மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.10.12

சத்திய சோதனை!



சத்திய சோதனை!


தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா காந்தி ஜெயந்தி என்று தேசமக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நன்நாளில் அவருடைய நினைவுகளைப் போற்றுவோம்!

காந்திஜியின் சுய சரிதை நூலைப் படித்திருக்கிறீர்களா?

இதுவரை படித்திராதவர்கள் படித்துப் பாருங்கள்

My Experiments with Truth என்று ஆங்கிலத்தில் உள்ள பிரதி இலவசமாக (பி.டி.எஃப் கோப்பாக) கீழிக்கண்ட தளத்தில் கிடைக்கும்

http://www.filestube.com/m/my+experiments+with+truth+pdf

அதன் தமிழாக்கம் ‘சத்திய சோதனை’ என்ற பெயரில் வந்த நூலின் பிரதி இலவசமாக (பி.டி.எஃப் கோப்பாக) கீழிக்கண்ட தளத்தில் கிடைக்கும்

http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai.html

================================================
காந்தி ஜெயந்தியையை முன்னிட்டு http://www.gandhitoday.in/
என்ற வலைதளத்தில் நமது வகுப்பறையின் மூத்த மாணவர் லால்குடி, கே.முத்துராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

  1. அண்ணலே எங்கள் ஆருயிரே!
    தன்னலம் அற்ற தர்மதுரையே!
    அகிம்சை ஈன்ற கருணைக்கடலே!

    மண்ணுயி ரெல்லாம் தன்னுயிரென
    விண்ணவரும் வியக்கும் அளவிலே
    பொன்னரும் தியாகம் புரிந்த
    எங்கள் சிந்தைநிறைத் தந்தையே!

    ஆயுதம் கொள்ளாய் அணிதிரட்ட
    காகிதம் கொண்டாய் அடிமைப்
    பிணி போக்க ஆப்பிரிக்காவிலும்
    ஆங்கிலேய துயர் போக்க
    அன்னைத் திரு நாட்டிலும்
    ஊமைகளாய் இருந்தோரை உரிமை
    முழக்கமிடச் செய்தாய் உன்னதமான
    உண்ணா விரதமிருந்தே மனம்
    கல்லாய்ப் போனக்கொடுங் கோலரும்
    கலங்கிடும் அறியக்காரியம் செய்தாய்!

    தீண்டாமையை தீயிலிட்டாய் வேண்டாமென
    கொல்லாமையையும் தீதுறு மது
    கொள்ளாமை செய்வீர் இங்கே
    கல்லாமையை இல்லாமையும் செய்வீரென
    தள்ளாத வயதிலும் துள்ளலோடு
    பார்வியக்க பாரதம் முழுவதும்
    புது வேதம் சொன்னாய்!

    நாதமுனிவரும் பேதமில்லாப் புருஷரும்
    கூறாத புதியதோர் உத்தியை
    அகிம்சையோடு சத்யாகிரகம் செய்து
    கத்தியும் ரத்தமும் இன்றியே
    புது யுத்தம் புரிய துணிந்ததில்
    வெற்றிக் கனியும் பறித்தாயே!

    இத்தனையும் செய்த உந்தன்
    இதயத்தையும் துளைத்திட அன்று
    எத்தனை கொடிய மனம் வேண்டும்
    நன்றிகெட்ட தனத்தால் வந்தபாவமோ
    நாசங்கள் பல விளைந்தே
    நாடும் கேட்டுப் போனதே
    கூடு விட்டுப் போனாவி
    மீண்டும் இங்கே உதித்திடுமோ
    மீலாத் துயரை போக்கிடுமோ
    வாராய் ஐயா வாராய்
    வந்திங்கே நாடு படும்
    பாடை வந்துப் பாராய்!

    சத்தியத் தாயின் புதல்வனே!
    நித்தமும் இங்கே வேதனை
    இன்னமும் தீர்ந்த பாடில்லை
    இங்கே சத்தியத்திற்கு சோதனை.

    அண்ணலே உங்களது பிறந்த இந்நாளில் தங்களை தியாகங்களை எல்லாம் எண்ணி பெருமை கொள்கிறோம் எங்களை ஆசிர் வதியுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  2. குருவிற்க்கு வணக்கம்
    நன்றி

    ReplyDelete
  3. கிருஷ்னன் சார் அவர்களின் கட்டுரை அந்த வலையில் இந்த நிமிடம் வரை வலையேறவில்லை அய்யா.கிருஷ்னன் சார் ஒரு காந்தியவாதி அவரது கட்டுரையை படிக்க ஆவலாய் உள்ளேன்.

    அண்ணலின் பிறந்த நாளில் அவரைப்பற்றிய சில செய்திகள்.

    காந்தியிடம் நட்பைப்பற்றி கருத்து கேட்டார்கள்.அதற்கு அவர்,
    எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்றார்.
    அப்படி என்றால் உங்களுக்கு நட்பு வட்டமே இல்லையா? என கேட்டதற்கு,
    எனக்கு பகைவர்கள் இல்லை, அதனால் நட்பின் பலம் எனக்கு தெரியவில்லை என்றார்.
    =====


    அண்ணலே
    நீங்கள் மீண்டும் பிறந்துவரவேண்டும்.
    வெறுங்கையோடு அல்ல
    தடியோடு!

    அது
    நீங்கள் ஊன்றி நடக்க அல்ல
    தடியடி நடத்த.

    வந்தபின்
    ராட்டைக்குப்பதில்
    சாட்டையையும்
    சுழற்றவேண்டும்

    வருவீரா....
    ஜெய்ஹிந்த்.

    ReplyDelete
  4. ஜி ஆலாசியம் said...

    ....கூடு விட்டுப் போனாவி
    மீண்டும் இங்கே உதித்திடுமோ
    மீலாத் துயரை போக்கிடுமோ
    வாராய் ஐயா வாராய்
    வந்திங்கே நாடு படும்
    பாடை வந்துப் பாராய்!

    சத்தியத் தாயின் புதல்வனே!
    நித்தமும் இங்கே வேதனை
    இன்னமும் தீர்ந்த பாடில்லை
    இங்கே சத்தியத்திற்கு சோதனை.////

    என்ன ஒரு சூடான வார்த்தைகள் வரிக்கு வரி நிஜம் அத்தனைய்யும் சத்தியம். அருமையான கவிதை. பொருத்தமான நேரத்தில். நன்றி ஆலாசியம்.

    ReplyDelete
  5. Guru Vanakkam,

    Einstein on Gandhi:
    //Mahatma Gandhi's life achievement stands unique in political history. He has invented a completely new and humane means for the liberation war of an oppressed country, and practised it with greatest energy and devotion. The moral influence he had on the conciously thinking human being of the entire civilized world will probably be much more lasting than it seems in our time with its overestimation of brutal violent forces. Because lasting will only be the work of such statesmen who wake up and strengthen the moral power of their people through their example and educational works.
    We may all be happy and grateful that destiny gifted us with such an enlightened contemporary, a role model for the generations to come.//

    So...Only way we can see Gandhi is truly following his principles

    ReplyDelete
  6. Thanks for the post as well as the link to read....

    Have a Gandhi day....

    Sincerely yours,
    ravi

    ReplyDelete
  7. மோகன் தாஸ்.. பற்றிய
    தோழர் ஆலாசியத்தின் கவிதை வரிகள் சரி...

    அவரை பற்றி அறிய வாத்தியார் தந்த இணைக்குறிப்பு
    சரி...

    மீண்டு(ம்) வர வேண்டும்என
    வேண்டுகோள் வைத்த புலியாரின் எண்ணங்களும் சரி..

    ஆனாலும்..(?!)

    அமைதி கொள்கிறோம்.. தாங்கிய
    சுமையுடன் வருகை பதிவு தந்தபடி

    ReplyDelete
  8. காந்தி இன்று வலைதளத்தில் என‌து கட்டுரையை ஏற்றுகொண்டு சில மாற்றங்களுடன் வெளியிடுவதாக மின் அஞ்சல் அனுப்பியிருந்தனர். ஆனால் காந்தி ஜெயந்தி அன்று வெளியிடுவோம் என்று அவர்கள் கூறவில்லை.நானாக அப்படி நினைத்துக் கொண்டுவிட்டேன்.நிச்சயம் அவர்கள் பிரசுரிப்பார்கள். அப்போது மீண்டும் சொல்கிறேன்.

    சத்திய சோதனை புத்தகங்களுக்கு சுட்டிகள் கொடுத்ததற்கு ஐயாவுக்கு நன்றி.

    காந்திஜி தென்னாப்பிரிக்கப் போராட்டத்தினைக் கைவிட்டு இந்தியா திரும்பிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. பல தவறான புரிதல்களைப் போன்று இதுவும் பிழைதான்.

    காந்திஜி தனது இரண்டாவது மகன் மணிலாலிடம் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தினை ஒப்படைத்தார். மணிலால் தென் ஆப்பிரிக்காவையே தன் தாயகமாக ஏற்று அங்கேயே இருந்து அந்த நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டார்.நெல்சன் மண்டெலாவுடன் தோளோடு தோள் நின்றார்.மண்டெலா 22 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார்.காந்திஜியின் வாரிசு மணிலால் காந்தி 14 ஆண்டுகள் ஆப்பிரிக்க விடுத‌லைக்காகச் சிறை சென்றார்.

    மக்கள் எப்படித் தங்கள் மனக்குறைகளை அரசாங்கத்திடம் நாகரிகமாக முறையிடுவது என்பதற்கு மகாத்மாஜிதான் உலகிற்கே வழிகாட்டினார். இன்றைய பர்மிய எதிர்கட்சித் தலைவி ஆங்சூயி காந்திஜிதான் தன் அகிம்சைப் போராட்டங்களுக்கு முன் உதாரணம் என்கிறார்.

    வாழ்க மகாத்மாஜியின் கொள்கைகள். வாழ்க அவர் திரு நாமம்!







    ReplyDelete
  9. //தள்ளாத வயதிலும் துள்ளலோடு
    பார்வியக்க பாரதம் முழுவதும்
    புது வேதம் சொன்னாய்!//

    ஆம்! ஹாலாஸ்யம்ஜி! உப்பு சத்யாக்ரஹம் துவங்கும் போது அவருக்கு வயது அறுபததைத் தாண்டிவிட்டது.தண்டி யாத்திரையின் போது அவர் வேகத்திற்கு மக்க்களால் நடக்க முடியவில்லை.அது நடையா ஓட்ட்டம என்று சொல்ல முடியாதா ஒரு வேகமாம்.

    உணர்ச்சி மிக்க கவிதை.

    ReplyDelete
  10. //ராட்டைக்குப்பதில்
    சாட்டையையும்
    சுழற்றவேண்டும்//

    சாட்டையைச்சுழற்றித்தன்னையேஅடித்துக்கொள்வார்; பிறரைத்தாக்க மாட்டார்.
    நல்ல கவிதை தனுசு.

    ReplyDelete
  11. குருவே வணக்கம்,
    காந்தி நல்லவரா ! அவரின் உண்ணாவிரதம் தேவையானதா !

    1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் ‘கம்யூனல் அவார்டு’ என்று அழைக்கப்படும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமைக்கான அறிவிப்பு லண்டனிலிருந்து மன்னரின் ஆணையாக அறிவிக்கப் பட்டது.
    - இந்த அறிவிப்பை எரவாடா சிறையிலிருந்த காந்தி கடுமையாக எதிர்த்தார். லண்டனிலுள்ள தலைமை அமைச்சருக்கு 1932 ஆகஸ்ட் 18 ஆம் நாள் (அறிவிப்பு வந்த அடுத்த நாளே) எரவாடா சிறையிலிருந்து காந்தி கடிதம் எழுதினார். அதில் இடம் பெற்றிருந்த வாசகம்:

    “சிறுபான்மையினரின் பிரதிநிதித்து வம் பற்றிய பிரிட்டிஷ் அரசின் முடிவை நான் படித்துப் பார்த்தேன்; அது குறித்து ஆழ்ந்து யோசித்தேன். சர். சாமுவேல் ஹோருக்கு நான் எழுதிய கடிதத்தை ஒட்டியும் 1931 நவம்பர் 13 ஆம் நாள் புனித ஜேம்ஸ் அரண்மனையில் வட்ட மேசை மாநாட்டின் சிறுபான்மையினர் குழுக் கூட்டத்தில் நான் செய்த பிரகடனத்தை ஒட்டியும், தங்கள் முடிவை உயிரைக் கொடுத்தும் எதிர்க்க வேண்டிய வனாய் உள்ளேன். நான் இப்படி செய் வதற்குள்ள ஒரே வழி; உப்புடன் அல்லது உப்பு இல்லாமல் நீரும் சோடாவும் தவிர வேறு எவ்வகை உணவும் உட்கொள்ளா மல் சாகும்வரை நீடித்து உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பிரிட்டிஷ் அரசினர் தாமாகவோ, பொது மக்களின் கருத்து நெருக்குதலுக்கு ஆளாகியோ தமது முடிவை மாற்றிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வகுப்பு வழிபட்ட தேர்தல் தொகுதி களுக்கான திட்டத்தை விலக்கிக் கொள் வார்களானால் உண்ணாவிரதம் முடிந்து விடும்; தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகள், எவ்வளவு விரிவான வாக்குரிமை என்றாலும் பொது வாக்குரிமைப்படி பொதுவான தேர்தல் தொகுதியினால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேற்கூறிய முடிவை மேலே சொல்லப் பட்ட ஆலோசனைப்படி மாற்றிக் கொள்ள வில்லை என்றால் அடுத்த செப்டம்பர் 20 ஆம் நாள் நடுப்பகலிலிருந்து உண்ணா விரதம் ஆரம்பமாகும்.”

    - இது காந்தி எழுதிய கடிதம். உண்ணாவிரதத்தையும் காந்தி தொடங்கினார்.

    காந்தியின் உண்ணாவிரதத்தை மய்யமாக வைத்து காந்தியின் உயிரைக் காப்பாற்ற அம்பேத்கருக்கு கடுமையான அழுத்தங்கள் தரப்பட்டன. (அப்போது வெளிநாட்டு பயணத்தில் இருந்த பெரியார் மட்டும் - காந்தியின் மிரட்டலுக்கு பணிந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த உரிமையை இழந்து விடாதீர்கள் என்று எச்சரித்து காந்திக்கு தந்தி அனுப்பினார்) அந்த நிலையில் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையை விட்டுத் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இது பற்றி தனது நிலையை அம்பேத்கர் இவ்வாறு விளக்கினார்:

    “என்னைப்பொறுத்த வரை அப்போது எனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய மிகக் கொடிய தரும சங்கடம் வேறு எவருக்கும் ஏற்பட்டதில்லை என்று சொல்வது மிகையாகாது. எவரையும் திக்குமுக்காட வைக்கும் நிலைமை அது. இரு மாற்று வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியவனாய் இருந்தேன். பொதுவான மனிதத் தன்மையான ஒருவன் என்ற முறையில் நிச்சய மரணத்திலிருந்து காந்தியைக் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கிருந்தது. தீண்டாத மக்களுக்குத் தலைமை அமைச்சர் வழங்கிய அரசியல் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய சிக்கலும் எனக்கிருந்தது. நான் மனிதத் தன்மையின் அறைகூவலை ஏற்றுக் காந்தியாரின் உயிரைக் காப்பாற்று வதற்காக, அவருக்கு மன நிறைவு தரக் கூடிய விதத்தில் வகுப்புநலத் தீர்ப்பை மாற்றியமைக்க உடன்பட்டேன். இந்த உடன்பாடுதான் பூனா ஒப்பந்தம் என்று அறியப்படுகிறது.”

    ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாய நலன்களுக்காக, வாழ்ந்திருக்கிறார். சுதந்திரம் என்பது எல்லோருக்குமே உறியதாம். வாங்கிக்கொடுத்த அவருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம். ஒரு முஸ்லிமலோ அல்லது கிறிஸ்தவனாலோ அல்லது தலித்துனாலோ அவர் படுகொலை செய்யபடவில்லை. அது உலகமறியும். கிருஷ்ணபரமாத்மா ஒரு இடத்தில் சொல்லுகிறார். நீ எதனை நினைக்கிறாயோ அதனையாவாய். புரிந்துகொள்ளுங்கள் குருவே.

    ReplyDelete
  12. ////// ஜி ஆலாசியம் said...
    அண்ணலே எங்கள் ஆருயிரே!
    தன்னலம் அற்ற தர்மதுரையே!
    அகிம்சை ஈன்ற கருணைக்கடலே!
    மண்ணுயி ரெல்லாம் தன்னுயிரென
    விண்ணவரும் வியக்கும் அளவிலே
    பொன்னரும் தியாகம் புரிந்த
    எங்கள் சிந்தைநிறைத் தந்தையே!
    ஆயுதம் கொள்ளாய் அணிதிரட்ட
    காகிதம் கொண்டாய் அடிமைப்
    பிணி போக்க ஆப்பிரிக்காவிலும்
    ஆங்கிலேய துயர் போக்க
    அன்னைத் திரு நாட்டிலும்
    ஊமைகளாய் இருந்தோரை உரிமை
    முழக்கமிடச் செய்தாய் உன்னதமான
    உண்ணா விரதமிருந்தே மனம்
    கல்லாய்ப் போனக்கொடுங் கோலரும்
    கலங்கிடும் அறியக்காரியம் செய்தாய்!
    தீண்டாமையை தீயிலிட்டாய் வேண்டாமென
    கொல்லாமையையும் தீதுறு மது
    கொள்ளாமை செய்வீர் இங்கே
    கல்லாமையை இல்லாமையும் செய்வீரென
    தள்ளாத வயதிலும் துள்ளலோடு
    பார்வியக்க பாரதம் முழுவதும்
    புது வேதம் சொன்னாய்!
    நாதமுனிவரும் பேதமில்லாப் புருஷரும்
    கூறாத புதியதோர் உத்தியை
    அகிம்சையோடு சத்யாகிரகம் செய்து
    கத்தியும் ரத்தமும் இன்றியே
    புது யுத்தம் புரிய துணிந்ததில்
    வெற்றிக் கனியும் பறித்தாயே!
    இத்தனையும் செய்த உந்தன்
    இதயத்தையும் துளைத்திட அன்று
    எத்தனை கொடிய மனம் வேண்டும்
    நன்றிகெட்ட தனத்தால் வந்தபாவமோ
    நாசங்கள் பல விளைந்தே
    நாடும் கேட்டுப் போனதே
    கூடு விட்டுப் போனாவி
    மீண்டும் இங்கே உதித்திடுமோ
    மீலாத் துயரை போக்கிடுமோ
    வாராய் ஐயா வாராய்
    வந்திங்கே நாடு படும்
    பாடை வந்துப் பாராய்!
    சத்தியத் தாயின் புதல்வனே!
    நித்தமும் இங்கே வேதனை
    இன்னமும் தீர்ந்த பாடில்லை
    இங்கே சத்தியத்திற்கு சோதனை.
    அண்ணலே உங்களது பிறந்த இந்நாளில் தங்களை தியாகங்களை எல்லாம் எண்ணி பெருமை கொள்கிறோம் எங்களை ஆசிர் வதியுங்கள்.
    நன்றி./////

    உங்களின் கவிதை வரிகளுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. ////Udhaya Kumar said...
    குருவிற்க்கு வணக்கம்
    நன்றி

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  14. /////thanusu said...
    கிருஷ்னன் சார் அவர்களின் கட்டுரை அந்த வலையில் இந்த நிமிடம் வரை வலையேறவில்லை அய்யா.கிருஷ்னன் சார் ஒரு காந்தியவாதி அவரது கட்டுரையை படிக்க ஆவலாய் உள்ளேன்.
    அண்ணலின் பிறந்த நாளில் அவரைப்பற்றிய சில செய்திகள்.
    காந்தியிடம் நட்பைப்பற்றி கருத்து கேட்டார்கள்.அதற்கு அவர்,
    எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்றார்.
    அப்படி என்றால் உங்களுக்கு நட்பு வட்டமே இல்லையா? என கேட்டதற்கு,
    எனக்கு பகைவர்கள் இல்லை, அதனால் நட்பின் பலம் எனக்கு தெரியவில்லை என்றார்.
    =====
    அண்ணலே
    நீங்கள் மீண்டும் பிறந்துவரவேண்டும்.
    வெறுங்கையோடு அல்ல
    தடியோடு!
    அது
    நீங்கள் ஊன்றி நடக்க அல்ல
    தடியடி நடத்த.
    வந்தபின்
    ராட்டைக்குப்பதில்
    சாட்டையையும்
    சுழற்றவேண்டும்
    வருவீரா....
    ஜெய்ஹிந்த்.///////

    உங்களின் கவிதை வரிகளுக்கு நன்றி தனுசு!
    அவர் வந்து தடியடி நடத்தினாலாவது நாடு திருந்துமா?
    முதலில் அவருடைய சீடர்கள் திருந்துவார்களா?

    ReplyDelete
  15. /////thanusu said...
    ஜி ஆலாசியம் said...
    கூடு விட்டுப் போனாவி
    மீண்டும் இங்கே உதித்திடுமோ
    மீலாத் துயரை போக்கிடுமோ
    வாராய் ஐயா வாராய்
    வந்திங்கே நாடு படும்
    பாடை வந்துப் பாராய்!
    சத்தியத் தாயின் புதல்வனே!
    நித்தமும் இங்கே வேதனை
    இன்னமும் தீர்ந்த பாடில்லை
    இங்கே சத்தியத்திற்கு சோதனை.////
    என்ன ஒரு சூடான வார்த்தைகள் வரிக்கு வரி நிஜம் அத்தனைய்யும் சத்தியம். அருமையான கவிதை. பொருத்தமான நேரத்தில். நன்றி ஆலாசியம். ///////

    அவர் வந்தால் அன்னா ஹசாரேவிற்கு ஏற்பட்ட நிலைமைதான் அவருக்கும் ஏற்படும்!:-(((((((

    ReplyDelete
  16. /////RAMADU Family said...
    Guru Vanakkam,
    Einstein on Gandhi:
    //Mahatma Gandhi's life achievement stands unique in political history. He has invented a completely new and humane means for the liberation war of an oppressed country, and practised it with greatest energy and devotion. The moral influence he had on the conciously thinking human being of the entire civilized world will probably be much more lasting than it seems in our time with its overestimation of brutal violent forces. Because lasting will only be the work of such statesmen who wake up and strengthen the moral power of their people through their example and educational works.
    We may all be happy and grateful that destiny gifted us with such an enlightened contemporary, a role model for the generations to come.//
    So...Only way we can see Gandhi is truly following his principles/////

    உண்மைதான். உங்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////ravichandran said...
    Thanks for the post as well as the link to read....
    Have a Gandhi day....
    Sincerely yours,
    ravi/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. /////அய்யர் said...
    மோகன் தாஸ்.. பற்றிய
    தோழர் ஆலாசியத்தின் கவிதை வரிகள் சரி...
    அவரை பற்றி அறிய வாத்தியார் தந்த இணைக்குறிப்பு
    சரி...
    மீண்டு(ம்) வர வேண்டும்என
    வேண்டுகோள் வைத்த புலியாரின் எண்ணங்களும் சரி..
    ஆனாலும்..(?!)
    அமைதி கொள்கிறோம்.. தாங்கிய
    சுமையுடன் வருகை பதிவு தந்தபடி//////

    அமைதியும், மெளனமும் அற்புதமானவை!

    ReplyDelete
  19. ////kmr.krishnan said...
    காந்தி இன்று வலைதளத்தில் என‌து கட்டுரையை ஏற்றுகொண்டு சில மாற்றங்களுடன் வெளியிடுவதாக மின் அஞ்சல் அனுப்பியிருந்தனர். ஆனால் காந்தி ஜெயந்தி அன்று வெளியிடுவோம் என்று அவர்கள் கூறவில்லை.நானாக அப்படி நினைத்துக் கொண்டுவிட்டேன்.நிச்சயம் அவர்கள் பிரசுரிப்பார்கள். அப்போது மீண்டும் சொல்கிறேன்.
    சத்திய சோதனை புத்தகங்களுக்கு சுட்டிகள் கொடுத்ததற்கு ஐயாவுக்கு நன்றி.
    காந்திஜி தென்னாப்பிரிக்கப் போராட்டத்தினைக் கைவிட்டு இந்தியா திரும்பிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. பல தவறான புரிதல்களைப் போன்று இதுவும் பிழைதான்.
    காந்திஜி தனது இரண்டாவது மகன் மணிலாலிடம் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தினை ஒப்படைத்தார். மணிலால் தென் ஆப்பிரிக்காவையே தன் தாயகமாக ஏற்று அங்கேயே இருந்து அந்த நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டார்.நெல்சன் மண்டெலாவுடன் தோளோடு தோள் நின்றார்.மண்டெலா 22 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார்.காந்திஜியின் வாரிசு மணிலால் காந்தி 14 ஆண்டுகள் ஆப்பிரிக்க விடுத‌லைக்காகச் சிறை சென்றார்.
    மக்கள் எப்படித் தங்கள் மனக்குறைகளை அரசாங்கத்திடம் நாகரிகமாக முறையிடுவது என்பதற்கு மகாத்மாஜிதான் உலகிற்கே வழிகாட்டினார். இன்றைய பர்மிய எதிர்கட்சித் தலைவி ஆங்சூயி காந்திஜிதான் தன் அகிம்சைப் போராட்டங்களுக்கு முன் உதாரணம் என்கிறார்.
    வாழ்க மகாத்மாஜியின் கொள்கைகள். வாழ்க அவர் திரு நாமம்!///////

    தங்களுக்காகச் சிறைக்குச் சென்றவர்களை எல்லாம் பொது மக்கள் மறந்து விட்டார்கள். பொருளாதாரத் தேடலில் (பொருள் ஈட்ட ஓடுவதால்) அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை!

    ReplyDelete
  20. ////// kmr.krishnan said...
    //தள்ளாத வயதிலும் துள்ளலோடு
    பார்வியக்க பாரதம் முழுவதும்
    புது வேதம் சொன்னாய்!//
    ஆம்! ஹாலாஸ்யம்ஜி! உப்பு சத்யாக்ரஹம் துவங்கும் போது அவருக்கு வயது அறுபததைத் தாண்டிவிட்டது.தண்டி யாத்திரையின் போது அவர் வேகத்திற்கு மக்க்களால் நடக்க முடியவில்லை.அது நடையா ஓட்ட்டம என்று சொல்ல முடியாதா ஒரு வேகமாம்.
    உணர்ச்சி மிக்க கவிதை./////

    வாழ்க உங்கள் ரசனை உணர்வு!

    ReplyDelete
  21. ////kmr.krishnan said...
    //ராட்டைக்குப்பதில்
    சாட்டையையும்
    சுழற்றவேண்டும்//
    சாட்டையைச்சுழற்றித்தன்னையேஅடித்துக்கொள்வார்; பிறரைத்தாக்க மாட்டார்.
    நல்ல கவிதை தனுசு./////

    வாழ்க உங்கள் ரசனை உணர்வு!

    ReplyDelete
  22. மகாத்மாகாந்தியின் பிறந்த நாளன்று வந்த இந்தப் பதிவில் நமது வகுப்பறை சகோதரர் திரு முருகன் அவர்கள் தனதுக் கருத்தாக அவர் அறிந்த விடயங்களை கொண்டு ஒரு நெருடலான பின்னூட்டம் இட்டு இருந்தார்கள். நானும் அதைப் பற்றிய கருத்து பேதத்தில் உடன்பாடு இல்லாததால் எனது கருத்தை தெரிவிக்க எண்ணினேன் பிறகு அதற்கு முன்பாக சிறந்தக் காந்தியவாதியான நமது தஞ்சைப் பெரியவரிடம் தெளிவானக் கருத்தையும் அறிந்து எழுத எண்ணினேன்; அதன் படி இப்போது சரியானப் பார்வையோடுக் கூடிய உண்மை கருத்தை இங்கே இட்டும் உள்ளேன். மின் அஞ்சலில் கேட்ட எனது கேள்விக்கு ஐயாவின் பதிலை அனைவரும் படித்தறிவோம். நன்றி.

    2012/10/3 G Alasiam

    ஐயா வணக்கம், நேற்று வகுப்பறையில் ஒரு நண்பர் அளித்த பின்னூட்டம். தலையும் இல்லை வாலும் இல்லை. அதற்கு மேலும் இந்த தகவல் உண்மையா என்பதும் கேள்வி...

    அப்படி இருக்குமானாலும் மகாத்மாவின் இந்தக் கருத்திற்கு மிகச் சரியான பின்னணி இருக்கும் அல்லது வெள்ளையர்களின் சூழ்ச்சி என்பதை புரிந்தும் வேறு நல்லக் காரணத்திற்காகவும் தான் மகாத்மா இது போன்று செய்ய துணிந்தும் இருப்பார்.

    இது நிச்சயமாக பிரிவினையையும், போராட்டத்தை வேரறுக்கும் வேலையாக இருக்கும் என்றும் கூட மகாத்மா உணர்ந்திருப்பார்.

    கொடுமை என்றால் ஹரியின் குழந்தைகள் என்று கூறி அவர்களை அணைத்து அவர்களுக்கு சமூகத்தில் சமநீதி கிடைக்க அரும் பாடு பட்ட உன்னத தலைவரை இத்தனை அபாண்டமாகவும் பேசவும் முடியுமோ!!!!??

    எப்படி இப்படியெல்லாம் திரித்து நடுவில் ஒருப்பகுதியை மட்டும் எடுத்து குதர்க்கமாக செய்ய முடியும்.

    இது பற்றியக் கட்டுரையை தெளிவை தேடி எழுதி வகுப்பறையிலே பதிவிட வேண்டும். அப்படி இயலாது போனால் தங்களின் வலைப் பூவில் தெளிவாக எழுதவும் தங்களை வேண்டிக் கொள்கிறேன்.

    Please read the below attached details for your reference.

    நன்றிகள் ஐயா!
    அன்புடன் உங்கள்,
    கோ.ஆலாசியம்.

    From: Gopalan Venkataraman
    To: G Alasiam
    Sent: Wednesday, October 3, 2012 10:46 PM
    Subject: Re: இத்தனை அபாண்டமாகவும் பேசவும் முடியுமோ!!!!??

    Dear Shri Alasiamji,
    1932இல் பிரிட்டிஷ் அரசு, தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய, அவர்களே வாக்களித்துத் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை முன்மொழிந்தது.

    தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு ஒப்புதல் அளித்தால், அது ஒட்டுமொத்த இந்திய மக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்துத் தனிமைப் படுத்துவதாக அமையும் என்பதால் மகாத்மா காந்தி அந்த முன்மொழிவை நிராகரித்து விட்டார்.

    அதற்கு மாற்றாக தாழ்த்தப்பட்டவர்களின் பிரிதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க சில தொகுதிகளை நிர்ணயித்து, அந்தத் தொகுதிகளில் எல்லாம் அனைத்துத் தரப்பு மக்களும் வாக்களித்துத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    அப்படிச் செய்தால்தான் அது மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளாக அவர்கள் இருக்க முடியும். அப்படி தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் அந்த ரிசர்வ் தொகுதியில் தாழ்த்தப்பட்ட இன மக்களின் பிரதிநிதிகளாக இருப்பர், ஆனால் வாக்களிப்பவர்கள் எல்லா தரப்பு மக்களும் வாக்களிப்பர்.

    இந்த முறையைத்தான் மகாத்மா மொன்மொழிந்தார். அதற்கு மாறாக ஒடுக்கப்பட்ட மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தி, அவர்கள் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுப்பது என்பது மக்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்திவிடும் என்பதால், அப்படி பிரிட்டிஷ் அரசு பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்தால் தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகச் சொன்னார்.

    இது குறித்த கடிதப் போக்குவரத்தை ஒரு பகுதியை எடுத்துக் காட்டி மகாத்மாவை இழிவு செய்வது அவரையும், அவர் கொள்கைகளையும் அறிந்து கொள்ளாதவர்கள் செய்யும் காரியும்.

    இன்று ரிசர்வ் தொகுதிகள் இருக்கின்றன. அங்கு அவர்கள் மட்டும்தான் போட்டியிடுவார்கள். ஆனால் எல்லா மக்களும் வாக்களிக்கிறார்கள் அல்லவா? அதைத்தான் காந்திஜி கேட்டார்.

    ஒரு தொகுதியில் பொது வேட்பாளர் ஒருவரும், தாழ்த்தப்பட்ட வேட்பாளர் ஒருவரும் நின்று இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரட்டை வேட்பாளர் முறையும் இருந்தது அப்போது. மொத்தத்தில் காந்திஜியின் எண்ணம் மக்களைப் பிரித்து ஒற்றுமையைக் குலைக்கும் வேலையில் பிரிட்டிஷ் ஈடுபடக்கூடாது என்பதுதான்.

    பாரதி சொன்னது போல "ஆயிரம் உண்டிங்கு ஜாதி, இதில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி" என்பதுதான் இதன் உட்கருத்து. புரிந்தவர்களுக்குச் சரி. புரியாதவர்கள் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ளும் வரை உண்மை நிலையை நாம் சொல்லிக் கொண்டிருக்கத்தான் வேண்டும். வேறு என்ன செய்ய முடியும்.

    இந்தப் பிரச்சினையின் சிக்கல் என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். நன்றி. Yours, VGopalan

    வாத்தியார் ஐயா அவர்களுக்கும், கோபாலன் ஐயா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  23. இரட்டை வாக்கு முறையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்குள்ளேயே முதலில் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.தாழ்த்தப்பட்ட மக்களிடமும் பல பிரிவினர் (உள் சாதிகள்) உண்டு. எனவே அதில் எந்தப் பிரிவினர் மெஜாரிடியோ அவர்கள் அதிகாரத்திற்கு வந்துவிடுவர். மற்ற பிரிவினர் அவர்களை ஒன்று அண்டிப்பிழைக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் . இது ஆங்கிலேயன் தாழ்த்தப்பட்ட மக்களையும் அவர்களுக்குள்ளாகவே பிரிக்கச் செய்த சூது.ஒருபக்கம் இந்து சமுதாயத்தில் இருந்து அவர்களைப்பிரித்து மாற்று மதத்தைத் தழுவச்செய்து பிரிவினை ஏற்படுத்துவது. மற்றொரு பக்கம் அவர்களை அவர்களுக்குள்ளாகவே மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது.

    ஒரு சமயம் வரை எம் சி ராஜாவை தூக்கிவிட்டு வந்த ஆங்கிலேயன், வட்ட மேஜை மகாநாட்டின் போது அம்பேத்கரை அழைத்து, எம் சி ராஜாவை ஓரங்கட்டினான். அவர்கள் இருவரும் இறுதிவரை அரசியலில் ஒன்று சேரவில்லை.

    அம்பேதகாரின் திட்டம் எல்லாத் தரப்பு தாழ்த்தப்பட்டவர்களுடைய ஆதரவையும் பெற்று இருக்கவில்லை என்பதை இப்போது புனா ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசும் தலித்துக்கள் கணக்கில் கொள்வதே இல்லை. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அம்பேத்கரின் மகர் இனத்தவர் தங்களை
    அழுத்திவிடுவார்கள் என்று நினைத்த பிற தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள்.
    மகர் இனம் அல்லாத அவர்களுக்காக காந்தி அம்பேதகருடன் தொடர்ந்து பேசி வந்தார்.

    காந்தி சமூக தளத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகப் போராடினார்.
    அம்பேதகர் சட்ட , அரசியல் தளத்தில் தாழ்தத்ப்பட்டவர்களுக்காகப் போராடினார். சட்டமும் அரசியலும் மாறக் கூடியவை. ஆனால் பாரம்பரியம்
    சமூகக்கட்டுக்கள் எளிதில் மாற்ற முடியாதவை. இரண்டில் சமூகப் போராளியே அதிக எதிர்ப்பைச் சந்திப்பான். கடினமான பாதை அது.காந்தி கடினமான பாதையைத் தெர்ந்தெடுத்தார்.

    காந்தி உண்ணாவிரதம் இருந்த 20 செப் 1932 முதல் 25 செப் 1932 வரை ஆறு நாட்களில் இந்தியா முழுதும் பல நூறு கோவில்களின் வாசல்கள் தாழ்த்த‌ப்பட்டவர்களுக்காகத் திறக்கப்பட்டன.சாதி இந்துக்களின் மன மாற்றமும் புனா ஒப்பந்தத்துடன் சேர்த்துக் கணக்கில் எடுத்துக் கொள்ள‌வேண்டும்.

    புனா ஒப்பந்தம் என்ன என்று அறிந்தவர்கள் அதன் எதிர்பாளர்களில் குறைந்த எண்ணிக்கை தான் உண்டு.

    முருகன் அவர்கள் வரலாற்றை இன்னும் நுணுக்கமாகப் பயில வேண்டுகிறேன்.

    ReplyDelete
  24. //ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாய நலன்களுக்காக, வாழ்ந்திருக்கிறார்.//

    காந்திஜியைப்பற்றி முருகன் கூறுவது இது. ஆனால் பாபாசாஹேப் அம்பேத்கர் கூறுவது இது:

    "But I have only one quarrel with you, that is, you work for the so-called national welfare and not for our interests alone. If you devoted yourself entirely to the welfare of the Depressed Classes, you would then become our h"

    ReplyDelete
  25. //you would then become our h"//

    read as:

    "you would then become our hero"

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com