++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: வேறு ஒரு மயில் கிடைக்காதா என்ன?
Doubts: கேள்வி பதில் பகுதி பதினொன்று!
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் பதினொன்று!
Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
---------------------------------------------------
email No.43
ஆண்டெஸ் ராஜ்!
வணக்கம் ஆசிரியரே..
1. மீன லக்ன ஜாதகத்திற்கு சுக்ரன் இரண்டு துஷ்ஸ்தானன்களுக்கு அதிபதி அல்லவா,அவர் ஆறாம் வீட்டில் மறைவது நல்லதா.மேலும் நவாம்சத்திலும் கடகத்தில் நீசமாகிறார்.சுயவர்க பரல்களும் 3 தான் உள்ளது.ஆனால் அவருடன் யோகாதிபதி செவ்வாயும் ஆறாம் வீடான சிம்மத்தில் உள்ளார்.
சுக்ரன் என் ஜாதகத்தில் very weak positionla இருக்கிறார் .என் சந்தேகம் என்னவென்றால் மீன லக்னத்திற்கு சுக்ரன் தீயவர் தானே,அவர் weak positionla இருக்கிறது நல்லதா ???....இப்போது ராகு திசை சுக்ர புத்தி நடக்கிறது..இந்த சுக்ர புத்தியில் காதல் கனிந்து வாடியும் விட்டது..Is it happened because of weak sukran.காதல் வாழ்க்கை காலி தானா வாத்தியாரே.ஒரே குழப்பமாக உள்ளது
சுக்கிரன் கடகத்தில் எப்படி நீசமடைவார். என்னைக் குழப்புகிறீர்களே? கனிந்து வந்த காதலை வாட விட்டது உங்கள் தவறு. வேறு ஒரு மயில் கிடைக்காமலா போய்விடும்? முயற்சி செய்யுங்கள். கிடைத்தால் உடனே மணந்து கொண்டுவிடுங்கள். மயில் கிடைக்காவிட்டால், உங்கள் பெற்றோர்கள் பார்க்கும் ஒரு குயிலை மணந்து கொள்ளுங்கள். சுக்கிரபுத்தி நடப்பதால் இதைச் சொல்கிறேன்!
2. லக்னத்தில் 35 பரல்கள் ,லக்னாதிபதி சுய வர்க்கத்தில் 6 பரல்கள்,ஏழாம் வீட்டில் 25 பரல்கள் ,ஏழாம் அதிபன் அமர்ந்த ஐந்தாம் வீட்டில் 23 பரல்கள்,புதன் சுயவர்க பரல்கள் 2...ஐந்தாம் அதிபன் சந்திரன் ரோகினி நட்சத்திரத்தில் உச்சமாக சுயவர்க்கத்தில் 8 பரல்களுடன் உள்ளார்.பலன் என்ன ஆசிரியரே..சிரமத்திற்கு மன்னிக்கவும் ..
நன்றி ஆசிரியரே..
ராஜ்
மூன்று வீடுகளை வைத்துக் கும்மி அடித்திருக்கிறீர்கள். அதுவும் கும்மிப்பாட்டு மூன்று மொழிகளில் கலந்து இருக்கிறது. லக்கினம், ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு என்று நீண்ட பாடலாக இருக்கிறது. என்ன பலன் எதிர்பார்க்கிறீர்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே? பலன் என்ன என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்கு என்ன நோய் என்ண்வென்று சொல்லாமல், மருத்துவரிடம் சென்று, எனக்கு என்ன நோயென்று சொல்ல முடியுமா? என்று கேட்பதைப் போல் அல்லவா இருக்கிறது உங்கள் கேள்வி!
-------------------------------------------
email No.44
G.சீனிவாசன்
Dear sir,
with your permission i would like to ask some questions
1.how
will be the lagna lord period if he is placed in eigth place in exalted
position/friend`s place/malefic position/neetcha ? as perception from
reading during lagne lord period wherever he is there he will confer
good result for nativity.
லக்கினாதிபதி எட்டில் இருந்தால் அவருடைய தசா/புத்தி எப்படி இருக்கும் என்பது வரை உங்கள் கேள்வி சரி. அது உச்ச வீடாக இருந்தால் என்ன பலன்? நட்பு வீடாக இருந்தால் என்ன பலன்? பகை வீடாக இருந்தால் என்ன பலன்? நீச வீடாக இருந்தால் என்ன பலன்? என்று ஏன் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்? சென்னையில் வீடு வாங்கலாமென்று இருக்கிறேன். போயஸ் கார்டனில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? டி.நகரில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? அடையார் க்ரீன்வேஸ் சாலையில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? வேளாச்சேரியில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? அம்பத்தூரில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? ஸ்ரீபெரும்புதூரில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? என்று கேட்டுக்கொண்டே போனால் என்ன சொல்வது? சொல்லுங்கள்? பொட்டில் அடித்த மாதிரிக் கேள்வி சின்னதாகவும், கேட்க நினைப்பதைச் சொல்வதாகவும் இருக்க வேண்டாமா? Be specific with your question!
லக்கினாதிபதி ஜாதகனுக்கு எப்போதும் நன்மைகளைச் செய்வார் என்பது பொதுவிதி. ஜாதகத்தில் அவருடைய பொஸிசனை வைத்துப் பலன்கள் மாறாதா? மகனைச் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்பது தந்தைக்கான பொது விதி! அதற்காக முப்பது லட்சரூபாய் capitation fee கொடுத்து மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் அவரால் எப்படி சீட் வாங்கித் தரமுடியும்? அல்லது எட்டு லட்ச ரூபாய் செலவழித்துப் பொறியியற் கல்லூரியில் அவரால் எப்படி சீட் வாங்கித் தரமுடியும்.? அவர் ஒரு சாதாரணக் குடிமகனாக (அந்தக் குடிமகன் அல்ல) குறைந்த ஊதியத்திற்கு இடுப்பு ஒடிய வேலை செய்துகொண்டிருப்பவரென்றால் அதெல்லாம் எப்படி சாத்தியமாகும்? மாநிலத்திலேயே முதல் 100 பேர்களில் ஒருவன் எனும் தரவரிசையில் ஒருவனாகப் படித்து மகனல்லவா அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதுபோல ஜாதகத்தில் வித்யாகாரகன், அறிவுக்குக் காரகன், மனகாரகன் எல்லாம் சேர்ந்து நன்றாக இருந்தால்தானே ஜாதகன் அதைச் சாதிக்க முடியும். ஜாதகத்தில் பலன்கள் எல்லாம் கூட்டு முயற்சி. ஒரு விதியை மட்டும் வைத்துக் கொண்டு ரீல் ஓட்ட முடியாது. லக்கினகாரகனும் தனியாக ரீல் ஓட்ட முடியாது. தனியாக ஓட்டமுடிந்தால் அவன் ஒருவனே போதுமே சாமி. மற்ற கிரகங்கள் எல்லாம் எதற்கு?
2.if
mars is lagna lord, if it is placed in sixth house how that will work
as my perception from lessons mars is malefic planet & any
planet positioned in sixth will not confer good result except saturn
& ragu.
நீங்களே கேள்வியையும் கேட்டு, பதிலையும் சொல்லிவிட்டீர்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
3.sixth
&eigth combination of major period & sub period lord
will not give result even in the case of lagna lord & rasi
lord.my question is any one has the period of Jupiter and sub period of
mercury but both are in sixth/eighth in respective of each.
thanks
g.srinivasan
நீங்களே கேள்வியையும் கேட்டு, பதிலையும் சொல்லிவிட்டீர்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நான் நன்றியை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!
............................................................................
email No. 45
ரதி தேவி
Dear Sir,
Your
class is simply superb. Your doubt clarification is very efficient and
useful.Your approaching method to explain subject is extra
ordinary.Every one can understand easily.
வகுப்பறையில் மூன்று வருடங்களாகப் பாடங்களை நடத்திக் கொண்டி ருக்கிறேன். பாடங்களில் கேட்கப்படும் சில சந்தேகங்களைப் பார்த்தால் அப்படித்தெரியவில்லையே அம்மணி? (சகோதரி)
1.My doubt is that Rasiyil 10m idathu
athibathi sani 5l irunthu,Amsathil 8l neechamahi uccha suriyanudan
sernthirunthal yeena vilaivu?. in amsathil, Neecha panga raja yogam
seyalbaduma? 10 place paralgal 31 and suyavarga paral 3. Is it good for
job?
please clarify my doubts sir?
Your student,
Rathi Devi.
இங்கே சனியை மட்டும் பார்ப்போம். அவன் பத்தாம் இடத்து அதிபதி. நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறான். அதோடு பத்தாம் வீட்டில் 31 பரல்கள் உள்ளன. உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதில் படிப்படியான உயர்வுகளும் இருக்கும். சுயவர்க்கப்பரல்கள் குறைவாக இருப்பதால், நீங்களும் கிடைக்கும் வேலையில் உண்மையாகவும், நேர்மையாகவும் உழைக்க வேண்டும். அப்போதுதான் உரிய அங்கீகாரம் கிடைக்கும் உரிய நேரத்தில் கிடைக்கும்
------------------------------------------------------
email No. 46
JP.தயாள்
Respected Sir,
1.Earlier u 've said ,Bhukthi and athram will have equal power What about the dasa ? which will dominate ?
அந்தரமும், புத்தியும் சேர்ந்ததுதானே சாமி தசை என்பது. அவை இரண்டும் இல்லாமல் தசை எப்படி இருக்கும் சொல்லுங்கள்?
2.Generally
each grahga has two houses ? One good and other bad ( for dhaush lagna
, 5 and 12 th house lord is sevvai , simmarly 6 and 11 house lord is
sukran) How these house owners perform ??
கலவையான (mixed result) பலன்களைக் கொடுக்கும்.
3.Will
lord of 12 owner (sevvai )is in eighth ( kadagam) and getting neesam,
is it nesabangam ? is it comes under any yogam ?Is it good or bad ?
நீசபங்கத்தைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன். 12ஆம் இட அதிபதி எட்டில் வந்து அமர்வதனாலேயே நீசபங்க யோகம் என்று எப்படிச் சொல்லமுடியும்? ஒரு உச்சனும், ஒரு நீசனும் ஒன்றாகச் சேர்ந்தால் மட்டுமே நீசபங்க யோகம் மலரும்! அதாவது கிடைக்கும். ஒரு வாலிபனும், ஒரு கன்னியும் சேர்ந்து மணந்து கொண்டால்தான் அதற்குத் திருமணம் என்று பெயர். அதைப்போல என்று வைத்துக் கொள்ளூங்கள்
4.Does rasi athapathi has any role ?
விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்தவுடன், ராசி அதிபதிக்கு என்ன ரோலென்று கேட்கிறீர்கள். சீதைக்கு ராமர் சித்தப்பா என்று ஒருவன் சொன்னானாம், அந்த ரோலை ராசியதிபதிக்குக் கொடுத்துவிடுவோம். மொத்தம் 300 பாடங்களை நடத்தியிருக்கிறேன். இன்னும் உங்களுக்கு முக்கிய பாத்திரங்களான ராமர், சீதை, லெட்சுமணன், ஊர்மிளாவை எல்லாம் தெரியவில்லை என்றால் என்ன செய்வது? மீண்டும் பத்துமுறை ராமாயணக்கதையைக் கேளுங்கள். அதாவது பழைய பாடங்கள் அனைத்தையும் குறைந்தது மூன்று முறைகளாவது படியுங்கள்! அப்போதுதான் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்கள் புரியும்.1.
5.If
the dasa of the particular planet is happening ? whether the suya varaga
paral of the planet alone counts his performance of the dasa ?Or
astavarga paral of his own house counts ? Or astavarga paral of the
house where he is counts? which will dominate?If suya varga paral is
less , and astavaraga paral is own house is more ? will this have any
change ?
பெண்ணுக்கு அழகைத் தருவது எது? மலர்ந்த முகமா? சிவந்த நிறமா? வனப்பான மேனியா? இளமை ததும்பும் வயதா? கிறங்க அடிக்கும் விழிகளா? கொஞ்சும் அதரங்களா? மயக்கும் பேச்சா? எதைச் சொல்வது? நீங்கள் இதற்குப் பதில் சொல்லுங்கள். நான் அதற்குப் பதில் சொல்கிறேன்:-)))))
pl bear my questions and if i am wrong
thanks and regards
Dayal
வேறுவழி? பொறுமையைத் துணையாகக் கொண்டுள்ளேன்!
-----------------------------------
(தொடரும்)
இன்றைய பொன்மொழி
If the Road is Beautiful then, Worry About the Destination,
But if the Destination is Beautiful, Then Don't Worry About The Road!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
//2.Generally each grahga has two houses ? One good and other bad ( for dhaush lagna , 5 and 12 th house lord is sevvai , simmarly 6 and 11 house lord is sukran) How these house owners perform ??
ReplyDeleteகலவையான (mixed result) பலன்களைக் கொடுக்கும்.//
கலவை என்றால் என்ன மாதிரியான பலன் என்றும் கேட்பார்கள். 5ம் அதிபதியாக நல்லதை கொடுத்து விட்டு 12ம் அதிபதியாக அதை பிடுங்கிக் கொள்வார். கொடுத்தவனே பறித்துக் கொண்டான் என்பதைப் போல்.
வாத்தியார் வணக்கம்,
ReplyDeleteஇப்போ எனக்கு ஒரு சந்தேகம் அறிவுக்கு சூரியன் தந்தைக்கும் சூரியன் இதயம் அரசியல் இதற்கெல்லாம் சூரியன் வித்தியாகரன் புதன்
அப்போ குரு தனத்துக்கும் புத்திரர்களுக்கும் அதிபதியா அறிவுக்கு அதிபதி இல்லையா கொஞ்சம் சொல்லித்தங்கா இன்றைய பாடம் மிகவும் நன்றாக இருந்தது.
கேள்வி பதில் படிக்கையில் நிறைய துனைக் கேள்விகள் கிளம்புகின்றன.அய்யா இன்னும் ஒரு புது கேள்வி-பதில் பகுதி துவங்க வேண்டும்.
ReplyDeleteஒரு கிரகம் ராசியிலும் அம்சத்திலும் ஒரே இடத்தில் இருந்தால் அது பலமுள்ள கிரகம் எனும் போது ராசியில் நீசமான கிரகம் அம்சத்திலும் அதே இடத்தில் நீசமாகி இருந்தால் அது பலம் உள்ள கிரகமா அல்லது நீசம் தான் என்று கொள்வதா.
கேள்வி பதில் படிக்கையில் நிறைய துனைக் கேள்விகள் கிளம்புகின்றன.அய்யா இன்னும் ஒரு புது கேள்வி-பதில் பகுதி துவங்க வேண்டும்.
ReplyDeleteஒரு கிரகம் ராசியிலும் அம்சத்திலும் ஒரே இடத்தில் இருந்தால் அது பலமுள்ள கிரகம் எனும் போது ராசியில் நீசமான கிரகம் அம்சத்திலும் அதே இடத்தில் நீசமாகி இருந்தால் அது பலம் உள்ள கிரகமா அல்லது நீசம் தான் என்று கொள்வதா. //
தனசு சார்,
அதற்கு பெயர் வர்கோதமம் ராசியில் நீசமான் கிரகம் அம்சத்தில நீசமாயி (அதே)
வீட்டிலிருந்தாலும் நீச கிரகம் வர்கோததமம் அதனால் அது நீசபலன் போயி நல்ல பலன் கொடுக்கும் 50& ஆவது நல்லது செய்யும்
அப்புறம் நீசமான் கிரகம் வக்கரம் பெற்றால் ரொம்ப நல்லது உச்சம் பெற்ற கிரகம் வக்கிரமானால் நல்லது இல்லை
ஹி ஹி வாத்தியார் என்ன சொல்லறாரோ அதையே வச்சிகொங்க நான் கடைசி பெஞ்சு அப்புறம் புத்தியில்லா சிகாமணி
///sundari said...
ReplyDeleteஅறிவுக்கு சூரியன்
தந்தைக்கும் சூரியன்
இதயம் அரசியல் இதற்கெல்லாம் சூரியன்///
படிக்கும்போது என்ன இது திடீர்னு நம் சுந்தரி அரசியல் பிரசாரம் செய்யராங்களோன்னு தோன்றியது.
///ananth said...
5ம் அதிபதியாக நல்லதை கொடுத்து விட்டு 12ம் அதிபதியாக அதை பிடுங்கிக் கொள்வார். கொடுத்தவனே பறித்துக் கொண்டான் என்பதைப் போல்.///
இந்த கிரகங்கள் பண்ற ரப்ச்சரு தாங்கல............
கேள்வி கேட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருக்கிறார்கள். பிரச்சனைகளைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டவர்கள் இப்பொழுது மீள் பதிவை படிதுக்கொண்டிருந்தால், விளைவுகள்/தீர்வுகள் எப்படி இருந்தது என்பதை *விரும்பினால்* தெரிவிக்கலாம் அல்லவா. அறிவியல் பரிசோதனை ஆய்வு போல உதவியாக இருக்கலாம். மற்றவர்களில் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது போல எனக்கே தோன்றுகிறது....எனவே ஆர்வக் கோளாறில் சொல்லியதை நினைத்து கோபம் கொள்ளாமல் மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பொன்மொழி பிடித்திருக்கிறது ஐயா, நன்றி
அதற்கு பெயர் வர்கோதமம் ராசியில் நீசமான் கிரகம் அம்சத்தில நீசமாயி (அதே)
ReplyDeleteவீட்டிலிருந்தாலும் நீச கிரகம் வர்கோததமம் அதனால் அது நீசபலன் போயி நல்ல பலன் கொடுக்கும் 50& ஆவது நல்லது செய்யும்/////////////
இல்லை - ராசி மற்றும் நவாம்சத்தில் இரண்டிலும் நீசம் பெற்ற கிரகம் நன்மை செய்யாது...
(Double Failure)...
அப்புறம் நீசமான் கிரகம் வக்கரம் பெற்றால் ரொம்ப நல்லது உச்சம் பெற்ற கிரகம் வக்கிரமானால் நல்லது இல்லை///////////
ReplyDeleteசரியான கருத்து...
நட்பு வீட்டில் வக்கிரம் பெற்ற கிரகம் வர்கோத்தமம் பெற்றால் வக்கிர பலன் குறைந்து விடும்...
ReplyDeleteசகோதரி தேன்மொழி,
ReplyDeleteநம்க்கு சிம்மலகனம் செவ்வாய் 6 ல் சுய வர்க்கத்தில் 7 மொத்த அஷ்ட வர்க்கம் 38 இப்போ என்க்கு வரும் கொஞ்ச நாட்கள் பொறுத்து
அப்போ அம்மா சுயேச்சை வேட்பாளரா நின்னு வெற்றி கண்டு சட்ட சபைக்கு/நாடாளூ மன்ற்த்துக்கு போயி ஆளுங்கட்சியாயிருந்து பணத்தை அள்ளி கொட்டிகாமால் எதிர்க்காட்சியாயிருந்து அவலங்களூக்கு குரல் கொடுத்து அப்போ எல்லாம் என் மேலே தட்டு முட்டு சாமான்களை எல்லாம் தூக்கி அடிப்பங்கோ அப்போ எல்லாதையிம் கேட்சு பிடிக்க போகிறேன் என்ன பர்த்த எவருக்கும் பிடிக்காது நிங்க நமப சுந்தரின்னு சொல்லுறிங்க ரொம்ப நன்றி எனக்கும் ச்கோதரி இருக்கிறாஙகோ சரி ஜிமெயில் ஐடி கொடுங்க.
/////Blogger ananth said...
ReplyDelete//2.Generally each grahga has two houses ? One good and other bad ( for dhaush lagna , 5 and 12 th house lord is sevvai , simmarly 6 and 11 house lord is sukran) How these house owners perform ??
கலவையான (mixed result) பலன்களைக் கொடுக்கும்.//
கலவை என்றால் என்ன மாதிரியான பலன் என்றும் கேட்பார்கள். 5ம் அதிபதியாக நல்லதை கொடுத்து விட்டு 12ம் அதிபதியாக அதை பிடுங்கிக் கொள்வார். கொடுத்தவனே பறித்துக் கொண்டான் என்பதைப் போல்./////
கொடுக்கும்போது சந்தோஷமாக இருக்கும். பறிக்கும்போதுதான் வேதனை! நல்லது நன்றி ஆனந்த்!
////Blogger sundari said...
ReplyDeleteவாத்தியார் வணக்கம்,
இப்போ எனக்கு ஒரு சந்தேகம் அறிவுக்கு சூரியன் தந்தைக்கும் சூரியன் இதயம் அரசியல் இதற்கெல்லாம் சூரியன் வித்தியாகரன் புதன்
அப்போ குரு தனத்துக்கும் புத்திரர்களுக்கும் அதிபதியா அறிவுக்கு அதிபதி இல்லையா கொஞ்சம் சொல்லித்தங்கா இன்றைய பாடம் மிகவும் நன்றாக இருந்தது.////
தந்தைக்கு சூரியன்.உடம்பிற்கும் சூரியன், தாய்க்கு சந்திரன். மனதிற்கும் சந்திரன், கல்விக்கு புதன்.புத்திக்கும் புதன், அறிவிற்கு (keen intelligence) குரு! தனத்திற்கும், குழந்தை பாக்கியத்திற்கும் குருதான். இவைகள் முக்கியமான இலாக்காக்கள்!
////Blogger thanusu said...
ReplyDeleteகேள்வி பதில் படிக்கையில் நிறைய துனைக் கேள்விகள் கிளம்புகின்றன.அய்யா இன்னும் ஒரு புது கேள்வி-பதில் பகுதி துவங்க வேண்டும்.
ஒரு கிரகம் ராசியிலும் அம்சத்திலும் ஒரே இடத்தில் இருந்தால் அது பலமுள்ள கிரகம் எனும் போது ராசியில் நீசமான கிரகம் அம்சத்திலும் அதே இடத்தில் நீசமாகி இருந்தால் அது பலம் உள்ள கிரகமா அல்லது நீசம் தான் என்று கொள்வதா./////
அம்சம் என்பது ராசியின் magnified version. ராசி, அம்சம் இரண்டிலும் நீசமானால் முழு நீசம்! Total debilitation
////Blogger sundari said...
ReplyDeleteகேள்வி பதில் படிக்கையில் நிறைய துனைக் கேள்விகள் கிளம்புகின்றன.அய்யா இன்னும் ஒரு புது கேள்வி-பதில் பகுதி துவங்க வேண்டும்.
ஒரு கிரகம் ராசியிலும் அம்சத்திலும் ஒரே இடத்தில் இருந்தால் அது பலமுள்ள கிரகம் எனும் போது ராசியில் நீசமான கிரகம் அம்சத்திலும் அதே இடத்தில் நீசமாகி இருந்தால் அது பலம் உள்ள கிரகமா அல்லது நீசம் தான் என்று கொள்வதா. //
தனசு சார்,
அதற்கு பெயர் வர்கோதமம் ராசியில் நீசமான் கிரகம் அம்சத்தில நீசமாயி (அதே)
வீட்டிலிருந்தாலும் நீச கிரகம் வர்கோததமம் அதனால் அது நீசபலன் போயி நல்ல பலன் கொடுக்கும் 50& ஆவது நல்லது செய்யும்
அப்புறம் நீசமான் கிரகம் வக்கரம் பெற்றால் ரொம்ப நல்லது உச்சம் பெற்ற கிரகம் வக்கிரமானால் நல்லது இல்லை
ஹி ஹி வாத்தியார் என்ன சொல்லறாரோ அதையே வச்சிகொங்க நான் கடைசி பெஞ்சு அப்புறம் புத்தியில்லா சிகாமணி/////
உங்களைப் பற்றி நீங்களே ஏன் குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறீர்கள்? தன்னம்பிக்கையோடு இருங்கள்.
/////Blogger தேமொழி said...
ReplyDelete///sundari said...
அறிவுக்கு சூரியன்
தந்தைக்கும் சூரியன்
இதயம் அரசியல் இதற்கெல்லாம் சூரியன்///
படிக்கும்போது என்ன இது திடீர்னு நம் சுந்தரி அரசியல் பிரசாரம் செய்யராங்களோன்னு தோன்றியது.
///ananth said...
5ம் அதிபதியாக நல்லதை கொடுத்து விட்டு 12ம் அதிபதியாக அதை பிடுங்கிக் கொள்வார். கொடுத்தவனே பறித்துக் கொண்டான் என்பதைப் போல்.///
இந்த கிரகங்கள் பண்ற ரப்ச்சரு தாங்கல............
கேள்வி கேட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருக்கிறார்கள். பிரச்சனைகளைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டவர்கள் இப்பொழுது மீள் பதிவை படிதுக்கொண்டிருந்தால், விளைவுகள்/தீர்வுகள் எப்படி இருந்தது என்பதை *விரும்பினால்* தெரிவிக்கலாம் அல்லவா. அறிவியல் பரிசோதனை ஆய்வு போல உதவியாக இருக்கலாம். மற்றவர்களில் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது போல எனக்கே தோன்றுகிறது....எனவே ஆர்வக் கோளாறில் சொல்லியதை நினைத்து கோபம் கொள்ளாமல் மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பொன்மொழி பிடித்திருக்கிறது ஐயா, நன்றி/////
அவ்வாறு சொன்னால், வலையில் ஏற்றிவிடுகிறேன்! அனைவருக்கும் பயன்படும்!
/////Blogger bhuvanar said...
ReplyDeleteஅதற்கு பெயர் வர்கோதமம் ராசியில் நீசமான் கிரகம் அம்சத்தில நீசமாயி (அதே)
வீட்டிலிருந்தாலும் நீச கிரகம் வர்கோததமம் அதனால் அது நீசபலன் போயி நல்ல பலன் கொடுக்கும் 50& ஆவது நல்லது செய்யும்/////////////
இல்லை - ராசி மற்றும் நவாம்சத்தில் இரண்டிலும் நீசம் பெற்ற கிரகம் நன்மை செய்யாது...
(Double Failure)...///
அம்சம் என்பது ராசியின் magnified version. ராசி, அம்சம் இரண்டிலும் நீசமானால் முழு நீசம்! Total debilitation
////Blogger bhuvanar said...
ReplyDeleteஅப்புறம் நீசமான் கிரகம் வக்கரம் பெற்றால் ரொம்ப நல்லது உச்சம் பெற்ற கிரகம் வக்கிரமானால் நல்லது இல்லை///////////
சரியான கருத்து.../////
உண்மைதான்! நன்றி நண்பரே!
Blogger bhuvanar said...
ReplyDeleteநட்பு வீட்டில் வக்கிரம் பெற்ற கிரகம் வர்கோத்தமம் பெற்றால் வக்கிர பலன் குறைந்து விடும்...//////
உண்மைதான்! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
////Blogger sundari said...
ReplyDeleteசகோதரி தேன்மொழி,
நம்க்கு சிம்மலகனம் செவ்வாய் 6 ல் சுய வர்க்கத்தில் 7 மொத்த அஷ்ட வர்க்கம் 38 இப்போ என்க்கு வரும் கொஞ்ச நாட்கள் பொறுத்து
அப்போ அம்மா சுயேச்சை வேட்பாளரா நின்னு வெற்றி கண்டு சட்ட சபைக்கு/நாடாளூ மன்ற்த்துக்கு போயி ஆளுங்கட்சியாயிருந்து பணத்தை அள்ளி கொட்டிகாமால் எதிர்க்காட்சியாயிருந்து அவலங்களூக்கு குரல் கொடுத்து அப்போ எல்லாம் என் மேலே தட்டு முட்டு சாமான்களை எல்லாம் தூக்கி அடிப்பங்கோ அப்போ எல்லாதையிம் கேட்சு பிடிக்க போகிறேன் என்ன பர்த்த எவருக்கும் பிடிக்காது நிங்க நமப சுந்தரின்னு சொல்லுறிங்க ரொம்ப நன்றி எனக்கும் ச்கோதரி இருக்கிறாஙகோ சரி ஜிமெயில் ஐடி கொடுங்க./////
வாழ்க ஜனநாயகம்! வாழ்க தாய்க்குலம்!
சந்தேகம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்;அவ்வளவு சந்தேகம் வரக்கூடிய ஒரு சப்ஜெக்ட்தான் ஜோதிடம். ஏதோ ஒரு நிலையில், இருப்பவற்றிலிருந்து நமக்கு என்று சில வழிமுறைகளை(மெதடாலஜி) உள் வாங்கிக்கொண்டு தெரிந்த அளவு பலன் சொல்ல வேண்டியுள்ளது. பலிப்பவருக்குப் பலிக்கும். இல்லா விட்டால் இல்லை. பலித்தவர் நம்மை சோதிட சாம்ராட் என்று புகழ்வார். பலிக்காதவர்
ReplyDeleteஇகழ்வார். கீதை சொல்லும் நீதியை மனதில் வாங்கிக்கொண்டு புகழ்ச்சி இகழ்ச்சி இரண்டையும் சமபாவத்துடன் காண வேண்டியதுதான்.
நல்ல கலகலப்புடன் சென்று கொண்டிருக்கிறது கேள்வி-பதில் பதிவுகள்! சிறுபிள்ளைத்தனமா கேள்வியானாலும் வாத்தியார் அதை நாசுக்காக கையாளும் பாங்கு மனதை கவருகிறது!
ReplyDeleteSP.VR. SUBBAIYA said...! Total debilitation
ReplyDeletebhuvanar said.. Double Failure)...
தெளிவாக்கிய வாத்தியாருக்கும், புவனருக்கும் நன்றிகள்.
இன்னுமொரு துனைக்கேள்வி கிளம்புகிறது, அவ்வாறு நீசமான கிரகம் அவரின் காரகத்தை இழப்பதோடு குடியேரிய வீட்டிற்கு அவரால் செய்யப்பட வேண்டிய நல்லது அல்லது கெட்டது தடை படுமா.
உதாரனமாக சனி ஐந்தில் இருந்தால் புத்ர கிலேசம். அதுவே சனி ஐந்தில் இருந்து நீசமானால் கிலேசம் நீங்கி சந்தோஷம் கொடுக்குமா
sundari said...ஹி ஹி வாத்தியார் என்ன சொல்லறாரோ அதையே வச்சிகொங்க நான் கடைசி பெஞ்சு....
ReplyDeleteநன்றி சுந்தரி, நாமெல்லாம் கற்றுக்கொள்ளத்தான் வந்துள்ள்ளோம், சரியோ ,தவறோ பகிர்ந்துக்கொள்வதால் பிழையேதும் ஆகிவிடாது.
சுந்தரி என் மின்னஞ்சல் முகவரி
ReplyDeletethemozhi at yahoo dot com
உங்கள் profileஇல் மின்னஞ்சல் முகவரி கிடைக்காததால் கடிதம் எழுத முடியவில்லை
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteசென்று கொண்டுருக்கிறது மீள் பகுதி மிகவும் விருவ்ருப்பாய்
என்னையும் சீடனாக ஏற்றுக்கொண்டதற்கு மிகவும் நன்றி
வணக்கம்
வணக்கம் அய்யா. அடிப்படை பாடங்கள் வரிசையில் நீங்கள் ஒவொவரு வீட்டுக்கு அதற்குரிய மூன்று விதமான பலன்களை ஒரு அட்டவணை போல் தந்து இருப்பீர்கள்.
ReplyDeleteஅதுபோல் ஒவ்வொரு கிரகத்திரும் , அதன் பலன்களை அட்டவணையில் இருந்தால் எங்களுக்கு தாருங்களேன். அடுத்து ஒரு கேள்வி எனக்கு , ஐப்பசி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் நீசம் (துலாமில்) ஆகத்தான் இருப்பார். அதுபோல் சனி பெயர்ச்சி ஆகும்போது , இரண்டரை வருடங்கள் (தற்பொழுது) அவர் உச்சத்தில் தானே இருப்பார். அப்போ இந்த time frame- ல் பிறந்த அனைவருக்கும் சனி உச்சம் தான். அப்போ உலகத்து குழங்களுகெலாம் ஏதோ ஒன்று ஒரே மாதிரி இருக்கும் தானே. அதுதான் அனைவருக்கும் ஒரே ரத்தம் நிறம் என்று commaanlity சொல்வார்களோ?
thanusu said...
ReplyDeleteஉதாரனமாக சனி ஐந்தில் இருந்தால் புத்ர கிலேசம். அதுவே சனி ஐந்தில் இருந்து நீசமானால் கிலேசம் நீங்கி சந்தோஷம் கொடுக்குமா/////
சணி பகவன் ஐந்தில் இருந்தால் புத்ர தோஷம், அதுவே சனி ஐந்தில் இருந்து நீசமானால் மிகப்பெரிய தோஷம்!!!
மேலும் ஐந்தாம் அதிபதி, புத்திர காரகன் குரு பகவன், ஐந்தாம் வீட்டீன் பரல்கள், குரு பகவன் அமர்ந்த வீட்டீன் பரல்கள் அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்...
கலையரசிsaid...
ReplyDeleteவணக்கம் அய்யா. அடிப்படை பாடங்கள் வரிசையில் நீங்கள் ஒவொவரு வீட்டுக்கு அதற்குரிய மூன்று விதமான பலன்களை ஒரு அட்டவணை போல் தந்து இருப்பீர்கள்.
அதுபோல் ஒவ்வொரு கிரகத்திரும் , அதன் பலன்களை அட்டவணையில் இருந்தால் எங்களுக்கு தாருங்களேன். அடுத்து ஒரு கேள்வி எனக்கு , ஐப்பசி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் நீசம் (துலாமில்) ஆகத்தான் இருப்பார். அதுபோல் சனி பெயர்ச்சி ஆகும்போது , இரண்டரை வருடங்கள் (தற்பொழுது) அவர் உச்சத்தில் தானே இருப்பார். அப்போ இந்த time frame- ல் பிறந்த அனைவருக்கும் சனி உச்சம் தான். அப்போ உலகத்து குழங்களுகெலாம் ஏதோ ஒன்று ஒரே மாதிரி இருக்கும் தானே. அதுதான் அனைவருக்கும் ஒரே ரத்தம் நிறம் என்று commaanlity சொல்வார்களோ?////
நான் எனது நண்பர்கள் இடம் கூறவது உண்டு...1984 ஆண்டு பிறந்தவர்கள் அனைவரும் நிச்சயமாக வாழ்வில் ஒரு நல்ல நிலைமைக்கு வருவார்கள் என்று... 1984 ஆண்டு பஞ்சங்கப்படி குரு பகவன் தனசு ராசியில் ஆச்சி, சணி துலா ராசியில் உச்சம், கேது பகவன் விருச்சிக ராசியில் உச்சம் (3 வருட கோள்கள்) நல்ல நிலைமையில், மற்றும் பலரது ஜாதகத்தில் மாத கோள்களும் நல்ல நிலைமையில் இருப்பார்கள்...இது சரியா என்று வாத்தியார் தான் கூற வேண்டும்...
Pandian said... 1984 ஆண்டு பஞ்சங்கப்படி குரு பகவன் தனசு ராசியில் ஆச்சி, சணி துலா ராசியில் உச்சம், கேது பகவன் விருச்சிக ராசியில் உச்சம் (3 வருட கோள்கள்) நல்ல நிலைமையில், மற்றும் பலரது ஜாதகத்தில் மாத கோள்களும் நல்ல நிலைமையில் இருப்பார்கள்...இது சரியா என்று வாத்தியார் தான் கூற வேண்டும்...
ReplyDeleteபிறந்த நேரம், லக்கினம் முக்கியமில்லையா பாண்டியன்? கடக லக்கினத்தில் பிறந்தால் நான்கில் சனி, ஐந்தில் கேது (ஆண்டி? அரசன்?), ஆறில் குரு மறைவில் இருக்குமே. இந்த இடங்களில் ஆட்சியோ, உச்சமோ எப்படி உதவப் போகிறது தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்......
தேமொழிsaid...
ReplyDeleteபிறந்த நேரம், லக்கினம் முக்கியமில்லையா பாண்டியன்? கடக லக்கினத்தில் பிறந்தால் நான்கில் சனி, ஐந்தில் கேது (ஆண்டி? அரசன்?), ஆறில் குரு மறைவில் இருக்குமே. இந்த இடங்களில் ஆட்சியோ, உச்சமோ எப்படி உதவப் போகிறது தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்......///
ஆயள், தொழில், கர்ம காரகன் சனி உச்சம்...
புத்தி, புத்திர, தண காரகன் தேவ குரு ஆச்சி...
இவர்கள் இருவரும் அதி முக்கியமானவர்கள்... மேலும் கேது பகவான் அவர்களும் நல்ல நிலைமையில்...
மேலும் ஒரு ஜாதகத்தில் நீசமான கிரகம் நன்மை செய்யாது...ஆச்சி உச்சம் பெற்ற கிரகம் நிச்சயமாக தீமை செய்யாது,சுய வர்க்க பரல்கள் குறைவாக இருந்தாலும் கூட...
மேலும் எனது நண்பர்கள் அனைவரும் 1983 அல்லது 1984 பிறந்தவர்கள்., அவர்கள் ஜாதகத்தை பார்க்கும் பொது எதாவது நல்லது சொல்ல வேண்டாமா அக்கா ?...
நீங்களே சொல்லுங்கள்...
பிறந்த நேரம், லக்கினம் முக்கியமில்லையா பாண்டியன்? கடக லக்கினத்தில் பிறந்தால் நான்கில் சனி, ஐந்தில் கேது (ஆண்டி? அரசன்?), ஆறில் குரு மறைவில் இருக்குமே. இந்த இடங்களில் ஆட்சியோ, உச்சமோ எப்படி உதவப் போகிறது தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்......////
ReplyDeleteபொதுவாக சணி நான்கில் இருந்தால் சுகக்கேடு உடைய ஜாதகம்...அனால் சணி உச்சம் பெற்றதால் விதி விளக்கு...
ஐந்தில் கேது உச்சம் பெற்றதால் நல்ல ganam உள்ள குழந்தைகள் பிறப்பார்கள்...
ஆறாமிடத்தில் குரு மறைந்தாலும், ஆச்சி மற்றும் மூல திரிகோண பலத்தால் மற்றும் ஒன்பதமிடம் அதிபதியால் நல்லதே நடக்கும்...
Pandian said...சணி பகவன் ஐந்தில் இருந்தால் புத்ர தோஷம், அதுவே சனி ஐந்தில் இருந்து நீசமானால் மிகப்பெரிய தோஷம்!!!
ReplyDeleteதெளிவாக்கிய பாண்டியன் அவர்களுக்கு நன்றிகள்.
பாண்டியன், ஆனந்த், ஜகன்னாத், ஆகியோரின் பின்னூட்டங்களால் வகுப்பறை களை கட்டியுள்ளது.
கலையரசி இட்ட பின்னூட்டத்தால் இப்போது மீண்டும் ஒரு கேள்வி வருகிறது .சனி மேஷத்தில் நீசமாக-சூரியன் துலாத்தில் நீசமாக ,இருவரும் ஒருவரை ஒருவர் நேரடி பார்வையில் பார்ப்பதால் நீசனை நீசன் பார்ப்பதால் அதனை எப்படி எடுத்துக் கொள்வது.
சனியும் சூரியனும் ஆகாத கிரகங்கள் , நீசமானாலே காரகம் அடிபட்டுவிடும் . இருவரும் நீசமாகி நேரடி பார்வையில் இருந்தால் எப்படி எடுத்துக் கொள்வது.
thanusu said...
ReplyDeleteசனியும் சூரியனும் ஆகாத கிரகங்கள் , நீசமானாலே காரகம் அடிபட்டுவிடும் . இருவரும் நீசமாகி நேரடி பார்வையில் இருந்தால் எப்படி எடுத்துக் கொள்வது./////
பிரபல பாலஜோதிடம் ஆசிரியர் 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் - அவர்களின் கூற்றுப்படி உச்சனை உச்சன் பார்த்தல் அரசனாலும் ஆண்டி ஆவான் என்கிறார்...
ஒரு நீசனை நீசன் பார்த்தால் ராஜயோகம் என்கிறார்...
இதில் எனக்கு உடன்பாடு இல்லை மற்றும் இது போன்ற கருத்தை நான் வேறு எங்கும் படித்ததும் இல்லை...
வாத்தியார் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்...
பிரபல பாலஜோதிடம் ஆசிரியர் 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் - அவர்களின் கூற்றுப்படி உச்சனை உச்சன் பார்த்தல் அரசனாலும் ஆண்டி ஆவான் என்கிறார்...
ReplyDeleteஒரு நீசனை நீசன் பார்த்தால் ராஜயோகம் என்கிறார்...//
உச்சனை உச்சன் பார்த்தால் நல்லதல்ல என்பது பி.வி.ராமன் அவர்களும் சொன்னதுதான். நீசன் நீசனை பார்த்தால் என்ன பலன் என்று கண்டுபிடிக்க முயல்கிறேன். பொதுவாகவே கிரக பார்வைகள் பற்றிய குறிப்புகள் குறைவாகவே கிடைக்கின்றன.
கேள்வி பதில் பதிவும், பின்னூட்டங்களும் ஒன்றை ஒன்று மிஞ்சும் படி உள்ளன.
ReplyDeleteகுரூப் டிஸ்கஷன் போல் இருக்கிறது. எல்லோருடைய பின்னூட்டங்களையும் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். திரு. ஆனந்த், திரு. பாண்டியன், திரு. ஜகந்நாத் ஆகியோர் தரும் அற்புதமான மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. நல்ல பதிவைத் தந்த வாத்தியாருக்கும் நன்றி.
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteசந்தேகம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்;அவ்வளவு சந்தேகம் வரக்கூடிய ஒரு சப்ஜெக்ட்தான் ஜோதிடம். ஏதோ ஒரு நிலையில்,
இருப்பவற்றிலிருந்து நமக்கு என்று சில வழிமுறைகளை(மெதடாலஜி) உள் வாங்கிக்கொண்டு தெரிந்த அளவு பலன் சொல்ல வேண்டியுள்ளது.
பலிப்பவருக்குப் பலிக்கும். இல்லா விட்டால் இல்லை. பலித்தவர் நம்மை சோதிட சாம்ராட் என்று புகழ்வார். பலிக்காதவர்
இகழ்வார். கீதை சொல்லும் நீதியை மனதில் வாங்கிக்கொண்டு புகழ்ச்சி இகழ்ச்சி இரண்டையும் சமபாவத்துடன் காண வேண்டியதுதான்.////
தசாபுத்திகள் ஜோதிடருக்கும் மட்டும் விதிவிலக்கா என்ன? நல்ல தசாபுத்திகள் (அவருக்கு) நடந்தால் மட்டுமே அவர் சொல்வது பலிதமாகும். நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteநல்ல கலகலப்புடன் சென்று கொண்டிருக்கிறது கேள்வி-பதில் பதிவுகள்! சிறுபிள்ளைத்தனமா கேள்வியானாலும் வாத்தியார் அதை நாசுக்காக
கையாளும் பாங்கு மனதை கவருகிறது!////
வகுப்பறையில் பல லெவல்களில் ஜோதிட ஆர்வம்/ஞானம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அனைவரையும் சரிசெய்துகொண்டுபோக வேண்டிய
கட்டாயம் வாத்தியாருக்கு உள்ளது.உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger thanusu said...
ReplyDeleteSP.VR. SUBBAIYA said...! Total debilitation
bhuvanar said.. Double Failure)...
தெளிவாக்கிய வாத்தியாருக்கும், புவனருக்கும் நன்றிகள்.
இன்னுமொரு துனைக்கேள்வி கிளம்புகிறது, அவ்வாறு நீசமான கிரகம் அவரின் காரகத்தை இழப்பதோடு குடியேரிய வீட்டிற்கு அவரால் செய்யப்பட வேண்டிய நல்லது அல்லது கெட்டது தடைப் படுமா.
உதாரனமாக சனி ஐந்தில் இருந்தால் புத்ர கிலேசம். அதுவே சனி ஐந்தில் இருந்து நீசமானால் கிலேசம் நீங்கி சந்தோஷம் கொடுக்குமா////
நீசமானாலும் 5ல் அமர்ந்த பலனை அவர் கொடுக்காமல் இருக்கமாட்டார்! கையில் கத்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வில்லன் வில்லன்தான்!
////Blogger thanusu said...
ReplyDeletesundari said...ஹி ஹி வாத்தியார் என்ன சொல்லறாரோ அதையே வச்சிகொங்க நான் கடைசி பெஞ்சு....
நன்றி சுந்தரி, நாமெல்லாம் கற்றுக்கொள்ளத்தான் வந்துள்ள்ளோம், சரியோ ,தவறோ பகிர்ந்துக்கொள்வதால் பிழையேதும் ஆகிவிடாது.////
நஷ்டமும் ஆகிவிடாது!
///Blogger தேமொழி said...
ReplyDeleteசுந்தரி என் மின்னஞ்சல் முகவரி
themozhi at yahoo dot com
உங்கள் profileஇல் மின்னஞ்சல் முகவரி கிடைக்காததால் கடிதம் எழுத முடியவில்லை////
பொதுவாகப் பெண் பதிவர்கள் profileல் தங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுப்பதில்லை!
/////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
சென்று கொண்டுருக்கிறது மீள் பகுதி மிகவும் விருவ்ருப்பாய்
என்னையும் சீடனாக ஏற்றுக்கொண்டதற்கு மிகவும் நன்றி
வணக்கம்////
உதயம் இன்றி ஏது உலகு? உங்கள் பெயருக்காக விருப்பமுடன் சேர்த்துக்கொண்டுள்ளேன்!
/////Blogger கலையரசி said...
ReplyDeleteவணக்கம் அய்யா. அடிப்படை பாடங்கள் வரிசையில் நீங்கள் ஒவொவரு வீட்டுக்கு அதற்குரிய மூன்று விதமான பலன்களை ஒரு அட்டவணை
போல் தந்து இருப்பீர்கள்.
அதுபோல் ஒவ்வொரு கிரகத்திரும் , அதன் பலன்களை அட்டவணையில் இருந்தால் எங்களுக்கு தாருங்களேன். அடுத்து ஒரு கேள்வி எனக்கு ,
ஐப்பசி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் நீசம் (துலாமில்) ஆகத்தான் இருப்பார். அதுபோல் சனி பெயர்ச்சி ஆகும்போது , இரண்டரை வருடங்கள்
(தற்பொழுது) அவர் உச்சத்தில் தானே இருப்பார். அப்போ இந்த time frame- ல் பிறந்த அனைவருக்கும் சனி உச்சம் தான்./////
கரெக்ட். அதுபோல காலசர்ப்ப தோஷமும், ஒரு கிரகம் வெள்யே வரும் வரை அக்காலகட்டத்தில் பிறக்கும் அனைவருக்கும் இருக்கும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////அப்போ உலகத்து குழங்களுகெலாம் ஏதோ ஒன்று ஒரே மாதிரி இருக்கும் தானே. அதுதான் அனைவருக்கும் ஒரே ரத்தம் நிறம் என்று commaanlity சொல்வார்களோ?////
என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியும்படி சொல்லுங்கள் சகோதரி!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////Blogger Pandian said...
ReplyDeletethanusu said...
உதாரனமாக சனி ஐந்தில் இருந்தால் புத்ர கிலேசம். அதுவே சனி ஐந்தில் இருந்து நீசமானால் கிலேசம் நீங்கி சந்தோஷம் கொடுக்குமா/////
சணி பகவன் ஐந்தில் இருந்தால் புத்ர தோஷம், அதுவே சனி ஐந்தில் இருந்து நீசமானால் மிகப்பெரிய தோஷம்!!!
மேலும் ஐந்தாம் அதிபதி, புத்திர காரகன் குரு பகவான், ஐந்தாம் வீட்டீன் பரல்கள், குரு பகவன் அமர்ந்த வீட்டீன் பரல்கள் அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.../////
அதை விளக்கி முன்பே ஒரு பாடம் எழுதியுள்ளேன்!
////Blogger Pandian said...
ReplyDeleteகலையரசிsaid...
வணக்கம் அய்யா. அடிப்படை பாடங்கள் வரிசையில் நீங்கள் ஒவொவரு வீட்டுக்கு அதற்குரிய மூன்று விதமான பலன்களை ஒரு அட்டவணை போல் தந்து இருப்பீர்கள்.
அதுபோல் ஒவ்வொரு கிரகத்திரும் , அதன் பலன்களை அட்டவணையில் இருந்தால் எங்களுக்கு தாருங்களேன். அடுத்து ஒரு கேள்வி எனக்கு , ஐப்பசி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் நீசம் (துலாமில்) ஆகத்தான் இருப்பார். அதுபோல் சனி பெயர்ச்சி ஆகும்போது , இரண்டரை வருடங்கள்
(தற்பொழுது) அவர் உச்சத்தில் தானே இருப்பார். அப்போ இந்த time frame- ல் பிறந்த அனைவருக்கும் சனி உச்சம் தான். அப்போ உலகத்து
குழங்களுகெலாம் ஏதோ ஒன்று ஒரே மாதிரி இருக்கும் தானே. அதுதான் அனைவருக்கும் ஒரே ரத்தம் நிறம் என்று commaanlity
சொல்வார்களோ?////
நான் எனது நண்பர்கள் இடம் கூறவது உண்டு...1984 ஆண்டு பிறந்தவர்கள் அனைவரும் நிச்சயமாக வாழ்வில் ஒரு நல்ல நிலைமைக்கு வருவார்கள் என்று... 1984 ஆண்டு பஞ்சங்கப்படி குரு பகவன் தனசு ராசியில் ஆட்சி, சனி துலா ராசியில் உச்சம், கேது பகவன் விருச்சிக ராசியில் உச்சம் (3 வருட கோள்கள்) நல்ல நிலைமையில், மற்றும் பலரது ஜாதகத்தில் மாத கோள்களும் நல்ல நிலைமையில் இருப்பார்கள்...இது
சரியா என்று வாத்தியார் தான் கூற வேண்டும்...////
ஒரு ஆண்டுக்கு அந்த 3 கிரகங்களின் நிலைமையிலும் ஒரு ஏற்றம் இருந்தாலும், லக்கினம் விழுகும் இடத்தை வைத்துப் பலன்கள் மாறுபடும்.
அதுபோல நவாம்சத்தை வைத்தும் பலன்கள் மாறுபடும்! மற்ற கோள்கள் ப்ள்ஸ் மாந்தியை வைத்தும் பலன்கள் மாறுபடும்!
////Blogger தேமொழி said...
ReplyDeletePandian said... 1984 ஆண்டு பஞ்சங்கப்படி குரு பகவன் தனசு ராசியில் ஆச்சி, சணி துலா ராசியில் உச்சம், கேது பகவன் விருச்சிக
ராசியில் உச்சம் (3 வருட கோள்கள்) நல்ல நிலைமையில், மற்றும் பலரது ஜாதகத்தில் மாத கோள்களும் நல்ல நிலைமையில் இருப்பார்கள்...இது
சரியா என்று வாத்தியார் தான் கூற வேண்டும்...
பிறந்த நேரம், லக்கினம் முக்கியமில்லையா பாண்டியன்? கடக லக்கினத்தில் பிறந்தால் நான்கில் சனி, ஐந்தில் கேது (ஆண்டி? அரசன்?), ஆறில் குரு மறைவில் இருக்குமே. இந்த இடங்களில் ஆட்சியோ, உச்சமோ எப்படி உதவப் போகிறது தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்......////
உங்கள் சந்தேகம் சரிதான். ஒரு ஆண்டுக்கு அந்த 3 கிரகங்களின் நிலைமையிலும் ஒரு ஏற்றம் இருந்தாலும், லக்கினம் விழுகும் இடத்தை வைத்துப் பலன்கள் மாறுபடும். அதுபோல நவாம்சத்தை வைத்தும் பலன்கள் மாறுபடும்! மற்ற கோள்கள் ப்ள்ஸ் மாந்தியை வைத்தும் பலன்கள் மாறுபடும்!
/////Blogger Pandian said...
ReplyDeleteதேமொழிsaid...
பிறந்த நேரம், லக்கினம் முக்கியமில்லையா பாண்டியன்? கடக லக்கினத்தில் பிறந்தால் நான்கில் சனி, ஐந்தில் கேது (ஆண்டி? அரசன்?), ஆறில் குரு மறைவில் இருக்குமே. இந்த இடங்களில் ஆட்சியோ, உச்சமோ எப்படி உதவப் போகிறது தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்......///
ஆயள், தொழில், கர்ம காரகன் சனி உச்சம்...
புத்தி, புத்திர, தண காரகன் தேவ குரு ஆட்சி...
இவர்கள் இருவரும் அதி முக்கியமானவர்கள்... மேலும் கேது பகவான் அவர்களும் நல்ல நிலைமையில்...
மேலும் ஒரு ஜாதகத்தில் நீசமான கிரகம் நன்மை செய்யாது...ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் நிச்சயமாக தீமை செய்யாது,சுய வர்க்க பரல்கள்
குறைவாக இருந்தாலும் கூட... மேலும் எனது நண்பர்கள் அனைவரும் 1983 அல்லது 1984 பிறந்தவர்கள்., அவர்கள் ஜாதகத்தை பார்க்கும் பொது எதாவது நல்லது சொல்ல வேண்டாமா அக்கா ?...
நீங்களே சொல்லுங்கள்../////
ஆகா சொல்லலாம். தவறில்லை. அப்படியே மாந்தியையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டு பலன் சொல்லுங்கள்!
////Blogger Pandian said...
ReplyDeleteபிறந்த நேரம், லக்கினம் முக்கியமில்லையா பாண்டியன்? கடக லக்கினத்தில் பிறந்தால் நான்கில் சனி, ஐந்தில் கேது (ஆண்டி? அரசன்?), ஆறில் குரு மறைவில் இருக்குமே. இந்த இடங்களில் ஆட்சியோ, உச்சமோ எப்படி உதவப் போகிறது தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்......////
பொதுவாக சனி நான்கில் இருந்தால் சுகக்கேடு உடைய ஜாதகம்...அனால் சனி உச்சம் பெற்றதால் விதி விலக்கு...
ஐந்தில் கேது உச்சம் பெற்றதால் நல்ல ganam உள்ள குழந்தைகள் பிறப்பார்கள்...
ஆறாமிடத்தில் குரு மறைந்தாலும், ஆட்சி மற்றும் மூல திரிகோண பலத்தால் மற்றும் ஒன்பதமிடம் அதிபதியால் நல்லதே நடக்கும்.../////
எல்லோருக்கும் 337 பரல்கள்தான். அவ்வாறு பார்க்கும் ஜாதகங்களில் லோடாகியிருக்கும் தீமைகளையும் கொஞ்சம் பாருங்கள்!
/////Blogger thanusu said...
ReplyDeletePandian said...சணி பகவன் ஐந்தில் இருந்தால் புத்ர தோஷம், அதுவே சனி ஐந்தில் இருந்து நீசமானால் மிகப்பெரிய தோஷம்!!!
தெளிவாக்கிய பாண்டியன் அவர்களுக்கு நன்றிகள்.
பாண்டியன், ஆனந்த், ஜகன்னாத், ஆகியோரின் பின்னூட்டங்களால் வகுப்பறை களை கட்டியுள்ளது.
கலையரசி இட்ட பின்னூட்டத்தால் இப்போது மீண்டும் ஒரு கேள்வி வருகிறது .சனி மேஷத்தில் நீசமாக-சூரியன் துலாத்தில் நீசமாக ,இருவரும்
ஒருவரை ஒருவர் நேரடி பார்வையில் பார்ப்பதால் நீசனை நீசன் பார்ப்பதால் அதனை எப்படி எடுத்துக் கொள்வது.
சனியும் சூரியனும் ஆகாத கிரகங்கள் , நீசமானாலே காரகம் அடிபட்டுவிடும் . இருவரும் நீசமாகி நேரடி பார்வையில் இருந்தால் எப்படி எடுத்துக்
கொள்வது./////
நீசனை நீசன் பார்த்தாலும் பிரயோஜனமில்லை. பஸ்ஸில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் ஒருவன், தன்னைப்போலவே டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் மற்றொருவனுக்கு என்ன உதவி செய்துவிட முடியும்?
/////Blogger Pandian said...
ReplyDeletethanusu said...
சனியும் சூரியனும் ஆகாத கிரகங்கள் , நீசமானாலே காரகம் அடிபட்டுவிடும் . இருவரும் நீசமாகி நேரடி பார்வையில் இருந்தால் எப்படி எடுத்துக் கொள்வது./////
பிரபல பாலஜோதிடம் ஆசிரியர் 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் - அவர்களின் கூற்றுப்படி உச்சனை உச்சன் பார்த்தல் அரசனாலும் ஆண்டி
ஆவான் என்கிறார்...
ஒரு நீசனை நீசன் பார்த்தால் ராஜயோகம் என்கிறார்...
இதில் எனக்கு உடன்பாடு இல்லை மற்றும் இது போன்ற கருத்தை நான் வேறு எங்கும் படித்ததும் இல்லை...
வாத்தியார் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்...////
நீசமாகிவிட்ட கிரகங்களால் தொல்லைகள் மட்டுமே உண்டு. உதாரணத்திற்கு ஏழாம் அதிபதி அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால், திரும்ண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது!
/////Blogger Jagannath said...
ReplyDeleteபிரபல பாலஜோதிடம் ஆசிரியர் 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் - அவர்களின் கூற்றுப்படி உச்சனை உச்சன் பார்த்தல் அரசனாலும் ஆண்டி
ஆவான் என்கிறார்...
ஒரு நீசனை நீசன் பார்த்தால் ராஜயோகம் என்கிறார்...//
உச்சனை உச்சன் பார்த்தால் நல்லதல்ல என்பது பி.வி.ராமன் அவர்களும் சொன்னதுதான். நீசன் நீசனை பார்த்தால் என்ன பலன் என்று கண்டுபிடிக்க முயல்கிறேன். பொதுவாகவே கிரக பார்வைகள் பற்றிய குறிப்புகள் குறைவாகவே கிடைக்கின்றன./////
நீசனை நீசன் பார்த்தாலும் பிரயோஜனமில்லை. பஸ்ஸில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் ஒருவன், தன்னைப்போலவே டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் மற்றொருவனுக்கு என்ன உதவி செய்துவிட முடியும்?
/////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteகேள்வி பதில் பதிவும், பின்னூட்டங்களும் ஒன்றை ஒன்று மிஞ்சும்படி உள்ளன.
குரூப் டிஸ்கஷன் போல் இருக்கிறது. எல்லோருடைய பின்னூட்டங்களையும் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். திரு. ஆனந்த், திரு. பாண்டியன், திரு. ஜகந்நாத் ஆகியோர் தரும் அற்புதமான மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. நல்ல பதிவைத் தந்த வாத்தியாருக்கும் நன்றி.////
உங்களுக்குப் பயன்படும் விதத்தில், மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் பதிவுகளும், பின்னூட்டங்களும் அமைந்தால், எழுதும் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்! உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி சகோதரி!
அய்யா,
ReplyDeleteதங்களின் கேள்வி பதில் பகுதி மிகவும் தெளிவான விளக்கங்களுடன் ,எங்களின் பல சந்தேகங்களுக்கு விடைகளாக அமைந்து எஙகளின் குழப்பத்தையும் தெளிவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
1984 வருடம் பிறந்த குழந்தைகளுக்கு சனி ,கேது உச்சமாக இருந்தாலும், சுக்ரன் வீட்டில்
இருக்கும் ராகு நீசமாகி விடுகிறது, அந்த இடம் கும்ப லக்னக்காரர்களின் நான்காமிடம் என்பதால், சமீபத்தில் என் மகன் பெயரில் வீடு வாங்கும் முயற்ச்சி கடைசி சில காரணங்களால்
தடை பட்டு விட்டது. (ஆனால் இதே நான்காமிடம் தான் கல்விக்கும் ஆகும், ஆனால் குரு ஆட்சி என்பதால் மேல் படிப்பிற்க்கு கனடா செல்ல முடிந்தது.)
மறுபடி என் மகனுக்கு வீடு வாங்க முடியுமா? 3,10 க்கு வுடைய செவ்வாய் 9 ல் சனி, சந்ரனுடன் இருக்கிறது. இந்த சேர்க்கைக்கு, சச யோகமும், சசி மங்கள யோகம்,இரண்டும்
இருக்கிறதா?
////Blogger santhanakuzhali said...
ReplyDeleteஅய்யா,
தங்களின் கேள்வி பதில் பகுதி மிகவும் தெளிவான விளக்கங்களுடன் ,எங்களின் பல சந்தேகங்களுக்கு விடைகளாக அமைந்து எஙகளின் குழப்பத்தையும் தெளிவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
1984 வருடம் பிறந்த குழந்தைகளுக்கு சனி ,கேது உச்சமாக இருந்தாலும், சுக்ரன் வீட்டில்
இருக்கும் ராகு நீசமாகி விடுகிறது, அந்த இடம் கும்ப லக்னக்காரர்களின் நான்காமிடம் என்பதால், சமீபத்தில் என் மகன் பெயரில் வீடு வாங்கும் முயற்ச்சி கடைசி சில காரணங்களால்
தடை பட்டு விட்டது. (ஆனால் இதே நான்காமிடம் தான் கல்விக்கும் ஆகும், ஆனால் குரு ஆட்சி என்பதால் மேல் படிப்பிற்க்கு கனடா செல்ல முடிந்தது.)
மறுபடி என் மகனுக்கு வீடு வாங்க முடியுமா? 3,10 க்கு வுடைய செவ்வாய் 9 ல் சனி, சந்திரனுடன் இருக்கிறது. இந்த சேர்க்கைக்கு, சச யோகமும், சசி மங்கள யோகம்,இரண்டும் இருக்கிறதா?////
சனியின் குறுக்கீடு இல்லாத யோகம்தான் முழுமையான யோகம்!
நான்காம் இடத்து நாதனின் தசா புத்திகளில் அந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். பழநிஅப்பனைப் பிரார்த்தனை செய்யுங்கள்!
ஐயா...இன்றைய பதில்களில் எல்லோரும் முதல் பென்ச் மாணவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்ததால் உங்கள் பொறுமையும் 300 பாடங்கள் நடத்தியும் இப்படியும் சந்தேகங்கள் எழுமா என்ற உங்கள் ஆதங்கமும் பளிச்சிட்டன...
ReplyDeleteவணக்கம் வாத்தியரே
ReplyDeleteஎனக்கு ராசியில் கடக லக்னம் 4ல் செவ்வாய்+கேது, 5ல் சுக்கிரன்+புதன்+சனி, 6ல் சூரியன், 7ல் குரு நீசத்தில், 10ல் சந்திரன்+ராகு.
அம்சத்தில், கன்னி லக்னம் துலாமில் (2ல்) சனி, 3ல் விருச்சகத்தில் புதன், 5ல் மகரத்தில் செவ்வாய்+கேது, 7ல் மீனத்தில் சுக்கிரன், 9ல் ரிஷபத்தில் சந்திரன்+சூரியன், 11ல் கடகத்தில் குரு+ராகு,
அன்புள்ள வாத்தியரே, எனக்கு நிச்ச பங்க ராஜயோகம் இருக்கிறதா?, எனக்கு அம்சத்தில் உச்சனை உச்சன் பார்க்கிறது இதனால் என்ன பலன் கிடைக்கும் ?
எனக்கு வயது 30 ஆகிறது என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?, கல்யாணம் எப்ப நடக்கும் ?. நன்றி ஐயா.