மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.10.12

Astrology குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்


Astrology குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்

அலசல் பாடம்

குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக் கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டிருக் கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வள்வோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும் - அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன  செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

   “I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

   “எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆக்வே குழந்தையின்மை  சாபமல்ல ஒரு வித்ததில் அது வரம்தான்!
----------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார்.

குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

1
குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2
அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்
3
குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்துவிட்டர்ர் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன்

விரையாதிபதி குருவுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.
4
அத்துடன் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார்.

அது மோசமான இடமாகும் (It is the most malefic place for a house lord)
5
மேலும் இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

விளக்கம் போதுமா?

இது மேல்நிலை வகுப்பிற்காக  (classroom2012) எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்.
மேல்நிலை வகுப்பில் எழுதப்பெறும் பாடங்கள் பின்னால் புத்தகமாக வரவுள்ளது. அப்போது அனைவரும் படிக்கலாம்!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------
இடைச்சேர்க்கை:

இரண்டு அன்பர்கள் அஷ்டகவர்க்கம் அவசியமில்லையா? அதைக் கொடுக்கவில்லையே நீங்கள் என்று கேட்டுள்ளார்கள்.

அவர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.


சர்வாஷ்டகவர்க்கத்தில் ஐந்தாம் வீட்டிற்கு 26 பரல்கள்
காரகன் குரு இருக்கும் இடத்திற்கு 23 பரல்கள்
வீட்டுக்காரன் செவ்வாய் இருக்கும் இடத்திற்கு 29 பரல்கள் (சாராசரிக்கும் மேலாக ஒரு பரல் கூடுதலாக இருந்தாலும் கேதுவின் சேர்க்கையால் அதற்கு பலன் இல்லை. அதை விடுத்தாலும் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் குறைவான பரல்களே உள்ளன)

சரி சுயவர்க்கத்தைப் பாருங்கள்:

குருவிற்கு 3 பரல்கள் மட்டுமே
செவ்வாய்க்கு நான்கு பரல்கள் மட்டுமே
லக்கினாதிபதி சந்திரனுக்கு 2 பரல்கள் மட்டுமே (அவன் முக்கியமில்லையா?)

சில காரணங்களுக்காக பிறந்த தேதி, மற்றும் பிறந்த நேரம்,, ஊரைக் கொடுக்கவில்லை. நம் நண்பர் திருவாளர் ஆன்ந்த அவர்கள் சொல்வதைபோல  அட்டவணையை வைத்து அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமில்லை. சிரமமாக உள்ளது என்று நினைப்பவர்கள் மின்னஞ்சல் கொடுங்கள். அதை அனுப்பி  வைக்கிறேன். அதாவது அறியத் தருகிறேன்!

அன்புடன்
வாத்தியார்

18.10.2012
2:00 PM
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

41 comments:

  1. ஐயாவிற்கு வணக்கம்! பத்தாம் வீட்டில் ராகு இருந்தாலும், குழந்தை பாக்கியம் சிரமம் என்கிறார்களே..அது குறித்து தங்கள் அறிவுரையை எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
  2. ayya ragu keathu'virku velliya chandiran irrunthal kallasarpa jathakama ?

    ReplyDelete
  3. பதிவிற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  4. Sir,
    Thanks for useful info.
    If fifth house have guru paarvai, will that overcome all other rules and will give child ?
    Thanks ,
    Sathishumar GS

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பிடித்த அலசல் பாடம். அலசலும் அருமை. 3,12, க்கு உடைய புதன் 8 ல் ,ஆக இது விபரீத ராஜ யோகத்தில் சேர்ந்தும்,
    புதனும், சனியும் பரிவர்த்தனை ஆகி சில நல்ல விஷயங்கள் இருந்தும் குழந்தை இல்லாமல் போனதற்கு அய்யா தரும் பாடம் அருமை. நன்றிகள் .

    ReplyDelete
  6. ரமேஷ் வெங்கடபதி said...பத்தாம் வீட்டில் ராகு இருந்தாலும், குழந்தை பாக்கியம் சிரமம் என்கிறார்களே..அது குறித்து....///

    வாத்தியார் விவரமாக சொல்வார். இது என் அனுபவத்தில்

    எனக்கு 10 இல் ராகுதான். திருமனம் முடிந்த முதல் வருடமே குழந்தை பிறந்தது.

    ReplyDelete
  7. This lesson may not suit for the present living culture..

    a) lot of fertility clinics are available
    b)seman donations are available
    c) womb renting parents are available in tamilnadu too..
    d) few families do not like to have children and take strain and pain; instead they buy or adopt child
    e) I know few married girls do not like to deliver a child; for some other reasons and prepared to adopt female child

    However, consider this lesson as a part of syllabus.

    ReplyDelete
  8. Sir, I hope tenth house is related for occupation. Fifth and nineth house deals with children. I am not sure how ragu in tenth house will affect this.

    ReplyDelete
  9. எனக்கு ஐந்தில் கேது ஆனால் திருமணமாகி ஒரு வருடத்தில் கையில் குழந்தை. எங்கோ ஒரு இடத்தில் ஈடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. ////Blogger Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  11. //////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    ஐயாவிற்கு வணக்கம்! பத்தாம் வீட்டில் ராகு இருந்தாலும், குழந்தை பாக்கியம் சிரமம் என்கிறார்களே..அது குறித்து தங்கள் அறிவுரையை எதிர்பார்க்கிறேன்!////

    தவறான செய்தி!

    ReplyDelete
  12. /////Blogger premnath said...
    ayya ragu keathu'virku velliya chandiran irrunthal kallasarpa jathakama ?/////

    ராகு & கேது இருவருக்கும் வேளியே சந்திரன் அல்லது லக்கினம் இருந்தாலும் காலசர்ப்ப தோஷம்தான்!

    ReplyDelete
  13. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  14. /////Blogger eswari sekar said...
    vanakam sir nalla padam/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. ////Blogger kmr.krishnan said...
    பதிவிற்கு நன்றி ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. /////Blogger KJ said...
    Sir,
    Thanks for useful info.
    If fifth house have guru paarvai, will that overcome all other rules and will give child ?
    Thanks ,
    Sathishumar GS/////

    அவன்தானே காரகன் சாமி! அதனால் மற்ற விதிகள எடுபடாது!

    ReplyDelete
  17. /////Blogger thanusu said...
    எனக்கு மிகவும் பிடித்த அலசல் பாடம். அலசலும் அருமை. 3,12, க்கு உடைய புதன் 8 ல் ,ஆக இது விபரீத ராஜ யோகத்தில் சேர்ந்தும்,
    புதனும், சனியும் பரிவர்த்தனை ஆகி சில நல்ல விஷயங்கள் இருந்தும் குழந்தை இல்லாமல் போனதற்கு அய்யா தரும் பாடம் அருமை. நன்றிகள்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தனுசு!!

    ReplyDelete
  18. /////Blogger thanusu said...
    ரமேஷ் வெங்கடபதி said...பத்தாம் வீட்டில் ராகு இருந்தாலும், குழந்தை பாக்கியம் சிரமம் என்கிறார்களே..அது குறித்து....///
    வாத்தியார் விவரமாக சொல்வார். இது என் அனுபவத்தில்
    எனக்கு 10 இல் ராகுதான். திருமணம் முடிந்த முதல் வருடமே குழந்தை பிறந்தது./////

    பத்தாம் வீடு இந்தக் கணக்கில் வராது! உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி தனுசு!!

    ReplyDelete
  19. ////Blogger அய்யர் said...
    This lesson may not suit for the present living culture..
    a) lot of fertility clinics are available
    b)seman donations are available
    c) womb renting parents are available in tamilnadu too..
    d) few families do not like to have children and take strain and pain; instead they buy or adopt child
    e) I know few married girls do not like to deliver a child; for some other reasons and prepared to adopt female child
    However, consider this lesson as a part of syllabus.////

    நல்லது. உங்களின் பரிந்துரைக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  20. /////Blogger KJ said...
    Sir, I hope tenth house is related for occupation. Fifth and nineth house deals with children. I am not sure how ragu in tenth house will affect this./////

    பத்தாம் வீடு இந்தக் கணக்கில் வராது! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. /////Blogger Anandhiselva said...
    எனக்கு ஐந்தில் கேது ஆனால் திருமணமாகி ஒரு வருடத்தில் கையில் குழந்தை. எங்கோ ஒரு இடத்தில் ஈடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்./////

    ஆமாம். கேது ஒன்றை வைத்து மட்டும் எப்படி முடிவிற்கு வரமுடிய்ம்? ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் பார்க்க வேண்டும்.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! எனக்குத் தெரிந்தவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முகமாக என்னுடைய அரிய நேரத்தை செலவழித்துப் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். குதர்க்கமான பின்னூட்டங்களைத் தவிர்க்க வேண்டுகிறேன். இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். இனிமேல் சொல்வதற்கில்லை. அவ்வாறான பின்னூட்டங்கள் delete ஆகிவிடும். அதை மனதில் வையுங்கள்.

    சில அன்பர்கள் அஷ்டகவர்க்கத்தைக் கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே என்று எழுதியுள்ளார்கள். அஷ்டகவர்க்கம் இல்லாமலே ஜாதகத்தில் உள்ள குறைகள் க்ளியராகத் தெரிகிறது.

    இருந்தாலும் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அஷ்டகவர்க்கத்தைக் கொடுத்துள்ளேன். இடைச்சேர்க்கை என்ற் தலைப்பில் பத்வில் சேர்ந்துள்ளது படிக்காதவர்களை, அதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  23. அய்யர்said...
    This lesson may not suit for the present living culture..

    a) lot of fertility clinics are available
    b)seman donations are available
    c) womb renting parents are available in tamilnadu too..
    d) few families do not like to have children and take strain and pain; instead they buy or adopt child
    e) I know few married girls do not like to deliver a child; for some other reasons and prepared to adopt female child

    However, consider this lesson as a part of syllabus.


    Thursday, October 18, 2012 11:05:00 A

    I hope all this are general rules, there is exmptions in large nos, like Guru's placement, strength in Astavarga etc. otherwise how the posibility of ICS & IVF or test tube babies possible, not all the Test tube babies are sucessful only 60-70 % is sucessfull, again in case of womb rent, still the biological mother is different from the surogate mother. By the way the rules will keep change on the basis of the time. One more thing.

    ReplyDelete
  24. // குதர்க்கமான பின்னூட்டங்களைத் தவிர்க்க வேண்டுகிறேன். இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். இனிமேல் சொல்வதற்கில்லை. அவ்வாறான பின்னூட்டங்கள் delete ஆகிவிடும். அதை மனதில் வையுங்கள். //

    சுப்பு சார்,
    எல்லோரயும் சற்றே கின்டலாகவும், இனிய முகத்துடனும் அனுசரித்துச் செல்லும் தங்களின் இந்த செய்தி பெரிய மனவலியைத் தருகின்றது சுவாமி.வகுப்பறையின் வயதில் மிகச்சிறிய மாணவன் நான். விவரம் தெரியாது பாடத்தை புரிந்துக்கொள்ள எனைப் போன்ற புதிய மாணவர்களுக்கு
    இந்த பின்னோட்டம் இருக்காது என்று நம்புகின்றேன்.

    ReplyDelete
  25. Neengal inum oru jadakathai matum vaithu pesugrirgal kulanthai unda illaya enru solla Husband and wife rendu jadagamum vendume.melum sevvai kethu vidam sernthu ketuvital antha dosam evalavu kalam irukirathu enpatahaiyum parkavendum.Deva guru Brahaspathi oru suba graham Guru Bhagawan 2 vitai parkirar athu kudumbhastanam verum Hubby and wife matum kudumbam endru solla mudiyathu kulanthaiyum serthal than kudumbam ithu pen jadagam enral astama stanam pengaluku full suba vidu jodhida sastram kurukirathu.Melum sevvai thanudaya sontha vitai parkirar thavira raghu ucham nanmai seyavidil athu uchamanathirku artham illai melum kethu neecham adaikirar athanal kethu virku balam illai sevvai oru adiviriyam ulla graham.Melu 5 th house pathi sola yaralum mudiyathu atharku inoru branchum undu poorva puniyam.Raghu oru thiya graham enru solvathu vedikaiyai irukirathu avaridam gangayil sthanam seithal enna puniyamo antha puniyam raghu vidam irukirathu.Jodhida sastram thiya graham enro thiya natchatram enro ethaiyum kuripdavilai please refer Poorva pachariya book

    ReplyDelete
  26. Melum Intha jadagathil sayana dosam irukirathu sani 12 m vitil irukirar kulanthaiku 12 m vidum mukiyum illaya thavira sani mithunathil natpu antha dosathin kadumai kuraikirathu

    ReplyDelete
  27. //இது என் அனுபவத்தில்
    எனக்கு 10 இல் ராகுதான். திருமணம் முடிந்த முதல் வருடமே குழந்தை பிறந்தது./////

    ஒழுக்கத்திற்கு கடவுள் குருவே மக்கட்பேரின் காரகனானாலும், ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தினை மட்டும் கொண்டு இதனை கனிக்காமல், தம்பதியினர் இருவரின் ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு இதற்கு பார்க வேண்டுமென இதே வகுப்பில் படித்திருக்கிறேன்.

    //ராகு & கேது இருவருக்கும் வேளியே சந்திரன் அல்லது லக்கினம் இருந்தாலும் காலசர்ப்ப தோஷம்தான்!// பலரிடம் கேட்டும் எனக்கு இது புதிய செய்தி.

    ReplyDelete
  28. என் ஜாதகத்தில் 5-ம் அதிபதி குட்டி சுக்கிரன், பல விசயங்கள் தாருமாராக நடக்கின்றன. திருமனமாகி 3 ஆண்டுகளாகின்றன, மனைவிக்கு 3 நான்கு முறை குளந்தை கலைந்துவிட்டது. எல்லாத்திருத்தலங்களுக்கும் சென்று வந்துவிட்டேன்.

    குரு கருனைகாட்டவே மாட்டேன் என்கிறார் சுப்பு சார்.

    ReplyDelete
  29. /////Blogger Maaya kanna said...
    Yes Sir!/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  30. /////Blogger ஐயப்பன் said...
    // குதர்க்கமான பின்னூட்டங்களைத் தவிர்க்க வேண்டுகிறேன். இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். இனிமேல் சொல்வதற்கில்லை. அவ்வாறான பின்னூட்டங்கள் delete ஆகிவிடும். அதை மனதில் வையுங்கள். //
    சுப்பு சார்,
    எல்லோரயும் சற்றே கின்டலாகவும், இனிய முகத்துடனும் அனுசரித்துச் செல்லும் தங்களின் இந்த செய்தி பெரிய மனவலியைத் தருகின்றது சுவாமி.வகுப்பறையின் வயதில் மிகச்சிறிய மாணவன் நான். விவரம் தெரியாது பாடத்தை புரிந்துக்கொள்ள எனைப் போன்ற புதிய மாணவர்களுக்கு
    இந்த பின்னோட்டம் இருக்காது என்று நம்புகின்றேன்.////

    இலலை! இல்லை! இல்லை!

    ReplyDelete
  31. /////Blogger natesh said...
    1
    //// Neengal inum oru jadakathai matum vaithu pesugrirgal kulanthai unda illaya enru solla Husband and wife rendu jadagamum vendume.melum sevvai kethu vidam sernthu ketuvital antha dosam evalavu kalam irukirathu enpatahaiyum parkavendum./////

    2
    //////Deva guru Brahaspathi oru suba graham Guru Bhagawan 2 vitai parkirar athu kudumbhastanam verum Hubby and wife matum kudumbam endru solla mudiyathu kulanthaiyum serthal than kudumbam//////

    3
    /////ithu pen jadagam enral astama stanam pengaluku full suba vidu jodhida sastram kurukirathu./////

    4
    //////Melum sevvai thanudaya sontha vitai parkirar thavira raghu ucham nanmai seyavidil athu uchamanathirku artham illai melum kethu neecham adaikirar athanal kethu virku balam illai sevvai oru adiviriyam ulla graham.

    5
    //////Melu 5 th house pathi sola yaralum mudiyathu atharku inoru branchum undu poorva puniyam./////

    6
    /////Raghu oru thiya graham enru solvathu vedikaiyai irukirathu avaridam gangayil sthanam seithal enna puniyamo antha puniyam raghu vidam irukirathu./////

    7
    //////Jodhida sastram thiya graham enro thiya natchatram enro ethaiyum kuripdavilai please refer Poorva pachariya book//////

    உங்கள் பின்னூட்டத்தை வேண்டும் என்றுதான் பதிவில் வெளியிட்டு உள்ளேன். இதற்குப் பதில் சொல்லி, வாதம் செய்து என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. என்னுடைய மாணவர்களில் சீனியர்கள் உள்ளார்கள். ஜோதிடம் தெரிந்தவர்களும் உள்ளார்கள். அவர்கள் பதில் சொல்வார்கள்

    நீங்கள் வகுப்பறை உறுப்பினர் இல்லை. அதை மனதில் வைக்கவும்!

    ReplyDelete
  32. /////Blogger natesh said...
    Melum Intha jadagathil sayana dosam irukirathu sani 12 m vitil irukirar kulanthaiku 12 m vidum mukiyum illaya thavira sani mithunathil natpu antha dosathin kadumai kuraikirathu/////

    உங்களுடைய இந்தப் பின்னூட்டத்தை வேண்டும் என்றுதான் பதிவில் வெளியிட்டு உள்ளேன். இதற்குப் பதில் சொல்லி, வாதம் செய்து என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. என்னுடைய மாணவர்களில் சீனியர்கள் உள்ளார்கள். அவர்கள் பதில் சொல்வார்கள்

    ReplyDelete
  33. //////Blogger ஐயப்பன் said...
    //இது என் அனுபவத்தில்
    எனக்கு 10 இல் ராகுதான். திருமணம் முடிந்த முதல் வருடமே குழந்தை பிறந்தது./////
    ஒழுக்கத்திற்கு கடவுள் குருவே மக்கட்பேரின் காரகனானாலும், ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தினை மட்டும் கொண்டு இதனை கனிக்காமல், தம்பதியினர் இருவரின் ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு இதற்கு பார்க வேண்டுமென இதே வகுப்பில் படித்திருக்கிறேன்.///////

    கணவரின் ஜாதகம் கிடைக்கவில்லை! ஆகவே அந்த அம்மணியின் ஜாதகத்தை வைத்துச் சொல்லியிருக்கிறேன்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //ராகு & கேது இருவருக்கும் வேளியே சந்திரன் அல்லது லக்கினம் இருந்தாலும் காலசர்ப்ப தோஷம்தான்!// பலரிடம் கேட்டும் எனக்கு இது புதிய செய்தி.

    அது உண்மைதான்!

    ReplyDelete
  34. இங்கு பின்னூட்டம் இடும் அன்பர்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பணிவான வேண்டுகோள்.
    தாங்கள் பின்னூட்டம் இடும் போது தமிழிலோ, அல்லது தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் ஆங்கிலத்திலோ பின்னூட்டமிட்டால் படிப்பதற்கு கொஞ்சம் வசதியாக இருக்கும்.
    தமிழ் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதுவது கன்வலியை உண்டாக்குவதாக உள்ளது (நான் சோடா புட்டி கேஸ்).
    ஏதோ ஓரிரு வார்த்தைகள் எனில் படித்து விடலாம் பரவாயில்லை. முழு பத்தியை மற்றும் பல வரிகளை அப்படி எழுதும் போது படித்து புரிந்து கொள்வது மிக சிரமமாக உள்ளது. கண் வலி வருகிறது.
    சைடு பாரில், தமிழில் தட்டச்ச வழிகள் உள்ளன. அதனை பயன் படுத்தலாமே? இல்லை எனில் கூகுள் அதற்கும் வழி பண்ணி கொடுத்து உள்ளது. இந்த சுட்டியை பயன் படுத்துங்கள்.
    இது விமர்சனமோ, குறை சொல்வதோ அல்லவே அல்ல. எனக்கும் இன்னும் சில மாணவர்களுக்கும் இங்கு உள்ள ஒரு கஷ்டத்தினை சொல்லுகிறேன். முடிந்தால் இப்பின்நூட்டதில் நான் விடுத்துள்ள வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்.
    +++++
    பிரியங்களுடன்
    புவனேஷ்

    ReplyDelete
  35. பன்னிரண்டில் சனி இருந்தால் குழந்தை பிறக்காதா? இது என்ன?
    பன்னிரண்டாம் வீடு மரணம், அதன் பின்னான நிலை, நஷ்டம் மற்றும் உடலுறவு ஆகியவற்றைக்குறிக்கும். நஷ்ட வீட்டில் உடலுறவா? ஏன்? அது சக்தி வீணாவதை குறிப்பதால் அதற்கும் அதே வீடு என வைத்து விட்டார்கள் போல. சரி அதை விடுங்கள். பன்னிரண்டாம் வீட்டில் சனி இருந்தால், அவர் சற்றே துறவு மனப்பான்மையைத்தருவார், அதாவது காதல் செயல்களில் நாட்டமின்மை. அதே சமயம் தனது பார்வைகளால் இரண்டாம் வீட்டையும் ஆறாம் வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கிறார். எனக்கென்னவோ இரண்டாம் வீட்டின் மேலுள்ள பார்வையை விட ஒன்பதாம் வீட்டின் (சனீஸ்வரருக்கு நீச வீடு) மேல் உள்ள பார்வை தான் இங்கே விளையாடி உள்ளதோ என நினைக்கிறேன்.

    வாத்தியார் கொடுத்த காரணங்களுக்கு மேலதிகமாக நன் சில பாயிண்டுகளை கேழே பட்டியல் இடுகின்றேன். அதனை வாத்தியார் பரிசீலிப்பாராக.

    லக்கினாதிபதி பலம் குறைந்து மாந்தியோடு சேர்ந்து உள்ளார். மாந்தி உட்கார்ந்த இடத்தில் கேடு செய்யும், கூட இருக்கும் கிரகத்தையும் தன பணியை பண்ண விடாது. நல்ல நிலையில் இருந்தாலே கெடுக்கும். இரு பரக்களுடன் கூடிய சந்திரனை கேடுக்காதா? லக்கினாதிபதி பலவீனம்.

    இரண்டாம் வீட்டுக்குரிய பகலவன் எட்டில் மறைவு; மூன்று, ஆறு, பன்னிரண்டு ஆகிய துர்-ஸ்தானங்களுக்கு அதிபதிகளுடைய பார்வை இரண்டாம் வீட்டுக்கு உள்ளது. போனசாக சனீஸ்வரரின் மூன்றாம் பார்வையும் கிட்டியுள்ளது.இரண்டாம் வீட்டுக்கு உரிய சூரியனை கடும் பகைவனான சனி தனது ஒன்பதாம் பத்தாம் பார்வையால் பார்க்கிறார். நல்லதா? நமக்கே தெரியும். குரு மிக நல்லவரானாலும் இங்கே ஆறாம் அதிபதி. அவர் ஒன்பதாம் அதிபதியாக இருந்தாலும் எட்டாம் இடத்தில் இருப்பதாலும் சுய பரல்கள் குன்றி இருப்பதாலும் ஆறாம் அதிபதியாகவே பெரும்பாலும் செயல்படுவார். அவர் பார்வை இரண்டாம் வீட்டிம் மீது உள்ளது. இதே குரு, பன்னிரண்டில் உள்ள ஏழாம் அதிபன் மீது சுபராக பார்வை செலுத்துகிறார் என நினைக்கிறேன், அதனால் தான் (சூரியனாலும்) நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்து தந்திருப்பார் (வாத்தியார் இங்கு விளக்க பணிவுடன் வேண்டுகிறேன்).

    இவற்றோடு வாத்தியார் சொன்ன இனத்தில் ராகு. அது மட்டுமா? கணவரைக்குறிக்கும் ஏழாம் இடத்துக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் மற்றும் கேது.

    ஒரு தேர்வு எழுதும் மாணவனின் மனப்பான்மையுடன் இங்கே இவற்றை போடுகிறேன். அப்போது தான் என்னுடைய குறைகள் அம்பலமாகும். அம்பலமானால் தான் மூத்த மாணவர்களும் வாத்தியாரும் திருத்துவார்கள். நானும் கற்றுக்கொள்வேன். படிக்கும் மற்றவர்களும் பயன் பெறுவர். பாடம் நன்று என போட்டால் மட்டும் நான் கற்றுக்கொள்ள இயலாது அல்லவா? பரீக்ஷை வேண்டும்.

    என்ன சொல்கிறீர்கள் வாத்தியாரையா?

    ReplyDelete
  36. பன்னிரண்டில் சனி இருந்தால் குழந்தை பிறக்காதா? இது என்ன?

    பன்னிரண்டாம் வீடு மரணம், அதன் பின்னான நிலை, நஷ்டம் மற்றும் உடலுறவு ஆகியவற்றைக்குறிக்கும். நஷ்ட வீட்டில் உடலுறவா? ஏன்? அது சக்தி வீணாவதை குறிப்பதால் அதற்கும் அதே வீடு என வைத்து விட்டார்கள் போல. சரி அதை விடுங்கள். பன்னிரண்டாம் வீட்டில் சனி இருந்தால், அவர் சற்றே துறவு மனப்பான்மையைத்தருவார், அதாவது காதல் செயல்களில் நாட்டமின்மை. அதே சமயம் தனது பார்வைகளால் இரண்டாம் வீட்டையும் ஆறாம் வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கிறார். எனக்கென்னவோ இரண்டாம் வீட்டின் மேலுள்ள பார்வையை விட ஒன்பதாம் வீட்டின் (சனீஸ்வரருக்கு நீச வீடு) மேல் உள்ள பார்வை தான் இங்கே விளையாடி உள்ளதோ என நினைக்கிறேன்.

    வாத்தியார் கொடுத்த காரணங்களுக்கு மேலதிகமாக நன் சில பாயிண்டுகளை பட்டியல் இடுகின்றேன். அதனை வாத்தியார் பரிசீலிப்பாராக.

    லக்கினாதிபதி பலம் குறைந்து மாந்தியோடு சேர்ந்து உள்ளார். மாந்தி உட்கார்ந்த இடத்தில் கேடு செய்யும், கூட இருக்கும் கிரகத்தையும் தன் பணியை பண்ண விடாது. நல்ல நிலையில் இருந்தாலே கெடுக்கும். இரு பரல்களுடன் கூடிய சந்திரனை கேடுக்காதா? லக்கினாதிபதி பலவீனம்.

    இரண்டாம் வீட்டுக்குரிய பகலவன் எட்டில் மறைவு; மூன்று, ஆறு, பன்னிரண்டு ஆகிய துர்-ஸ்தானங்களுக்கு அதிபதிகளுடைய பார்வை இரண்டாம் வீட்டுக்கு உள்ளது. போனசாக சனீஸ்வரரின் மூன்றாம் பார்வையும் கிட்டியுள்ளது. இரண்டாம் வீட்டுக்கு உரிய சூரியனை கடும் பகைவனான சனி தனது பத்தாம் பார்வையால் பார்க்கிறார். நல்லதா? நமக்கே தெரியும். குரு மிக நல்லவரானாலும் இங்கே ஆறாம் அதிபதி. அவர் ஒன்பதாம் அதிபதியாக இருந்தாலும் எட்டாம் இடத்தில் இருப்பதாலும் சுய பரல்கள் குன்றி இருப்பதாலும் ஆறாம் அதிபதியாகவே பெரும்பாலும் செயல்படுவார். அவர் பார்வை இரண்டாம் வீட்டிம் மீது உள்ளது. இதே குரு, பன்னிரண்டில் உள்ள ஏழாம் அதிபன் மீது சுபராக பார்வை செலுத்துகிறார் என நினைக்கிறேன், அதனால் தான் (சூரியனாலும்) நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்து தந்திருப்பார் (வாத்தியார் இங்கு விளக்க பணிவுடன் வேண்டுகிறேன்).

    இவற்றோடு வாத்தியார் சொன்ன இடத்தில் ராகு. அது மட்டுமா? கணவரைக்குறிக்கும் ஏழாம் இடத்துக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் மற்றும் கேது.

    ஒரு தேர்வு எழுதும் மாணவனின் மனப்பான்மையுடன் இங்கே இவற்றை போடுகிறேன். அப்போது தான் என்னுடைய குறைகள் அம்பலமாகும். அம்பலமானால் தான் மூத்த மாணவர்களும் வாத்தியாரும் திருத்துவார்கள். நானும் கற்றுக்கொள்வேன். படிக்கும் மற்றவர்களும் பயன் பெறுவர். பாடம் நன்று என போட்டால் மட்டும் நான் கற்றுக்கொள்ள இயலாது அல்லவா? பரீக்ஷை வேண்டும்.

    என்ன சொல்கிறீர்கள் வாத்தியாரையா?

    ReplyDelete
  37. There are many countless rules for childlessness. What have highlighted here are applicable to this sample chart. If we start discuss about all the rules I think there will be no end towards it. So we discuss what is applicable to this lesson only.

    ReplyDelete
  38. ஹாலாஸ்யம்ஜி , மற்றும் புவனேஷ்வரின் கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com