தில் சனி இருப்பதாலும் ஐந்தாம் அதிபதி நீசம் பெற்றாததலும் ,பிரபல பிண்ணனி இருந்தாலும் பயனற்ற வகையில் இருக்கும்.

    ஏழாம் அதிபதி சுக்கிரன் ஆறில் மறைந்துள்ளார். ஏழில் கேது சூரியன், சனியின் பார்வை பெற்றுள்ளனர். நல்ல மனைவி அமைவததில் பிரச்சனை.

    ReplyDelete
  14. குரு வனக்கம்
    லக்னம் – லக்னாதிபதி ஆட்சி பலத்துடன் ராகு கூட்டனி ஜாதகி அழகானவர், மிகவும் கோபக்காரர் சூரியன் நேரடி பார்வை

    2ம் வீடு – அதிபதி குரு 3ம் வீட்டில், எழ்மையான குடும்பம்

    5ம் வீடு – சனி 3,4ம் அதிபதி குரு பரிவர்தனையுடன் குழந்தை பக்கியம் உண்டு

    7ம் வீடு – அதிபதி சுக்கிரன் 6ம் வீட்டில் 7ம் வீட்டில் சூரியன் இருப்பது நல்லது அல்ல, ஆனால் குரு பார்வை இருப்பதாலும் 8ம் அதிபதி, 12ம் அதிபதி கூடி 6ம் வீட்டில் இருப்பது கல்யானம் விபரீத ராஜயோகம் லாபாதி புதன் திசையில் நடந்திருக்கும்

    கால சர்பதோஷத்தால் கேது திசையில் ஆயுல் முடிந்திருக்கும்


    நன்றி

    ReplyDelete
  15. quiz-26 - answer

    1. Kumba rasi, 6-th lord with utha raghy in lagna..
    2. Kala sarba dhosham
    3. 2nd lord guru in 3rd place neesam.
    4. In 7th place neesa suriyan with kethu
    5. 9th and 10th lord tharma karmathepathis neesam.
    6. 6th lord in 8th place with sukran

    result: ill health, She has no family, no children, even she was no more

    ramesh

    ReplyDelete
  16. Respected Sir,

    My answer for our today's Quiz No.26:-

    Date of the birth of the native: 02.06.1937 and Time: 6:30 pm

    1. She was strong and tensed person.
    2. Enough money (Neither rich nor poor)
    3. Married and her husband died.
    (Widow)
    4. She had child.

    FIRST HOUSE: Lagna lord is in own house. So she is strong and act independently. Ragu is exalted.

    SECOND HOUSE: This house authoriy (jupiter) is combusted and this house getting Saturn's tenth aspects.So this shows her family life is too weak.

    SEVENTH HOUSE: Because of Jupiter's,Lagna lord aspect and sun she got married but her husband died due to this house authority is sitting 12th house from its own house alongwith Mercury (Eighth house lord). Eighth house lord gave death to her husband.

    FIFTH HOUSE: Due to Saturn and Jupiter are in Exchange, She has child.

    This is the example horoscope of Viloma Kalasarpha dhosa. Kethu is leading in front of all the other planets. It is not a good sign to the native.

    For Scorpio lagna, When Jupiter is in Capricorn, the native will be involved in Social or dharma work.

    With kind regards,
    Ravichandran M.



    ReplyDelete
  17. Respected Sir
    My observations of this horoscope are as follows:
    I) PLANETS POSITION:
    a) Lagnathipathi “MARS” in own house - Strong
    b) Saturn in trikona - Benefit
    c) Waning moon in Kendra- equal
    d) Mercury & Venus in 6th house – durstana
    e) Sun in Kendra but in Taurus (enemy sign) – not bad
    f) Guru in 3rd house - not a good place
    g) Rahu at lagnum -Exalted
    h) Kedhu at 7th house – bad
    II) PLANETARY ASSOCIATION:
    a) Association of Mars & Raghu at LAGNUM not good as they are natural enemies
    b) For Scorpio ascendant both MECURY & VENUS are functional malefic and they are in 6th house – bad sign.
    c) Association of Sun & Kedu – not good
    d) Position of Ragu & kedu though not good to certain extent it can be neutralised as they are in FIXED SIGNS
    e) For Scorpio ascendant Saturn is a neutral planet and in this horoscope it is trikona – so I will consider this as GOOD PLANET
    III) YOGAS IN THIS HOROSCOPE:
    a) “PARIVARTHINI”YOGUM between lord f 2nd,5th house – GURU & LORD OF 3RD & 4TH house – SATURN
    b) VEEPARITHA RAJAYOGUM - as the lord of 8th lord and 12th lord occupying DURSTANAM 6TH HOUSE
    IV) HAS KEDU LEADING “KALA SARPA”DOSHUM
    V) LAGNUM
    a) Appears strong as the LORD of lagna is at own house
    b) Raghu also is exalted at LAGNUM but the association can make it little weaker
    c) Lagnum aspected by Sun (7th aspect) can make it weaker but can be offset by stronger Lagnathipathi.
    If the Lagnathipathi is with good PARALS in ashtavargum – lagnum can be considered as STRONG
    She will be a bold women and assertive .She will be proud and will have lot of ego
    She will have difficulty in adjusting with others especially with husband .She may have illusion of having diseases.
    VI) SECOND HOUSE
    a) Belongs to Jupiter – which is third house which is second from second house..There is no aspects at second house
    She will have good family life and the financial position will be good. She may be interested in arts & music. She will have financial help from brothers/sisters. She may have minor trouble as Jupiter is the house of Saturn
    VII) SEVENTH HOUSE STRENGTHS / WEAKNESS
    a) Presence of kedu and Sun can make family life /marriage weak.
    b) But the house is aspected by LAGNATHIPATHI,5TH ASPECT OG Jupiter and 3rd aspect of Saturn – all these can balance the ill effects of kedu / sun.
    c) Venus is in 6th House – the house of losses. This can cause problems in family life.But the VEEPARITHA RAJAYOGUM of Venus can offset it
    d) She may have problems because of her assertive nature.
    BUT I WILL HAVE MORE OPTIMISM ONLY IN HER MARRAGE LIFE
    VIII) FIFTH HOUSE STRENGTHS / WEAKNESS
    a) Fifth house lord Jupiter is at 3rd house – 11th from 5th house.she will have good children and siblings.
    b) Saturn can delay in getting children
    SUMMARY:
    1) Bold and assertive woman
    2) Difficulty in adjusting others
    3) Good siblings and children
    4) Financially strong and will earn well.
    5) Will get help from siblings
    6) There may be delay in marriage & children
    7) Difficulty in marriage life but the bondage may not break
    8) VEEPARITHA RAJAYOGUM CAN TAKE HER TO HIGHEST LEVEL IN LATER PART OF LIFE AS THE INTIAL PART MAY BE DIIFICULT DUE TO KALA SARPA”DOSHUM
    Please forgive me if I am wrong sir and expecting your guidance
    DR.MOHAN
    BRUNEI

    ReplyDelete
  18. Ayya,

    Lagna: Lagna owner is sitting in own house & Neecha Rahu and looked by Yogakaran Suriyan & Uccha Ketu. Since Yogakaran( Raja graham) Suriyan is looking Lagna, she must having good health and body structure. But she must be undergone some hit(accident) in head position due to Cheevai in Lagna.

    Second House: Second house owner(Guru) sitting from his second house. So there should not be any problem for money. But Shani is looking second house by 10th look, so there must be problem in family life.

    Fifth House: If Shani is in fifth house, then possibility for adoptive child only. Moreover no beneficial planet(Guru- Child Karakan) is not looking 5th house. So overall she will not be having child.

    7th House: She must have got married due to two reasons.One is Yogakaran(Suriyan) & Uccha Ketu and Another reason is Vipareetha raja yogam(12th house owner Sukran sitting in 6th house along with 8th house owner Budhan). But her husband must be expired due to 7th house owner(Sukran) sitting in 12th house(Virayam) from 7th house.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  19. 1.2ம் அதிபதி குரு மகரத்தில்(சனி வீட்டில்) நீச்சம், சரியான குடும்ப வாழ்க்கை அமையாது.
    2.5ம் அதிபதி குரு நீச்சம், மற்றும் 3க்கும் 4க்கும் உடையவன் 5 ல்(சனி) இதனால் அது தத்துபிள்ளை யோகத்தை தருகிறது.
    3.7க்கு உடையவன் 6 ல் மறைவு 7ல் சூரியன் & கேது. செவ்வாயின் பார்வை வேறு. திருமணம் நடப்பது அரிது. 8க்கு உடையவன் புதன் 6 ல் மறைவு. சூரியன் + புதன் சேர்க்கை செவ்வாயின் வீட்டில் அமர்வதால் விதவையாவாள்.

    இவன்,

    தே.மகேந்திரன்,
    உலிபுரம்,
    சேலம் மாவட்டம்

    ReplyDelete
  20. Overall good horoscope.
    1) Native is reserved type, has average looking, long life, struggling in childhood life.
    Ketu leading kala sarpa dhosham cum yogam. Struggling in life until marriage. Laknathipathy mars is with ucha raagu leads to more struggles.
    2) Good wealth, good family, good brothers& sisters.
    2nd lord guru is with parivarthana yoga with sani. This guru aspects 7th, 9th,11th houses. So after 30 years, native's life will be good.
    3) has good children, knowledge.
    5th lord guru is deblited in maharam but parivarthana with sani. Since guru is in 3rd house, gives good courage and ability to withstand the struggles, brothers, sisters & relatives support as well.
    4) Married in right time & good husband.
    7th lord sukran(also 12th lord) in 6th house with 8th lord buthan - Vibareetha raaja yogam. Even though 7th house is affected by sun & ketu, it is aspected by guru. Moon is in 4th house and 1-12 combination with guru which means native will get things with big struggle and efforts only.
    Waiting eagerly for the answers.
    Thanks,
    Ramasamy

    ReplyDelete
  21. nellai padmanaban
    sir in this jathagam
    point 1 . mars and ragu combination and in seventh place sun kethu conducts delayed marriage. because the debilated guru , panchamapathy guru aspects seventh place so love marriage took place
    point no 2. family sthanapathy guru is neesam.so there might be family problem
    poiny no 3 : there will be no children even if she gave birth it may be handicapped since fith place Saturn is not favourable for child health.
    point no 4: the seventh place sukran in sixth place in mars house. so only love marriage,
    point no 5: with kethu marching with flag.
    point 5: planets in 6 rasis. it is also not good.
    point 6 : 7th and eigth place planets combination.

    ReplyDelete
  22. This is a kalasarpa horoscope

    Lagna: in lagna mars(lagna lord) and rahu combine to form neechabanga yoga. 10th lord sun 10th from 10th house aspecting lagna. will have power and authority.

    7th house: 7th lord in sixth but venus is 12th lord too. 12th lord combine 8th lord in sixth house leads to vibareetha raja yogam
    Kethu in kendram(4th) to chandran leads to neecha banga yogam. sani's aspect might delayed marriage. may get married to a power and wealthy person.

    2nd house: though guru in neecham this is in parivarthana yogam with sani. hence guru is strong. there may some family tension will be there..

    5th house: sani in 5th and guru is neecham delay in child birth still due to parivarthana yoga. there may be child birth.

    ReplyDelete
  23. 01 லக்கினாதிபதி தன் வீட்டில், உச்ச ராகுவுடன் பலமாக உள்ளார். 9,10கு உடையவரை பார்க்கிறார். நல்ல தோற்றம், வேலை இருக்கும்.

    02 கேது கோடி பிடிக்க, கால சர்ப்ப தோஷம். பெரிய குறை.

    03 இரண்டாம் வீடதிபதி குரு நீசம். நல்ல குடும்ப வாழ்க்கை அமைவது சிரமம். பண புழக்கம் இருக்காது.

    04 3, 5ம் வீடதிபதிகள் பரிவர்த்தனை. சற்று ஆறுதலான விஷயம். இருப்பினும், ஏழாம் வீடு சூரியன் ,கேது உள்ளதால் திருமணம் ஆகாது. குழந்தை இருக்காது. ஏழாம் வீடதிபதி 6ல் அஷ்டமாதிபதியுடன் சேர்க்கை.

    அன்புடன்,

    ராதா

    ReplyDelete
  24. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    குடுக்கப்பட்ட ஜாதகம் ..
    1...1மிடம் விரிச்சிகம் செவ்வாய் ஆட்சி ராஹு உச்சம். ஆகவே அழியாத செல்வமுடையவர்.
    2...2மிட உள்ள குரு 3மிடத்தில் நீசமாகி போனார். ஆகவே குடும்பம்
    இல்லை.
    3...5மிடம் மீனம் சனி -குரு பரிவர்த்தனை .சிறப்பாக இருந்தாலும் பிறர் குழந்தைகளை தன குழந்தைகளாக பாவிக்கும் நிலை..
    4...7மிடம் ரிஷபம் சூரியன்+கேது கூட்டணி -3ம் பார்வையாக சனி வேறு =நேசம் பெற்ற குரு பார்த்தாலும் ..3 பாவிகள் செவ்வாய்,ராஹு,&சனி இவர்கள் 3 பேரின் பார்வை ஆகவே திருமணம் என்பது இந்த பெண்ணின் வாழகைய்ல் ஒரு கனவுதான்!!!
    5..ஒரு ஆறுதலான விஷயம்.7இல் சூரியனுடன் கேது இருப்பதால் துறவி போன்று சமூக சேவை மனப்பாங்குடன் இருப்பார்..

    ஒரு ஆசிரியருக்கு அவரது மாணவர் நல்ல மதிப்பெண் பெறுவதே பெருமை.
    நானும் எப்படியும் என் வாத்தியாருக்கு பெருமை தேடி கொடுப்போம் என்ற நம்பிக்கையல் விடை எழுதி உள்ளேன் ..
    நன்றி.

    ReplyDelete
  25. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    quiz26 க்கு உரிய பதில்.
    1.இளமையில் மிக கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்திருப்பார்.
    காலஷர்ப்ப தோஷம்,லக்னத்தில் ராகு உச்சம்,செவ்வாய் லக்னாதிபதியாய் ஆட்சி
    பெற்று அமர்ந்துள்ளார்.அதிர்ஷ்டம் குறைந்த‌வர்.
    2.குடும்பம் அமையவில்லை.தாய் தந்தை அன்பை பெற்றவர்.
    3.சதா மனக்கவலை கொண்டவர்.5ல் சனி புத்திர தோஷம் கொடுப்பார்.
    4.தாமதித்த திருமணம்,பிரச்சனையுள்ள மணவாழ்க்கை.

    காலசர்பதோஷம்உள்ள ஜாதகம்.32வயது வரை பெரும் துன்பங்களை
    அனுபவித்தவர்.லக்னத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றாலும் ராகு உடன் அமர்ந்து
    கடும் போராட்டத்தையும் சோதனைகளையும் ஏற்படுத்திஉள்ளார்.
    குடும்ப மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான (காரகன்)குரு3,4க்கு
    உரியவனான சனியுடன் பரிவர்த்தனை ஆனதுடன் நீச்சம் பெற்று 3ல் அமர்ந்ததால்
    அந்த ஸ்தானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது
    7க்கு உரியவன் அந்த ஸ்தானத்திற்க்கு 12ல் அமர்ந்த்த‌துடன் 7ஆமிடத்தில்
    சூரியனுடன் கேதுவும் போட்டுள்ள கூட்டணி களத்திர தோஷ‌த்தை கொடுத்துள்ளது
    7,12க்கு உரியவனான சுக்கிரன் 8,11க்குரியவனான புதனுடன் கூட்டணி போட்டு 6ல் அமர்ந்து விபரீதராஜயோகத்தை ஏற்படுத்தியதுடன்,7ஆம் இடத்தை
    குரு பார்வை செயததாலும்,தாமதமானாலும் திருமணத்தை நடத்திவைத்தார்கள்
    பாகியாதிபதி சந்திரன் 4ல் அமர்ந்து 10 மிடத்தை பார்வை செய்வது சிறப்பு
    இதனால் நிலபுல்ன்கள் வசதிகளை சுகங்களை கொடுப்பார்.
    எனினும் வாழ்க்கைப்போராட்டம் அனேகம் உள்ள ஜாதகம்.
    என்னால் முடிந்ததை முயற்சி செய்துள்ளேன் ஐயா.தவறு இருந்தால்
    திருத்திக்கொள்ள தயாராய் உள்ளேன் ஐயா. நன்றி.
    ல ரகுபதி

    ReplyDelete
  26. 1. லக்கினத்தில் செவ்வாய், ராகு

    கோபம்,தேகபலம். காலசர்ப தோஉஷம்.

    2. குரு நீசம். உடன்பிறந்தோர் பகை. வருமானம் குறைவு.

    3. 5ல் சனி குழந்தைகளால் மன மகிழ்சி இராது. வாழ்க்கை துயரமானது. மற்றவர்களால் வெறுக்கப்படக்கூடிய செயல்களை செய்பவர்.

    4. கால தாமதமான திருமணம், போரட்டமான இல்வாழ்க்கை,குடும்பத்தில் பலவிதமான சிக்கல்கள், எப்போதும் கவலையான வாழ்க்கை நிலை. திருமண வாழக்கை மகிழச்சி இராது,

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com