மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.5.12

Astrology கழுதை எப்போதும் கழுதைதான்!


இதல்லவா சிரிப்பு!
மகிழ்ச்சி குழந்தையின் கண்களிலும் வெளிப்படுவதைப் பாருங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: கழுதை எப்போதும் கழுதைதான்!

Doubts: கேள்வி பதில் பகுதி 16

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினாறு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.63
C.ரத்தினவேல்

Dear Sir.

I have only one question.
According to you,உச்சம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய தசா/ புத்திகளில் ஜாதகனுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்கள். For me Sani is in Tulam (uchaam).I will be getting Sani dasa as 4th dasa.I have read and heard from astrologers that sani dasa coming as 4th dasa is not good.I would like to hear your expert comment on this.
Thanks
Rathinavel.C

4ஆவது தசையும், 6ஆவது தசையும் நன்மை அளிக்காது என்றும், ஒரு ஜாதகன் 6 தசைகளுக்கு மேல் உயிரோடு இருக்க மாட்டான் என்றும் கூடச் சில ஜோதிடர்கள் சொல்வார்கள். எதை வைத்து அப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜோதிட நூல்களில் அதற்கான குறிப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. ஜோதிடம் பெரிய கடல். நான் க்ற்றது கைமண் அளவுதான்!

ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையை வைத்துத்தான், அவற்றிற்கான தசா/புத்திப் பலன்கள் கிடைக்கும்/ நடைபெறும். ஆகவே குழப்பிக் கொள்ளாதீர்கள். சனி உச்சம் பெற்றதற்கான அர்த்தம் வேண்டாமா? அவர் ஜாதகத்தில் தீய இடங்களுக்கான (6,8 & 12ஆம் வீடுகள்) அதிபதி இல்லை என்னும் பட்சத்தில் ஜாதகனுக்கு நன்மைகளையே வாரி வழங்குவார்!
-------------------------------------------
email.No.64
sendhil J. செந்தில்

Dear sir,
1.Navamsathil "Utchanai utchan parthal" - What is the result sir?

உச்சனை உச்சன் பார்த்தால் ஜாதகன் பிச்சை எடுப்பான் என்று யாரோ விளையாட்டாகச் சொல்லியதை வைத்து இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

கிரகங்களின் தன்மைகளை வைத்துத்தான் முதல் பலன். பார்வைகளை வைத்துப் பலன்கள் என்பது இரண்டாவது நிலை. ஆகவே அம்சத்தில் இரண்டு கிரகங்கள் உச்சமாக இருப்பதற்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
அவர்கள் நன்மைகளையே செய்வார்கள் என்று நம்பிக்கை வையுங்கள்!

In Astrology, aspects are defined by the nature of the planet, and NOT the nature of the aspect. Aspects from a natural benefic strengthen a planet and aspects from a natural malefic weaken it.Planets that aspect another planet give the result of their natural tendency, and the house(s) they rules. Rather than categorizing an aspect

2. Dhumadhi ubagrahangal - Could you explain this sir?
With Kind Regards,
J.SENDHIL

உபகிரகங்கள் என்பது என்ன என்று தெரியும்.
Kaala, Mrityu, Arthaprahaara, Yamaghantaka, Gulika and Maandi என்று உபகிரகங்கள் உள்ளன! அவைகளைக் கணித்து ஜாதகத்திற்குள் கொண்டு வருவது சிரமமான வேலை
Kaala is a malefic upagraha similar to Sun.
Mrityu is a malefic upagraha similar to Mars.
Arthaprahaara is similar to Mercury.
Yamaghantaka is similar to Jupiter.
Gulika or Maandi is similar to Saturn.
ஆனால் நீங்கள் சொல்லும் Dhumadhi ubagrahangal இதைத்தான் குறிக்கின்றனவா என்று தெரியவில்லை.

ஜோதிடப் பாடங்களே புரிந்து கொள்வதற்குச் சற்றுக் குழப்பம் மிகுந்தவை. இருக்கிற குழப்பங்கள்/ சந்தேகங்கள் போதும். நீங்கள் புதிதாக எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள். மாந்தியை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வோம். மற்றதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்!
---------------------------------------------------
email.No.65
ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை

அன்புள்ள SP.VR. Subbiah ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்

1.பல ஆண்டுகளுக்கு முன் MLT [Medical Lab Technician ] ஆக இருந்த ஒருவர் எனக்கு கூறினார் ஏழில் செவ்வாய் காரரின் ( அல்லது செவ்வாய் குற்ற காரகரா என மறந்து விட்டேன் ஞாபகம் இல்லை ) இரத்தம் வகை குறிப்பிட்ட வகையைச் சார்ந்ததென்று! [எனது குருதி “O” positive. நான் மேட இலக்கினம் விருச்சிக ராசி. எட்டில் செவ்வாய் அப்பொழுது எனக்கு சோதிடத்தில் நம்பிகை இருந்தது. ஆனால் அதனை கற்க ஆர்வம் இருக்க வில்லை. எனவே எந்த வகை என நான் கவனிக்கவில்லை.
குருதி வகைக்கும் செவ்வாய் தோசதிட்கும் உள்ள தொட்ர்ர்பை பற்றி தங்களுக்கு ஏதும் தெரியமா. ? தெரிந்தால் அறியத் தரவும்
இப்படிக்கு
தங்கள் class room student
ஸ்ரீ(T.Sriskandarajah

ஜோதிடத்தைக் கணித்த முனிவர்கள் ரத்தத்தின் வகைகள்/பிரிவுகளைப் பற்றி எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் இடைச் சொருகலாக இருக்கலாம்! அது பற்றி நான் அறியேன்!
---------------------------------------------------
email.No.66
எழில் அரசன்

Dear Sir,

1.In your Question and Answer section, for Question No: 16. You Answered,
“Since the said house is under papa kartari yogam that house benefits was obstructed. Moreover the house lord is also debilitated.” So that house factors were denied.
My question if a house suffering from papa kartari yogam receives Guru Paarvai then will the yogam be thwarted.Else if the kaaragan of that house is in good position (means with 5 suyavargam parals) will the yogam be foiled? Will the ascendant receive the benefits of the concerned house?

யோகங்களை அலசிப் பலன் சொல்வது கடினமானது. பாப கர்த்தாரி யோகத்திற்குள் அகப்பட்டுக்கொண்ட வீட்டின்மேல் குருவின் பார்வை பட்டால் என்ன ஆகும் என்பது உங்களுடைய கேள்வி. பாபகாரத்தாரி யோகம் ஓடிப்போய்விடும் என்று சொன்னால் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள். உங்கள் சந்தோஷப் படுத்துவதற்காக அப்படிச் சொல்ல முடியுமா? பாப கர்த்தாரி யோகம் நிச்சயமாக வேலை செய்யும். குருவின் பார்வையால் அதன் தாக்கம் குறையும். அவ்வளவுதான்.

2.One more Question if maandhi in navamsa receives the aspect of Guru, will the effect of maandi be mitigated or that concerned house will be relieved by the effects of maandhi?

மாந்தியுடன் வேறு நல்ல/சுபக் கிரகங்கள் சேர்வதால், மாந்தி நல்லவனாக மாறமாட்டான். பார்வை பட்டாலும் நல்லவனாக மாறமாட்டான். அந்த இடத்திற்கு உரிய பலன்கள் ஜாதகனுக்குக் கிடைப்பதற்கு மாந்தி தடையாக இருக்கும். கழுதை எப்போதும் கழுதைதான்; அது ஒரு நாளும் குதிரையாக மாறாது! Donkey is always a donkey and It will not become a horse! மாந்தி எப்பொதும் மாந்திதான்!
---------------------------------------------------------------
(தொடரும்)

இன்றைய பொன்மொழி
The only way to get the best of an argument is to avoid it.
              
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!



60 comments:

  1. ////ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையை வைத்துத்தான், அவற்றிற்கான தசா/புத்திப் பலன்கள் கிடைக்கும்/ நடைபெறும். ஆகவே குழப்பிக் கொள்ளாதீர்கள். சனி உச்சம் பெற்றதற்கான அர்த்தம் வேண்டாமா? அவர் ஜாதகத்தில் தீய இடங்களுக்கான (6,8 & 12ஆம் வீடுகள்) அதிபதி இல்லை என்னும் பட்சத்தில் ஜாதகனுக்கு நன்மைகளையே வாரி வழங்குவார்! ////

    எனக்கு உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னம்.

    ராசி நாதனாக சனி இருப்பதால் நன்மையே வழங்குவார் என என் இஷ்டத்துக்கு நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஜாதகத்தில் சிரமம் தரும் இடங்களான 6, 8, 12 ல் ஒன்றான 12ஆம் இடம் கன்னியில் இருப்பதால் சனி கிரகத்தால் தீமையே அதிகம் என்பது இப்போதுதான் புரிகிறது. ஆனால் சனி தன் சுயவர்க்கத்தில் 4 பரல்களுடன் இருப்பதால் மோசமில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மேஷ ராசி, கும்ப லக்கினதுக்கு 12ல் குரு கிரகம் நீசம், அஸ்தங்கம் அடைந்து அதனுடன் சூரியன், புதன் நிற்க, 12ம் வீட்டிற்கு உரிய அதிபதி(லக்கினாதிபதி) 9 இல் (துலா ராசி) கேதுவுடன் உச்சம் ஆக இருந்தால். சூரியன் திசை‍‍ - குரு புத்தியில் பலன் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  5. நல்ல பாடம், ஐயா.
    மாந்தியையும் அஷ்டகவர்கத்தையும் ஏனோ நம்ம ஊரு மக்கள் அவ்வளவா கண்டுக்கறதில்லை.
    இதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் உண்டா?
    ஒரு ஆர்வத்துல கேட்டேன்!
    உங்கள் உதாரணம் சூப்பர்.
    ---
    குழந்தையும் முகத்திலும் மகிழ்ச்சி.... அவங்க முகத்துல தான சார் மகிழ்ச்சி உண்மையாவே இருக்கும்?
    :))))

    ReplyDelete
  6. Sir has put this up:

    //The only way to get the best of an argument is to avoid it.
    //

    That is a good message indeed. Shall follow it from my side :)

    ReplyDelete
  7. ஹையா இன்று பாடத்தை படித்து விட்டு தான் தூங்க செல்வேன் என்று இருந்தேன். அதுதான் வேகமாக பின்னூடமும் எழுதுகிறேன்.
    அய்யா செவ்வாய் தோஷம் பற்றி மருத்துவர் கமலா செல்வராஜ் அவர்கள் ஒரு ஆய்வு நடத்தியதாகவும் அதில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு
    ரத்த பிரிவு RH-ve என்று படித்ததாக ஞாபகம். அதனால் தான் செவ்வாய் தோஷம் ஜாதகம் செவ்வாய் தோஷதுடன் சேர்க்க வேண்டும் இல்லையென்றால் குழந்தை பிறப்பில் தாய்க்கு சிக்கல் வரும் என்றும் கேள்வி. மருத்துவ துறையில் இப்போது rh-ve , rh+ve உள்ள பெர்றோரின் குழந்தையின், தாய்க்கு ஒரு ஊசி போட்டு அதை சரி செய்கிறார்கள். இதை பற்றி மேலும் தகவல் இருபவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். மருத்துவ துறையில் மாணவர்கள் இருந்தால் இன்னும் நலம்.

    kalai seattle

    ReplyDelete
  8. எனக்கு ஐந்தாம் இடம் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஐந்தில் சந்திரன் உச்சம். ஆனால் ஏனோ தெரியவில்லை எங்கு சென்றாலும் தனிமையில் மாட்டி விடுவேன்
    கல்யாணத்துக்கு சென்றால் எனக்கு மிக வேண்டிவர்கள் அருகில் இடம் இருக்காது ,அல்லது அவர்கள் லேட்டாக வருவார்கள். ஏதோ காரணத்தினால் தனியாக விட படுவேன். பள்ளியில் கூட தோழிகளுடன் உட்கார நிறைய இஷ்டம் , ஆனால் உயரமாக இருபதனால் நான் கடைசி பெஞ்சு. அதுபோல் shopping, college functions, office gatherings, family outing in a car(somehow get seat with not my dear ones) எந்த இடம் சென்றாலும் தனியே. ஏன் கணவர் வீட்டுக்கு சென்றாலும் இதே நிலைமை தான். மாமியார் , சின்ன மருமகளும் ரகசியம் பேசுவார்கள். நான் ஹாலில் புக்கு டன். ஒரு மாதிரி கூட்டமாக இருந்தாலும் தனியாக இருப்பது போல் தான் இருக்கும். அதுவே எனக்கு தனி அங்கீகாரத்தையும் கொடுத்து உள்ளது. உச்சம் பெற்ற சந்திரனாய் இருப்பதால் என்னவோ. ஒரே ஏக்கமாகவும் , வருத்தமாகவும் இருக்கும். ஆனால் பார்பவர்களுக்கு நான் பந்தாவாக இருப்பது போல் தெரிகிறது. இப்போ வீட்டிலும் , கணவரும் இரண்டு ஆண் பிள்ளைகளும் விள்ளயடும்போது நான் தனியாக உணர்வேன். இது கேட்பவர்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. பெண் பிள்ளை இல்லை என்ற வருத்தம் எனக்கு நிறையவே உள்ளது. பாபகர்த்தாரி யோகம் செய்யும் வேலை தான் போல்.

    ReplyDelete
  9. ////கலையரசி said...
    எனக்கு ஐந்தாம் இடம் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஐந்தில் சந்திரன் உச்சம். ஆனால் ஏனோ தெரியவில்லை எங்கு சென்றாலும் தனிமையில் மாட்டி விடுவேன்
    கல்யாணத்துக்கு சென்றால் எனக்கு மிக வேண்டிவர்கள் அருகில் இடம் இருக்காது ,அல்லது அவர்கள் லேட்டாக வருவார்கள். ஏதோ காரணத்தினால் தனியாக விட படுவேன். பள்ளியில் கூட தோழிகளுடன் உட்கார நிறைய இஷ்டம் , ஆனால் உயரமாக இருபதனால் நான் கடைசி பெஞ்சு. அதுபோல் shopping, college functions, office gatherings, family outing in a car(somehow get seat with not my dear ones) எந்த இடம் சென்றாலும் தனியே. ஏன் கணவர் வீட்டுக்கு சென்றாலும் இதே நிலைமை தான். மாமியார் , சின்ன மருமகளும் ரகசியம் பேசுவார்கள். நான் ஹாலில் புக்கு டன். ஒரு மாதிரி கூட்டமாக இருந்தாலும் தனியாக இருப்பது போல் தான் இருக்கும். அதுவே எனக்கு தனி அங்கீகாரத்தையும் கொடுத்து உள்ளது. உச்சம் பெற்ற சந்திரனாய் இருப்பதால் என்னவோ. ஒரே ஏக்கமாகவும் , வருத்தமாகவும் இருக்கும். ஆனால் பார்பவர்களுக்கு நான் பந்தாவாக இருப்பது போல் தெரிகிறது. .///

    சகோதரி தங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடிகிறது... இது போன்று சங்கடப்படுபவர்களைக் கண்டிருக்கிறேன்.
    சில நேரங்களில் அப்படி இல்லாதபோதும் தாமாகவே இந்த உணர்வை கொண்டுவரும் மன இயல்பையும் தரும்.
    இருந்தும் இது போன்ற ஒரு தருணங்கள் வருவதற்கு, லக்னாதிபதி இருக்கும் இடம், மூன்றாம் அதிபதி / வீட்டின் பங்கும் பெரிதும் உண்டு என நினைக்கிறேன்..
    நாம் வாத்தியார் ஐயா அவர்கள் தான் கூற வேண்டும்.

    ReplyDelete
  10. மாந்தி ஒரு நுண் அலைகளை,உள்ளடக்கிய
    கிரகமாகும்.
    மாந்தியிடம் உள்ள சூட்சமங்கள் அதிகம்.
    மாந்தியுடைய காரகங்களை,அறிந்தாலே,
    அதனுடை நுட்பங்களை உணரலாம்.
    நவகிரகங்கள் ஒரு மனிதனுடைய பிறப்பு முதல்,
    இறப்பு வரை தங்களுடைய,காரகங்கள் மற்றும்
    ஆதிபத்தியங்களின் அடிப்படையில் வாழ்
    நாட்களில் நன்மையோ அல்லது,
    தீமையோ தருவார்கள்.
    ஆனால் மரணதிற்க்கு பிறகும் காரகம் உள்ள
    கிரகம் மாந்தியாகும்.
    மாந்தியுடைய இன்னோரு பெயர் 'பிரேதகாரகன்'
    இறப்பிற்கு பிறகு உள்ள வாழ்க்கையை,
    நமக்கு சுட்டி கட்டுபவர் இவர் தான்.
    இந்த 'ஆவியுலக தலைவனுக்கு' கேரளாவில்,
    சோதிடம் மற்றும் மாந்திரிகத்திலும்,
    முக்கிய பங்கு உண்டு.
    அஷ்டமங்கல பிரச்சனம்,தேவ பிரச்சனம் போன்றவற்றில் மாந்தியின்
    தன்மை முக்கியதுவம் வாய்ந்தது.
    மாந்தியின் முழுதன்மையும் உணர,
    சோதிட அறிவு மட்டும் போதாது.
    மாந்திரிக அறிவும் வேண்டும் என்பது
    அனுபவ உண்மையாகும்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  11. குருவிர்க்கு வணக்கம் ,
    சனி ஒன்பதாம் இடத்தில் மாந்தியுடன்

    தற்பொழுது சனி திசை,

    கழுதை கழுதைதான் நல்ல ஆரிவுள்ள பாடம்

    மாந்தி பற்றி படிப்பதற்கு மாந்திரிகம்
    தேவையா?
    நன்றி

    ReplyDelete
  12. குருவிர்க்கு வணக்கம் ,
    சனி ஒன்பதாம் இடத்தில் மாந்தியுடன்

    தற்பொழுது சனி திசை,

    கழுதை கழுதைதான் நல்ல ஆரிவுள்ள பாடம்

    மாந்தி பற்றி படிப்பதற்கு மாந்திரிகம்
    தேவையா?
    நன்றி

    ReplyDelete
  13. //For me Sani is in Tulam (uchaam).I will be getting Sani dasa as 4th dasa.I have read and heard from astrologers that sani dasa coming as 4th dasa is not good.I would like to hear your expert comment on this. Thanks Rathinavel.C//

    சனி நான்காம் தசையாக வந்தால் அது மாரக தசையாக அமையும் என்று ஜாதக அலங்காரப் பாடல் ஒன்று சொல்கிறது. இதைப் பற்றி நான் எனது வகுப்பறையில் சற்று விளக்கியிருக்கிறேன். அதற்கான சுட்டி கொடுத்திருக்கிறேன். அதையும் படித்து பாருங்கள்.

    http://ananth-classroom.blogspot.com/2011/09/blog-post_26.html

    ReplyDelete
  14. இந்த கருப்பு தங்கம்
    சிரிப்பதோ
    கற்கண்டு சிரிப்பு

    இன்றைய பொன்மொழியும் இன்றைக்கு தேவையான ஒன்றே.

    நீசத்தை வைத்துதான் எக்கசக்க கேள்விகள் வருகின்றன, வாத்தியார் அய்யா மீண்டும் ஒரு கேள்வி பதில் பகுதி தொடங்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  15. இந்த கருப்பு தங்கம்
    சிரிப்பதோ
    கற்கண்டு சிரிப்பு

    இன்றைய பொன்மொழியும் இன்றைக்கு தேவையான ஒன்றே.

    நீசத்தை வைத்துதான் எக்கசக்க கேள்விகள் வருகின்றன, வாத்தியார் அய்யா மீண்டும் ஒரு கேள்வி பதில் பகுதி தொடங்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. ஐயா,
    எனக்கும் சனி திசை நான்காவது திசைதான். சின்ன வாத்தியார் பதிவிலும் அவர் எழுதியது நினைவில் இருந்தது. அதற்குள் அவரே வந்து சொல்லிவிட்டார்.
    எனக்கு 1 இல் இருந்து 7 வீடுகளுக்குள் அனைத்து கிரகங்களும் வரிசையாக இருந்தாலும் 3 வது வீடு மட்டும் காலியாக இருந்தது. பிறகுதான் தெரிந்தது அங்கு கழுதை குடி வந்திருப்பது, அதாவது மாந்தி இருப்பது. இப்பொழுது எல்லோரும் வரிசையாக இருப்பது பார்க்க அழகாக இருக்கிறது. சுற்றமும், நட்பும், குடும்பமும் ஆசையும் ஆதரவுடன் இருந்தாலும், ஒரு ஆத்திர அவசரத்திற்கு அவர்கள் உதவமுடியாமல் இருப்பது போல் வைத்து மந்தி வேலை செய்துவிட்டது மாந்தி என நினைக்கிறேன்.

    எனக்கும் ஐந்தில் பாபகர்த்தாரி இருக்கிறது. எனவே நீங்கள் கலைக்கு சொல்லப் போகும் பதிலை அவருடன் சேர்ந்து நானும் ஆவலுடன் எதிர்பார்கிறேன். மனக்குறைகளையோ, மகிழ்ச்சியையோ பகிர்ந்து கொள்ள தேடும்பொழுது ஆள் கிடைக்காமல் போவது இதற்கு காரணமாக இருக்குமா ஐயா? நாம அவசரதுக்குன்னு போன் போட்டா போலீஸ் கூட வர முடியாத நிலையில் இருப்பார்களோ என எனக்குத் தோன்றுவதுண்டு. எத்தனை பேர் தொலைபேசியில் அழைத்தாலும் நான் எடுத்துப் பேசுவேன். ஆனால் நான் முக்கியமான விஷயம் பேசக் கூப்பிட்டால் அனைவருமே வேற்றுக் கிரகத்துக்குப் போனவர்கள் போல யாருமே அகப்பட மாட்டார்கள்.
    பாடத்திற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  17. தேமொழி said...

    //மந்தி வேலை செய்துவிட்டது மாந்தி//

    அழகு நடை! ரசிக்கும் படியான வார்தைப்ரயோகம்!

    ReplyDelete
  18. 3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்....

    ReplyDelete
  19. //சனி நான்காம் தசையாக வந்தால் அது மாரக தசையாக அமையும் என்று ஜாதக அலங்காரப் பாடல் ஒன்று சொல்கிறது. இதைப் பற்றி நான் எனது வகுப்பறையில் சற்று விளக்கியிருக்கிறேன். அதற்கான சுட்டி கொடுத்திருக்கிறேன். அதையும் படித்து பாருங்கள்.

    http://ananth-classroom.blogspot.com/2011/09/blog-post_26.html///


    Nanri Anath....

    ReplyDelete
  20. ஜெனன ஜாதகத்தில் குளிகன் என்ற மாந்தி இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள்.........
    லக்கினத்தில் மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்ரும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
    2ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.
    3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.
    4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.
    5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்லவம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.
    6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.
    7ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.
    8ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்ப்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.
    9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.
    10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.
    11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.
    12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல்த்தனம் கொண்டவராகவும் இருப்பர்.
    இது மாந்தியின் அமைப்பை பொறுத்து பொதுவான பலன்களே, மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம். ஆனால் இந்த பலன்கள் பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

    ReplyDelete
  21. பிரசன்ன ஜோதிடத்தில் மாந்தியின் நிலையை வைத்து ஒருவருக்கு எதிராக செய்யப் பட்டுள்ள பில்லி சூனியம், ஏவல் இவற்றுகுண்டான பொருள், அது வைக்கப் பட்டிருக்கும் இடம், அதன் தன்மை, வைத்தவரைப் பற்றிய விபரம், போன்றவற்றை அறிய உதவும் என்றும் தெரிய வருகிறது. இதற்கு மாந்திரீக அறிவு நிச்சயம் தேவைதானே. இதற்கு ஜாதகத்தில் mantra bhava என்று சொல்லப் படும் 5ம் இடம் அதன் அதிபதி மற்றும் house of occult studies 8ம் இடம், அதன் அதிபதி இவர்களின் அனுகிரகம் வேண்டும்.

    நண்பர் போகர் நல்ல ஜோதிட ஞானம் உள்ளவர் என்று தெரிகிறது. ஜோதிடத்தில் நானெல்லாம் இன்னும் வெறும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இருக்கிறேன்.

    ReplyDelete
  22. கழுதை, மந்தி,நரி...
    இன்னமும் வருகை பதிவேட்டில் யாரெல்லாம்

    ReplyDelete
  23. என்ன ஐயரே,

    சௌக்யமா?

    கழுதையோடும் மந்தியோடும் நரிமகாஜனங்களான எம்மை ஒன்று சேர்க்கிறீரே, இது உமக்கே நன்றாயிருக்கிறதா?

    ஆனானப்பட்ட பரமசிவனே ஆவுடையார் கோயிலில் குதிரை வேண்டிய போது நரியைதானே பரி ஆக்கினார்? கழுதையையும் மந்தியையுமா ஆக்கினார்?

    எங்கள் அறிவு கழுதைக்கும் குரங்குக்கும் வருமா? சொல்லும்......

    அதனால் நரிமஹாஜனங்கள் சார்பாக மனித மந்தை இனிமேல் எங்களை குள்ளநரி என்று எகத்தாளம் பண்ணினால் ஊருக்குள் புகுந்து திடீரென்று கடிப்போம் என எச்சரித்து வைக்கிறோம்...... குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடுவோம், கடிக்க மாட்டோம். எங்களுக்கும் தருமம் உண்டுங்காணும்.

    இப்படிக்கு,
    பண்புடைய நரி .

    ReplyDelete
  24. நரியாரே...
    நலம் தானே...

    உம்மை பற்றி எங்களுத் தெரியும் சுவாமி
    உள்ளபடியே சொன்னதெல்லாம்

    விலங்குகளும் வகுப்புக்கு வந்தைதையே
    விளக்கம் நீவிரும் கேட்கிறீரோ (புரியவில்லையென்று)

    மனிதாபினம் இல்லாத மனிதர்களைவிட
    மிருகாபிமானம் உள்ள உணர்வுகள் மேல்

    உணர்வுகளை மதிக்காத உறவுகள்
    ஒட்டி இருந்தால் என்ன எட்டி இருந்தால் என்ன..

    வழக்கம் போல்
    வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  25. I agree with Bhogar. I have also read somewhere that which he has said.

    I do not remember the source as it has been some years since I came across that.

    Maandhi (Gulikan) is equated by some scholars with Titan, the largest satellite of Saturn.

    ReplyDelete
  26. பண்புடைய நரியாரே
    Welcome! .

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. வணக்கம்!

    எனது இன்றைய கவிதை!

    இதற்கு யாராவது tune போட்டால் நன்றாயிருக்கும் :)

    =====


    பல்லவி:

    காதலெ னும்மது வுண்டோம் - கோதையர்
    மாதவ னாஞ்சிறு மாமல ரான்மிசை
    காதலெ னும்மது வுண்டோம்;

    அனுபல்லவி:

    ஆதியி லாதியெம் மாயனவ் வேய்துளை
    யூதிவ ருங்குழ லாயன ருந்தவர்
    ஓதும றைபொரு ளானமு குந்தனின்
    கோடிநி லாவொளி சோதிப தம்மிசை

    (காதலெனும்)

    சரணம்:

    போதல்ம றந்தவன் காதலி னால்தரு
    போதிநி ழல்துற வோனிகர் ஞானியர்
    காதலு டன்னுற வாடிம கிழ்திரு
    மாதவ னில்கலந் தேகிட வேயொரு;

    (காதலெனும்)

    ReplyDelete
  30. I was bored during lunch break. So composed another poem.

    Title: Useless wife

    மட்டி லாதபொருள் மனைவிக்கு வாய்த்தாலும்

    கட்டியவன் கைத்தாரா ளாயின் – குஞ்சுதந்த

    முட்டையவள் வெட்டியகை கண்டீரோ ரெட்டிமரம்

    காய்த்தா லென் காய்தராக்கா லென்?

    உரை:

    அளவிட முடியாத செல்வம் மனையாளுக்கு சம்பளமாக வைத்தாலும், அவள் அதை கணவனுடைய கையில் தந்து பகிர்ந்து வாழும் குணமில்லாதவளாயின்,

    அத்தகைய சுயநலமிக்க பெண், குஞ்சு பொரிந்து வெளியே வந்த பின் எஞ்சும் முட்டை ஓடு போலவும், வெட்டப்பட்ட அழகிய கையினை போலவும் இல்வாழ்வுக்கு பயன் இல்லாதவளே ஆவாள். எட்டி மரம் காய்த்தால் என்ன காய்க்காவிட்டால் என்ன?

    ReplyDelete
  31. @ananth sir,

    ஆனந்த் அவர்களுக்கு,

    ஜாதக அலங்கார பாடலுடன் உண்டான தங்கள் பதிவின் லிங்கிற்கு நன்றி. ஜாதக அலங்கார பாடலின் தமிழ் காலம் மிகவும் பழமையானது. எனவே பாடலுக்கு அர்த்தத்தை நாம் அக்காலத்திய தமிழ் இலக்கணத்தை கொண்டு தான் அறிய வேண்டும் என்பது என் கருத்து. தங்களிடம் இதன் விளக்கவுரை ஏதாவது இருந்தால் (டாக்டர் மகாலட்சுமி அவர்கள் எழுதிய உரை அல்லது கடலங்குடியின் உரை) அதில் என்ன விளக்கம் அளித்துள்ளார்கள் என்று அறிய ஆவல்.
    ஜாதக அலங்காரத்திற்கு பிற்காலத்தில் வந்தவர் திரு.பி.வி.ராமன். அவர் தசா புக்திகளின் பலன்களை (hindu predictive astrology) கூறுவதற்கு முன் பொதுவாக
    1. சனி மஹாதிசை நாலாவது தசையாக அமையுமானால் அது நன்மையளிக்காது (unfavorable) என்றும் மேலும்
    2. குரு மஹாதிசை ஆறாவதாக அமையுமானால் அதுவும் நன்மையளிக்காது (unfavorable) என்று குறிப்பிட்டுள்ளார்.
    இந்த இரண்டும் மேலும் பல விஷயங்களைக் கவனித்து தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார். இது நம் ஆசிரியரின் கருத்தினை ஓட்டி உள்ளது.

    அனுபவத்திலும் நான் பார்த்தவரையில் மிக்ஸ்ட் ரிசல்ட் தான். என் நண்பர் ஒருவரின் தங்கை (US resident) சனி தசை நாலாவதாக நடந்த போது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலரை (அவரது லைஃப் சேவிங் அது) இழந்தார். மற்றொரு நண்பர் ஜோத்பூரை சேர்ந்தவர். ஜோதிடம் நன்கு அறிந்தவர். சிம்மலக்னம், மகர ராசி. இப்பொழுது சனி தசை நான்காவதாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இதற்காக முன் ஜாக்கிரதை முத்தண்னாவாக நிறைய பரிகாரம் எல்லாம் செய்தும் பலனளிக்காமல் திண்டாடுகிறார். ஆனால் இன்னொரு பெண்மணி அதே சிம்மலக்னம், ரிஷப ராசி சனி தசை சிறிது உடல் நலத்தை படுத்தியது தவிர அவருக்கும் ஜாக்பாட்டை அள்ளி தந்துள்ளது. அவர் பணிபுரிந்து வந்த 2 பிராஞ்சு வங்கியை ஸ்டேட் பாங்க் எடுத்துக்கொண்டு விட்டது. இப்பொழுது அவர் ஸ்டேட் வங்கி பணியாளர். அது மட்டுமல்லாமல் அவருக்கு இப்பொழுது பணி உயர்வும் கிடைக்க போகிறது. ஆகவே தசா பலன்கள் அவரவர் ஜாதகத்தின் படி தான் நடக்கிறது என்று அனுமானிக்க வேண்டியுள்ளது.

    the funny part, while those first two who believes so much in god and did so many remedies, still suffers during saturn period, last one who never believes god, did nothing, had good favorable saturn period.
    Food for thought

    ReplyDelete
  32. @ Sriganeshh
    Only time will make me understand what Sani Dasa as 4th Dasa has for me.I have met a very eminent astrologer,his thought was,If sani is in Ucham and if it has good paral(>=4)then the ill effects will be very less,provided Sani is not the 6th,8th,12th house lords.

    @ Ananth.
    I have seen your blog.Very interesting and got to know many things i have never come across.I will email you regarding the same.

    Thanks for you help !!!.



    Nanri
    Rathinavel.C

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. ஸ்ரீ கணேஷ் அவர்களே தங்கள் கேள்விக்கான பதிலையும், சொன்ன கருத்துகளையும் நான் கொடுத்த சுட்டிக்குண்டான பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். அதைப் படிக்காமலேயே இப்படியொரு விமர்சனம். என் பதிவை படிக்கும் படி நான் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. நான் சொன்னதையெல்லாம் சொல்லாததைப் போன்ற பின்னூட்டம் அவசியம்தானா.

    ReplyDelete
  35. ஆனந்த்,

    தாங்கள் என்னை தவறாக எடுத்துக்கொண்டு விட்டிர்கள். தங்கள் மறந்து விட்டிர்கள் என்று நினைக்கிறேன். நான் தங்கள் பிளாக்கின் ஒரு ரெகுலர் விசிட்டர். தங்கள் உடல் நலத்தைப் பற்றிய பதிவை அதில் கண்டு நான் சிவ நாம ஜபத்தைப் பற்றிய மின்னஞ்சலும் அனுப்பினேன். அப்படியிருக்க நான் ஏன் தங்களை விமர்சிக்க போகிறேன். எனக்கு அவசியமுமில்லை.
    என்னுடைய தேடுதல் எப்போதும் எதிலும் அந்த ஆசிரியரின் எண்ணம் என்ன, அவர் எதை நேராகவும், மறைமுகமாகவும் உணர்த்துகிறார் என்பதில் தான்.
    மற்றபடி என்னுடைய எண்ணம் வேறு எதுவுமில்லை.
    தங்கள் பதிவில் பாடலை பார்த்தேன். அதுக்கு விளக்க உரை தங்களுடையது ஆனால் எனக்கு அந்த பாடலாசிரியரின் எண்ணம் அறிய ஆவல். அவ்வளவு தான். அதற்காக நான் டைம் மசினில் ஏறி பயணிக்க முடியாது. அதற்குப் பதிலாக இம்மாதிரி பாடலுக்கு ஆராய்ச்சி செய்து உரை எழுதியவர்களின் உரையில் ஒரு அளவுக்கு பாடலாசிரியரின் எண்ணம் தெரியவரலாம். for me, it is very essential to know the depth and intention of the author.
    மற்றபடி என்னுடைய பின்னுட்டத்தில் எந்த இடத்திலும் தங்களை விமர்ச்சித்தாக நான் நினைக்கவில்லை. என்னுடைய பின்னுட்டத்தில் என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்ததை எழுதியிருந்தேன். அப்படியிருக்க எனக்கு தங்களின் இந்த outburst பின்னுட்டத்தின் காரணம் புரியவில்லை.

    ReplyDelete
  36. @C.Rathinavel,
    //provided Sani is not the 6th,8th,12th house lords.//

    for simha lagna, Lord Saturn owns 6 and 7th ....fyi

    ReplyDelete
  37. மன்னித்துக் கொள்ளுங்கள் ஸ்ரீகணேஷ். நான்தான் உங்கள் பின்னூட்டத்தை தவறாக எடுத்துக் கொண்டு விட்டேன்.

    முன்பு குறிப்பிட்ட ஜாதகாலங்கர பாடலுக்கு அ.இ.ரா முருகையா ஜோதிடர் என்பவர் கீழ்கண்டவாறு உரையெழுதியிருக்கிறார்.

    ‘மாரகத்தின் திசைவிவரம் எப்படியென்றால் நான்காவது திசை சனியானாலும், அங்காரக திசை ஐந்தாவதானாலும், குரு திசை ஆறாவதானாலும், ராகு திசை ஏழாவதானாலும், அத்திசைகளிலும் மரணமுண்டாவது நிச்சயமே’

    ஒருவரது ஜாதகத்தில் இந்த குறிப்பிட்ட கிரகங்களின் நிலையறியாது இப்படியொரு முடிவுக்கு வருவதில் எனக்கும் உடன்பாடில்லைதான்.

    ReplyDelete
  38. 6,8,12 அதிபதிகளின் தசை, அங்கு இருக்கும் கிரகங்களின் தசை இவற்றால் எதாவது ஒரு வகையில் இழப்புகள் உண்டாவதாகவும் சொல்லப் படுகிறது. உயிரிழப்பு உட்பட. It can't go more morbid than this. என்ன இழப்பு என்பது ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் நிலையையும் வைத்துதான் முடிவுக்கு வர முடியும்.

    ReplyDelete
  39. Good deed that a human being is doing is also needed to enjoy the fruits of good parts of horoscope and reduce bad parts of horoscope.

    Bad work reduce good effects and increase suffering due to bad parts of horoscope.

    Foxes like us do not have horoscope. So we will not do much worry. Humans only worry and have karma.

    ReplyDelete
  40. ஆனந்த்,

    தங்கள் புரிதலுக்கும், மேல் விவரங்களுக்கும் மிக்க நன்றி.
    என்னிடம் ஒரு உரை உள்ளது. அது யார் எழுதியது என்று தெரியவில்லை. முடிந்தால் வாரக்கடைசியில் எடுக்க முடிந்தால் பார்த்துவிட்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  41. வகுப்பறைப் பின்னூட்டங்கள் நன்கு சூடுபிடித்து விறு விறுப்பாகியிருக்கிறது.

    இந்த சமயத்தில் பார்த்தா டெல்லிக்காரவுகளுக்கு திடீர் ஞானோதயம் வர வேண்டும்? ("விவாத்ததால் பயனில்லை"?!)

    மைனர்வாள், உமாஜி அனைவரும் உற்சாகமாக தங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டுகிறேன். அப்போதுதான் எவ்வ‌ளவு கோணங்கள் ஒரே செய்திக்கு என்பது தெரியவரும்.

    ReplyDelete
  42. மைனர்வாள், உமாஜி அனைவரும் உற்சாகமாக தங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டுகிறேன். அப்போதுதான் எவ்வ‌ளவு கோணங்கள் ஒரே செய்திக்கு என்பது தெரியவரும்.//

    என் கருத்துக்களை கதை வடிவில் வாரமலருக்காக அனுப்பியுள்ளேன்!

    ReplyDelete
  43. /////Blogger சரண் said...
    ////ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையை வைத்துத்தான், அவற்றிற்கான தசா/புத்திப் பலன்கள் கிடைக்கும்/ நடைபெறும். ஆகவே குழப்பிக் கொள்ளாதீர்கள். சனி உச்சம் பெற்றதற்கான அர்த்தம் வேண்டாமா? அவர் ஜாதகத்தில் தீய இடங்களுக்கான (6,8 & 12ஆம் வீடுகள்) அதிபதி இல்லை என்னும் பட்சத்தில் ஜாதகனுக்கு நன்மைகளையே வாரி வழங்குவார்! ////
    எனக்கு உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னம்.
    ராசி நாதனாக சனி இருப்பதால் நன்மையே வழங்குவார் என என் இஷ்டத்துக்கு நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஜாதகத்தில் சிரமம் தரும் இடங்களான 6, 8, 12 ல் ஒன்றான 12ஆம் இடம் கன்னியில் இருப்பதால் சனி கிரகத்தால் தீமையே அதிகம் என்பது இப்போதுதான் புரிகிறது. ஆனால் சனி தன் சுயவர்க்கத்தில் 4 பரல்களுடன் இருப்பதால் மோசமில்லை என்று நினைக்கிறேன்./////

    God will give you standing power in any situation.நம்பிக்கையோடு இருங்கள்!

    ReplyDelete
  44. /////Blogger Jeyram said...
    மேஷ ராசி, கும்ப லக்கினதுக்கு 12ல் குரு கிரகம் நீசம், அஸ்தங்கம் அடைந்து அதனுடன் சூரியன், புதன் நிற்க, 12ம் வீட்டிற்கு உரிய அதிபதி(லக்கினாதிபதி) 9 இல் (துலா ராசி) கேதுவுடன் உச்சம் ஆக இருந்தால். சூரியன் திசை‍‍ - குரு புத்தியில் பலன் எப்படி இருக்கும்?/////

    குரு பகவான் முதல் நிலை சுபக்கிரகம். எப்போதும் அவர் நன்மையே செய்வார். நம்பிக்கையோடு இருங்கள்!

    ReplyDelete
  45. //////Blogger Bhuvaneshwar said...
    நல்ல பாடம், ஐயா.
    மாந்தியையும் அஷ்டகவர்கத்தையும் ஏனோ நம்ம ஊரு மக்கள் அவ்வளவா கண்டுக்கறதில்லை.
    இதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் உண்டா?
    ஒரு ஆர்வத்துல கேட்டேன்!
    உங்கள் உதாரணம் சூப்பர். ---
    குழந்தையும் முகத்திலும் மகிழ்ச்சி.... அவங்க முகத்துல தான சார் மகிழ்ச்சி உண்மையாவே இருக்கும்?
    :))))/////

    அஷ்டகவர்க்கததையும், மாந்தியையும் இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால் பல சமயங்களில் பலன்கள் தவறாகிவிடுவதுண்டு!

    ReplyDelete
  46. /////Blogger Bhuvaneshwar said...
    Sir has put this up:
    //The only way to get the best of an argument is to avoid it.
    //
    That is a good message indeed. Shall follow it from my side :)/////

    நல்லது!

    ReplyDelete
  47. /////Blogger arul said...
    nice post sir/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  48. /////Blogger கலையரசி said...
    ஹையா இன்று பாடத்தை படித்து விட்டு தான் தூங்க செல்வேன் என்று இருந்தேன். அதுதான் வேகமாக பின்னூடமும் எழுதுகிறேன்.
    அய்யா செவ்வாய் தோஷம் பற்றி மருத்துவர் கமலா செல்வராஜ் அவர்கள் ஒரு ஆய்வு நடத்தியதாகவும் அதில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு
    ரத்த பிரிவு RH-ve என்று படித்ததாக ஞாபகம். அதனால் தான் செவ்வாய் தோஷம் ஜாதகம் செவ்வாய் தோஷதுடன் சேர்க்க வேண்டும் இல்லையென்றால் குழந்தை பிறப்பில் தாய்க்கு சிக்கல் வரும் என்றும் கேள்வி. மருத்துவ துறையில் இப்போது rh-ve , rh+ve உள்ள பெர்றோரின் குழந்தையின், தாய்க்கு ஒரு ஊசி போட்டு அதை சரி செய்கிறார்கள். இதை பற்றி மேலும் தகவல் இருபவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். மருத்துவ துறையில் மாணவர்கள் இருந்தால் இன்னும் நலம்.
    kalai seattle/////

    முன்பே எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  49. /////Blogger கலையரசி said...
    எனக்கு ஐந்தாம் இடம் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஐந்தில் சந்திரன் உச்சம். ஆனால் ஏனோ தெரியவில்லை எங்கு சென்றாலும் தனிமையில் மாட்டி விடுவேன்
    கல்யாணத்துக்கு சென்றால் எனக்கு மிக வேண்டிவர்கள் அருகில் இடம் இருக்காது ,அல்லது அவர்கள் லேட்டாக வருவார்கள். ஏதோ காரணத்தினால் தனியாக விட படுவேன். பள்ளியில் கூட தோழிகளுடன் உட்கார நிறைய இஷ்டம் , ஆனால் உயரமாக இருபதனால் நான் கடைசி பெஞ்சு. அதுபோல் shopping, college functions, office gatherings, family outing in a car(somehow get seat with not my dear ones) எந்த இடம் சென்றாலும் தனியே. ஏன் கணவர் வீட்டுக்கு சென்றாலும் இதே நிலைமை தான். மாமியார் , சின்ன மருமகளும் ரகசியம் பேசுவார்கள். நான் ஹாலில் புக்கு டன். ஒரு மாதிரி கூட்டமாக இருந்தாலும் தனியாக இருப்பது போல் தான் இருக்கும். அதுவே எனக்கு தனி அங்கீகாரத்தையும் கொடுத்து உள்ளது. உச்சம் பெற்ற சந்திரனாய் இருப்பதால் என்னவோ. ஒரே ஏக்கமாகவும் , வருத்தமாகவும் இருக்கும். ஆனால் பார்பவர்களுக்கு நான் பந்தாவாக இருப்பது போல் தெரிகிறது. இப்போ வீட்டிலும் , கணவரும் இரண்டு ஆண் பிள்ளைகளும் விள்ளயடும்போது நான் தனியாக உணர்வேன். இது கேட்பவர்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. பெண் பிள்ளை இல்லை என்ற வருத்தம் எனக்கு நிறையவே உள்ளது. பாபகர்த்தாரி யோகம் செய்யும் வேலை தான் போல்.////

    Fifth house is the house of mind. அதனால் (பாபகர்த்தாரி யோகத்தினால்) இந்த மனக்கிலேசம் தவிர்க்க முடியாதது.

    ReplyDelete
  50. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ////கலையரசி said...
    எனக்கு ஐந்தாம் இடம் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஐந்தில் சந்திரன் உச்சம். ஆனால் ஏனோ தெரியவில்லை எங்கு சென்றாலும் தனிமையில் மாட்டி விடுவேன்
    கல்யாணத்துக்கு சென்றால் எனக்கு மிக வேண்டிவர்கள் அருகில் இடம் இருக்காது ,அல்லது அவர்கள் லேட்டாக வருவார்கள். ஏதோ காரணத்தினால் தனியாக விட படுவேன். பள்ளியில் கூட தோழிகளுடன் உட்கார நிறைய இஷ்டம் , ஆனால் உயரமாக இருபதனால் நான் கடைசி பெஞ்சு. அதுபோல் shopping, college functions, office gatherings, family outing in a car(somehow get seat with not my dear ones) எந்த இடம் சென்றாலும் தனியே. ஏன் கணவர் வீட்டுக்கு சென்றாலும் இதே நிலைமை தான். மாமியார் , சின்ன மருமகளும் ரகசியம் பேசுவார்கள். நான் ஹாலில் புக்கு டன். ஒரு மாதிரி கூட்டமாக இருந்தாலும் தனியாக இருப்பது போல் தான் இருக்கும். அதுவே எனக்கு தனி அங்கீகாரத்தையும் கொடுத்து உள்ளது. உச்சம் பெற்ற சந்திரனாய் இருப்பதால் என்னவோ. ஒரே ஏக்கமாகவும் , வருத்தமாகவும் இருக்கும். ஆனால் பார்பவர்களுக்கு நான் பந்தாவாக இருப்பது போல் தெரிகிறது. .///
    சகோதரி தங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடிகிறது... இது போன்று சங்கடப்படுபவர்களைக் கண்டிருக்கிறேன்.
    சில நேரங்களில் அப்படி இல்லாதபோதும் தாமாகவே இந்த உணர்வை கொண்டுவரும் மன இயல்பையும் தரும்.
    இருந்தும் இது போன்ற ஒரு தருணங்கள் வருவதற்கு, லக்னாதிபதி இருக்கும் இடம், மூன்றாம் அதிபதி / வீட்டின் பங்கும் பெரிதும் உண்டு என நினைக்கிறேன்..
    நாம் வாத்தியார் ஐயா அவர்கள் தான் கூற வேண்டும்./////

    எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொண்டால் போதும்!

    ReplyDelete
  51. Blogger Bhogar said...
    மாந்தி ஒரு நுண் அலைகளை,உள்ளடக்கிய
    கிரகமாகும்.
    மாந்தியிடம் உள்ள சூட்சமங்கள் அதிகம்.
    மாந்தியுடைய காரகங்களை,அறிந்தாலே,
    அதனுடை நுட்பங்களை உணரலாம்.
    நவகிரகங்கள் ஒரு மனிதனுடைய பிறப்பு முதல்,
    இறப்பு வரை தங்களுடைய,காரகங்கள் மற்றும்
    ஆதிபத்தியங்களின் அடிப்படையில் வாழ்
    நாட்களில் நன்மையோ அல்லது,
    தீமையோ தருவார்கள்.
    ஆனால் மரணதிற்க்கு பிறகும் காரகம் உள்ள
    கிரகம் மாந்தியாகும்.
    மாந்தியுடைய இன்னோரு பெயர் 'பிரேதகாரகன்'
    இறப்பிற்கு பிறகு உள்ள வாழ்க்கையை,
    நமக்கு சுட்டி கட்டுபவர் இவர் தான்.
    இந்த 'ஆவியுலக தலைவனுக்கு' கேரளாவில்,
    சோதிடம் மற்றும் மாந்திரிகத்திலும்,
    முக்கிய பங்கு உண்டு.
    அஷ்டமங்கல பிரச்சனம்,தேவ பிரச்சனம் போன்றவற்றில் மாந்தியின்
    தன்மை முக்கியதுவம் வாய்ந்தது.
    மாந்தியின் முழுதன்மையும் உணர,
    சோதிட அறிவு மட்டும் போதாது.
    மாந்திரிக அறிவும் வேண்டும் என்பது
    அனுபவ உண்மையாகும்.
    ஓம் சரவணபவ நம/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  52. Blogger Udhaya Kumar said...
    குருவிர்க்கு வணக்கம் ,
    சனி ஒன்பதாம் இடத்தில் மாந்தியுடன்
    தற்பொழுது சனி திசை,
    கழுதை கழுதைதான் நல்ல ஆரிவுள்ள பாடம்
    மாந்தி பற்றி படிப்பதற்கு மாந்திரிகம்
    தேவையா?
    நன்றி//////

    ஜோதிடத்தைக் கற்றுக்கொண்டால் போதும். மாந்திரீக்ம் எல்லாம் வேண்டாம்!

    ReplyDelete
  53. ////Blogger ananth said...
    //For me Sani is in Tulam (uchaam).I will be getting Sani dasa as 4th dasa.I have read and heard from astrologers that sani dasa coming as 4th dasa is not good.I would like to hear your expert comment on this. Thanks Rathinavel.C//
    சனி நான்காம் தசையாக வந்தால் அது மாரக தசையாக அமையும் என்று ஜாதக அலங்காரப் பாடல் ஒன்று சொல்கிறது. இதைப் பற்றி நான் எனது வகுப்பறையில் சற்று விளக்கியிருக்கிறேன். அதற்கான சுட்டி கொடுத்திருக்கிறேன். அதையும் படித்து பாருங்கள்.
    http://ananth-classroom.blogspot.com/2011/09/blog-post_26.html//////

    ஐயோ பாவம்,, அவர் குழப்பமடையப் போகிறார். மாரகத்திற்கு ஜாதகத்தில் பல அமைப்புக்கள் உள்ளன. அவற்றையும் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  54. /////Blogger thanusu said...
    இந்த கருப்பு தங்கம்
    சிரிப்பதோ
    கற்கண்டு சிரிப்பு
    இன்றைய பொன்மொழியும் இன்றைக்கு தேவையான ஒன்றே.
    நீசத்தை வைத்துதான் எக்கசக்க கேள்விகள் வருகின்றன, வாத்தியார் அய்யா மீண்டும் ஒரு கேள்வி பதில் பகுதி தொடங்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்./////

    புத்தகங்கள் வெளியான பிறகு அதைத் துவங்கலாம். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  55. /////Blogger தேமொழி said...
    ஐயா,
    எனக்கும் சனி திசை நான்காவது திசைதான். சின்ன வாத்தியார் பதிவிலும் அவர் எழுதியது நினைவில் இருந்தது. அதற்குள் அவரே வந்து சொல்லிவிட்டார்.
    எனக்கு 1 இல் இருந்து 7 வீடுகளுக்குள் அனைத்து கிரகங்களும் வரிசையாக இருந்தாலும் 3 வது வீடு மட்டும் காலியாக இருந்தது. பிறகுதான் தெரிந்தது அங்கு கழுதை குடி வந்திருப்பது, அதாவது மாந்தி இருப்பது. இப்பொழுது எல்லோரும் வரிசையாக இருப்பது பார்க்க அழகாக இருக்கிறது. சுற்றமும், நட்பும், குடும்பமும் ஆசையும் ஆதரவுடன் இருந்தாலும், ஒரு ஆத்திர அவசரத்திற்கு அவர்கள் உதவமுடியாமல் இருப்பது போல் வைத்து மாந்தி வேலை செய்துவிட்டது மாந்தி என நினைக்கிறேன்.
    எனக்கும் ஐந்தில் பாபகர்த்தாரி இருக்கிறது. எனவே நீங்கள் கலைக்கு சொல்லப் போகும் பதிலை அவருடன் சேர்ந்து நானும் ஆவலுடன் எதிர்பார்கிறேன். மனக்குறைகளையோ, மகிழ்ச்சியையோ பகிர்ந்து கொள்ள தேடும்பொழுது ஆள் கிடைக்காமல் போவது இதற்கு காரணமாக இருக்குமா ஐயா? நாம அவசரதுக்குன்னு போன் போட்டா போலீஸ் கூட வர முடியாத நிலையில் இருப்பார்களோ என எனக்குத் தோன்றுவதுண்டு. எத்தனை பேர் தொலைபேசியில் அழைத்தாலும் நான் எடுத்துப் பேசுவேன். ஆனால் நான் முக்கியமான விஷயம் பேசக் கூப்பிட்டால் அனைவருமே வேற்றுக் கிரகத்துக்குப் போனவர்கள் போல யாருமே அகப்பட மாட்டார்கள்.
    பாடத்திற்கு நன்றி ஐயா./////

    உங்களுக்கென்ன? உங்களுக்குள்ள மேன்மையான நகைச்சுவை உணர்வை வைத்து, மாந்தி உட்பட மற்றதை எல்லாம் கடாசி விடுங்கள் சகோதரி!

    ReplyDelete
  56. /////Blogger Bhuvaneshwar said...
    3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்..../////

    மூன்றாம் இடம் தைரியம், மற்றும் வெற்றிக்கு உரிய இடம். அங்கே மாந்தி இருப்பது நல்லதுதான்!

    ReplyDelete
  57. Blogger பண்புடைய நரி said...
    ஜெனன ஜாதகத்தில் குளிகன் என்ற மாந்தி இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள்.........
    லக்கினத்தில் மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்ரும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
    2ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.
    3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.
    4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.
    5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்லவம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.
    6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.
    7ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.
    8ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்ப்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.
    9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.
    10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.
    11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.
    12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல்த்தனம் கொண்டவராகவும் இருப்பர்.
    இது மாந்தியின் அமைப்பை பொறுத்து பொதுவான பலன்களே, மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம். ஆனால் இந்த பலன்கள் பெரும்பாலானோருக்கு பொருந்தும்.//////

    பண்புடைய நரி - வித்தியாசமான பெயராக இருக்கிறதே சுவாமி? உண்மைப் பெயர் என்ன?

    ReplyDelete
  58. /////Blogger ananth said...
    பிரசன்ன ஜோதிடத்தில் மாந்தியின் நிலையை வைத்து ஒருவருக்கு எதிராக செய்யப் பட்டுள்ள பில்லி சூனியம், ஏவல் இவற்றுகுண்டான பொருள், அது வைக்கப் பட்டிருக்கும் இடம், அதன் தன்மை, வைத்தவரைப் பற்றிய விபரம், போன்றவற்றை அறிய உதவும் என்றும் தெரிய வருகிறது. இதற்கு மாந்திரீக அறிவு நிச்சயம் தேவைதானே. இதற்கு ஜாதகத்தில் mantra bhava என்று சொல்லப் படும் 5ம் இடம் அதன் அதிபதி மற்றும் house of occult studies 8ம் இடம், அதன் அதிபதி இவர்களின் அனுகிரகம் வேண்டும்.
    நண்பர் போகர் நல்ல ஜோதிட ஞானம் உள்ளவர் என்று தெரிகிறது. ஜோதிடத்தில் நானெல்லாம் இன்னும் வெறும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இருக்கிறேன்./////

    ஜோதிடத்தில் முழுத் தேர்ச்சி உடையவர் என்று யாரையும் குறிப்பிட முடியாது! அத்தனை பெரிய கடல் (கலை) அது!

    ReplyDelete
  59. ////Blogger அய்யர் said...
    கழுதை, மாந்தி,நரி...
    இன்னமும் வருகை பதிவேட்டில் யாரெல்லாம்/////

    சுமார் 3247 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அததனை பேர்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள முடியுமா என்ன?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com