மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.10.12

Astrology ஆளுமையும் இருக்கும் ஆட்டமும் இருக்கும்!



 Astrology ஆளுமையும் இருக்கும் ஆட்டமும் இருக்கும்!

17.10.2012

மேஷ லக்கினம்.

லக்கின வரிசையில் இதுதான் முதல் லக்கினம். இதன் அதிபதி செவ்வாய். பிரதான கிரகமான, அதாவது ராஜ கிரகமான சூரியனுக்கு இது உச்சவீடாகும்!.

1
ல்க்க்கின அதிபதி செவ்வாய் மகர வீட்டில் உச்சம்பெறுவார். அதிபதி உச்சம் பெற்றாலும் அல்ல்து கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஜாதகத்திற்கு அது சிறப்பைத்தரும். ஜாதகனுக்கு உயர்வைத் தரும். ஜாதகன் செயல் வீரனாக இருப்பான்.

2
ல்க்கினத்தில் சூரியன் வந்து அமர்ந்திருந்தால், அது ஜாதகனுக்கு பல மேன்மைகளைத் தரும். மதிப்பு, மரியாதை, கெள்ரவம் அந்தஸ்து என்று அனைத்தையும் அது பெற்றுத்தரும்!.

3
மேஷ லக்கினத்தில் சந்திரன் வந்து அமர்ந்திருந்தால், அது ஜாதகனுக்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வழங்கும். ஜாதகனுக்குப் பெண்களை வசீகரிக்கும் தன்மையைக் கொடுக்கும்.

4
மேஷ லக்கினத்தில் லக்கினாதிபதி செவ்வாய் அமர்ந்திருந்தால், ஜாதகன் நல்ல நிர்வாகத் திறமையைப் பெற்றிருப்பான். ஆளுமை இருக்கும். அதாவது யாரையும் கட்டி மேயக்கும் திறமை இருக்கும். ஜாதகன் துணிச்சல் மிக்கவனாகவும், தைரியசாலியாகவும் இருப்பான். வெற்றிகரமான வாழ்க்கை அமையும்

5
மேஷத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பல்ல. புதன் இந்த லக்கினத்திற்கு மூன்று மட்டும் ஆறாம அதிபதி அதை நினைவில் வையுங்கள். ஜாதகனின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். எதிரிகள் ஏற்படுவார்கள். சிலர் கல்மனதுக்காரர்களாகவும் பல தீய பழக்கங்களுக்கு அடிமையானவர் களாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் சாஸ்திரங்களிலும், ஜோதிடத்திலும் ஆர்வம் உடையவர்களாவும், அவற்றில் அறிவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள். முன்னோர்களின் சொத்துக்கள் தங்காது. சிலர் அவற்றை எல்லாம் அடித்துத்தூள் கிளப்பிவிடுவார்கள். அதாவது அழித்து விடுவார்கள்

6
மேஷத்தில் குரு வந்து அமர்ந்தால், ஜாதகன் இறைப்பற்று உடையவனாகவும் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் உடையவனாகவும் இருப்பான். கல்வியாளனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு செல்வம் அதுவாக வந்து சேரும். எந்த வேலை செய்தாலும் அதில் நல்ல நிலையை அடைவான். விசுவாசம் மிக்கவனாக இருப்பான் பெருந்தன்மை மிக்கவனாக இருப்பான். பொது மக்களுக்குப் பாடுபடுபவ்னாக இருப்பான். பொது சேவையில் அதிகம் நாட்டம் உடையவனாக இருப்பான்
.
7
மேஷத்தில் சுக்கிரன் வந்து அமர்ந்தால், ஜாதகன் செல்வந்தனாகவும், வண்டி வாகன வசதிகளை உடையவனாகவும் இருப்பான். அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். நல்ல உறவினர்களைக் கொண்டவனாக இருப்பான். அதிகம் பயணிப்பவனாக இருப்பான். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சிலருக்குக் கொடுக்கல் வாங்கலில் விவகாரம் உண்டாகலாம்.

8
மேஷத்தில் சனி வந்து அம்ர்வது நல்லதல்ல. சனிக்கு இந்த இடம் நீச வீடாகும். அதை மனதில் வையுங்கள். வாழ்க்கை துன்பங்களூம் ச்சொகங்களும் நிறைந்ததாக இருக்கும். முயற்சிகள் எல்லாம் தோல்வியடையலாம். சிலருக்கு அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் வீணாகலாம். மனைவியுடன் சுமூகமான உறவு இருக்காது. முன்னோர்கள் வைத்துவிட்டுப்போன அல்லது கொடுத்துவிட்டுப்போன சொத்துக்களை எல்லாம் இழக்க நேரிடும். உறவினர்களுடன் அடிக்கடி உரசல்கள் ஏற்படும்.
ஜாதகனுக்கு விசுவாசமில்லாத தன்மை உண்டாகும்.

9
ராகு அல்லது கேது வந்து மேஷத்தில் அமர்வதோடு, தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இல்லாமலிருந்தால், ஜாதகனுக்கு பல நன்மைகள் உண்டாகும். மரியாதை சமூக அந்தஸ்து உண்டாகும். சிலர் ராணுவம் அல்லது காவல்துறையில் பணி செய்து உயர் பதவிக்கு வந்து விடுவார்கள். தைரியமும், எவரையும் வழி நடத்தும் மேன்மையும் ஜாதகனிடம் இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். ஜாதகன் அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். அதற்கு மாறாக வந்தமரும் ராகு அல்லது கேது, வேறு தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றால், மேற் சொன்னவை எதுவும் நடக்காது. அதற்கு மாறாகவே அனைத்தும் நடக்கும். அதாவது எதிரான பலன்களே கிடைக்கும்.

10.
கிரகங்கள் மேஷ லக்கினத்தில் வந்து அமர்வதால் உண்டாகும் பொதுப் பலன்களை சொல்லியுள்ளேன். வந்து அமராவிட்டாலும், வேறு இடத்தில் இருந்து அவர்கள் தங்கள் பார்வையை இந்த லக்கினத்தின் மேல் செலுத்தினாலும், அதாவது வைத்திருந்தாலும் அதே பலன்கள் உண்டாகும்.

11.
அதேபோல மேஷ் லக்கினாதிபதியான செவ்வாயுடன் கூட்டணி போடும் கிரகங்களை வைத்தும், அல்லது செவ்வாயுடன் பார்வையில் இருக்கும் கிரகங்களை வைத்தும் இந்த லக்கினக்காரகளின் குணங்கள் மாறுபடும். அதை நினைவில் வையுங்கள்!

12
மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் அதிபதி. சூரியன் ஐந்திற்கு (பூர்வபுண்ணியத்திற்கு) உரியவன். குரு பாக்கிய ஸ்தானத்திற்கு உரியவன் சனி 10 & 11ஆம் இடத்திற்கு உரியவன். ஆகவே இவர்கள் நால்வரால் இந்த லக்கினம் மேன்மை அடையும். புதன் ஆறிற்கு உரியவன் ஆதலால் அவனுடைய தொடர்பால் பெரிய நன்மை கிடையாது

இது எல்லாமுமே பொதுப் பலன்கள். அதை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23 comments:

  1. மேஷ லக்கின பலன் படித்துப் பயன் பெற்றேன்.மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்
    ஜயா ,என் லக்கனம் மேஷம் அதில் புதன்,கேது உள்ளது.
    புரிந்தது குருவே
    நன்றி

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்,
    பொதுவாக லக்னாதிபதி நன்றாக இருந்தால் சொல்லப்படும் பலன் இவை.இதுவே
    ஒருவருக்கு லக்னாதிபதி வக்ரமாக இருந்தாலோ,நீசமாக இருந்தாலோ,அஸ்தமனமாக இருந்தாலோ,மறைவு பெற்றாலோ என்ன மாதிரியான பலன் ஏற்படும்?வக்ரம்,நீசம்,அஸ்தமனம்,மறைவு போன்ற நிலைகளில் லக்னாதிபதி எப்படி மாறுபடுகிறார்?இப்படி இருப்பவர்களின் லக்ன காரகம் என்ன ஆகும்?பாதிக்கும் என ஒன்றை வரியில் கூறாமல் விளக்கமாக சொல்லவும்.
    நன்றி

    ReplyDelete
  4. ///பொதுவாக லக்னாதிபதி நன்றாக இருந்தால் சொல்லப்படும் பலன் இவை.இதுவே
    ஒருவருக்கு லக்னாதிபதி வக்ரமாக இருந்தாலோ, அஸ்தமனமாக இருந்தாலோ என்ன மாதிரியான பலன் ஏற்படும்?வக்ரம்,அஸ்தமனம் போன்ற நிலைகளில் லக்னாதிபதி எப்படி மாறுபடுகிறார்?இப்படி இருப்பவர்களின் லக்ன காரகம் என்ன ஆகும்?பாதிக்கும் என ஒன்றை வரியில் கூறாமல் விளக்கமாக சொல்லவும்.///


    லக்ன வாரியாக பொதுப் பலன்களை ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்தேன். நன்றி.

    சக வகுப்பறை நண்பரின் வேண்டுகோளை முடிந்தவரை ஏற்று வக்ரம் என்ற நிலையை மட்டுமாவது பொதுபலன்களில் சேர்க்குமாறு வேண்டுகிறேன். நட்பு வீட்டில் வக்ரம் பெறும் கிரகத்திற்கு ஆட்சி பலமும், மூலதிரிகோண வீடுகளில் உள்ள கிரகங்களும் உச்ச ராசியிலுள்ள கிரகங்களும் வக்ரம் பெறுவது நல்லதல்ல எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்

    ReplyDelete
  5. நல்லப் பாடம்...
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. மேசத்தின் குணங்களை சில பட்டியலிட்டமைக்கு நன்றி ஐயா.

    கோ.ஜா.மணியன்

    ReplyDelete
  7. ஐயா வணக்கம், சனியின் பார்வை மேஷ லக்னத்திற்கு கிடைத்தால் என்ன பலன்? சனி பாவி ஆயிற்றே?

    ReplyDelete
  8. /////Blogger Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  9. ///Blogger kmr.krishnan said...
    மேஷ லக்கின பலன் படித்துப் பயன் பெற்றேன்.மிக்க நன்றி ஐயா!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. ////Blogger ஸ்கூல் பையன் said...
    நல்ல பதிவு/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    ஜயா ,என் லக்கனம் மேஷம் அதில் புதன்,கேது உள்ளது.
    புரிந்தது குருவே
    நன்றி/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  12. ////Blogger ஜோதிட பித்தன் said...
    ஐயா வணக்கம்,
    பொதுவாக லக்னாதிபதி நன்றாக இருந்தால் சொல்லப்படும் பலன் இவை.இதுவே
    ஒருவருக்கு லக்னாதிபதி வக்ரமாக இருந்தாலோ,நீசமாக இருந்தாலோ,அஸ்தமனமாக இருந்தாலோ,மறைவு பெற்றாலோ என்ன மாதிரியான பலன் ஏற்படும்?வக்ரம்,நீசம்,அஸ்தமனம்,மறைவு போன்ற நிலைகளில் லக்னாதிபதி எப்படி மாறுபடுகிறார்?இப்படி இருப்பவர்களின் லக்ன காரகம் என்ன ஆகும்?பாதிக்கும் என ஒன்றை வரியில் கூறாமல் விளக்கமாக சொல்லவும்.
    நன்றி////

    ஐயா பித்தரே, அதை எல்லாம் முன்பே பதிவுகளில் எழுதியுள்ளேன். ஒவ்வொரு பாடத்திற்கும் அதை எழுதினால் போரடிக்காதா?
    ஒரு அலுவலகத்தில் பொது மேலாளர், நிர்வாக மேலாளர், அதிகாரி, குமாஸ்தா, கடைநிலை ஊழியர் என்று இருப்பவர்களின் அதிகாரம், செல்வாக்கு, சம்பளம், வேலையின் தன்மை எல்லாம் ஒன்று போலவா இருக்கும்? மாறுபடும் அல்லவா? அதுபோல ஒரு கிரகம் உச்சம், ஆட்சி, பகை, நீசம், வக்கிரம், அஸ்தமனம் என்ற நிலைப்பாடுகளால், அவர்கள் தரும் பலன்களும் குறைந்து கொண்டே வரும். அதை உணருங்கள்.


    ReplyDelete
  13. //////Blogger zing zang said...
    Nice post Thanks/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////////Blogger Arul Murugan. S said...
    ///பொதுவாக லக்னாதிபதி நன்றாக இருந்தால் சொல்லப்படும் பலன் இவை.இதுவே
    ஒருவருக்கு லக்னாதிபதி வக்ரமாக இருந்தாலோ, அஸ்தமனமாக இருந்தாலோ என்ன மாதிரியான பலன் ஏற்படும்?வக்ரம்,அஸ்தமனம் போன்ற நிலைகளில் லக்னாதிபதி எப்படி மாறுபடுகிறார்?இப்படி இருப்பவர்களின் லக்ன காரகம் என்ன ஆகும்?பாதிக்கும் என ஒன்றை வரியில் கூறாமல் விளக்கமாக சொல்லவும்.///
    லக்ன வாரியாக பொதுப் பலன்களை ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்தேன். நன்றி.
    சக வகுப்பறை நண்பரின் வேண்டுகோளை முடிந்தவரை ஏற்று வக்ரம் என்ற நிலையை மட்டுமாவது பொதுபலன்களில் சேர்க்குமாறு வேண்டுகிறேன். நட்பு வீட்டில் வக்ரம் பெறும் கிரகத்திற்கு ஆட்சி பலமும், மூலதிரிகோண வீடுகளில் உள்ள கிரகங்களும் உச்ச ராசியிலுள்ள கிரகங்களும் வக்ரம் பெறுவது நல்லதல்ல எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்////

    லக்கினாதிபதி வக்கிரம் பெற்றால், எதிர் மறையான பலன்களே இருக்கும். ஜாதகன் போராட வேண்டியதிருக்கும். அதுப்போல அஸ்தமன்ம் அல்லது நீசம் பெற்றால் பலனே இருக்காது. ஜாதகனுக்குக் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. இதுபோல பலனை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இனி முடிந்தவரை அவற்றையும் எழுதுகிறேன். ஒன்றாம், இரண்டாம் வாய்ப்பாட்டை ஒவ்வொரு பதிவிற்கும் எழுதச் சொல்கிறீர்களே சாமி! சரி எழுதுகிறேன்.

    ReplyDelete
  15. /////Blogger eswari sekar said...
    vanakam sir/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. ///Blogger ஜி ஆலாசியம் said...
    நல்ல பாடம்...
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  17. /////Blogger சமர்த்து said...
    மேசத்தின் குணங்களை சில பட்டியலிட்டமைக்கு நன்றி ஐயா.
    /////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. /////Blogger vrajesh said...
    ஐயா வணக்கம், சனியின் பார்வை மேஷ லக்னத்திற்கு கிடைத்தால் என்ன பலன்? சனி பாவி ஆயிற்றே?/////

    சனியைப் பாவி என்று முழுமையாக எப்படி ஓரம் கட்ட முடியும்? அவன் ஆயுள்காரகன். அத்துடன் கர்மகாரகன் (authority for work)
    மேஷத்திற்கு சனி 10 வீட்டிற்கு உரியவன். அத்துடன் பதினொன்றிற்கும் உரியவன். அவன் பார்வையால் ஜாதகனுக்கு உரிய காலத்தில், நல்ல வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்கும்

    ReplyDelete
  19. Even people born with Aris as moon sign used to have the similar characters, i seen some of my relatives, they used to share some common characters

    ReplyDelete
  20. Sir nice post,I'm Mesha rasi,mesha lagana jathagan....it really helps me a lot to understand a lot abt Mesha lagna and other planet aspects on lagna....Thanks a lot for your post...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com