மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.2.11

கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் எத்தனை?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் எத்தனை?

கவியரசர் கண்ணதாசனின் சுட்டிக் காட்டிய வாழ்க்கைத் தத்துவங்கள் அவரது பாடல்களில் அசத்தலாக வெளிப்படும். சில பாடல்களில் நாம் உருகிப்போவோம். மயங்கிப்போவோம். நெகிழ்ந்துபோவோம்.

அப்படி எத்தனை பாடல்கள் உள்ளன?

அதாவது தத்துவப் பாடல்களை நான் சொல்கிறேன்.

எனது குறிப்புக்களில் சுமார் 106 உள்ளன. அவற்றை ஒழுங்கு செய்து ஒரு பட்டியல் தயார் செய்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். நான் மிகவும் மதிக்கும் நபர் அவர்.

மிகுந்த சிரமங்களுக்கிடையே அவற்றைத் தயார் செய்தேன். பட்டியலை முழுதுமாகப் பார்த்தால் உங்களுக்கே அது தெரியவரும்.

இதைப் போல அவர் எழுதிய பக்திப் பாடல்களையும், காதல் பாடல்களையும் தயார் செய்ய உள்ளேன். காதல் பாடல்கள் என்றால் பதிவிற்கு வரும் மூத்த மாணவர்கள் முகத்தைச் சுழிக்க வேண்டாம். அவருடைய காதல் பாடல்களும் நயம் மிக்கதாகவும், ஆபாசம் இல்லாததாகவும் இருக்கும்

தொடர்ந்து அவற்றின் ஒலி வடிவமும், வரி வடிவமும் வரவுள்ளது.

உங்களுக்கும் பயன் படட்டும் என்று அந்தப் பட்டியலை இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்து மகிழுங்கள். பயன் பெறுங்கள்.

அத்துடன் இந்தப் பட்டியலில் நீங்கள் விரும்பும்  Top Ten எது என்று எழுதுங்கள். மின்னஞ்சலில் எழுதுங்கள். செல்போன் வைத்திருப்பவர்கள் அதில் சேமித்து வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். அத்துடன் இந்தப் பட்டியலில் ஏதாவது பாடல் விடுபட்டிருந்தால் அதையும் எழுதுங்கள்

முதல் பட்டியலில் பாடல்கள் அவைகள் வெளிவந்த ஆண்டுகளின் வரிசைப்படியும், இரண்டாவது பட்டியலில், அவைகள் அகர வரிசைப் படியும் இருக்கும்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 பட்டியல் ஒன்று
 
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
மகாதேவி  1957   எம்.ஜி.ஆர், சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தை பிறந்தால் வழி பிறக்கும்  1958   எஸ்.எஸ்.ஆர்
பாடலின் துவக்க வரி:
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஒரே வழி  1959   பிரேம் நசீர், எம்.என்.ராஜம்
பாடலின் துவக்க வரி:
பிறந்து வந்த்தும் ஒரே வழி நாம் பிரிந்து போவதும் ஒரே வழி
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
கவலை இல்லாத மனிதன்  1960   சந்திர பாபு
பாடலின் துவக்க வரி:
பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும்போதும் அழுகின்றான்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
களத்தூர் கண்ணம்மா  1960   ஜெமினி, சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான் சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
படிக்காத மேதை  1960   சிவாஜி, செள்கார் ஜானகி
பாடலின் துவக்க வரி:
ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும் அன்பும் பண்பும் எல்லையடி
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
படிக்காத மேதை  1960   சிவாஜி, செள்கார் ஜானகி
பாடலின் துவக்க வரி:
உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
படிக்காத மேதை  1960   சிவாஜி, செள்கார் ஜானகி
பாடலின் துவக்க வரி:
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
மன்னாதி மன்ன்ன்  1960   எம்.ஜி.ஆர், பத்மினி
பாடலின் துவக்க வரி:
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தாய் சொல்லைத் தட்டாதே  1961   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
நெஞ்சில் ஓர் ஆலயம்  1961   முத்துராமன், தேவிகா, கல்யாண்குமார்
பாடலின் துவக்க வரி:
ஒன்றையே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
நெஞ்சில் ஓர் ஆலயம்  1961   முத்துராமன், தேவிகா, கல்யாண்குமார்
பாடலின் துவக்க வரி:
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பனித்திரை  1961   ஜெமினி, தேவிகா
பாடலின் துவக்க வரி:
ஏதோ மனிதன் பிறந்து விட்டான் ஏனோ மரம்போல் வளர்ந்து விட்டான்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பாக்கிய லட்சுமி  1961   ஜெமினி, செளகார் ஜானகி
பாடலின் துவக்க வரி:
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பாலும் பழமும்  1961   சிவாஜி, சரோஜாதேவி
பாடலின் துவக்க வரி:
போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பாவ மன்னிப்பு  1961   சிவாஜி, தேவிகா, ஜெமினி,சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பாவ மன்னிப்பு  1961   சிவாஜி, தேவிகா, ஜெமினி,சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
வந்தநாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
மணப்பந்தல்  1961   எஸ்.எஸ்.ஆர், சரோஜாதேவி
பாடலின் துவக்க வரி:
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
அன்னை  1962   சநதிர பாபு, பானுமதி
பாடலின் துவக்க வரி:
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஆலயமணி  1962   சிவாஜி
பாடலின் துவக்க வரி:
சட்டி சுட்டதடா கை விட்டதடா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
குடும்பத் தலைவன்  1962   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தாயைக் காத்த தனயன்  1962   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தென்றல் வீசும்  1962   கல்யாண்குமார், கிருஷ்ணகுமாரி
பாடலின் துவக்க வரி:
எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்த்து இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
நிச்சய தாம்பூலம்  1962   சிவாஜி, ஜமுனா
பாடலின் துவக்க வரி:
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
படித்தால் மட்டும் போதுமா  1962   சிவாஜி, சாவித்திரி, ராஜ சுலோசனா
பாடலின் துவக்க வரி:
அண்ணன் காட்டிய வழியம்மா - இது அன்பால் விளைந்த பழியம்மா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
படித்தால் மட்டும் போதுமா  1962   சிவாஜி, சாவித்திரி, ராஜ சுலோசனா
பாடலின் துவக்க வரி:
ஓஹோ ஹோஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
படித்தால் மட்டும் போதுமா  1962   சிவாஜி, சாவித்திரி, ராஜ சுலோசனா
பாடலின் துவக்க வரி:
காலம் செய்த கோமாளித்தனத்தில் உலகம் பொறந்த்து
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
படித்தால் மட்டும் போதுமா  1962   சிவாஜி, சாவித்திரி, ராஜ சுலோசனா
பாடலின் துவக்க வரி:
குரங்கு மரத்திலும் இருக்கும் சிலபேர் மனத்திலும் இருக்கும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பலே பாண்டியா  1962   சிவாஜி, தேவிகா
பாடலின் துவக்க வரி:
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பாசம்  1962   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
உலகம் பிறந்த்து எனக்காக ஓடும் நதிகளூம் எனக்காக
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பாத காணிக்கை  1962   ஜெமினி, அசோகன், சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
வீடுவரை உறவு, வீதி வரை மனைவி
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பார்த்தால் பசி தீரும்  1962   சிவாஜி, சரோஜாதேவி
பாடலின் துவக்க வரி:
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பார்த்தால் ப்சி தீரும்  1962   சிவாஜி, சரோஜாதேவி
பாடலின் துவக்க வரி:
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
மனிதன் மாறவில்லை  1962   ஜெமினி, சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
காலத்தை மாற்றினான் கட்சியை மாற்றினான்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
முத்து மண்டபம்  1962   எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி
பாடலின் துவக்க வரி:
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
வளர்பிறை  1962   சிவாஜி, சரோஜாதேவி
பாடலின் துவக்க வரி:
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டு தெரியாமலே இருப்பான் ஒருவன்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஆன்ந்த ஜோதி  1963   எம்.ஜி.ஆர்
பாடலின் துவக்க வரி:
காலமகள் கண் திறப்பாள் சின்னயா - நாம் கண் கலங்கி கவலைப்பட்டு என்னையா?
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஆன்ந்த ஜோதி  1963   எம்.ஜி.ஆர்
பாடலின் துவக்க வரி:
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
இது சத்தியம்  1963   அசோகன், சந்திரகாந்தா
பாடலின் துவக்க வரி:
சடத்தியம் இது சத்தியம்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
காட்டு ரோஜா  1963   எஸ்.எஸ்.ஆர், பத்மினி
பாடலின் துவக்க வரி:
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
குங்குமம்  1963   சிவாஜி, விஜயகுமாரி
பாடலின் துவக்க வரி:
மயக்கம் எனது தாயகம் மெள்னம் எனது தாய்மொழி
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
குலமகள் ராதை  1963   சிவாஜிசரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தர்மம் தலை காக்கும்  1963   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
தர்மம் தலைகாக்கும் தக்க சம்யத்தில் உயிர்காக்கும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தர்ம்ம் தலைகாக்கும்  1963   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பணத் தோட்டம்  1963   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பணத் தோட்டம்  1963   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம இருவர் இருவராய் இணைந்தோம்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பணத் தோட்டம்  1963   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
மனத்தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பெரிய இடத்துப் பெண்  1963   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டது நானல்லவா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
மணியோசை  1963   கல்யாண்குமார், விஜயகுமாரி
பாடலின் துவக்க வரி:
தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஆண்டவன் கட்டளை  1964   சிவாஜி
பாடலின் துவக்க வரி:
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஆண்டவன் கட்டளை  1964   சிவாஜி, தேவிகா
பாடலின் துவக்க வரி:
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஆயிரம் ரூபாய்  1964   ஜெமினி, சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
நிலவுக்கும் நிழலுண்டு நிழலுக்கும் ஒளியுண்டு
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
கர்ணன்  1964   சிவாஜி, சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
கர்ணன்  1964   சிவாஜி, சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
மரண்த்தை எண்ணி கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
கறுப்புப் பணம்  1964   எம்.ஆர்.ராதா, கே.ஆர்.விஜயா
பாடலின் துவக்க வரி:
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
கறுப்புப் பணம்  1964   எம்.ஆர்.ராதா, கே.ஆர்.விஜயா
பாடலின் துவக்க வரி:
கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைதட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தெய்வத்திருமகள்  1964   அசோகன், சந்திரகாந்தா
பாடலின் துவக்க வரி:
மாடுகள் சேர்ந்தால் மந்தையடா வெறும் மனிதர்கள் சேர்ந்தால் சந்தையடா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
நவராத்திரி  1964   சிவாஜி, சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பச்சை விளக்கு  1964   சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி
பாடலின் துவக்க வரி:
கேள்வி பிரந்த்து அன்று - நல்ல பதில் கிடைத்த்து இன்று
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பணக்காரக் குடும்பம்  1964   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தே தனிமரமாக
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
புதிய பறவை  1964   சிவாஜி, சரோஜாதேவி
பாடலின் துவக்க வரி:
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
முரடன் முத்து  1964   சிவாஜி, தேவிகா
பாடலின் துவக்க வரி:
பொன்னாசை கொண்டோர்க்கு நல்ல உள்ளமில்லை - நல்ல உள்ளமில்லை
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
வேட்டைக்காரன்  1964   எம்.ஜி.ஆர், சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
உன்னையறிந்தால்...நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஆயிரத்தில் ஒருவன்  1965   எம்.ஜி.ஆர், ஜெயல்லிதா
பாடலின் துவக்க வரி:
அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஆயிரத்தில் ஒருவன்  1965   எம்.ஜி.ஆர், ஜெயல்லிதா
பாடலின் துவக்க வரி:
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஆன்ந்தி  1965   எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி
பாடலின் துவக்க வரி:
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
இரவும் பகலும்  1965   ஜெய்சங்கர், வசந்தா
பாடலின் துவக்க வரி:
இரவுவரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
சாந்தி  1965   சிவாஜி, தேவிகா
பாடலின் துவக்க வரி:
வாழ்ந்து பார்க்க வேண்டும் - அறிவில் மனிதனாக வேண்டும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
சுமை தாங்கி  1965   ஜெமினி
பாடலின் துவக்க வரி:
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
சுமை தாங்கி  1965   ஜெமினி
பாடலின் துவக்க வரி:
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
திருவிளையாடல்  1965   சிவாஜி, சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞானத்தங்கமே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பழனி  1965   சிவாஜி, தேவிகா
பாடலின் துவக்க வரி:
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலக்த்திலே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
அவன் பித்த்னா?  1966   எஸ்.எஸ்.ஆர்
பாடலின் துவக்க வரி:
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
சரஸ்வதி சபதம்  1966   சிவாஜி
பாடலின் துவக்க வரி:
கல்வியா செல்வமா வீரமா?
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
சித்தி  1966   பத்மினி
பாடலின் துவக்க வரி:
இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
நாடோடி  1966   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
கடவுள் செய்த பாவம் - இங்கு காணும் துன்பம் யாவும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
மணி மண்டபம்  1966   எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி
பாடலின் துவக்க வரி:
உறவு வரும் ஒருநாள் பிரிவு வரும் வரவு வரும் வழியில் செலவு வரும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
முகராசி  1966   எம்.ஜி.ஆர், ஜெயல்லிதா
பாடலின் துவக்க வரி:
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு இங்கே கொண்டுவந்து போட்டவர்கள் நாலு பேரு
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ராமு  1966   ஜெமினி, கே.ஆர்.விஜயா
பாடலின் துவக்க வரி:
நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
அரசகட்டளை  1967   எம்.ஜி.ஆர், சரோஜா தேவி
பாடலின் துவக்க வரி:
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தங்கை  1967   சிவாஜி
பாடலின் துவக்க வரி:
இனியது இனியது உலகம்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
திருவருட்செல்வர்  1967   சிவாஜி, சாவித்திரி
பாடலின் துவக்க வரி:
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
பட்டணத்தில் பூதம்  1967   ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா
பாடலின் துவக்க வரி:
உலகத்தில் சிறந்த்து எதுஓர் உருவமில்லாது எது?
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
எங்க ஊர் ராஜா  1968   சிவாஜி, ஜெயலலிதா
பாடலின் துவக்க வரி:
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
நாலும் தெரிந்தவன்  1968   ரவிச்சந்திரன், காஞ்சனா
பாடலின் துவக்க வரி:
நரி ஒன்று சிரிக்கிற்து - அது நினைத்தது நடக்கின்றது
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
லட்சுமி கல்யாணம்  1968   சிவாஜி, நிர்மலா, செள்கார் ஜானகி
பாடலின் துவக்க வரி:
யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
சாந்தி நிலையம்  1969   ஜெமினி, காஞ்சனா
பாடலின் துவக்க வரி:
இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
சாந்தி நிலையம்  1969   ஜெமினி, காஞ்சனா
பாடலின் துவக்க வரி:
கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
சாந்தி நிலையம்  1969   ஜெமினி, காஞ்சனா
பாடலின் துவக்க வரி:
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
எங்க மாமா  1970   சிவாஜி, ஜெயல்லிதா
பாடலின் துவக்க வரி:
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
எதிர்காலம்  1970   ஜெமினி, பத்மினி
பாடலின் துவக்க வரி:
கல்லுக்கு நீதி சொல்ல முடியது வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
என் அண்ணன்  1970   எம்.ஜி.ஆர்
பாடலின் துவக்க வரி:
கடவுள் ஏன் கல்லானான்? மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
என் அண்ணன்  1970   எம்.ஜி.ஆர்
பாடலின் துவக்க வரி:
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தரிசனம்  1970   .வி.எம்.ராஜன், லட்சுமி
பாடலின் துவக்க வரி:
மாலை நேரத்து மயக்கம் பூ மாலை போல் உடல் மறைக்கும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ஜஸ்டிஸ் விஸ்வநாதன்  1971   ரவிச்சந்திரன், சி..டி சகுந்தலா
பாடலின் துவக்க வரி:
இது நீரோடு செல்கின்ற ஓடம் - இதில் நியாயங்கள் யார் சொல்ல்க்கூடும்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
சங்கே முழங்கு  1972   எம்.ஜி.ஆர்
பாடலின் துவக்க வரி:
என்னம்மா ராணி பொன்னான மேனி
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
வசந்த மாளிகை  1972   சிவாஜி, வாணிஸ்ரீ
பாடலின் துவக்க வரி:
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
சூரியகாந்தி  1973   முத்துராமன், ஜெயல்லிதா
பாடலின் துவக்க வரி:
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்யமா?
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
ராஜபார்ட் ரங்கதுரை  1973   சிவாஜி
பாடலின் துவக்க வரி:
ஜிங் சினுக்கும் சின்னக்க்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடி வந்தா மேடையிலே ஆட்டம் ஆட
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
அவள் ஒரு தொடர்கதை  1974   கமலஹாசன்
பாடலின் துவக்க வரி:
அடி என்னடி உலகம் - இதில் எத்தனை கலகம்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
அவள் ஒரு தொடர்கதை  1974   கமலஹாசன்
பாடலின் துவக்க வரி:
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
என் மகன்  1974   சிவாஜி
பாடலின் துவக்க வரி:
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தங்கப்பதக்கம்  1974   சிவாஜி
பாடலின் துவக்க வரி:
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
அபூர்வ ராகங்கள்  1975   கமலஹாசன்
பாடலின் துவக்க வரி:
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
தியாகம்  1978   சிவாஜி, லட்சுமி
பாடலின் துவக்க வரி:
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனசாட்சி
படத்தின் பெயர் / படம் வெளி வந்த ஆண்டு / நாயகர்
நூல் வேலி  1979   சரத்பாபு, சுஜாதா, சரிதா
பாடலின் துவக்க வரி:
மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே

பட்டியல் இரண்டு

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா
அடி என்னடி உலகம் - இதில் எத்தனை கலகம்
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலக்த்திலே
அண்ணன் காட்டிய வழியம்மா - இது அன்பால் விளைந்த பழியம்மா
அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டது நானல்லவா
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும் அன்பும் பண்பும் எல்லையடி
10  ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
11  ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
12  இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா
13  இது நீரோடு செல்கின்ற ஓடம் - இதில் நியாயங்கள் யார் சொல்ல்க்கூடும்
14  இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
15  இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்
16  இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
17  இரவுவரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்
18  இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
19  இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான்
20  இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்
21  இனியது இனியது உலகம்
22  உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
23  உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு இங்கே கொண்டுவந்து போட்டவர்கள் நாலு பேரு
24  உலகத்தில் சிறந்த்து எதுஓர் உருவமில்லாது எது?
25  உலகம் பிறந்த்து எனக்காக ஓடும் நதிகளூம் எனக்காக
26  உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா
27  உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன்
28  உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
29  உறவு வரும் ஒருநாள் பிரிவு வரும் வரவு வரும் வழியில் செலவு வரும்
30  உன்னையறிந்தால்...நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்
31  எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
32  எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
33  எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
34  எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்
35  எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்த்து இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது
36  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே
37  என்னம்மா ராணி பொன்னான மேனி
38  ஏதோ மனிதன் பிறந்து விட்டான் ஏனோ மரம்போல் வளர்ந்து விட்டான்
39  ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?
40  ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
41  ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம இருவர் இருவராய் இணைந்தோம்
42  ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
43  ஒன்றையே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து
44  ஓஹோ ஹோஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்
45  கடவுள் ஏன் கல்லானான்? மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே
46  கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்
47  கடவுள் செய்த பாவம் - இங்கு காணும் துன்பம் யாவும்
48  கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
49  கல்லுக்கு நீதி சொல்ல முடியது வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
50  கல்வியா செல்வமா வீரமா?
51  காலத்தை மாற்றினான் கட்சியை மாற்றினான்
52  காலம் செய்த கோமாளித்தனத்தில் உலகம் பொறந்த்து
53  காலமகள் கண் திறப்பாள் சின்னயா - நாம் கண் கலங்கி கவலைப்பட்டு என்னையா?
54  குரங்கு மரத்திலும் இருக்கும் சிலபேர் மனத்திலும் இருக்கும்
55  குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
56  கேள்வி பிரந்த்து அன்று - நல்ல பதில் கிடைத்த்து இன்று
57  கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைதட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி
58  சட்டி சுட்டதடா கை விட்டதடா
59  சடத்தியம் இது சத்தியம்
60  சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான் சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
61  சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
62  சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
63  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
64  தர்மம் தலைகாக்கும் தக்க சம்யத்தில் உயிர்காக்கும்
65  தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
66  தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
67  நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்
68  நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு
69  நரி ஒன்று சிரிக்கிற்து - அது நினைத்தது நடக்கின்றது
70  நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனசாட்சி
71  நிலவுக்கும் நிழலுண்டு நிழலுக்கும் ஒளியுண்டு
72  நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
73  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
74  நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்
75  நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
76  படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
77  படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
78  பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்யமா?
79  பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தே தனிமரமாக
80  பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞானத்தங்கமே
81  பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
82  பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும்போதும் அழுகின்றான்
83  பிறந்து வந்த்தும் ஒரே வழி நாம் பிரிந்து போவதும் ஒரே வழி
84  புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
85  பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
86  பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டு தெரியாமலே இருப்பான் ஒருவன்
87  பொன்னாசை கொண்டோர்க்கு நல்ல உள்ளமில்லை - நல்ல உள்ளமில்லை
88  போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
89  போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
90  மயக்கம் எனது தாயகம் மெள்னம் எனது தாய்மொழி
91  மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
92  மரண்த்தை எண்ணி கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்
93  மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே
94  மனத்தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்
95  மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
96  மாடுகள் சேர்ந்தால் மந்தையடா வெறும் மனிதர்கள் சேர்ந்தால் சந்தையடா
97  மாலை நேரத்து மயக்கம் பூ மாலை போல் உடல் மறைக்கும்
98  மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
99  மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
100  யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே
101  யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே
102  யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க
103  வந்தநாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
104  வாழ்ந்து பார்க்க வேண்டும் - அறிவில் மனிதனாக வேண்டும்
105  வீடுவரை உறவு, வீதி வரை மனைவி
106  ஜிங் சினுக்கும் சின்னக்க்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடி வந்தா மேடையிலே ஆட்டம் ஆட

வாழ்க வளமுடன்!

24 comments:

  1. வாத்தியாரே
    எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
    வலை பதிவிற்கு உங்கள் வாழ்க்கையை
    அர்ப்பணம் செய்துள்ளீர்கள்
    சிந்தைக்கு உகந்த பாடல்களைத் தேடி
    பிடித்து தொகுத்து பொறுமையாக
    வலை எற்றி உள்ளீர்கள் உங்களின்
    பதிவிற்கு நன்றி
    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

    கண்ணதாசனின் தத்துவப்பாடல்களை எல்லாம் அடிக்கடி கேட்பதற்கு ஏற்ப
    அதில் சந்தோஷ மான சூழலில் படத்தில் பாடப்படும்
    பாடல்கள்,அழுதுக்கொண்டு படத்தில் பாடப்படும்
    பாடல்கள்,இதர வகையில் உள்ள பாடல்கள் என்ற
    பிரிவுகளாக பிரித்து எடுத்து வைக்க வேண்டும் என்று
    பல தடவைகள் நினைப்பது உண்டு.ஆனால் இயலவில்லை.

    கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் அகர வரிசைப்படியும்
    மற்றும் படத்தின் பெயர்_ படம் வெளி வந்த ஆண்டு_
    பாடலின் துவக்க வரி_நடித்துள்ள நடிகர்கள்
    பெயர் போன்ற அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய
    விவரங்களை தயாரித்துக் கொடுத்துள்ள
    தங்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. இன்றையப் பதிவில் தங்களின் உழைப்பும் கவியரசரின்பால் உள்ள தீராத பற்றும் தெரிகிறது..

    ஒவ்வொரு பாடலும் தனித் தனி ரகம்... ஒரு முத்துக் குவியலை காண்பித்து அதில் நல்ல தரமான பத்து முத்துக்களை எடுக்கச் சொன்னால் எப்படித் தருவது என்ற எண்ணத்தில் ஆழ்ந்திருந்தேன்... அனுபவக் கடலில் முத்தையா மூழ்கி எடுத்த அத்தனை முத்துக்களும் அருமையே.... நன்றி.

    ReplyDelete
  4. மிகுந்த சிரமப்பட்டு அற்புதமான ஒரு பட்டியலை வெளியிட்டியிருக்கிறீர்கள். மிகுந்த நன்றிகள். எனக்கு தெரிந்து விடுபட்டுப் போன பாடல்களாக சிலவற்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

    1 மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...படம்: அவன் தான் மனிதன்

    2 .ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ...படம்: அவன் தான் மனிதன்

    3 .நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி..படம்: தியாகம் (or ) தீபம்

    4 கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில்...படம் : அபூர்வ ராகங்கள்

    5 ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தை ராகம் ...படம் : அபூர்வ ராகங்கள்.

    இதில் ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்கவும்

    G.Nandagopal

    ReplyDelete
    Replies
    1. நன்றி, நண்பரே. ஆட்டுவித்தால் அற்புதம். மனிதன் நினைப்பதுண்டு அதிசயம். அமரகவி அவர்.

      Delete
  5. This is definitly a useful for list,especially for guys like me....i have been a big fan of Kannadasan but never get know all his works....!!!

    Thanks Sir.

    Thanks
    Rathinavel.C

    ReplyDelete
  6. dorairaj said...
    வாத்தியாரே
    எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வலை பதிவிற்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துள்ளீர்கள்
    சிந்தைக்கு உகந்த பாடல்களைத் தேடி பிடித்து தொகுத்து பொறுமையாக வலை எற்றி உள்ளீர்கள் உங்களின்
    பதிவிற்கு நன்றி
    நன்றி நன்றி நன்றி////

    நல்லது நன்றி துரைராஜ்!

    ReplyDelete
  7. V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    கண்ணதாசனின் தத்துவப்பாடல்களை எல்லாம் அடிக்கடி கேட்பதற்கு ஏற்ப
    அதில் சந்தோஷ மான சூழலில் படத்தில் பாடப்படும்
    பாடல்கள்,அழுதுக்கொண்டு படத்தில் பாடப்படும்
    பாடல்கள்,இதர வகையில் உள்ள பாடல்கள் என்ற
    பிரிவுகளாக பிரித்து எடுத்து வைக்க வேண்டும் என்று
    பல தடவைகள் நினைப்பது உண்டு.ஆனால் இயலவில்லை.
    கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் அகர வரிசைப்படியும்
    மற்றும் படத்தின் பெயர்_ படம் வெளி வந்த ஆண்டு_
    பாடலின் துவக்க வரி_நடித்துள்ள நடிகர்கள்
    பெயர் போன்ற அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய
    விவரங்களை தயாரித்துக் கொடுத்துள்ள
    தங்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//////

    உங்களின் மகிழ்வான பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  8. ////hamaragana said...
    anbudan vanakkam sir simply superb.////

    உங்களின் மன நிறைவான பாராட்டிற்கு நன்றி நடராஜன் சார்!

    ReplyDelete
  9. Alasiam G said...
    இன்றையப் பதிவில் தங்களின் உழைப்பும் கவியரசரின்பால் உள்ள தீராத பற்றும் தெரிகிறது..
    ஒவ்வொரு பாடலும் தனித் தனி ரகம்... ஒரு முத்துக் குவியலை காண்பித்து அதில் நல்ல தரமான பத்து முத்துக்களை எடுக்கச் சொன்னால் எப்படித் தருவது என்ற எண்ணத்தில் ஆழ்ந்திருந்தேன்... அனுபவக் கடலில் முத்தையா மூழ்கி எடுத்த அத்தனை முத்துக்களும் அருமையே.... நன்றி.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  10. //////G.Nandagopal said...
    மிகுந்த சிரமப்பட்டு அற்புதமான ஒரு பட்டியலை வெளியிட்டியிருக்கிறீர்கள். மிகுந்த நன்றிகள். எனக்கு தெரிந்து விடுபட்டுப் போன பாடல்களாக சிலவற்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்.
    1 மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...படம்: அவன் தான் மனிதன்
    2 .ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ...படம்: அவன் தான் மனிதன்
    3 .நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி..படம்: தியாகம் (or ) தீபம்
    4 கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில்...படம் : அபூர்வ ராகங்கள்
    5 ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தை ராகம் ...படம் : அபூர்வ ராகங்கள்.
    இதில் ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்கவும்
    G.Nandagopal

    3 & 5ஆம் எண்களுக்குரிய பாடல்களை நான் முன்பாகவே பட்டியலில் சேர்த்துள்ளேன். 4ஆம் எண் எண்னுள்ள
    பாடல் படத்தில் காட்சி அமைப்பிற்கேற்ப எழுதப்பெற்றதாகும். அது தத்துவப்பாடலில் வராது. மற்ற பாடல்கள் இரண்டையும் சேர்த்துக்கொள்ளலாம். நன்றி

    ReplyDelete
  11. ////Soundarraju said...
    Superp Sir////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Rathinavel.C said...
    This is definitly a useful for list, especially for guys like me....i have been a big fan of Kannadasan but never get know all his works....!!!
    Thanks Sir.
    Thanks
    Rathinavel.C////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரத்தினவேல்!

    ReplyDelete
  13. /////T K Arumugam said...
    super////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. it is very happy to see the site, i am made person of kannadasan's songs and searching the books of his film songs. pl tell me where i can get it.
    namadev.v@gmail.com

    ReplyDelete
  15. இதில் உள்ள சில பாடல்கள் கண்ணதாசன் எழுதியவை அல்ல. எடுத்துக்காட்டாக அரசகட்டளை படத்தில் கண்ணதாசன் பாடலே எழுதவில்லை .. ஆனால் அதில் உள்ள பாடல் ஒன்றை கண்ணதாசன் பாடலில் சேர்ததிருக்கிறீர்கள்

    ReplyDelete
  16. என்னத்த சொல்ல பாராட்ட வார்தைகளே இல்ல, அருமை.....அருமை.....அருமை.....

    ReplyDelete
  17. திரு சுப்ரமணியன் ஜெகந்நாதன் அய்யா சொன்ன அரசகட்டளை மட்டுமல்ல, பட்டியல் எண் ஒன்றில் முதல் பாடலே (குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்) கண்ணதாசன் எழுதியதல்ல அது புகழ்பெற்ற பட்டுக்கோட்டையார் பாடல்.
    இதுபோல முதல்வரிகளே தவறாக எழுதப்பட்டுள்ள பட்டியலும் உண்டு.
    அய்யா, ஆசிரியர் அவர்களே! பழைய சங்க இலக்கியம், இன்றைய பாரதி பாடலில் பிழைசெய்தால் கண்டுபிடிக்க மாட்டார்கள்! புகழ்பெற்ற கண்ணதாசன் திரைப்பாடல்களில் செய்தால் கண்டுபிடிக்க மாட்டார்களா என்ன? ஆனாலும் உங்கள் பதிவுகள் அதிகம் படிக்கப்படக் காரணம் இதுபோலும் சுவாரசியமான செய்திகளைக் கலந்து எழுதுவதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
  18. முதெல்லேயே சுருன்டிட்டீங்களே. குறுக்குவழியில் பாட்டு பட்டுக்கோட்டையார் பாட்டுக்கு.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com