மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.5.12

Astrology எப்போது பயணம் தாமதமாகும்?

மகிழ்ச்சியான அறிவிப்பு

நமது வகுப்பறை மாணவர் R லோக வீர பாண்டியனுக்கு (28)  1.6.2012 வெள்ளிக்கிழமையன்று, தேனி அருகில் உள்ள அவருடைய கிராமத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். கீழே கொடுத்துள்ளேன்.

வாய்ப்புள்ளவர்கள் சென்று வாருங்கள். மற்றர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். அவருடைய மின்னஞ்சல் முகவரி: rlogapandian@gmail.com

பாண்டியன் சவுதி அரேபிய நாட்டில் (ஜூபைல் நகரில்) பணி புரிகின்றார்.

திரையுலகின் மூன்று பிரபலங்கள், அவருடைய கிராமத்திற்கு அருகில் உள்ள ஊர்களில் பிறந்தவர்கள். (இது மேலதிகத் தகவல்)
1. பாரதி ராஜா (அல்லி நகரம்)
2. இளையராஜா (பண்ணைபுரம்)
3. கவிஞர் வைரமுத்து (வடுகபட்டி)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றையப் பாடம்:


ஒன்றுமில்லை! ஸ்பைடர்மேன் தன் குடும்பத்தினருடன்
நடைப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: எப்போது பயணம் தாமதமாகும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 15

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினைந்து!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.59
எழில் அரசன்

Dear Sir,

1.You have said in your lessons that if a house has got more parals (eg-30 and above) then that house benefits will be good. Ascendant will receive all the factors concerned to that house. One doubt sir, If the house lord or the kargan receives less suyavargam points e-g 3 will the ascendant still receive the benefits of the house? Suppose for example 4th house has 31 parals and the house lord has less points e-g 3 points in suyavargam,then also ascendant will get the benefits of 4 house?( Education, vehicle, property, mother) Same for example when the Karagan is also has less suyaparals (e-g 3 points) and the house is having more than 30 parals.(e.g. Budan is karagan for studies, and if he gets 2 point in his suyavargam.and 4th house more than 31 parals ) Will the ascendant will get good studies?

ஒரு வீட்டில் அதிகமாகப் பரல்கள் இருந்து, அதன் அதிபதியும், அதற்கான காரகனும் குறைவான சுயவர்க்கப் பரல்களுடன் இருந்தால் என்ன ஆகும்? பஸ் நன்றாக இருக்கிறது. ஓட்டுனர் திறமையானவர் இல்லை, சாலையும் சரியாக இல்லை என்றால் என்ன ஆகும்? அதுதான் நடக்கும். பயணம் தாமதமாகும். அதுபோல அந்த வீட்டிற்கான பலன்கள் தாமதமாகும். சிலருக்குப் பலன்கள் உரிய காலத்தில் கிடைக்காமலும் போகலாம்!

2. Sir, who is the kargan for ancestral property.
(9 Th house is related to Bhagyam, Father& ancestral properties, charity etc) who is the karagan for this. Is it suryan sir?

ஆமாம்! சூரியன்தான் பூர்வீகச் சொத்துக்களுக்கான காரகன் (authority)!
-------------------------------------------
email.No.60
ராமசுப்பிரமணியன்

Dear Sir,

1. I have seen one rasi chart dhanshu lagnam,lagnapathi in guru in his exalted house (katagam).But in navmsam guru is in makaram in his debilitated house.Guru has 6 parals in birth chart.So how he will give result?

நவாம்சத்தில் நீசம் பெற்றாலும், சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருப்பதால் நல்ல பலன்களைத் தருவார்.இல்லையென்றால் சுயவர்கப்பரல்களுக்கு அர்த்தம் என்ன? அதை அவருடைய தசா/புத்தியில் தருவார்!

2.In rasi chart Venus(10th house lord) with sun(lagna lord) in 10th house.Saturn having 7th dristi to that house.And 9th house has ragu and mercury ;11th house has mandi.Venus has 3 parals in birth chart.Saturn has 4 parals.Astavarga of 10th house is 27.But in navamsam venus in his debilitated house (with guru 5th dristi).How the Venus result related to profession?
3.The above mentioned (Point.2) chart having parivatna yoga with budan in navamsam.Birth chart Guru in 7th house and 7th lord saturn (vakram) vargottamam yoga.Birth chart 7th house having 27 astavarga parals. So how Venus result related marriage?

தனிப்பட்ட ஜாதகங்களுக்கான கேள்விகளுக்கு, முழு ஜாதகத்தையும் பார்த்தால்தான் பலன் சொல்ல முடியும். அதற்கு உரிய வகுப்பு/பாடம் பின்னால் நடைபெற உள்ளது. பொறுத்திருக்கவும்

4.Neeshabanga raja yoga means one plant in excited with one planet in debilited.But last two months (October and November ,2009) mars in debilited house (katagam) and jupiter in debilitated house (magaram).Both are aspecting each other with 7th dristi.Some astrologers said this also neeshabanga raja yogam.How it is?

அவர்களைத்தான் கேட்க வேண்டும்!
---------------------------------------------------
email.No.61
K.சுந்தர், மலேசியா

Dear Sir,

Questions & Answer session is really good... i have been going thru,
learning more. Thanks again.
i have few questions:

1) Mandhi will spoil the benefit of the house where it residing, but if it reside together with the other planets in the house? eg., 4th House - Moon + Mandhi ( astavargam 4th house 24 paral, Moon suyavargam paral 4), this is my son's jathagam,he is 2 years +, also wanted to let you know this jathagam got saraswathi yogam.

மாந்தியுடன் வேறு நல்ல/சுபக் கிரகங்கள் சேர்வதால், மாந்தி நல்லவனாக மாறமாட்டான். சேர்ந்த கிரகங்களுக்குத்தான் இடைஞ்சல் உண்டாகும்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதிற்குப் பிறகுதான் வேலை செய்யும். அதுவரை பெற்றோர்களின் ஜாதகம்தான் அதனால்தான் குழந்தைகள் 12 வயதுவரை சந்தோஷமாக இருக்கிறார்கள். உங்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பன்னிரெண்டு வயதிற்குமேல் பாருங்கள்

2) Astavarga parals for the houses 3 , 6 , 8, & 12 , how the benefit will be predicted, more parals are bad? or less parals are good?

அங்கே குறைவான பரல்கள் இருப்பதே நன்மை. தீயவர்களும், தீய வீடுகளும் ஜாதகத்தில் வலிமை இல்லாமல் இருப்பதே நல்லது. அதோடு, அங்கே குறையும் பரல்கள், வேறு இடங்களில் அதிகரிக்கும் இல்லையா? மொத்தப் பரல்கள் 337 தானே?

3) planets such as sun,mars,mercury should be always in the rashi chart next houses or within 90 degrees otherwise the chart is wrong?, i am doing research with my family & friends jathagam using jagannatha hora, in some the charts these planets are not in the next houses. could you please explain more?

நான்கு வீடுகளுக்குள் அவைகள் இருக்கும். 4 X 30 பாகைகள் = 120 பாகைகள். 120ற்குள் 90 பாகை அடக்கமல்லவா? மேஷத்தில் 15 பாகையில் துவங்கினால் என்று வைத்துக்கொள்ளுங்கள் 105 பாகைக்குள் அவைகள் இருக்கும். 20 பாகையில் துவங்கினால் என்று வைத்துக்கொள்ளுங்கள்
110 பாகைக்குள் அவைகள் இருக்கும்.மீண்டும் ஒருமுறை பாருங்கள்
---------------------------------------------------
email.No.62
விஜய் ஆனந்த்

Respected sir,

1.You have given birth details of 33 popular personalities for our reference, in your 200th blog (great job!!! thank u sir!!!)....In that list my favourites personality Dr. A.P.J Abdul kalam's is missing....if possible can you give me his birth chart?........(what a great man!!! I am realy eager to see how the planets are placed in his birth chart)
thanking you,
N.Vijaianand

ஜாதகம் இல்லை நண்பரே! இருந்தால் அத்துடன் சேர்த்திருக்க மாட்டேனா?
--------------------------------------------------------------
(தொடரும்)
இன்றைய பொன்மொழி
Dreams Aren't those That You Have when You are Asleep, 
Dreams are Those that Don't Let You Sleep till They are Fulfilled!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

32 comments:

  1. குருவிற்கு வணக்கம ,

    உள்ளேன் ஐயா

    நன்றி

    ReplyDelete
  2. எனது திருமண அழைப்பிதலை பிரசுரித்த வாத்தியார் அய்யா அவர்களுக்கு எனது நன்றியை தேறிவித்து கொள்கிறேன்...

    ReplyDelete
  3. மேலும் பாரில் சிறந்த நமது வகுப்பறை ஆசிரியர், மாணவர்கள் , தோழர்கள் , தோழிகளின் ஆசியையும் வேண்டி நிற்கிரேன்...

    தங்களின் அனுபுக்கு என்று என்றும் கடமை பட்டவனாக...


    நன்றி

    ReplyDelete
  4. என்ன பாக்கியம் செய்தேனோ இறைவா...

    ReplyDelete
  5. ///Pandian said...
    என்ன பாக்கியம் செய்தேனோ இறைவா...///

    இது பாண்டியன் சங்கரியை மனதில் நினைத்துக் கொண்டு எழுதியது.... இது நமக்கில்லை ....எனவே மக்களே அதிகம் மகிழ வேண்டாம்.

    ReplyDelete
  6. நண்பர் பாண்டியனுக்கு எனது வாழ்த்துகள். சங்கரி ’பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா’ என்று பாடி மகிழ்வராக.

    ReplyDelete
  7. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம ,
    உள்ளேன் ஐயா
    நன்றி////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. /////Blogger Pandian said...
    எனது திருமண அழைப்பிதலை பிரசுரித்த வாத்தியார் அய்யா அவர்களுக்கு எனது நன்றியை தேறிவித்து கொள்கிறேன்...////

    அழைப்பிதல் - அழைப்பிதழ்
    தேறிவித்து - தெரிவித்து
    மனைவியை வைத்து தமிழை இன்னும் சிறப்பாக எழுதக் கற்றுக்கொள்ளூங்கள். நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன!

    ReplyDelete
  9. ////Blogger Pandian said...
    என்ன பாக்கியம் செய்தேனோ இறைவா.../////

    இறைவியை விட்டு விட்டீர்களே! சங்கரி மகிழ்வாரில்லையா?

    ReplyDelete
  10. /////Blogger தேமொழி said...
    ///Pandian said...
    என்ன பாக்கியம் செய்தேனோ இறைவா...///
    இது பாண்டியன் சங்கரியை மனதில் நினைத்துக் கொண்டு எழுதியது.... இது நமக்கில்லை ....எனவே மக்களே அதிகம் மகிழ வேண்டாம்./////

    இதுதான் தேமொழி அக்காவின் ’டச்’
    சூப்பர் அக்கோவ்!

    ReplyDelete
  11. /////Blogger ananth said...
    நண்பர் பாண்டியனுக்கு எனது வாழ்த்துகள். சங்கரி ’பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா’ என்று பாடி மகிழ்வராக./////

    மணப்பெண்ணே பாடுவதால் பி.ஜி.எம் தேவை இல்லை!

    ReplyDelete
  12. நாளை குருப்பெயர்ச்சி. எல்லோருக்கும் நல்லதாய் அமைய வேண்டுகின்றேன்.

    ஆச்சி அவர்கள் வீட்டில் இது எத்தனையாவது திருமண நிகழ்ச்சி அய்யா.
    ஆனந்தன் அன்னே நீங்க தெரிஞ்ஜா சொல்லுங்கலேன்.

    ReplyDelete
  13. Ref: Q# 61.3:
    சூரியன், செவ்வாய், புதன் 120 பாகைகளுக்குள்/ 4 வீடுகளுக்குள் அமைவது குறித்து:
    (1 ) ஐயா என் கணவரின் ஜாதகத்தில் இவ்வாறு 4 வீடுகளுக்குள் இந்த 3 கிரகங்களும் இல்லை. அவருக்கு செவ்வாய் வக்கிரம் என்பதால் இருக்கலாமா?
    (2) புதனும் சூரியனும் இவ்வாறு அருகருகில் இருப்பதால் 'புதஆதித்ய யோகம்' கிடைக்கும் வாய்ப்பு பெரும்பாலோருக்கு ஏற்படுகிறது, எங்கள் வீட்டிலும் இருவருக்கு உள்ளது. அதே போல புதனும் செவ்வாய்க்கும் சூரியனுக்கும் இடையில் வசமாக பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொள்வதும் நிகழ்கிறது. இந்த அமைப்பும் எங்கள் வீட்டில் இருவருக்கு உள்ளது. எனக்கு ஆறு மற்றும் ஒன்பதின் அதிபதி புதன் ஐந்தில். இருபக்கங்களிலும் செவ்வாய் சூரியன் தாதாக்கள் காவல். அதனால் ஒன்பதாம் அதிபதி, ஐந்தாம் வீடு பாதிப்பு. எனக்கு அடுத்து வரவிருப்பது இந்த புதன் திசைதான்.
    என் கேள்வி...இந்த அமைப்புகளினால் அதிகமாக பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டுவதும் புதன் கிரகம்தானா?

    ReplyDelete
  14. ///மொஹ்மத் ஜலாலுதீன் said... நாளை குருப்பெயர்ச்சி. எல்லோருக்கும் நல்லதாய் அமைய வேண்டுகின்றேன்.///

    வந்திட்டாரையா ....வந்திட்டாரு ....வெளிய வந்திட்டாரு ....
    மொஹ்மத், எல்லோருக்கும் நல்லதாக அமையுதோ இல்லையோ ராஜாவுக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது.

    ReplyDelete
  15. இன்றைய பொன்மொழி சூப்பர்!!!!

    வாத்தியார் மற்றும் வகுப்பறைத் தோழர்கள் ஆசியால், திருவளர்செல்வி. சங்கரியே 'லோகமாக' பாண்டியன் வாழ வாழ்த்துக்கள்.!!!!

    மிக அருமையான மீள் பதிவைத் தந்ததற்கு வாத்தியார் அவர்களுக்கு நன்றி!!!

    ReplyDelete
  16. //// மாந்தியுடன் வேறு நல்ல/
    சுபக் கிரகங்கள் சேர்வதால்,
    மாந்தி நல்லவனாக
    மாறமாட்டான். சேர்ந்த
    கிரகங்களுக்குத்தான்
    இடைஞ்சல் உண்டாகும் ////

    தீய அதிர்வுகளிளே,
    மிக உச்ச தீய அதிர்வுகளை,
    எற்படுத்தும் தீய கிரகம்,
    மாந்தியாகும்.

    மாந்தியோடு சேர்பவர்,
    பாபகிரகமானாலும்,
    சுபகிரகமானாலும்,
    தாங்களுடைய காரகம்
    மற்றும் ஆதிபத்தியம்
    அடிப்படையில் பாதிப்பை
    தருவார்கள்.
    காரகத்தின் அடிப்படையில் தான்
    அதிகம் பாதிப்பு எற்படுகிறது
    என்பது அனுபவ உண்மையாகும்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  17. தோழி மொழியிலே
    தோடி பாடி விட்டபடியால்

    நம்ம ஊரு பாண்டியருக்கு
    நாம வாழ்த்து சொல்லாட்டி எப்படி..

    பாண்டியருக்கு தருகிறோம்
    பாசமுடன் வாழ்த்து

    தொடரும் நாட்களெல்லாம்..
    துலங்கும் வெற்றிகளுடன்...

    இந்திய கலாச்சாரம்
    இன்னமும் குறையவில்லை என

    நெல்லை சங்கரியே
    அள்ளித் தர வேண்டும்

    அன்பையும் பாசத்தையும்
    அகம் மகிழ அன்பு "பெண்" குழவியுடன்

    இனியன எல்லாம் பெற வேண்டும்
    இன்பங்கள் பல சேர வேண்டும்

    வாழ்த்துக்கள் வாழ வைக்கும் என்றே
    வாழ்த்துகிறோம்.. இறைவன் (பொம்மையாசாமி) திருமுன் நின்றபடி

    வழக்கம் போல் சுழன்று
    வருகிறது இந்த பாடல்


    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

    பார்வையிலே மன்னன் பேரெழுதி
    அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி

    பொன்மணிக் கண்களில்
    அஞ்சனம் தீட்டி

    பூவையின் அண்ணன்
    கைவளை பூட்டி

    பொன்மணிக் கண்களில்
    அஞ்சனம் தீட்டி

    தாய் வழியே வந்த
    நாணத்தை காட்டி

    தான் வருவாள்
    மங்கை மங்களம் சூட்டி

    மாதரார் தங்கள்
    மகளென்று பார்த்திருக்க...

    மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...

    காதலாள் மெல்ல
    கால் பார்த்து நடந்து வர....

    கன்னியவள் கையில்
    கட்டி வைத்த மாலை தர...

    காளை திருக்கரத்தில்
    கனகமணி சரம் எடுக்க...

    ஆனந்தம் பாடு என
    ஆன்றோர் குரல் பிறக்க....

    கொட்டியது மேளம்....
    குவிந்தது கோடி மலர்...

    கட்டினான் மாங்கல்யம்...
    மனை வாழ்க
    துணை வாழ்க...
    குலம் வாழ்க...

    கைத்தலம் தந்தேன்
    என் கண்மணி வாழ

    அடைக்கலம் நீயென்று
    வந்தனள் வாழ

    ஆண்டவன் போல்
    உன்னை கோவில் கொண்டாட

    ReplyDelete
  18. ///////Blogger மொஹ்மத் ஜலாலுதீன் said...
    நாளை குருப்பெயர்ச்சி. எல்லோருக்கும் நல்லதாய் அமைய வேண்டுகின்றேன்.
    ஆச்சி அவர்கள் வீட்டில் இது எத்தனையாவது திருமண நிகழ்ச்சி அய்யா.
    ஆனந்தன் அண்ணே நீங்க தெரிஞ்ஜா சொல்லுங்களேன்.///////

    வனவாசத்தை முடித்துவிட்டு வாருங்கள்! கணக்கைப் பிறகு தெரிந்து கொள்ளலாம்!

    ReplyDelete
  19. /////Blogger தேமொழி said...
    Ref: Q# 61.3:
    சூரியன், செவ்வாய், புதன் 120 பாகைகளுக்குள்/ 4 வீடுகளுக்குள் அமைவது குறித்து:
    (1 ) ஐயா என் கணவரின் ஜாதகத்தில் இவ்வாறு 4 வீடுகளுக்குள் இந்த 3 கிரகங்களும் இல்லை. அவருக்கு செவ்வாய் வக்கிரம் என்பதால் இருக்கலாமா?
    (2) புதனும் சூரியனும் இவ்வாறு அருகருகில் இருப்பதால் 'புதஆதித்ய யோகம்' கிடைக்கும் வாய்ப்பு பெரும்பாலோருக்கு ஏற்படுகிறது, எங்கள் வீட்டிலும் இருவருக்கு உள்ளது. அதே போல புதனும் செவ்வாய்க்கும் சூரியனுக்கும் இடையில் வசமாக பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொள்வதும் நிகழ்கிறது. இந்த அமைப்பும் எங்கள் வீட்டில் இருவருக்கு உள்ளது. எனக்கு ஆறு மற்றும் ஒன்பதின் அதிபதி புதன் ஐந்தில். இருபக்கங்களிலும் செவ்வாய் சூரியன் தாதாக்கள் காவல். அதனால் ஒன்பதாம் அதிபதி, ஐந்தாம் வீடு பாதிப்பு. எனக்கு அடுத்து வரவிருப்பது இந்த புதன் திசைதான்.
    என் கேள்வி...இந்த அமைப்புகளினால் அதிகமாக பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டுவதும் புதன் கிரகம்தானா?/////

    ஆமாம். மற்ற இரண்டு கிரகங்கள் இரண்டுமே பாவ கிரகங்கள் என்பதால்!

    ReplyDelete
  20. ////Blogger தேமொழி said...
    ///மொஹ்மத் ஜலாலுதீன் said... நாளை குருப்பெயர்ச்சி. எல்லோருக்கும் நல்லதாய் அமைய வேண்டுகின்றேன்.///
    வந்திட்டாரையா ....வந்திட்டாரு ....வெளிய வந்திட்டாரு ....
    மொஹ்மத், எல்லோருக்கும் நல்லதாக அமையுதோ இல்லையோ ராஜாவுக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது.//////

    தொடர்ந்து நல்லதாகவே இருக்கட்டும்!

    ReplyDelete
  21. ////Parvathy Ramachandran said...
    இன்றைய பொன்மொழி சூப்பர்!!!!
    வாத்தியார் மற்றும் வகுப்பறைத் தோழர்கள் ஆசியால், திருவளர்செல்வி. சங்கரியே 'லோகமாக' பாண்டியன் வாழ வாழ்த்துக்கள்.!!!!
    மிக அருமையான மீள் பதிவைத் தந்ததற்கு வாத்தியார் அவர்களுக்கு நன்றி!!!////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. Blogger Bhogar said...
    //// மாந்தியுடன் வேறு நல்ல/
    சுபக் கிரகங்கள் சேர்வதால்,
    மாந்தி நல்லவனாக
    மாறமாட்டான். சேர்ந்த
    கிரகங்களுக்குத்தான்
    இடைஞ்சல் உண்டாகும் ////
    தீய அதிர்வுகளிளே,
    மிக உச்ச தீய அதிர்வுகளை,
    எற்படுத்தும் தீய கிரகம்,
    மாந்தியாகும்.
    மாந்தியோடு சேர்பவர்,
    பாபகிரகமானாலும்,
    சுபகிரகமானாலும்,
    தாங்களுடைய காரகம்
    மற்றும் ஆதிபத்தியம்
    அடிப்படையில் பாதிப்பை
    தருவார்கள்.
    காரகத்தின் அடிப்படையில் தான்
    அதிகம் பாதிப்பு எற்படுகிறது
    என்பது அனுபவ உண்மையாகும்.
    ஓம் சரவணபவ நம//////


    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. மாஷே ! நமஸ்காரம் .

    மாஷே ! ஒரு கேள்வி ஆனால் யான் கூறியுள்ள, கேள்வி தங்களுடைய வகுப்பின் பதிலுக்கு மாறு பட்டது. இதனை கூறுவதனால் எமக்கு ஒன்றும் நஷ்டம் வரப்போவது இல்லை .

    மேலும் எம்முடைய கேள்வி பதில் சற்று நீலமானை கூட
    வகுப்பறையில் இதனை கூறுவது கூட சரியா என்பது கூட எமக்கு தெரிய வில்லை .

    சரி கேள்விக்கு வருகின்றேன் . நான் வகுப்பிற்கு வந்தது முதல் தாங்கள் கூறுவது குழந்தைக்கு 12 வயதிற்கு மேல்தான் சொந்த ஜாதகம் வேலை செய்யும் என்பது.

    நிற்க!

    அதாவது நாங்கள் இருப்பது அம்மா ஊரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர். என்னுடைய ( தந்தை வழி )பூர்விகம் செங்கோட்டை . அதாவது என்னுடைய தாத்தாவுடைய தாத்தா ( அப்பா வழி ) அந்த காலத்தில் அதாவது (1954 ) முன்னர் செங்கோட்டை கேரள மாநிலத்தில் இருந்த பொழுது மேலே குறிப்பிட்ட வாசுதேவனல்லுரில் இருந்து பிழைப்பு வேண்டி அங்கு சென்றவர் ஆகும் . பின்னர் மர வியாபாரம் செய்து யானையை கூட சொந்தமாக வாங்கி! மரங்களை ஒரு இடத்தில இருந்து மறு இடத்திற்கு மாற்ற வேண்டி பயன் படுத்தும் அளவிற்கு உயந்து உள்ளார்.

    வியாபாரம் மென்மேலும் உயர பல யானைக்கு தேவையான உணவை தந்து வியாபாரம் செய்யும் அளவிற்கு மிகவும் வசதியானர் ஆனார். மேலும் செங்கோட்டையில் இருந்த எமது சமுகத்தை சார்ந்த பெண்ணை கல்யாணம் செய்து அங்கயே தங்கி விட்டார் . அவருக்கு ஒரே ஒரு ஆண்குழந்தை மட்டும் தான் அந்தகாலத்தில் கூட. மேலும், மிகவும் செல்லமாக வளர்த்து உள்ளார்கள் . , அவருடைய பெயர் உயர் திரு " சுடலை முத்து முதலியார் " ஐயா!

    பின்னர் என்னுடைய தாத்தாவின் தாத்தா மறைவிற்கு பின்னர் தாத்தா உடைய அப்பா வியாபாரத்தை நன்றாக நடத்தி வந்து உள்ளார். பின்னர் வாசுதேவநல்லூரில் உள்ள அப்பாவழி சொந்தங்கள் பிழைப்பு தேடி செங்கோட்டை க்கு சென்று உள்ளனர் . சொந்த பந்தங்கள் என்று அறிந்தது கொண்டு தான் நடத்தி வந்த மர வியாபாரத்தை நாளாக நாளாக முழு பொறுப்பையும் அவர்களின் பொறுப்பில் விட்டு விட்டு தேவை படும் பொழுது மட்டும் மர கடைக்கு செல்ல மற்ற நேரம் வீடிலையே இருந்து உள்ளார் சொந்தங்களின் மேல் இருந்த நம்பிக்கையால்.

    ReplyDelete
  24. Dear Loga Veera Pandian & Sankari,

    Wishing you all the health and happiness in this world on your wedding

    Gayathri Magesh
    Chennai

    ReplyDelete
  25. தேமொழிsaid...
    ///Pandian said...
    என்ன பாக்கியம் செய்தேனோ இறைவா...///

    இது பாண்டியன் சங்கரியை மனதில் நினைத்துக் கொண்டு எழுதியது.... இது நமக்கில்லை ....எனவே மக்களே அதிகம் மகிழ வேண்டாம்.///


    தங்களின் அன்புக்கு நன்றிகள் தேமொழி அக்கா...

    ReplyDelete
  26. ananth said...
    நண்பர் பாண்டியனுக்கு எனது வாழ்த்துகள். சங்கரி ’பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா’ என்று பாடி மகிழ்வராக.///

    தங்களின் அன்புக்கு நன்றிகள் ஆனந்த் அண்ணா...

    ReplyDelete
  27. Parvathy Ramachandran said...
    இன்றைய பொன்மொழி சூப்பர்!!!!

    வாத்தியார் மற்றும் வகுப்பறைத் தோழர்கள் ஆசியால், திருவளர்செல்வி. சங்கரியே 'லோகமாக' பாண்டியன் வாழ வாழ்த்துக்கள்.!!!!//////

    தங்கள் அன்புக்கு நன்றி பார்வதி அக்கா...

    ReplyDelete
  28. அய்யர்said...
    தோழி மொழியிலே
    தோடி பாடி விட்டபடியால்

    நம்ம ஊரு பாண்டியருக்கு
    நாம வாழ்த்து சொல்லாட்டி எப்படி..////


    தங்கள் அன்புக்கு நன்றி அய்யர் அண்ணா ...

    ReplyDelete
  29. GAYATHRI said...
    Dear Loga Veera Pandian & Sankari,

    Wishing you all the health and happiness in this world on your wedding

    Gayathri Magesh
    சென்னை///

    தங்கள் அன்புக்கு நன்றி காயத்ரி அக்கா ..

    ReplyDelete
  30. ஜூன் ஒண்ணாம் தேதியிலேருந்து 'இனியெல்லாம் சுகமே'என நாளெல்லாம்
    கொக்கோகம் பயிலப் போகும்
    'அதி'வீர பாண்டியருக்கு
    அன்புடன் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  31. Best wishes for a Happy and Prosperous Married Life to Pandian and Sankari. May God Bless them.

    BALASUBRAMANIAN P. RIYADH

    ReplyDelete
  32. Dear Sir.
    Can you share the Guru peryarchi palanagal?


    Thanks
    Rathinavel

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com